கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரை அபிவிருத்தி சபை நடாத்திய கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் காரைநகர் மாணவர்களுக்கான இலவச கல்வி வழிகாட்டல் முதலாவது கருத்தரங்கு 18.10.2019 வெள்ளிக்கிழமை காரைநகர் இந்துக்கல்லூரியில் ஆரம்பமானது.

 

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரை அபிவிருத்தி சபை நடாத்திய கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் காரைநகர் மாணவர்களுக்கான இலவச கல்வி வழிகாட்டல் முதலாவது கருத்தரங்கு 18.10.2019 வெள்ளிக்கிழமை காரைநகர் இந்துக்கல்லூரியில் ஆரம்பமானது.

22.09.2019 அன்று நடைபெற்ற கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக சபை கூட்டத்தின் போது காரைநகரில் கனடா காரை கலாச்சார மன்றம் தொடர்ந்து செயற்படுத்தவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திட்டம் 1. காரைநகர் பாடசாலைகளில் கல்வி கற்கும் தரம் 10 மாணவர்கள் சாதாரண தர பொதுப்பரீட்சைக்கு தயாராகும் வகையில் கல்விக்கருத்தரங்கு நடாத்துவதற்கு பாடசாலை அதிபர் ஆசிரியர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று அதனை இவ்வருடம் முதல் ஆரம்பித்து வைப்பது என நிர்வாக சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காரை இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி, வியாவில் சைவ வித்தியாலயம், சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தரம் 10இல் கல்வி கற்கும் 100க்கு மேற்பட்ட மாணவர்கள் பயனடைவார்கள்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக சபை எடுத்த தீர்மானத்தின்படி கல்வி பொதுதராதர சாதரண தர பரீட்சைக்கு தோற்றும் காரைநகர் மாணவர்களுக்கு கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன் காரை அபிவிருத்தி சபை நடாத்திய இலவச கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு ஆரம்பமானது.முதலாவது நாளிலே கணித பாடத்திற்கான கருத்தரங்கு முழுமையான முறையில் நடைபெற்றது.பாடசாலைகளின் ஊடாக மாணவர்களின் புள்ளிகள் பட்டியலை பெற்று அவர்களின் அடைவுமட்டங்களுக்கு ஏற்றவாறு ABCD என நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு நான்கு வளவாளர்களினால் மேற்கொள்ளப்பட்டது.கணித பாடத்திற்கான அடைவுமட்டத்தினை மேம்படுத்தும் பொருட்டு மேற்படி திட்டம் முன்னெடுக்கப்பட்டது.