Return to கனடா காரை

CKCA எம்மைப்பற்றி

  • எமது மொழி, கலை, பண்பாடு, விளையாட்டு என்பனவற்றில் எமது இளம் சந்ததியினர் முன்னேற உதவுதல்
  • எமது ஊர் வாழ் மக்கள் நலன் பேணுதல்.
  • கனடாவிலும், இலங்கையிலும் மனித நேயப் பணிகளை மேற்கொள்ளல்.

எம்மைப்பற்றி

காரைநகருக்கு சிறப்புத்தரும் அம்சங்களில் முதல் அம்சம் ஈழத்துச்சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் ஆகும்.. காரைநகர் மக்கள் எங்கு வாழ்ந்தாலும் இவ்வாலயத்தில் அக்கறை உள்ளவர்களாக இருப்பர். அந்தவகையில், 1989 ஆண்டு காலப்பகுதியில் கனடாவிற்கு புலம் பெயர்ந்திருந்த, சமயப்பற்றும், தமிழ்ப்பற்றும் மிக்க காரைநகர் பெருமக்களால் "ஈழத்துச்சிதம்பரம் திருத்தொண்டர் சங்கம், கனடா"என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. காலப்போக்கில், கனடாவிற்கு புலம்பெயர்ந்த காரை மக்களின் தொகையும் அதிகரிக்க இதன் பணிகளையும் விஸ்தரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் இச்சங்கம் 1994ம் ஆண்டு கனடா – காரை கலாசார மன்றம் எனப்பெயர் மாற்றம் பெற்றதுடன் அதன் பணிகளையும் விஸ்தரித்து வருகிறது.

கனடா-காரை கலாசார மன்றம் என்பது கனடாவில் வசிக்கும் காரைநகர் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும், இலாப நோக்கமற்ற ஒரு சமூக அமைப்பாகச் செயற்பட்டு வருகின்றது.. கனடாவில் வசிக்கும, காரைநகருடன் தொடர்புடைய, 18 வயதிற்கு மேற்பட்ட எவரும் இம்மன்றத்தில் அங்கத்தவராக இணைந்து கொள்ள முடியும். இம்மன்றம் பல்வேறு சமூக, கலை, கலாசார, மனிதநேய மற்றும ஆன்மீகப் பணிகளை கனடாவிலும், காரைநகரிலும் ஆற்றுவதோடு தாயக உறவுகளுக்கு உதவும் மனித நேயப் பணிகளிலும் பங்குபற்றி வருகிறது.

Leave a Reply