கனடா காரை கலாச்சார மன்றம் 24.09.2022 தொடக்கம் 04.08.2023 வரை காரைநகரில் மேற்கொள்ளப்பட்ட உதவிகள்!

கனடா காரை கலாச்சார மன்றம்

24.09.2022 தொடக்கம் 04.08.2023 வரை

காரைநகரில் மேற்கொள்ளப்பட்ட உதவிகள்!

  1. யுத்தத்தின் போது தாய் தந்தையை இழந்த சிறுவன் நக்கீரனுக்கு கனடாவில் வதியும் காரைநகரைச் சேர்ந்த ஓர் அன்பரின் உதவியுடன் மே/2010 தொடக்கம் கனடா காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றது. மாதாந்த உதவிப்பணம் ரூபா 5,000 இருந்து ஜுலை மாதம் /2023 தொடக்கம் ரூபா 7,000 கனடா காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.
  2. கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து அறிக்கைகள் மன்றத்திற்கு கிடைக்கப்பெற்று வருகின்றது.
  3. காரைநகர் அபிவிருத்திச் சபை நூலக உதவியாளர்களிற்கான மாதாந்த ஒருபகுதி கொடுப்பனவாக ரூபா 10,000 கனடா காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.
  4. காரைநகர் மாணவர்களினால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற அபிவிருத்திச் சபை நூலகத்திலுள்ள இரண்டு போட்டோப் பிரதி இயந்திரத்திற்கு தேவைப்பட்ட ரோனர் அக்டோபர், நவம்பர் (2022) மாதங்களில் வாங்கி உதவப்பட்டது.
  5. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான 1ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
  6. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான 2ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 26.11.2022 சனிக்கிழமை இடம்பெற்றது.
  7. ஆயிலி சிவஞானோதயா வித்தியாசாலைக்கு அத்தியாவசிய நீர் பாவனைக்காக மோட்டார் மற்றும் மோட்டர் அறை என்பன (மார்ச் /2023) கனடா காரை கலாச்சார மன்றத்தால் கட்டிக்கொடுக்கப்பட்டது.
  8. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையில் க.பொ.த. பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணித பாடத்திலான முன்னோடிப் பரீட்சை பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 16.04.2023 அன்று இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி ஆகியனவற்றில் நடாத்தப்பட்டுள்ளது.
  9. க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களிற்கு பிரபல்யம் மிக்க வளவாளர்கள் பங்குகொண்ட கல்விக் கருத்தரங்கு கனடா காரை கலாச்சார மன்றத்தின் பூரணமான அனுசரணையில் காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் வெள்ளி சனி ஞாயிறு (05.05.2023, 06.05.2023, 07.05.2023) ஆகிய தினங்களிலும் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது.
  10. ஒருத்தி படம் திரையிடப்பட்டதன் ஊடாக திரட்டப்பட்ட நிதியின் மூலம் காரைநகர் வைத்தியசாலைக்கு முதலாம் கட்டமாக ஒரு தொகுதி அவசிய மருந்துப் பொருட்களை கனடா காரை கலாச்சார மன்றம் 13.06.2023 செவ்வாய்க்கிழமை அன்று பிரதேச வைத்தியசாலைக்குப் பொறுப்பான வைத்திய அதிகாரி Dr.செந்தூரன் அவர்களிடம் வைத்தியசாலையில் வைத்து கையளிக்கப்பட் டன.
  11. கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரைநகரைச் சேர்ந்த எட்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. 5 மாணவர்களுக்கான மாதாந்தம் ரூபா 10,000 வீதமும் மூன்று மாணவர்களுக்கான மாதாந்தம் ரூபா 7,500 வீதமும் மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது. இதில் ஒரு மாணவர் பல்கலைக்கழகத்தில் படிப்பு முடியும் வரை வேலை கிடைத்தபடியால் நிதி தேவையில்லை என மன்றத்திற்கு அறியத்தந்துள்ளார். இரண்டு மாணவர்களிற்கு கனடாவில் வதியும் காரைநகரைச் சேர்ந்த ஓர் அன்பரின் நிதி உதவியுடன் வழங்கப்பட்டு வருகின்றது.
  12. வறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவியின் கல்விக்கான உதவியாக ரூபா 5,000 ஜுலை மாதம் /2023 தொடக்கம் காரை கலாச்சார மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றம்

                    05.08.2023

 

05.08.2023 சனிக்கிழமை அன்று நடைபெற்ற கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடலில் விநியோகிக்கப்பட்ட அறிக்கை.