சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரும், கனடா கலாச்சார மன்றமும் இணைந்து கொரோனா நிவாரணப் பணிக்கு வாழ்வாதார உதவித்தொகை வழங்கல்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரும், கனடா கலாச்சார மன்றமும் இணைந்து கொரோனா நிவாரணப் பணிக்கு வாழ்வாதார உதவித்தொகை வழங்கல்.

எமது தாய் சங்கமான காரைநகர் அபிவிருத்திச் சபையினரின் செயற்திட்டத்தின் கீழ் ஊரில் உள்ள பெண் தலைமைத்துவம், மாற்றுத் திறனாளி குடும்பங்களுக்கான கொரோனா உதவித்தொகை கொடுப்பனவு சிட்டை வழங்கும் நிகழ்வு இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

காரைநகரில் உள்ள ஓரு நபரை தலைமைத்துவமாக கொண்ட 605 குடும்ப உறுப்பினர்களுக்கு 650.00 ரூபாய்களும், இரண்டு நபரைத் தலைமைத்துவமாக கொண்ட 280 குடும்ப உறுப்பினர்களுக்கு 1000.00 ரூபாய்களும், மூன்று நபரைத் தலைமைத்துவமாக கொண்ட 370 குடும்ப உறுப்பினர்களுக்கு 1500.00 ரூபாய்களுமாக மொத்தமாக 1255 குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டன.

“ஓன்று பட்டால் உண்டு வாழ்வு” என்ற கூற்றிற்கு இணங்க இச் செயற்திட்டத்திற்கு கனடா கலாச்சார மன்றமும் எமது சபையினரும்  பூரண நிதி வழங்கி சிறப்பித்திருந்தனர். எமது சகோதர அமைப்பான கனடா கலாச்சார மன்றத்தினருக்கும், இச் செயற்திட்டத்தை சிறந்தமுறையில் செயல்படுத்திய காரைநகர் அபிவிருத்திச் சபை நிர்வாக உறுப்பினர்களுக்கும் எமது நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

இங்ஙனம்

                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

               செயற்குழு உறுப்பினர்கள்

  மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

16.05.2020