கனடா-காரை கலாசார மன்றத்தின் ஆதரவில் “ஒருத்தி” திரையிடப்பட்டதன் மூலம் திரட்டப்பட்ட நிதியிலிருந்து வாங்கப்பட்ட 2வது தொகுதி மருந்துப் பொருட்கள் பிரதேச வைத்தியசாலைப் பொறுப்பதிகாரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

 

கனடா-காரை கலாசார மன்றத்தின் ஆதரவில் “ஒருத்தி” திரையிடப்பட்டதன் மூலம் திரட்டப்பட்ட நிதியிலிருந்து வாங்கப்பட்ட 2வது தொகுதி மருந்துப் பொருட்கள் பிரதேச வைத்தியசாலைப் பொறுப்பதிகாரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் நிலவும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு குறித்து நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் நிர்வாகத்தினர் கனடா-காரை கலாசார மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து உதவிக் கோரிக்கையினை முன்வைத்திருந்தனர். ஊர் அபிமானம் மிக்க காரை.மண் தந்த கலைஞர் P.S.சுதாகரன் அவர்கள் முன்வந்து தனது வெற்றிப் படைப்பான “ஒருத்தி-2” திரைப்படத்தை திரையிட்டு அதன் ஊடாகப் பெறப்படும் நிதியினை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து குறித்த திரைப்படம் மே மாதம் திரையிடப்பட்டு திரட்டப்பட்டிருந்த நிதியிலிருந்து வாங்கப்பட்ட முதலாவது தொகுதி மருந்துப் பொருட்கள் சென்ற மே மாத இறுதியில் வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி Dr.K.செந்தூரன் அவர்களிடம் கனடா-காரை கலாசார மன்றத்தினால் வைபவரீதியாக கையளிக்கப்பட்டிருந்தது. தற்போது இரண்டாவது தொகுதி மருந்துப் பொருட்கள் வாங்கப்பட்டு வைத்தியசாலைப் பொறுப்பதிகாரியடம் அண்மையில் கையளிக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலத்தில் பிரதேச வைத்தியசாலையில் பொது அமைப்புக்களினதும் கொடையாளர்களினதும் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் மற்றும் மருந்துப் பொருட்களின் கையிளிப்பு போன்ற நலன்புரிச் சேவைகள் காரணமாக வெளிநோயாளர் பிரிவிலும் விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களினது எண்ணிக்கையிலும் கணிசமான அதிகரிப்பு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். தற்போது நான்கு மருத்துவர்கள் இவ்வைத்திய சாலையில் பாராட்டும்படியாக நோயளர்களிற்கான சேவையினை வழங்கி வருகின்றனர்.