Category: விசேட செய்திகள்

கனடா காரை கலாச்சார மன்ற நிர்வாக சபையின் விசேட செய்தி

கனடா காரை கலாச்சார மன்ற நிர்வாக சபையின் விசேட செய்தி

ஜூலை 9, 2017 நடைபெற்ற விசேட பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டது.   மிகவும் குறுகிய காலப்பகுதியில் ஆகஸ்ட் 31 கோடைகால ஒன்றுகூடலும்,   ஒக்டோபர் 8 தமிழ்த்திறன்போட்டிகளும்,  நவம்பர் 4 காரை வசந்தம் கலை விழாவும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

கடந்த சில வருடங்களாக மன்றத்துக்கு ஏற்பட்டுள்ள அபகீர்த்திக்களுக்கு மத்தியிலும்,  இந்நிகழ்வுகள் சிறப்பாக நடந்தமை வெற்றிப்படிகளுக்கு முதற்படியாகும்.  தலைவர்  காரை வசந்தம் கலை விழாவில் கூறியது போல TD Canada Trust கணக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்படுத்த முடியாதளவில் வைக்கப்பட்டிருந்தது.  தலைவரின்  அதீத செயற்பாட்டால்  வங்கி அதிகாரிகள் வைப்பில் உள்ள தொகையை பயன்படுத்த கூடிய நிலைக்கு கொண்டுவர சம்மதித்து   கையொப்பமிடுமாறு பணித்தார்கள்.  வங்கி அறிக்கையின்படி நவம்பர் 6, 2017 கணக்கை அணுகவும், அதற்கு அடுத்த நாள் நவம்பர் 7, 2017  நிதியை பெறக்கூடியதாகவும் இருந்தது.

அந்த கணக்கில் இருந்து காரைவசந்தம் 2017 நிகழ்ச்சிகளுக்கான சில செலவுகளுக்குரிய  நிதி எடுக்கப்பட்ட துடன் , சுமார் $4500 தொகைப்பணம்    கடந்தகால நிர்வாகத்தினருக்கு மன்றத்தால் செலுத்த வேண்டிய கொடுப்பனவுகள் கையளிக்கபட்டுள்ளன.  மீதமுள்ள பணம் RBC வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடா வாழ் காரை மக்களின் தொடர்ச்சியான ஆதரவும்,  ஊக்கமும்  எமது  மண்ணின் பெருமையையும்,  புகழையும்  இப்புலம்பெயர் நாட்டில் இன்னும் பல தலை முறைகளுக்கு இட்டுச் செல்ல உதவும் என்பதில் ஐயமில்லை.  இந்த உணர்வை தலை மேற்கொண்டு எல்லோரும் ஒற்றுமையாகவும், பலமோடும் மன்றத்தை  வழிநடாத்துவோமாக.

மன்றத்தால் வருடம்தோறும்   நடாத்தப்படுகின்ற ஆருத்திரா  அபிஷேகம் இம்முறையும் வழமை போல  ஜனவரி 1, 2018 வெகு சிறப்பாக றிச்மன்ட் ஹில் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.  அனைத்து அடியவர்களும் அன்றைய தினம்  கலந்து கொண்டு ஆட வல்லானின்  அருட்கடாட்சங்களை பெற்று உய்யும் வண்ணம் தாழ்மையுடன்  வேண்டிக்  கொள்கின்றோம்.

நன்றி

தங்கள் பணியில்

கனடா காரை கலாச்சார மன்ற நிர்வாகசபை

 

 

எதிர்பாருங்கள் வெகு விரைவில்!

எதிர்பாருங்கள் வெகு விரைவில்!

கனடா காரை கலாச்சார மன்ற நிர்வாக சபையின் விசேட செய்தி!

 

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் ஜூலை 31,2016 திகதி நடைபெறவுள்ளது. இவ் நிகழ்வில் பங்குபற்றுவர்கள் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

CKCA logo

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் ஜூலை 31,2016 திகதி நடைபெறவுள்ளது.  இவ் நிகழ்வில் பங்குபற்றுவர்கள் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

 

இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு  karainagar@gmail.com  அல்லது 416 642 4912 தொடர்பு கொள்ளவும்.

 

  நன்றி

நிர்வாகம் 
கனடா-காரை கலாச்சார மன்றம்

                         "WORKING TOGETHER IS SUCCESS"
 

CKCA GET TOGETHER 2016 REGISTRATION

 

Verification

கனடா – காரை கலாச்சார மன்றத்தின் விசேட அறிவித்தல்

GETtOGETHERCANCELLED0001

காரை வசந்தம் அனுமதிச் சீட்டுகள் பற்றிய அன்பான வேண்டுகோள்

காரை வசந்தம் அனுமதிச் சீட்டுகள் பற்றிய அன்பான வேண்டுகோள்
எமது அன்பிற்குரிய கனடா வாழ் காரை உறவுகளே!
கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் எதிர் வரும் டிச.7,2013 அன்று Sir John Macdonald Collegiate Institute இல் நடத்தப்படவிருக்கும் காரை வசந்தம் விழாவிற்கான அனுமதிச் சீட்டுகள் எமது மன்ற நிர்வாக சபை உறுப்பினர்களால் விற்பனை செய்யப்பட்டு வருவது நீங்கள் அறிந்ததே.
ஒரு குடும்பத்திற்குரிய அனுமதிச் சீட்டினைக் கொள்வனவு செய்த குடும்பதினருடன் அவர்களின் தாய் தந்தையரும் இவ்விழாவிற்கு அனுமதிக்கப்படுவர்.  ஆனால் அவர்களின் சகோதரரோ அல்லது உறவினரோ அக்குடும்பத்தினருடன் சேர்ந்து அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை அறியத் தருகின்றோம்.
அத்துடன் ஒருவர் கொள்வனவு செய்த அனுமதிச் சீட்டினை இன்னொருவர் மாற்றிப் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதையும் அறியத்தருகின்றோம்.
நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு அனுமதிச் சீட்டுக்கான கட்டணமும் உங்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தினரின் அன்பளிப்பாகவே எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
நன்றி
நிர்வாகம்
கனடா-காரை கலாச்சார மன்றம்

 

உறவுக்கு கரம் கொடுப்போம் செல்வி வளர்மதி கந்தசாமி வயது 29.

உறவுக்கு கரம் கொடுப்போம்
செல்வி வளர்மதி கந்தசாமி வயது 29.
சிறுநீரகமாற்றுச் சத்திர சிகிச்சையின் பின்னரான வைத்தியச் செலவுகள்
காரைநகர் பொன்னம்பலம் வீதியைச் சேர்ந்த செல்வி வளர்மதி கந்தசாமி வயது 29, இவர் அண்மையில் தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் அந்த இரு சிறுநீரகங்களையும் மாற்றுச் சிகிச்சை மேற்கொண்டார். அந்த சிறுநீரக மாற்றுச் சிகிச்சையின் பின்னர் தேவையான மருத்துவச்செலவினை ஈடுசெய்வதற்கு அவரது குடும்பத்தினரால் முடியாதுள்ளநிலை ஏற்பட்டுள்ளது. இவரது மருத்துவச் செலவுகள் நாளொன்றுக்கு சுமார் 1500 ரூபாய்கள் செலவாகின்றது என வைத்திய அதிகாரிகள் அத்தாட்சி வழங்கியுள்ளனர். புலம்பெயர் நாடுகளிலிருக்கும் காரைநகர் மக்கள் தங்களாலான நிதியுதவியை வழங்கி உதவிடுமாறு செல்வி வளர்மதியின் தாயார் உருக்கத்துடன் வேண்டியுள்ளார். இத்துடன் கிராம சேவகரின் அத்தாட்சிக் கடிதம் மற்றும் வளர்மதியின் கடிதம் ஆகியன உங்கள் பார்வைக்காக உள்ளன. இவருக்கு காரைநகர் வாழ் மக்கள், உலகம் வாழ் காரைநகர் மக்கள் தம்மால் இயன்ற நிதியுதவியை எமது மன்றத்தினூடாக வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். எனவே இவ்விளம்பெண்ணின் மருத்துவச் செலவுக்கு உதவி செய்ய விரும்புவோர்

உங்கள் நிதியுதவியை  PayPal மூலமாகவோ அல்லது வங்கியிலோ அல்லது எமது மன்ற உறுப்பினர்களிடமோ செலுத்த முடியும்.

தொடர்புகளுக்கு: karainagar@gmail.com
வுநட: 416 642 4912




Tharmalingam Paramasiva $100.00 Cash
Piramenthiratheesan Thiravianathan $25.00 PayPal
 THULASI THAVARAJAH  $25.00 PayPal
 Mathan Nadarasa  $25.00 Pay Pal
 Muthaiahpillai Subramanieapill  $50.00 PayPal
G Somasundaram $50.00 Pay pal
Uthayan Thambirajah $25.00 Cash
Oppilamany Ponnampalam $25.00 Cash
Sivakumaran Sadacharam $25.00 Cash
Rajagopalan Shanmugam $25.00 Cash
Vignarajah Balasubramaniam $25.00 Cash
Perinparajah Thirunavukkarasu $25.00 Cash
Pathmanathan Maheswaran $25.00 Cash
Jeyakumar Nadarajah $25.00 Cash
Keetheswaran Paramu $25.00 Cash
Sutha Gunasegaram $25.00 Cash
Maharajah Sangarapillai $50.00 Cash
Vinayagarajah Balasubramaniam $25.00 Cash
Sivaruban Kanagasabai $25.00 Cash
Mohendran Sangarapillai $25.00 Cash
Yogeswaran Kandiah $25.00 Cash
 Jeyachandran Thambirajah $25.00 pay Pal
 yogenthiran sithamparappillai $50.00 Pay pal

 

Karainagar.com இணையத்தளத்தினை வாழ்த்துகின்றோம்.

Karainagar.com  இணையத்தளத்தினை வாழ்த்துகின்றோம்.
தைபிறந்தால் வழிபிறக்கும் என்ற தமிழர் பண்பாட்டிற்கு ஏற்ப தைப்பொங்கலுடன் புதுபொலிவுடன் அலங்கரித்துக்கொண்டிருக்கும் Karainagar.com   இணையத்தளத்திற்கு எமது  முதல் வணக்கம்.
      இன்றைய நவநாகரிக உலகின் முதல் தகவல் தொடர்பு சாதனம் இணையத்தளமே. ஊரின் தேவையறிந்து நிலத்திலுள்ள ஆலயங்கள், பாடசாலைகள், சமூகமன்றங்கள், புலத்திலுள்ள கலைவடிவங்கள், சமூகமன்றங்களின் செய்திகளையும் ஒன்றிணைத்து ஒரு முற்றத்தில் சிந்திக்கவைத்துக்கொண்டிருக்கும் Karainagar.com   நிர்வாகிகளை வாழ்த்துகின்றோம் பாராட்டுகின்றோம்.
            நற்றமிழின் அர்ச்சனையை நாடியருள் நாதர்
            உற்றவுமை யோடுமகிழ்ந் தாடுமொரு கூத்தர்
            முற்றுகனி போன்றசுவை முத்திதர வல்லார்
            கற்றவர்கள் வாழுதிருக் காரைநகராரே.

      எமது கிராம முன்னேற்றத்திற்காக உழைக்கின்ற அமைப்புக்கள்;;, மன்றங்கள், சமூகஆர்வலர்களுக்கு ஓரு அன்பான வேண்டுகோள் நீங்கள் பார்வையிடுவதோடு நின்றுவிடாது உங்கள் கருத்துக்களையும், ஆலோசணைகளையும் எழுதி அனுப்புங்கள் அப்பொழுதான் இவ்இணையத்தினை மேலும் அலங்கரிக்கலாம் என்பதை நினைவுபடுத்துகின்றோம்.
      
            நம் தமிழர் பண்பாட்டின்  இன்பம், துன்பம் ஆகியசெய்திகளை தாங்கிவருகின்ற  Karainagar.com  கடந்த நான்குவருடங்களாக பலசேவைகள் செய்துவருகின்றது என்பது நாம் அறிந்ததே! இவ்இணையத்தள நிர்வாகிகள் செயல்திறன் மிக்கவர்களாக செயல்படுகிறார்கள். எனவே தொடர்ந்தும் இவ்நிர்வாககுழுவை தெரிவு செய்து மேலும் நவீன முறையில் வடிவமைக்க உதவுமாறு கனடாவாழ் காரைமக்களை பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

புலம்பெயர் தேசத்தில் பல வேலைப்பளுக்களுகு மத்தியில் Karainagar.com  இணையத்தளத்தினை வடிவமைத்த தொழில்நுட்பவியளார்களுக்கும், காரை-கனடா கலாச்சார மன்றநிர்வாகிகளுக்கும். எமது சபை சார்பாக நன்றிகளும், பாராட்டுதல்களும்.
 
நன்றி
இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்தி சபை
 செயற்குழு உறுப்பினர்கள்
சுவிஸ் வாழ் காரை மக்கள்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாகசபை தெரிவுக்கூட்டம் ஒத்திவைப்பு

கனடா காரை கலாச்சார மன்றத்தின்
நிர்வாகசபை தெரிவுக்கூட்டம் ஒத்திவைப்பு
கனடா காரை கலாச்சார மன்றத்தின் புதிய நிர்வாகசபைத் தெரிவுக்கூட்டம் தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளது. இக்கூட்டமானது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ம்திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00மணிக்கு நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம். இக்கூட்டத்தில் அனைத்து கனடா வாழ் காரை மக்கள் அனைவரையும் கலந்து கொண்டு கனடா காரை கலாச்சார மன்றத்தின் செயற்பாடுகளில் எல்லோரும் பங்கெடுத்து மன்றத்தின் வளர்ச்சிக்கும் கனடா வாழ் காரை மக்களின் ஒற்றுமைக்கு வழிகாட்டியாக வாழ்வோமாக.
நன்றி,
நிர்வாகசபை,
கனடா காரை கலாச்சார மன்றம்.