வியாவில் சைவ வித்தியாலயத்தின் சமையலறைத் திருத்த வேலைகள் கனடா-காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

வியாவில் சைவ வித்தியாலயத்தின் சமையலறைத் திருத்த வேலைகள் கனடா-காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

வியாவில் சைவ வித்தியாலயத்தில் அமைந்துள்ள சமையலறை மிகுந்த சேதமடைந்திருந்ததனால் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் பல்வேறு அசளகரியங்களை எதிர்கொண்டு வந்துள்ளனர். சமையலறையின் குசினிப்பகுதியில் சமைக்கமுடியாத நிலை இருந்ததனால் பாடசாலைக்கு வெளியிலிருந்தே உணவு சமைக்கப்பட்டு எடுத்து வரப்பட்டிருந்தது. மழைகாலங்களில் கூரையூடாக ஒழுக்கிருந்ததனால் மாணவர்கள் அங்கிருந்து உணவருந்துவதில் அசளகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.

சமையலறையினை திருத்தம் செய்யப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறித்தி முன்னாள் அதிபரான திருமதி கௌ.அருள்மொழி அவர்களினால் கனடா-காரை கலாசார மன்றத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இதனைத் திருத்திக்கொடுப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அருள்மொழியைத் தொடர்ந்து வந்த அதிபர் திரு.நல்லதம்பி கிஸ்ணபவன் அவர்களுடன் கனடா-காரை கலாசார மன்றம் தொடர்புகொண்டு திருத்த வேலைகளை முன்னெடுக்கவிருந்த தருணத்தில் அவர் இடமாற்றலாகிச் செல்ல புதிய அதிபராக திரு.கே.துஸ்யந்தன் பதவியேற்றிருந்தார். துஸ்யந்தன் அவர்கள் எடுத்துக்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக காரை அபிவிருத்திச் சபையின் மேற்பார்வையில் சமையலறையின் திருத்த வேலைகள் யாவும் ஐந்து இலட்சத்து ஐம்பத்தொராயிரமம் ரூபா செலவில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இப்பணிக்கு சில அன்பர்களும் முன்வந்து நன்கொடையினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இப்பணியின் அவசியத்தைக் கருத்திற்கொண்டு உதவிசெய்த கனடா-காரை கலாசார மன்றத்துக்கு பாடசாலைச் சமூகத்தின் சார்பில் நன்றி தெரிவித்து அதிபர் திரு.துஸ்யந்தன் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

இக்கடிதத்தினை கீழே பார்வையிடலாம்.