க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களிற்கு பிரபல்யம் மிக்க வளவாளர்கள் பங்குகொண்ட கல்விக் கருத்தரங்கு கனடா-காரை கலாசார மன்றத்தின் பூரணமான அனுசரணையில் சிறப்பாக நடைபெற்றது.

 

க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களிற்கு பிரபல்யம் மிக்க வளவாளர்கள் பங்குகொண்ட கல்விக் கருத்தரங்கு கனடா-காரை கலாசார மன்றத்தின் பூரணமான அனுசரணையில் சிறப்பாக நடைபெற்றது.

காரைநகர்ப் பாடசாலைகளிலிருந்து; க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்ற மாணவர்களை தயார்படுத்தி நம்பிக்கையோடு பரீட்சையை எதிர்கொண்டு அவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் உன்ற நோக்குடன் கனடா-காரை கலாசார மன்றத்தின் அனுசரணையுடன் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் கடந்த சில ஆண்டகளாக நடைபெற்று வருகின்ற கல்விக் கருத்தரங்கானது மாணவர்களதும் ஆசிரியர்களதும் வரவேற்பனைப் பெற்ற செயற்பாடாக அமைந்து விளங்குவதாகும். ஆந்த வகையில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள குறிப்பிட பரீட்சைக்குத் தோற்றவுள்ள 120 வரையான மாணவர்களிற்கு விஞ்ஞானம் தமிழ் சமயம் வரலாறு ஆகிய பாடங்களிற்கான செயரமர்வு காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில்  வெள்ளி சனி ஞாயிறு (05.05.2023, 06.05.2023, 07.05.2023) ஆகிய தினங்களிலும் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது. பாடசாலைகளின் ஆசிரியர்களுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல்யம் மிக்க ஆசிரியர்களும் இணைந்து மாணவர்கள் திருப்தியடையும் வண்ணம். மிகுந்த பயனுள்ள இககல்விக் கருத்தரங்கினை நடாத்தியிருந்தனர்.

இக்கருத்தரங்கானது தமக்கிருந்த பல சந்தேகங்களையும் தீர்த்து வைத்து தெளிவூட்டலை ஏற்படுத்தியிருந்ததாகவும் எதிர்காலத்தில் இதனை தொடர்ந்து நடாத்துவது மட்டுமல்லாது ஏனைய தொகுதிப் பாடங்களையும் இதில் இணைத்துக் கொள்வது அவசியமானது எனவும் அக்கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவர்கள் தமது கருத்தக்களை பதிவிட்டுள்ளனர். அத்துடன் இக்கருத்தரங்கிற்கான பூரண அனுசரணையினை வழங்கி உதவிய கனடா-காரை கலாசார மன்றத்திற்கும் தமத நன்றியையும் பாராட்டினையும் தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

கனடா-காரை கலாசார மன்றத்தின் அனுசரணையில் கணித பாடத்திலான முன்னோடிப் பரீட்சையும் பயிற்சிக் கருத்தரங்கும் ஏற்கனவே தனியாக நடைபெற்றிருந்தமை வாசகர்கள் அறிந்ததாகும்.

கருத்தரங்கில் பங்குகொண்ட அனைவருக்கும் தேநீர் சிற்றுண்டு வகைகள் என்பன மூன்று நாட்களிலும் பரிமாறப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புகைப்படங்களை கீழே பார்வையிடலாம்: