ஜனாதிபதி நடமாடும் சேவையில்  கனடா காரை கலாச்சார மன்ற தலைவரும் பங்கு கொள்கின்றார் 

ஜனாதிபதி நடமாடும் சேவையில்  கனடா காரை கலாச்சார மன்ற தலைவரும் பங்கு கொள்கின்றார் 
 காரைநகர்  பிரதேச செயலகர் பிரிவுக்கான பொதுமக்களுக்கான ” உத்தியோகபூர்வபணி” நடமாடும் சேவை 01.10.2018 காரைநகர் இந்துக்  கல்லூரியில் நடைபெற ஒழுங்கு  செய்யப்பட்டுள்ளது .இந்நடமாடும்  சேவையில்   அதிகளவான  திணைக்கள அதிகாரிகள், சமூக சேவையாளர்கள்,  எனப் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அன்றைய தினம் பின்வரும் சேவைகள்  பொது மக்களுக்கு வழங்கப்படும்.
1. கட்டணங்கள் எதுவுமின்றி அடையாள அட்டை வழங்குதல்
2.பதிவு  செய்யப்படாத பிறப்பு , இறப்பு  மற்றும் விவாக பதிவுகள் மேற்கொள்ளப்படும்
3.பிறப்பு, விவாக , மரண  சான்றிதழ்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைபெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.
4.ஒய்வூதிய திணைக்களத்தால் வழங்கப்படும் சேவைகள்
5.வீட்டுக் கடன் வசதி பெற்றுக் கொள்ளல்
6. முதியோர் அடையாள அட்டை வழங்குதல்
7.தென்னங்கன்று  மற்றும்   வேறு மரக் கன்றுகள் வழங்குதல்
8.பொதுவான வைத்திய  சேவைகளும்  மற்றும் கண் சிகிச்சை சேவைகள்
9.வங்கிக் கடன் மற்றும் லீசிங்க் சேவை
10.கல்விக் கருத்தரங்குகளை நடாத்தல்   மற்றும்  கல்விப் புலமை பரிசில் வழங்குதல்
11.மத தலங்அனுமதி களை புத்துயிர் ஊட்டுவதற்கான திட் டங்கள்
12.வாகன அனுமதி பத்திரம் பெற்றுக் கொடுத்தல் மற்றும்   மோட்டார் வாகன திணைக்கள ஏனைய சேவைகள்
13.வெவ்வேறு  துறைகளில் பயிற்சிகள் தொடர்பாக இளைஞர் , யுவதி  அறிவுரை
14.சிறு தொழில் தொடங்குவது தொடர்பாக அறிவுரை
15. காணி உரிமை சம்மந்தமான பிரச்சனைகள் தீர்க்கப்படுவதுடன் காணி அனுமதி பத்திரம்  வழங்குதல்
16. கிராமப்  பாதைகள் அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையான உதவிகள் வழங்குதல்
17. சிறு தொழில் தொடங்குவது தொடர்பாக அறிவுரை வழங்குதலும் வழிகாட்டலும்  போன்ற பல்வேறு விதமான சேவைகளை பொது மக்கள் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
 நடமாடும் ஜனாதிபதி உத்தியோகபூர்வ  பணி சேவையில்  கனடா காரை கலாச்சார மன்றத் தலைவர் திரு. சபாரத்தினம் பாலச்சந்திரன்  அவர்களும்   கலந்து கொள்வதோடு, அன்றைய  தினம்  பொது மக்களுக்குஇலவச  மரக் கன்றுகளை வழங்கி வைப்பார்.  இந்த நடமாடும் சேவையில் மரக்கன்று விநியோகத்திற்கான அனுசரணையை கனடா காரை கலாச்சார மன்றம் பொறுப்பேற்கின்றது  என்பதும் குறிப்பிடத்தக்கது.