ஈழத்து சிதம்பரம் திருத்தொண்டர் சபையாக 1989ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கனடா-காரை கலாச்சார மன்றம் ஈழத்து சிதம்பரம் நித்திய பூசைகளை ஒருங்கிணைக்க உலகம் முழுவதிலும் பரந்து வாழும் காரைநகர் மக்களில் 365 அடியவர்களை இணைத்துக் கொள்ளும் திட்டம்!

sivan kovil

காரைநகர் மக்கள் எங்கு வாழ்ந்தாலும் ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன்கோயில் மீது பக்தியும் நம்பிக்கையும் கொண்டு தாம் வாழும் நாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள். ஆனாலும் காரைநகர் ஈழத்து சிதம்பரம் சிவன் கோயிலில் நித்திய பூசைகளை நெறிப்படுத்துவதில் தொடர்ந்தும் நடைமுறை சிக்கல்கள் காலம் காலமாக இருந்து வருகின்றது. அந்த நடைமுறை சிக்கல்களை களைந்து நித்திய பூசைகளை நெறிப்படுத்த ஈழத்து சிதம்பரம் திருத்தொண்டர் சபையாக 1989ம் ஆண்டு யுத்த காலத்தில் நித்திய பூசைகளை நெறிப்படுத்த ஆரம்பிக்கப்பட்ட கனடா-காரை கலாச்சார மன்றம் இப்பொழுது மீண்டும் முன்வந்துள்ளது. கடந்த காலங்களிலும் கனடா காரை கலாச்சார மன்றம் ஈழத்து சிதம்பரம் நித்திய பூசைகளை நெறிப்படுத்துவதில் அக்கறையும் ஆர்வமும் காட்டி வந்துள்ளது. 

வெளிநாடுகளில் வதியும் காரைநகர் மக்களில் பெரும் அளவிலானோர் நித்திய பூசைகளிற்காக தற்போதும் ஆதரவு அளித்தும் வருகின்றார்கள். ஆனாலும் உரிய நேரத்தில் கோவில் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு தமது நாளிற்குரிய நித்திய பூசை நாளினை அறிந்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு அடியவர்கள் நடைமுறை சிக்கல்கள் காரணமாக தவறவிடுவதும், தொடர்புகள் இல்லாமையும் பின்னடைவை ஏற்படுத்தி வந்துள்ளது. இந்த நடைமுறை சிக்கல்களை களைந்து தொடர்புகளை வெளிநாடுகளில் வதியும் காரைநகர் மக்களிற்கும் ஈழத்து சிதம்பரம் கோயில் நிர்வாகத்தினருக்கும் ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடனும், கிரமமாக நித்திய பூசை விடயங்களை அறியப்படுத்துவதற்கும் கனடா காரை கலாச்சா மன்றம் 24.08.2014 அன்று நடைபெற்ற நிர்வாக சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரம் ஆதீனகர்தாக்களுடன் தொடர்பு கொண்டு கனடா காரை கலாச்சார மன்றத்தின் மேற்படி தீர்மானம் பற்றி தெரிவிக்கப்பட்டதுடன் எழுத்து மூலமாக இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கும் அனுமதி கனடா காரை கலாச்சார மன்றத்தினால் பெறப்பட்டுள்ளது.

05.09.2014 எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு கனடா ஸ்காபுரோவில் அமைந்துள்ள சிதம்பர ஆதி நடேசர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளுடன் சம்பிரதாய பூர்வமாக அடியவர்களை இத்திட்டத்திற்கு பதிந்து கொள்ளும் வைபவம் நடைபெறவுள்ளது. கனடா வாழ் காரைநகர் மக்கள் அனைவரும் கனடா சிதம்பர ஆதி நடேசர் ஆலயத்தில் நடைபெறவுள்ள பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டு, காரைநகர் ஈழத்து சிதம்பத்தின் நித்திய பூசையில் தங்களையும் இணைத்துக் கொண்டு பேரின்ப பெருவாழ்வு பெற அழைக்கின்றனர் கனடா காரை கலாச்சார மன்றத்தினர்.

ஏற்கெனவே ஈழத்து சிதம்பரம் நித்திய பூசைகளில் கலந்து கொண்டுள்ளவர்கள் கனடா காரை கலாச்சார மன்றத்தினருடன் தொடர்பு கொண்டு தங்கள் பெயரையும், தங்களது நித்திய பூசை நாளினையும் பதிந்து கொள்வதுடன் ஈழத்து சிதம்பரம் காரைநகர் சிவன் கோயில் ஆதீன கர்த்தாக்களுடனான தொடர்புகளை கனடா காரை கலாச்சார மன்றம் ஏற்படுத்தி கொடுப்பதுடன் தொடர்பு பாலமாக கனடா காரை கலாச்சார மன்றம் விளங்கவும் உதவி புரிந்தவர்கள் ஆவீர்கள்.

கனடா காரை கலாச்சார மன்றத்துடன் தொடர்பு கொண்டு தங்களது நித்திய பூசை நாளினை பெற்றுக்கொள்ளவும், புதிதாக இணைந்து கொள்ளவும் 416 642 4912 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது karainagar@gmail.com என்ற ஈமெயில் மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.


                                                                நன்றி!