கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையுடன் காரை அபிவிருத்திச் சபையினரால் காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் தற்காலிகமாக க.பொ.த. உயர்தர பெளதீக பாடத்திற்குரிய ஆசிரியர் 16.01.2020 வியாழக்கிழமை அன்று நியமனம்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையுடன்

காரை அபிவிருத்திச் சபையினரால்

காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில்

தற்காலிகமாக க.பொ.த. உயர்தர பெளதீக பாடத்திற்குரிய ஆசிரியர்

16.01.2020 வியாழக்கிழமை அன்று நியமனம்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் தலைவர் திரு.சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதத்தில் காரைநகர் விஜயத்தின் போது யாழ்ற்ரன் கல்லூரிக்கு சென்றிருந்தார்.

யாழ்ற்ரன் கல்லூரியில் பெளதீக பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் திடீர் இடமாற்றத்தை தொடர்ந்து யாழ்ற்ரன் கல்லூரியில் ஏற்பட்டுள்ள பெளதீக பாட ஆசிரியர் பற்றாக்குறையினை நீக்க தற்காலிகமாக பெளதீக பாடத்திற்குரிய ஆசிரியரை நியமிப்பதற்கு பாடசாலையினால் வேண்டுகோள் விடப்பட்டது.

அதனடிப்படையில் 22.09.2019 அன்று நடைபெற்ற நிர்வாக சபை கூட்டத்தின் போது தலைவர் அவர்களினால் பார்த்தும் கேட்டும் அறிந்து கொள்ளப்பட்ட விடயங்கள் நிர்வாக உறுப்பினர்களிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டதுடன் கனடா காரை கலாச்சார மன்றம் தொடர்ந்து செயற்படுத்தவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதனடிப்படையில் யாழ்ற்ரன் கல்லூரியில் ஏற்பட்டுள்ள பெளதீக பாட ஆசிரியர் பற்றாக்குறையினை நீக்க தற்காலிகமாக அடுத்து வரும் 6 மாதங்களிற்கு பெளதீக பாட ஆசிரியருக்குரிய தேவையான வேதனத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் தற்காலிகமாக க.பொ.த. உயர்தர பெளதீக பாடத்திற்குரிய ஆசிரியர் 16.01.2020 வியாழக்கிழமை அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.