‘முதுசங்களைத்தேடி” தேடல் பயணம் மீண்டும் ஆரம்பம்

‘முதுசங்களைத்தேடி” தேடல் பயணம் மீண்டும் ஆரம்பம்
அனைத்து காரை மன்றங்களும் முதன்முறையாக ‘முதுசங்களைத்தேடி’எனும் முத்தாரக் குடையின்கீழ் இணைந்து தேடும் முதல் மழை.
இம்முறை எமது முதுசமாக காரைநகர் சைவ மகா சபையின் 1967ம் ஆண்டு வெளியிடப்பட்ட பொன் விழா மலர் எமது குடையின் கீழ் மீள் பதிப்பிற்காய் வருகின்றது. 1967ம் ஆண்டு பொன் விழா கண்ட இப்பெரும் சபையின் நூலை மறுபதிப்பு செய்வதில் பெருமகிழ்வு அடைகின்றோம். எமது ஊரில் உருவாக்கப்பட்ட முதல் ஒரு தலையாய சபையின் பொன் விழா மலர் இதுவாகும்.
1915ம் ஆண்டு காரைநகர் சவைப் பெருமக்களால் ஆரம்பிக்கப்பட்டு. தமிழையும் சைவத்தையும் எம் ஊரில் தறிகெட்டு விடாது (ஆங்கிலேயர் ஆட்சியில் ) தழைக்க வைக்க பல தொண்டுகள் ஆற்றியது எமது சைவ மாக சபை. இச் சபையின் ஸ்தாபக அங்கத்தவராகவும், செயலாளராகவும் , தலைவராகவும் தனது சீவிய காலம் வரையும் நற்தொண்டாற்றியவர் அமரர் திரு.இ .நாகலிங்கம் ஐயா அவர்கள். ஆனால் ஐயா அவர்கள் இவ் பொன் விழா மலர் வெளிவருவதற்கு இரு
வருடங்களுக்கு முன்னே இறைவனடி எய்திவிட்டார். இவர் பணியை இச் சபை என்றென்றும் நினைவுகூறும்.
சைவ மகா சபையின் பொன் விழா மலருக்கு ஆசிச் செய்திகள் வழங்கிய 10பேரில் ஒவ்வொருவரும் தத்தமக்கு ஈடுஇணை அற்றவர்கள். இருந்தும் இவர்களில் குறிப்பிடத்தக்க பெரியவர்கள் , ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி யகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் , மதுரை திருஞானசம்பந்தர் ஆதீனம் திருவருள் தவயோக ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக பரமாசாரிய சுவாமிகள், தருமையாதீனம் 25வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை சுப்ரமணிய தேசிக ஞானசம்பந்த பராமச்சாரிய சுவாமிகள், மற்றும் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்குவர். மேலும் தமிழுக்கும் சைவத்திற்கும் பெயர்போன 49 பாண்டித்தியவான்கள் கட்டுரைகள் வழங்கி இவ் மலரை கௌரவித்துள்ளார்கள், அத்துடன் 40க்கும் மேற்பட்ட காரை வர்த்தகப் பெருமக்கள் தங்கள் தயாள குணத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள். இந்நூல் உருவாவதற்கு தற்பொழுதும் எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பிரம்மஸ்ரீ க.வைத்தீஸ்வரக் குருக்கள் உறுதுணையாக இருந்துள்ளார் என்பது இங்கே மிகவும் குறிப்பிடத்தக்கது. எனவே எமது சைவ மகா சபையின் பொன் விழா மலரானது காரை மக்கள் ஆகிய எங்கள் ஒவ்வொருவரினதும் கைகளில் தவழவேண்டிய ஒரு நூல் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.
இப் பொன் விழா மலரை எமது ”முசங்களைத்தேடி” கூரையின் கீழ் கொண்டுவர முதற்காரணமாய் இருந்தவர் சுவிஸ் காரை அபிருத்தி சபையின் தலைவர் திரு.பூபாலபிள்ளை விவேகானந்தா ஆவார். இந்நூல் மீள்பதிப்பு வேலைகள் இன்று 18-01-2013 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றது. இதன் இரண்டாம் பதிப்பின் முதல் வெளியீடும் சைவ மகா சபையிலேயே வரும் பங்குனி மாத இறுதியில் வெளியிடப்படும் என்பது பெருமைக்குரியது . தொடர்ந்து சுவிஸ், லண்டன், கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் வெளியீட்டு வைக்கப்படும். இதன் மூலம் வரும் நிதி மீண்டும் எமது சைவ மகா சபையை புத்துயிர் பெறுவதற்கு பயன்படுத்தப்படும் என்பதனை பெரு மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.
வித்துவான் F .X .C நடராஜா அவர்களின் படைப்பான காரை மான்மியம் இரண்டாம் பதிப்பினைத் முதன் முறையாக
”முதுசங்களைதேடி” எனும் தலைப்பில் பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கமும் , கனடா காரை கலாச்சார மன்றமும் இணைந்து ஆரம்பித்துவைத்த இத் திட்டம் இன்று அனைத்து காரை மன்றங்களையும் ஒன்றிணைத்து ஒரு குடைக்கின் கீழ் கொண்டுவந்துள்ளது என்றால் அது மிகையாகாது.
பொன் விழா மலர் ஆசிரிய விருத்தத்தில் இருந்து ஒரு துளி …..
சிவநெறியுஞ் செழுந்தமிழுஞ் சேருமிரு கண்ணே போலச்
சிறப்பினொடு காத்துவருங் காரைநகர்ச் சீரியோர்கள்
தவமுதல்வன் யோகமுனி தண்ணருள்கூர் ஆசியோடு
தழைத்தோங்க வைந்துபத்தி னாண் டின்முன் தாபித் தோங்கும்
அவனிமிசைத் தமிழ்சைவம் வளர்ச்சியுற வரிய தொண்டை
யாற்றிவருஞ் சைவமகா சபையினிதி னமைத்து வாழ்க
நவநவமா யஃதாற்றுஞ் சிவப்பணிகள் நாளும் வாழ்க
நலமோங்கு நறுந்தமிழுங் கலைகளுடன் நன்கு வாழ்க .
ஒற்றுமையே எமது பலம்
நன்றி

பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கம்

”முதுசங்களைத்தேடி ” நூல் வெளியீட்டு குழு.

workday

2 comments

  1. Thank you Dear Mr.Ganeshan for your best wishes for ”Saiva Maha Sabai Pon Vozha Mlalar”.
    Thhanks
    Kumar
    K.W.S – UK

    • S.K.Gaenshan on January 18, 2013 at 5:55 pm

    Our Best wishes for the success of this Malar.
    Let this progress by CREATING up the ROOTS OF OF KARAINAGAR GENERATION.
    S.K.Ganeshan.

Comments have been disabled.