Tag: Karai Hindu O.S.A

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க வருடாந்தப் பொதுக்கூட்ட அறிவித்தல்

osa invitation

டெங்கு காய்ச்சல் அற்ற சிறந்த மாதிரிப் பாடசாலைக்கான போட்டியில் முலாவது இடத்தினைப் பெற்று காரை. இந்து சாதனை.

டெங்கு காய்ச்சல் அற்ற சிறந்த மாதிரிப் பாடசாலைக்கான போட்டியில் முலாவது இடத்தினைப் பெற்று காரை. இந்து சாதனை.

ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிமனையினால் நடத்தப்பட்டிருந்த டெங்கு காய்ச்சல் நோய் அற்ற சிறந்த மாதிரிப் பாடசாலையை தெரிவு செய்வதற்கான போட்டியில் முதலாவது இடத்தினைப் பெற்றுக்கொண்ட காரைநகர் இந்துக் கல்லூரிக்கு பாராட்டு விருதும் ஐயாயிரம் ரூபா பணப் பரிசிலும் வழங்கப்பட்டுள்ளன.

ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவின் நிர்வாக எல்லைக்குட்பட்டு வருகின்ற காரைநகர், ஊர்காவற்றுறை, வேலணை ஆகிய கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகள் இப்போட்டியில் பங்குபற்றியிருந்தன. நாடளாவிய ரீதியில் பரவி வருகின்ற டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு தொடர்பில் மக்களிடத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்துகின்ற செயற்பாட்டின் ஓர் அங்கமாக இப்போட்டி நடத்தப்பட்டிருந்தது.

சுகாதாரத்தைப் பேணி நோய்கள் வராது தடுப்பது தொடர்பில் ‘நிலைபேறான அபிவிருத்தி’ என்கின்ற திட்டம் நாடுதழுவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்துள் எமது பாடசாலையும் உள்வாங்கப்பட்டு அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்கள் தலைமையிலான ஆசிரியர்களை உள்ளடக்கிய குழு குறித்த திட்டச் செயற்பாடுகளை மாணவர்கள் மத்தியில் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது.

இத்திட்டக் குழுவின் உப-குழுவே மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் தொடர்பிலான அறிவினை ஏற்படுத்தி அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் தெரியப்படுத்தி டெங்கு காய்ச்சல் அற்ற பாடசாலையாக எமது பாடசாலை விளங்குவதற்கு முக்கிய பங்காற்றியுள்ளது.

அந்தவகையில் இவ் உப குழுவின் தலைவரான அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களையும் உப குழுவின் உறுப்பினர்களாகப் பணியாற்றி வருகின்ற ஆசிரியர்களான திரு ச. அரவிந்தன், திரு ஞா. கிரிதரன், திருமதி க. சுபத்திரா, திருமதி க. சந்திரமோகன், செல்வி வி. தாட்சாயினி, செல்வி சி. கிருபாலினி ஆகியோரையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது.

பாடசாலையின் சார்பில் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்கள் சுகாதார மருத்துவ அதிகாரியிடமிருந்து பெற்றுக்கொண்ட விருதினையும் சான்றிதழையும் கீழேயுள்ள படங்களில் காணலாம்:

 

மகிமை மிக்க பழைய மாணவன் பேராசிரியர் ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கோட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று காரை இந்து சாதனை!

 

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கோட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று காரை இந்து சாதனை!

உயிரியல் விஞ்ஞானம் – 1, உயிர் முறைமை தொழில்நுட்பம் – 2, வணிகம் – 1, கலைத்துறை – 4 உள்ளிட்ட 8 மாணவர்கள பல்கலைக்கழக அனுமதி பெறும் வாய்ப்பு! 

முதல் தடவையாக  உயிர்முறைமைகள் தொழினுட்பவியலில் 2 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லவுள்ளனர்!

சென்ற ஆகஸ்டு மாதம் நடைபெற்றிருந்த க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் இணையம் ஊடாக அண்மையில் வெளியிடப்பட்டிருந்தன.

இப் பெறுபேறுகளின் அடிப்படையில் காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து தோற்றிய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று காரைநகர் கோட்ட மட்டத்தில் முன்னிலை வகிக்கின்றனர்.

இப்பரீட்சைக்கு தோற்றியவர்களுள் 21 மாணவர்கள் குறித்த கற்கைநெறிகளுக்குரிய 3 பாடங்களிலும் சித்தியடைந்ததன் மூலம் பல்கலைக் கழகம் செல்வதற்கான தகமையினைப் பெற்றுள்ளனர். இவர்கள் பெற்றுள்ள மாவட்ட நிலையினை கருத்திற்கொள்ளும்போது குறைந்தது எண்மருக்கு பல்கலைக் கழக அனுமதி கிடைப்பது உறுதியானது எனக் கூறப்படுகிறது. வெட்டுப் புள்ளி நிர்ணயம் செய்யப்பட்ட பின்னர் இத்தொகை மேலும் அதிகரிக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

உயிரியல்(1), வணிகம்(1), கலை(4), உயிர் முறைமை தொழில்நுட்பம்(2), ஆகிய கற்கைநெறிப் பிரிவுகளைச் சேர்ந்த 8 மாணவர்களே பல்கலைக் கழகம் செல்கின்ற வாய்ப்பினை பெற்றுள்ள அதேவேளை உயிர் முiறைமை தொழில்நுட்பப் பிரிவுக்கு இக்கல்லுரியிலிருந்து முதல் தடவையாக இரு மாணவர்கள் செல்லவுள்ளதாக கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தெரிவித்தார்.

இக்கல்லூரி பெற்றுக்கொண்ட சிறந்த பெறுபேறுகள் குறித்து மகழ்ச்சியை வெளிப்படுத்திய அதிபர் இம்மாணவர்களுக்கும் இவர்களைக் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பாரட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கல்லூரிச் சமூகத்தின் சார்பில் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பராட்டி வாழ்த்துகின்றது.

மாணவர்கள் பெற்றுக்கொண்ட பெறுபேற்றின் விபரங்களை கீழுள்ள அட்டவணையில் பார்வையிடலாம்:

 

No

 

Name Subject stream Results District Rank Entrance stream
1 Tharmalingam Nagaranjan commerce 2A B 75 Management
2 Vickneswaran Pathmini commerce BCS
3 Rasathurai Bavananthan commerce 2CS
4 Suntharalingam Umakanthan commerce 2CS
5 Krishnapillai Ajthkumar commerce C2S
6 Vickneswaran Kuruparan commerce C2S
7 Navaratnarajah Jasmina commerce 3S
8 Perinpanayakam Saranya Arts 2AB 100 Arts
9 Kantheeswaran Saransiya Arts 2BC 374 Arts
10 Yogaratnam Jusitha Arts ABC 273 Arts
11 Thevarasa Romila Arts 2BS
12 Kanagaratnam Abirami Arts 2BC 360 Arts
13 Uthayakumar Mehala Arts B2C
15 Kirishnapillai Dilakshan Arts C2S
16 Yoganathan Dharmitha Bio Tec 2BC 21 Bio Tec
17 Komaleswaran

Balasayanthan

Bio Tec ACS 33 Bio Tec
18 Somasuntharam

Jasitharan

Eng.Tec 3S
19 Krishnapillai

Ajithkumar

Eng.Tec 3S
20 Sriskantharasa Sarangan Eng.Tec 3S
21 Sivapatham Vithusa Bio B2S 574 Bio

 

அதிபர், ஆசிரியர்களுடன் சாதனை மாணவர்கள் பாடசாலை முன்றலில் அமர்ந்திருக்கும் போது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.

 

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

காரைநகர் இந்துக் கல்லூரி அபிவிருத்தித் திட்டத்திற்குத் தேவையான மேலும் ஒரு காணி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

காரைநகர் இந்துக் கல்லூரி அபிவிருத்தித் திட்டத்திற்குத் தேவையான மேலும் ஒரு காணி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரச கல்விப்பகுதியால் நாடு தழுவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வருகின்ற ‘அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை’ என்கின்ற மகுடத்துடனான பாரிய அபிவிருத்தித் திட்டத்தில் எமது பாடசாலையும் உள்வாங்கப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்ததேயாகும். இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு குறிப்பிட்ட பரப்பளவுடைய காணி பாடசாலையின் பெயரில் அமைந்திருக்க வேண்டியது அவசியமானதாகும். பாடசாலையை சூழவுள்ள பொருத்தமான காணிகளை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் பாடசாலைச் சமூகம் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றது. மடத்துக்கரை அம்பாள் ஆலயத்திற்கு எதிர்ப்புறமாக பிரதான வீதியுடன் அமைந்துள்ள இரண்டு பரப்புக் காணியை சென்ற ஆண்டு கொள்வனவு செய்வதற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை உதவியிருந்தது. இக்காணியுடன்; இணைந்த மூன்று பரப்புக் காணியை கொள்முதல் செய்வதற்கு பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக் கிளை உதவியிருந்தது. பாடசாலையின் வடக்கு வளாகத்தின் கிழக்கு எல்லையில் பிரதான வீதியுடன் அமைந்திருக்கும் ஐந்தரைப் பரப்புக் காணியை கொள்முதல் செய்வதற்கு பெரிய பிரித்தானியா-காரை நலன் புரிச் சங்கத்தினர் உதவியிருந்தனர். குறிப்பிட்ட அபிவிருத்தித் திட்டம் எமது கல்லூரிக்குக் கிடைத்ததில் முன்னைநாள் அதிபர் திருமதி வாசுகி தவபாலனின் பங்களிப்பு பாராட்டப்படக்கூடியது என்பதுடன் இத்திட்டத்திற்கான அங்கீகாரம் கிடைத்தது முதலாக அதற்குரிய காணிகளைப் பெற்றுக் கொள்வதற்கு இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டு மேற்குறித்த காணிகள் பாடசாலைக்கு கிடைக்கச் செய்திருந்தார். காணிக் கொள்வனவு தொடர்பில் வாசுகி தவபாலன் விட்டுச் சென்ற பணியினை தற்போதய அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் பாடசாலைச் சமூகத்தின் ஒத்துழைப்புடன் அக்கறையோடு தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்.

தற்போது ஏழு பரப்பு பரப்பளவுடைய மேலும் ஒரு காணி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவியுடன் சென்ற வாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. காணிக்குரிய பெறுமதி பதினேழரை இலட்சம் ரூபாவும் முத்திரைச் செலவு அறுபத்தொன்பதாயிரம் ரூபாவும் ஆக மொத்தம் பதினெட்டு இலட்சத்து பத்தொன்பதாயிரம் ரூபா பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் உதவப்பட்டுள்ளது. வலந்தலைச் சந்திக்கு அண்மையாக மேற்கு பிரதான வீதியின் வடக்குப் பக்கமாக இக்காணி; அமைந்துள்ளது.

பாடசாலையின் வளர்ச்சியில் அக்கறையுடன் செயலாற்றி வருகின்ற பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் உப-தலைவரும் பிரபல தொழிலதிபருமான திரு.சிதம்பரப்பிள்ளை நேசேந்திரம் காணிகளைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் அதிபருக்கும் பழைய மாணவர் சங்க நிர்வாகத்திற்கும் உறுதுணையாகவிருந்து செயற்பட்டு வருபவர். அத்துடன் கொள்முதல் செய்யப்பட்ட காணிகளை பயன்படுத்துவதற்கு ஏற்றவகையில் துப்புரவு செய்வதற்கு தனது பக்கோ இயந்திரத்தின் சேவையை இலவசமாக வழங்கி உதவி வருகின்றார். இவரது பெரு முயற்சியே குறிப்பிட்ட ஏழு பரப்புக் காணியையும் பாடசாலை பெற்றுக்கொள்வதற்கு உதவியுள்ளது.

இக்காணிக்குரிய சட்ட ஆவணத்தினை (உறுதி) பாடசாலையின் பெயரில் எழுதிய பணி கல்லூரியின் பழைய மாணவியும் சட்டத்தரணியுமாகிய திருமதி சாந்தி சிவபாதம் அவர்களின் யாழ்ப்பாணத்திலுள்ள பணிமனையில் இடம்பெற்றிருந்த சமயம் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன், திரு.நேசேந்திரம் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளர் திரு.மாணிக்கம் கனகசபாபதி, தாய்ச் சங்கத்தின் செயலாளர் திரு.நடராசா பாரதி, பொருளாளர் திரு.கணபதிப்பிள்ளை நிமலதாசன், உதவிச் செயலாளர் திரு.நாகராசா, நிர்வாக சபை உறுப்பினர் திரு.சுப்பிரமணியம் அகிலன், பழைய மாணவர் திரு.இ.சிவசுப்பிரமணியம் ஆகியோருடன் காணி உரிமையாளர்களினால் சட்டபூர்வமாக அதிகாரமளிக்கப்பட்டவரும் சமூகமளித்திருந்தனர். சட்டத்தரணி திருமதி சாந்தி சிவபாதம் காணிக்குரிய சட்ட ஆவணங்களை(உறுதி) எழுதும் பணியை இலவசமாகவே செய்து உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

காணிக்குரிய பெறுமதியின் கொடுப்பனவிற்கான காசோலையை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் பொருளாளர் திரு.கனகசபாபதி காணிக்குரிய சட்டரீதியான அதிகாரத்தினை கொண்டுள்ளவரிடம் வழங்குவதையும் சட்டத்தரணியின் காரியாலயத்தில் சமூகமளித்திருந்த அதிபரையும் ஏனையோரையும் கீழேயுள்ள படங்களில் பார்க்கலாம்.

 

நல்லாசிரியர் விருது பெற்ற அரவிந்தன் அவர்களும் மாகாண மட்ட சாதனை மாணவர்கள் இருவரும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் பாராட்டி மதிப்பளிக்கப்பட்டனர்.

நல்லாசிரியர் விருது பெற்ற அரவிந்தன் அவர்களும் மாகாண மட்ட சாதனை மாணவர்கள் இருவரும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் பாராட்டி மதிப்பளிக்கப்பட்டனர்.

வடமாகாணக் கல்வி அமைச்சினால் மாகாணம் தழுவிய நிலையில் தெரிவுசெய்யப்பட்டு வழங்கப்பட்ட நல்லாசிரியர் விருதான ‘குரு பிரதீபா பிரபா-2017’ விருதினைப் பெற்றுக்கொண்டு எமது கல்லூரிக்குப் பெருமை சேர்த்த இரசாயனவியல் ஆசிரியர் திரு.சண்முகம் அரவிந்தன், மாகாண மட்டத்தில் கணிதபாட ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற மாணவன் செல்வன் ஏகாம்பரம் கோபிநாத், மாகாண மட்டத்தில் கோலம் போடுதல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவி செல்வி அபினோசா கருணாகரன் ஆகியோரைப் பாராட்டி மதிப்பளித்த வைபவம் சென்ற வெள்ளிக்கிழமை நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அனுசரணையில் நடைபெற்றது.

பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் சார்பில் பொருளாளர் திரு.மாணிக்கம் கனகசபாபதி இவ்வைபவத்தில் கலந்துகொண்டு நல்லாசிரியர் அரவிந்தன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியதுடன் பாராட்டுக் கேடயத்தினையும் வழங்கி மதிப்பளித்தார். அதேவேளை கல்லூரியின் ஆசிரியர்கள்; நலன்புரிக் கழகத்தின் சார்பில் உப-அதிபர் திரு.தெட்சணாமூர்த்தி லிங்கேஸ்வரன் அவர்களாலும் பாராட்டு விருது வழங்கப்பெற்று நல்லாசிரியர் திரு.அரவிந்தன் மதிப்பளிக்கப்பட்டிருந்தார். சாதனை மாணவர்களான செல்வன் கோபிநாத், செல்வி அபினோசா ஆகியோருக்கான பாராட்டு விருதுகளும் ஊக்குவிப்புப் பரிசிலாக தலா ஐயாயிரம் ரூபா ரொக்கமும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் சார்பில் திரு.கனகசபாபதி அவர்களினால் வழங்கப்பெற்றிருந்தது.

இவ்வைபவத்திற்கு தலைமை வகித்து உரையாற்றிய அதபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சி சார்ந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை ஆற்றி வருகின்ற பணிகளை வெகுவாகப் பாராட்டிப் பேசினார். சிறப்பாக, சாதனை மாணவர்களுக்கு சங்கத்தினரால் வழங்கப்பட்டு வருகின்ற ஊக்குவிப்புப் பரிசில்கள் மாணவர்கள் மத்தியில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தி வருவதாகவே மதிப்பிடப்படுகின்றது எனக் குறிப்பிட்ட அதிபர், அடைவு மட்டத்திற்கு அண்மித்த தரத்திலுள்ள மாணவர்கள்; மேம்பட்டநிலையை அடைந்து பரிசிலைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்ற ஆர்வத்தினை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தி; முயற்சியில் ஈடுபடுவதற்கான உந்துதலாக சங்கத்தினர் உதவி வருகின்ற ஊக்குவிப்புப் பரிசில்கள் அமைந்துள்ளன என மேலும் குறிப்பிட்டார். கல்லூரியின் தேவைகளை அறிந்து வழங்கி வருகின்ற அளப்பரிய உதவிகளுக்காக கல்லூரிச் சமூகத்தின் சார்பில் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளைக்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.

இப்பாராட்டு வைபவத்தில் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருடன் பெற்றோர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வின்போது எடுக்கப்பட்ட சில புகைப் படங்களை கீழே பார்வையிடலாம்:

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

 

மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்குரிய பெருமையைப் பெற்றுக்கொண்ட காரை.இந்துவின் இரசாயனவியல் ஆசிரியர் சண்முகம் அரவிந்தன்

மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்குரிய பெருமையைப் பெற்றுக்கொண்ட காரை.இந்துவின் இரசாயனவியல் ஆசிரியர் சண்முகம் அரவிந்தன்

‘குரு பிரதீபாபிரபா’ என அழைக்கப்படுகின்ற நல்லாசிரியர் விருதினைப் பெற்றுக்கொள்வதற்காக வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட தெரிவில் காரை இந்துவில் இரசாயனவியல் ஆசிரியராகப் பணியாற்றுகின்ற திரு.சண்முகம் அரவிந்தன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டு மேற்குறித்த விருதினைப் பெற்றுக்கொண்ட பெருமையைப் பெற்றதுடன் தாம் பணியாற்றிவருகின்ற காரைநகர் இந்துக் கல்லூரிக்கும் பெருமையை சேர்த்துக்கொண்டவராக விளங்குகின்றார்.

பாடவிதானம், இணைப்பாடவிதானம் ஆகியவற்றில் ஆசிரியரது செயற்பாடுகள் மற்றும் வரவு இஒழுக்கம் ஆகியன உள்ளிட்ட பல விடயங்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வலய மட்டத்தில் முதற்கட்டத் தெரிவுகள் இடம்பெற்றதுடன் நேர்முகப் பரீட்சையின்போது வழங்கப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் மாகாண மட்டத்திலான இறுதித் தெரிவுகள் இடம்பெற்றிருந்தன.

யாழ்.இந்து மகளிர் கல்லூரியில் 28-10-2017இல் நடைபெற்ற சாதனையாளர் கௌரவிப்பு விழாவின்போது திரு.அரவிந்தனுக்கான நல்லாசிரியர் விருது (குரு பிரதீபாபிரபா) வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு திரு.சண்முகம் அரவிந்தன் கௌரவிக்கப்பட்டிருந்தார்.

அயற்கிராமமான மூளாயைச் சேர்ந்த திரு.சண்முகம் அரவிந்தன் விஞ்ஞானப் பட்டதாரி என்பதுடன் பட்ட மேற்படிப்பு கல்வி டிப்ளோமா சான்றிதழும் பெற்றுக்கொண்டவர். விஞ்ஞான பாடத்துடன் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு இரசாயனவியல் பாடத்தையும் சிறப்பாக கற்பித்து மாணவர்களின் மனம் கவர்ந்த ஆசிரியராக விளங்குபவர். இக்கல்லூரியில் நீண்டகாலம் சேவையாற்றி புகழ்பெற்ற ஆசிரியர்களாக விளங்குகின்ற அமரர் ஆறுமுகசாமி அமரர் நாகபூசணி தியாகராசா, திருமதி. சிவபாக்கியம் அருமைநாயகம் ஆகியவர்கள் மூளாய் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடத்தக்கதாகும்.

திரு.அரவிந்தன் அவர்கள் நல்லாசிரியர் விருது பெற்றமை குறித்து கல்லூரிச் சமூகம் பெருமகிழ்ச்சியடைவதுடன் திரு.அரவிந்தனை பாராட்டி வாழ்த்துகிறது. திரு.அரவிந்தனின் சிறந்த கல்விச் சேவையினால் மாணவர்கள் அடைந்துவரும் பயன்குறித்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்ற பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அவரைப் பாராட்டி வாழ்த்துவதில் பேருவகையடைகின்றது.

நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்களையும் பாடசாலை முன்றலில் அதிபர், விருது பெற்ற சாதனை மாணவர்கள் ஆகியோருடன் நல்லாசிரியர் விருது பெற்ற திரு.ச. அரவிந்தன் அவர்களும் காணப்படுவதைப் படத்தில் காணலாம்.

OLYMPUS DIGITAL CAMERA

கணிதபாட ஒலிம்பியாட், கோலம் போடுதல் ஆகிய மாகாண மட்டப் போட்டிகளில் சாதனை படைத்த காரை. இந்துவின் மாணவர்கள் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

கணிதபாட ஒலிம்பியாட், கோலம் போடுதல் ஆகிய மாகாண மட்டப் போட்டிகளில் சாதனை படைத்த காரை. இந்துவின் மாணவர்கள் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டிருந்த கணிதபாட ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றி வெற்றிபெற்ற காரை இந்துவின் மாணவன் செல்வன் ஏகாம்பரம் கோபிநாத் தேசிய மட்டத்திலும் பங்குபற்றியிருந்தார்.

யாழ். இந்து மகளிர் கல்லூரியில் சென்ற வாரம் நடைபெற்ற சாதனையாளர் கௌரவிப்பு விழாவின்போது செல்வன் கோபிநாத் மாகாண மட்டத்தில் வெற்றி பெற்றமைக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கோலம் போடும் மாகாண மட்டத்திலான போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்ற காரை. இந்துவின் மற்றொரு மாணவி செல்வி அபினோசா கருணாகரன் அவர்களும் இவ்விழாவின்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.

சாதனை படைத்து கல்லூரிக்கு பெருமை சேர்த்த செல்வன் கோபிநாத், செல்வி அபினோசா ஆகிய இரு மாணவர்களையும் பாராட்டி வாழ்த்துவதில் கல்லூரிச் சமூகத்துடன் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் இணைந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடைகின்றது.

அதேவேளையில் செல்வன் கோபிநாத்தின் வெற்றிக்கு வழிகாட்டி ஊக்குவித்த கணிதபாட ஆசிரியர் திரு.நாகரத்தினம் கேதாரநாதன் செல்வி அபினோசாவின் வெற்றிக்கு ஊக்குவித்த இசை ஆசிரியை திருமதி கலாசக்தி றொபேசன் அகியோரையும் பாடசாலைச் சமூகமும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையும் பாராட்டி நன்றி கூறுகின்றது.

OLYMPUS DIGITAL CAMERA

 

திரு.ஆறுமுகம் கணேசன் (கோபால்) அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் முன்னாள் நிர்வாக சபை உறுப்பினர் திரு.நாகராஜா பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவு குறித்து சங்கம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

காரைநகர் இந்துக் கல்லூரியில் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அனுசரணையுடன் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

காரைநகர் இந்துக் கல்லூரியில் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அனுசரணையுடன் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மனிதனை மனிதனாக மாற்றுகின்ற சிற்பிகளாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின்றனர். ஆனால் ஆசிரியர்கள், உலகத்தையே குழந்தைகளுக்குத் தருகின்றனர். அத்தகைய மகத்துவம் மிக்க ஆசிரியர்களை நினைவு கூரும் வகையிலும் அவர்களின் பணி தொடர வாழ்த்துகின்ற வகையிலும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் காரைநகர் இந்துக் கல்லூரியின் ஆசிரியர் தினம் சென்ற ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கனடா பழைய மாணவர் சங்கத்தினரின் அனுசரணையுடன் உயர்தர மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில் மன்றத்தின் பெருங்காப்பாளரும் அதிபருமாகிய திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களின் நெறிப்படுத்தலில் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டிருந்தது.

உயர்தர மாணவர் மன்றத்தின் தலைவர் செல்வன் கதிர்காமநாதன் கஐந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபர் திரு.கார்த்திகேசு குமாரவேலு அவர்கள் பிரதம விருந்தினராகவும், ஓய்வுநிலை ஆங்கிலப் பாட ஆசிரிய ஆலோசகர் திரு.பொன்னம்பலம் ஆறுமுகம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு நிகழ்விற்கு சிறப்புச் சேர்த்திருந்தனர்.

மாணவர்களுக்கு அறிவு என்னும் ஞானச் சுடரினை ஏற்றி வைக்கின்ற ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் வாழ்த்துப்பா மூலமாக வாழ்த்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்டிருந்ததுடன் பசுமையை நிலைநாட்டும் முகமாக மரக் கன்றுகளும் வழங்கப்பட்டிருந்தன. மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய போசன விருந்திலும் அதிபரும் ஆசிரியர்களும் விருந்தினர்களுடன் கலந்துகொண்டு அகமகிழ்ந்திருந்தனர். இந் நிகழ்விற்கான முழுமையான அனுசரணையை வழங்கிய கனடா பழைய மாணவர் சங்கத்தினருக்கு மனமார்நத நன்றியை அதிபர் தமது உரையின்போது தெரிவித்திருந்தார்.

ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவை முன்னிலைப்படுத்தப்பட்டு அவர்களை கௌரவித்து ஊக்குவிக்கும் செயற்பாடுகளிற்கு பழைய மாணவர் சங்கம் அனுசரணை வழங்க வேண்டும் என்ற சங்கத்தின் கொள்கைக்கு அமைவாக 4வது ஆண்டாக ஆசிரியர் தினக் கொண்டாட்டத்திற்கான அனுசரணையினை இவ்வாண்டும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடத்தப்பட்ட தியாகத்திறன் வேள்வி – 2017 நாடகப் போட்டியில் காரை இந்து 2ஆம் இடம் பெற்றுள்ளது

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடத்தப்பட்ட தியாகத்திறன் வேள்வி – 2017 நாடகப் போட்டியில் காரை இந்து 2ஆம் இடம் பெற்றுள்ளது

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் 16.09.2017 அன்று சனிக்கிழமை மாலை 4 மணிக்கு கல்லூரி நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் நாடகப் போட்டி இடம்பெற்றது. இப் போட்டியில் காரைநகர் இந்துக் கல்லூரி மாணவர்கள் “வெல்க மானுடம் ” எனும் தலைப்பிலான நாடகத்தை திருமதி வி. ரமணன் ஆசிரியரின் இயக்கத்தில் செல்வி யோ. விம்சியா அவர்களின் உதவியுடன் மேடைறே;றி 2ம் இடத்தைப் பெற்று வெற்றி பெற்றனர்.

இப் போட்டியில் பங்குபற்றிய மாணவ, மாணவிகளாக:
1. சி. அறிவரசன்
2. ர. சயுவண்ணன்
3. ஏ. துசியந்தன்
4. த. சுகிர்தன்
5. ச. யோன்
6. க. டிலோசினி
7. தே. ஜென்சிகா
8. வ. பவீனா
9. யோ. அஸ்மிலா
10. சி. விதுசா
11. கி. சர்மிளா
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும் அவர்களை நெறிப்படுத்திய ஆசிரியைகளான திருமதி வி. ரமணன், செல்வி யோ. விம்சியா ஆகியோரையும் கல்லூரிச் சமூகத்துடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் பாராட்டி வாழ்த்துகின்றது.

 

 

வசதி குறைந்த காரை இந்து உயர்தர வகுப்பு மாணவியின் கல்விச் செலவிற்கு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினூடாக உதவிய உறுப்பினர்

வசதி குறைந்த காரை இந்து உயர்தர வகுப்பு மாணவியின் கல்விச் செலவிற்கு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினூடாக உதவிய உறுப்பினர் 

சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலையிலிருந்து க.பொ.த.(சாதாரணம்) பரீட்சைக்குத் தோற்றி மிகச் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுக்கொண்டவர் செல்வி உஷாந்தினி சோதிநாதன்.  தற்போது இந்துக் கல்லூரியில் க.பொ.த.(உயர்தரம்) வகுப்பில் வர்த்தகப் பிரிவின் முதலாம் ஆண்டில் பயின்று வரும் உஷாந்தினி தந்தையாரை இழந்துவிட்ட நிலையில் இவரது குடும்பம் வாழ்வாதார வசதிகளற்றுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு திறமை மிக்க மாணவியான உஷாந்தினி இறுதிப் பரீட்சைக்குத் தோற்றும் வரைக்குமான இரண்டு ஆண்டுகளுக்கும் ஏற்படக்கூடிய கற்றல் செயற்பாட்டிற்கான உதவியை வழங்கி உதவ முன்வரவேண்டும் என கல்லூரி அதிபர் பரிந்துரை செய்திருந்தார். கனடாவில் வதியும் கல்லூரியின்  பழைய மாணவரான திரு.மாணிக்கம் கனகசபாபதி இவ்வுதவியை வழங்க முன்வந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையினூடாக இதனை வழங்கியுள்ளார். திரு.மாணிக்கம் கனகசபாபதி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். செல்வி உஷாந்தினி இவ்வுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு கருசனையுடன் செயலாற்றிய பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளைக்கும் மாணவியின் குடும்பநிலையைப் புரிந்துகொண்டு உதவிய திரு.கனகசபாபதிக்கும் கல்லூரிச் சமூகத்தின் சார்பில் அதிபர் திருமதி சிவாந்தினி வாகீசன் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

திரு.மாணிக்கம் கனகசபாபதி கல்லூரிக்கு பயணம் செய்தபோது இவ்வுதவியின் முதலாவது தவணைக்கான உதவிக் கொடுப்பனவினை செல்வி உஷாந்தினி சோதிநாதனிடம் கையளித்தபோது எடுக்கப்பட்ட படத்தினை கீழே பார்க்கலாம். அருகில் கல்லூரியின் அதிபரும் தாய்ச் சங்கத்தின் தலைவருமாகிய திருமதி சிவாந்தினி வாகீசன் காணப்படுகின்றார்.

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

காரை இந்து மாணவன் வடமாகாண விளையாட்டுப் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு

காரை இந்து மாணவன் வடமாகாண விளையாட்டுப் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு


வடமாகாண விளையாட்டுப் போட்டியில் 100அ நிகழ்வில் நான்காமிடம் பெற்று செல்வன் காந்தரூபன் மயூரன் தேசிய மட்டத்திற்கு தெரிவு


வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையேயான 10 வது மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வு 10.07.2017 அன்று துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

10.07.2017 அன்று இடம்பெற்ற 18 வயதின் கீழ் ஆண்களுக்கான 100mபோட்டியில் செல்வன் காந்தரூபன் மயூரன் 11 செக்கன் 9 விநாடியில் ஓடி 4ம் இடத்தைப் பெற்று சாதனை படைத்திருந்தார். அத்துடன் இம் மாணவன் வடமாகாணப் பாடசாலை விளையாட்டுக்கள் நிறப்பரிசளிப்பையும் (Colours Award) பெற்றுக்கொண்டுள்ளார்.

இவர் 100 m போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்டத்தில் நடைபெறும் மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வில் பங்குபற்றுவதற்கு தெரிவாகியுள்ளார்.

இப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவனையும், மாணவன் வெற்றியடைய சகல வழிகளிலும் ஊக்குவித்த ஆசிரியரான திரு இன்னாசிமுத்து அன்ரன்விமலதாஸ் (விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர்) அவர்களையும் கல்லூரிச் சமூகத்துடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் பாராட்டி வாழ்த்துகின்றது.

செல்வன் காந்தரூபன் மயூரன் அதிபர், விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் ஆகியோருடன் எடுக்கப்பட்ட நிழற்படத்தையும், மாகாண மட்டச் சான்றிதழ்களின் பிரதிகளையும் கீழே காணலாம்.

MayooranProvincialAwardMayooranColourAwardMayooranSportsProvincialAward

காரைநகர் இந்துக் கல்லூரி நிறுவுனர் தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் – 2017 அழைப்பிதழ்

காரைநகர் இந்துக் கல்லூரி நிறுவுனர் தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் – 2017 அழைப்பிதழ்

காரைநகர் இந்துக் கல்லூரியின் நிறுவுனர் தினமும் வருடாந்த பரிசளிப்பு விழாவம் எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி செவ்வாய்கிழமை (04-07-2017) அன்று காலை 9:00 மணிக்கு நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் பிரதி அதிபர் திருமதி.சிவந்தினி வாகீசன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. 

விழாவிற்கு பிரதம விருந்தினராக கல்லூரியின் சிறப்புமிக்க பழைய மாணவரும் யாழ் பல்கலைக்கழக கணிதத்துறைப் பேராசிரியருமாகிய திரு.வே.தர்மரட்ணம் அவர்களும் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் ஒய்வுநிலை வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருமாகிய திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். 

நிறுவுனர் தின உரையை கல்லூரியின் முன்னாள் அதிபரும் ஓய்வுநிலை கோட்டக் கல்விப் பணிப்பாளருமாகிய  திரு.பொன் சிவானந்தராசா அவர்கள் ஆற்றவிருக்கின்றார்.

விழாவிற்கான நிதி அநுசரணை மூன்றாவது ஆண்டாக இவ்வாண்டும் 'மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்' இலிருந்து வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

விழாவில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பாடசாலைச் சமூகத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

முழுமையான அழைப்பிதழைக் கீழே காணலாம்.   

PRIZE DAY INVITATION2017

காரைநகர் இந்துக் கல்லூரியின் ‘மருத்துவக் கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்’ இரண்டரை மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு

Dr.Vijay_

காரைநகர் இந்துக் கல்லூரியின் 'மருத்துவக் கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்' இரண்டரை மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு

கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கின்ற செயற்பாடுகளுள் பாடசாலைகளில் ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்ற 'பரிசில் தினம்' நிகழ்வு கல்வியாளர்களின் ஏகோபித்த அங்கீகாரத்தினைப் பெற்று மாணவர்களின் முன்னேற்றத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தவல்ல முன்னணி நிகழ்வாகக் கருதப்படுகின்றது. 

ஆற்றல் மிக்க மாணவர்கள் பாராட்டி ஊக்குவிக்கப்படுகின்றபோது சாதனையாளர்களாக மிளிரக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்படுகின்றது என்பதை அனுபவரீதியாக உணர்ந்துகொண்டவரும் காரைநகர் இந்துக் கல்லூரியில் கற்று நிபுணத்துவம் மிக்க குழந்தைகள் மருத்துவராக கனடாவில் பிரபல்யம் பெற்று விளங்கி கல்லூரியின் புகழை நிலைநாட்டிவருகின்றவருமாகிய மருத்துவக்கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் அவர்களால் ஒன்றரை மில்லியன் ரூபா நிரந்தர வைப்பிலிடப்பட்டு 2015ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஒத்துழைப்புடன் நிறுவப்பட்டதே 'மருத்துவக்கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியம்' ஆகும். 

காரைநகரில் சட்டரீதியாக அமைந்து விளங்கும் ஒரே நம்பிக்கை நிதியம்(Charitable Trust Fund) என்ற பெருமையைப்பெற்றுள்ள இந்நிதியத்திலிருந்து பெறப்படுகின்ற வருடாந்த வட்டிப் பணம் காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசில் தினத்தினை  தங்குதடையின்றி காலாகாலமாக தொடர்ந்து நடத்துவதற்கான ஏற்பாடுகள் இந்நிதியத்தின் ஊடாக செய்யப்பட்டுள்ளது. 

இந்நிதியத்தின் நிறுவுநரோ அன்றி கல்லூரியின் விசுவாசிகள் எவருமோ விரும்பும் சமயத்தில் இந்நிதியத்தில்  மேலும் வைப்பீடு செய்யமுடியும் என சட்டஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாட்டிற்கு அமைய மேலதிகமாக அரை மில்லியன் ரூபாவினை நிதியத்தின் நிறுவுநர் மருத்தவக்கலாநிதி வி.விஜயரத்தினம்  அவர்கள் சென்ற ஆண்டு யூலை மாதம் 8ஆம் திகதி வைப்பிலிட்டிருந்தார். மீண்டும் யூன்27 மேலும் அரை மில்லியன் ரூபாவினை இவர் வைப்பிலிட்டதன்மூலம் நிதியத்தின் மொத்த வைப்புத்தொகை இரண்டரை மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
 
இந்நிதியத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ளப்படும் வட்டித்தொகையிலிருந்து பரிசில் தினத்திற்கு ஏற்படும் செலவுகளை ஈடுசெய்தபின்னர் உள்ள மிகுதிப்பணத்தினை பாடசாலையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தமுடியும் என்கின்ற ஏற்பாடும் நிதியத்தின் சட்ட ஆவணத்தில் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

இதேவேளை இந்நிதியத்தின் அனுசரணையிலான 3வது பரிசில் தின நிகழ்வு எதிர்வரும் யூலை4ஆம் திகதி நடைபெற ஒழுங்கமைக்கப்பட்டு வருவது மேலும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து 4 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்

காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து 4 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்

    கடந்த ஆகஸ்ட் 2016 இல் நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி விபரம் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் எமது பாடசாலையில் இருந்து 4 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்.

இம்மாணவர்களின் விபரம் வருமாறு:

1.    செல்வி டிலானி கார்த்திகேசு முகாமைத்துவ கற்கைகள், வணிகபீடம், வவுனியா வளாகம்.

2.    செல்வி யாழினி நடேசு கலைப்பீடம், கிழக்கு பல்கலைக்கழகம்.

3.    செல்வன் சிவசக்திவேல் கோகுலன் நாடகத்துறை, சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் பீடம் 

4.    செல்வன் பஞ்சராசா மகீபன் இசைத்துறை, இராமநாதன் நுண்கலைப்பீடம், யாழ்ப்பாணம்.


கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ள  மாணவர்களையும் அவர்களுக்கு கல்வி போதித்த ஆசிரியர்களையும் கல்லூரிச்சமூகத்துடன் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையும் பாராட்டி வாழ்த்துகின்றது.

 

பாடசாலையின் வளர்ச்சி சார்ந்து பயனுள்ள வகையில் அமைந்திருந்த பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 5வது ஆண்டுப் பொதுக் கூட்டம்

பாடசாலையின் வளர்ச்சி சார்ந்து பயனுள்ள வகையில் அமைந்திருந்த பழைய  மாணவர் சங்க கனடாக் கிளையின் 5வது ஆண்டுப் பொதுக் கூட்டம்

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 5வது ஆண்டுப் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30மணிக்கு கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் திரு.தம்பையா அம்பிகைபாகன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றிருந்தது. அன்றைய தினம் மழைநாள் என முன்னதாக அறிவிக்கப்பட்டு அதிகாலை முதல் மழை பெய்து கொண்டிருந்து அசௌகரியமான சூழ்நிலை நிலவிய போதிலும் தொடர்பு மிக்க உறுப்பினர்கள் உள்ளிட்டு முப்பத்தொன்பது உறுப்பினர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது பாடசாலை மீதான விசுவாசத்தினை வெளிப்படுத்தியிருந்தமை சிறப்பாக குறிப்பிடத்தக்கதாகும். திரு.த.அம்பிகைபாகன் அவர்கள் தேவாரம் பாடியதைத் தொடர்ந்து கல்லூரியின் இசை ஆசிரியைகளான திருமதி கலாசக்தி றொபேசன் திருமதி பங்கையற்செல்வி முகுந்தன் ஆகியோர் இணைந்து பாடிப் பதிவுசெய்யப்பட்டிருந்த  கல்லூரிப் பண் ஒலிபரப்பப்பட்டிருந்ததுடன்  பாடசாலைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களது மறைவிற்கு  இரு நிமிடநேரம் அக வணக்கமும் செலுத்தப்பட்டது.

செயலாளரினால் முன்னைய பொதுக் கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து தலைவர் திரு.தம்பையா அம்பிகைபாகன் தலைமையுரையினை நிகழ்த்தினார். செயலாளர் திரு.கனக சிவகுமாரன் அவர்களினால் 2016ஆம் ஆண்டுக்கான செயற்பாட்டு அறிக்கையும் பொருளாளர் திரு.மாணிக்கம் கனகசபாபதி அவர்களினால் வரவு-செலவு அறிக்கையும்  சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட பின்னர் பொதுச் சபையால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. ஜனவரி1 2017தொடக்கம் யூன்3 2017 வரைக்கும் உள்ள காலப் பகுதிக்கான இடைக்கால வரவு-செலவு அறிக்கையும்; தகவலுக்காக பொருளாளரினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.  

காணிக்கொள்வனவின் பொருட்டு சேகரிக்கப்பட்ட பணத்தில் இரண்டரைப் பரப்புக் காணி கொள்வனவு செய்வதற்கு உதவிய தொகையைத் தவிர்த்து மீதமாகவுள்ள பணத்தினை காணிக் கொள்வனவிற்கான தேவையேற்படும் வரைக்கும் வங்கியொன்றில் வைப்பிலிட்டு வைப்பது குறித்து நிர்வாக சபை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற திரு.மு.வேலாயுதபிள்ளை அவர்களின் ஆலோசனையை பொதுச் சபை ஆமோதித்தது.

சென்ற பொதுக் கூட்டத்தில் நியமனம் செய்யப்பட்டிருந்த கணக்காய்வாளர் திரு.த.பரமானந்தராசா தனிப்பட்ட காரணங்களினால் பதவி விலகியதைத் தொடர்ந்து திரு.மு.வேலாயுதபிள்ளை அவர்கள் நிர்வாகத்தினால் தற்காலிக கணக்காளராக நியமனம் செய்யப்பட்டதை பொதுச் சபை  அங்கீகரித்தது. உறுப்பினர்களுக்கான நேரத்தின்போது பல உறுப்பினர்களும் முன்வந்து பாடசாலையின் வளர்ச்சி சார்ந்து நல்ல பல பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். பெரும்பாலான உறுப்பினர்களும் பாடசாலையின் கல்வித் தரத்தினை மேபடுத்தும் வகையில் கற்றல், கற்பித்தல் ஆகிய செயற்பாடுகள் முன்னிலைப்படுத்தப்பட்டு அவை ஊக்குவிக்கப்படல்வேண்டும் என்பதை வலியுறித்தியிருந்ததுடன்  அவை குறித்த திட்ட ஆலோசனைகளையும் முன்வைத்திருந்தனர்.

போசகர் சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம், முன்னாள் தலைவரும் கணக்காய்வாளருமாகிய திரு.மு.வேலாயுதபிள்ளை, சங்கத்தின் தொடர்பு மிக்க உறுப்பினரும் வாட்டலூ பல்கலைக்கழக இணைப்பேராசிரியருமான கலாநிதி த.ரவிச்சந்திரன், உப-தலைவர் திரு.நா.குஞ்சிதபாதம், முன்னைநாள் உப தலைவர் திரு.சி.சச்சிதானந்தம், முன்னாள் பொருளாளரும் தற்போதய உதவிப் பொருளாளருமாகிய திரு.ந.பிரகலாதீஸ்வரன், முன்னாள் கணக்காய்வாளர் திரு.த.பரமானந்தராசா,  S.P.சுப்பிரமணியம்  நினைவு ஊக்குவிப்புத் திட்டத்தின் அனுசரணையாளர் திரு.எஸ்.அரிகரன் ஆகியோர் தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்து உரையாற்றியிருந்தனர். உறுப்பினர்களது ஆக்கபூர்வமான கருத்துக்களும் ஆலோசனைகளும் பரிசீலிக்கப்பட்டு பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ள முயற்சி எடுக்கப்படும் என நிர்வாகத்தின் சார்பில் அதன் தலைவர் திரு.த.அம்பிகைபாகன் பதிலளித்தார்.

பாடசாலையின் அதிபராக மூன்று ஆண்டுகள் பணியாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற திருமதி வாசுகி தவபாலனின் அர்ப்பணிப்பு மிக்க சேவையினைப் பாராட்டி திரு.கனக சிவகுமாரனினால் முன்மொழியப்பட்டிருந்த தீர்மானத்தினை பொதுச்சபை கரகோசம் செய்து ஏகோபித்து வரவேற்றிருந்தது. அர்ப்பணிப்பும் நிர்வாகத் திறனும் மிக்க கல்லூரியின் இரண்டாவது பெண் அதிபர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்ட இவரது சேவைக் காலத்தில் கல்லூரியின் கல்வி, கல்விசாராச் செயற்பாடுகளில் அனைத்து மட்டங்களிலும் சாதனைகள் ஏற்படுத்தப்பட்டு கல்லூரியின் புகழ் மேலோங்கியதாக திரு.கனக சிவகுமாரன் வழங்கிய பாராட்டுரையில் குறிப்பிட்டதுடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவிகள் சார்ந்து அவர் வழங்கியிருந்த திருப்திகரமான சிறந்த ஒத்துழைப்பினையும் வெகுவாகப் பாராட்டினார்.

செயலாளர் கனக சிவகுமாரன் நன்றியுரை வழங்கிய பின்னர் சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் அவர்களின்  தேவாரத்துடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றதைத் தொடர்ந்து சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டிருந்த மதிய போசனத்திலும் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.

DSC_1876 DSC_1877 DSC_1878 DSC_1879 DSC_1880 DSC_1881 DSC_1882 DSC_1884 DSC_1886 DSC_1888 DSC_1889 DSC_1891 DSC_1892 DSC_1893 DSC_1894 DSC_1895 DSC_1896 DSC_1898 DSC_1901 DSC_1905 DSC_1907 DSC_1908 DSC_1909 DSC_1910 DSC_1912 DSC_1913 DSC_1914 DSC_1915 DSC_1916 DSC_1919 DSC_1921 DSC_1923 DSC_1924 DSC_1925 DSC_1928 DSC_1929 DSC_1930 DSC_1931 DSC_1932 DSC_1934 DSC_1935 DSC_1936 DSC_1937 DSC_1939 DSC_1940 DSC_1942 DSC_1943 DSC_1944 DSC_1948 DSC_1950 DSC_1952 DSC_1954 DSC_1955 DSC_1956 DSC_1957 DSC_1960 DSC_1962 DSC_1964 DSC_1965 DSC_1967 DSC_1970 DSC_1971 DSC_1972 DSC_1973 DSC_1978 DSC_1979 DSC_1982 DSC_1984 DSC_1985 DSC_1986 DSC_1987 DSC_1988 DSC_1989 DSC_1990 DSC_1991 DSC_1992 DSC_1993 DSC_1995 DSC_1997 DSC_1999 DSC_2000 DSC_2004 DSC_2005 DSC_2006 DSC_2007 DSC_2008 DSC_2009 DSC_2010 DSC_2011 DSC_2012 DSC_2013 DSC_2014 DSC_2015 DSC_2016 DSC_2017 DSC_2019 DSC_2021 DSC_2022 DSC_2023 DSC_2024 DSC_2026 DSC_2027 DSC_2028

கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெறும் முன்னாள் அதிபர் பொன். சிவானந்தராசா அவர்களுக்கு காரை இந்துக்கல்லூரிச் சமூகம் நடத்திய சேவை நலன் பாராட்டு விழா

கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெறும் முன்னாள் அதிபர் பொன். சிவானந்தராசா அவர்களுக்கு காரை இந்துக்கல்லூரிச் சமூகம் நடத்திய சேவை நலன் பாராட்டு விழா

எமது கல்லூரியின் முன்னாள் அதிபரும், வேலணைக் கோட்டக் கல்விப் பணிப்பாளருமாகிய திரு பொன். சிவானந்தராசா அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா 30.05.2017 அன்று பிற்பகல் 1.00 மணியளவில் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் காரைநகர்க் கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு ஆ. குமரேசமூர்த்தி அவர்களும், அயற்பாடசாலை அதிபர் திரு வே. முருகமூர்த்தி அவர்களும், கல்லூரி ஆசிரியர் திரு ச.அரவிந்தன் அவர்களும், பழைய மாணவர் சங்கச் செயலாளர் திரு ந. பாரதி அவர்களும், ஓய்வுநிலை அதிபர் திரு தில்லையம்பலம் அவர்களும் கலந்து சிறப்பித்து வாழ்த்துரை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. 

நிகழ்வில் எடுக்கப்பட்ட சில படங்களைக் கீழே காணலாம். 

காரை.இந்துவுக்கு மூன்று இலட்சத்து எண்பதாயிரம் ரூபா உதவியை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வழங்கியுள்ளது.

காரை.இந்துவுக்கு மூன்று இலட்சத்து எண்பதாயிரம் ரூபா உதவியை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வழங்கியுள்ளது.

நடப்பாண்டில் காரைநகர் இந்துக் கல்லூரியின்  பல்வேறு அவசிய தேவைகளை நிறைவு செய்யவும் கற்றல்இ கற்பித்தல் ஆகிய செயற்பாடுகளை மேம்படுத்துவதில் ஏற்படக்கூடிய செலவீனங்களை ஈடுசெய்யவும் என மொத்தம் மூன்று இலட்சத்து எண்பதாயிரம் ரூபாவினை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை உதவியுள்ளது. தாய்ச் சங்கத்தின் பின்வரும் கோரிக்கைகளே நிர்வாக சபையினால் ஆராயப்பட்டு உதவி வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டவையாகும். 

1.அலுவலக உதவியாளரின் மாதாந்த வேதனம்

2.இலத்திரனியல் நூலகம் மற்றும் பொது மின் பாவனைக்கான கட்டணம்

3.விருந்தினர் உபசரணை

4.நானாவித செலவுகள்

5.ஆசிரியர் தினக் கொண்டாட்டம்

6.Wi-Fi  இணைய சேவைக் கட்டணம்

7.க.பொ.த.(சாதாரணம்) தர மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்களை நடாத்துவதற்குத் தேவையான கற்றல் உபகரணங்கள்

8.க.பொ.த.(சாதாரணம்), க.பொ.த.(உயர்தரம்) ஆகிய பரீட்சைகளில் சிறப்புச் சித்தி பெற்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்புப் பரிசில் வழங்கல்

குறித்த உதவித் தொகை தாய்ச் சங்கத்தின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவ்வுதவியை வழங்கியமைக்காக தாய்ச் சங்கத்தின் சார்பில் அதன் தலைவரும் கல்லூரியின் பிரதி அதிபருமாகிய திருமதி சிவாந்தினி வாகீசன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினைப் பாராட்டி நன்றியைத் தெரிவித்துள்ளார். 

பழைய மாணவர் சங்கத்தின் உதவியைத் தவிர சங்கத்தின் உறுப்பினர் திரு.S.P.அரிகரன் அவர்கள் தமது தந்தையாரான அமரர் S.P.சுப்பிரமணியம் அவர்களின் நினைவாக பல்கலைக்கழகம் சென்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்புப் பரிசில் வழங்கவும் இப்பரிசில் வழங்கும் நிகழ்வுக்கு அனுசரணை வழங்கவும் ஐம்பதாயிரம் ரூபாவினை எமது சங்கத்தினூடாக அனுப்பிவைத்திருந்தார்.

 

மணிவிழாக் காணும் முன்னாள் அதிபர் திரு.பொன். சிவானந்தராசா அவர்களை காரை இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளை பராட்டி வாழ்த்துகின்றது

Greetings to Pon.Siva

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டம் யூன் 4 ஆம் திகதிக்கு பின்போடப்பட்டுள்ளது.

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டம் யூன் 4 ஆம் திகதிக்கு பின்போடப்பட்டுள்ளது.

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 5 வது ஆண்டுப் பொதுக் கூட்டம் மே மாதம் 28ஆம் திகதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததாயினும் அதே தினத்தில் எமது கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியர் அமரர் சபாபதி சபாநடேசன் அவர்களின் 31வது நாள் நினைவு வணக்க நிகழ்வு நடைபெறவிருப்பதன் காரணமாக இப்பொதுக் கூட்டம் பின்போடப்பட்டு யூன் மாதம் 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் முற்பகல் 10.00 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கலந்து கொள்வதுடன் கூட்டத்தின் நிறைவில் வழங்கப்படவுள்ள மதியபோசனத்திலும் அனைத்து உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நிர்வாகம்,
பழைய மாணவர் சங்கம்-கனடா

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – கனடா 5 ஆவது ஆண்டுப் பொதுக் கூட்ட அறிவித்தல்

AGM Notice with Agenda Final-page-001

காரைநகர் இந்துக் கல்லூரி முன்னாள் ஆசிரியர் திரு.சபாபதி சபாநடேசன் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் அஞ்சலி

sabanadesan-3 copy

க.பொ.த. (சாதாரணம்) பரீட்சையில் சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது.


க.பொ.த. (சாதாரணம்) பரீட்சையில் சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது.

காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து க.பொ.த.(சாதாரணம்)பரீட்சைக்கு தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் அனைவரையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகின்றது. சிறப்பாக 8A 1B என்ற அதிசிறந்த பெறுபேற்றினைப் பெற்று காரைநகர் கல்விக் கோட்டத்தில் முதன்மை மாணவியாக விளங்கும் செல்வி கம்சிகா தேவராசாவினதும் 8A என்ற பெறுபேற்றினைப் பெற்று இரண்டாவது நிலை மாணவனாக விளங்கும் செல்வன் சரவணபவானந்தசர்மா பிரசன்னசர்மர் ஆகியோரது சாதனை கல்லூரியின் வரலாற்றில் பதிவாகி பெருமை சேர்க்கின்றது என்ற வகையில் பேருவகையடைகின்ற பாடசாலைச் சமூகத்துடன் எமது சங்கமும் இணைந்துகொள்கின்றது.

பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் அனுசரணையுடன் வழங்கப்பட்ட பொதுத் தகமைத் தேர்ச்சிக்கான விருதினை செல்வி கம்சிகா தேவராசா 2014ஆம் ஆண்டில் பெற்றுக்கொண்டவர் என்பது இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூரத்தக்கதாகும்.
உதவியும் ஊக்குவிப்பும் வழங்கிய பெற்றோர்கள் சிறந்தமுறையில் கற்பித்து பரீட்சைக்கு தயார்படுத்திவிட்டிருந்த ஆசிரியர்கள ஆதாரதளமாக இருந்து வழிகாட்டிய முன்னைய அதிபர் திருமதி வாசுகி தவபாலன பதில் அதிபராக பணியாற்றியவரும் தற்போதய பகுதித் தலைவருமாகிய திருமதி கலாநிதி சிவநேசன் ஆகிய அனைவரும் இம்மாணவர்களுடைய சாதனைக்கு காரணமாகவிருந்துள்ளார்கள் என்ற வகையில் அவர்கள் அனைவரையும் மனதாரப் பாராட்டி நன்றிகூறிக்கொள்கின்றோம். தற்போது இப்பாடசாலையின் நிர்வாகத்தினைப் பொறுப்பேற்றுள்ள பிரதி அதிபர் திருமதி சிவாந்தினி வாகீசன் அவர்களும் மாணவர்கள் மேலும் பல சாதனைகளை ஏற்படுத்த பணியாற்றுவார் என உறுதியாக நம்பும் எமது சங்கம் இதனை அடைவதற்கு சாத்தியமானவற்றை வழங்கி உதவும் எனவும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம்.

க.பொ.த.(சாதாரணம்) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுவருகின்ற மாணவர்களுக்கு ஊக்குவிப்புப் பரிசில்களை ரொக்கமாக வழங்க கடந்த மூன்று ஆண்டுகளாக உதவிவருகின்ற பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை இம்முறையும் இவ்வுதவியினை வழங்கி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கவுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

             நிர்வாகம்
பழைய மாணவர் சங்கம் – கனடா

திரு.ஆறுமுகம் தில்லைநாதன் அவர்களின் மறைவு குறித்து காரைநகர் இந்துக் கல்லூரிபழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் வணக்கம்

Tribute to Mr.Thillainatahan

காரைநகர் இந்துக் கல்லூரி பிரதி அதிபராக திருமதி.சிவந்தினி வாகீசன் பதவியேற்றுள்ளார்.

Shivanthini

காரைநகர் இந்துக் கல்லூரி பிரதி அதிபராக திருமதி.சிவந்தினி வாகீசன் பதவியேற்றுள்ளார்.

காரைநகர் இந்துக் கல்லூரி பிரதி அதிபராக திருமதி.சிவந்தினி வாகீசன் அவர்கள் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பதவியேற்று கடமையாற்றி வருகின்றார். கடந்த மூன்று ஆண்டு காலமாக அதிபராகக் கடமையாற்றிய திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் யாழ்ப்பாணம் வைத்தீசுவராக் கல்லூரி அதிபராக மாற்றாலாகிச் சென்றமையை அடுத்து காரைநகர் இந்துக் கல்லூரியில் உயிரியில் விஞ்ஞான ஆசிரியையாகக் கடமையாற்றிய திருமதி.சிவந்தினி வாகீசன் B.Sc.(Hons) Dip.In Ed. ,SLPS-3 அவர்கள் பிரதி அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார்.
 
காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி.சிவந்தினி வாகீசன் தமது தொடக்கக் கல்வியை வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலையிலும் (அப்புத்துரை பள்ளிக்கூடம்) இடைநிலைக் கல்வியை காரைநகர் இந்துக் கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை யாழ் வேம்படி மகளிர் கல்லூரியிலும் கற்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உயிரியல் சிறப்பு விஞ்ஞானமாணிப் பட்டத்தையும் கல்வியியல் பட்டப்பின் டிப்ளோமாவையும் பெற்றவர். 

காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவியாகிய திருமதி.சிவந்தினி வாகீசன் 2012 ஆம் ஆண்டு தொடக்கம் பாடசாலையில் உயிரியில் விஞ்ஞான ஆசிரியையாகக் கடமையாற்றி வந்தவர் ஆவர். பாடவிதானச் செயற்பாடுகளுடன் கல்லூரியின் சுற்றாடல் முன்னோடிக் குழு பொறுப்பாசிரியராக இருந்து பாடசாலையின் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் தமது பங்களிப்பினை வழங்கி வந்த ஒர் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியை ஆவார்.  

இவர் கல்லூரியின் முன்னாள் உப-அதிபரும், கவிஞருமாகிய அமரர்.சி.பொன்னம்பலம் அவர்களின் பெறாமகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தாம் கல்வி கற்ற பாடசாலை மீதும் தாம் பிறந்து வளர்ந்த ஊர்மீதும் பற்றுக் கொண்டு அர்ப்பணிப்போடு சேவையாற்றி வரும் பிரதி அதிபர் திருமதி.சிவந்தினி வாகீசன் அவர்கள் பாடசாலையை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திச் செல்ல பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை வாழ்த்துவதுடன் எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பரத்துறை சௌந்தராம்பிகா சமேத சுந்தரேசுவரப் பெருமானையும் வேண்டுகின்றது.

காரைநகர் இந்துக்கல்லூரி பாடசாலையிலிருந்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு

கடந்த ஆகஸ்ட் 2016 இல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பரீட்சை முடிவகள் அண்மையில் வெளிவந்திருந்தன.

காரைநகர் இந்துக்கல்லூரி பாடசாலையிலிருந்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:

வர்த்தகபிரிவு

 மாணவர் பெயர்                                                பெறுபேறு                 மாவட்டநிலை
செல்வி டிலானி கார்த்திகேசு –                            A B C                                 131
செல்வி தீபிகா நவரத்தினம் –                              A 2B                                   155
செல்வன்.தர்மகுலசிங்கம் நாகரஞ்சன் –          A B C                                  221
செல்வி கஸ்தூரி கோபாலபிள்ளை  –                A B C                                  240

 

கலைப்பிரிவு

மாணவர் பெயர்                                                பெறுபேறு             மாவட்டநிலை
செல்வி யாழினி நடேசு  –                                      2B C                          314
செல்வன் சிவசக்திவேல் கோகுலன் –                3B                             362
செல்வன் கனகலிங்கம் வினோதன்  –                 B 2C                        413
செல்வி தேவராசா றோமிலா  –                          A B S                          506

 

தொழினுட்பப்பிரிவு

மாணவர் பெயர்                                                              பெறுபேறு     மாவட்டநிலை
செல்வன் கோமளேஸ்வரன் பாலசயந்தன்-                    B C S                  79
செல்வி நிரோஜினி பாலகிருஸ்ணன்-                               2 C S                160
செல்வி காயத்திரி புவிராஜசிங்கம் –                                     3S                265
செல்வி பிரசாளினி சிவசுப்பிரமணியம் –                            3S                284

சிறந்த பெறுபேறுகளைப் பெற்று எமது பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவச் செல்வங்களையும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரிய மணிகளையும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை பராட்டி வாழ்த்துகின்றது.

காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை ஏழாக உயர்வு

காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை ஏழாக உயர்வு

கடந்த ஆகஸ்ட் 2015 இல் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து ஏழு மாணவர்கள் இலங்கையின் யாழ்ப்பாண மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகி உள்ளனர்.

காத்திருப்போர் தெரிவுப் பட்டியலில்(Waiting List) இருந்து காரைநகர் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மேலும் நான்கு மாணவர்கள பல்கலைக்கழக அனுமதி பெற்றமையை அடுத்தே எமது பாடசாலையில் இருந்து பல்கலைகழக அனுமதி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்வடைந்துள்ளது.

பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாகிய மாணவர்களின் பெயர் விபரம் வருமாறு:

01. செல்வி. துஸ்யந்தினி அரியபுத்திரன், கலைப்பீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

02. செல்வி தர்ஜிகா மூர்த்தி, நுண்கலைப்பீடம் (இசைத்துறை) -கிழக்குப் பல்கலைக்கழகம்
03. செல்வி ஹீந்துஜா முடிராசா, கலைப்பீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
04.  செல்வி கஜிந்தினி நதிசீலன், கலைப்பீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
05. செல்வி ஷஜிதா பாலசிங்கம், கலைப்பீடம் – கிழக்குப் பல்கலைக்கழகம்
06. செல்வி றோஜனா தேவராசா, வணிகபீடம் – யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்
07. செல்வன் நவரத்தினம் லோகதாஸ், கலைப்பீடம் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ள இம்மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் பாடசாலை சமூகத்துடன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் பராட்டி வாழ்த்துகின்றது.

காரைநகர் இந்துக் கல்லூரி முன்னாள் ஆசிரியை திருமதி.கமலாவதி நடராஜா அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அன்னாரின் சேவை நன்றியோடு நினைவுகூரப்படுகின்றது.

Kamalateacher

காரைநகர் இந்துக் கல்லூரி முன்னாள் ஆசிரியை திருமதி.கமலாவதி நடராஜா அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அன்னாரின் சேவை நன்றியோடு நினைவுகூரப்படுகின்றது.

காரைநகர் இந்துக் கல்லூரியில் சேவையாற்றிய ஆசிரியர்களின் வரிசையில் கல்லூரியில் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக அர்ப்பணிப்போடு ஆசிரியப்பணியாற்றி பல நன்மாணக்கர்களை உருவாக்கிய ஆசிரியமணி அமரர்.திருமதி.கமலாவதி நடராஜா அவர்களை மறந்து விட முடியாது. 

அன்னார் இவ்வுலகை நீங்கி பத்தாவது ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்படும் இவ்வேளையில், பாடசாலைச் சமூகமும், பழைய மாணவர் சங்கங்களும் அன்னாரின் சேவையை நன்றியோடு நினைவு கூருவது பொருத்தமானதாகும். 

காரைநகர் செம்பாடு, தங்கோடையைச் சேர்ந்த அமரர். மருத்துவர் கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மகளான அமரர்.திருமதி.கமலாவதி நடராஜா அவர்கள் தனது தொடக்கக் கல்வியை தங்கோடை அமெரிக்க மிசன் தமிழ் கலவன் பாடசாலை(கோவிந்தர் பாடசாலை) இடைநிலை, முதுநிலைக் கல்வியை யாழ், மருதனாமடம், இராமநாதன் பெண்கள் கல்லூரியிலும் கற்று 1950 களின் தொடக்கத்தில் சென்னைப் பல்கலைக்கழக திருச்சி  Holy Cross கல்லூரி வளாகத்தில் இரசாயனவியல் இளமாணிப்பட்டம் பெற்றவர்.  
 
தனது ஆசிரியப் பணியை குருநாகல் மாவட்ட அரசினர் பாடசாலையில் சில ஆண்டுகளும், நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் சில ஆண்டுகளும் ஆற்றிய பின்னர், காரைநகர் இந்துக் கல்லூரியில் வெள்ளிவிழா அதிபர் கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் காலத்தில்; 1967 ஆம் ஆண்டு இணைந்து 1988 ஆம் ஆண்டு வரை இரசாயனவியல், கணித பாடங்களைக் கற்பித்து பல நன்மாணக்கர்களை உருவாக்கியதுடன் பல்கலைக்கழக அனுமதியும் பெற வைத்தவர். மாணவியரின் ஒழுக்கத்திற்கு பொறுப்பாக இருந்து செயற்பட்டவர். நேரந்தவறாது கற்பித்தலில் ஈடுபட்டதுடன் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் ஈடுபாட்டுடன் செயற்பட்டவர். தமது மாணவர்களைத் தன்பிள்ளைகள் போல நினைத்து கரிசனையுடனும் கண்டிப்புடனும் கல்வி கற்பித்த நல்லாசிரியை இவர் ஆவார்.

இத்தகைய சேவையுள்ளம் மிக்க ஆசிரியமணி திருமதி.கமலாவதி நடராஜா அவர்கள் 1988 ஆம் ஆண்டு வரை காரைநகர் இந்துக் கல்லூரியில் பணியாற்றிய பின்னர் தமது ஆசிரியப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் நோய்வாய்ப்பட்டு 2006 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். 

வட்டுக்கோட்டைத் தொகுதியின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்களை உள்வாங்கி பல்கலைகழகங்களுக்கு அதிகமான மாணவர்களை அனுமதி பெறவும், பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்யவும் உழைத்த, காரைநகர் பெற்ற நற்பண்பாளர், காரைநகர் இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் திரு.கே.கே.நடராஜா அவர்களின் அன்புத்துணைவியாரே அமரர்.திருமதி.கமலாவதி அவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அன்னார் மறைந்து 10ஆவது ஆண்டு நினைவு கூரப்படும் இவ்வேளையில், பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் பாடசாலை சமூகத்துடன் இணைந்து அன்னாரை நன்றியுடன் நினைவு கூருகின்றது.   

Kamalateacher 2