கனடா-காரை கலாச்சார மன்றத்தின் நிதி உதவியுடன் காரைநகரில் கற்றல் செயற்பாடுகள்!

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் நிதி உதவியுடன் காரைநகரில் கற்றல் செயற்பாடுகள்:

 

மெல்ல கற்போருக்கான விசேட வகுப்பு: ஊரி அ.மி.த.க பாடசாலை

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி உதவியுடன் காரைநகர் ஆரம்ப பாடசாலைகளில் மேலதிக ஆங்கில கல்வி, கணணி கல்வி மற்றும் மெல்ல கற்போருக்கான விசேட வகுப்புகள் ஆரம்பித்துள்ளன. கடந்த சில மாதங்களிற்கு முன்னர் கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடக காரைநகரில் உள்ள 8 பாடசாலைகளிற்கு கற்றல் தேவைகளிற்காக நிதி உதவி அளிக்கப்பட்டிருந்தது. அந்நிதியில் இருந்து ஊரி அ.மி.த.க பாடசாலையில் மெல்ல கற்போருக்கான மேலதிக வகுப்புக்கள் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டது. மேலதிக வகுப்பு நேரத்தில் சிற்றுண்டி வழங்கவுதற்கும் ஏற்ற வகையில் நிதியுதவி அளிக்கப்பட்டிருந்தது.

இவ்வுதவியை பெற்றுக்கொண்ட ஊரி அ.மி.த.க பாடசாலை நிர்வாகம் அதிபர் இ.சிறிதரன் வழிநடத்தலோடு மேலதிக வகுப்புக்களை திட்டமிட்ட வகையில் நடாத்துவதையும், மாதாந்தம் அதற்குரிய விபரங்கள், செயற்பாடுகளை கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு உரிய முறையில் தெரிவித்து வருவதோடு மாணவர்கள் ஆர்வமுடன் வகுப்புகளில் பங்கேற்றுக்கொள்வதையும் காணும் முகமாக புகைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளனர். காரைநகரில் ஊரி அ.மி.த.க பாடசாலை கடந்த சில வருடங்களில் வேகமாக முன்னேறி வருவதை காரைநகர் மக்களும், காரைநகர் கல்விச் சமூகமும் பாராட்டி வருவதோடு கல்வி வளர்ச்சியிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலம், கணணி வகுப்புக்கள்: வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதியுதவியுடன் மாலை நேர ஆங்கில வகுப்புக்கள் கடந்த மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக ஆரம்ப கணணி அறிவை விருத்தி செய்யும் நோக்குடன் கணணி கல்வி வகுப்புக்கள் எதிர்வரும் 09.08.2014 முதல் ஆரம்பமாகவுள்ளதாக பாடசாலை அதிபர் செல்வி விமலா விஸ்வநாதன் அவர்கள் கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளார்.

கற்றல் உபகரணம் சீரமைக்கப்பட்டது: 

வியாவில் சைவ வித்தியாலயம் விடுத்த வேண்டுகோளுக்கமைய போட்டே பிரதியெடுக்கும் இயந்திரம் திருத்தி வழங்கப்பட்டது. நீண்டகாலமாக பழுதடைந்திருந்த பிரதியெடுக்கும் இயந்திரத்தை 56,000 ரூபா செலவில் காரைநகர் அபிவிருத்தி சபையின் உதவியோடு சீரமைத்துக் கொடுத்தமைக்கான ரசீது மற்றும் நன்றியறிதல் கடிதத்தினை பாடசாலை அதிபர் கே.சுந்தரலிங்கம் அவர்கள் கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

கற்றல் உபகரணம் வழங்கப்பட்டது:

தொடக்க பாடசாலைகளான சுப்பிரமணியம் வித்தியாசாலை, வேரப்பிட்டி ஸ்ரீ கனேசா வித்தியாலயம், தோப்புக்காடு மறைஞானசம்பந்த வித்தியாலயம், மெய்கண்டான் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிற்கு கற்பித்தல் தேவைகளை இலகுபடுத்தும் நோக்குடன் 60,000 ரூபா செலவில் 15 Pin Boards  வழங்கப்பட்டுள்ளன. இவற்றினை காரைநகர் அபிவிருத்தி சபையினர் நேரடியாக சென்று பாடசாலைகளிற்கு வழங்கினர்.

கணணிகள் வழங்கப்பட்டன:

யாழ்ற்ரன் கல்லூரிக்கு ரூபா 5 இலட்சம் பெறுமதியில் 10 கணணிகள் வழங்கப்பட்டுள்ளன. கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக அவற்றினை பெற்றுக்கொண்டதற்காக நன்றியறிதலையும், தெரிவித்து கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு புகைப்படங்களோடு அறியத்தந்துள்ளார்.

குடிநீர் தாங்கி வழங்கப்பட்டது:

வேதரடைப்பு பாலர் பாடசாலையின் குடிநீர் பிரச்சனையை அறிந்து கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினரினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து குடிநீர் தாங்கியொன்று 10,000 ரூபா பெறுமதியில் கனடா காரை கலாச்சார மன்றத்தினரால் 03.08.2014 அன்று காரைநகர் அபிவிருத்தி சபையின் உதவியோடு வழங்கப்பட்டுள்ளது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக கடந்த சில மாதங்களில் அண்ணளவாக 27 இலட்சம் ரூபாய்கள் செலவில் கற்றல் செயற்பாடுகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளிற்கான நிதியுதவிகளை வழங்குவதற்கு நிர்வாக சபை தீர்மானித்திருந்தது. அவற்றில் இதுவரை 17 இலட்சம் ரூபாய்கள் வரையான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளன. வழங்கப்பட்ட நிதியுதவிகளின் மூலம் பாடசாலைகளில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள் மேற்கொண்டு இந்த இணையத்தளத்தில் எடுத்து வரப்படும்.

கனடாவில் காரைநகர் மக்களிடம் இருந்து பெறப்படும் நிதியின் ஊடாக காரைநகரில் செயற்படுத்தப்படும் திட்டங்கள் நிர்வாக சபை உறுப்பினர்களினால் அவதானிக்கப்பட்டு வருகின்றன. கனடாவில் காரைநகர் மக்களை ஊர் நினைவோடு சேர்ந்து வாழவும், காரைநகர் மக்களின் ஒற்றுமையினை எடுத்தியம்பவும் கனடா காரை கலாச்சார மன்றம் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு முயற்சிகளிற்கும் அனுசரணையும் ஆதரவும் வழங்கும் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது கனடா-காரை கலாச்சார மன்றம்.

DSC05895 (Copy) DSC05896 (Copy) DSC05897 (Copy) DSC05899 (Copy) DSC05900 (Copy) DSC05901 (Copy) DSC05902 (Copy) DSC05903 (Copy) DSC05905 (Copy) DSC05906 (Copy) DSC05907 (Copy) DSC05909 (Copy) DSC05910 (Copy) DSC05912 (Copy) DSC05914 (Copy) DSC05915 (Copy) DSC05917 (Copy) DSC05918 (Copy) DSC05919 (Copy) DSC05920 (Copy) DSC05922 (Copy) DSC05923 (Copy) DSC05924 (Copy) DSC05925 (Copy) DSC05926 (Copy)

DSC00514 (Copy) DSC00515 (Copy) DSC00516 (Copy) DSC00517 (Copy) DSC00518 (Copy) DSC00519 (Copy) DSC00520 (Copy) DSC00521 (Copy) DSC00522 (Copy) DSC00523 (Copy) DSC00524 (Copy) DSC00525 (Copy)

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA