கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையில் வீடு முடித்துக் கொடுக்கப்பட்டது.

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையில்

வீடு முடித்துக் கொடுக்கப்பட்டது.

காரைநகர் மாப்பாணவூரியைச் சேர்ந்த திருமதி கிருபாராணி அவர்கள் 5 வருடங்களுக்கு முன்னர் கணவர் இறந்த நிலையில் தாம் கட்ட ஆரம்பித்த வீட்டிற்கு கதவுகள் யன்னல்கள் இன்றி தமது வயது வந்த இரு பெண் பிள்ளைகள்,ஒரு மகனுடன் வாழ்ந்து வந்தார். இவர் தமது அன்றாட தேவைகளுக்காக தற்போது கமநல சேவைகள் திணைக்களத்தின் அம்மாச்சி உணவகத்தில் உணவு தயாரித்து விற்று தனது குடும்பத்தை பராமரித்து வருகிறார். காலை 8மணிமுதல் மாலை 6மணிவரை இங்கு இருப்பதால் வீட்டிற்கு பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என காரை அபிவிருத்திச் சபை பரிந்துரைப்பின்பேரில் மன்ற உபதலைவர் திரு பாலச்சந்திரன் அண்மையில் நேரில் பார்வையிட்டு செயற்குழுவிற்கு வழங்கிய அறிக்கையின் படி கனடா காரை கலாச்சார மன்றத்தினால் இவர்கள் வீட்டுக்கு தேவையான யன்னல்கள் கதவுகளும் ரூபா 225,000.00 செலவில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. திருமதி கிருபாராணி அவர்கள் கனடா காரை கலாச்சார மன்றத்திற்கும் கனடா வாழ் காரைநகர் மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

கீழ் காணும் படங்கள் முன்பிருந்ததையும் வீடுமுடித்தபின் குடும்பம் மகிழ்ச்சியாக காணப்படுவதையும் காணலாம்.

படங்கள்: சிந்துஜா வீடியோ