மனிதநேய பணியை தொடர்ந்து மேற்கொள்கின்ற கனடா காரை கலாச்சார மன்றம்

 

மனிதநேய பணியை தொடர்ந்து மேற்கொள்கின்ற

கனடா காரை கலாச்சார மன்றம்

ஆரோக்கியமான உணவு,  வசிப்பதற்கு   பொருத்தமான இருப்பிடம்,  மானத்தை காப்பதற்கு ஏற்றாற்போல்  ஆடை  என்பன மனிதனின் அடிப்படை வாழ்க்கை  தேவைகளாக அமைந்து நிற்கின்றன.  இவற்றில் ஏதாவதொன்று சீரற்ற நிலையில் காணப்படுமாயின்,  மனிதனின்  அடிப்படை சமநிலையை பேணமுடியாது   போய்விடுகின்ற துரதிஷ்டமான நிலையினை சமுதாயத்தில் காண்கின்றோம்.

அந்த வகையில் காரைநகர் அல்லின் வீதியை சேர்ந்த திரு.சசிகுமாரும், அவரது துணைவியார் தவமணியும் அடிப்படை வசதிகளற்ற கொட்டில் வீட்டில் வசித்து வருகின்றனர். சசிகுமார் அவர்கள் தவிர்க்கமுடியாத  போர்க்கால  சூழ்நிலையில்  அகப்பட்டு ,  பதினேழு துப்பாக்கி ரவையின் சன்னங்களை வெளிய  எடுக்க முடியாத நிலையில் உடம்பிலே   தாங்கிய வண்ணம் வாழ்ந்து வருகின்றார்.  இந்தவடுக்களோடும்,   உறையுளும் வசதிகள்  இன்றியும்,  தன்னையே கொண்டு செல்ல முடியாத நிலையிலும் காலத்தை ஒட்டி வருகின்றார்..

உறவுகளின் வாழ்வாதார வசதிகளை மேம்படுத்துவது கனடா காரை கலாச்சார மன்றத்தின் குறிக்கோள்களில்  ஒன்றாகும்.  அண்மையில்  ஊருக்கு சென்ற மன்ற தலைவரும்,  காரை  அபிவிருத்தி சபையினரும் இணைந்து நேரடியாக பார்வையிட்டு விபரங்களை அறிந்து கொண்டதின் பின்னராக உங்களிடம் ஆதரவுக்  கரம் நீட்டுகின்றோம்.

மாரி  மழை பொழிவதற்குரிய காலம் நெருங்கிகொண்டிருக்கும்  தருணத்தில்,  இவர்களின் வசிப்பிடம்  சீர் செய்து கொடுக்கப்பட வேண்டியுள்ளது.  மேலைத்தேய பொருளாதார  வசதி வாய்ப்புக்கள் உள்ள நாட்டில் வாழுகின்ற நாம் ,  உறவின் கண்ணீரை துடைத்து மறு மலர்ச்சி ஏற்படுத்துவோம்.  மனித வாழ்வின் அறம்  சார்ந்த   தத்துவமும் இதுவேயாகும்.

இது  தொடர்பாக மேலதிக  விபரங்களோ அன்றி உதவிக்கரம் நீட்டவோ விரும்பின் 647 818 7443 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ  அன்றி  karainagar@gmail.com  என்ற மன்ற மின்னஞ்சல் முகவரியூடாக தொடர்பு கொள்ளலாம்.

நன்றி

உறவுகளின் மனிதாபிமான சேவையில்

கனடா  காரை கலாச்சார மன்றம்