Category: SKDB செய்திகள்

திரு.வெற்றிவேலு நடராஜா அவர்களின் மறைவு குறித்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

திருமதி சிவலிங்கம் சொர்ணம் அவர்களின் மறைவு குறித்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

நான் கண்ட அதிபர் கலாநிதி ஆ.தியாகராசா

 

நான் கண்ட அதிபர் கலாநிதி .தியாகராசா

அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் 17.07.2016இல் வெளியிட்ட  நூற்றாண்டையொட்டிய “தியாகச் சுடர்” நினைவுத் தொகுப்புக் கட்டுரை

திருமதி. உஷா செல்வரத்தினம்

ஓய்வுபெற்ற ஆசிரியர், காரைநகர்.

காரைநகர் இந்துக்கல்லூரி என்று நினைக்கும்போது, எம்மனக்கண்முன் முதற்கண் நிழலாடுபவர் அதிபர் தியாகராசாவே! இந்த உண்மையினை யாரும் மறுப்பதற்கில்லை. வெள்ளை வேட்டியும் நஷனலும் அணிந்து கம்பரமான தோற்றத்துடன் பாடசாலையின் இரு பக்க வளாகத்தினுள் நடமாடித் திரியும் அந்தக் கல்விமானின் தோற்றப் பொலிவு என்றும் எம் மனத்திரையில் விரிந்து செல்லும். காலைப் பிரார்த்தனை மணியொலி, நடராசா மண்டபத்தில் வெள்ளிக்கிழமை ஆராதனை வகுப்பு ஆரம்பம், இந்நிலைமைகளில் அதிபரின் காற்செருப்பொலியினைத் தொடர்நது எங்கும் ஒரே நிசப்தம் சிவபுராணம் ஓர் அட்சரம் கூடப் பிசகு இல்லாமல் கல்விச் செயற்பாடுகளின் மேற் பார்வை ஒழுங்குகளை மேற் கொள்ள முன்னேற்றப்படுத்தும் திட்டம்; பாடசாலை விதிமுறைகள், சட்ட  திட்டங்களை அனுசரிக்கும் மாணவர் குழாம். இதுதான் எமது அதிபர் முகாமைத்துவத்தின் கீழ் காரை இந்துக் கல்லூரியின் கல்விச் சூழல் இத்தகைய கவின் சூழலை ஏற்படுத்தி மாணவ சமுதாயத்தை அறிவு ஆற்றல், திறன் மிக்க நன்னடத்தை கொண்ட உன்னத பாதைக்கு வழிகாட்டி, நெறிப்படுத்திக் கூடவே வெற்றியும் கண்ட சாதனையாளர். எமது அதிபரை எண்ணும் தோறும் எமது உள்ளம் உவகையில் பூரித்து நிற்கின்றது. பெருமிதம் அடைகின்றது. இத்தகையாளரை காலத்தால் அழியாத உன்னத புருஷராக கருதுவதில் என்ன தவறு.

காட்சிக்கு எளியவனாய், எளிமையான தோற்றத்தைக் கொண்ட எமது அதிபர் காந்தீயத்தில் பெரிதும் நம்பிக்கை கொண்டவர். மகாத்மாவின் கருத்துக்களைப் பேசும் போதும், கற்பிக்கும் போதும் அடிக்கடி கூறுவார். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட இவர் சமய விழாக்கள் வைபவங்களை பெரியார் சொற்பொழிவுகளை நடத்தி, மாணவர்கள் செல் நெறியினை செம்மைப்படுத்திய உத்தமர். “தொட்டனைத்தூறும் மணற்கேணிமாந்தர்  தம்கற்னைத் தூறும் அறிவு” என்ற வள்ளுவர் வாய்மொழிக்கிணங்க மாணவர்கள் பல்துறை சார்ந்த நூல்களை கற்க நூலக வசதி வளங்களை விஸ்தரித்து, அதற்கென தனியானதோர் நூலகப் பொறுப்பாளரை நியமித்து, மாணவர்கள் ஓய்வு நேரங்களை நூலகத்தில் கழிக்க வாய்ப்பளித்தார். வாசிப்புத்திறனின் விருத்திக்கு வழிவகுக்கின்றார்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரதும் கடமையும் தான் வாழும் சமுதாயத்தின் தேவைகளை உணர்ந்து, அவற்றைப் பூர்த்தி செய்வதே என்ற கல்வியியலாளரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தவர்கள் வரிசையில் எமது அதிபரும் இடம்பிடித்துள்ளார் என்று கூறுவதில் பெருமிதம் அடைகினறேன். பதிகளுக்குள்ளே ஓர் காரைநகர், அக்காரைநகருக்கோ ஓர் இந்துக்கல்லூரி அதனை வழிப்படுத்திய, அதன் பெருமைக்கு உறுதுணையாக விளங்கிய அதிபர்கள் வரிசையில் புதியதோர் சகாப்தத்தை உருவாக்கியவர் எமது அதிபர் எனக் கூறுவது மிகை மொழியாகா.

கல்வியே சமுதாயத்தின் வளர்ச்சிக்கான ஏணிப்படி. எமது காரைநகர் மக்கள் பொருளாதாரத்தில் மட்டுமல்ல கல்வியிலும் ஏற்றம் பெற வேண்டும், காரை அன்னை ஈன்றெடுத்த புதல்விகள் உலகின் எங்கோ ஓர் மூலையில் வாழ்ந்தாலும் அவர்கள் பெருமை பேசப்பட வேண்டும் என்ற உன்னத இலக்கை இலட்சியமாகக் கொண்டு, இந்துக் கல்லூரி என்னும் கல்விக் கூடத்தினூடாக எதிர்கால நற்பிரஜைகளை சமுதாயத்திற்கு கையளிக்க வேண்டும் என்ற அடிப்படைக் கல்விக் குறிக்கோளை தனது மனதில் நிறுத்தி, பாடசாலைத் திட்டங்களை வகுத்து செயற்படுத்து வதில் முனைப்பாக

ஈடுபட்டவர். சாதனைகள் படைத்து மனநிறைவு அடைந்தவர். இன்று எமது கல்லூரி மாணவர்கள் மருத்துவர், பொறியியலாளர், சட்ட வல்லுநர்கள், பொருளியலாளர்கள், ஆசிரியர்கள் அதிபர்கள், கல்வியியலாளர்கள், வர்த்தகர்கள்,விவசாயிகள் என தத்தம் துறைகளில் சிறப்பாக தமக்கும் தம் குடும்பத்துக்கும், சமுதாயத்துக்கும் சேவையாற்றி வருவது கண்கூடு. நாம் எந்தச் செல்வத்தை இழந்தாலும், கல்விச் செல்வத்தை இழக்கக் கூடாது என்ற உயர்ந்த எண்ணக்கருவினை பெற்றோர் பொதுமக்கள் மத்தியில் அன்றும் இன்றும் என்றும் முனைப்புப் பெற்று நிலைபெறுவதற்கு வித்திட்டுச் சென்ற எமததிபர் கலாநிதி தியாகராசாவை மாணவ சமுதாயம் என்றும் மறக்க முடியுமா?

மேலும் பாடசாலை என்பது மாணவர்களின் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணர்நது, வளர்ப்பதற்கான சிறந்த ஓர் களம் என்ற கருத்துக்கு செயல்வடிவம் கொடுத்தவர்களுள் எமது அதிபர் ஒருவர் எனக் கூறுவதில் என்ன தவறு? இன்று உலகளாவிய ரீதியில் பரந்து, வாழும் எமது நாட்டவர் மத்தியில் காரை இந்துக் கல்லூரி மாணவர்கள் தனக்கென தனித்துவமான சாதனைகளை பல்துறைகளிலும் ஈட்டி வருவதற்கு எமது அதிபரின் பணிக்கான பங்களிப்பு அடித்தளமாக அமைவதை நாம் யாரும் மறுக்க முடியாது.

எமது ஊர் காரைநகர், இன்று பெருமிதத்துடன் தலைநிமிர்ந்து நிறபதற்கு அடித்தளமாக அமைவது எமது பாடசாலைகளே கல்வி, ஒழுக்கம், கொண்ட பலதுறை சார்ந்த விற்பனர்கள் காரையம்பதி சமுதாயத்திறகு அன்றும் இன்றும் என்றும் கையளிககப்படுவதற்கு. இத்தகைய பெருமைக்குரியவர்கள்;; அதிபர்கள், ஆசிரியர்களே! அந்த வகையில் இன்று எமது பாடசாலைகள் மாணவ சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்கு அயராது உழைத்து வருகின்றனர் என்றால் தமது முன்னோர்கள் காட்டிய வகுத்த அரும்பணிகளே காரணம் எனக்கூறலாம். இந்த வகையில் பார்க்கும் போது தலைசிறந்த அதிபர், ஆசிரியர்களைக் கொண்ட தலைமுறையினை உருவாக்குவதில் எமது அதிபர் தியாகராசாவின் கல்விப் பணி பெருமளவில் பங்களிப்பினை செலுத்துகின்றது எனத்துணிந்து கூறலாம்.

மேலும் பாடசாலையில் மட்டுமல்ல தமது சமுதாயத்தின் தேவைகளைப் பூர்ததி செய்வதற்கு அதிபர்; சேவை மட்டும் போதியதன்று என உணர்ந்த அவர் அரசியல் களத்தில் புகுந்து வட்டுக்கோட்டைப் பாராளுமன்ற உறுப்பினராக (1970) தெரிவு செய்யப்பட்டார். தமது தொகுதி வாழ் மக்களின் தேவைகளை அவ்வப்போது, கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டிய அவர், குறிப்பாக காரைநகர் மக்களுக்கென மருத்துவ வசதிகளை அங்கேயே பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் வைத்தியசாலை விஸ்தரிப்பு, மத்திய தபாற்கந்தோர், குடிநீர் வசதிக்கான குழாய்நீர் விநியோகம் மின்சாரம், படித்த இளைஞர் வேலைவாய்ப்பு இன்னோரன்ன வசதிகளை பெற்றுக்கொடுத்ததோடு அமையாது, “ஈழத்துச் சிதம்பரம்” என அழைக்கப்படும் சிவன்கோயில் அமைந்த சூழல் எவ்விதத்திலும் புனிதத்துவம் கெடக்கூடாது என்பதற்காக கசூரினா கடற்கரைக்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளுக்கான உல்லாச விடுதி கட்டக்கூடாது என்பதற்கு ஆணிததரமாக தனது எதிர்ப்பினைத் தெரிவித்து வந்தவர்.

எனவே ஒருங்கு சேர்த்து நோக்குமிடத்து தலைசிறந்த கல்விமான்களுள் ஒருவரான எமது அதிபர் கலாநிதி ஆ.தியாகராசாவை ஈன்றெடுத்த காரையம்பதி, இன்று தலைநிமிர்ந்து, நிற்பதற்கு தனது வாழ்க்கைப் பயணத்தில் இறுதி மூச்சு வரை அரும்பாடுபட்டுழைத்த அவர்தம் பணியினை நினைவுகூரும் முகமாக வெளியிடப்படும் இம்மலர் வெளியீட்டுக் குழுவினரை உளமாரப் பாராட்டி, நிறைவு செய்கின்றேன்.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

இங்ஙனம்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

செயற்குழு உறுப்பினர்கள்

சுவிஸ் வாழ் காரை மக்கள்

மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு

17 – 04 – 2023

 

 

 

 

 

 

 

 

 

காரைநகர் பிரதேச வைத்தியசாலை புனரமைப்பு

 

காரைநகர் பிரதேச வைத்தியசாலை புனரமைப்பு

சுவிஸ் காரைஅபிவிருத்திச் சபையினால்  காரைநகர்  பிரதேச   வைத்தியசாலையில் கிழக்கு பக்கமாக  60`x22` பரப்பளவு கொண்ட கட்டிடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டு ஈ.சி.ஜி அறை மற்றும் வைத்திய அதிகாரி தங்கும் அறை அமரர் தில்லையம்பலவாணர்  தலைமையில்  கலாநிதி நடராசா ஜெயக்குமாரன்  அவர்களால் 26.06.2006இல் திறந்து வைக்கப்பட்டது.  இக் கட்டிடத்தொகுதியானது தற்பொழுது பிரசவ சிகிச்சை (Clinic)  நிலையமாக பாவிக்கப்பட்டு வருகின்றது.

காரைநகர் பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் இக் கட்டிடத்தொகுதியின் புனரமைப்பு வேலைகள் தொடர்பாக எமது சபையினருக்கு விடுத்த கோரிக்கைக்கிணங்க அவர்களது பணிகள் தொடர எமது சபையால் ஐந்து இலட்சம் (500 000.00) ரூபாய்கள் நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.

புனரமைப்பு பணிகளின் நிழற்படத் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

இங்ஙனம்

                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

               செயற்குழு உறுப்பினர்கள்

  மொழி,கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

18.03.2023

 

 

 

சுவிற்சர்லாந்து திறிம்பாக் – ஒல்ரன் அருள்மிகு ஸ்ரீ மனோன்மதி அம்பாள் ஆலயத்தில் திரு. சுப்பிரமணியம் கதிர்காமநாதன், திருமதி. தனலட்சுமி கதிர்காமநாதன் தம்பதியினரின் ஷஷ்டியப்த பூர்த்தி அறுபதாம் கல்யாண வைபவத்தில் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் வாழ்த்தி வழங்கிய வாழ்த்துப்பாவும் நிகழ்வின் நிழற்படங்களும்.

மிருதங்கம் ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2023

 

மிருதங்கம் ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2023

யாழ் காரைநகரைச் சேர்ந்த திரு. திருமதி கணேசபிள்ளை, தவமணி, பரஞ்சோதி, பத்மாவதி ஆகியோரின் பேரனும், கனடாவைச் சேர்ந்த மிருதங்க வித்துவான் பரஞ்சோதி ரதிரூபன் அவர்களின் மருமகனுமாய்த் திகழ்பவர் செல்வன் சந்திரலிங்கம் ஜலக்சிகன் அவர்கள் “கலாவித்தகர்” திரு ருக்‌ஷன் ஸ்ரீரங்கராஜா அவர்களிடம் முறைப்படி மிருதங்கம் பயின்று 06.01.2023 வெள்ளிக்கிழமை அன்று சூரிச் வரசித்தி மஹால் Huttenwiesenstrasse 6, 8108 Dallikon மண்டபத்தில் மாலை 16.30 மணிக்கு மிருதங்கம் ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு நடைபெற இருப்பதால் அனைவரையும் அன்புடன் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அழைக்கின்றனர் துர்க்கா தாளலயாலயம்.

சூரிச் வரசித்தி மஹாலில் 31.12.2022 சனிக்கிழமை அன்று நடைபெற்ற மணிவிழாவின் போது திருவளர் தயாபரன் திருநிறை கனகரூபா தம்பதியினருக்கு வாழ்த்தி சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் வழங்கும் வாழ்த்துப்பா.

 

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின் அனுசரணையில் க.பொ.த சாதாரணப் பரீட்சையின் ஆங்கில பாடத்திட்டத்திற்கான பயிற்சிநெறி வகுப்புக்கள்.

 

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின் அனுசரணையில் க.பொ.த சாதாரணப் பரீட்சையின் ஆங்கில பாடத்திட்டத்திற்கான பயிற்சிநெறி வகுப்புக்கள்.

சிவமயம்

 

குஞ்சி யழகுங் கொடுத்தானை கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு

-நாலடியார்

 

எமது சபை மாணாக்கரின் தொழில்சார் நிபுணத்துவம், மொழித்திறன், கலை, கல்வி, விளையாட்டுத்துறை போன்ற விடயங்களை மேம்படுத்தும் முகமாகக் கலை, கல்வி, மற்றும் மொழி மேம்பாட்டுக் குழு ஒன்றினை உருவாக்கி ஊக்கமளித்து வருகின்றது. காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் நலன்விரும்பிகளது வேண்டுகோளுக்கிணங்க வருகின்ற வருடம் பங்குனிமாதம் 2023ஆம் ஆண்டு  நடைபெற இருக்கின்ற பதினொராம் ஆண்டு மாணவருக்கான க.பொ.த சாதாரணப் பரீட்சையின் ஆங்கில பாடத்திட்டத்திற்கான பயிற்சிநெறி வகுப்புக்கள் யாழ் மாவட்ட கல்விவலய ஆங்கிலப்பாடத்திற்கான பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு. கோ. சுப்பிரமணியம் அவர்களால் 12.11.2022 சனிக்கிழமை  யாழ்ற்றன் கல்லூரயில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி,வியாவில் சைவமகா வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்கள் ஆங்கில பாடத்திட்டத்திற்கான பயிற்சிநெறி வகுப்பில் கலந்து சிறப்பித்திருந்தார்கள். காரை இந்துக்கல்லூரி, சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களுக்கான ஆங்கில பாடத்திட்டத்திற்கான பயிற்சிநெறி வகுப்புக்கள் பிரிதொரு திகதியில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

மாணவரின் ஆளுமை விருத்தியே காரைநகரின் வளர்ச்சியின் ஆதாரம் என்பதால் ஆங்கில மொழிப் பயிற்சி தொடர்பாக முன்முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என கலாநிதி திருமதி. வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம் சிரேஷ்ட ஆங்கில விரிவுரையாளர் மொழியியற் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர் விஜயரத்தினம் பிரேமதாஸ் குமாரஸ்ரீ அவர்களும் கருத்துரை வழங்கியிருந்தார்கள். இறுதியாக மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கி ஆங்கில பாடத்திட்டத்திற்கான பயிற்சிநெறி இனிதே நிறைவு பெற்றது. இந் நிகழ்வுக்கு உதவிபுரிந்த நிறைந்த உள்ளங்கள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நிழற்படங்களை கீழே காணலாம்.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

இங்ஙனம்

                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

               செயற்குழு உறுப்பினர்கள்

  மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

13.11.2022

 

வெகு சிறப்பாக நடைபெற்ற மாணவர்கள் கௌரவிப்பும், தொழில் வழிகாட்டலும்

வெகு சிறப்பாக  நடைபெற்ற  மாணவர்கள் கௌரவிப்பும்,

தொழில் வழிகாட்டலும்

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்புடன் மாணவர்களின் ஆளுமைத்திறன்களை வளர்க்கும்  “தியாகத்திறன் வேள்வி”-2022   செயற்திட்டத்தின்கீழ் கடந்த 2021ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சையில் தோற்றி சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களையும் மற்றும் தொழிற்கல்விக்கான சந்தர்பங்களை வழங்கும் திறந்த பல்கலைக்கழகம்,தொழில்நுட்ப கல்லூரிகள் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களில் தமது தொழில் கல்வியை மேற்கொள்ள இருக்கும் மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை காரைநகர் இந்துக்கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

காரைநகர் மடத்துக்கரை அம்மன் கோவில் பிரதமகுரு அவர்களால் சரஸ்வதி பூசை வழிபாடுகளுடனும், தேவாரத்துடனும்  காலை 9.15மணிக்கு ஆரம்பமாகிய விழாவில் முன்னாள்  மாகாணகல்விப் பணிப்பாளர்                திரு.ப.விக்கினேஸ்வரன், ஆணையாளர் நிலஅளவைத் வடமாகாணம்            திரு அ. சோதிநாதன், ஓய்வு பெற்ற அதிபர் யாழ்ற்ரன் கல்லூரி                             திரு. வே. முருகமூர்த்தி, இந்துக்கல்லூரி அதிபர் அ. ஜெகதீஸ்வரன், யாழ்ற்றன் கல்லூரி அதிபர் தி. மதிவதனன், தவிசாளர், பிரதேச சபை,                                          திரு. க. பாலச்சந்திரன், ஆகியோரால் மங்களவிளக்கினை ஏற்றியும் அதனைத்தொடர்ந்து ஒலிநடாவில் சுவிஸ் காரைஅபிவிருத்திச்சபையின் மன்றக்கீதம் இசைத்தும் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

காரைநகரின் இருபெரும் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்களின் ஓத்துழைப்புடனும் யாழ்ற்றன் கல்லூரி அதிபர் தி. மதிவதனன் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக காரைநகர் இந்துக்கல்லூரி அதிபர் அ. ஜெகதீஸ்வரன், தவிசாளர், பிரதேச சபை,      திரு. க. பாலச்சந்திரன்,    ஓய்வு பெற்ற அதிபர் யாழ்ற்ரன் கல்லூரி திரு. வே. முருகமூர்த்தி, ஆணையாளர் நிலஅளவைத் திணைக்களம்,வடமாகாணம் திரு அ. சோதிநாதன், ஓய்வு பெற்ற பிரதிச்செயலாளர் மாகாணகல்விப்பணிப்பாளர் திரு. ப. விக்கினேஸ்வரன் சமாதான நீதவான் ஆசிரியர் யாழ்ற்ரன் கல்லூரி சி.கிருபாகரன், ஆசிரியர் தொழில்நுட்ப கல்லூரி வி. பிரேம்தாஸ்குமாரஸ்ரீ ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தார்கள். ஆகியோர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வில் வரவேற்புரையினையும், தலைமையுரையினையும் யாழ்ற்றன் கல்லூரி அதிபர் தி. மதிவதனன்  அவர்களும்,அறிமுக உரையினை முன்னாள் மாகாணகல்விப்பணிப்பாளர் திரு. ப. விக்கினேஸ்வரன் அவர்களும், விழாவின் பிரதமவிருந்தினர் நிலஅளவைத் திணைக்களம், வடமாகாணம் திருஅ.சோதிநாதன் அவர்களும் உரையாற்றியிருந்தார்கள். அதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கான கௌரவிப்பு,  நன்றியுரையுடனும் மதியம் 11.30  நிகழ்வு  இனிதே நிறைவுபெற்றது.

காரைநகர் மாணவர்களின் கௌரவிப்பு நிகழ்விற்கு ஓத்துழைப்பு நல்கிய பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் சுவிஸ் காரை அவிருத்திச்சபையினர் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.

நிகழ்வின் நிழற்படத்தொகுப்பினை கீழே காணலாம்

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

இங்ஙனம்

                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

               செயற்குழு உறுப்பினர்கள்

  மொழி,கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

11.09.2022

 

 

 

மாணவர்கள் கௌரவிப்பும், தொழில் வழிகாட்டலும்

 

மாணவர்கள் கௌரவிப்பும், தொழில் வழிகாட்டலும்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்புடன் வருடாவருடம் நடாத்தப்பட்டு வருகின்ற “தியாகத்திறன் வேள்வி” மாணர்களுக்கான ஆளுமைத்திறன் போட்டிகளை நடாத்துவதற்கு எமது சபையுடன் இணைந்து கடந்த பல வருடங்களாக காரை அபிவிருத்திச்சபை நிர்வகத்தினர் மற்றும் காரைநகர் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மிகச் சிறப்பாக   செயலாற்றிவருகின்றமை யாவரும் அறிந்தே இருப்பினும் கடந்த மூன்று வருடங்களாக உலகில் பரந்து இருந்த கொரோனா பெரும் தொற்றுக்காரணமாக மாணவர்களுக்கான போட்டிப்பரீட்சைகள் ஏதுவும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரின் இருபெரும் பாடசாலை அதிபர்களின் வேண்டுகோளிற்கிணங்க காரைநகர்ப் பாடசாலைகளில் பயிலும்  மாணவர்களின் பலதரப்பட்ட திறன்களை ஊக்குவித்து மேம்படுத்தும் வகையில் “தியாகத்திறன் வேள்வி- 2022” மாணவர்கள் கௌரவிப்பும், தொழில் வழிகாட்டலும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

கடந்த 2021ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சையில் தோற்றி சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களையும் மற்றும் தொழிற்கல்விக்கான சந்தர்பங்களை வழங்கும் திறந்த பல்கலைக்கழகம், தொழில்நுட்ப கல்லூரிகள் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களில் தமது தொழில் கல்வியை மேற்கொள்ளாது சாதாரணமான கூலி வேலைகள் போன்றவற்றிலும் பெண் பிள்ளைகள் எந்த வேலைகளுக்கும் செல்லாது வாழ்க்கையில் சிரமப்படுகின்றனர். இந் நிலையைப் போக்குவதற்கும் இந்த மாணர்களுக்கு உயர் தொழில் வழிகாட்டலை ஊக்குவிக்கும் முகமாக காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி அதிபர் தி. மதிவதனன் தலைமையில் மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை காரைநகர் இந்துக்கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளதால் காரைநகர் பாடசாலை சமூகத்தினர், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் அனைவரையும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

இங்ஙனம்

                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

               செயற்குழு உறுப்பினர்கள்

  மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

 

08.09.2022

அமரர் ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி (ஐ.தி சம்பந்தன்) அவர்களின் நினைவேந்தல்.

அமரர்  ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி (ஐ.தி சம்பந்தன்) அவர்களின் நினைவேந்தல்.

யாழ் காரைநகர் களபூமி வளுப்போடையைப் பிறப்பிடமாகவும் பிரித்தானியா (லண்டன்) வதிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற மொழி பெயர்ப்பாளர் (இலங்கை துறைமுக அதிகாரசபை) தமிழ் தொழிற்சங்க கூட்டணியின் முன்னாள் செயலாளரும், தமிழ் ஆர்வலரும், உலக சமாதான சபையின் முன்னாள்  செயலாளருமான  அமரர்  ஐயாத்துரை  சோமஸ்கந்தமூர்த்தி (ஐ.தி சம்பந்தன்) அவர்களின் மறைவு குறித்த நினைவு அஞ்சலிக் கூட்டம் 15.05.2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு ஸ்ரீ விஷ்ணு துர்க்கா திருமண மண்டபம்  (Edikerstrasse 24, 8635 Dürnten, Zürich) என்ற முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற்றது.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் செயற்குழு உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட  கூட்டத்தினை சபையின்  போஷகர் தவத்திரு. ஸ்ரீலஸ்ரீ. சுவாமி த.சரஹணபவானந்தா தலைமையில் நினைவு அஞ்சலிக் கூட்டம் ஆரம்பமானது. அமரர் ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி (ஐ.தி சம்பந்தன்) திருவுருவப்படத்திற்கு அமரரது உறவினர்களான திரு முருகேசு சற்குணராஜா  (Zürich) அவர்கள் ஈகைச்சுடரினையும், திரு. நடராஜா சிவலோகநாதன் (Basel) அவர்கள் சந்தனமாலையை அணிவித்தும், தவத்திரு. ஸ்ரீலஸ்ரீ. சுவாமி த.சரஹணபவானந்தா ஐயா அவர்கள் தீபாஞ்சலி செலுத்தியும், அதனைத்தொடர்ந்து புலம்பெயர் நாடுகளில் உள்ள காரைநகர் அமைப்புக்களின் பங்களிப்புடன் காரைநகரில் உள்ள காரை அபிவிருத்தி சபை ஊடாக காரைநகர் மக்களின் கல்வி,குடிநீர்பிரச்சனை, வாழ்வாதாரம்  என பல்வேறு தளங்களின் ஊடாக எமது ஊரின் வளர்சிக்கு முக்கிய தொண்டாற்றி எல்லோர் மனதிலும் நீங்கா இடம்பிடித்த அமரர் திருநாவுக்கரசு சிவாமகேசன் ஆகிய இருவருக்கும்        இரு நிமிட அக வணக்கம் செலுத்தியும், நினைவு அஞ்சலிக் கூட்டத்திற்கு வருகைதந்தோர்கள்  திருவுருவப்படத்திற்கு  மலர்தூவி வணக்கம் செலுத்தியும் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

ஐ.தி சம்பந்தன் ஐயா அவர்கள் கால் பதித்த இடங்கள் ஏராளம், ஆரம்ப காலத்தில் தமிழரசுக்கட்சி பின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஓர் அங்கமாக செயல்பட்டு அன்றைக்கே விடுதலைக்கு குரல்கொடுத்த தன்னலமறற  தொண்டராவர். அதன் பின்னர் இலங்கை எழுதுவினைஞர் சங்கத் தலைவராகவும் மொழி பெயர்ப்பாளராகவும் செயல்பட்டு வந்ததோடு மட்டும் இல்லாமல் சுடரொளி வெளியீட்டுப்பிரிவை உருவாக்கி பல நூல்களை வரலாற்றுப்பதிவுகளாக பிரசவித்த வரலாறும் உங்களைச்சாரும். பன்முக ஆளுமையும், உயர்ந்த பல அனுபவங்களையும் ஊர்சார்ந்த சிந்தனைகளையும் தன்னகத்தே கொண்ட ஐ.தி சம்பந்தன் ஐயா அவர்களின் இரங்கல் உரையை சபையின் செயலாளர் திரு. முருகேசு பாலசுந்தரம் அவர்களும், நினைவுரைகளை சபையின்  போஷகர் தவத்திரு. ஸ்ரீலஸ்ரீ. சுவாமி த.சரஹணபவானந்தா அவர்களும், சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் முன்னைநாள் தலைவர்களான திரு. நல்லதம்பி சரவணப்பெருமாள், திரு. ஆறுமுகம் செந்தில்நாதன், மற்றும் திரு. நடராஜா சிவலோகநாதன்,                    திரு. தர்மரத்தினம் லோகேஸ்வரன் ஆகியோர்கள் உணர்வு பூர்வமாக நினைவுரைகளை ஆற்றியிருந்தார்கள்.

அமரர் ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி (ஐ.தி சம்பந்தன்) அவர்களின் வணக்க நிகழ்வுக்கு சமூகமளித்தோருக்கு சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின் போஷகர் தவத்திரு. ஸ்ரீலஸ்ரீ. சுவாமி த.சரஹணபவானந்தா அவர்களின் நன்றியுரையுடனும்,வருகை தந்தோருக்கு சிற்றுண்டிகள் வழங்கியும் நினைவுக் கூட்டம் 17.30 மணிக்கு நிறைவுபெற்றது.

ஓம் சாந்தி!   ஓம் சாந்தி!!   ஓம் சாந்தி!!!

இங்ஙனம்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை,

செயற்குழு உறுப்பினர்கள்,

மொழி,கல்வி, கலை மேம்பாட்டுக்குழு,

சுவிஸ் வாழ் காரை மக்கள்.

18.05.2022

திரு.ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி (ஐ தி சம்பந்தன்) அவர்களின் மறைவு குறித்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி

மதிப்புக்குரிய ஒய்வுநிலை ஆசிரியர் கலாபூஷணம் யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களின் பவளவிழாவும், அவரால் கடந்த காலங்களில் எழுதப்பட்டு வந்த சமய இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பின் நூல் வெளியீடும் சிறப்புற்று விளங்க சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை வாழ்த்துகின்றது.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை மன்றத்திற்கான கீதத்தை இயற்றியவரும் “முத்தமிழின் இலக்கிய வித்தகருமான” ஜயா தமிழ்மணி அகளங்கன் தலைமையில் பல தமிழறிஞர்கள், கல்வியாளர்கள், தமிழ், சமய உணர்வாளர்கள் கலந்து சிறப்பிக்கும் மதிப்புக்குரிய ஒய்வுநிலை ஆசிரியர் கலாபூஷணம் யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்களின் பவளவிழாவும், அவரால் கடந்த காலங்களில் எழுதப்பட்டு வந்த சமய இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பின் நூல் வெளியீடும் சிறப்புற்று விளங்க சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை வாழ்த்துகின்றது.

திருமதி சுப்பிரமணியம் அன்னலட்சுமி அவர்களின் மறைவு குறித்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

திரு.கந்தையா அன்னலிங்கம் அவர்களின் மறைவு குறித்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

முன்னாள் அதிபர் அமரர் கார்த்திகேசு நடராஜா அவர்களின் நினைவேந்தல்.

 

முன்னாள் அதிபர் அமரர் கார்த்திகேசு நடராஜா அவர்களின் நினைவேந்தல்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது தமிழ் வாக்கு. நல்ல தாய், தந்தை, குருவைப் பெற்றவர்கள் மிகுந்த பாக்கியசாலிகளாவர். ஆசிரியராக, அதிபராக K.K நடராஜா அவர்களைப் பெற்றது எமது மாணவ மாணவியரதும், காரைநகரினதும் மகா பாக்கியமே. அமரரது ஆசிரியப்பணி அளப்பெரியது.

அமரர் K.K நடராஜா அவர்கள்  07.07.1929 ஆம் ஆண்டு காரைநகர் பயிரிக்கூடலில் பிறந்தார். இவர் கார்த்திகேசு, வள்ளியம்மையின் புதல்வர் ஆவார். அன்னார் வட்டுக்கோட்டைத் தொகுதியின் பல பாகங்களிலிருந்தும் தேர்ச்சி பெற்ற  மாணவர்களை உள்வாங்கி அவர்தம் உயர்கல்விக்கு மிகவும் உறுதுணையாக இருந்ததும், கல்லூரிகளின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்ததும் அவரது பணிகளில் மிகவும் முக்கியமாக குறிப்பிடத்தக்கன.  தந்தையின்  அடியொற்றி அவரது பிள்ளைகள் சிவகுமார், அம்பிகா இருவரும் பட்டதாரிகளாகி ஆசிரியப் பணி  புரிந்து வருகின்றார்கள்.  அவரது இளைய மகன் மருத்துவ கலாநிதி ஜெயக்குமார் அவர்கள் உலகத்தர புற்று நோய் மருத்துவ நிபுணராக இலங்கையில் கடமையாற்றி வருகின்றார்.

காரைநகர் இந்துக் கல்லூரியில் வெள்ளிவிழா அதிபர் கலாநிதி ஆ.தியாகராசா காலத்தில் 1967ஆம் ஆண்டு இணைந்து 1988 ஆம் ஆண்டு வரை இரசாயனவியல், கணித பாடங்களைக் கற்பித்து பல நன்மாணக்கர்களை உருவாக்கியதுடன் அவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற கல்விச் சேவை புரிந்தவர் என்ற பெருமைக்குரிய அமரர் திருமதி கமலாம்பிகை நடராஜா அவர்கள் அமரர் K.K நடராஜா அவர்களின் அன்புத்துணைவியாவார்.

28.06.1952 இல் ஆசிரியராக இவரது  கல்விச் சேவை ஆரம்பித்தது. அதிபராக யாழ்ற்ரன் கல்லூரி, காரை இந்துக் கல்லூரி, சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, பதுளை இந்துக் கல்லூரி, கண்டி கின்ஸ்வாட் கல்லூரி  ஆகியவற்றில் கடமையாற்றினார்.  08.07.1989 இல் ஒய்வு பெற்றார். 37 வருடங்களாக இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள  பாடசாலைகளில் ஆசிரியராகவும், அதிபராகவும் கல்விச் சேவை புரிந்தவர் என்ற பெருமைக்குரியவர்.

காரைநகர் சைவமகாசபை, மணற்காட்டு அம்மன் திருப்பணிச்சபை, இணக்கசபை, ஈழத்துச் சிதம்பர திருப்பணிச்சபை, மாணிக்கவாசகர் அன்னதானசபை, காரைநகர் பல நோக்கு கூட்டுறவுச்சங்கம்,  மூளாய் மருத்துவமனை ஆகியவற்றில் தலைவராக   பல  வருடங்கள் செயலாற்றியவர், காரைநகர் பயிரிக்கூடல் சுப்பிரமணிய சுவாமி கோவில்   முன்னாள் பொருளாளராகவும்  சிறப்புற பணிபுரிந்தவர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

அதிபர் கலாநிதி தியாகராசா M.A. M.Litt  அவர்களுக்குப் பின் வந்த அதிபர்களில் அமரர் அமரர் K.K நடராசா B.Sc.Dip.in.Ed   அவர்களின் சேவையும்  மிகச் சிறப்பானது. கணித பாடம் கற்பித்தலில் நல்லாசானாக விளங்கிய இவர் 1974 – 1977 வரை காரைநகர் இந்துக் கல்லூரியிலும், 1983 -1987 வரை யாழ்ற்ரன் கல்லூரியிலும் அதிபராகக் கடமையாற்றியுள்ளார். இவர் கணிதம், விஞ்ஞானம் ஆகிய உயர்தர வகுப்புக்களில் அதிக கவனம் செலுத்தினார். புதிய பட்டதாரி ஆசிரியர்களை கல்லூரிகளில், சேவையில்  ஈடுபடுத்தவும்,  தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்பித்த புகழ் நாட்டிய ஆசிரியர்கள் கல்லூரிகளில் நியமனம் பெறவும் அரும்பாடுபட்டார். இதனால் எண்ணுக்காணக்கான மாணவர்கள் கணித, விஞ்ஞானப் பிரிவுகளில் கற்று உயர் சித்தி பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவரது சேவைக்காலத்தில் அயல் கிராமங்களிலிருந்தும் மாணவர்கள் இக்கல்லூரிகளை நாடி வந்தனர்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து கடந்த 03 – 12 – 2017 அன்று யாழ்ற்ரன் கல்லூரியில் ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரத்தினம்   (நீலிப்பந்தனை காரைநகர்) அவர்களின் மகன் இணைப் பேராசிரியர் கலாநிதி. கென்னடி விஜயரத்தினம் அவர்களின்  தலைமையில் நடாத்திய “முத்தமிழ் விழா – 2017” இல் முன்னாள் யாழ்ற்ரன் கல்லூரி அதிபர்   மதிப்பிற்குரிய  கார்த்திகேசு நடராசா அவர்களுக்கு “பொதுப் பணிச் செம்மல்|| விருதளித்து மதிப்பளித்தது.

K.K நடராசா என உலகில் பரந்து வாழும் பல நூற்றுக்கணக்கான மாணவர்களால் அன்பாக அழைக்கப்பட்ட  அமரர் K.K நடராஜா அவர்கள் உடநலக்குறைவு காரணமாக இந் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. அவர் சார்பாக மூத்த மகனான ஆசிரியர் திரு நடராஜா சிவகுமாரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

சிவயோகச் செல்வன் ஆக்கிய வாழ்த்துப் பாவை சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் மொழி, கல்வி மற்றும் கலை மேம்பாட்டுக் குழு இணைப்பாளர்  பேராசிரியர் கலாநிதி. கென்னடி விஜயரத்தினம்  அவர்களால் வாழ்த்துரை இசைக்கப்பட்டு  பேராசிரியர் வேலுப்பிள்ளை தருமரத்தினம் வாழ்நாள் பேராசிரியர், முன்னாள் விஞ்ஞானபீடாதிபதி, யாழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பாவினை வழங்கியிருந்தார்கள்.

                             பிறப்பது உண்மை. இறப்பது பேருண்மை.

          ஓம் சாந்தி!  ஓம் சாந்தி!!  ஓம் சாந்தி!!!

வாழ்த்துப்பாவும்,  நிழற்படங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

        இங்ஙனம்

                      சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

செயற்குழு உறுப்பினர்கள்

    மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்.

26.12.2020

 

 

 

 

ஓய்வு நிலை அதிபர் திரு K.K.நடராஜா அவர்களின் மறைவு குறித்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி!

சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் நிதி உதவியுடன் கண்படர் (Cataract) அகற்றல் சிகிச்சை 16 பேருக்கு 22.06.2020இல் யாழ் போதனா வைத்தியசாiயில் நிறைவுற்றது.

 

சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் நிதி உதவியுடன் கண்படர் (Cataract) அகற்றல் சிகிச்சை 16 பேருக்கு 22.06.2020இல் யாழ் போதனா வைத்தியசாiயில் நிறைவுற்றது.

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”

சுவிஸ் காரை அபிவிருத்தி சபை அறிமுக நாளில் இருந்து எமது கிராமத்து உறவுகளின் சுகாதார சேவையை முன்னிலைப் படுத்தி வருகின்றது. காரைநகர் ஆதார வைத்தியசாலையில் அதிகாரி தங்கும் அறை, ஈ.சி.ஜி அறை நிர்மாணிப்பு, சீறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்கு உதவி வேண்டி நின்றவர்களுக்கு நிதியுதவி, கொரோனா நிவாரணப் பணிக்கு வாழ்வாதார உதவித்தொகை வழங்கல். என தனது பல சேவையை செய்தமை யாவரும் அறிந்ததே.

மருத்தவ உதவி திட்டத்தின் கீழ் காரைநகரில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்ப அங்கத்தவர்களை எமது உப குழுவான காரை அபிவிருத்திச் சபையின் நெறிப்படுத்தலில்  17 பேர் தெரிவு செய்யப்பட்டு இவர்களில் 16 பேருக்கு கண்படர் (Cataract)  சிகிச்சை யாழ் போதனா வைத்தியசாலையில் 22.06.2020 இல் மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி மருத்துவ உதவித்திட்ட கண்படர் (Cataract)  சிகிச்சைக்கு எமது சபை கடந்த பல வருடங்களாக நிதியுதவி வழங்கி வருகின்றது. இவ்வாண்டும்  47600.00 ரூபாய் சுவிஸ் காரை அபிவிருத்தி சபையினால் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கண்படர் (Cataract)  சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட நிழற்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இச் சிகிச்சையை திறம்பட ஒழுங்கமைத்து நடாத்தி முடித்த யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர்களுக்கும், காரை அபிவிருத்திச் சபை நிர்வாக உறுப்பினர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

இங்ஙனம்

                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

               செயற்குழு உறுப்பினர்கள்

  மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்.

25.06.2020

 

 

 

 

 

 

 

நன்றியுடன் வாழ்த்துகிறோம்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரும், கனடா கலாச்சார மன்றமும் இணைந்து கொரோனா நிவாரணப் பணிக்கு வாழ்வாதார உதவித்தொகை வழங்கல்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரும், கனடா கலாச்சார மன்றமும் இணைந்து கொரோனா நிவாரணப் பணிக்கு வாழ்வாதார உதவித்தொகை வழங்கல்.

எமது தாய் சங்கமான காரைநகர் அபிவிருத்திச் சபையினரின் செயற்திட்டத்தின் கீழ் ஊரில் உள்ள பெண் தலைமைத்துவம், மாற்றுத் திறனாளி குடும்பங்களுக்கான கொரோனா உதவித்தொகை கொடுப்பனவு சிட்டை வழங்கும் நிகழ்வு இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

காரைநகரில் உள்ள ஓரு நபரை தலைமைத்துவமாக கொண்ட 605 குடும்ப உறுப்பினர்களுக்கு 650.00 ரூபாய்களும், இரண்டு நபரைத் தலைமைத்துவமாக கொண்ட 280 குடும்ப உறுப்பினர்களுக்கு 1000.00 ரூபாய்களும், மூன்று நபரைத் தலைமைத்துவமாக கொண்ட 370 குடும்ப உறுப்பினர்களுக்கு 1500.00 ரூபாய்களுமாக மொத்தமாக 1255 குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டன.

“ஓன்று பட்டால் உண்டு வாழ்வு” என்ற கூற்றிற்கு இணங்க இச் செயற்திட்டத்திற்கு கனடா கலாச்சார மன்றமும் எமது சபையினரும்  பூரண நிதி வழங்கி சிறப்பித்திருந்தனர். எமது சகோதர அமைப்பான கனடா கலாச்சார மன்றத்தினருக்கும், இச் செயற்திட்டத்தை சிறந்தமுறையில் செயல்படுத்திய காரைநகர் அபிவிருத்திச் சபை நிர்வாக உறுப்பினர்களுக்கும் எமது நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

இங்ஙனம்

                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

               செயற்குழு உறுப்பினர்கள்

  மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

16.05.2020

 

கொரோனா வைரஸ் நிவாரணப்பணியாக தாயகத்தில் பல பாகங்களிலும், எமது ஊரான காரைநகரிலும் வாழ்வாதாரம் குறைந்த குடும்பத்தினர் தமது அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதற்கு பல இடர்களை எதிர்நோக்குகின்றனர். அவர்களின் இடர்களை நிவர்த்தி செய்வதற்காக உலர் உணவுப் பொதிகளை வழங்கியமைக்காக அறக்கொடைஅரசு திரு. சுப்பிரமணியம் கதிர்காமநாதன் குடும்பத்தினரை சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் பாராட்டி வாழ்த்துகின்றனர்

 

கொரோனா வைரஸ் நிவாரணப்பணியாக தாயகத்தில் பல பாகங்களிலும், எமது ஊரான காரைநகரிலும் வாழ்வாதாரம் குறைந்த குடும்பத்தினர் தமது அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதற்கு பல இடர்களை எதிர்நோக்குகின்றனர். அவர்களின் இடர்களை நிவர்த்தி செய்வதற்காக உலர் உணவுப் பொதிகளை வழங்கியமைக்காக அறக்கொடைஅரசு திரு. சுப்பிரமணியம் கதிர்காமநாதன் குடும்பத்தினரை சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் பாராட்டி வாழ்த்துகின்றனர்.

கொரோனா நிவாரணப் பணிக்கு உதவிக்கரம் கோரல்

சிவமயம்

பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்

                      இருள்தீர எண்ணிச் செயல்

                                    குறள் – 675

 

கொரோனா நிவாரணப் பணிக்கு உதவிக்கரம் கோரல்

 

அன்புடையீர் வணக்கம்!

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந் நிலையில் சமூக விலகலை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்தலாம் என்ற கருத்தினை உலகில் உள்ள அரச நிர்வாகங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றன. அதேவேளை எமது ஊரான காரைநகரிலும் இந் நடைமுறை இருப்பதானால் வாழ்வாதாரம் குறைந்த குடும்பத்தினர் தமது அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதற்கு பல இடர்களை எதிர்நோக்குகின்றனர். அவர்களின் இடர்களை நிவர்த்தி செய்வதற்கு காரைநகர் பிரதேச சபையும், காரைநகர்  அபிவிருத்திச் சபையினரும் இணைந்து எமது சபையினரிடம் வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளனர். அதனுடைய பிரதிகள் இதனுடன் இணைக்கப்படுகின்றன.

“பெற்றதாயும் பிறந்தபொன்னாடும் நற்றவ வானிலும் நனிசிறந்தனவே” அன்பான சுவிஸ் வாழ் காரை உறவுகளே!  2004ஆம் ஆண்டில் இருந்து நாம்  எமது தாய் சங்கமான  காரைநகர் அபிவிருத்திச்சபையுடன் இணந்து பல பணிகளும், சேவைகளும் ஆற்றிவருகின்றோம்.

காரைநகர் பிரதேச சபையும், காரைநகர் அபிவிருத்திச் சபையினரும் விடுத்த கோரிகைக்கு அமைவாக எமது  சபை  இயன்ற உதவித் தொகையினை வழங்குவதென தீர்மானித்துள்ளது. அன்பான சுவிஸ் வாழ் காரை உறவுகளே! தங்களால் இயன்ற 50.00 சுவிஸ் பிராங்களுக்கு குறையாத உதவித் தொகையினை கீழ் காணும் வங்கி இலக்கத்திற்கு 30.04.2020 முன்பதாக அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

UBS Sparkonto

IBAN CH34 0023 5235 1146 15M1K

Konto – Nr. : 235-114615.M1K

Inhaber: Swiss – karai Abiviruththisabai

MWST- Nummer: CHE-116 303 292 MWST

 

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” உலகில் பரந்து வாழும் மானிடர் இன்புற்று வாழ எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பர சௌந்தராம்பிகா சமேத சுந்தரேஸ்வரப் பெருமானை  பிரார்த்திக்கின்றோம்.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்

                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

               செயற்குழு உறுப்பினர்கள்

       மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

06.04.2020

 

அமரர் மகாலட்சுமி தில்லையம்பலவாணர் அவர்களின் மறைவு குறித்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

திருமதி தவநாயகி பாலசிங்கம் அவர்களின் மறைவு குறித்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை வெளியிட்டுள்ள இதய அஞ்சலி

காரைநகர் அபிவிருத்திச் சபையும் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் இணைந்து நடாத்திய முத்தமிழ் விழா (12.01.2020) (காணொளி)

காரைநகர் அபிவிருத்திச் சபையும் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் இணைந்து நடாத்திய முத்தமிழ் விழா 12.01.2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது!

அமரர் திருமதி கனகசபை சிவஞானவதி (சிவம் அக்கா) அவர்களின் மறைவு குறித்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

அமரர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் அபிவிருத்திச் சபையும் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் இணைந்து நடாத்தும் முத்தமிழ் விழா அழைப்பிதழ்!