காரை கலாசார கனடா மன்றத்தின் அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான 1ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

 

 

காரை கலாசார கனடா மன்றத்தின் அனுசரணையுடன்

காரைநகர் அபிவிருத்திச் சபையினால்

காரைநகர் கோட்டப் பாடசாலைகளில்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான

1ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

காரைநகர் சுப்பிரமணிய வித்தியாலயத்தில் காரைநகர் வலந்தலை தெற்கு அமி.த.க. பாடசாலை அதிபர் க.நேத்திரானந்தன் தலைமையில் ஆரம்பமான இந்தச் செயலமர்வில் யாழ் பிரபல பாடசாலை ஆசிரியர்களினால் கற்பித்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் வழிகாட்டல் குறிப்புக்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இவ்வாண்டு டிசெம்பர் மாதம் 18ம் திகதி இடம்பெற உள்ள இந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்ற உள்ள காரைநகர் கோட்ட பாடசாலை மாணவர்கள் 145 பேரில் 117 மாணவர்கள் இந்த வழிகாட்டல் செயலமர்வில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இந்த செயலமர்வில் ஆயிலி சிவஞாணோதயா வித்தியாலய அதிபர் இ.வசீகரன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் காரைநகர் அபிவிருத்திச் சபை செயலாளர். பொருளாளர் உள்ளிட்ட சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

2ம் கட்டச் செயலமர்வு எதிர்வரும் சனிக்கிழமை (26.11.2022) காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் இடம்பெற உள்ளது. இந்தச் செயலமர்வில் கலந்துகொண்ட அனைத்துப் பிள்ளைகளுக்கும் இரு தடவைகள் சிற்றுண்டி வழங்கப்பட்டதுடன் காலை 8.30 மணிதொடக்கம் பிற்பகல் 2.30 மணிவரை இந்தச் செயலமர்வு இடம்பெற்றது.