Category: CKCA AGM

அறிவித்தல்:

அறிவித்தல்!

கனடா-காரை கலாசாரமன்றத்தின் ஈராண்டுப் பொதுச்சபை கூட்டம், மன்றத்தின் தலைவர் திரு.சிவசம்பு சிவநாதன் தலைமையில் சென்ற ஞாயிற்றுக் கிழமை (April 28, 2024) ஸ்காபுரோ Civic Centre இல் காலை 10:00 மணிக்கு கூடியது.

மேற்படி கூட்டத்திதிற்கு, கனடா-காரை கலாசார மன்றத்திற்கெதிராக ஒன்றாரியோ உயர் நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குத் தொடர்பிலான விடயங்களை கொண்டு போவது என்று, இந்த ஆண்டு சித்திரை மாதம் 24 ஆம் திகதி, 8 Milner Avenue, Scarborough ON M1S 3P8 என்ற முகவரியில் இரவு 8:15 மணியளவில் கூடிய மன்றத்தின் தலைவர் திரு.சிவசம்பு சிவநாதன், உப தலைவர் திரு.கனக சிவகுமாரன், செயலாளர் திருமதி. நாகேஸ்வரி சிவகுமார், உப செயலாளர் திரு.தம்பிராசா ஜெயச்சந்திரன், பொருளாளர் திரு.சோமசுந்தரம் கிருஸ்ணரட்ணம், நிர்வாக உறுப்பினர்கள் திரு.தம்பிஐயா பரமானந்தராசா மற்றும் திரு.பிரமேந்திரதீசன் திரவியநாதன் ஆகிய எழுவர் தீர்மானத்திருந்தனர்.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில், கனடா-காரை கலாசார மன்றம் கடந்த 28 மாதங்களாக எதிர் நோக்கிவரும் வழக்கு விவகாரமானது, சென்ற ஞாயிற்று கிழமை (April 28, 2024) ஸ்காபுரோ Civic Centre இல் காலை 10:00 மணிக்கு கூடிய பொதுச்சபை கூட்டத்திற்கு  எடுத்துச்செல்லப்பட்டபோதிலும், பொதுச்சபையின் பலத்த எதிர்ப்பின் காரணமாக இந்த வழக்கினை எவ்வாறு மன்றம் எதிர்கொள்வது என்று எதுவித தீர்மானமும் நிறைவேற்றமுடியாத காரணத்தினால், அந்த பொதுக்கூட்டத்தில் திரு. முத்து பொன்னம்பலம் தலைமையில் ஐவர் அடங்கிய காப்பாளர் சபை ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளது என்பதனை கனடா வாழ் காரைநகர் மக்களுக்கு அறியத்தருகின்றோம்.

தெரிவு செய்யப்பட்டுள்ள மன்றத்தின் காப்பாளர் சபை விரைவில் கூடி இது தொடர்பாக விரிவாக ஆராய்ந்து மன்றத்தின் நலன்களை பேணுவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் விரைவில் மேற்கொள்ளும்.

காப்பாளர் சபை

கனடா-காரை கலாசார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றம் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் – (நிகழ்ச்சி நிரல்) 28.04.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு.

கனடா காரை கலாச்சார மன்றம்

பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் – 2024

இடம்: ஸ்காபுரோ சிவிக் சென்டர் (Scarborough Civic Centre)
(Committee Rooms 1 & 2)
150 Borough Dr, Scarborough, ON M1P 4N7

காலம்: 28.04.2024 (Apr 28, 2024) ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 9.30 மணிக்கு

நிகழ்ச்சி நிரல்

1. அங்கத்தவர்கள் பதிவும் அங்கத்தவர்கள் தமது கருத்துக்களை தெரிவிக்க நேரம் பதிவு செய்தலும்.

2. கடவுள் வணக்கம்.

3. அகவணக்கம்.

4. தலைவர் உரை.

5. செயலாளர் அறிக்கைகள். (சென்ற பொதுக்கூட்ட அறிக்கை, செயற்பாட்டு அறிக்கை)

6. பொருளாளர் அறிக்கை.

7.  1. நிர்வாக சபையின் பதவிக்காலத்தில் மன்றத்தின் பொதுச்சபை அங்கத்தவர்கள் மன்ற யாப்பு விதிகளை மீறி நிர்வாகத்தில் தலையீடு செய்து நிர்வாகத்தினை குழப்ப முயற்சி செய்தலை முற்றாக தவிர்க்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றுதல்.

       2. கனடா காரை கலாச்சார மன்றத்துக்கும் அதன் செயற்பாட்டாளர்களுக்கும் காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கும் எதிராக திரு.முத்து பொன்னம்பலம் என்பவரால் நஸ்டஈடு கோரி ஒன்ராறியோ உயர் நீதிமன்றில் ( Ontario Superior Court Justice) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக மன்ற நிர்வாகத்தால் மன்ற அங்கத்தவர்களுக்கு விளங்கப்படுத்தலும் தீர்மானம் நிறைவேற்றுதலும் மற்றும் உபகுழு நியமித்தல்.

8. மன்றத்தின் யாப்பு திருத்தம் மற்றும் உபகுழு நியமித்தல்.

9. இலங்கை ஹட்டன் நேஷனல் (HNB) வங்கியில் உள்ள மன்றத்தின் நிலையான வைப்பு பணம் ஐந்து (5) மில்லியன் ரூபா ஒவ்வொரு மில்லியனாகவும், பத்து லட்சத்து நாற்பத்தைந்தாயிரம் (1,045,000) ரூபா, ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் (150,000) ரூபா மற்றும் ஒரு லட்சம் (100,000) ரூபா அத்துடன் சிவன் கோவில் நித்திய பூசைக்குரிய நிலையான வைப்பு ஐந்து லட்சம் (500,000) ரூபா என ஒன்பது (9) நிலையான வைப்புச் சான்றிதழ்கள் உள்ளன. அறுபத்து இரண்டு லட்சத்து தொன்னூற்று ஐந்தாயிரம் (6.295 மில்லியன் ரூபா – எட்டு நிலையான வைப்புச் சான்றிதழ்கள்) ரூபாக்களை ஒரு சான்றிதழாக மாற்றுவதுடன் கூடிய வட்டி கிடைக்கும் வண்ணம் ஒழுங்கு செய்து அதற்குரிய வட்டிப் பணத்தை மாணவர்களின் கல்விக்கு உதவுவது மற்றும் மற்றைய தேவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் காரைநகர் அபிவிருத்திச் சபை வங்கிக் கணக்கிற்கு நேரடியாக கிடைக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றுதல்.

10. அங்கத்தவர்கள் கருத்துக்களை தெரிவித்தல் மற்றும் வேறு பிரேரணைகளும் தீர்மானம் நிறைவேற்றுதலும்.

11. மன்றத்தின் இருப்புக்கள் (Tent)தொடர்பாக தீர்மானித்தல்.

12. புதிய நிர்வாக சபை தெரிவு.
தலைவர், உபதலைவர், செயலாளர், உப செயலாளர், பொருளாளர், உப பொருளாளர், 13 நிர்வாக சபை உறுப்பினர்கள், 6 தயார்நிலை உறுப்பினர்கள், 3 திட்டமிடல் போஷகர் சபை உறுப்பினர்கள் மற்றும் கணக்காய்வாளர் நியமனம்.
இளையோர் ஒருங்கிணைப்பாளர் தெரிவு. (சென்ற பொதுக் கூட்டத்தில் (24.09.2022) எடுத்த தீர்மானத்திற்கு இணங்க)

13. புதிய நிர்வாக சபைத் தலைவர் உரை.

14. அங்கத்தவர் வருட சந்தா மற்றும் ஆயுள் சந்தா பணம் தீர்மானித்தல்.

15. புதிய நிர்வாக சபையின் எதிர்கால திட்டங்கள்.

16. புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் புகைப்படம் எடுத்தல்.

17. நன்றியுரை.

                                  நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்.

 

 

கனடா காரை கலாச்சார மன்றம் நிர்வாக செயற்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல். (28.04.2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணி)

கனடா காரை கலாச்சார மன்றம்

நிர்வாக செயற்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல்

28.04.2024 (Apr 28, 2024) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணி

கனடா  காரை கலாச்சார மன்ற நிர்வாக சபைபோஷகர்  சபைகணக்காய்வாளர்

2024 – 2025 அங்கத்தவர்கள் தேர்வுக்கான  பொதுத் தேர்தல்

நடைமுறை வழிகாட்டல் ஆவணம்

பின்வரும் நிர்வாக செயற்குழு உறுப்பினர் பதவிகளிற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

  1. தலைவர்
  2. உப தலைவர்
  3. செயலாளர்
  4. உப செயலாளர்
  5. பொருளாளர்
  6. உப பொருளாளர்
  7. 13 நிர்வாக சபை உறுப்பினர்கள்
  8. 6 தயார்நிலை உறுப்பினர்கள்
  9. 3 திட்டமிடல் போசகர் சபை உறுப்பினர்கள்

கனடாவில் வதியும் காரைநகருடன் தொடர்புடைய 18 வயதிற்கு மேற்பட்ட இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். இத் தேர்தலில் பங்கு பற்றி போட்டியிடும் உரிமையும், வாக்களிக்கும் உரிமையும் 2023, 2024ம் ஆண்டிற்கான வருட சந்தா கட்டி அங்கத்துவம் பெற்று, பொது சபை உறுப்பினர் அந்தஸ்த்தில் உள்ள அனைவருக்கும் உண்டு. ஆனாலும் 2024ம் ஆண்டுக்குரிய அங்கத்துவ பணத்தினை குறைந்தபட்சம் பொதுக்கூட்டத்திற்கு 3 நாட்களிற்கு முன்னர் செலுத்தி தமது அங்கத்துவத்தினை புதுப்பித்துக் கொண்டவர்கள் மட்டுமே அமையவுள்ள புதிய நிர்வாக சபையில் அங்கம் வகிக்கும் தகைமை பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.

சேவை மனப்பான்மை உடைய அனைவரும் எந்த பதவிகளுக்கும் விண்ணப்பம் செய்யலாம்.

மேற்படி தேர்தலில் பங்குபற்ற விரும்பும் அனைவரும் 26.04.2024 (Apr 26,2024) வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12:00 மணிக்கு முன்னதாக தமது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புதல் வேண்டும்.

தேர்தல் எதிர்வரும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொது சபை கூட்டத்தின் (28.04.2024) போது நடைபெறும்.

இத் தேர்தலில் தெரிவு செய்பவரின் பதவிக்காலம் தேர்தல் தினத்தில் இருந்து 2026 ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடையும்.

பொது சபை அந்தஸ்த்தில் உள்ள ஒருவர் எத்தனை பதவிக்களுக்கும் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் அவர் விண்னப்பித்த பதவிகளில் எதாவது ஒரு பதவிக்கு தேர்தலின் போது தெரிவு செய்யப்பட்டால், அதன் பின்பு வரும் பதவிகளுக்குகான அவருடைய விண்ணப்பங்கள் பரிசீலன செய்யப்படமாட்டாது. தெரிவு செய்யப்பட்ட பதவியில் இருந்து, குறித்த நபர் தன்னை விலக்கிக் கொண்டாலும் மற்றும் பதவிகளுக்கான போட்டியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டதாகவே கருதப்படும்.

குறித்த பதவிக்கு ஒன்றிற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றால் வாக்கெடுப்பு மூலம் தெரிவு இடம்பெறும்.

குறித்த ஒரு பதவிக்கு விண்ணப்பம் கிடைத்திருந்தும், தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்னதாக யாராவது ஒருவர் விண்னப்பத்தினை வாபஸ் செய்தால், அப் பதவிக்கு கூட்டத்தில் சமூகமளித்த பொது சபை உறுப்பினர்கள் மத்தியிலிருந்து தெரிவு செய்யப்படுவர்.

மேற் குறித்த பதவிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாத பதவிகளிற்கான தெரிவு மட்டுமே கூட்டத்தில் சமூகமளித்த பொது சபை உறுப்பினர்கள் மத்தியிலிருந்து இடம்பெறும்.

குறிப்பு:

கணக்காய்வாளர் பொது சபை அங்கத்தவர்களினால் கூட்டத்தில் சமூகமளித்த பொது சபை உறுப்பினர்கள் மத்தியிலிருந்து நியமிக்கப்படுவார்.

விண்ணப்ப படிவத்தில் உள்ள சகல கேள்விகளுக்குமான பதில்களும் நிரப்பப்பட வேண்டும். விண்ணப்பதாரிக்கு பொருத்தமற்ற வினாக்கள் இருப்பின் N/A என குறிப்பிட வேண்டும்.

விண்ணப்ப படிவங்களை 26.04.2024 (Apr 26, 2024) வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12:00 மணிக்கு முன்னதாக ckcaelection2024@karainagar.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். விண்ணப்பபடிவங்கள் ஒப்பம் இடப்பட்டிருக்க வேண்டும்.

நன்றி

          திட்டமிடல் போசகர் சபை
கனடா காரை கலாச்சார மன்றம்.

 

விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ள தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://karainagar.com/pages/wp-content/uploads/2024/04/CKCA-Election-Application-2024.pdf

 

 

கனடா காரை கலாச்சார மன்றம் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும். (28.04.2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணி)

கனடா காரை கலாச்சார மன்றம்

பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்.

(28.04.2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணி)

கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்டமும் 2024/2025 ஆண்டிற்குரிய புதிய நிர்வாக சபை தெரிவு ஆகியன 28.04.2024 ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் 2023ம், 2024ம் ஆண்டுக்குரிய அங்கத்தவர்கள் அனைவரும் பங்குபற்றலாம். ஆனாலும் 2024ம் ஆண்டுக்குரிய அங்கத்துவ பணத்தினை குறைந்தபட்சம் பொதுக்கூட்டத்திற்கு 3 நாட்களிற்கு முன்னர் செலுத்தி தமது அங்கத்துவத்தினை புதுப்பித்துக் கொண்டவர்கள் மட்டுமே அமையவுள்ள புதிய நிர்வாக சபையில் அங்கம் வகிக்கும் தகைமை பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.

அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள விரும்புவர்கள் கீழே உள்ள படிவத்தை நிரப்பி அத்துடன் உடனடியாக karainagar@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு e-Transfer மூலம் பணத்தினை ($20.00) செலுத்தலாம். மேலும் மன்ற மின்னஞ்சல் Karainagar@gmail.com என்ற முகவரியுடன் தொடர்புகொண்டு தங்கள் அங்கத்துவதை பெற்றுக்கொள்ளலாம்.

நிர்வாக சபை பதவிக்கான அறிவித்தல் மற்றும் நிகழ்ச்சி நிரல் பின்னர் மன்ற இணையத்தளத்தில் எடுத்துவரப்படும்.

காலமும் நேரமும்: 28.04.2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணி

இடம்: Scarborough Civic Centre
Committee Rooms 1 & 2

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வளர்ச்சியிலும், கனடா வாழ் காரைநகர் மக்களின் ஒற்றுமையிலும், காரை மண்ணின் வளர்ச்சியில் அக்கறையும் ஆர்வமும்கொண்டுள்ள அனைத்து கனடா வாழ் காரை மக்களும் குறைந்தபட்சம் பொதுக்கூட்டத்திற்கு மூன்று தினங்களிற்கு முன்னர் அங்கத்துவ பணத்தினை செலுத்தி இப்பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி

                              நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள விரும்புவர்கள் கீழே உள்ள இணைப்பை அழுத்தி அதில் உள்ள படிவத்தை நிரப்பி Karainagar@gmail.com என்ற மன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

https://karainagar.com/pages/wp-content/uploads/2024/02/CKCA-MEMBERSHIP-FORM-.pdf

 

கனடா-காரை கலாசார மன்றத்துக்கும் அதன் செயற்பாட்டாளர்களுக்கும்  காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கும் எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குத் தொடர்பிலான கலந்துரையாடலும் ஆலோசனைக் கூட்டமும்.

கனடா-காரை கலாசார மன்றத்துக்கும்

அதன் செயற்பாட்டாளர்களுக்கும்  

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கும்

எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குத் தொடர்பிலான

கலந்துரையாடலும் ஆலோசனைக் கூட்டமும்.

கனடா-காரை கலாசார மன்றத்துக்கும் அதன் செயற்பாட்டாளர்களுக்கும் காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கும்  எதிராக நஸ்டஈடு கோரி திரு.முத்து பொன்னம்பலம் என்பவரால் ஒன்ராறியயோ உயர் நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு மன்றத்தினதும் காரைநகர் மக்களினதும் நலன்களை நிலைநாட்டும் வகையில் எதிர்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வழக்குத் தொடர்பில் தெளிவான புரிதலை பொது மக்களுக்கு ஏற்படுத்துவதும் அதற்குச் செலவு செய்யப்படும் நிதி தொடர்பில் தவறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் உண்மை நிலை குறித்து பொது மக்களுக்கு விளக்கமளிக்கப்பட வேண்டியதும் மன்றத்தின் பொறுப்பும் கடமையுமாகும். கனடா-காரை கலாசார மன்றத்தின் ஈராண்டுப் பொதுக் கூட்டம் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இக்கூட்டத்தில் இவ்வழக்குத் தொடர்பிலான உறுதியான தீர்மானம் எடுக்கப்படவேண்டியுள்ளது.

எனவே மேற்குறித்த அனைத்து விடயங்களுக்காகவும் ஓர் ஆலோசனைக் கூட்டத்தினையும் கலந்துரையாடலையும் நடாத்தி நடைபெறவுள்ள ஈராண்டுப் பொதுக் கூட்டத்தில் சமர்ப்பிப்பதற்கான முன்மொழிவினை தயார் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கானது மன்றத்தினதும் அதன் செயற்பாட்டாளர்களினதும் நலன்களை மட்டுமல்லாது  காரைநகர் மக்களினதும் நலன்களை பாதிப்பதாகவுள்ளதால் கனடா வாழ் காரை மக்களை இதில் கலந்துகொண்டு மன்றத்தையும் அதன் செயற்பாட்டாளர்களையும் பாதுகாக்க உதவுவதுடன் மண்ணின் செயற்பாட்டாளர்கள் எவ்வித தயக்கமோ அச்சமோ இன்றி மண்ணுக்கான பணியில் ஈடுபடுகின்ற நிலையினை ஏற்படுத்த ஆதரவளிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

காலமும் நேரமும்: 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணி

இடம்: Scarborough Civic Centre
Committee Rooms 1 & 2

                              நிர்வாகம்
கனடா-காரை கலாசார மன்றம்.

 

கனடா காரை கலாச்சார மன்றம் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்.

கனடா காரை கலாச்சார மன்றம்

பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்டமும் 2024/2025 ஆண்டிற்குரிய புதிய நிர்வாக சபை தெரிவு ஆகியன இடம்பெறவுள்ளது. நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் 2023ம், 2024ம் ஆண்டுக்குரிய அங்கத்தவர்கள் அனைவரும் பங்குபற்றலாம். ஆனாலும் 2024ம் ஆண்டுக்குரிய அங்கத்துவ பணத்தினை குறைந்தபட்சம் பொதுக்கூட்டத்திற்கு 3 நாட்களிற்கு முன்னர் செலுத்தி தமது அங்கத்துவத்தினை புதுப்பித்துக் கொண்டவர்கள் மட்டுமே அமையவுள்ள புதிய நிர்வாக சபையில் அங்கம் வகிக்கும் தகைமை பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.

அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள விரும்புவர்கள் கீழே உள்ள படிவத்தை நிரப்பி அத்துடன் உடனடியாக karainagar@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு e-Transfer மூலம் பணத்தினை ($20.00) செலுத்தலாம். மேலும் மன்ற மின்னஞ்சல் Karainagar@gmail.com என்ற முகவரியுடன் தொடர்புகொண்டு தங்கள் அங்கத்துவதை பெற்றுக்கொள்ளலாம்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவிற்கான அறிவித்தல் (காலம், இடம்) கூடிய விரைவில் அறியத்தரப்படும்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வளர்ச்சியிலும், கனடா வாழ் காரைநகர் மக்களின் ஒற்றுமையிலும், காரை மண்ணின் வளர்ச்சியில் அக்கறையும் ஆர்வமும் கொண்டுள்ள அனைத்து கனடா வாழ் காரை மக்களும் குறைந்தபட்சம் பொதுக்கூட்டத்திற்கு மூன்று தினங்களிற்கு முன்னர் அங்கத்துவ பணத்தினை செலுத்தி இப்பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி

                             நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

 

அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள விரும்புவர்கள் கீழே உள்ள இணைப்பை அழுத்தி அதில் உள்ள படிவத்தை நிரப்பி Karainagar@gmail.com என்ற மன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

https://karainagar.com/pages/wp-content/uploads/2024/02/CKCA-MEMBERSHIP-FORM-.pdf

 

 

கனடா-காரை கலாசார மன்றத்தின் புதிய நிர்வாகசபை சிவசம்பு சிவநாதன் அவர்களின் தலைமையில் அமையப் பெற்றுள்ளது.

 

கனடா-காரை கலாசார மன்றத்தின் புதிய நிர்வாகசபை சிவசம்பு சிவநாதன் அவர்களின் தலைமையில் அமையப் பெற்றுள்ளது.

கனடா-காரை கலாசார மன்றத்தின் புதிய நிர்வாக சபையைத் தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் இன்று முற்பகல் 10.00 மணிக்கு ஸ்காபுரோ Civic Centreஇல் சங்கத்தின் உப- தலைவரான திரு.சபாரத்தினம் பாலச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. செயற்பாட்டு அறிக்கை, வரவு-செலவு அறிக்கை என்பன முறையே செயலாளர் திரு.ஆறுமுகம் சின்னத்தம்பி, பொருளாளர் திருமதி இந்திரா ஜெயானந்தன் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்டு பொதுச் சபையினால் திருத்தங்களின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தலைவர் முன்னுரையைத் தொடர்ந்து சங்கத்தினால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத் திட்டங்கள் மற்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் ஆகியன தொடர்பில் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் உறுப்பினர்கள் மத்தியில் இடம்பெற்றன. மன்றத்திற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழங்குத் தொடர்பில் தலைவர் விளக்கமளித்ததுடன் இவ்வழக்கினை கையாள்வதற்கு திரு.சபாரத்தினம் பாலச்சந்திரன், திரு.கந்தையா கனகராசா, திரு.தம்பிஐயா பரமானந்தராசா ஆகியோர் பொதுச் சபையினால் நியமனம் செய்யப்பட்டனர். நடைமுறையில் நிர்வாகரீதியாக ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளைக் கருத்தில்கொண்டு சங்கத்தின் யாப்பினை மறுசீரமைத்து தேவையான திருத்தங்களைச் செய்வதற்கு; பொதுச் சபை அங்கீகாரமளித்தது.

புதிய நிர்வாக சபைத் தெரிவினை திட்டமிடல் போசகர் சபை உறுப்பினர் திரு.சோமசுந்தரம் கணேசபிள்ளை அவர்கள் நடாத்தி வைத்தார். தலைவர், பொருளாளர், உதவிச் செயலாளர், ஆகிய பதவிகளிற்கு தலா ஒவ்வொருவரிடமிருந்தும் செயலாளர் பதவிக்கு இருவரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதாக திரு.கணேசபிள்ளை அறிவித்தார். தலைவராக திரு.சிவசம்பு சிவநாதன் அவர்களும், பொருளாளராக திரு.சோமசுந்தரம் கிருஸ்ணரட்ணம் அவர்களும் உதவிச் செயலாளராக திரு.தம்பிராசா ஜெயச்சந்திரன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அறிவித்த பின்னர் செயலாளர் பதிவிக்கான தெரிவினை வாக்கெடுப்பு மூலமாக நடாத்த முற்பட்டவேளை இப்பதவிக்கு விண்ணப்பித்திருந்த திரு.பிரமேந்திரதீசன் திரவியநாதன் தனது விண்ணப்பத்தினை மீளப் பெற்றுக்கொள்வதாக அறிவித்த நிலையில் விண்ணப்பித்த திருமதி நாகேஸ்வரி சிவகுமார் செயலாளராக ஏகமனதாகத் தெரிவானார். நிர்வாக சபையிலுள்ள ஏனைய பதவிகளிற்கான தெரிவுகள் சமூகமளித்திருந்த உறுப்பினர்கள் மத்தியிலிருந்து நடைபெற்றன. அனைத்துத் தெரிவுகளும் போட்டியின்றி ஏகமனதாகவே நடைபெற்றிருந்தன.

இளையோரை ஒருங்கிணைத்து செயற்பட முன்வந்த பல்கலைக்கழக மாணவியான செல்வி சகானா குணரத்தினம் அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பொதுச் சபை அந்தச் செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு அங்கீகாரமளித்தது.

தெரிவுசெய்யப்பட்ட முழுமையான நிர்வாக சபை விபரம்:

தலைவர்: திரு.சிவசம்பு சிவநாதன்
உப-தலைவர்: கனக சிவகுமாரன்
செயலாளர்: திருமதி நாகேஸ்வரி சிவகுமார்
உதவிச் செயலாளர்: திரு.தம்பிராசா ஜெயச்சந்திரன்
பொருளாளர்: திரு.சோமசுந்தரம் கிருஸ்ணரட்ணம்
நிர்வாக உறுப்பினர்கள்:
திரு.தம்பிஐயா பரமானந்தராசா
திருமதி ஞானாம்பிகை குணரத்தினம்
திரு.பிரமேந்திரதீசன் திரவியநாதன்
திரு.மனோகரன் அரியரத்தினம்

செல்வி சகானா குணரத்தினம் (இளையோர் ஒருங்கிணைப்பாளர்)

கணக்காய்வாளர்: திரு.பஞ்சலிங்கம் கந்தையா.

திட்டமிடல் போசகர் சபை உறுப்பினர்களாக பினவருவோர் தெரிவானார்கள்:

திரு.சபாரத்தினம் பாலச்சந்திரன்
திரு.சோமசுந்தரம் கணேசபிள்ளை
திரு.நற்குணம் பாலேந்திரன்

தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டு உரையாற்றிய திரு.சிவநாதன் அவர்கள் தற்போது கனடா-காரை கலாசார மன்றத்தின் உறுப்பினர்கள் மத்தியில் நிலவுகின்ற முரண்பாடுகளைத் தீர்த்து வைத்து அனைவரும் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே தான் தலைவர் பதவியை ஏற்க முன் வந்ததாகவும் புதிய நிர்வாகம் ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சிக்கு முன்னுரிமை அளித்துச் செயலாற்றும் எனவும் குறிப்பிட்டதுடன் தமது முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைப்பை வழங்க முன்வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

 

 

கனடா காரை கலாச்சார மன்றம் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் – (2022) வாகனத் தரிப்பிடம் பற்றிய முக்கிய அறிவித்தல்!

கனடா காரை கலாச்சார மன்றம்

பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் – 2022

இடம்: ஸ்காபுரோ சிவிக் சென்டர் (Scarborough Civic Centre)
150 Borough Dr, Scarborough, ON M1P 4N7

காலம்: 24.09.2022 (Sep 24, 2022) சனிக்கிழமை

நேரம்: காலை 9.00 மணிக்கு

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் 24.09.2022 (Sep 24, 2022) சனிக்கிழமை அன்று காலை 9:00 மணிக்கு ஸ்காபுரோ சிவிக் சென்டர் (Scarborough Civic Centre) மண்டபத்தில் நடைபெற உள்ளது.

வாகனங்களில் வருபவர்கள் ஸ்காபுரோ சிவிக் சென்டர் மண்டப வாகனத் தரிப்பிடங்களில் இலவசமாக உங்கள் வாகனங்களை நிறுத்தி வைக்க முடியும் என்பதனை அறியத் தருகின்றோம்.

CKCA’s Annual General Meeting 24.09.2022
Scarborough Civic Centre – Parking Arrangement
Town Centre Court Entrance
Go To the Gate
Level One
Press the Buzzer – Security will allow us to park (as our meeting schedule has been notified to the security.

                  நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக செயற்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் 24.09.2022 (Sep 24, 2022)

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக செயற்குழு

உறுப்பினர் பதவிக்கான தேர்தல் 24.09.2022 (Sep 24, 2022)

கனடா  காரை கலாச்சார மன்ற நிர்வாக  சபை / போஷகர்  சபை / கணக்காய்வாளர்

2022 – 2023 அங்கத்தவர்கள் தேர்வுக்கான  பொதுத் தேர்தல்.

நடைமுறை வழிகாட்டல் ஆவணம்

பின்வரும் நிர்வாக செயற்குழு உறுப்பினர் பதவிகளிற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

  1. தலைவர்
  2. உப தலைவர்
  3. செயலாளர்
  4. உப செயலாளர்
  5. பொருளாளர்
  6. உப பொருளாளர்
  7. 13 நிர்வாக சபை உறுப்பினர்கள்
  8. 6 தயார்நிலை உறுப்பினர்கள்

கனடாவில் வதியும் காரைநகருடன் தொடர்புடைய 18 வயதிற்கு மேற்பட்ட இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். இத் தேர்தலில் பங்கு பற்றி போட்டியிடும் உரிமையும், வாக்களிக்கும் உரிமையும் 2021, 2022ம் ஆண்டிற்கான வருட சந்தா கட்டி அங்கத்துவம் பெற்று, பொது சபை உறுப்பினர் அந்தஸ்த்தில் உள்ள அனைவருக்கும் உண்டு. ஆனாலும் 2022ம் ஆண்டுக்குரிய அங்கத்துவ பணத்தினை குறைந்தபட்சம் பொதுக்கூட்டத்திற்கு 3 நாட்களிற்கு முன்னர் செலுத்தி தமது அங்கத்துவத்தினை புதுப்பித்துக் கொண்டவர்கள் மட்டுமே அமையவுள்ள புதிய நிர்வாக சபையில் அங்கம் வகிக்கும் தகைமை பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.

சேவை மனப்பான்மை உடைய அனைவரும் எந்த பதவிகளுக்கும் விண்ணப்பம் செய்யலாம்.

மேற்படி தேர்தலில் பங்குபற்ற விரும்பும் அனைவரும் 22.09.2022 (Sep 22, 2022) வியாழக்கிழமை  நள்ளிரவு 12:00 மணிக்கு முன்னதாக தமது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புதல் வேண்டும்.

தேர்தல் எதிர்வரும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொது சபை கூட்டத்தின் ( 24.09.2022)  போது நடைபெறும்.

இத் தேர்தலில் தெரிவு செய்பவரின் பதவிக்காலம் தேர்தல் தினத்தில் இருந்து 2024 ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடையும்.

பொது சபை அந்தஸ்த்தில் உள்ள ஒருவர் எத்தனை பதவிக்களுக்கும் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் அவர் விண்னப்பித்த பதவிகளில் எதாவது ஒரு பதவிக்கு தேர்தலின் போது தெரிவு செய்யப்பட்டால், அதன் பின்பு வரும் பதவிகளுக்குகான அவருடைய விண்ணப்பங்கள் பரிசீலன செய்யப்படமாட்டாது. தெரிவு செய்யப்பட்ட பதவியில் இருந்து, குறித்த நபர் தன்னை விலக்கிக் கொண்டாலும் மற்றும் பதவிகளுக்கான போட்டியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டதாகவே கருதப்படும்.

குறித்த பதவிக்கு ஒன்றிற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றால் வாக்கெடுப்பு மூலம் தெரிவு இடம்பெறும்.

குறித்த ஒரு பதவிக்கு விண்ணப்பம் கிடைத்திருந்தும், தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்னதாக யாராவது ஒருவர் விண்னப்பத்தினை வாபஸ் செய்தால், அப் பதவிக்கு தேர்தல் மண்டபத்தில் வைத்தும் விண்ணப்ப படிவம் ஏற்றுக் கொள்ளப்படும்.

மேற் குறித்த பதவிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாத பதவிகளிற்கான தெரிவு மட்டுமே கூட்டத்தில் சமூகமளித்த பொது சபை உறுப்பினர்கள் மத்தியிலிருந்து இடம்பெறும்.

குறிப்பு:

ஐந்து திட்டமிடல் போஷகர் சபை உறுப்பினர்கள் மற்றும் கணக்காய்வாளர் பொது சபை அங்கத்தவர்களினால் கூட்டத்தில் சமூகமளித்த பொது சபை உறுப்பினர்கள் மத்தியிலிருந்து தெரிவு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப படிவத்தில் உள்ள சகல கேள்விகளுக்குமான பதில்களும் நிரப்பப்பட வேண்டும். விண்ணப்பதாரிக்கு பொருத்தமற்ற வினாக்கள் இருப்பின் N/A என குறிப்பிட வேண்டும்.

விண்ணப்ப படிவங்களை 22.09.2022 (Sep 22, 2022) வியாழக்கிழமை  நள்ளிரவு 12:00 மணிக்கு முன்னதாக ckcaelection2022@karainagar.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். விண்ணப்பபடிவங்கள் ஒப்பம் இடப்பட்டிருக்க வேண்டும்.

நன்றி

       திட்டமிடல் போசகர் சபை

கனடா காரை கலாச்சார மன்றம்

 

 விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ள தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2022/09/CKCA-ELECTION-APPLICATION-FORM-2022.pdf

 

கனடா காரை கலாச்சார மன்றம் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் – (நிகழ்ச்சி நிரல்) Sep 24, 2022 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு

கனடா காரை கலாச்சார மன்றம்

பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் – 2022

இடம்: ஸ்காபுரோ சிவிக் சென்டர் (Scarborough Civic Centre)
150 Borough Dr, Scarborough, ON M1P 4N7

காலம்: 24.09.2022 (Sep 24, 2022) சனிக்கிழமை

நேரம்: காலை 9.00 மணிக்கு

நிகழ்ச்சி நிரல்

1. அங்கத்தவர்கள் பதிவும் அங்கத்தவர்கள் தமது கருத்துக்களை தெரிவிக்க நேரம் பதிவு செய்தலும்.

2. கடவுள் வணக்கம்

3. அகவணக்கம்

4. உப தலைவர் உரை

5. செயலாளர் அறிக்கைகள்(சென்ற பொதுக்கூட்ட அறிக்கை, செயற்பாட்டு அறிக்கை)

6. பொருளாளர் அறிக்கை

7. புதிய நிர்வாக சபை தெரிவு

தலைவர், உபதலைவர், செயலாளர், உபசெயலாளர், பொருளாளர், உபபொருளாளர், 13 நிர்வாக சபை உறுப்பினர்கள், 6 தயார்நிலை உறுப்பினர்கள், 5 திட்டமிடல் போஷகர் சபை உறுப்பினர்கள், கணக்காய்வாளர்.

8. 1. நிர்வாக சபையின் பதவிக்காலத்தில் மன்றத்தின் அங்கத்தவர்கள் நிர்வாகத்தில் தலையீடு செய்து நிர்வாகத்தினை குழப்ப முயற்சி செய்தலை முற்றாக தவிர்க்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றுதல்.

     2. மன்றத்திற்கு எதிராகவும், மன்ற உறுப்பினர்கள் சிலருக்கு எதிராகவும் திரு.முத்து பொன்னம்பலம் என்பவரால் நஸ்டஈடு கோரி ஒன்ராறியோ உயர் நீதிமன்றில் ( Ontario Superior Court Justice) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மன்ற நிர்வாகத்தால் மன்ற அங்கத்தவர்களுக்கு விளங்கப்படுத்தலும் தீர்மானம் நிறைவேற்றுதலும் மற்றும் உபகுழு நியமித்தல்.

9. அங்கத்தவர்கள் கருத்துக்களை தெரிவித்தல் மற்றும் வேறு பிரேரணைகளும் தீர்மானம் நிறைவேற்றுதலும்

10. அங்கத்தவர் வருட சந்தா மற்றும் ஆயுள் சந்தா பணம் தீர்மானித்தல்

11. புதிய நிர்வாக சபைத் தலைவர் உரை

12. புதிய நிர்வாக சபையின் எதிர்கால திட்டங்கள்

13. புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் புகைப்படம் எடுத்தல்

14. நன்றியுரை

                 நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

 

கனடா காரை கலாச்சார மன்றம் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்!

கனடா காரை கலாச்சார மன்றம்

பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்டமும் 2022/2023 ஆண்டிற்குரிய புதிய நிர்வாக சபை தெரிவு ஆகியன இடம்பெறவுள்ளது. நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் 2021ம், 2022ம் ஆண்டுக்குரிய அங்கத்தவர்கள் அனைவரும் பங்குபற்றலாம். ஆனாலும் 2022ம் ஆண்டுக்குரிய அங்கத்துவ பணத்தினை குறைந்தபட்சம் பொதுக்கூட்டத்திற்கு 3 நாட்களிற்கு முன்னர் செலுத்தி தமது அங்கத்துவத்தினை புதுப்பித்துக் கொண்டவர்கள் மட்டுமே அமையவுள்ள புதிய நிர்வாக சபையில் அங்கம் வகிக்கும் தகைமை பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.

அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள விரும்புவர்கள் கீழே உள்ள படிவத்தை நிரப்பி அத்துடன் உடனடியாக karainagar@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு e-Transfer மூலம் பணத்தினை ($20.00) செலுத்தலாம். மேலும் மன்ற மின்னஞ்சல் Karainagar@gmail.com என்ற முகவரியுடன் தொடர்புகொண்டு தங்கள் அங்கத்துவதை பெற்றுக்கொள்ளலாம்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவிற்கான அறிவித்தல் (காலம், இடம்) கூடிய விரைவில் அறியத்தரப்படும்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வளர்ச்சியிலும், கனடா வாழ் காரைநகர்மக்களின் ஒற்றுமையிலும், காரை மண்ணின் வளர்ச்சியில் அக்கறையும் ஆர்வமும்கொண்டுள்ள அனைத்து கனடா வாழ் காரை மக்களும் மூன்று தினங்களிற்குமுன்னர் அங்கத்துவ பணத்தினை செலுத்தி இப்பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி

                  நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

 

குறிப்பு : அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள விரும்புவர்கள் கீழே உள்ள படிவத்தை நிரப்பவும்.

CANADA KARAI CULTURAL ASSOCIATION APPLICATION FOR MEMBERSHIP 2022

 

Verification

கனடா காரை கலாச்சார மன்றம் பொதுக்கூட்ட நேர மாற்றம்

கனடா காரை கலாச்சார மன்றம்

பொதுக்கூட்ட நேர மாற்றம்

ஆவணி 16 2021 அறிவித்தற்கமைய பொதுக்கூட்டம் நடைபெறும்.

தவிர்க்க முடியாத காரணங்களால் கூட்டம் தொடங்கும் நேரம் 3 மணியிலிருந்து 4.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இடம்: parking lot shed, 7200 Markham Road,Markham,ON

காலம்: 29.08.2021 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: மாலை 4.30 மணி

 

                   நிர்வாகம்

கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றம் ஈராண்டுக்கான பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் – 2021

கனடா காரை கலாச்சார மன்றம்

ஈராண்டுக்கான பொதுக்கூட்டமும்

புதிய நிர்வாக சபை தெரிவும் – 2021

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஈராண்டுக்கான பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் 29.08.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது. நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் 2020,2021ம் ஆண்டுகளுக்கான சந்தா பணம் செலுத்திய அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

குறிப்பு : (கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்ட தொடர்பான அறிவித்தல் மன்ற இணையத்தளத்தில் மார்ச் 12, 2021, ஆகஸ்ட் 08, 2021 ஆகிய திகதிகளில் அறியத்தந்திருந்தோம்.)

இடம்: parking lot shed, 7200 Markham Road,Markham,ON

காலம்: 29.08.2021 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: மாலை 3.00 மணி

மேலதிக தொடர்புகளுக்கு: தலைவர் திரு.சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம் தொலைபேசி இலக்கம் 1 226 343 1435, மன்ற மின்னஞ்சல் karainagar@gmail.com ஊடாக தொடர்பு கொள்ளலாம்.

நன்றி

 

                   நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

பொது அறிவித்தல்

பொது அறிவித்தல்

கனடா காரை கலாச்சார மன்ற பொதுக்கூட்டம் விரைவில் நடைபெறவிருப்பதால் 2020, 2021ம் ஆண்டுகளுக்கான மன்ற அங்கத்துவ சந்தாப்பணம் செலுத்தாதோர் உடனடியாக karainagar@gmail.com  என்ற மின்னஞ்சலுக்கு e-Transfer மூலம் அனுப்பவும்.

                  நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்ற பொதுக்கூட்ட அறிவித்தல்!

கனடா காரை கலாச்சார மன்ற பொதுக்கூட்ட அறிவித்தல்

கனடா காரை கலாச்சார மன்றம் இப்போதுள்ள நிர்வாகசபையினது பதவிக்காலம் (இரண்டு ஆண்டுகள்) இவ்வாண்டு (2021) பங்குனி(March)இருபத்தி மூன்றாம் திகதியுடன் நிறைவடைகிறது.
கோவிட் 19 தாக்கத்தினால் அரசாங்கம் முடக்கநிலை அமுலாக்கியுள்ள சூழல் உருவாகியிருப்பது யாவரும் அறிந்த விடயம். ஆகவே மன்ற பொதுக்கூட்டத்தை ஒழுங்கமைக்க முடியாதுள்ளது. எனவே முடக்கநிலை தளர்வடைந்த பின்னர் பொதுக்கூட்டத்தை ஒழுங்கமைப்பதாக நிர்வாகசபை தீர்மானித்துள்ளது.

நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 2019/2020 ஈராண்டுக்கான புதிய நிர்வாகசபை தெரிவாகியுள்ளது

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 2019/2020 ஈராண்டுக்கான

புதிய நிர்வாகசபை தெரிவாகியுள்ளது

கனடா  காரை கலாச்சார மன்றத்தின் பொதுக் கூட்டமும் மற்றும்  புதிய நிர்வாகசபை தெரிவும் 24-03-2019 அன்று மாலை 2.30 மணியளவில்  பெரிய சிவன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.  திரு .க .சிவகுமாரன் அவர்களின்  தேவார ஓதுதலுடன் கூட்டம்  ஆரம்பமாகியது.  இக்கூட்டத்திற்கு  இருபது உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர்.

தலைவர்  திரு . ச. பாலச்சந்திரன் தனதுரையில் காரைநகருக்கான  பயணத்தின்போது  அவதானித்த விடயங்களையும்,  செயல்படுத்தவேண்டிய   விடயங்களையும் விதந்துரைத்தார்.  அத்துடன் மன்றத்தின் 2017/2018 காலப்பகுதிகளில் காரை  அபிவிருத்தி சபையூடாக  ஆற்றிய  தேவையான அடிப்படை வாழ்வாதார உதவிகள்,  பல்கலைக்கழக மாணவர்களின்  மேற்படிப்புக்கான கல்வியுதவி,  மன்றத்தின்  நிரந்தர வைப்பிலிடப்பட்ட தொகை மற்றும் அதனால் கிடைக்கப்பெறுகின்ற வட்டித்தொகை,  மன்றத்தினால் சிறப்பான முறையில் நடைபெற்ற  வழமையான நிகழ்வுகள்  போன்ற  பல்வேறு  விடயங்களை  விளக்கமாக விபரித்தார்.

அதனைத்தொடர்ந்து  ஈராண்டுக்காலப்பகுதிக்குரிய   செயற்பாட்டு அறிக்கை மற்றும் கணக்கறிக்கை சமர்பிக்கப்பட்டன.  சபையோர் மத்தியில் சிறுவிளக்கமான  திருத்தம் சுட்டிக்காட்டப்பட்டது.   அதன் பின்னராக  அறிக்கைகள் இரண்டும் சபையோர்  அனைவராலும் ஏகமனதாக  ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பொது சபை உறுப்பினர் திரு . க .கனகராசா அவர்கள் மன்றம் பன்னிரெண்டு ஆரம்ப பாடசாலைகளுக்கு உதவிய நீண்டகால திட்டம் மற்றும் அதன் பயன்பாடு பற்றி  எடுத்துரைத்தார். அதே போன்று  அண்மைக்காலத்தில் நீர் வளத்தையும் , நிலவளத்தையும் இணைத்து  பல்வேறு இடங்களில் நீர்த்தேக்கங்களை  உருவாக்கி இளம் விவசாயிகள் கழகம் மேற்கொள்ளும் நீண்டகால பயனுள்ள திட்டங்களுக்கு  மன்றம் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அத்துடன் மன்ற நிர்வாக சபையினரின் கடந்த இரண்டு வருட கால பணியை மனதார பொதுச்சபை உறுப்பினர்கள் அனைவர் சார்பாகவும்  பாராட்டினார்.

அதற்கடுத்ததாக போசகர் சபை சார்பாக  திரு .சோ.கணேசபிள்ளை புதிய நிர்வாக சபை தெரிவை சுமுகமான முறையில் நடாத்தினார்.பொதுச்சபையின் தீர்மானத்திற்கமைய பின்வருவோர் நிர்வாக சபைக்கு  தெரிவு செய்யப்பட்டிருந்தனர்

தலைவர்  :- திரு . சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம்

உப – தலைவர்  :- திரு. சபாரத்தினம் பாலச்சந்திரன்

செயலாளர் : – திரு. ஆறுமுகம் சின்னத்தம்பி

உதவிச் செயலாளர் :-  திரு நற்குணம் பாலேந்திரன்

பொருளாளர் :- திருமதி. இந்திராதேவி ஜெயானந்தன்

நிர்வாக உறுப்பினர்கள் :- திரு .கிருஷ்ணரத்தினம் சோமசுந்தரம்

திரு. கந்தையா சேனாதிராசா

திரு. மதனகுமார் குமாரரத்தினம்

திருமதி. நாகேஸ்வரி சிவகுமார்

 

திட்டமிடல் போசகர் சபை உறுப்பினர்கள்: – திரு . ஸ்ரீ நவசஜேந்திரன் நவரத்தினம்

திரு. விஜயரத்தினம் பிரசாந்தன்

திரு. சோமசுந்தரம் கணேசபிள்ளை

நிர்வாகசபைத்  தெரிவை தொடர்ந்து  திரு . சிவநாதன் அவர்களின் நன்றி தெரிவித்தலுடன்,  கூட்டம் இனிதே  நிறைவு பெற்றது.

 

2019/2020 ஆம் ஆண்டுக்குரிய புதிய நிர்வாக சபையினரின் புகைப்படம் கீழே  எடுத்து வரப்படுகின்றது.

.

கனடா காரை கலாச்சார மன்றம் 2019/2020 நிர்வாக செயற்குழு தெரிவிற்கான தேர்தல் அறிவித்தலும் விண்ணப்ப படிவமும்

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக செயற்குழு

உறுப்பினர் பதவிக்கான தேர்தல் 24.03.2019

 

கனடா  காரை கலாச்சார மன்ற நிர்வாக  சபை / போஷகர்  சபை / கணக்காய்வாளர்

2019 – 2020 அங்கத்தவர்கள் தேர்வுக்கான  பொதுத் தேர்தல்.

நடைமுறை வழிகாட்டல் ஆவணம்

பின்வரும் நிர்வாக செயற்குழு உறுப்பினர் பதவிகளிற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
1. தலைவர்
2. உப தலைவர்
3. செயலாளர்
4. உப செயலாளர்
5. பொருளாளர்
6. உப பொருளாளர்
7. 13 நிர்வாக சபை உறுப்பினர்கள்
8.   6 தயார்நிலை உறுப்பினர்கள்

 

  1. கனடாவில் வதியும் காரைநகருடன் தொடர்புடைய 18 வயதிற்கு மேற்பட்ட இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். இத் தேர்தலில் பங்கு பற்றி போட்டியிடும் உரிமையும், வாக்களிக்கும் உரிமையும்2018, 2019ம் ஆண்டிற்கான வருட சந்தா கட்டி அங்கத்துவம் பெற்று, பொது சபை உறுப்பினர் அந்தஸ்த்தில் உள்ள அனைவருக்கும் உண்டு. ஆனாலும் 2019ம் ஆண்டுக்குரிய அங்கத்துவ பணத்தினை குறைந்தபட்சம் பொதுக்கூட்டத்திற்கு 3 நாட்களிற்கு முன்னர் செலுத்தி தமது அங்கத்துவத்தினை புதுப்பித்துக் கொண்டவர்கள் மட்டுமே அமையவுள்ள புதிய நிர்வாக சபையில் அங்கம் வகிக்கும் தகைமை பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.
  2. சேவை மனப்பான்மை உடைய அனைவரும் எந்த பதவிகளுக்கும் விண்ணப்பம் செய்யலாம்.
  3. மேற்படி தேர்தலில் பங்குபற்ற விரும்பும் அனைவரும் பங்குனி 16 , 2019 ம் திகதி நள்ளிரவு12:00 மணிக்கு முன்னதாக தமது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புதல் வேண்டும்.
  4. தேர்தல் எதிர்வரும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொது சபை கூட்டத்தின்(பங்குனி 24 , 2019) போது நடைபெறும்.
  5. இத் தேர்தலில் தெரிவு செய்பவரின் பதவிக்காலம் தேர்தல் தினத்தில் இருந்து 2021 ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடையும்.
  6. பொது சபை அந்தஸ்த்தில் உள்ள ஒருவர் எத்தனை பதவிக்களுக்கும் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் அவர் விண்னப்பித்த பதவிகளில் எதாவது ஒரு பதவிக்கு தேர்தலின் போது தெரிவு செய்யப்பட்டால், அதன் பின்பு வரும் பதவிகளுக்குகான அவருடைய விண்ணப்பங்கள் பரிசீலன செய்யப்படமாட்டாது. தெரிவு செய்யப்பட்ட பதவியில் இருந்து, குறித்த நபர் தன்னை விலக்கிக் கொண்டாலும் மற்றும் பதவிகளுக்கான போட்டியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டதாகவே கருதப்படும்.
  7. குறித்த பதவிக்கு ஒன்றிற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றால் வாக்கெடுப்பு மூலம் தெரிவு இடம்பெறும்.
  8. குறித்த ஒரு பதவிக்கு விண்ணப்பம் கிடைத்திருந்தும், தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்னதாக யாராவது ஒருவர் விண்னப்பத்தினை வாபஸ் செய்தால், அப் பதவிக்கு தேர்தல் மண்டபத்தில் வைத்தும் விண்ணப்ப படிவம் ஏற்றுக் கொள்ளப்படும்.
  9. மேற் குறித்த பதவிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாத பதவிகளிற்கான தெரிவு மட்டுமே கூட்டத்தில் சமூகமளித்த பொது சபை உறுப்பினர்கள் மத்தியிலிருந்து இடம்பெறும்.

 

குறிப்பு:

ஐந்து திட்டமிடல் போஷகர் சபை உறுப்பினர்கள் மற்றும் கணக்காய்வாளர் பொது சபை அங்கத்தவர்களினால் கூட்டத்தில் சமூகமளித்த பொது சபை உறுப்பினர்கள் மத்தியிலிருந்து தெரிவு செய்யப்படுவார்கள்.

  1. விண்ணப்ப படிவத்தில் உள்ள சகல கேள்விகளுக்குமான பதில்களும் நிரப்பப்பட வேண்டும். விண்ணப்பதாரிக்கு பொருத்தமற்ற வினாக்கள் இருப்பின் N/A என குறிப்பிட வேண்டும்.
  2. விண்ணப்ப படிவங்களைckcaelection2019@karainagar.comஎன்ற மின் அஞ்சல் முகவரிக்கு அல்லது PO BOX 32057 MILLIKEN CROSSING PO MARKHAM, ON, M1V 0E1 என்ற தபால் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். தபால் மூலம் அனுப்பும் விண்ணப்பங்கள் கால தாமதமானல் அதற்கு மன்றம் பொறுப்பு ஏற்கமாட்டாது. விண்ணப்பபடிவங்கள் ஒப்பம் இடப்பட்டிருக்க வேண்டும்.

நன்றி

 

       திட்டமிடல் போசகர் சபை

கனடா காரை கலாச்சார மன்றம்

 

விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ள தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2019/02/CKCA-ELECTION-APPLICATION-FORM-2019.pdf

 

 

 

 

CKCA ELECTION APPLICATION FORM – 2019

 

https://karainagar.com/pages/wp-content/uploads/2019/02/CKCA-ELECTION-APPLICATION-FORM-2019.pdf

 

கனடா காரை கலாச்சார மன்றம் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்

கனடா காரை கலாச்சார மன்றம்

பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்

கனடா காரை கலாச்சார மன்றத்தின்  2017/2018 ஈராண்டுக்  காலப்பகுதிக்குரிய நிர்வாக சபைக் காலம் நிறைவுக்கு வருகின்றது. ஆகையால் கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்டம்  மற்றும் 2019/2020 ஆண்டிற்குரிய புதிய நிர்வாக சபை தெரிவு ஆகியன இடம்பெறவுள்ளது. நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் 2018ம்,  2019ம் ஆண்டுக்குரிய அங்கத்தவர்கள் அனைவரும் பங்குபற்றலாம். ஆனாலும் 2019ம் ஆண்டுக்குரிய அங்கத்துவ பணத்தினை குறைந்தபட்சம் பொதுக்கூட்டத்திற்கு 3 நாட்களிற்கு முன்னர் செலுத்தி தமது அங்கத்துவத்தினை புதுப்பித்துக் கொண்டவர்கள் மட்டுமே அமையவுள்ள புதிய நிர்வாக சபையில் அங்கம் வகிக்கும் தகைமை பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.

அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள விரும்புவர்கள் 647.818.7443 மற்றும் 416.455.8836 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ அல்லது மன்ற மின்னஞ்சல் Karainagar@gmail.com என்ற முகவரியுடனோ தொடர்புகொண்டு தங்கள் அங்கத்துவதை பெற்றுக்கொள்ளலாம்.

இடம்:  பெரிய சிவன் கோவில்

               1148 Bellamy Rd N, Scarborough, ON M1H 1H2 (Bellamy & Ellesmere)

காலம்: 24.03.2019  ஞாயிற்றுக்கிழமை 

நேரம்: பிற்பகல் 2.30 மணி

பொதுக்கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் கூடிய விரைவில் அறியத்தரப்படும்.

தங்கள் பணியில்

                      நிர்வாகம்

  கனடா காரை கலாச்சார மன்றம்

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அவசர அறிவித்தல்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அவசர அறிவித்தல்

இந்த வாரத்தின் இறுதி நாட்களில் டொரண்டோ பெரும்பாகத்தில் ஏற்படவுள்ள அதிக பனிப்பொழிவு, கடுமையான உறைநிலை காரணமாக நடைபெறவிருந்த பொதுக் கூட்டம் மற்றும் நிர்வாகசபை தெரிவும் பிற்போடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம். இக்கூட்டம் மீண்டும் வருகின்ற பங்குனி மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணிக்கு பெரிய சிவன் ஆலயத்தில் நடைபெறும் என்பதையும் அறியத்தருகின்றோம்.

தயவு செய்து இக்கால இடை வெளியை பயன்படுத்தி கனடா காரை உறவுகள் அனைவரும் உங்களுடைய கனடா காரை கலாச்சார மன்றத்தின் இந்த வருடத்துக்கான அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். மேலதிக தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கங்கள் 647 818 7443, 416 455 8836 அல்லது மன்ற மின்னஞ்சல் karainagar@gmail.com என்ற முகவரியுடனோ தொடர்பு கொள்ளலாம்.

                   நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா-காரை கலாச்சார மன்றம் 2019/2020 நிர்வாக செயற்குழு தெரிவிற்கான தேர்தல் அறிவித்தலும் விண்ணப்ப படிவமும்

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக செயற்குழு

உறுப்பினர் பதவிக்கான தேர்தல் 20.01.2019

கனடா  காரை கலாச்சார மன்ற நிர்வாக  சபை / போஷகர்  சபை / கணக்காய்வாளர்

2019 – 2020 அங்கத்தவர்கள் தேர்வுக்கான  பொதுத் தேர்தல்.

நடைமுறை வழிகாட்டல் ஆவணம்

பின்வரும் நிர்வாக செயற்குழு உறுப்பினர் பதவிகளிற்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
1. தலைவர்
2. உப தலைவர்
3. செயலாளர்
4. உப செயலாளர்
5. பொருளாளர்
6. உப பொருளாளர்
7. 13 நிர்வாக சபை உறுப்பினர்கள்
8.   6 தயார்நிலை உறுப்பினர்கள்

1. கனடாவில் வதியும் காரைநகருடன் தொடர்புடைய 18 வயதிற்கு மேற்பட்ட இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். இத் தேர்தலில் பங்கு பற்றி போட்டியிடும் உரிமையும், வாக்களிக்கும் உரிமையும் 2018, 2019ம் ஆண்டிற்கான வருட சந்தா கட்டி அங்கத்துவம் பெற்று, பொது சபை உறுப்பினர் அந்தஸ்த்தில் உள்ள அனைவருக்கும் உண்டு. ஆனாலும் 2019ம் ஆண்டுக்குரிய அங்கத்துவ பணத்தினை குறைந்தபட்சம் பொதுக்கூட்டத்திற்கு 3 நாட்களிற்கு முன்னர் செலுத்தி தமது அங்கத்துவத்தினை புதுப்பித்துக் கொண்டவர்கள் மட்டுமே அமையவுள்ள புதிய நிர்வாக சபையில் அங்கம் வகிக்கும் தகைமை பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.

2. சேவை மனப்பான்மை உடைய அனைவரும் எந்த பதவிகளுக்கும் விண்ணப்பம் செய்யலாம்.

3. மேற்படி தேர்தலில் பங்குபற்ற விரும்பும் அனைவரும் ஜனவரி 15 , 2019 ம் திகதி நள்ளிரவு 12:00 மணிக்கு முன்னதாக தமது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புதல் வேண்டும்.

4. தேர்தல் எதிர்வரும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொது சபை கூட்டத்தின்( ஜனவரி 20 , 2019) போது நடைபெறும்.

5. இத் தேர்தலில் தெரிவு செய்பவரின் பதவிக்காலம் தேர்தல் தினத்தில் இருந்து 2021 ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடையும்.

6. பொது சபை அந்தஸ்த்தில் உள்ள ஒருவர் எத்தனை பதவிக்களுக்கும் விண்ணப்பம் செய்யலாம். ஆனால் அவர் விண்னப்பித்த பதவிகளில் எதாவது ஒரு பதவிக்கு தேர்தலின் போது தெரிவு செய்யப்பட்டால், அதன் பின்பு வரும் பதவிகளுக்குகான அவருடைய விண்ணப்பங்கள் பரிசீலன செய்யப்படமாட்டாது. தெரிவு செய்யப்பட்ட பதவியில் இருந்து, குறித்த நபர் தன்னை விலக்கிக் கொண்டாலும் மற்றும் பதவிகளுக்கான போட்டியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டதாகவே கருதப்படும்.

7. குறித்த பதவிக்கு ஒன்றிற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றால் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு இடம்பெறும்.

8. குறித்த ஒரு பதவிக்கு விண்ணப்பம் கிடைத்திருந்தும், தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்னதாக யாராவது ஒருவர் விண்னப்பத்தினை வாபஸ் செய்தால், அப் பதவிக்கு தேர்தல் மண்டபத்தில் வைத்தும் விண்ணப்ப படிவம் ஏற்றுக் கொள்ளப்படும்.

9. மேற் குறித்த பதவிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாத பதவிகளிற்கான தெரிவு மட்டுமே கூட்டத்தில் சமூகமளித்த பொது சபை உறுப்பினர்கள் மத்தியிலிருந்து இடம்பெறும்.

 

குறிப்பு:

ஐந்து திட்டமிடல் போஷகர் சபை உறுப்பினர்கள் மற்றும் கணக்காய்வாளர் பொது சபை அங்கத்தவர்களினால் கூட்டத்தில் சமூகமளித்த பொது சபை உறுப்பினர்கள் மத்தியிலிருந்து தெரிவு செய்யப்படுவார்கள்.

10. விண்ணப்ப படிவத்தில் உள்ள சகல கேள்விகளுக்குமான பதில்களும் நிரப்பப்பட வேண்டும். விண்ணப்பதாரிக்கு பொருத்தமற்ற வினாக்கள் இருப்பின் N/A என குறிப்பிட வேண்டும்.

11. விண்ணப்ப படிவங்களை ckcaelection2019@karainagar.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அல்லது PO BOX 32057 MILLIKEN CROSSING PO MARKHAM, ON, M1V 0E1 என்ற தபால் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். தபால் மூலம் அனுப்பும் விண்ணப்பங்கள் கால தாமதமானல் அதற்கு மன்றம் பொறுப்பு ஏற்கமாட்டாது. விண்ணப்பபடிவங்கள் ஒப்பம் இடப்பட்டிருக்க வேண்டும்.

நன்றி

 

       திட்டமிடல் போசகர் சபை

கனடா-காரை கலாச்சார மன்றம்

 

தேர்தல் விண்ணப்ப படிவம்- 2019

CKCA ELECTION APPLICATION FORM - 2019

 

 

விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ள தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2019/01/CKCA-ELECTION-APPLICATION-FORM-2019.pdf

கனடா காரை கலாச்சார மன்றம் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்

கனடா காரை கலாச்சார மன்றம்

பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்

கனடா காரை கலாச்சார மன்றத்தின்  2017/2018 ஈராண்டுக்  காலப்பகுதிக்குரிய நிர்வாக சபைக் காலம் நிறைவுக்கு வருகின்றது. ஆகையால் கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்டம்  மற்றும் 2019/2020 ஆண்டிற்குரிய புதிய நிர்வாக சபை தெரிவு ஆகியன இடம்பெறவுள்ளது. நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் 2018ம்,  2019ம் ஆண்டுக்குரிய அங்கத்தவர்கள் அனைவரும் பங்குபற்றலாம். ஆனாலும் 2019ம் ஆண்டுக்குரிய அங்கத்துவ பணத்தினை குறைந்தபட்சம் பொதுக்கூட்டத்திற்கு 3 நாட்களிற்கு முன்னர் செலுத்தி தமது அங்கத்துவத்தினை புதுப்பித்துக் கொண்டவர்கள் மட்டுமே அமையவுள்ள புதிய நிர்வாக சபையில் அங்கம் வகிக்கும் தகைமை பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.

அங்கத்தவர்களாக இணைந்து கொள்ள விரும்புவர்கள் 647.818.7443 மற்றும் 416.455.8836 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ அல்லது மன்ற மின்னஞ்சல் Karainagar@gmail.com என்ற முகவரியுடனோ தொடர்புகொண்டு தங்கள் அங்கத்துவதை பெற்றுக்கொள்ளலாம்.

இடம்:  பெரிய சிவன் கோவில்

               1148 Bellamy Rd N, Scarborough, ON M1H 1H2 (Bellamy & Ellesmere)

காலம்: 20.01.2019  ஞாயிற்றுக்கிழமை 

நேரம்: பிற்பகல் 3.00 மணி

பொதுக்கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் மற்றும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக சபை தெரிவிற்கான தேர்தல் அறிவித்தலும் விண்ணப்ப படிவமும் கூடிய விரைவில் அறியத்தரப்படும்.

தங்கள் பணியில்

                      நிர்வாகம்

  கனடா காரை கலாச்சார மன்றம்

 

கனடா-காரை கலாசார மன்றத்திற்கு சபாரத்தினம் பாலச்சந்திரன் தலைமையில் 11பேர் கொண்ட புதிய நிர்வாக சபை அமையப்பெற்றுள்ளது.

CKCA__POST

Click to access CKCA__POST.pdf

 

https://karainagar.com/pages/wp-content/uploads/2017/07/CKCA__POST.pdf

 

09.07.2017 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கனடா காரை கலாச்சார மன்றத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்ட நிகழ்ச்சி நிரல்!

CKCA logo

 கனடா காரை கலாச்சார மன்றம்
புதிய நிர்வாக சபை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம்


 காலம்:  09.07.2017 ஞாயிற்றுக்கிழமை

 நேரம்: மாலை 3.00 மணிக்கு 

 இடம்: பெரிய சிவன் ஆலய மண்டபத்தில் (1148 Bellamy Road (Bellamy & Ellesmere) Scarborough) 
 


                                                               நிகழ்ச்சி நிரல்

 

1. கடவுள் வணக்கம்

2. அக வணக்கம்

3. தலைவர் உரை

4. சென்ற பொதுக்கூட்ட அறிக்கைகள்

5. புதிய நிர்வாக சபை தெரிவு

6. புதிய எதிர்கால திட்டங்கள் 

       A. காரை ஒன்றுகூடல் (கோடை கால ஒன்றுகூடல்)
 
       B. தமிழ்த்திறன் போட்டிகள்

       C. காரை வசந்தம்

       D. ஆருத்திரா தரிசனம்

7. சமாதானக் குழுவின் இணைப்பாளர் உரை

8. நன்றியுரை 


       தலைவர், உப தலைவர்                
கனடா காரை கலாச்சார மன்றம்
     

    "WORKING TOGETHER IS SUCCESS"

கனடா காரை கலாச்சார மன்றம் புதிய நிர்வாக சபை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம்

CKCA logo

 கனடா காரை கலாச்சார மன்றம்

புதிய நிர்வாக சபை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம்  

கனடா காரை கலாச்சார மன்றத்தின் புதிய நிர்வாக சபை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் எதிர்வரும் 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை  மாலை 3.00 மணிக்கு பெரிய சிவன் ஆலய மண்டபத்தில் (1148 Bellamy Road (Bellamy & Ellesmere) Scarborough) நடைபெறவுள்ளது.

 கனடா வாழ் காரைநகர் மக்களும் அவர்களுடன் தொடர்புபட்ட அனைவரும் அன்புடன் வருமாறு அழைக்கப்படுகின்றீர்கள்.


                இவ்வண்ணம்
       தலைவர், உப தலைவர் 
கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றம் விசேட பொதுக்கூட்டமும் நிர்வாக சபை தெரிவும் 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை

CKCA logo             கனடா காரை கலாச்சார மன்றம்
விசேட பொதுக்கூட்டமும் நிர்வாக சபை தெரிவும் 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை 

 இடம்: பெரிய சிவன் ஆலய மண்டபம்
     1148 Bellamy Road (Bellamy & Ellesmere)
         Scarborough, Ont.

 காலம்: 09.07.2017  ஞாயிற்றுக்கிழமை  

 நேரம்:  மாலை 3.00


கனடா காரை கலாச்சார மன்றத்தின் தற்போதைய நிர்வாக சபைக்கு மன்றத்தின் நிர்வாக சபை அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கான விசேட பொதுக்கூட்டம்.

 நிர்வாக சபை தெரிவு செய்வதற்கான விசேட பொதுக்கூட்டம் தொடர்ந்து சுமூகமானதும் ஆக்கபூர்வமான வழிகளிலும் மன்றத்தின் வளர்ச்சி கருதி தொடர்ந்து நடைபெற மன்ற அங்கத்தவர்கள் அனைவரும் ஆதரவு அளிப்பதுடன் கலந்து சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.

விசேட பொதுக்கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் கூடிய விரைவில் இணையத்தளத்தில் அறியத்தரப்படும்.

இதுவரை இவ்வருடத்திற்கான (2017)அங்கத்துவ பணத்தினை செலுத்தாதவர்கள் தயவுசெய்து அங்கத்துவ பணத்தினை செலுத்தி அங்கத்தவர்களாக இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

                   நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

 

 

கனடா-காரை கலாசார மன்றத்தின் புதிய தலைவராக சபாரத்தினம் பாலச்சந்திரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

CKCA logo

கனடா-காரை கலாசார மன்றத்தின் புதிய தலைவராக சபாரத்தினம் பாலச்சந்திரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 

கனடா-காரை கலாசார மன்றத்தின் பொதுக் கூட்டம் நேற்றுக் காலை 9.00மணிக்கு Scarborough Civic Centreஇல் மன்றத்தின் தலைவர் திரு.த.பரமானந்தராசா தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது.

 போசகர் திரு.க.கனகராசாவின் தலைமையில் நிர்வாக சபைக்கான தேர்தல் நடைபெற்றபோது மன்றத்தின் புதிய தலைவராக திரு.சபாரத்தினம் பாலச்சந்திரன் அவர்களும் உப-தலைவராக திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம் அவர்களும் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். கனேடிய அரசாங்க நிறுவனமொன்றில் கணக்காய்வாளர் பதவியிலிருக்கும் திரு.பாலச்சந்திரன் மன்றம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் உதவிப் பொருளாளராகவும் பின்னர் திட்டமிடல் போசகர் சபை உறுப்பினராகவும் பணியாற்றியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். செயலாளர் பதவிக்கான தெரிவு நடைபெற்றபோது எவரும் அதனை ஏற்க முன்வராத நிலையில் முழுமையான ஒரு நிர்வாகத்தினை அமைக்க முடியாத சூழ்நிலை நிலவியது. இந்நிலையில்  புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட தலைவர் உப-தலைவர் ஆகிய இருவரும் முன்னைய நிர்வாகத்தில் இவ்விரு பதவிகள் தவிர்ந்த ஏனைய பதவிகளில் அங்கம் பெற்றிருந்தவர்களும் இணைந்து  ஒரு மாத காலத்திற்கு தற்காலிக நிர்வாகமாக செயற்படுமாறு பொதுச் சபை கேட்டுக்கொண்டதை சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இந்த ஒரு மாத காலத்தினுள் சங்கத்தில் நிலவுகின்ற ஆரோக்கியமற்ற நிலையினை நீக்கிவைத்து சுமுகமான ஒரு நிலையை உருவாக்கி வைக்கும் நோக்குடன் ஐந்து பேர் கொண்ட சமாதானக் குழு ஒன்று பொதுச் சபையினால் நியமிக்கப்பட்டது. முழுமையான நிர்வாகத்தினை தெரிவு செய்வதற்காக ஒரு மாத காலத்துள் பொதுச் சபை கூட்டப்படவேண்டும் என்பதுடன் முரண்பாடுகளைக் களைந்து காரை மாதாவின் புதல்வர்கள் என்ற உணர்வுடன்  இக்கூட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு மிகுதியாகவுள்ள நிர்வாக உறுப்பினர்களுக்கான வெற்றிடங்களை  ஜனநாயகரீதியில் நிரப்பக் கூடிய ஓர் சூழ்நிலையை ஏற்படுத்த நியமிக்கப்பட்ட சமாதானக் குழு உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டும் என பொதுச் சபை கேட்டுக்கொண்டது. 

சமாதனக் குழுவின்  உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோர் விபரம்:

திரு.சிவசம்பு சிவநாதன் – குழுவின் இணைப்பாளர்(முன்னைநாள் நிர்வாக உறுப்பினர்)
திரு.சபாரத்தினம் பாலச்சந்திரன் (மன்றத்தின் தலைவர்) 
திரு.கனக சிவகுமாரன் (முன்னைநாள் செயலாளர்)
திரு.தம்பையா அம்பிகைபாகன்(முன்னைநாள் நிர்வாக உறுப்பினர்)
திரு.கந்தையா பஞ்சலிங்கம் (முன்னைநாள் செயலாளர்)

பொதுக் கூட்டத்தின் நிறைவில் திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைவராக பதவி வகித்து ஆற்றிய அளப்பரிய சேவையை பாராட்டிய பொதுச் சபை உளமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொண்டது.

 

21.05.2017 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்டம் தொடர்பான அறிவித்தலும் நிகழ்ச்சி நிரலும்!

CKCA logo

21.05.2017 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்டம் தொடர்பான அறிவித்தலும் நிகழ்ச்சி நிரலும்!


கனடா காரை கலாச்சார மன்றத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் மீண்டும் 21.05.2017 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை Scarborough Civic Center மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுக்கூட்டமானது எதிர்பாராத நிகழ்வுகளினால் தடைப்பட்டிருந்தது. பொதுக்கூட்டத்தினை தொடர்ந்து நடாத்துவதற்கும் புதிய நிர்வாக சபை தெரிவினை மேற்கொள்வதற்குமான பொதுக்கூட்டம் தொடர்ந்து சுமூகமானதும் ஆக்கபூர்வமான வழிகளிலும் மன்றத்தின் வளர்ச்சி கருதி தொடர்ந்து நடைபெற மன்ற அங்கத்தவர்கள் அனைவரும் ஆதரவு அளிப்பதுடன் கலந்து சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.


நடப்பாண்டு மன்ற அங்கத்தவர்கள் மற்றும் அங்கத்தவராக இணைந்து கொள்ள தகுதிவாய்ந்த கனடா வாழ் காரை மக்கள் அனைவரையும் அங்கத்தவர் பணத்தினை உரிய நேரத்தில் செலுத்தி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மன்றத்தின் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ளுமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

                     

                    நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்


                                    நிகழ்ச்சி நிரல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

CKCA GM AGENDA MAY 21,2017 PAGE 1 CKCA GM AGENDA MAY 21,2017 PAGE 2

 

கனடா காரை கலாச்சார மன்றம் பொதுக்கூட்டமும் நிர்வாக சபை தெரிவும் 21.05.2017

CKCA logo  கனடா காரை கலாச்சார மன்றம்
 பொதுக்கூட்டமும் நிர்வாக சபை தெரிவும் 21.05.2017


 இடம்: ஸ்காபுரோ சிவிக் சென்டர்

 காலம்: 21.05.2017  ஞாயிற்றுக்கிழமை  

 நேரம்: காலை 8.30


மண்டபநேரம் மட்டுப்படுத்தப்பட்ட கால இடைவெளியாக மூன்று மணித்தியாலங்கள் மாத்திரம்  இருப்பதால் மன்ற அங்கத்தவர்களை சரியாக காலை 8:30 க்கே மண்டபத்தில் கூடும்படி அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம். கூட்டம்  சரியாக காலை 9:00 க்கு ஆரம்பமாகும். கூட்டத்திற்கு  வரும் அனைவரும் ஒன்று சேர்ந்து கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஆரோக்கியமான எதிர் காலத்தினை கருத்தில் கொண்டு அமைதியான முறையில் தடங்கலின்றி கூட்டத்தினை நடாத்த எல்லோருடைய அன்பான ஒத்துழைப்பினை  எதிர்பார்க்கின்றோம்.

பொதுக்கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் கூடிய விரைவில் இணையத்தளத்தில் அறியத்தரப்படும்.


                 நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றம் பொதுக்கூட்டமும் நிர்வாக சபை தெரிவும் நிகழ்ச்சி நிரல்

CKCA logo

கனடா காரை கலாச்சார மன்றம்
 பொதுக்கூட்டமும் நிர்வாக சபை தெரிவும் 23.04.2017
கனடா ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய மண்டபம்
01 Golden Gate, Unit # 1, Scarborough, On.(Brimley & Ellesmere)

காலம்: 23.04.2017, மாலை 2.00 மணி

 


                                                  நிகழ்ச்சி நிரல்


1. அங்கத்தவர்கள் பதிவும் அங்கத்தவர்கள் தமது கருத்துக்களை தெரிவிக்க நேரம் பதிவு செய்தலும்.
2. கடவுள் வணக்கம் (2.15 P.M)
3. அகவணக்கம்
4. தலைவர் உரை (2.20 P.M)
5. செயலாளர் அறிக்கைகள்(சென்ற பொதுக்கூட்ட அறிக்கை, செயற்பாட்டு அறிக்கை) (2.30 P.M)
6. பொருளாளர் அறிக்கை (2.45 P.M)


7. கல்விக்கான செயற்பாடுகளிற்காக ‘காரை வசந்தம் 2016’ மூலம் திரட்டப்பட்ட நிதி வைப்பில் இடுவது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றுதல். (3.00 P.M)
– ஈழத்து சிதம்பரம் நித்திய பூசைக்காக 5 இலட்சம் மன்றத்தின் நிதியில் இருந்து வைப்பில் இட்டதன் காரணமாக ஹட்டன் நாஷனல் வங்கியில் நிரந்தர வைப்பில் உள்ள நிதி முறையே ஒரு இலட்சம் மற்றும் ஒன்றரை இலட்சம் மன்றத்தின் நடப்பு நிதியாக சேர்த்துக்கொள்ளப்படவேண்டியுள்ளது. அதனை அதன் அடுத்த முதிர்வுக்காலத்தில் இடைநிறுத்தி அனைத்து நிதிகளையும் ஒன்றிணைத்து ஒரே வைப்பாக வைப்பில் இடுவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றுதல்.
ஒரு இலட்சம் முதிர்வு திகதி ஹட்டன் நாஷனல் வங்கி: 26.05.2017
ஒன்றரை இலட்சம் முதிர்வு திகதி ஹட்டன் நாஷனல் வங்கி: 06.07.2017


8. கனடா காரை கலாச்சார மன்றத்தின் செயற்பாடுகளிற்கு தடையாக இருந்த இருக்கும் காரணிகள் தொடர்பாக விளக்கம் பெறுதலும், தீர்மானம் நிறைவேற்றுதலும். (3.30 P.M)
    1. மன்றத்தின் வங்கிக்கணக்கு தொடர்பானது
    2. மன்றத்தின் தொலைந்து போன சொத்துக்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பானவை
    3. மன்றத்தின் வழமையான செயற்பாடுகளை இடைநிறுத்தும் நோக்கில்                  முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளும், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த செயற்பாடுகள் தொடர்பானவை.
   4. Chartered Professional Accountant(CPA)  அமைப்பிற்கு அனுப்பப்பட்ட போலி முறைப்பாடுகள் தொடர்பானவை.
   5. நிர்வாக சபை உறுப்பினர்களிற்கு விடுக்கப்படும் மிரட்டல்கள் மற்றும் மிரட்டல் கடிதங்கள் தொடர்பானவை.

 


9.  1. நிர்வாக சபையின் பதவிக்காலத்தில் மன்றத்தின் அங்கத்தவர்கள் நிர்வாகத்தில் தலையீடு செய்து நிர்வாகத்தினை குழப்ப முயற்சி செய்தலை முற்றாக தவிர்க்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றுதல். 
     2. அங்கத்தவர் வருட சந்தா மற்றும் ஆயுள் சந்தா பணம் தீர்மானித்தல். 
     3. மன்ற நிர்வாக அலுவலகம் தீர்மானித்தல்.
     4. மன்றத்தின் தேவையற்ற இருப்புக்கள் குப்பையிலிடுதல். (4.15 P.M)


10. அங்கத்தவர்கள் கேள்வி நேரம் (4.30 P.M)
11. புதிய நிர்வாக சபை தெரிவு (5.00 P.M)
தலைவர், உபதலைவர், செயலாளர், உபசெயலாளர், பொருளாளர், உபபொருளாளர், 13 நிர்வாக சபை உறுப்பினர்கள், 6 தயார்நிலை உறுப்பினர்கள், 5 திட்டமிடல் போஷகர் சபை உறுப்பினர்கள், கணக்காய்வாளர்.

12. புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் புகைப்படம் எடுத்தல்
13. புதிய நிர்வாக சபையின் எதிர்கால திட்டங்கள்
14. நன்றியுரை (6.00 P.M)

 


குறிப்பு: 1. பொதுக்கூட்டம் அமைதியாகவும், மன்றத்தின் இறைமையினை பேணும் வகையிலும் நடாத்துவதற்கு அனைத்து அங்கத்தவர்களின் ஒத்துழைப்பினையும் வேண்டிக்கொள்வதோடு, வாக்குவாதங்களை தவிர்த்துக்கொள்ளும் நோக்கிலும் முன்வைக்கப்படும் பிரேரணைகள் அனைத்தும் இரகசிய வாக்கெடுப்புக்கள் மூலம் நிறைவேற்றப்படும்.

குறிப்பு: 2. போதியளவு அங்கத்தவர்கள் புதிய நிர்வாக தெரிவில் கலந்து கொள்ள முடியாத பட்சத்தில் மன்றத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படாமல் இருப்பதற்காக Ontario Not-for-Profit Corporations Act பிரகாரம் குறைந்த பட்சம் 3 முதல் 5 இயக்குனர்கள் மன்றத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் 23.04.2017 அன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொதுச்சபை அங்கத்தவர்கள் தீர்மானித்துக்கொள்வார்கள்.

 


                 நிர்வாகம்

கனடா காரை கலாச்சார மன்றம்

       

கனடா காரை கலாச்சார  மன்றத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் 23.04.2017  ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது!

  CKCA logo

                                     கனடா காரை கலாச்சார  மன்றம்
              பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்

கனடா காரை கலாச்சார  மன்றத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் 23.04.2017  ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இப்பொதுக்கூட்டத்தில் 2016ம், 2017ம் ஆண்டுக்குரிய அங்கத்தவர்கள் அனைவரும் பங்குபற்றலாம். ஆனாலும் 2017ம் ஆண்டுக்குரிய அங்கத்துவ பணத்தினை குறைந்தபட்சம் பொதுக்கூட்டத்திற்கு 3 நாட்களிற்கு முன்னர் செலுத்தி தமது அங்கத்துவத்தினை புதுப்பித்துக் கொண்டவர்கள் மட்டுமே அமையவுள்ள புதிய நிர்வாக சபையில் அங்கம் வகிக்கும் தகைமை பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.

தற்போதைய திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைமையிலான நிர்வாக சபையின் செயலாளர் அறிக்கை மற்றும் பொருளாளர் அறிக்கை என்பன பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக அங்கத்தவர்கள் அனைவரும் பார்க்கும் வகையில் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.

இடம்:  கனடா ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய மண்டபம்
              01, Golden Gate, Unit # 01 Scarborough  (Brimley & Ellesmere)

காலம்: 23.04.2017  ஞாயிற்றுக்கிழமை  

நேரம்: பிற்பகல் 2.00 மணி

 பொதுக்கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் மற்றும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக சபை தெரிவிற்கான தேர்தல் அறிவித்தலும் விண்ணப்ப படிவமும் கூடிய விரைவில் அறியத்தரப்படும்.

 

                  இங்ஙனம்
                 நிர்வாகம்
  கனடா காரை கலாச்சார  மன்றம்