காரைக் கதம்பம் 2013

பிருத்தானிய நலன் புரிச் சங்கம் பெருமையுடன் முன்னெடுக்கும் 16வது பொங்கல் விழாவான ” காரைக் கதம்பம் 2013” வரும் சனிக்கிழமை மாலை (02/02/2013) 05:00 மணிக்கு PRESTON MANOR HIGH SCHOOL, CARLTON AVENUE EAST, WEMBLEY, HA9 8NA எனும் இடத்தில அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற உள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தினர். நன்றி வணக்கம். பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம்.

காரைநகர் இந்துக் கல்லூரியின் கனடா வாழ் பழைய மாணவர்களிற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை விடுக்கும் அன்பான வேண்டுகோள்.

காரைநகர் இந்துக் கல்லூரியின் கனடா வாழ் பழைய மாணவர்களிற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை விடுக்கும் அன்பான வேண்டுகோள். காரைநகர் இந்துக்கல்லூரி 125வது ஆண்டில் பாதம் பதிக்கின்ற இவ்வேளையில் கல்லூரியின் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கின்ற அமைப்பாக பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளையும் இணைந்து கொண்டிருக்கின்ற செய்தி பாடசாலைச் சமூகத்தினையும் தரணியெங்கம் பரந்து வாழும் காரை இந்து அன்னையின் புதல்வர்ளையும் பேருவகையும் பெருமையும் கொள்ளவைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.கனடா வாழ் பழைய மாணவர்களும் நலன் விரும்பிகளும் …

Continue reading

காரைநகர் ஈழத்துசிதம்பர அன்னதானசபைக்கு புதியமண்டபம்

காரைநகர் ஈழத்துசிதம்பர அன்னதானசபைக்கு புதியமண்டபம் காரைநகர் ஈழத்துசிதம்பரத்தின்மாணிக்கவசகர் அன்னதானசபைக்கு புதியஅளன்னதான மண்டபம் ஒன்று அமைக்கபடுவதற்காக இன்று அதாவது 27-01-2013ல் அத்திவாரக்கல் நாட்டப்பட்டது.இவ்அத்திவாரகல்லினை ஈழத்துசிதம்பரஆதீனகர்தா மு.சுந்தரலிகம் அவர்கள் நாட்டிவைத்தார். அதனைதொடர்ந்து ஆலயதொண்டர்களும் அத்திவாரகல்லினை நாட்டினர் தற்போதுள்ள மாணிக்கவாசகர் மடாலயத்துக்குபின்புறமாக உள்ளஇடத்தில் 40 x 70 அடிபரப்பளவில் இம்மண்டபம் அமைக்கபடவுள்ளது.இம்மண்டபத்துக்கான நிதியை காரைவாழ் நலன்விரும்பி ஒருவரினால் வழங்கப்படவுள்ளது மேலதிகநிதி தேவைபடபடும்பட்சத்தில் மாணிக்கவாசகர் அன்னதானசபை நிதியிலிருந்து பெறப்பட்டு மாணிக்கவாசகர் அன்னதானசபையினால் இக்கட்டிடம் கட்டபடும் எனநிர்வாகசபை அறிவித்துள்ளது.

பயிரிக்கூடல் ஸ்ரீசுப்பிரமணியர் ஆலய தேர்த்திருவிழா

பயிரிக்கூடல் ஸ்ரீசுப்பிரமணியர் ஆலய தேர்த்திருவிழாக்காட்சிகளை படங்களில் காணலாம்.

125வது ஆண்டில் காலடி பதிக்கும் காரைநகர் இந்துக்கல்லூரி

125வது ஆண்டில் காலடி பதிக்கும் காரைநகர் இந்துக்கல்லூரி முதல்நிகழ்வாக 2013 நாட்காட்டி வெளியீடும் புதிய அதிபர் பதவியேற்பும் காரைநகர் இந்துக்கல்லூரி இவ்வாண்டான 2013இல் தனது 125வது ஆண்டில் கால்பதிக்கின்றது. இதனையொட்டி 18.01.2013இல் கல்லூரியின் 125வது ஆண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வாக 2013ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி வெளியீட்டு விழாவும் கல்லூரியின் புதிய அதிபராக காரைநகர், களபூமி, பாலாவோடையைச் சேர்ந்தரும்  தீவகவலய உதவி கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றியவரும் காரைநகர் இந்துக்கல்லூரியின் பழைய மாணவியுமாவர் திருமதி. வாசுகி தவபாலன் பதவியேற்பும் நடைபெற்றது. …

Continue reading

காரைநகர் பிரதேசத்தில் நடைபெற்ற தரம் – 01 மாணவர்களுக்கான கால்கோள்விழா

காரைநகர் பிரதேசத்தில் நடைபெற்ற தரம் – 01 மாணவர்களுக்கான கால்கோள்விழா சுந்தரமூர்த்தி வித்தியாசாலை, சுப்பிரமணிய பாடசாலை, பாலாவோடை இ.த.க பாடசாலை, ஆகிய பாடசாலைகளில் மிகச்சிறப்பாக நடைபெற்றன. பாலாவோடை இ.த.க பாடசாலை, சுப்பிரமணிய பாடசாலை சுந்தரமூர்த்தி வித்தியாசாலை

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் வியாவில் ஐயனார் ஆலயத்தினூடாக வாழ்வாதார உதவிகள்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் வியாவில் ஐயனார் ஆலயத்தினூடாக வாழ்வாதார உதவிகள்

பயிரிக்கூடல் சுப்பிரமணியர் ஆலய கொடியேற்றத் திருவிழா

பயிரிக்கூடல் சுப்பிரமணியர் ஆலய கொடியேற்றத் திருவிழாக்காட்சிகளை படங்களில் காணலாம்.

வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற மணவாளக்கோல திருவிழா

வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற மணவாளக்கோல திருவிழாக்காட்சிகளை படங்களில் காணலாம்.

சுவிஸ் காரை அபிவிருத்தி சபை இரண்டு குடும்பம்பங்களுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்கி வருகின்றது

சுவிஸ் காரை அபிவிருத்தி சபை இரண்டு குடும்பம்பங்களுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்கி வருகின்றது. சுவிஸ் காரை அபிவிருத்தி சபை தலைவர்  2011 ஆண்டு புரட்டாதிமாதம்  காரைநகருக்கு சென்றபொழுது அங்குள்ள சில குடும்பங்களின் வாழ்கைமுறையை கண்டறிந்து அதில் சிதம்பராமூர்த்தி கேணியடியை சேர்ந்த குடும்பதலைவனை இழந்த 5பெண்பிள்ளைகளின் தாயார் சக்திவேல் நகுலேஸ்வரி அவர்களுக்கும், எமது தாயகத்தில் நடந்த கொடியபோரினால் ஒரு காலை இழந்த சடையாளி பெரியமணலை சேர்ந்த  செல்லையா சிவகுமார் அவர்களுக்கும் உதவிகள் தேவையென கிராமசேவகர் மூலம் உறுதி செய்யப்பட்ட …

Continue reading

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் கால்கோள் விழா 2013

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் கால்கோள் விழா 2013 யாழ்ற்ரன் கல்லூரியின் 2013 ஆம் ஆண்டிற்கான முதலாந் தர மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா 18.01.2013 மு.ப 8.30 மணிக்கு கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மண்டபத்தில் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக தேசிய சேமிப்பு வங்கியின் காரைநகர் கிளை முகாமையாளர் திரு.ஏ.கெங்காதரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.  

காரைநகர் இந்துக் கல்லூரியின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள திருமதி வாசுகி தவபாலன் அவர்களின் பதவிக்காலம் சாதனைப் பதிவுகளை ஏற்படுத்துவதாக அமையட்டும்!

காரைநகர் இந்துக் கல்லூரியின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள திருமதி வாசுகி தவபாலன் அவர்களின் பதவிக்காலம் சாதனைப் பதிவுகளை ஏற்படுத்துவதாக அமையட்டும்! பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வாழ்த்து. காரைநகர் இந்துக் கல்லூரியின் அதிபராக கடமையாற்றிய திரு.பொன்.சிவானந்தராசா அவர்கள் வேலணை கோட்டக் கல்வி அதிகாரியாக பதவி உயர்வுபெற்றுச்சென்றதைத் தொடர்ந்து தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய் திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் சென்ற 18-01-2013முதல் அதிபராக பொறுப்பேற்றுள்ளார்.இவர் கல்லூரியின் பழைய மாணவியும் காரைநகர் களபூமியை பிறப்பிடமாகக் கொண்டவர் …

Continue reading

Karainagar.com இணையத்தளத்தினை வாழ்த்துகின்றோம்.

Karainagar.com  இணையத்தளத்தினை வாழ்த்துகின்றோம். தைபிறந்தால் வழிபிறக்கும் என்ற தமிழர் பண்பாட்டிற்கு ஏற்ப தைப்பொங்கலுடன் புதுபொலிவுடன் அலங்கரித்துக்கொண்டிருக்கும் Karainagar.com   இணையத்தளத்திற்கு எமது  முதல் வணக்கம்.       இன்றைய நவநாகரிக உலகின் முதல் தகவல் தொடர்பு சாதனம் இணையத்தளமே. ஊரின் தேவையறிந்து நிலத்திலுள்ள ஆலயங்கள், பாடசாலைகள், சமூகமன்றங்கள், புலத்திலுள்ள கலைவடிவங்கள், சமூகமன்றங்களின் செய்திகளையும் ஒன்றிணைத்து ஒரு முற்றத்தில் சிந்திக்கவைத்துக்கொண்டிருக்கும் Karainagar.com   நிர்வாகிகளை வாழ்த்துகின்றோம் பாராட்டுகின்றோம்.             நற்றமிழின் அர்ச்சனையை நாடியருள் நாதர்             உற்றவுமை யோடுமகிழ்ந் தாடுமொரு கூத்தர்             முற்றுகனி …

Continue reading

சுவிஸ் காரை அபிவிருத்திசபையினால் சில உதவிப்பொருட்கள் காரைநகருக்கு அனுப்பிவைக்கப்படவிருக்கின்றன

சுவிஸ் காரை அபிவிருத்திசபையினால் சில உதவிப்பொருட்கள் காரைநகருக்கு அனுப்பிவைக்கப்படவிருக்கின்றன சுவிஸ் காரை அபிவிருத்தி சபை கடந்தவருடம் (30-09-2012)ல் நடைபெற்ற மக்கள் சந்திப்பும், ஆலோசனைக்கூட்டத்தில் காரைநகர் ஆதாரவைத்தியசாலைக்கு சில உதவிகள் செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் எமது சபையின் தலைவர் திரு பூபாலபிள்ளை விவேகானந்தா வைத்தியசாலை அதிகாரி திரு டாக்டர் Majumudeen அவர்களுடன் தொடர்புகொண்டு அங்குள்ள குறைநிறைவுகளை கேட்டறிந்தார்.  டாக்டர் Majumudeen நோயாளர் பாவிப்பதற்கான  சக்கரநாற்காலிகள் தேவை எனக்கேட்டிருந்தார் அதற்குகிணங்க தற்பொழுது 4 சக்கரநாற்காலிகளை அனுப்புவதற்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.  …

Continue reading

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாகசபை தெரிவுக்கூட்டம் ஒத்திவைப்பு

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாகசபை தெரிவுக்கூட்டம் ஒத்திவைப்பு கனடா காரை கலாச்சார மன்றத்தின் புதிய நிர்வாகசபைத் தெரிவுக்கூட்டம் தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளது. இக்கூட்டமானது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ம்திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00மணிக்கு நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம். இக்கூட்டத்தில் அனைத்து கனடா வாழ் காரை மக்கள் அனைவரையும் கலந்து கொண்டு கனடா காரை கலாச்சார மன்றத்தின் செயற்பாடுகளில் எல்லோரும் பங்கெடுத்து மன்றத்தின் வளர்ச்சிக்கும் கனடா வாழ் காரை மக்களின் ஒற்றுமைக்கு வழிகாட்டியாக வாழ்வோமாக. நன்றி, …

Continue reading

கனடா-காரைகலாச்சாரமன்றத்தின் புதியநிர்வாகசபையின் பதவிகளுக்கானவிண்ணப்பம் பற்றியமுக்கியஅறிவித்தல்

விண்ணப்பமுடிவுதிகதி ஜனவரி 25, 2013 நள்ளிரவு12:00 மணிவரைபிற்போடப்பட்டுள்ளது. கனடா-காரைகலாச்சாரமன்றத்தின் 2013-2014 காலப்பகுதிக்காகத் தெரிவுசெய்யப்படும் புதியநிர்வாகசபை, ஜனநாயகவழியிலும்,ஒவ்வொரு உறுப்பினரும் தமதுபூரணசுய விருப்பத்துடனும் தமதுசேவையைவழங்கமுன்வருவதற்கும் வழியேற்படுத்தும் வகையில் முன்கூட்டியேசபையினால் காரைநகருடன் தொடர்புடையகனடாவாழ் பொதுமக்களிடமிருந்து புதியநிர்வாகசபையின் பதவிகளுக்கானவிண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தமை நீங்கள் அறிந்ததே. அந்தவகையில்,மன்றயாப்பின் சரத்து 3.003 இற்குஅமைவாக தலைவர், உப-தலைவர்,செயலாளர், உப-செயலாளர்,பொருளாளர், உப-பொருளாளர், ஐந்துநிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் தயார்நிலை உறுப்பினர்கள் மற்றும் போசகர் சபைக்கு மூன்று நியமனங்களும் தெரிவு செய்யப்படவேண்டியுள்ளது.  குறித்தபதவிகளுக்கானவிண்ணப்பங்கள் காரைநகருடன் தொடர்புடையகனடாவாழ் பொதுமக்களிடமிருந்து கோரப்படுகின்றன. விண்ணப்பதாரிக்கு இருக்கவேண்டியதகமைகள்: …

Continue reading

வாழ்க்கைக்காகக் கல்வி வாழ்க்கை மூலம் கல்வி வாழ்க்கை முழுவதும் கல்வி என்று கல்விக்கு வடிவம் கொடுத்த என் ஆசான் அமரர் ஆனான்.

வாழ்க்கைக்காகக் கல்வி வாழ்க்கை மூலம் கல்வி வாழ்க்கை முழுவதும் கல்வி என்று கல்விக்கு வடிவம் கொடுத்த என் ஆசான் அமரர் ஆனான். எந்தப் பெருமையும் இல்லாத அற்ப மனிதர்கள் தங்களை அறிவுச்சுடராக எண்ணி ஆணவத்துள் ஆழ்ந்து கிடக்க எல்லாப் பெருமைகளையும் கொண்ட பேராற்றல்மிக்க பெரியவர்கள் தங்களை ஏதுமறியாச் சிறியோராகவே சிந்தித்துப் பணிந்து வாழ்வது தான் குணங்களிலேயே சிறந்த குணம் என்று வாழ்ந்த மகான். மனிதனுக்குள் புதைந்து இருக்கும் பூரணத்துவத்தை வெளிப்படுத்துவதே கல்வி. காணப்படும் உலகம் வேறு அறியப்படும் …

Continue reading

‘முதுசங்களைத்தேடி” தேடல் பயணம் மீண்டும் ஆரம்பம்

‘முதுசங்களைத்தேடி” தேடல் பயணம் மீண்டும் ஆரம்பம் அனைத்து காரை மன்றங்களும் முதன்முறையாக ‘முதுசங்களைத்தேடி’எனும் முத்தாரக் குடையின்கீழ் இணைந்து தேடும் முதல் மழை.

Continue reading

யா/ கலாநிதி ஆ.தியாகராஜா ம.ம.வி (காரைநகர் இந்துக்கல்லூரி) நாட்காட்டி வெளியீடு

யா/ கலாநிதி ஆ.தியாகராஜா ம.ம.வி (காரைநகர் இந்துக்கல்லூரி) நாட்காட்டி வெளியீடு

கனடா–காரை கலாச்சாரமன்றத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும் தொடர்பாக திட்டமிடல் போசகர் சபையினால் விடுக்கப்படும் முக்கிய அறிவித்தல்

கனடா–காரை கலாச்சாரமன்றத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும் தொடர்பாக திட்டமிடல் போசகர் சபையினால் விடுக்கப்படும் முக்கிய அறிவித்தல் மன்றயாப்பின் சரத்து 5.301 இற்குஅமைய கூட்டப்பட்டுள்ள ஈராண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும் எதிர்வரும் ஜனவரி 27,2013 அன்று நடைபெற உள்ளது. ஆரோக்கியமான ஒருநிர்வாகம் அமையப்பெற்று மன்ற யாப்பின் சரத்து 4.001இற்கு அமைய, அதற்கு ஒரு வழிகாட்டியாகவும் மன்றத்தின் பாதுகாவலர்களாகவும் சேவையாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் திட்டமிடல் போசகர் சபைக்கு உள்ளது.  எனவே 2013-2014 காலப் பகுதிக்காகத் …

Continue reading

இளைப்பாறிய ஆசிரியர் விசுவநாதஜயர் ஜெகதீஸ்வர சர்மா அவர்களின் கண்ணீர் அஞ்சலி

 

காரைநகர் கடற்கோட்டை மக்கள் பார்வைக்கு!

காரைநகர் கடற்கோட்டை மக்கள் பார்வைக்கு! காரைநகர் கடற்கோட்டையை மக்கள் பார்வைக்காக கடற்படையினர் அனுமதித்துள்ளனர். புராதன சின்னமாக விளங்கும் இக்கோட்டையை உல்லாசப் பயணிகளை கவரத்தக்கவகையில் அழகுபடுத்தியுள்ளனர்.

Continue reading

காந்தரூபன் கலைப்பிரியனின் இருதயத்துவார மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கியோர் விபரம்

காந்தரூபன் கலைப்பிரியனின் இருதயத்துவார மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கியோர் விபரம்  தம்பிராஜா ஜெயச்சந்திரன்  $50.00  Pay Pal  திரவியநாதன் பிரேமேந்திரதீசன்  $100.00  Pay Pal  சிவசோதி யோகராஜா  $50.00  Cash  சு.முத்தையாபிள்ளை  $50.00  Pay Pal  சோமசுந்தரம் குணரத்தினம்  $75.00  Pay Pal வேலுப்பிள்ளை சிறிஸ்கந்தராஜா   $50.00    Cash

உறவுக்கு கரம் கொடுப்போம்……..

கனடா காரை கலாச்சார மன்றத்தின் உறவுக்கு கரம் கொடுப்போம் திட்டத்தின் கீழ் மீண்டும் ஓர் 5வயது பச்சிளம் சிறுவனின் இருதய நோய்க்கு உதவிடுவோம். காரைநகர் மாப்பாணவூரியில் வசிக்கும் கணேசன் காந்தரூபன் என்பவரது மகன் கலைப்பிரியன் வயது. 5. இவருக்கு இருதயத்தில் துவாரம் இருப்பதை பரிசோதித்த வைத்தியர்கள் அதற்கு சத்திர சிகிச்சை செய்யவேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர். பிள்ளையின் தந்தையார் நாட்கூலி வேலை செய்து குடும்பத்தைப் பராமரித்து வருபவர். இவரால் இக்குழந்தையின் வைத்தியச் செலவை ஈடுசெய்ய முடியாமல் உள்ளமையால் மிக வேதனையடைந்துள்ளார்.

Continue reading

காரைக் கல்வியின் பெட்டகம்

காரைக் கல்வியின் பெட்டகம் ‘அரங்குஇன்றி  வட்டுஆடி அற்றே நிரம்பிய நூல்இன்றிக் கோட்டி கொளல்’ இன்றைய சிறிய விதைகள், நாளைய பெரிய மரங்கள  இன்றைய சிறிய செயல்கள் நம்மைக்காக்கும் நாளைய நற்பணிகள். நூலகம் மனித வாழ்வுடன் இன்றியமையாததொன்று. சிறியவர்களிலிருந்து பெரியவர்கள்வரை பயன் கொள்ளுமிடம். எமது ஊரின் மத்தியில் அமைய இருக்கும் மாணவர் நூலகம் எங்கள் கல்வியறிவை   வளர்ப்பதற்கான இடமே. நூல்+ அகம் = நூலகம் ஏன் அவசியம் என்னும் போது எமது ஊர்பற்றிய வரலாறு, ஊரில் வாழ்ந்த பெரியார் வரலாறுகள், …

Continue reading

காரைநகர் மணிவாசகர்சபைக்கு கனடா காரை கலாசார மன்றம் நிதி உதவி!

காரைநகர் மணிவாசகர் சபைக்கு கனடா காரை கலாசார மன்றம் 25,000.00 நிதியை வழங்கியுள்ளது. இந்நிதியை கனடா காரை கலாசார மன்ற தலைவர் ரவி ரவீந்திரன் மணிவாசகர் சபையின் பொருளாளரரும், தற்போதைய காரைநகர் அபிவிருத்திச் சபையின் பொருளாளருமான ந.பாரதியிடம் கையளித்தார்.

காரைநகர் களபூமிப் பகுதியில் ஒரே இரவில் இரு வீட்டில் கொள்ளை பல இலட்சம் ரூபா பணம், நகைகள் களவு போயின.

காரைநகர் களபூமிப் பகுதியில் ஒரே இரவில் இரு வீட்டில் கொள்ளை பல இலட்சம் ரூபா பணம், நகைகள் களவு போயின.காரைநகர் பகுதி அச்சத்தில்

வாழ்த்துக்களுடன் வரவேற்கின்றோம்.

வாழ்த்துக்களுடன் வரவேற்கின்றோம்.   கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக காரைநகர் காரை அபிவிருத்தி சபையை வழிநடத்தி நாம் முன்னெடுத்த பல வேலைத் திட்டங்களிலும் முன்னின்று உதவிய எமது கடந்த கால நிர்வாகத்தினருக்கு எமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் புதிதாக பதவி ஏற்றிருக்கும் திரு.சிவா மகேசன் தலமையில்லான புதிய நிர்வாகக் குளுவிற்க்கும் எமது மனமார்ந் வாழ்த்துக்களை கூறி வரவேற்கின்றோம்.   பிருத்தானிய காரை நலன் புரிச் சங்கம் கனடா காரை கலாச்சார மன்றம் பிரான்ஸ் காரை நலன் …

Continue reading

காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலையின் புதிய கட்டடத்திறப்பு விழா

காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலையின் புதிய கட்டடத்திறப்பு விழா இனிதே நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் வடமாகாணக்கல்வி அமைச்சின் பிரதிச்செயலாளர் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டார். கட்டட புனரமைப்பு நினைவுக்கல்லினை தீவக வலய முன்னாள் கல்விப்பணிப்பாளர் இ.இராதாகிருஸ்ணன் திரைநீக்கம் செய்துவைக்க புதிய கட்டடத்தினை பிரதிக்கல்விச் செயலாளர் ப.விக்னேஸ்வரன் திரைநீக்கம் செய்தார். இப்பாடசாலையின் புதிய கட்டடத்தினை கட்டட நிதியுதவியாளர் க.பாலகிருஸ்ணன் நாடா வெட்டித்திறந்து வைத்தார். இந்நிகழ்வில் வாழ்த்துரை நடைபெற்றது. இப்படங்களை இங்கே காணலாம்.

காரைநகர் – காரை அபிவிருத்தி சபை வருருடாந்தபொதுக் கூட்டம் இனிதே நிறைவேறியது

காரைநகர் – காரை அபிவிருத்தி சபை வருருடாந்தபொதுக் கூட்டம் இனிதே நிறைவேறியது இன்று பிற்பகல் காரை அபிவிருத்திசபையின் வருடாந்த பொதுக்கூட்டம் 70 க்கும் மேற்ப்பட்ட மக்களுடன் இனிதே நிறைவேறியது. மேற்படி கூட்டத்தில் புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டது. விபரங்கள் பின்வருமாறு :- தலைவர் : திரு.த.சிவாமகேசன்( இளைப்பாறிய கணக்காளர் – பெரிய பிருத்தானியா ) உப தலைவர் திரு. V .முருகமூர்த்தி (அதிபர், யா-யாழ்டன் கல்லூரி அதிபர் ) செயலாளர் : திரு . திருப்புகலூர்சிங்கம்(காரை வட கிழக்கு …

Continue reading