கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரை அபிவிருத்திச் சபை ஊடாக காரைநகரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள்!

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரை அபிவிருத்திச் சபை ஊடாக காரைநகரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள்.

1.வீட்டுத் திட்டம்

காரைநகர் அல்வின் வீதியில் வசிக்கும் சிவானந்தராசா றூபரசி கண்பார்வையற்ற இவர் 4 வயது குழந்தையுடன் வசித்து வருகின்றார். இவர் வீடு சிதைவடைந்த நிலையில் வீட்டில் வாழமுடியாது என காரை அபிவிருத்திச் சபை, கிராமசேவையாளரின் பரிந்துரைக்கேற்ப கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ரூபா 350,000.00 செலவில் திருத்தியமைத்துக் கொடுக்கப்பட்டது. இத் திட்டத்திற்கு உதவி செய்த அனைவருக்கும் மன்றம் நன்றி தெரிவிப்பதோடு மேலும் இது போன்ற திட்டங்கள் தொடர்ந்து செய்ய எமக்கு பொருளுதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

பழைய படத்தொகுப்பு:

 

புதிய படத்தொகுப்பு:

 

 

 

2.காரைநகர் பாடசாலைகளில் இருந்து கபொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான உதவி திட்டம்

நாட்டில் ஏற்பட்ட கொரோனா காரணமாக இவ்வருடம் கபொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பலவித கஷ்டங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் உள்ளாகியிருந்தார்கள். தற்போது October 11ம் திகதி பரீட்சை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்கள். காரை இந்துக் கல்லூரியில் 28 பேரும், யாழ்ற்ரன் கல்லூரியில் 22 பேரும் காரைநகர் பாடசாலைகளில் இருந்து பரீட்சைக்கு தோற்றுகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஊக்குவிப்பு தொகையாக ரூபா 2500.00 பாடசாலை அதிபர்களினாலும் காரை அபிவிருத்திச் சபை உறுப்பினர்களினாலும் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பாடசாலைகளில் வைத்து கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்டது.

காரைநகர் இந்துக் கல்லூரி

 

 

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி