கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கெளரவிப்பு விழா

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் புலமைப்பரிசில்   பரீட்சையில் சித்தியடைந்த  மாணவர்களுக்கான  கெளரவிப்பு விழா

இந்த வருடம் நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சைக்கு காரைநகர் பாடசாலைகளிலிருந்து 162 மாணவர்கள் தோற்றினர். இவர்களில் 15 மாணவர்கள்  சித்தியடைந்து காரைநகருக்கு பெருமை சேர்த்துள்ளனர். அதிலும் குறிப்பாக தீவக வலயத்தில் முதலிடம் பெற்ற மாணவியையும்,  அதிகமாக ஆறு மாணவர்கள் ஒரே பாடசாலையில் இருந்து சித்தியடைந்த பெருமையையும் காரைநகர் தீவக வலயத்தில் பெற்றுக் கொண்டுள்ளது .

இவ்வாறு புலமைப்  பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து காரை மண்ணுக்கு பெருமை தேடித்தந்த  மாணவர்களைக் கெளரவிக்க  வேண்டியது இன்றியமையாததொன்றாகும். ஆகையினால் காரை அபிவிருத்தி சபையினர் கல்வித் தாயாம் சரஸ்வதி தேவியின் பூஜை நாளான 16.10.2018 அன்று சித்தியடைந்த மாணவர்களைக் கெளரவிப்பு  செய்யவுள்ளனர்.

வருடம்தோறும்  நடைபெறும் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழாவுக்கு கனடா காரை கலாச்சார மன்றம் அனுசரணை வழங்கி வருகின்றது.  வழமைபோல் இந்த வருடமும் மாணவர்கள் ஒவ்வொருவருக்குமான ஊக்குவிப்பு  உதவுதொகையாக ரூபா 2, 500 பணப்பரிசில்  மன்றத்தின் சார்பில் வழங்கப்பட்டு கெளரவம் பெறுவார்கள்.