கனடா–காரை கலாச்சாரமன்றத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும் தொடர்பாக திட்டமிடல் போசகர் சபையினால் விடுக்கப்படும் முக்கிய அறிவித்தல்

கனடா–காரை கலாச்சாரமன்றத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும் தொடர்பாக திட்டமிடல் போசகர் சபையினால் விடுக்கப்படும் முக்கிய அறிவித்தல்

மன்றயாப்பின் சரத்து 5.301 இற்குஅமைய கூட்டப்பட்டுள்ள ஈராண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகசபைத் தெரிவும் எதிர்வரும் ஜனவரி 27,2013 அன்று நடைபெற உள்ளது. ஆரோக்கியமான ஒருநிர்வாகம் அமையப்பெற்று மன்ற யாப்பின் சரத்து 4.001இற்கு அமைய, அதற்கு ஒரு வழிகாட்டியாகவும் மன்றத்தின் பாதுகாவலர்களாகவும் சேவையாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் திட்டமிடல் போசகர் சபைக்கு உள்ளது.  எனவே 2013-2014 காலப் பகுதிக்காகத் தெரிவு செய்யப்படும் புதியநிர்வாகசபை, ஜனநாயக வழியிலும், ஒவ்வொரு உறுப்பினரும் தமது பூரண சுயவிருப்பத்துடனும் தமது சேவையை வழங்க முன்வரவேண்டும் என்பதில் சபை கரிசனை கொண்டுள்ளது. இதற்கு வழியேற்படுத்தும் வகையில் முன்கூட்டியே சபையினால் காரைநகருடன் தொடர்புடைய கனடாவாழ் பொதுமக்களிடமிருந்து புதிய நிர்வாகசபையின் பதவிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருவது எனவும் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் தேர்தல் நடத்துவது எனவும் திட்டமிடல் போசகர் சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மன்றயாப்பின் சரத்து 3.003 இற்கு அமைவாக தலைவர், உப-தலைவர், செயலாளர், உப-செயலாளர், பொருளாளர், உப-பொருளாளர், மற்றும் ஐந்து நிர்வாகசபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டியுள்ளது. குறித்த பதவிகளுக்கான விண்ணப்பங்கள் காரைநகருடன் தொடர்புடைய கனடாவாழ் பொதுமக்களிடமிருந்து கோரப்படுகின்றன.

விண்ணப்பதாரிக்கு இருக்கவேண்டிய தகமைகள்:

1.    கனடாவில் வதியும் காரைநகருடன் தொடர்புடைய 18 வயதிற்கு மேற்பட்ட இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். (யாப்புவிதி. 2.002)

2.    மன்ற யாப்புவிதி ஒழுங்குமுறைகளுக்குக் கட்டுப்பட்டவராகவும், மன்றத்தை மதித்து நடந்துகொள்பவராகவும் இருத்தல் வேண்டும். (யாப்புவிதி. 2.009)

3.    மன்றயாப்பின் வழிகாட்டலின்படி மன்றத்திற்குக் களங்கம், தேவையற்ற பொருட்செலவு ஏற்படாவண்ணம், மன்றத்தின் முன்னேற்றத்தை மனதிற்கொண்டு மன்றத்தை வழிநடத்துபவாராக இருத்தல் வேண்டும். (யாப்புவிதி 3.003)

4.    மன்றத்தின் திட்டமிடல் போசகர் சபையை மதித்து அச்சபை வழங்கும் ஆலோசனைகளை செவிமடுத்து கேட்கும் மனப்பக்குவம் உடையவராகவும் இருத்தல் வேண்டும். (யாப்புவிதி 4.005)

5.    சேவை மனப்பான்மையும், நம்பகத்தன்மையும், ஒருவரை மதித்து நடந்துகொள்ளும் பண்புடையவராகவும் இருத்தல் வேண்டும்.

6.    மன்ற வழமைகளையும், எமதுஊரின் பெருமையையும் பேணி நடந்துகொள்பவர்களாக இருத்தல் வேண்டும்.

7.    மன்றத்தின் ஆரம்பகால அமைப்பு உறுப்பினர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் கடப்பாடு உடையவராக இருத்தல் வேண்டும். (யாப்புவிதி 1.004)

தேர்தல் விதிமுறைகள்:

1.    குறிப்பிட்ட பதவிகளுக்கு போட்டியிட விரும்புவர்கள் கீழ்க் காணும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திசெய்து ஜனவரி 18, 2013 இற்குமுன்னர்  ckcaelection2013@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது தொலைநகல் (416 754 2669)  மூலமாகவோ கிடைக்கத்தக்கவாறு அனுப்பிவைத்தல் வேண்டும்.

2.    விண்ணப்ப முடிவுத் திகதிக்குப் பின்னர் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்களோ, வேறு மின்னஞ்சல்களுக்கு அனுப்பிவைக்கப்படும் விண்ணப்பங்களோ, பொதுக் கூட்டத்தின் போது நேரில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களோ எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

3.    குறித்த பதவிக்கு ஒன்றிற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றால் இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு இடம்பெறும்.

4.    ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பிவைக்கலாம்.

5.    மேற் குறித்த பதவிகளில் விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாத பதவிகளிற்கான தெரிவுமட்டுமே கூட்டத்தில் சமூகமளித்த உறுப்பினர்கள் மத்தியிலிருந்து இடம்பெறும்.

6.    விண்ணப்பங்கள் கிடைத்தமை குறித்து விண்ணப்பதாரிக்கு அறியத்தரப்படும். அல்லாதவிடத்து கீழ்வரும் தொலைபேசி இலக்கத்துடன் உடன் தொடர்புகொள்ளவும்.

மேலதிக தொடர்புகளுக்கும் உங்கள் கருத்துக்களுக்கும்: ckcapatron@gmail.com

(416)754 2669

நன்றி

திட்டமிடல் போசகர் சபை

கனடா-காரைகலாச்சாரமன்றம்

நவம்பர் 30. 2012

விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் யாப்பினைப் பார்வையிட இங்கே அழுத்துக.

1 comments

    • kanthan.s on January 17, 2013 at 8:59 am

    போசகர்சபை
    கனடா காரை கலாச்சார மன்றம்
    ஜனநாயக ரீதியில் போசகர்சபை தேர்தல் நடாத்துவதையிட்டு மிக்க மகிழ்ச்சி. அத்துடன் மன்றத்தின் யாப்பில் போசகர்சபை சில திருத்தங்களைக் கொண்டுவருதல் வேண்டும். பதவிகளுக்கு விண்ணப்பித்திருக்கும் விண்ணப்பதாரிகளின் பெயர்கள் இணையத்தளத்தில் nவிளியிடபடல் வேண்டும். அவர்கள் தாங்கள் விணணப்பித்திருக்கும் பதவிகளை ஏற்று எந்த வகையில் மக்களுக்கு சேவையளிப்பார்கள் என்பதை விளக்கமளிப்பதற்கு போசகர்சபை மன்றத்தின் இணையத்தளத்தில் பிரசுரிப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும்.

    காந்தன்.

Comments have been disabled.