Category: காரைக் கதம்பம் UK

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் பெருமையுடன் வழங்கும் காரைக் கதம்பம் – 2020

பிரித்தானிய காரை நலன் புரிச்சங்கத்தின் பொங்கல் விழாவான ‘காரைக் கதம்பம்’ 2019 கடந்த சனிக்கிழமை மாலை (26.01.2019) மண்டபம் நிறைந்த மக்களுடன் இனிதே நிறைவேறியது.

 

பிரித்தானிய காரை நலன் புரிச்சங்கத்தின் பொங்கல் விழாவான ‘காரைக் கதம்பம்’ 2019 கடந்த சனிக்கிழமை மாலை (26.01.2019) மண்டபம் நிறைந்த மக்களுடன் இனிதே நிறைவேறியது.

விழா குறிப்பிடப்பட்டது போல் மாலை 05:௦௦ மணிக்கு சரியாக ஆரம்பமானது. விழாவிற்க்கு வருகை தந்திருந்த திருமதி இராசநாயகம் பாலாம்பிகை மற்றும் திருமதி கலிஸ்டர் சாய்பாபா மங்கள விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தனர்.தொடர்ந்து திருமதி யெகதாம்பிகை ஆனந்தராசா வழங்கிய இனிய தேவாரத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.

சங்கத்தின் உபசெயலாளர் வைத்தியர் ஓசினி சிவகுமார் வழங்கிய வரவேற்புரையை தொடர்ந்து சிறுவர் நிகழ்சிகள் ஆரம்பமானது. பரத நாட்டியம், இசைக் கச்சேரி, நாடகம், சினிமா நடனம், பேச்சு என்று பல இனிய நிகழ்வுகளை சிறுவர், சிறுமியர் மேடையேற்றினர்.

நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு. ஐ. தி. சம்பந்தன் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். ஊடகவியளாளர் திரு இளையதம்பி தயானந்தா திரு. ஐ. தி. சம்பந்தன் பற்றிய பெருமைகளை எடுத்துரைத்தார். மேலும் பிரித்தானிய சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் போன்றோர் இவ்கௌரவிப்பில் கலந்து கொண்டனர். பிரதம விருந்தினர் திரு. ஐ. தி. சம்பந்தன் அவர்கள் தமது உரையில் காரை மண்ணின் பெருமைகளை எடுத்து இயம்பி, மேலும் காரை மக்கள் ஒற்றுமையாக மேலும் காரை மண்ணை மேம்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

பிருத்தானிய நலன் புரிச்சங்கத் தலைவர் திரு. முருகேசு யோகராஜா தலைமையுரை ஆற்றும்போது, காரை மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி, காரைமக்களை காரை மண்ணை மேலும் முன்னேற்ற ஒற்றுமையுடன் கூடுமாறு அழைப்பு விடுத்தார்.

விழாவில் காரை மண்ணில் இருந்து காணொளி மூலம் திருமதி வீரமங்கை வழங்கிய சிறப்புரை ஒளிபரப்பப்பட்டது. மேலும் காரை யாழ்ரன் கல்லூரி மாணவர்கள் நடித்து வழங்கிய நாடகம் ஒன்றும் ஒளிபரப்பப்பட்டது.

தொடர்ந்து விழாவில் பங்குபற்றிய சிறார்களும், அண்மையில் பல்கலையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பட்டதாரிகளும் கௌரவிக்கப்பட்டார்கள்.

சங்கத்தின் விழா பொருளார் திரு தர்சன் இராஜேந்திரன் வழங்கிய நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றது. அதன் பின்னர் மக்கள் அனைவரும் இராப்போசன விருந்தில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள்.

நன்றி

நிர்வாகம்

பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கம்

 

Press Release

 

 

 

காரைக்கதம்பம் 2019 புகைப்படங்கள்

 

 

 

பிரதம விருந்தினராக திரு. ஐ. தி. சம்பந்தன் உரை 

 

 

 

 

திருமதி வீரமங்கை வழங்கிய சிறப்புரை

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் பெருமையுடன் வழங்கும் காரைக் கதம்பம் 2019

காரைக் கதம்பம் 2018

காரைக் கதம்பம் 2018

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் வருடாந்த பொங்கல் விழாவான காரைக் கதம்பம் 2018 கடந்த சனிக்கிழமை 14ம் திகதி விளம்பி சித்திரைப் புத்தாண்டு நன்னாளில் இனிதே நிறைவேறியது. நிகழ்வுகள் நிரலில் குறிப்பிட்டதுபோல் மாலை 05:00 மணிக்கு ஆரம்பமாகி 10:30 மணியளவில் இனிதே நிறைவுற்றது.

திருமதி.புவனேஸ்வரி தனபாலன் மற்றும் திருமதி செல்வகுமாரி ஜெயசிங்கம் மங்கள விளக்கேற்ற, தொடர்ந்து திரு.பால்ராஜ் அவர்களின் தேவாரத்துடன் வழமையான சம்பிரதாய முறைப்படி நிகழ்வுகள் ஆரம்பமானது.

விழாவிற்கு பிரதம அதிதியாக திரு, திருமதி பேராசிரியர் ஆறுமுகம் நல்லைநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பிரான்சில் இருந்து வருகை தந்திருந்த திரு. அருளானந்தம் செல்வச்சந்திரன்( நேரு மாஸ்டர்) அவர்களும், அப்ரா நிறுவன (ABRA ) உரிமையாளர் திரு. திருமதி. துரைச்சாமி தயானந்தன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

வழமைபோல் பிரித்தானிய வாழ் காரை சிறார்கள், இளையோர்கள் தங்கள் கலை நிகழ்வுகள் மூலம் மேடையை அலங்கரித்தனர். இம்முறை கதம்பத்தில் முக்கிய நிகழ்வாக “எமது எதிர்காலம்”, எனும் நிகழ்வு சபையோரின் பேராதரவையும், நன்மதிப்பையும் பெற்றிருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் பல்கலைக்கழக கல்வியை முடித்து வெளிவந்த பிரித்தானிய வாழ் காரை பட்டதாரிகளை, பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் அழைத்து கெளரவப்படுத்தியது. இதன் முக்கிய நோக்கமாக பிரித்தானிய வாழ் காரை இளையோரிடையே ஒரு பன்முகப்பட்ட அறிமுகப்படுத்தலை உருவாக்குதல், அவர்களுக்கும் எமது காரை மண்ணில் வளர்ந்துவரும் இளையோரிடையேயும் ஒரு உறவுப்பாலத்தை ஏற்படுத்தல் மற்றும் பிரித்தானியாவில் இவர்களை தொடர்ந்துவரும் இளையோர்களின் பல்கலைக்கழக கல்வி, சமூகவியல் , மற்றும் வேலைவாய்ப்புகள் சார்ந்த அறிவுரைகளை வழங்குதல் என்பனவற்றுக்காகும்.

“வாழ்வது வனமானாலும் சேர்வது இனமாகட்டும்”

நிகழ்வின் புகைப்படங்களை கீழுள்ள இணையத்தில் பார்வையிடலாம் :

http://www.karainagar.org/karai-kathambam-2018-event-report/

காணொளியுடன் மேலதிக செய்திகளையும், தலைவர் மற்றும் விருந்தினர்களின் உரையையும் எதிர்பாருங்கள்.

 

நன்றி,

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்.

காரை நலன்புரிச்சங்கம் (பிரித்தானியா) தனது வருடாந்த நிகழ்வான ‘காரை கதம்பம் 2018’ நிகழ்வினை 14/04/2018 (சனிக்கிழமை) அன்று Preston Manor School, Carlton Ave, Wembley, London, HA9 8NA எனுமிடத்தில் பிற்பகல் 4மணி முதல் நடத்தவுள்ளது. வழமைபோல் இந்நிகழ்வில் தங்களை கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

 

 

18/03/2018

அன்பான எம் காரை உறவுகளே,

காரை கதம்பம் 2018′

 

காரை நலன்புரிச்சங்கம் (பிரித்தானியா) தனது வருடாந்த நிகழ்வான காரை கதம்பம் 2018‘ நிகழ்வினை 14/04/2018 (சனிக்கிழமை) அன்று Preston Manor School, Carlton Ave, Wembley, London, HA9 8NA எனுமிடத்தில் பிற்பகல் 4மணி முதல் நடத்தவுள்ளது. வழமைபோல் இந்நிகழ்வில் தங்களை கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

 

முக்கிய குறிப்பு : மாலை 5 மணிக்கு முன்பாக சமூகமளிப்போருக்கு அனுமதி இலவசம்

 

எங்கள் எதிர்காலம்’,  ‘Our Future’

இம்முறை கதம்ப விழாவில்  எம் பிரித்தானிய வாழ் காரை இளம் சமூகத்தினரை கடந்த மூன்று ஆண்டுகளில் பல்கலைக்கழக பெறுபேறுகள் பெற்று வெளியேறிய எம் இளம் சந்ததியினரை எம் மன்றம் அழைத்து கெளரவிக்க உள்ளது, எனவே கடந்த மூன்று வருட காலத்தில் வெளியேறிய பல்கலைக்கழக பட்டதாரிகளின்  (தங்கள், தங்கள் உறவுகள்சார், நண்பர்கள்சார் பிள்ளைகளின் )     பெயர்ப் பட்டியலை தந்துதவுமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.

 

இதில் காரை இளையோர் அமைப்பின் பங்களிப்பினை மிகத்தாழ்மையுடன் எதிர்பார்க்கின்றோம்.

 

Kumar   – 07951950843  thavarajah@btinternet.com

Arunan  – 07791836281  arunan_tt@hotmail.com

 

அன்புடன்,

நிர்வாகக் குழு,

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்

 

 

 

18/03/2018

 

Dear All,

Karai Kathambam 2018

 

Karai Welfare Society (UK) is pleased to invite to our first annual event, Karai Kathambam 2018, to be held on the 14th April 2018 at the Preston Manor School, Carlton Ave, Wembley, London, HA9 8NA from 4pm onwards. We would guarantee this would be an ideal day out with your family to celebrate the New Year.

NB: Entrance free until 5pm.

 

‘Our Future’

To make our celebrations special, we would like to commemorate youngsters of Karainagar who graduated from university over the last three years. If you, your child or a friend graduated over the last three years then please forward their details to the following two members.

Kumar   – 07951950843  thavarajah@btinternet.com

Arunan  – 07791836281  arunan_tt@hotmail.com

 

 

We look forward to seeing you soon.

KWS(UK) committee

காரை கதம்பம் 27-01-2018 – Karai Kathambam 27-01-2018

Dear KWS(UK) Members,

We are pleased to announce the date for our Karai Kathambam 2018 and please book this date on your calendar now.

                                        KARAI KATHAMBAM 2018     

 

Date: 27th January 2018 (Saturday)
Time: 5pm to 10:30pm
Venue: Preston Manor School, Carlton Avenue, Wembley, HA9 8NA

Please find the attached KK2018 participant application form. Please complete this form and return to the address on this form before 15th January 2018. This form can also be downloaded from our website using http://www.karainagar.org/wp-content/uploads/2017/12/Application_Form-KK2018-v3.pdf

Please visit our website http://www.karainagar.org/karai-kathambam-2018-notification/ for up to date details about this event.

We expect more programmes on this event so please do not hesitate to contact us on info@karainagar.org if you require further details about your or your children’s participation in this event.

Thank you,
KWS(UK)

 

காரை கதம்பம் 27-01-2018 – Karai Kathambam 27-01-2018

 

அன்பான பிரித்தானிய வாழ் காரை மக்களே,

 

காரை கதம்பம் 27-01-2018 – Karai Kathambam 27-01-2018

எமது பிரித்தானிய காரை நலன்புரிச்சங்க அங்கத்தவர்களின் வேண்டுகோளிற்கிணங்க எமது வருடாந்த நிகழ்வான காரைக் கதம்பம் (பொங்கல் விழா) குட்டி மழலைகளை உள்வாங்கி உற்சாகப்படுத்தும் முகமாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. உங்கள் பிள்ளைகளை ஊராருடனும் உற்றார் உறவினருடனும் பகிர்வதனால் நாம் எமது பிள்ளைகள் எமது ஊரவர்கள் என்ற அடையாளத்தையும் ஊரவர் ஒருவருடன் ஒருவர் உறவாடுவதற்கான உறவுப் பாலம்தான் எமது நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். ஆகவே, இம்முறை பார்வையாளர்களிற்கு தனி நபரிற்கு £5 மற்றும் பங்குபற்றும் பிள்ளைகளிற்கு £10. தனியாகவோ குழுவாகவோ ஒரு நிகழ்ச்சியில் பங்குபற்ற முடியும் (எல்லா பிள்ளைகளிற்கும் இடமளிக்க வேண்டும் என்பதனால்). இந்நிகழ்வில் பங்குபற்ற விரும்பும் பிள்ளைகளின் பெற்றோர் தயவுசெய்து 15/01/2018 இற்கு முன்பாக பதிவுகளை ஏற்படுத்துமாறு வேண்டுகிறோம்.

முக்கிய குறிப்பு : மாலை 5 மணிக்கு முன்பாக சமூகமளிப்போருக்கு அனுமதி இலவசம்

திகதி: 27 தை (January) 2018

நேரம்: பிற்பகல் 5 மணி

இடம்: Preston Manor School, Carlton Avenue, Wembley, HA9 8NA

தொடர்புகளிற்கு:

சித்ரா (07828156008)

வதனா (07450863391)

ராஜரத்தினம் ( 07747640575)

நாதன் (07944232014)

மின்னஞ்சல்: info@karainagar.org

மேலதிக தகவல்கள் : http://www.karainagar.org/karai-kathambam-2018-notification/

நன்றி,
நிர்வாகம்
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்

பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொங்கல் விழாவான “காரைக் கதம்பம் 2017”

KK2017-FlyerDesign-V3

சிறப்பாக நடைபெற்ற பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொங்கல் விழாவான காரைக் கதம்பம் 2016

_AIM5445 (Copy) _AIM5451 (Copy) _AIM5457 (Copy) _AIM5470 (Copy) _AIM5483 (Copy) _AIM5487 (Copy) _AIM5490 (Copy) _AIM5500 (Copy) _AIM5527 (Copy) _AIM5555 (Copy) _AIM5578 (Copy) _AIM5646 (Copy) _AIM5659 (Copy) _AIM5661 (Copy) _AIM5674 (Copy) _AIM5675 (Copy) _AIM5691 (Copy) _AIM5694 (Copy) _AIM5698 (Copy) _AIM5704 (Copy) _AIM5714 (Copy) _AIM5716 (Copy) _AIM5722 (Copy) _AIM5724 (Copy) _AIM5725 (Copy) _AIM5727 (Copy) _AIM5760 (Copy) _AIM5776 (Copy) _AIM5780 (Copy) _AIM5782 (Copy) _AIM5787 (Copy) _AIM5789 (Copy) _AIM5791 (Copy) _AIM5792 (Copy) _AIM5795 (Copy) _AIM5829 (Copy) _AIM5835 (Copy) _AIM5837 (Copy) _AIM5857 (Copy) _AIM5869 (Copy) _AIM5909 (Copy) _AIM5912 (Copy) _AIM5921 (Copy) _AIM5926 (Copy) _AIM5929 (Copy) P1360021 (Copy) P1360046 (Copy) P1360048 (Copy) P1360052 (Copy) P1360082 (Copy) P1360095 (Copy) P1360120 (Copy) P1360233 (Copy) P1360253 (Copy) P1360257 (Copy) P1360260 (Copy) P1360261 (Copy) P1360262 (Copy) P1360290 (Copy) P1360323 (Copy) P1360333 (Copy) P1360348 (Copy) P1360367 (Copy) P1360377 (Copy) P1360382 (Copy) P1360387 (Copy) P1360422 (Copy) P1360431 (Copy) P1360432 (Copy) P1360433 (Copy) P1360434 (Copy) P1360435 (Copy) P1360436 (Copy) P1360437 (Copy) P1360438 (Copy) P1360439 (Copy) P1360440 (Copy) P1360441 (Copy) P1360442 (Copy) P1360443 (Copy) P1360453 (Copy) P1360460 (Copy) P1360467 (Copy) P1360469 (Copy) P1360491 (Copy) P1360507 (Copy) P1360525 (Copy) P1360582 (Copy) P1360585 (Copy) P1360591 (Copy) P1360593 (Copy) P1360607 (Copy) P1360611 (Copy) P1360617 (Copy) P1360621 (Copy) P1360640 (Copy) P1360644 (Copy) P1360668 (Copy) P1360677 (Copy) P1360682 (Copy) P1360686 (Copy) P1360694 (Copy) P1360698 (Copy) P1360742 (Copy) P1360746 (Copy) P1360750 (Copy) P1360751 (Copy) P1360855 (Copy) P1360930 (Copy) P1370100 (Copy) P1370103 (Copy) P1370106 (Copy) P1370108 (Copy)

காரைக் கதம்பம் 2016

பிரித்தானியா காரை நலன்புரிச்சங்கத்தின் "காரை கதம்பம் 2016" நிகழ்வு Preston Manor School, Wembley, London, HA9 8NA  எனுமிடத்தில் 23/01/2016 (சனிக்கிழமை) வெகு விமரிசையாக நடைபெற்றது.
மங்கள விளக்கேற்றல், காரை கீதம், மௌன அஞ்சலி மற்றும் வழமையான கலை நிகழ்ச்சிகளுடனும் எம்முறவுகளின் பேராதரவுடனும் நிகழ்ச்சிகள் களைகட்டின. நடனங்கள், வயலின், பாட்டுக் கச்சேரிகள் என பல்வேறு நிகழ்சிகளை எமது சிறார்கள் திறம்பட வழங்கியிருந்தார்கள்.


இந்நிகழ்வு  www.karai.tv  எனும் இணைய  தொலைக்காட்சியில் இல் நேரடியாக  ஒளிபரப்பப்பட்டு வேறு நாடுகளில் உள்ளவர்களும் நேரடியாக கண்டுகளித்தார்கள்.

கடந்த ஆண்டு காரைக் கதம்ப விழாவில் பிரசவமான எமது செல்லக்குழந்தையான பிருத்தானியா காரை இளையோர் அமைப்பு  மிகவும் சிறப்பான முறையில் தங்கள் ஓராண்டு செயல்த்திட்டங்களை  தொகுத்து காணொளி முன்னிலைப் படுத்தல்( Video Presentation) ஒன்றை சபையோருக்கு ஒரு நிகழ்வாக வழங்கி  அனைவரினதும் பாராட்டை பெற்றனர்.  இக்காணொளியினை கீழுள்ள இணைப்பில் நீங்கள் கண்டுகளிக்கலாம்:
www.youtube.com/watch?v=HRx_UX6nUIc


இதனைத் தொடர்ந்து நடைபெற்ற எமது பிரதம விருந்தினரான வைத்திய கலாநிதி திரு தம்பையா வாமதேவன் அவர்களின் சிறப்பு உரையில் எமது இளையோரின் பங்களிப்பு எவ்வளவு திறம்பட உள்ளதென்பதனையும் எமது சங்கத்தின் செயற்பாடுகள் எவ்வாறு திறம்பெற நடைபெறுகின்றதென்பதனையும் எடுத்துரைத்திருந்தார்.


மேலும்இ எமது எதிர்கால திட்டங்களிட்கு தன்னாலான உதவிகளை செய்வதற்கும் எண்ணியிருப்பதாகவும் தெரிவித்தார்.


எமது கௌரவ விருந்தினர் திரு இளையதம்பி தயானந்தா அவர்களும் தமது உரையினை பதிவு செய்திருந்தார். இதன்போது சாதி மத வேறுபாடற்று காரை மக்கள் அனைவரிதும் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்றும், மேலதிக தகவல்கள் திரட்டப்பட்டு செயற்திட்டங்கள் ஒழுங்கான முறையில் நடைபெற வேண்டுமெனவும் சங்கத்தினையும் காரை மக்களையும் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து எமது சங்கத்தின் தலைவர் திரு சு கோனேசலிங்கம் (நாதன்) அவர்களின் உரை இடம்பெற்றது. இதன்போது எமது நிகழ்கால மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றிய விளங்கங்களை சபையோருக்கு எடுத்துரைத்தார். 


மேலும் பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கத்திற்கும், காரை அபிவிருத்தி சபைக்கும் இடையிலான சில நிர்வாக சிக்கல்களை பற்றியும் குறிப்பிட்டார்.  இந்த நிர்வாக, மற்றும் இரு சபைக்குமான கருத்து முரண்பாடுகளையும் ஒரு சுமுகமான முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் பிருத்தானியா வாழ் காரை மக்கள் அனைவரினதும் கருத்துக்களை உள்வாங்கும் முகமாக  வரும் மார்ச் மாதம் முற்பகுதியில்  ஒரு விசேட கூட்டத்தினை ஒழுங்கு செய்வதாகவும் கூறினார்.  இக்கூட்டத்திற்கு அனைத்து பிருத்தானியா வாழ் காரை மக்களையும் கலந்துகொண்டு தங்கள் சொந்தக் கருத்துக்களை பதிவு செய்யுமாறும்  கேட்டுக்கொண்டார்.


  இதன்போதுஇ தலைவர் அவர்கள்  எமது சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் நால்வர்களையும்  (ராஜேந்திரா, சுந்தரதாசன், நாகேந்திரம் மற்றும் தவராஜா) மேடைக்கு வந்து தங்கள் கருத்துக்களை சபையோர்முன் பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொண்டதிற்கு இணங்க அவர்களும்   தங்கள் சார்பான கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.


எம் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் ஒன்றாக நிற்பது என்பது பிரித்தானியா காரை நலன்புரிச்ச் சங்கத்தின் ஒற்றுமையின் வெளிப்பாட்டை அனைவரிற்கும் பறைசாற்றுவதாகவும் கூறிய பொழுது அரங்கமே அதிர்ந்தது. 


இதனைதொடர்ந்து,மேலதிக நிகழ்வுகள் நடைபெற்று பங்குபற்றியவர்களிற்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதே நிறைவேறியது. கலந்து கொண்ட மக்கள்  இராப்போசனத்திலும்  கலந்துகொண்டு மகிழ்ச்சியுடன் வீடுதிரும்பினர்


நன்றி
நிர்வாகம்.
பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கம். 
——————————–

பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொங்கல் விழாவான காரைக் கதம்பம் 2016

karai-2016

”காரைக் கதம்பம் 2015”

பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொங்கல் விழாவான ''கதம்பம் 2015'' நிகழ்வு 31/01/2015 சனிக்கிழமை மாலை பிற்பகல் 04:30 மணியளவில் CANNONS HIGH  SCHOOL, SHALDON WAY , HARROW எனும் இடத்தில அமைந்துள்ள மண்டபத்தில், மண்டபம் நிறைந்த  பிருத்தானியா வாழ் காரை மக்களுடன் நடைபெற்றது. நிகழ்விற்கு பிரதம அதிதியாக திரு தம்பிராஜா விக்னேஸ்வரன் (கணித ஆசிரியர் , Queens Elizabath Grammer School -London ) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இவருடன் திரு .செந்தில்நாதன் M.A.கந்தையா(சென் கந்தையா ) அவர்களும் , எமது பிருத்தானியா வானொலி தமிழ் சேவையின் ( BBC ) ஊடகவியலாளர் திரு இளையதம்பி தயானந்தா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

                                  முறையே மங்கள விளக்கேற்றல், காரை கீதம்,தேவாரம், மௌன அஞ்சலி, வரவேற்புரை எனும் கலாச்சார துவக்க நிகழ்வுகளுடன் விழா ஆரம்பம் ஆனது. தொடர்ந்து சிறார்களின் கலை நிகழ்வுகளுடன் விழா நகர்ந்தது.  சிறுவர்களின் நிகழ்வுகளான பரத நாட்டியம், இசைக் கச்சேரி ,வாய்ப்பாட்டு , நாடகம், காவடி நடனம் என பல சுவாரசியமான நிகழ்வுகள் கதம்ப மேடையை அலங்கரித்தது.
                                                                                                                                         

பிரதம அதிதி திரு.த.விக்னேஸ்வரன் தமது உரையில் பிருத்தானியா வாழ் காரை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கல்விசார்ந்த பல நல்ல அறிவுரைகளை அள்ளிவளங்கினார். பிள்ளைகள் எவ்வாறு கல்வித்தரத்தை உயர்த்துவது , இதற்கு பெற்றோர்கள் எவ்வாறு பக்க துணையாக இருக்க வேண்டும், வீட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளுடன் எவ்வாறு நடந்துகொள்ளல் வேண்டும் என்று பல அற்புதமான அறிவுரைகளை நேரத்தையும் கருத்தில் கொள்ளாது தன்னை மறந்து ஓர் உண்மை பேச்சொன்றை ஆற்றியிருந்த்தார். (காணொளி பின்னர் இணைக்கப்படும்).

                                 எமது மன்றத்தின் 25வது நூற்றாண்டு நிறைவின் ஓர் தடமாகவும், பிருத்தானியா வாழ் காரை இளையோரை ஒன்றிணைக்கும் ஓர் உறவுப் பாலமாகவும் காரை இளையோர் அமைப்பு (KYO ) அன்றைய தினம் உருப்பெற்றது இவ்விழாவின் ஓர் சிறப்பு அம்சமாக அமைந்தது.  இந்த இளையோர் அமைப்பை எமது நிர்வாகம் ஓர் நீண்டநாள் கனவாக கொண்டிருத்ததும், அன்றையதினம் அது நனவாதும் உண்மையில் மன்றதிற்கு ஓர் புத்துணர்ச்சியை கொடுத்தது. இவ் இளையோர் அமைப்பை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பதற்கு எமது மன்றத்தின் பிதாமகன் Dr.S .சபாரட்ணம் அவர்களின் துணைவியார் திருமதி மங்கை சபாரட்ணம் அவர்களும் , செல்வி வர்ஷினி தியாகலிங்கம் அவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். இருந்தும் திருமதி .M . சபாரட்ணம் அவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் விழாவிற்கு  வருகைதர முடியவில்லை. எனவே செல்வி வர்ஷினி தியாகலிங்கம் அவர்கள் இவ் இளையோர் அமைப்பை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். செல்வி வர்சினி தியாகலிங்கம் 2011ம் ஆண்டு லண்டன் தேம்ஸ் நதியில் மேற்கொண்ட தொண்டு நீச்சல்( Charity Swimming ) மூலம் எமது மன்றத்திற்கு £7500.00 ரொக்கத் தொகையை (1.5மில்லியன் ரூபாய்கள் ) நிதி திரட்டித் தந்தவர் என்பதை இத் தருணத்தில் எமது மன்றம் நினைவுகூறி நன்றி பாராட்டியது.  இச் செயலையும், இவரையும் இவ் இளையோர் அமைப்பு ஓர் முன் ஊதாரணமாக எடுத்துக்கொள்ளும் என்பதில் ஐயம் இல்லை.

                          பிருத்தானியா வாழ் காரை இளையோர் அமைப்பின் பிரதான நோக்கங்களையும்  , விதிமுறைகளையும் இங்கே இணைக்கப்பட்டிருக்கும் காணொளி மூலம் தெரிந்து கொள்ளுங்கள்(  http://youtu.be/8IKfwpjyKSA)

                                மேலும் புதிய நிர்வாகசபைத் தலைவர் திரு.S.கோணேசலிங்கம் அவர்கள் தனது உரையில், மன்றத்தின் ஒற்றுமை கருதிய நல்ல பல கருத்துக்களை கூறினார். தொடர்ந்து அவர் தனது உரையில் இந்த மன்றத்தை ஆரம்பித்து வைத்து தனது இறுதி மூச்சுள்ளவரை, அதன் ஒற்றுமைக்காக பாடுபட்ட  மன்றத்தின் பிதாமகன் அமரர் Dr. S. சபாரட்ணம் அவர்களின் அயராத உழைப்பும், அவரது விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவமும், ஊர் நன்மைக்காக எதையும் நாம் இழக்கலாம் என்ற பெருமனதும் ( அவர் அடிக்கடி கூறும் வசனம் – ''எங்களுக்கு சிலுசிலுப்பு  தேவையில்லை பலகாரம் தான் தேவை'') இன்னமும் மன்றத்தில் மணம் வீசுவதால், இன்று இம் மன்றம் கடந்த 25ஆண்டுகளில் பல சேவைகளை ஆற்றியுள்ளது எனவும், கடந்த கால தலைவர்கள், நிர்வாகத்தினர்கள் பல இடர்களுக்கு மத்தியிலும் மன்றத்தின் வளர்ச்சியின் பங்களிப்பில் தங்களை முழு மனதோடு ஈடுபடுத்தி வந்தமையே இன்றைய இந்த வெற்றிக்கு காரணம் எனவும் கூறினார். இன்றைய இந்த மன்றத்தின் நிர்வாகம் கடந்தகால தலைவர்களான திரு.வி நாகேந்திரம் , திரு.இ.சுந்தரதாசன் மற்றும் திரு.ப.தவராஜா ஆகியோருடன் நானும் இணைந்து,இந்த நிர்வாகத்தை ஓர் கூட்டுத் தலைமையின் கீழ் நடாத்தி வருகின்றோம் என்றும், இது எம்மவர் மத்தியில் ஓர் எட்டுத்துக் காட்டாக அமையும் எனவும் கூறினார்.  

மன்றத்தின் கடந்தகால, எதிர்கால திட்டங்கள் பற்றியும், வருடாந்த விளையாட்டு போட்டியான ''காரை சங்கமம் 2015'' வருகின்ற ஜூலை மாதம் 12ம் திகதியும் , மன்றத்தின் 25வது ஆண்டு நிறைவு விழா செப்டம்பர் மாதம் 26ம் திகதி எனவும் தலைவர் அறிவித்தார். 

                          கதம்பத்தின் மற்றுமோர் கருநிகழ்வாக , எமது பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கத்தால், லண்டன் சைவ முனேற்ற சங்கத்தின் (38 வருடகால சமூக சேவை ) ஓர் அங்கமான  ''அறிவொளி  வளையம் ''(Enlightenment Circle ) யோகா  தொண்டு நிறுவனத்திற்கு ரொக்கத்தொகை £2500.00கள் (0.5மில்லியன் ரூபாய்கள் ) காசோலையை மன்றத்தின் செயலாளர் திரு.S .சிவம் அவர்கள் அறிவொளி  நிறுவன நிர்வாகத்திடம் (Dr . நவனீதராஜா மற்றும் திரு . அசோகன் )கையளித்தார். இந்நிதியுதவி வன்னிப் பகுதியில் ஆதரவற்ற 100 முதியோர்களுக்கு கண்படர் அகற்றல் (Catract Surgery ) சிகிச்சை மேற்கொள்வதற்கென வழங்கப்பட்டது. இச் சிகிச்சை முகாம் வருகின்ற July  மாத இறுதிப்  பகுதிக்குள் நடாத்தி முடிப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எமது மன்றத்தால் கடந்த 3வருடங்களில் வன்னிப் பகுதிக்கு வழங்கப்பட்ட மூன்றாவது உதவி என்பது குறிப்பிடத்தக்கது. வழங்கப்பட்ட இத் தொகை பிருத்தானியாவில் உள்ள வியாபார நிறுவனங்களில் வைக்கப்பட்டிருக்கும் சிறு உண்டியல்கள் மூலம் சேர்க்கப்பட்ட நிதி என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. 

ஆர்த்தி தயானந்தாவின் நன்றியுரையுடனும், இராப்போசன விருந்துடனும் ''கதம்பம் 2015'' இனிதே நிறைவுற்றது.

நன்றி.
வணக்கம்.

நிர்வாகம் 
பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம்.
        

IMG_3375 (Copy) IMG_3387 (Copy) IMG_3391 (Copy) IMG_3401 (Copy) IMG_3414 (Copy) IMG_3418 (Copy) IMG_3429 (Copy) IMG_3482 (Copy) IMG_3503 (Copy) IMG_3507 (Copy) IMG_3589 (Copy) IMG_3594 (Copy) IMG_3594-1 (Copy) IMG_3649 (Copy) IMG_3652 (Copy) IMG_3902 (Copy) IMG_3937 (Copy) IMG_3985 (Copy) IMG_4015 (Copy) IMG_4069 (Copy) IMG_4088 (Copy) IMG_4133 (Copy) IMG_4171 (Copy) IMG_4206 (Copy) IMG_4235 (Copy) IMG_8767 (Copy) IMG_8791 (Copy) unnamed (Copy) unnamedKP9ZEN1B (Copy)

பி௫த்தானியா காரை நலன் புரிச்சங்கத்தின் வ௫டாந்த பொங்கல் விழாவன ” காரைக் கதம்பம் 2015″

கால் நூற்றாண்டின் தடம்….
ஒ௫ நூற்றாண்டின் பாய்சல்…..

பி௫த்தானியா காரை நலன் புரிச்சங்கத்தின்  வ௫டாந்த பொங்கல் விழாவன " காரைக் கதம்பம் 2015" நிகழ்வு பல நூற்றுக் கணக்கான மக்களுடன் Cannons High Scholl's, Harrow, HA8 6AN எனும் இடத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் நேற்று மாலை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

கால் நூற்றாண்டை தாண்டும், மன்றத்தின் தடமாக ஒ௫ங்கிணைப்பு செய்யப்பட்டி௫ந்த பி௫த்தானியா வாழ் காரை இளையோர் அமைப்பு 60க்கும் மேற்பட்ட இளையோரை ஒன்றிணைத்து மன்றத்தின் ஒ௫ நூற்றாண்டின் பாய்ச்சலை தாண்டியது.

IMG_3375 (Copy) IMG_3387 (Copy) IMG_3391 (Copy) IMG_3401 (Copy) IMG_3414 (Copy) IMG_3418 (Copy) IMG_3429 (Copy) IMG_3482 (Copy) IMG_3503 (Copy) IMG_3507 (Copy) IMG_3589 (Copy) IMG_3594 (Copy) IMG_3594-1 (Copy) IMG_3649 (Copy) IMG_3652 (Copy) IMG_3902 (Copy) IMG_3937 (Copy) IMG_3985 (Copy) IMG_4015 (Copy) IMG_4069 (Copy) IMG_4088 (Copy) IMG_4133 (Copy) IMG_4171 (Copy) IMG_4206 (Copy) IMG_4235 (Copy) IMG_8767 (Copy) IMG_8791 (Copy) unnamed (Copy) unnamedKP9ZEN1B (Copy)

கால் நூற்றாண்டின் தடம்…. ஒ௫ நூற்றாண்டின் பாய்சல்…..

KWS-UK LOGO

பி௫த்தானியா காரை நலன் புரிச்சங்கத்தின்  வ௫டாந்த பொங்கல் விழாவன " காரைக் கதம்பம் 2015" நிகழ்வு பல நூற்றுக் கணக்கான மக்களுடன் Cannons High Scholl's, Harrow, HA8 6AN எனும் இடத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் 31.01.2015 மாலை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

கால் நூற்றாண்டை தாண்டும், மன்றத்தின் தடமாக ஒ௫ங்கிணைப்பு செய்யப்பட்டி௫ந்த பி௫த்தானியா வாழ் காரை இளையோர் அமைப்பு 60க்கும் மேற்பட்ட இளையோரை ஒன்றிணைத்து மன்றத்தின் ஒ௫ நூற்றாண்டின் பாய்ச்சலை தாண்டியது.

பிரித்தானியா மட்டுமன்றி உலகெங்கும் பரந்து வாழும் காரை இளையோர்களை ஒன்றிணைக்கும் இந்த முயற்சி பற்றிய மேலதிக விபரங்களுக்காக  காத்தி௫ங்கள்………

மிக விரைவில் …….

Karai_Youth_Organisation_-UK0001

கால் நூற்றாண்டின் தடம்…. ஒ௫ நூற்றாண்டின் பாய்சல்…..

KWS-UK LOGO

பி௫த்தானியா காரை நலன் புரிச்சங்கத்தின்  வ௫டாந்த பொங்கல் விழாவன " காரைக் கதம்பம் 2015" நிகழ்வு பல நூற்றுக் கணக்கான மக்களுடன் Cannons High Scholl's, Harrow, HA8 6AN எனும் இடத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் நேற்று மாலை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

கால் நூற்றாண்டை தாண்டும், மன்றத்தின் தடமாக ஒ௫ங்கிணைப்பு செய்யப்பட்டி௫ந்த பி௫த்தானியா வாழ் காரை இளையோர் அமைப்பு 60க்கும் மேற்பட்ட இளையோரை ஒன்றிணைத்து மன்றத்தின் ஒ௫ நூற்றாண்டின் பாய்ச்சலை தாண்டியது.

பிரித்தானியா மட்டுமன்றி உலகெங்கும் பரந்து வாழும் காரை இளையோர்களை ஒன்றிணைக்கும் இந்த முயற்சி பற்றிய மேலதிக விபரங்களுக்காக  காத்தி௫ங்கள்………

மிக விரைவில் …….

காரைக் கதம்பம் 2015

karaikathambam_2015_-_flyer

வெற்றி விழாவாக நடந்தேறிய பிரித்தானியா காரை நலன் புரிச்சங்கத்தின் பொங்கல் விழா ‘காரை கதம்பம்-2014’

பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் பொங்கல் விழாவான 'காரை கதம்பம்-2014' மண்டபம் நிறைந்த ரசிகர்களுடன் வெற்றி விழாவாக சென்ற சனிக்கிழமை ஜன.25.2014 அன்று KINGSBURY உயர்நிலைப் பள்ளிக் கலையரங்கில் நடைபெற்றது.

 பிரதம விருந்தினராக காரைநகரில் இருந்து காரை அபிவிருத்தி சபை மாணவர் நூலகத்தின் நிறுவுனரும் ஒருங்கிணைப்பாளருமாகிய மருத்துவர் நடராஜா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

 மற்றும் பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திரு.அருளானந்தம் செல்வச்சந்திரன் (நேரு மாஸ்ரர்) அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

 பிரித்தானியா வாழ் காரைச் சிறார்களை ஒன்றிணைத்து அவர்களின் மொழி, பண்பாட்டு, கலைத் திறன்களை வெளிப்படுத்துவதற்கு களம் அமைத்துக் கொடுத்தமை இந்த விழாவின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக அமைந்திருந்தது.

 விழா நிகழ்வுகளின் படங்களை இங்கே காணலாம்.

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் பெருமையுடன் வழங்கும் காரைக் கதம்பம் 2014

karaikathambam2014

காரை நலன் புரிச்சங்கத்தின் காரைக் கதம்பம் 2014

Click to access -நலன்-புரிச்சங்கத்தின்-காரைக்-கதம்பம்-20142.pdf

[prettyfilelink src=”http://www.karainagar.com/pages/wp-content/uploads/2013/11/Application-Form1.pdf” type=”pdf” newwindow=”false”]Download Application Form[/prettyfilelink]

இனிதே நடைபெற்ற காரைக் கதம்பம் 2013 மேலும் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது

இனிதே நடைபெற்ற  காரைக் கதம்பம் 2013

பிருத்தானியா நலன் புரிச் சங்கத்தின் 16வது பொங்கல் விழாவான ”காரைக் கதம்பம் 2013” கடந்த சனிக்கிழமை (02/02/2013) மாலை 550க்கும் மேற்பட்ட மக்களுடன் இனிதே நிறைவு பெற்றது.
                        கதம்பம் 2013 ஏற்கனவே குறிப்பிட்டிருந்ததுபோல் மாலை 05:00க்கு திருமதி ஞானமலர் சுந்தரேஸ்வரன் , திருமதி மஞ்சுளா நடராஜா ஆகியோரின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து 1நிமிட மௌன அஞ்சலியும், காரை பிரதேச கீதமும் ஒலிக்கப்பட்டது. பிரதேச கீதம் ஒலித்துக்கொண்டிருந்த வேளை நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த அனைத்து  பிள்ளைகளும் தங்கள் கைகளில் ஒளி விளக்குகளுடன் மேடையில் காட்சி கொடுத்த நிகழ்வு பார்வையாளர்களின்
மனதை கொள்ளையிட்டு சென்றது.
                      நிர்வாகசபை உறுப்பினர் திரு.K .விக்னேஸ்வரன் அவர்களின் வரவேற்புரையுடனும்மாதுரி பாஸ்கரன் பைரவி பாஸ்கரன் ஆகிய சி றுமிகளின் தேவாரத்துடனும் நிகழ்வுகள் ஆரம்பம் ஆகின. திரு.K .விக்னேஸ்வரன் தனது வரவேற்புரையில் இவ் விழவிற்கு பிரதம அதிதியாக ஊரில் இருந்து வருகைதர இருந்த
Dr .வீரமங்கை யோகரட்ணம்(யாழ்பல்கலைக்கழக சிரேஷ்ட ஆங்கில விரிவுரையாளர்) அவர்களது பிரயாணம் தவிர்க்க முடியாத காரணத்தால் விழாவில் கலந்து கொள்ள முடியாததையிட்டு நிர்வாகசபை சார்பில் மன வருத்தத்தை தெரிவித்துக்கொண்டு, விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த பிரான்ஸ் காரை நலன் புரிச் சங்க தலைவர் திரு. அருளானந்தம் செல்வச்சந்திரன்(நேரு மாஸ்டர் )அவர்களையும், புங்குடுதீவு நலன் புரிச் சங்க தலைவர் திரு .கருணைலிங்கம் அவர்களயும்,வேலணை மதிய கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவர் திரு,கே.என். சிவராஜா , திருமதி சிவராஜா அவர்களையும் , எமது சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு.இளயதம்பி தயானந்தா , அவைக்காற்றுக் கழக இஷ்தாபகரும் இலங்கை வானொலி நாடக புகழ் திரு.கே.பாலேந்திரா , திருமதி.ஆனந்தராணி பாலேந்திரா, மற்றும் திரு.யேசுரட்ணம், திரு. ரகுநாதி (D .E .E .P தொண்டு அமைப்பு ) ஆகியோரையும் மற்றும் சபையோர்களையும் வரவேற்றுக்கொண்டார்.
                  இந்த வருட நிகழ்வுகள் கடந்த வருடங்களை விட எண்ணிக்கையிலும் (49 நிகழ்வுகள்) , தரத்திலும் அதிகமாக இருந்தது.சிறப்பு விருந்தினர் நேரு மாஸ்டர் சிறப்புரை ஆற்றுகையில் , அவரது சுவாரசியமா பாணியில் தனது சிற்றுரையை ஆற்றியிருந்தார். எமது பிரதான நோக்கம் இளம் சமுதாயத்தை ஒன்றிணைப்பது பற்றியும், ஊரில் கல்வி, மருத்துவம் பற்றிய தனது கருத்தினையும் மக்களுக்கு எடுத்துரைத்தார்.
தலைவர் திரு. பரமநாதர் தவராஜா தமது உரையில், காரைநகர் கல்லூரிகளின் கற்றல், கற்பித்தல் தரங்கள் உயர்ந்து வருவதையும் , மருத்துவ வசதிகள் உயர்வதையும் ,அடுத்து எமது சமையம் சார்ந்து நாம் அங்கு தற்போதைய நிலைமையில் எப்படியான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது பற்றியும் , காரைநகர் சார்ந்த அனைத்து மன்றங்களும் ஒரே பெயரின் கீழ் , ஒரே முத்திரையின் கீழ், ஒரே யாப்பின் கீழ் , ஒன்றாக ஒரே குடையின் கீழ் இயங்க முன் வர வேண்டும் என்றும், பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் இன்றைய, எதிர்கால திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார். அன்றைய காரை இந்துக் கல்லூரியும், தற்போதைய Dr .ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலயத்தின் 125 வது வருட நிறைவை ஒட்டி வருகின்ற மே மாத இறுதியில் ஒரு சிறு நிகழ்வை நடாத்த இருப்பதாகவும், அதனை அடுத்து ஜூலை மாதம் 28ம் திகதி ”காரை சங்கமம் 2013” மூன்றாவது நிகழ்வை நடாத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
மேலும் ”முதுசங்களைதேடி 2013” இற்கான மலராக 1967இல் வெளிவந்த காரைநகர் சைவ மகா சபையின் பொன் விழா மலர் மீள் பதிப்பு செய்யப்பட்டு வருகின்றது என்றும் இம் மலருக்கான விளம்பரங்கள் சேகரிக்கப்பட்டுவருது பற்றியும் விளக்கியிருந்தார்.
கனடா காரை கலாச்சார மன்றம், சுவிஸ் காரை அபிவிருத்தி சபை , காரைநகர் காரை அபிவிருத்தி சபை, பிரதம விருந்தினராக வருகை தர இருந்த Dr .வீரமங்கை யோகரடணம் ஆகியோர்களது வாழ்த்துச் செய்திகள் வாசிக்கப்பட்டு அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் கூறப்பட்டிருந்தது.
காரை மாணவர் நூல் நிலையத்துக்கான பெருவாரியான நூல்களை மக்கள் விழாவில் எடுத்துவந்து நிர்வாகத்தினரிடம் வழங்கியிருந்தார்கள். மேலும் பலர் தங்கள் அன்பளிப்பு நூல்களை அடுத்தடுத்த ஒன்றுகூடல்களில் நிர்வாகத்திடம் வழங்குவதாக கூறியிருந்தார்கள்.
நிகழ்ச்சியின் இறுதியில் பங்கு பற்றிய அனைத்து குழந்தைகளுக்கும் விழாவிற்க்கு வருகைதந்திருந்த சிறப்பு விருந்தினர்களான பிரான்ஸ் காரை நலன் புரிச்சங்க தலைவர் திரு. நேரு மாஸ்டர், புங்குடுதீவு நலன்புரிச் சங்க தலைவர், திரு. கருணைலிங்கம், வேலணை மதிய கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவர் திரு. கே.என்.சிவராஜா, திருமதி சிவராஜா ,அவைக்காற்றுக் கழக இஷ்தாபகர் திரு.கே. பாலேந்திரா & திருமதி ஆனந்தராணி பாலேந்திரா, ஊடகவியலாளர் திரு இளயதம்பி தயானந்தா ஆகியோர் சான்றிதழ்கள் வழங்கி கெளரவித்திருந்தார்கள்.உப செயலாளர் திரு. செல்வநாயகம்பிள்ளை மனோகரன் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற, கலந்துகொண்ட மக்கள் இராப் போசனத்தில் கலந்து கொண்டனர்.
இவ் விழாவிற்கு அனுசரணை வழங்கி இருந்த அனைத்து நிறுவனங்களுக்கும் , தனி நபர்களுக்கும் பிருத்தானிய காரை நலன் புரிச் சங்கம் தமது சிரம் தாழ்த்திய நன்றிகளைத்
தெரிவித்துக் கொள்கின்றது.
”ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு”
நன்றி
வணக்கம்
பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம்


book collection photos

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

அன்பு பொங்க, ஆசை பொங்க, அறிவு பொங்க, இன்பம் பொங்க, ஈகை பொங்க, இனிமை பொங்க
தித்தித்கும் செங்கரும்பாய் மகிழ்ச்சி பொங்க
பிரித்தானியாவில் காரைநகர்ச் சுற்றத்தார், சொந்தங்கள், நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடும்
இனிய தைத் திருநாள் விழா காரைக் கதம்பம் 2013,
இயல் இசை நாடகத் திருவிழா காரைக் கதம்பம் 2013
மிகவும் சிறப்பாக நடைபெற கனடா வாழ் காரைநகர் மக்கள் சார்பில்  கனடா-காரை கலாச்சார மன்றமும் வாழ்த்துகின்றது.

London KK

காரைக் கதம்பம் 2013

பிருத்தானிய நலன் புரிச் சங்கம் பெருமையுடன் முன்னெடுக்கும் 16வது பொங்கல் விழாவான ” காரைக் கதம்பம் 2013”
London 2013
வரும் சனிக்கிழமை மாலை (02/02/2013) 05:00 மணிக்கு PRESTON MANOR HIGH SCHOOL, CARLTON AVENUE EAST, WEMBLEY, HA9 8NA எனும் இடத்தில அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற உள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தினர்.
நன்றி
வணக்கம்.
பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம்.

காரைக் கதம்பம் 2013 UK