COVID 19 மனிதாபிமான உதவி

COVID 19 மனிதாபிமான உதவி

கனடா காரை கலாச்சார மன்றம் கனடா வாழ் காரைநகர் மக்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட பணத்தில் முதல் கட்டமாக $5000.00 (ரூபா 655,000.00) காரை அபிவிருத்திச் சபைக்கு அனுப்பி வைத்துள்ளது. காரைநகரில் வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைக்கேற்ப

ஒருவர் உள்ள குடும்பத்திற்கு ரூபா 400.00

இருவர் உள்ள குடும்பத்திற்கு ரூபா 750.00

மூவர்களுக்கு மேற்பட்டு உள்ள குடும்பத்திற்கு ரூபா 1000.00

என்ற அடிப்படையில் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை காரைநகர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் காரை அபிவிருத்திச் சபையினால் வழங்கப்பட்ட விசேட பற்றுச்சீட்டு மூலம் வாங்குவதற்கான ஒழுங்குகள் காரை அபிவிருத்திச் சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இவ் வாரம் காரைநகர் வைத்தியசாலைக்கு தேவையான சில மருந்துகளை மருத்துவ அதிகாரியின் வேண்டுகோளுக்கிணங்க கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

காரைநகர் மக்களுக்கு மட்டுமல்லாது வன்னி பிரதேச மக்களுக்கு COVID 19 யினால் வாழ்வாதாரம் குறைந்த குடும்பத்தினர் தமது அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதற்கு பல உதவிகள் செய்துவரும் திரு.கதிர்காமநாதன் அவர்களை வாழ்த்துவதோடு அவர் பணி சிறக்கவும் நீடுழி வாழ்க என்றும் வாழ்த்துகின்றது.அதேபோல் வலந்தலை இளையோர் அமைப்பு,கலாநிதி விளையாட்டுக் கழகம் மற்றும் ஊர் அமைப்புகள்,தொண்டர்கள் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு கனடா காரை கலாச்சார மன்றம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது. அத்துடன் கனடா காரை கலாச்சார மன்றத்தினால் மேற்கொள்ளப்படும் திட்டத்திற்கு சகல உதவிகளை செய்து வரும் காரை அபிவிருத்திச் சபை அதன் தலைவர் நாட்டில் இல்லாத போதும் அவரின் நெறியாள்கையில் தன்னலமற்ற சேவை செய்யும் நிர்வாக சபை உறுப்பினர்களையும் கனடா காரை கலாச்சார மன்றம் பாராட்டுகின்றது.அத்துடன் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.

தொடர்ந்தும் கனடா காரை கலாச்சார மன்றம் காரைநகர் மக்களுக்கான உதவிகளை செய்யும் என தெரிவித்துக்கொள்கின்றோம்.

                                                                               நன்றி

   நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்