வாழ்க்கைக்காகக் கல்வி வாழ்க்கை மூலம் கல்வி வாழ்க்கை முழுவதும் கல்வி என்று கல்விக்கு வடிவம் கொடுத்த என் ஆசான் அமரர் ஆனான்.

JEGATHEESWARA SARMAவாழ்க்கைக்காகக் கல்வி வாழ்க்கை மூலம் கல்வி வாழ்க்கை முழுவதும் கல்வி என்று கல்விக்கு வடிவம் கொடுத்த என் ஆசான் அமரர் ஆனான்.
எந்தப் பெருமையும் இல்லாத அற்ப மனிதர்கள் தங்களை அறிவுச்சுடராக எண்ணி ஆணவத்துள் ஆழ்ந்து கிடக்க எல்லாப் பெருமைகளையும் கொண்ட பேராற்றல்மிக்க பெரியவர்கள் தங்களை ஏதுமறியாச் சிறியோராகவே சிந்தித்துப் பணிந்து வாழ்வது தான் குணங்களிலேயே சிறந்த குணம் என்று வாழ்ந்த மகான்.
மனிதனுக்குள் புதைந்து இருக்கும் பூரணத்துவத்தை வெளிப்படுத்துவதே கல்வி. காணப்படும் உலகம் வேறு அறியப்படும் உலகம் வேறு என்ற பிளேட்டோவின் தத்துவமாகட்டும் அரிஸ்டாடலின் புத்தகமாகட்டும் கல்வியின் முதல் நோக்கமே ஒழுக்கம் தான் ஒழுக்கம் தராத கல்வி முழுமையற்றது அதனால் அழிவு தான் உருவாகும் என்ற ஒப்பற்ற தீர்க்கதரிசி.
தனி மனிதர்களைச் சமுதாயத்துக்குப் பயனுள்ளவர்களாக மாற்ற கல்வியே சிறந்த சாதனம் என்பதை அழுத்தமாக நம்பினார். கர்மயோகிகளைப் போல் எங்கள் ஊரின் மாணவ சமுதாயத்திற்காக கற்பூரமாக கரைந்தவர் மெழுகுவர்த்தியாக உருகிய உத்தமர்.
மக்கள் சேவையே மகேசன் சேவை என்று முழங்கிய விவேகானந்தர்.
‘ஊருக்கு உழைத்திடல் யோகம் பிறர் நலன் ஓங்கிடுமாறு தன்னை வருத்துதல் யாகம்’
கல்வி குறித்த பார்வை நம் மக்களுக்கு மாற வேண்டும். எல்லோருமே மருத்துவம் கட்டிடப் பொறியியல் என்றில்லாமல் கற்றுக் கொடுப்பது கலை வளர்ப்பது……
அந்த ஆசானிடம் கல்வி பயின்றதையிட்டு நான் பெருமைப்படுகின்றேன். பத்தாம் தரத்தில் எனக்கு சமயமும் தமிழும் கற்பித்தவர்.
யாழ்ற்றன் கல்லூரியின் அந்த திறந்தவெளி வகுப்பறை. கூடவே என் அருகில் சர்வேஸ்வரன் முன்னால் சக்தி கணபதி புதுறோட் கந்தையா ரீச்சரின் ராசன் கருங்காலி சோதி சின்ன சீமாட்டி லண்டன் ரவி சின்னாலடி சிவானந்தன் சிவபதம் அடைந்த சூரி மகேசன்………!!!
நம்பியாண்டார் நம்பி திருவெம்பாவை சமயகுரவர் ……..!!!
தமிழில் இலக்கணம் இலக்கியம் …………..!!!
யெகதீஸ்வர மாஸ்டரிடம் நான் எழுதி அதிக மதிப்பெண் வாங்கிய கட்டுரை ‘நான் யாருமற்ற தீவில் விடப்பட்டபோது….’ என்பதாகும்.
இதை விட சுவாரஸ்யமானது ஏதாவது ஒரு கட்டுரைக்கு ஓட்டு மொத்தக்கட்டுரையையும் எழுதி புலவர் பூரணம் ஆசரியையிடமும் என் ஆருயிர் நண்பன் பாபுவிடமும் (சர்வேஸ்வரன்) நான் வாங்கிய புகழாரம் தான்.

You Cannot Change Your Destination Overnight

But You Can Change Your Direction Overnight!

Well, Oprah Winfrey makes a living hanging out talking with People. Tiger Woods loves to play Golf. Ellen De Generes Loves to make people Laugh. Donald Trumph loves to make deals and build Buildings.

It’s Possible to make living doing what you loveஎன்று வாழ்ந்து காட்டியவர். தாயை நேசித்த தவப்புதல்வர்.
வாசிப்புத்தான் வரலாற்றை உருவாக்குகிறது. வாசிப்புத்தான் கனவுகளை வடிவமைக்கிறது. ஆகவே! நீ வாசி என்று என்னுள் வாசிக்கும் விதையை ஊன்றி நீர் பாய்ச்சிய விவசாயி அவர். என்னுள் வாசிப்பின் இன்னொரு கட்டிடத்தைக் கட்டிய மேஸ்தரி!! இந்தக் கதவுகளுக் கூடாகத்தான் நான் வாசிப்பு என்ற சொர்க்க வாசலைப் பார்த்தேன். அந்த வாசலில் தான் நானும் அவனும் ஜக்கியமானோம். குருவாக நல்லறிவு மட்டுமல்ல எனக்கு இறைவனையும் காட்டிய நம்பூதிரி!!
கோடானுகோடி கூட்டுப்புழுக்களை பட்டாம்பூச்சிகளாக்கியவர்.
தேவைகளைக் குறைத்து எளிமையாக வாழ்வது ஒரு தவம். வாழ்நாளில் கடைப்பிடித்த காந்தியவாதி!!!
மோனத்தவத்தில் ஞான வேள்வி நடத்தி இறுதி நாளில் சுமைகள் அற்ற மனத்துடன் இயற்கையோடு கலந்தார்.
ஆசானின் ஆன்மா சாந்தியடைய பூமிப்பந்தில் பரந்து வாழும் அவருடைய சீடர்களோடு நானும் பிரார்த்திக்கின்றேன்.
கண்ணா! ஆழ்வார்களோடு என் அசானையும் சேர்த்துக் கொள்.

Ranjson KANAPATHIPPILLAI.