கனடா காரை கலாச்சார மன்றத்தினால் அழுத்த மீட்டர் (Pressure Meter) காரைநகர் அரசினர் வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் அழுத்த மீட்டர் (Pressure Meter) காரைநகர் அரசினர் வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.

மனிதனின் அடிப்படை தேவைகளாக உணவு , உடை , உறையுள் என்பவற்றுடன் சுகாதார வசதிகளும் முக்கியமான பங்கை வகிக்கின்றன என்பது யாவரும் அறிந்ததொன்றாகும். “நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் ” என்பதற்கமைய ஆரோக்கியமான வாழ்வு இன்றியமையாததொன்றாகின்றது. நவீன விஞ்ஞான தொழில்நுட்ப உலகில் மருத்துவ வசதிகளும், மருத்துவ உபகரணங்களும் நோய்களிலிருந்து பாதுகாத்து வாழ வழி வகை செய்து வருகின்றது என்றால் மிகையாகாது.

காரைநகர் அரச வைத்தியசாலையில் ( Pressure Meter) அழுத்த மீட்டர் ஒன்று பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. அதனை பழுதுபார்ப்பதற்கு ஏற்படும் செலவும் அதிகமாக காணப்படுகின்றது. இதனால் நோயாளர்கள் கூடுதலான நேரம் செலவழித்து சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனை கருத்திற்கொண்டு புதிதாக (Pressure Meter )அழுத்த மீட்டர் கொள்வனவு செய்யப்பட்டு, வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் கனடா காரை கலாச்சார மன்றத்தினரால் கையளிக்கப்பட்டுள்ளது.