Category: CKCA KARAI RROJECT

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணிதம், விஞ்ஞானம் பாடங்களிற்கான முன்னோடிப் பரீட்சை காரை வாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுள்ளது.

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணிதம், விஞ்ஞானம் பாடங்களிற்கான முன்னோடிப் பரீட்சை காரை வாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள க.பொத. சாதாரண தரப் பரீட்சைக்கு காரைநகர்ப் பாடசாலைகளிலிருந்து தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணிதம்,விஞ்ஞானம் பாடங்களிற்கான முன்னோடிப் பரீட்சை 30.03.2024, 31.03.2024, 10.04.2024, 11.04.2024, 12.04.2024, 20.04.2024 ஆகிய திகதிகளில் இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி ஆகியனவற்றில் நடைபெற்றிருந்தது. காரை வாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கனடா காரை கலாச்சார மன்றத்தின் பூரண அனுசரணையில் நடைபெற்ற இவற்றில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

மன்றத்திற்கு காரை வாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நன்றி தெரிவித்து அனுப்பிய கடிதம் கீழே எடுத்துவரப்பட்டுள்ளது.

final Report

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 13ம்,14ம்,15ம்,16ம்,17ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 13ம்,14ம்,15ம்,16ம்,17ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக 12 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் வீதம் நிரந்தர வைப்பில் இடப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி பணத்தினை பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு அதனை உறுதி செய்து கொண்டு இந்நிரந்தர வைப்பு நிதியினை பெற்றுக்கொண்டார்கள்.

அதன் அடிப்படையில் கிடைக்கப்பெறும் வட்டிப் பணத்தின் 50 விகிதமான நிதியானது நேரடியாக கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளான மேலதிக வகுப்புக்களிற்கான ஆசிரியர் வேதனம், மெல்ல கற்கும் மாணவர்களிற்கான விசேட வகுப்புக்கான ஆசிரியர் வேதனம் மற்றும் அதற்குரிய செலவீனங்ளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் வங்கி வட்டியில் இருந்து கிடைக்கப்பெறும் 20 விகிதமான நிதியானது இணைப்பாட விதான செயற்பாடுகளான விளையாட்டு, தமிழ் திறன் போட்டி, பரிசளிப்பு நிகழ்வுகளிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தின் 20 விகிதம் மேலதிகமாக மாதந்தம் துண்டுவிழும் மின்சார கட்டணம்,சிறு திருத்த வேலைகள் பயன்படுத்த முடியும்.

மிகுதி 10 விகிதமான நிதி சுகாதாரம்(மலசலகூட சுத்திகரிப்பு),உணவு ,குடிநீர் தேவைகளிற்கான கொடுப்பனவுகளிற்காகவும் பயன்படுத்த முடியும் எனவும் திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் பாடசாலைகள் ஒவ்வொன்றும் வருடத்திற்கு இரண்டு தடவைகள் ( மே /நவம்பர்  ) கிடைக்கப்பெறும் வட்டி பணத்தில் ஊடாக செலவு செய்யப்படும் விபரங்களை காநைரகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

அதன் அடிப்படையில் 13வது தடவையாக 05.11.2021 அன்று 13ம் கட்ட வட்டிப்பணமாக 11 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 23,750 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

14வது தடவையாக 05.05.2022 அன்று 14ம் கட்ட வட்டிப்பணமாக 11 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 26,250 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

15வது தடவையாக 08.11.2022 அன்று 15ம் கட்ட வட்டிப்பணமாக 11 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 73,750 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

16வது தடவையாக 08.05.2023 அன்று 16ம் கட்ட வட்டிப்பணமாக 11 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 70,062.50 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

17வது தடவையாக 06.05.2023 அன்று 17ம் கட்ட வட்டிப்பணமாக 11 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 70,062.50 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 13ம்,14ம்,15ம்,16ம்,17ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகள் அவற்றினை செலவு செய்த விபரங்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன . கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்ட நிரந்தர வைப்பு நிதியத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகளின் செலவு விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

பார்வையிட கீழேயுள்ள இணைப்புகளை அழுத்தவும்.

https://karainagar.com/pages/wp-content/uploads/2024/04/Primary-Schools-Report-05-May-2021-05-Nov-2021.pdf

https://karainagar.com/pages/wp-content/uploads/2024/04/Primary-Schools-Report-05-Nov-2021.pdf

https://karainagar.com/pages/wp-content/uploads/2024/04/Primary-Schools-Report-2022-2023.pdf

 

வங்கியிடமிருந்து பெறப்பட்ட வட்டிக்குரிய முழு விபரம்

கீழே எடுத்து வரப்பட்டுள்ளது.

                                                                                    (NOV 2015 – NOV 2023)

A–CKCA SCHOOL FD BANK INTEREST COPY KV BOOK 2023 B–CKCA SCHOOL FD BANK INTEREST COPY KV BOOK 2023 CKCA-Karainagar Scools Bank Intrest Report – final

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற  வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக 12 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் வீதம் நிரந்தர வைப்பில் இடப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி பணத்தினை பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு அதனை உறுதி செய்து கொண்டு இந்நிரந்தர வைப்பு நிதியினை பெற்றுக்கொண்டார்கள்.

அதன் அடிப்படையில் கிடைக்கப்பெறும் வட்டிப் பணத்தின் 50 விகிதமான நிதியானது நேரடியாக கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளான மேலதிக வகுப்புக்களிற்கான ஆசிரியர் வேதனம், மெல்ல கற்கும் மாணவர்களிற்கான விசேட வகுப்புக்கான ஆசிரியர் வேதனம் மற்றும் அதற்குரிய செலவீனங்ளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் வங்கி வட்டியில் இருந்து கிடைக்கப்பெறும் 20 விகிதமான நிதியானது இணைப்பாட விதான செயற்பாடுகளான விளையாட்டு, தமிழ் திறன் போட்டி, பரிசளிப்பு நிகழ்வுகளிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தின் 20 விகிதம் மேலதிகமாக மாதந்தம் துண்டுவிழும் மின்சார கட்டணம்,சிறு திருத்த வேலைகள் பயன்படுத்த முடியும்.

மிகுதி 10 விகிதமான நிதி சுகாதாரம்(மலசலகூட சுத்திகரிப்பு),உணவு ,குடிநீர் தேவைகளிற்கான கொடுப்பனவுகளிற்காகவும் பயன்படுத்த முடியும் எனவும் திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் பாடசாலைகள் ஒவ்வொன்றும் வருடத்திற்கு இரண்டு தடவைகள் ( மே /நவம்பர் ) கிடைக்கப்பெறும் வட்டி பணத்தில் ஊடாக செலவு செய்யப்படும் விபரங்களை காநைரகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

குறிப்பு :  பாலாவோடை இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு 20.07.2015 அன்று நிரந்தர வைப்பில் இடப்பட்டது. பின்னர் பாலாவோடை இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு நிரந்தர வைப்பு நிதியில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி மற்றைய  பாடசாலைகள் போன்று மே /நவம்பர்   கிடைக்கப்பெற 07.11.2016 அன்று நிரந்தர வைப்பில் இட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மூன்று  தடவைகள் வங்கி மற்றும் மன்றத்தால் காரைநகர் அபிவிருத்திச் சபை ஊடாக வட்டிக்குரிய நிதி வழங்கப்பட்டது.  பாலாவோடை இ.த.க.பாடசாலையில் மாணவர்கள் தொகை மிகக் குறைவடைந்ததன் காரணமாக  வங்கிக் கணக்கிலிருந்து வட்டிப்பணத்தினை மீளப்பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களினால் குறித்த வட்டிப்பணம் 05.05.2021 தொடக்கம் காரை அபிவிருத்திச் சங்கக் கணக்கிற்கு வைப்பிலிடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பாடசாலைக்கு தேவையேற்படும்போது இப்பணம் காரை அபிவிருத்திச் சபையால் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் இப்பணம் காரைநகர் மாணவர்களுக்கு கல்வித் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பு : வியாவில் சைவ வித்தியாலயத்திற்கு மூன்று  தடவைகள் மன்றத்தால் காரைநகர் அபிவிருத்திச் சபை ஊடாக வட்டிக்குரிய நிதி வழங்கப்பட்டது. 07.11.2016 அன்று கனடா காரை கலாச்சார மன்றம் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா தேசிய சேமிப்பு வங்கியில் நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகள் அவற்றினை செலவு செய்த விபரங்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக ஒவ்வொரு வருடமும் கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

                         நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்.

 

மேலும் விபரங்களைகாரை வசந்தம் – 2023″ மலரில் பார்வையிடலாம்.

 

வங்கியிடமிருந்து பெறப்பட்ட வட்டிக்குரிய முழு விபரம்

கீழே எடுத்து வரப்பட்டுள்ளது.

                                                                                    (NOV 2015 – NOV 2023)

A–CKCA SCHOOL FD BANK INTEREST COPY KV BOOK 2023 B–CKCA SCHOOL FD BANK INTEREST COPY KV BOOK 2023

CKCA-Karainagar Scools Bank Intrest Report – final

சுப்பிரமணிய வித்தியாசாலையின் பிரதான மண்டபத்தின் திருத்த வேலைகள் கனடா-காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் 2024/மார்ச் மாதம் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.

சுப்பிரமணிய வித்தியாசாலையின் பிரதான மண்டபத்தின் திருத்த வேலைகள் கனடா-காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் 2024/மார்ச் மாதம் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.

காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை பிரதான மண்டபத்தின் முற்பகுதி அலுமினியம் வலை பொருத்தப்பட்டு இரண்டு நுழை வாயில்கள் அமைக்கப்பட்டு அவற்றிற்கு கதவுகளும் பொருத்தப்பட்டுள்ளன. பாடசாலை அதிபரின் கோரிக்கையின் அடிப்படையில் குறிப்பிட்ட இந்த வேலைகளை நிறைவு செய்வதற்கு கனடா-காரை கலாசார மன்றம் நான்கு இலட்சத்து இருபத்தேழாயிரத்து தொழாயிரத்து ஐம்பது ரூபாவினை (427950.00 ரூபா) காரை அபிவிருத்திச் சபையின் ஊடாக உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வேலைகள் நிறைவுசெய்யப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட பிரதான மண்டபத்தின் புகைப் படங்களை கீழே பார்வையிடலாம்:

 

வியாவில் சைவ வித்தியாலயத்தின் சமையலறைத் திருத்த வேலைகள் கனடா-காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

வியாவில் சைவ வித்தியாலயத்தின் சமையலறைத் திருத்த வேலைகள் கனடா-காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

வியாவில் சைவ வித்தியாலயத்தில் அமைந்துள்ள சமையலறை மிகுந்த சேதமடைந்திருந்ததனால் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் பல்வேறு அசளகரியங்களை எதிர்கொண்டு வந்துள்ளனர். சமையலறையின் குசினிப்பகுதியில் சமைக்கமுடியாத நிலை இருந்ததனால் பாடசாலைக்கு வெளியிலிருந்தே உணவு சமைக்கப்பட்டு எடுத்து வரப்பட்டிருந்தது. மழைகாலங்களில் கூரையூடாக ஒழுக்கிருந்ததனால் மாணவர்கள் அங்கிருந்து உணவருந்துவதில் அசளகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.

சமையலறையினை திருத்தம் செய்யப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறித்தி முன்னாள் அதிபரான திருமதி கௌ.அருள்மொழி அவர்களினால் கனடா-காரை கலாசார மன்றத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இதனைத் திருத்திக்கொடுப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அருள்மொழியைத் தொடர்ந்து வந்த அதிபர் திரு.நல்லதம்பி கிஸ்ணபவன் அவர்களுடன் கனடா-காரை கலாசார மன்றம் தொடர்புகொண்டு திருத்த வேலைகளை முன்னெடுக்கவிருந்த தருணத்தில் அவர் இடமாற்றலாகிச் செல்ல புதிய அதிபராக திரு.கே.துஸ்யந்தன் பதவியேற்றிருந்தார். துஸ்யந்தன் அவர்கள் எடுத்துக்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக காரை அபிவிருத்திச் சபையின் மேற்பார்வையில் சமையலறையின் திருத்த வேலைகள் யாவும் ஐந்து இலட்சத்து ஐம்பத்தொராயிரமம் ரூபா செலவில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இப்பணிக்கு சில அன்பர்களும் முன்வந்து நன்கொடையினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இப்பணியின் அவசியத்தைக் கருத்திற்கொண்டு உதவிசெய்த கனடா-காரை கலாசார மன்றத்துக்கு பாடசாலைச் சமூகத்தின் சார்பில் நன்றி தெரிவித்து அதிபர் திரு.துஸ்யந்தன் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

இக்கடிதத்தினை கீழே பார்வையிடலாம்.

கனடா-காரை கலாசார மன்றத்தின் ஆதரவில் “ஒருத்தி” திரையிடப்பட்டதன் மூலம் திரட்டப்பட்ட நிதியிலிருந்து வாங்கப்பட்ட 2வது தொகுதி மருந்துப் பொருட்கள் பிரதேச வைத்தியசாலைப் பொறுப்பதிகாரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 

கனடா-காரை கலாசார மன்றத்தின் ஆதரவில் “ஒருத்தி” திரையிடப்பட்டதன் மூலம் திரட்டப்பட்ட நிதியிலிருந்து வாங்கப்பட்ட 2வது தொகுதி மருந்துப் பொருட்கள் பிரதேச வைத்தியசாலைப் பொறுப்பதிகாரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் நிலவும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு குறித்து நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் நிர்வாகத்தினர் கனடா-காரை கலாசார மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து உதவிக் கோரிக்கையினை முன்வைத்திருந்தனர். ஊர் அபிமானம் மிக்க காரை.மண் தந்த கலைஞர் P.S.சுதாகரன் அவர்கள் முன்வந்து தனது வெற்றிப் படைப்பான “ஒருத்தி-2” திரைப்படத்தை திரையிட்டு அதன் ஊடாகப் பெறப்படும் நிதியினை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து குறித்த திரைப்படம் மே மாதம் திரையிடப்பட்டு திரட்டப்பட்டிருந்த நிதியிலிருந்து வாங்கப்பட்ட முதலாவது தொகுதி மருந்துப் பொருட்கள் சென்ற மே மாத இறுதியில் வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி Dr.K.செந்தூரன் அவர்களிடம் கனடா-காரை கலாசார மன்றத்தினால் வைபவரீதியாக கையளிக்கப்பட்டிருந்தது. தற்போது இரண்டாவது தொகுதி மருந்துப் பொருட்கள் வாங்கப்பட்டு வைத்தியசாலைப் பொறுப்பதிகாரியடம் அண்மையில் கையளிக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலத்தில் பிரதேச வைத்தியசாலையில் பொது அமைப்புக்களினதும் கொடையாளர்களினதும் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் மற்றும் மருந்துப் பொருட்களின் கையிளிப்பு போன்ற நலன்புரிச் சேவைகள் காரணமாக வெளிநோயாளர் பிரிவிலும் விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களினது எண்ணிக்கையிலும் கணிசமான அதிகரிப்பு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். தற்போது நான்கு மருத்துவர்கள் இவ்வைத்திய சாலையில் பாராட்டும்படியாக நோயளர்களிற்கான சேவையினை வழங்கி வருகின்றனர்.

 

கனடா காரை கலாச்சார மன்றம் 24.09.2022 தொடக்கம் 04.08.2023 வரை காரைநகரில் மேற்கொள்ளப்பட்ட உதவிகள்!

கனடா காரை கலாச்சார மன்றம்

24.09.2022 தொடக்கம் 04.08.2023 வரை

காரைநகரில் மேற்கொள்ளப்பட்ட உதவிகள்!

  1. யுத்தத்தின் போது தாய் தந்தையை இழந்த சிறுவன் நக்கீரனுக்கு கனடாவில் வதியும் காரைநகரைச் சேர்ந்த ஓர் அன்பரின் உதவியுடன் மே/2010 தொடக்கம் கனடா காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றது. மாதாந்த உதவிப்பணம் ரூபா 5,000 இருந்து ஜுலை மாதம் /2023 தொடக்கம் ரூபா 7,000 கனடா காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.
  2. கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து அறிக்கைகள் மன்றத்திற்கு கிடைக்கப்பெற்று வருகின்றது.
  3. காரைநகர் அபிவிருத்திச் சபை நூலக உதவியாளர்களிற்கான மாதாந்த ஒருபகுதி கொடுப்பனவாக ரூபா 10,000 கனடா காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.
  4. காரைநகர் மாணவர்களினால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற அபிவிருத்திச் சபை நூலகத்திலுள்ள இரண்டு போட்டோப் பிரதி இயந்திரத்திற்கு தேவைப்பட்ட ரோனர் அக்டோபர், நவம்பர் (2022) மாதங்களில் வாங்கி உதவப்பட்டது.
  5. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான 1ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
  6. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான 2ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 26.11.2022 சனிக்கிழமை இடம்பெற்றது.
  7. ஆயிலி சிவஞானோதயா வித்தியாசாலைக்கு அத்தியாவசிய நீர் பாவனைக்காக மோட்டார் மற்றும் மோட்டர் அறை என்பன (மார்ச் /2023) கனடா காரை கலாச்சார மன்றத்தால் கட்டிக்கொடுக்கப்பட்டது.
  8. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் க.பொ.த. பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணித பாடத்திலான முன்னோடிப் பரீட்சை பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 16.04.2023 அன்று இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி ஆகியனவற்றில் நடாத்தப்பட்டுள்ளது.
  9. க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களிற்கு பிரபல்யம் மிக்க வளவாளர்கள் பங்குகொண்ட கல்விக் கருத்தரங்கு கனடா காரை கலாச்சார மன்றத்தின் பூரணமான அனுசரணையில் காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் வெள்ளி சனி ஞாயிறு (05.05.2023, 06.05.2023, 07.05.2023) ஆகிய தினங்களிலும் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது.
  10. ஒருத்தி படம் திரையிடப்பட்டதன் ஊடாக திரட்டப்பட்ட நிதியின் மூலம் காரைநகர் வைத்தியசாலைக்கு முதலாம் கட்டமாக ஒரு தொகுதி அவசிய மருந்துப் பொருட்களை கனடா காரை கலாச்சார மன்றம் 13.06.2023 செவ்வாய்க்கிழமை அன்று பிரதேச வைத்தியசாலைக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி Dr.செந்தூரன் அவர்களிடம் வைத்தியசாலையில் வைத்து கையளிக்கப்பட் டன.
  11. கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரைநகரைச் சேர்ந்த எட்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. 5 மாணவர்களுக்கான மாதாந்தம் ரூபா 10,000 வீதமும் மூன்று மாணவர்களுக்கான மாதாந்தம் ரூபா 7,500 வீதமும் மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. இதில் ஒரு மாணவர் பல்கலைக்கழகத்தில் படிப்பு முடியும் வரை வேலை கிடைத்தபடியால் நிதி தேவையில்லை என மன்றத்திற்கு அறியத்தந்துள்ளார். இரண்டு மாணவர்களிற்கு கனடாவில் வதியும் காரைநகரைச் சேர்ந்த ஓர் அன்பரின் நிதி உதவியுடன் வழங்கப்பட்டு வருகின்றது.
  12. வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவியின் கல்விக்கான உதவியாக ரூபா 5,000 ஜுலை மாதம் /2023 தொடக்கம் காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றம்

                    05.08.2023

 

05.08.2023 சனிக்கிழமை அன்று நடைபெற்ற கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடலில் விநியோகிக்கப்பட்ட அறிக்கை.

ஒருத்தி படம் திரையிடப்பட்டதன் ஊடாக திரட்டப்பட்ட நிதியின் மூலம் காரைநகர் வைத்தியசாலைக்கு அவசிய மருந்துப் பொருட்களை கனடா காரை கலாசார மன்றம் உதவியுள்ளது.

 

ஒருத்தி படம் திரையிடப்பட்டதன் ஊடாக திரட்டப்பட்ட நிதியின் மூலம்

காரைநகர் வைத்தியசாலைக்கு அவசிய மருந்துப் பொருட்களை

கனடா காரை கலாசார மன்றம் உதவியுள்ளது.

காரை மண் தந்த கலைஞர் P.S.சுதாகரனின் 2வது வரலாற்றுப் படைப்பான ஒருத்தி 2 என்ற திரைப்படம் சென்ற மாதம் திரையிடப்பட்டு அதன் ஊடாக ஒரு தொகைப் பணம் திரட்டப்பட்டிருந்தது. காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் சில முக்கியமான மருந்துகள் இல்லாது வறிய நோயாளர்கள் பல்வேறு கஸ்டங்களை எதிர்கொள்வதாக நோயாளர் நலன்புரிச் சங்கம் கனடா காரை கலாசார மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் அடிப்படையில் திரைப்படக் காட்சி மூலம் திரட்டப்பட்ட நிதியிலிருந்து ஒரு தொகுதி மருந்துப் பொருட்களை இம் மன்றம் உதவியுள்ளது.

குறிப்பிட்ட அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் 13.06.2023 செவ்வாய்க்கிழமை பிரதேச வைத்தியசாலைக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி Dr.செந்தூரன் அவர்களிடம் வைத்தியசாலையில் வைத்து கையளிக்கப்பட் டன.

கனடா-காரை கலாசார மன்றத்தின் உப தலைவர் இக்கையளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு
உரையாற்றுகையில் இவ் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு கனடா-காரை கலாசார மன்றம் பல சந்தர்ப்பங்களிலும் உதவி செய்து வந்துள்ளதாகவும் சிறப்பாக 2006 ஆம் ஆண்டு ஆண், பெண் நோயாளர்கள் விடுதிகளிற்குத் தேவையான கட்டில்கள் ,மெத்தைகள் மற்றும் சக்கர நாற்காலிகளை உதவியதுடன் இரு ஆண்டுகளிற்கு முன்னர் P.S.சுதாகரனின் ஒருத்தி 1 திரையிடப்பட்டதன் மூலம் திரட்டப்பட்ட நிதியிலிருந்து மருத்துவ உபகரணங்கள் வாங்கி உதவப்பட்டதாகத் தெரிவித்தார். தற்போது வழங்கப்பட்டது முதலாவது தொகுதி மருந்துகள் எனவும் அடுத்த தொகுதி மருந்துகள் தேவைப்படும்போது வழங்கி வைக்கப்படும் எனவும் தெரிவித்ததுடன் சிறந்தமுறையில் சேவையாற்றி வருகின்ற வைத்திய அதிகாரி Dr.செந்தூரனதும் ஏனைய மருத்துவர்கள்,அனைத்து வைத்தியசாலை அலுவலர்களதும் சேவையினையும், நோயாளர் நலன்புரிச் சங்கத்தினது சிறப்பான பணிகளையும் கனடா-காரை கலாசார மன்றத்தின் சார்பில் பாராட்டி நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திரு.நா.பாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்து உரையாற்றியதுடன் கலைஞர் P.S.சுதாகரனும் உரையாற்றியிருந்தார்.

இந்நிகழ்வில் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் உறுப்பினர்கள், வைத்தியசாலை அலுவலர்கள் மற்றும் பிரித்தானிய காரை நலன்புரிச் சங்க நிர்வாகத்தைச் சேர்ந்த திரு,வி.நாகேந்திரம், திரு. K.K.நாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களிற்கு பிரபல்யம் மிக்க வளவாளர்கள் பங்குகொண்ட கல்விக் கருத்தரங்கு கனடா-காரை கலாசார மன்றத்தின் பூரணமான அனுசரணையில் சிறப்பாக நடைபெற்றது.

 

க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களிற்கு பிரபல்யம் மிக்க வளவாளர்கள் பங்குகொண்ட கல்விக் கருத்தரங்கு கனடா-காரை கலாசார மன்றத்தின் பூரணமான அனுசரணையில் சிறப்பாக நடைபெற்றது.

காரைநகர்ப் பாடசாலைகளிலிருந்து; க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்ற மாணவர்களை தயார்படுத்தி நம்பிக்கையோடு பரீட்சையை எதிர்கொண்டு அவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் உன்ற நோக்குடன் கனடா-காரை கலாசார மன்றத்தின் அனுசரணையுடன் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் கடந்த சில ஆண்டகளாக நடைபெற்று வருகின்ற கல்விக் கருத்தரங்கானது மாணவர்களதும் ஆசிரியர்களதும் வரவேற்பனைப் பெற்ற செயற்பாடாக அமைந்து விளங்குவதாகும். ஆந்த வகையில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள குறிப்பிட பரீட்சைக்குத் தோற்றவுள்ள 120 வரையான மாணவர்களிற்கு விஞ்ஞானம் தமிழ் சமயம் வரலாறு ஆகிய பாடங்களிற்கான செயரமர்வு காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில்  வெள்ளி சனி ஞாயிறு (05.05.2023, 06.05.2023, 07.05.2023) ஆகிய தினங்களிலும் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது. பாடசாலைகளின் ஆசிரியர்களுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல்யம் மிக்க ஆசிரியர்களும் இணைந்து மாணவர்கள் திருப்தியடையும் வண்ணம். மிகுந்த பயனுள்ள இககல்விக் கருத்தரங்கினை நடாத்தியிருந்தனர்.

இக்கருத்தரங்கானது தமக்கிருந்த பல சந்தேகங்களையும் தீர்த்து வைத்து தெளிவூட்டலை ஏற்படுத்தியிருந்ததாகவும் எதிர்காலத்தில் இதனை தொடர்ந்து நடாத்துவது மட்டுமல்லாது ஏனைய தொகுதிப் பாடங்களையும் இதில் இணைத்துக் கொள்வது அவசியமானது எனவும் அக்கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவர்கள் தமது கருத்தக்களை பதிவிட்டுள்ளனர். அத்துடன் இக்கருத்தரங்கிற்கான பூரண அனுசரணையினை வழங்கி உதவிய கனடா-காரை கலாசார மன்றத்திற்கும் தமத நன்றியையும் பாராட்டினையும் தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

கனடா-காரை கலாசார மன்றத்தின் அனுசரணையில் கணித பாடத்திலான முன்னோடிப் பரீட்சையும் பயிற்சிக் கருத்தரங்கும் ஏற்கனவே தனியாக நடைபெற்றிருந்தமை வாசகர்கள் அறிந்ததாகும்.

கருத்தரங்கில் பங்குகொண்ட அனைவருக்கும் தேநீர் சிற்றுண்டு வகைகள் என்பன மூன்று நாட்களிலும் பரிமாறப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புகைப்படங்களை கீழே பார்வையிடலாம்:

 

கனடா-காரை கலாசார மன்றத்தின் அனுசரணையில் க.பொ.த. பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணித பாடத்திலான முன்னோடிப் பரீட்சை பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுள்ளது.

 

கனடா-காரை கலாசார மன்றத்தின் அனுசரணையில் க.பொ.த. பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணித பாடத்திலான முன்னோடிப் பரீட்சை பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள க.பொத. சாதாரண தரப் பரீட்சைக்கு காரைநகர்ப் பாடசாலைகளிலிருந்து தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணித பாடத்திலான் முன்னோடிப் பரீட்சை சென்ற 16-04-2023 அன்று இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி ஆகியனவற்றில் நடைபெற்றிருந்தது. காரை வாழ் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கனடா-காரை கலாசார மன்றத்தின் பூரண அனுசரணையில் நடைபெற்ற இவற்றில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர். காரைநகர் இந்துக் கல்லூரி யாழ்ற்ரன் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த கணிதபாட ஆசிரியர்களின் முழுமையான உதவியுடனும் பங்களிப்புடனும்; நடாத்தப்பட்டிருந்த இம்முன்னோடிப் பரீட்சையில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களுடன் கலந்துரையாடப்பட்டு அவர்களின் சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்பட்டிருந்தன.

 

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான 2ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 26.11.2022 சனிக்கிழமை இடம்பெற்றது.

 

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரணையுடன்

காரைநகர் அபிவிருத்திச் சபையினால்

காரைநகர் கோட்டப் பாடசாலைகளில்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான

2ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 26.11.2022 சனிக்கிழமை இடம்பெற்றது.

காரைநகர் சுப்பிரமணிய வித்தியாலயத்தில் காரைநகர் வலந்தலை தெற்கு அமி.த.க. பாடசாலை அதிபர் க.நேத்திரானந்தன் தலைமையில் ஆரம்பமான இந்தச் செயலமர்வில் யாழ் பிரபல பாடசாலை ஆசிரியர்களினால் கற்பித்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் வழிகாட்டல் குறிப்புக்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இவ்வாண்டு டிசெம்பர் மாதம் 18ம் திகதி இடம்பெற உள்ள இந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்ற உள்ள காரைநகர் கோட்ட பாடசாலை மாணவர்கள் 145 பேரில் 135 மாணவர்கள் இந்த வழிகாட்டல் செயலமர்வில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இந்தச் செயலமர்வில் கலந்துகொண்ட அனைத்துப் பிள்ளைகளுக்கும் இரு தடவைகள் சிற்றுண்டி வழங்கப்பட்டதுடன் காலை 8.30 மணிதொடக்கம் பிற்பகல் 2.30 மணிவரை இந்தச் செயலமர்வு இடம்பெற்றது. முதலாம் கட்ட செயலமர்வு 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

காரை கலாசார கனடா மன்றத்தின் அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான 1ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

 

 

காரை கலாசார கனடா மன்றத்தின் அனுசரணையுடன்

காரைநகர் அபிவிருத்திச் சபையினால்

காரைநகர் கோட்டப் பாடசாலைகளில்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான

1ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

காரைநகர் சுப்பிரமணிய வித்தியாலயத்தில் காரைநகர் வலந்தலை தெற்கு அமி.த.க. பாடசாலை அதிபர் க.நேத்திரானந்தன் தலைமையில் ஆரம்பமான இந்தச் செயலமர்வில் யாழ் பிரபல பாடசாலை ஆசிரியர்களினால் கற்பித்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் வழிகாட்டல் குறிப்புக்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இவ்வாண்டு டிசெம்பர் மாதம் 18ம் திகதி இடம்பெற உள்ள இந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்ற உள்ள காரைநகர் கோட்ட பாடசாலை மாணவர்கள் 145 பேரில் 117 மாணவர்கள் இந்த வழிகாட்டல் செயலமர்வில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இந்த செயலமர்வில் ஆயிலி சிவஞாணோதயா வித்தியாலய அதிபர் இ.வசீகரன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் காரைநகர் அபிவிருத்திச் சபை செயலாளர். பொருளாளர் உள்ளிட்ட சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

2ம் கட்டச் செயலமர்வு எதிர்வரும் சனிக்கிழமை (26.11.2022) காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் இடம்பெற உள்ளது. இந்தச் செயலமர்வில் கலந்துகொண்ட அனைத்துப் பிள்ளைகளுக்கும் இரு தடவைகள் சிற்றுண்டி வழங்கப்பட்டதுடன் காலை 8.30 மணிதொடக்கம் பிற்பகல் 2.30 மணிவரை இந்தச் செயலமர்வு இடம்பெற்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 8ம்,9ம்,10ம்,11ம்,12ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 8ம்,9ம்,10ம்,11ம்,12ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக 12 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் வீதம் நிரந்தர வைப்பில் இடப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி பணத்தினை பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு அதனை உறுதி செய்து கொண்டு இந்நிரந்தர வைப்பு நிதியினை பெற்றுக்கொண்டார்கள்.

அதன் அடிப்படையில் கிடைக்கப்பெறும் வட்டிப் பணத்தின் 50 விகிதமான நிதியானது நேரடியாக கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளான மேலதிக வகுப்புக்களிற்கான ஆசிரியர் வேதனம், மெல்ல கற்கும் மாணவர்களிற்கான விசேட வகுப்புக்கான ஆசிரியர் வேதனம் மற்றும் அதற்குரிய செலவீனங்ளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் வங்கி வட்டியில் இருந்து கிடைக்கப்பெறும் 20 விகிதமான நிதியானது இணைப்பாட விதான செயற்பாடுகளான விளையாட்டு, தமிழ் திறன் போட்டி, பரிசளிப்பு நிகழ்வுகளிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தின் 20 விகிதம் மேலதிகமாக மாதந்தம் துண்டுவிழும் மின்சார கட்டணம்,சிறு திருத்த வேலைகள் பயன்படுத்த முடியும்.

மிகுதி 10 விகிதமான நிதி சுகாதாரம்(மலசலகூட சுத்திகரிப்பு),உணவு ,குடிநீர் தேவைகளிற்கான கொடுப்பனவுகளிற்காகவும் பயன்படுத்த முடியும் எனவும் திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் பாடசாலைகள் ஒவ்வொன்றும் வருடத்திற்கு இரண்டு தடவைகள் ( மே05 /நவம்பர் 05 ) கிடைக்கப்பெறும் வட்டி பணத்தில் ஊடாக செலவு செய்யப்படும் விபரங்களை காநைரகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

அதன் அடிப்படையில் 8வது தடவையாக 05.05.2019 அன்று 8ம் கட்ட வட்டிப்பணமாக 12 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 48,687.50 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

9வது தடவையாக 05.11.2019 அன்று 9ம் கட்ட வட்டிப்பணமாக 12 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 48,687.50 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

10வது தடவையாக 05.05.2020 அன்று 10ம் கட்ட வட்டிப்பணமாக 12 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 44,150.00 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

11வது தடவையாக 05.11.2020 அன்று 11ம் கட்ட வட்டிப்பணமாக 11 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 37,500.00 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

12வது தடவையாக 05.05.2021 அன்று 12ம் கட்ட வட்டிப்பணமாக 11 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 26,250.00 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 8ம்,9ம்,10ம்,11ம்,12ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகள் அவற்றினை செலவு செய்த விபரங்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன . கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்ட நிரந்தர வைப்பு நிதியத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகளின் செலவு விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

Karaingar School Interest Report

 

 

https://karainagar.com/pages/wp-content/uploads/2021/08/Karaingar-School-Interest-Report.pdf

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையில் க.பொ.த (சா/த) பரீட்சையில் 5A மற்றும் அதற்குக் கூடிய புள்ளிகளைப் பெற்ற காரைநகர் பாடசாலைகளில் கல்வி கற்ற மாணவர்களுக்கான கொடுப்பனவாக ரூபா 5000 வீதம் விஜயதசமி நன்நாளில் வழங்கப்பட்டது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையில் க.பொ.த (சா/த) பரீட்சையில் 5A மற்றும் அதற்குக் கூடிய புள்ளிகளைப் பெற்ற காரைநகர் பாடசாலைகளில் கல்வி கற்ற மாணவர்களுக்கான கொடுப்பனவாக ரூபா 5000 வீதம் விஜயதசமி நன்நாளில் வழங்கப்பட்டது.

 

 

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு கோவிட் பரிசோதனை உபகரணங்கள் வழங்கப்பட்டது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு கோவிட் பரிசோதனை உபகரணங்கள் வழங்கப்பட்டது.

காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு மாவட்ட வைத்திய அதிகாரியின் வேண்டுகோளுக்கு இணங்க கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வைத்தியசாலைக்கு கோவிட் பரிசோதனைக்கு அவசரமாகத் தேவைப்பட்ட ரூபா 134,000.00 பெறுமதியான உபகரணங்கள் உடனடியாக வேண்டி நேரடியாகவே வைத்தியசாலை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

பொது அறிவித்தல்!

 

பொது அறிவித்தல்

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கேற்ப மன்ற நிதிப்பங்களிப்புடன் காரை மாணவர்களுக்கு தேவையான புதிய பாடத்திட்டத்திற்கான பாடநூல்கள் காரை அபிவிருத்திச்சபையால் 2021.06.21 அன்று கொள்வனவு செய்து காரை அபிவிருத்திச்சபை நூலகத்தில் கையளிக்கப்பட்டன.

கனடா காரை கலாச்சார மன்றம் காரைநகர் அபிவிருத்திச் சபையூடாக மாணவர்களின் தேவையினைக் கருத்திற் கொண்டு மாணவர் நூலகத்திற்கு போட்டோபிரதி இயந்திரம் வாங்குவதற்கு நிதி அனுசரணை வழங்கியுள்ளது.

 

கனடா காரை கலாச்சார மன்றம் காரைநகர் அபிவிருத்திச் சபையூடாக  மாணவர்களின் தேவையினைக் கருத்திற் கொண்டு மாணவர் நூலகத்திற்கு போட்டோபிரதி இயந்திரம் வாங்குவதற்கு நிதி அனுசரணை வழங்கியுள்ளது.

போட்டோபிரதி இயந்திரம் வாங்குவதற்கு நிதி உதவி வழங்கிய கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் நன்றி தெரிவித்த கடிதத்தை கீழே பார்வையிடலாம்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையுடன் காரைநகர் பாடசாலைகளின் க.பொ.த (சா/த) வகுப்பு மாணவர்களுக்கு கணித பாட முன்னோடி பரீட்சை மற்றும் பரீட்சை வினாத்தாள் தொடர்பான செயலமர்வுகளும் 27.12.2020,31.12.2020,01.01.2021 ஆகிய திகதிகளில் நடாத்தப்பட்டது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையூடாக காரை வாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் நடாத்தப்பட்ட காரைநகர் பாடசாலைகளின் க.பொ.த (சா/த) வகுப்பு மாணவர்களுக்கு 27.12.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கணித பாட முன்னோடி பரீட்சை ஒன்றும் 31.12.2020, 01.01.2021 ஆகிய திகதிகளில் பரீட்சை வினாத்தாள் தொடர்பான செயலமர்வுகளும் நடாத்தப்பட்டது.

செயற்திட்டத்திற்கு உதவிய காரைநகர் அபிவிருத்திச் சபையினருக்கும் மற்றும் கனடா காரை கலாச்சார மன்றத்திற்கும் காரை வாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் நன்றி தெரிவித்த கடிதத்தை கீழே பார்வையிடலாம்.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரை அபிவிருத்திச் சபை ஊடாக காரைநகரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள்!

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரை அபிவிருத்திச் சபை ஊடாக காரைநகரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள்.

1.வீட்டுத் திட்டம்

காரைநகர் அல்வின் வீதியில் வசிக்கும் சிவானந்தராசா றூபரசி கண்பார்வையற்ற இவர் 4 வயது குழந்தையுடன் வசித்து வருகின்றார். இவர் வீடு சிதைவடைந்த நிலையில் வீட்டில் வாழமுடியாது என காரை அபிவிருத்திச் சபை, கிராமசேவையாளரின் பரிந்துரைக்கேற்ப கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ரூபா 350,000.00 செலவில் திருத்தியமைத்துக் கொடுக்கப்பட்டது. இத் திட்டத்திற்கு உதவி செய்த அனைவருக்கும் மன்றம் நன்றி தெரிவிப்பதோடு மேலும் இது போன்ற திட்டங்கள் தொடர்ந்து செய்ய எமக்கு பொருளுதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

பழைய படத்தொகுப்பு:

 

புதிய படத்தொகுப்பு:

 

 

 

2.காரைநகர் பாடசாலைகளில் இருந்து கபொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான உதவி திட்டம்

நாட்டில் ஏற்பட்ட கொரோனா காரணமாக இவ்வருடம் கபொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பலவித கஷ்டங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் உள்ளாகியிருந்தார்கள். தற்போது October 11ம் திகதி பரீட்சை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்கள். காரை இந்துக் கல்லூரியில் 28 பேரும், யாழ்ற்ரன் கல்லூரியில் 22 பேரும் காரைநகர் பாடசாலைகளில் இருந்து பரீட்சைக்கு தோற்றுகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஊக்குவிப்பு தொகையாக ரூபா 2500.00 பாடசாலை அதிபர்களினாலும் காரை அபிவிருத்திச் சபை உறுப்பினர்களினாலும் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பாடசாலைகளில் வைத்து கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்டது.

காரைநகர் இந்துக் கல்லூரி

 

 

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி

 

கனடா காரை கலாச்சார மன்றம் “ஒருத்தி” திரைப்படம் மூலம் கிடைக்கப் பெற்ற நிதியைக் கொண்டு காரைநகர் பிரதேச வைத்தியசாலையின் சில தேவைகள் நிறைவேற்றப்பட்டது.

 

கனடா காரை கலாச்சார மன்றம் “ஒருத்தி” திரைப்படம் மூலம் கிடைக்கப் பெற்ற நிதியைக் கொண்டு காரைநகர் பிரதேச வைத்தியசாலையின் சில தேவைகள் நிறைவேற்றப்பட்டது.

கனடா காரை கலாச்சார மன்றம் “ஒருத்தி” திரைப்படம் மூலம் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு உதவி செய்வதன் பொருட்டு ஏறத்தாழ $ 2000 சேகரித்திருந்தது. இதன் மூலம் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்குத் தேவையான உபகரணங்களும் மகப்பேற்றுத் தாய்மார்களை கிளினிக்கில் பார்வையிட வசதியாக ஒரு பகுதியினைப் புனரமைத்து மின்சார வசதிகள்,வர்ணப்பூச்சு வேலைகள்,கூரைகள் என்பனவற்றை எமது மன்றம் காரை அபிவிருத்திச் சபையூடாக நிறைவேற்றியிருந்தது. இதற்கு காரைநகர் இளையோர் அமைப்பு சிரமதானம் மூலம் அதனை நிறைவேற்றியிருந்தார்கள். மகப்பேற்று வைத்திய நிபுணர் திரு.N.சரவணபவன் தற்போது வாரந்தோறும்  காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு வருகைதந்து கர்ப்பிணிகளை பார்வையிடுகின்றார். இதற்கான Ultrasound Scan இயந்திரத்தை திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அன்பளிப்பு செய்துள்ளார். இவற்றை ஜூலை மாதம் 2ம் திகதி யாழ் போதனா வைத்தியசாலை  பணிப்பாளர் Dr.சத்தியமூர்த்தி சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைத்தார்.

இதனை நிறைவேற்றுதற்கு உதவி செய்த கனடா வாழ் காரைநகர் மக்களுக்கும்  “ஒருத்தி” திரைப்பட இயக்குனர் P.S.சுதாகரன் அவர்களுக்கும் கனடா காரை கலாச்சார மன்றம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றது.

 

நன்றியுடன் வாழ்த்துகிறோம்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரும், கனடா கலாச்சார மன்றமும் இணைந்து கொரோனா நிவாரணப் பணிக்கு வாழ்வாதார உதவித்தொகை வழங்கல்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரும், கனடா கலாச்சார மன்றமும் இணைந்து கொரோனா நிவாரணப் பணிக்கு வாழ்வாதார உதவித்தொகை வழங்கல்.

எமது தாய் சங்கமான காரைநகர் அபிவிருத்திச் சபையினரின் செயற்திட்டத்தின் கீழ் ஊரில் உள்ள பெண் தலைமைத்துவம், மாற்றுத் திறனாளி குடும்பங்களுக்கான கொரோனா உதவித்தொகை கொடுப்பனவு சிட்டை வழங்கும் நிகழ்வு இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

காரைநகரில் உள்ள ஓரு நபரை தலைமைத்துவமாக கொண்ட 605 குடும்ப உறுப்பினர்களுக்கு 650.00 ரூபாய்களும், இரண்டு நபரைத் தலைமைத்துவமாக கொண்ட 280 குடும்ப உறுப்பினர்களுக்கு 1000.00 ரூபாய்களும், மூன்று நபரைத் தலைமைத்துவமாக கொண்ட 370 குடும்ப உறுப்பினர்களுக்கு 1500.00 ரூபாய்களுமாக மொத்தமாக 1255 குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டன.

“ஓன்று பட்டால் உண்டு வாழ்வு” என்ற கூற்றிற்கு இணங்க இச் செயற்திட்டத்திற்கு கனடா கலாச்சார மன்றமும் எமது சபையினரும்  பூரண நிதி வழங்கி சிறப்பித்திருந்தனர். எமது சகோதர அமைப்பான கனடா கலாச்சார மன்றத்தினருக்கும், இச் செயற்திட்டத்தை சிறந்தமுறையில் செயல்படுத்திய காரைநகர் அபிவிருத்திச் சபை நிர்வாக உறுப்பினர்களுக்கும் எமது நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

இங்ஙனம்

                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

               செயற்குழு உறுப்பினர்கள்

  மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

16.05.2020

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையில் வீடு முடித்துக் கொடுக்கப்பட்டது.

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையில்

வீடு முடித்துக் கொடுக்கப்பட்டது.

காரைநகர் மாப்பாணவூரியைச் சேர்ந்த திருமதி கிருபாராணி அவர்கள் 5 வருடங்களுக்கு முன்னர் கணவர் இறந்த நிலையில் தாம் கட்ட ஆரம்பித்த வீட்டிற்கு கதவுகள் யன்னல்கள் இன்றி தமது வயது வந்த இரு பெண் பிள்ளைகள்,ஒரு மகனுடன் வாழ்ந்து வந்தார். இவர் தமது அன்றாட தேவைகளுக்காக தற்போது கமநல சேவைகள் திணைக்களத்தின் அம்மாச்சி உணவகத்தில் உணவு தயாரித்து விற்று தனது குடும்பத்தை பராமரித்து வருகிறார். காலை 8மணிமுதல் மாலை 6மணிவரை இங்கு இருப்பதால் வீட்டிற்கு பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என காரை அபிவிருத்திச் சபை பரிந்துரைப்பின்பேரில் மன்ற உபதலைவர் திரு பாலச்சந்திரன் அண்மையில் நேரில் பார்வையிட்டு செயற்குழுவிற்கு வழங்கிய அறிக்கையின் படி கனடா காரை கலாச்சார மன்றத்தினால் இவர்கள் வீட்டுக்கு தேவையான யன்னல்கள் கதவுகளும் ரூபா 225,000.00 செலவில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. திருமதி கிருபாராணி அவர்கள் கனடா காரை கலாச்சார மன்றத்திற்கும் கனடா வாழ் காரைநகர் மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

கீழ் காணும் படங்கள் முன்பிருந்ததையும் வீடுமுடித்தபின் குடும்பம் மகிழ்ச்சியாக காணப்படுவதையும் காணலாம்.

படங்கள்: சிந்துஜா வீடியோ

COVID 19 மனிதாபிமான உதவி

COVID 19 மனிதாபிமான உதவி

கனடா காரை கலாச்சார மன்றம் கனடா வாழ் காரைநகர் மக்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட பணத்தில் முதல் கட்டமாக $5000.00 (ரூபா 655,000.00) காரை அபிவிருத்திச் சபைக்கு அனுப்பி வைத்துள்ளது. காரைநகரில் வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைக்கேற்ப

ஒருவர் உள்ள குடும்பத்திற்கு ரூபா 400.00

இருவர் உள்ள குடும்பத்திற்கு ரூபா 750.00

மூவர்களுக்கு மேற்பட்டு உள்ள குடும்பத்திற்கு ரூபா 1000.00

என்ற அடிப்படையில் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை காரைநகர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் காரை அபிவிருத்திச் சபையினால் வழங்கப்பட்ட விசேட பற்றுச்சீட்டு மூலம் வாங்குவதற்கான ஒழுங்குகள் காரை அபிவிருத்திச் சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இவ் வாரம் காரைநகர் வைத்தியசாலைக்கு தேவையான சில மருந்துகளை மருத்துவ அதிகாரியின் வேண்டுகோளுக்கிணங்க கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

காரைநகர் மக்களுக்கு மட்டுமல்லாது வன்னி பிரதேச மக்களுக்கு COVID 19 யினால் வாழ்வாதாரம் குறைந்த குடும்பத்தினர் தமது அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதற்கு பல உதவிகள் செய்துவரும் திரு.கதிர்காமநாதன் அவர்களை வாழ்த்துவதோடு அவர் பணி சிறக்கவும் நீடுழி வாழ்க என்றும் வாழ்த்துகின்றது.அதேபோல் வலந்தலை இளையோர் அமைப்பு,கலாநிதி விளையாட்டுக் கழகம் மற்றும் ஊர் அமைப்புகள்,தொண்டர்கள் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு கனடா காரை கலாச்சார மன்றம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது. அத்துடன் கனடா காரை கலாச்சார மன்றத்தினால் மேற்கொள்ளப்படும் திட்டத்திற்கு சகல உதவிகளை செய்து வரும் காரை அபிவிருத்திச் சபை அதன் தலைவர் நாட்டில் இல்லாத போதும் அவரின் நெறியாள்கையில் தன்னலமற்ற சேவை செய்யும் நிர்வாக சபை உறுப்பினர்களையும் கனடா காரை கலாச்சார மன்றம் பாராட்டுகின்றது.அத்துடன் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.

தொடர்ந்தும் கனடா காரை கலாச்சார மன்றம் காரைநகர் மக்களுக்கான உதவிகளை செய்யும் என தெரிவித்துக்கொள்கின்றோம்.

                                                                               நன்றி

   நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

மனிதாபிமான நிதியுதவி கோரல் (மேலதிக தகவல்களுடன் எடுத்து வரப்பட்ட செய்தி)

மனிதாபிமான நிதியுதவி கோரல்

கொரோனா வைரஸ் பரவுவதால் ஏற்பட்டுள்ள பாதிப்பை தொடர்ந்து வறுமைக் கோட்டிற்கு கீழ்பட்ட காரைநகர் மக்கள் பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். அவர்களுக்கு உதவி செய்யுமாறு காரை அபிவிருத்திச் சபையினரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில் காரைநகரில் வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க கனடா காரை கலாச்சார மன்றம் முடிவு செய்துள்ளது. இவ் உதவிகள் காரை அபிவிருத்திச் சபையால் நடைமுறைப்படுத்தப்படும்.

நிதி உதவி வழங்க விரும்பும் கருணை உள்ளங்கள் karainagar@gmail.com மன்ற மின்னஞ்சலுக்கு Interac e-Transfer செய்யலாம் அல்லது பின்வரும் மன்ற RBC வங்கி கணக்கில் வைப்பிலிட்டு பற்றுச்சீட்டை பொருளாளரின் தொலைபேசி இல. 647 339 5481 க்கு குறுஞ்செய்தியில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வங்கி – Royal Bank of Canada

கிளை இலக்கம் – 00022

கணக்கு எண் – 1000470

மேலதிக விபரங்களுக்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

பொருளாளர்- 647 339 5481

உப தலைவர் – 647 818 7443

செயலாளர் – 416 418 7497

மின்னஞ்சல்: karainagar@gmail.com

நன்றி

                     நிர்வாகம்
கனடா- காரை கலாச்சார மன்றம்

 

 

கனடா-காரை கலாசார மன்றத்தின் நிதிப் பங்களிப்புடன் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை (Smart Classroom)31.01.2020 வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

கனடா-காரை கலாசார மன்றத்தின் நிதிப் பங்களிப்புடன்

சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை

(Smart Classroom) 31.01.2020 வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டு இறுதியில் கனடா-காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.சி.சிவராமலிங்கம் காரைநகருக்கான பயணத்தினை மேற்கொண்டிருந்தார். இதன்போது சில பாடசாலைகளின் முக்கியமான தேவைகளை இனம்கண்டுகொண்டதன் அடிப்படையில் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்திற்கு திறன் வகுப்பறை(Smart Classroom) ஒன்றினை அமைத்துக் கொடுப்பதென மன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டு இதற்கான உதவி காரை அபிவிருத்திச் சபையின் ஊடாக வழங்கப்பட்டிருந்தது.

தற்போது இத்திறன் வகுப்பறையின் அனைத்து நிர்மாணப் பணிகளும் காரை அபிவிருத்திச்சபையினால் முன்னெடுக்கப்பட்டு பூர்த்திசெய்யப்பட்டு பாவனைக்காக சென்ற 31.01.2020 வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது. வித்தியாலயத்தின் அதிபர் திரு.சாந்தகுமார் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா வைபவத்தில் காரை அபிவிருத்திச் சபையின் தலைவர் திரு.இராமநாதன் சிவசுப்பிரமணியம் பிரதம விருந்தினராகவும், தீவக வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) திரு.ஆ.யோகலிங்கம் சிறப்பு விருந்தினராகவும், காரை அபிவிருத்திச் சபையின் நிர்வாக உறுப்பினர்கள் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திரு.இ.சிவசுப்பிரமணியம் அவர்கள் நாடாவினை வெட்டி சம்பிரதாயபூர்வமாக திறன் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து விழாத் தலைவரும்(அதிபர்) விருந்தினர்களும் உரையாற்றினர். பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருடன், பழைய மாணவர்கள், அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிரந்தனர். வித்தியாலயத்தின் முக்கியமான தேவைகளில் ஒன்றான திறன் வகுப்பறையின் அவசியத்தை உணர்ந்துகொண்டு அதனை அமைப்பதற்கான நிதியினை உதவிய கனடா-காரை கலாசார மன்றத்திற்கும், அமைப்புப் பணிகளை குறுகிய காலத்தில் நிறைவேற்றித் தந்த காரை அபிவிருத்திச் சபைக்கும் பாடசாலைச் சமூகத்தின் சார்பில் அதிபர் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். வித்தியாலயத்தின் பரிணாம வளர்ச்சியின் மற்றொரு படிக்கல்லாக இத்திறன் வகுப்பறையின் உருவாக்கம் அமைந்திருப்பதுடன் மாணவர்களதும் ஆசிரியர்களதும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை இலகுவாகவும் நேரமுகாமைத்துவத்தற்கு ஏற்பவும் சிறப்பான முறையில் முன்னெடுக்கமுடியும் எனவும் கருதப்படுகிறது. வைபவத்தின் இறுதியில் இத்திறன் வகுப்பறையின் மாதரிச் செயற்பாடும் ஆசிரியர்களினால் செய்து காண்பிக்கப்பட்டது.

 

கனடா – காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்திற்கு திறந்து வைக்கப்படும் திறன் வகுப்பறை (SMART CLASS ROOM) திறப்பு விழா அழைப்பிதழ்! (31.01.2020 வெள்ளிக்கிழமை)

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையுடன் காரை அபிவிருத்திச் சபையினரால் காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் தற்காலிகமாக க.பொ.த. உயர்தர பெளதீக பாடத்திற்குரிய ஆசிரியர் 16.01.2020 வியாழக்கிழமை அன்று நியமனம்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையுடன்

காரை அபிவிருத்திச் சபையினரால்

காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில்

தற்காலிகமாக க.பொ.த. உயர்தர பெளதீக பாடத்திற்குரிய ஆசிரியர்

16.01.2020 வியாழக்கிழமை அன்று நியமனம்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் தலைவர் திரு.சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதத்தில் காரைநகர் விஜயத்தின் போது யாழ்ற்ரன் கல்லூரிக்கு சென்றிருந்தார்.

யாழ்ற்ரன் கல்லூரியில் பெளதீக பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் திடீர் இடமாற்றத்தை தொடர்ந்து யாழ்ற்ரன் கல்லூரியில் ஏற்பட்டுள்ள பெளதீக பாட ஆசிரியர் பற்றாக்குறையினை நீக்க தற்காலிகமாக பெளதீக பாடத்திற்குரிய ஆசிரியரை நியமிப்பதற்கு பாடசாலையினால் வேண்டுகோள் விடப்பட்டது.

அதனடிப்படையில் 22.09.2019 அன்று நடைபெற்ற நிர்வாக சபை கூட்டத்தின் போது தலைவர் அவர்களினால் பார்த்தும் கேட்டும் அறிந்து கொள்ளப்பட்ட விடயங்கள் நிர்வாக உறுப்பினர்களிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டதுடன் கனடா காரை கலாச்சார மன்றம் தொடர்ந்து செயற்படுத்தவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதனடிப்படையில் யாழ்ற்ரன் கல்லூரியில் ஏற்பட்டுள்ள பெளதீக பாட ஆசிரியர் பற்றாக்குறையினை நீக்க தற்காலிகமாக அடுத்து வரும் 6 மாதங்களிற்கு பெளதீக பாட ஆசிரியருக்குரிய தேவையான வேதனத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் தற்காலிகமாக க.பொ.த. உயர்தர பெளதீக பாடத்திற்குரிய ஆசிரியர் 16.01.2020 வியாழக்கிழமை அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

 

காரைநகர் பிரதேச வைத்தியசாலையின் அவசிய தேவைகளுக்கு உதவிட கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதிசேர் திரைப்பட காட்சிக்கு அனுசரணை வழங்கியவர்களுக்கும் மற்றும் பார்வையாளர்களுக்கும் நன்றி

 

காரைநகர் பிரதேச வைத்தியசாலையின் அவசிய தேவைகளுக்கு உதவிட கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதிசேர் திரைப்பட காட்சிக்கு அனுசரணை வழங்கியவர்களுக்கும் மற்றும் பார்வையாளர்களுக்கும் நன்றி

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதிசேர் திரைப்பட காட்சி காரைநகர் பிரதேச வைத்தியசாலையின் அவசிய தேவைகளுக்கு உதவிட நிதி பங்களிப்பு செய்வதற்காக கனடா டொரோண்டோவில் உள்ள Woodside Cinemas (MCCOWAN RD & FINCH) இல் “ஒருத்தி” திரைப்படம் 07.12.2019 சனிக்கிழமை பிற்பகல் 1.00 மணி காட்சியாக காண்பிக்கப்பட்டது.

ஒருத்தி திரைப்படம் கனடிய, ஐரோப்பிய, தமிழக, ஈழ கலைஞர்களின் உருவாக்கத்தில் முதல் முறையாக கனடாவிலும் யாழ் மண்ணிலும் படமாக்கப்பட்ட முழுநீள திரைப்படம்.இத் திரைப்படம் காரைநகர் கலைஞர் P.S.சுதாகரனின் இயக்கத்தில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

“ஒருத்தி” திரைப்பட காட்சியினால் கிடைக்கப்பெற்ற $2000.00 வரை சேர்ந்த நிதி விரைவில் காரைநகர் அபிவிருத்திச் சபை ஊடாக காரைநகர் பிரதேச வைத்தியசாலையின் அவசிய தேவைகளுக்கு உதவிட அனுப்பிவைக்கப்படும்.

நிதிசேர் திரைப்பட காட்சிக்கு அனுசரணை வழங்கியவர்களுக்கும் மற்றும் பார்வையாளர்களுக்கும் கனடா காரை கலாச்சார மன்றம் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது.

நிர்வாகசபை
கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதிசேர் திரைப்பட காட்சி காரைநகர் பிரதேச வைத்தியசாலையின் அவசிய தேவைகளுக்கு உதவிட நிதி பங்களிப்பு செய்வதற்காக கனடா டொரோண்டோவில் உள்ள Woodside Cinemas (MCCOWAN RD & FINCH)இல் “ஒருத்தி” திரைப்படம் 07.12.2019 சனிக்கிழமை பிற்பகல் 1.00 மணி காட்சியாக காண்பிக்கப்படவுள்ளது.

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதிசேர் திரைப்பட காட்சி காரைநகர் பிரதேச வைத்தியசாலையின் அவசிய தேவைகளுக்கு உதவிட நிதி பங்களிப்பு செய்வதற்காக கனடா டொரோண்டோவில் உள்ள Woodside Cinemas (MCCOWAN RD & FINCH) இல் “ஒருத்தி” திரைப்படம் 07.12.2019 சனிக்கிழமை பிற்பகல் 1.00 மணி காட்சியாக காண்பிக்கப்படவுள்ளது. இத் திரைப்பட காட்சிக்கு அனைவரையும் ஆதரவு வழங்குமாறு கனடா காரை கலாச்சார மன்றம் கேட்டுக்கொள்ளுகின்றது.

ஒருத்தி திரைப்படம் கனடிய, ஐரோப்பிய, தமிழக, ஈழ கலைஞர்களின் உருவாக்கத்தில் முதல் முறையாக கனடாவிலும் யாழ் மண்ணிலும் படமாக்கப்பட்ட முழுநீள திரைப்படம்.இத் திரைப்படம் காரைநகர் கலைஞர் P.S.சுதாகரனின் இயக்கத்தில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

 

CINEMA TICKET NOV - 2019