Category: காரை வசந்தம்

காரை வசந்தம் 2023 மலர்

 

காரை வசந்தம் 2023 மலர்

பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://drive.google.com/file/d/1vzK1djo2GcXe6MSuiC60khH36gpTpv1Q/view?usp=sharing

காரை வசந்தம் 2022 மலர்

காரை வசந்தம் 2022 மலர்

பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://karainagar.com/pages/wp-content/uploads/2024/04/KARAI-VASANTHAM-2022-BOOK.pdf

 

 

KARAI VASANTHAM 2022 BOOK

கலை உணர்வோடு காரை.மண்ணின் உணர்வும் பெருக்கெடுத்தோடி வரலாற்றுப் பெருவிழாவாக அமைந்துவிட்ட காரைவசந்தம் – 2023.

கலை உணர்வோடு காரை.மண்ணின் உணர்வும் பெருக்கெடுத்தோடி வரலாற்றுப் பெருவிழாவாக அமைந்துவிட்ட காரைவசந்தம் – 2023.

கனடா-காரை கலாசார மன்றத்தினால் ஆண்டுதோறும் பெருமையோடு வழங்கப்பட்டு வருகின்ற காரை வசந்தம் கலை விழா இம்முறை 21வது ஆண்டாக சென்ற டிசம்பர் 02 ஆம் திகதி சனிக்கிழமை மாலை தமிழிசைக் கலா மன்ற அரங்கில் நடைபெற்று பலவகையிலும் வரலாறு படைத்து பெருவிழாக அமைந்துவிட்டது.

காரைதீவு காரைநகராக பெயர் மாற்றம் பெற்ற நூற்றாண்டுச் சிறப்பு விழா – காரைச் சிறார்களும் இளையோரும் தமது கலைப் படைப்புக்களினால் சபையோரை கட்டிப்போட்டிருந்த விழா – காரை.மண்ணுக்கு பெரும் புகழினைத் தேடித் தந்து கொண்டுள்ள காரை.மாதாவின் புதல்வனான முன்னாள் சுவீடன் பல்கலைக்கழகப் பேராசிரியர் கலாநிதி நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து சிறப்பித்த விழா – கனடா-காரை கலாசார மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காரை.உறவுகளின் நலன்பேணுகின்ற திட்டங்களுக்கு சிறப்பாக கல்வி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பேராதரவினை வழங்கிய விழா – காரை.மண்ணின் பெருமையினையும் மகிமையினையும் பிரபலிக்கின்ற இருபத்தைந்துக்கு மேற்பட்ட ஆக்கங்கள், வரலாற்றுத் தகவல்கள், மண்ணின் நினைவுகளை சுமந்து வருகின்ற புகைப்படங்கள் உள்ளிட்ட மண் சார்ந்த பல்வேறு விடயங்களைத் தாங்கிய கனதியான சிறப்பு மலராக காரைவசந்தம் மலர் வெளியிடப்பெற்றிருந்த விழா – கலை உணர்வோடும் மண்ணின் உணர்வோடும் வருகைதந்த காரை.உறவகளினால் அரங்கம் நிரம்பி வழிந்த விழா – என அனைத்து அம்சங்களிலும் பொலிவுபெற்று வரலாறாகிய காரை.வசந்தத்தின் பெருவெற்றி குறித்து இவ்விழாவின் வெற்றிக்காக உழைத்த கனடா-காரை கலாசார மன்றமும் கனடா வாழ் காரை உறவுகளும் பெருமிதமும் பெரு மகிழ்ச்சியும் அடையமுடியும்.

இவ்விழாவின் சிறப்பினை இங்கே முன்னர் பதிவிடப்பட்டிருந்த காணொளி வாயிலாக பார்த்து தெரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புவதுடன் தற்போது, விழாவின் சிறப்பினை மேலும் வெளிப்படுத்துகின்ற நூற்றுக்கு மேற்பட்ட புகைப்படங்கள் எடுத்து வரப்பட்டுள்ளன.

படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://photos.app.goo.gl/WmNefqfKeXyE7hST8

 

 

“காரை வசந்தம் 2023” (DEC 02, 2023)

கனடா காரை கலாச்சார மன்றத்தின் காரை வசந்தம் மலரில் 2007ம் ஆண்டு வெளியான கட்டுரை- நமது வாழ்வும் வளமும் – பேராசிரியர் கலாநிதி நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா

நமது வாழ்வும் வளமும்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் காரை வசந்தம் மலரில் 2007ம் ஆண்டு வெளியான கட்டுரை- காரைதீவு – பேராசிரியர் கலாநிதி பொன்னம்பலம் இரகுபதி

காரை தீவு

ரொரன்ரோ விமானநிலையம் வந்தடைந்த “காரை வசந்தம்-2023” இன் பிரதம விருந்தினர் பேராசிரியர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களை கனடா-காரை கலாச்சார மன்ற தலைவர், உப தலைவர், உப செயலாளர் மற்றும் மன்றத்தின் முன்னைநாள் பொருளாளர் ஆகியோர் வரவேற்றனர்.

ரொரன்ரோ விமானநிலையம் வந்தடைந்த “காரை வசந்தம்-2023” இன் பிரதம விருந்தினர் பேராசிரியர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களை கனடா-காரை கலாச்சார மன்ற தலைவர், உப தலைவர், உப செயலாளர் மற்றும் மன்றத்தின் முன்னைநாள் பொருளாளர் ஆகியோர் வரவேற்றனர்.

காரைதீவு “காரைநகர்” பெயர் மாற்றம் பெற்ற நூற்றாண்டை சிறப்பிக்குமுகமாக காரைநகர் மக்கள் ஒன்றிணைந்து எடுக்கும் வரலாற்று சிறப்புமிக்க விழாவாக 21 வது காரை வசந்தம் எதிர்வரும் சனிக்கிழமை (DEC 02, 2023) மாலை 5.00 மணிக்கு 1120,Tapscott Road, Unit 3 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழ் இசைக் கலா மன்றத்தின் தமிழ்க் கலை அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இளையவர் முதல் பெரியோர் வரை கலந்து ஊர் நினைவுகளை மீட்டு, உறவு கொண்டாடி மகிழும் இனிமையானதொரு வசந்தமாக அன்றைய தினம் அமையவுள்ளது.

இந்நாளில் எம் காரை மண்ணின் நினைவாக கலந்து சிறப்பிக்குமாறு அனைத்து கனடா காரை நல்லுள்ளங்களையும் கேட்டுக் கொள்கின்றேம்.

 

 

காரைதீவு “காரைநகர்” பெயர் மாற்றம் பெற்ற நூற்றாண்டை சிறப்பிக்குமுகமாக கனடா காரை கலாச்சார மன்றத்தின் “காரை வசந்தம் 2023”

காரைதீவு “காரைநகர்” பெயர் மாற்றம் பெற்ற

நூற்றாண்டை சிறப்பிக்குமுகமாக

கனடா காரை கலாச்சார மன்றத்தின்

“காரை வசந்தம் 2023”

கனடா காரை கலாச்சார மன்றத்தின் “காரை வசந்தம்” எதிர்வரும் சனிக்கிழமை (DEC 02, 2023) மாலை 5.00 மணிக்கு 1120,Tapscott Road, Unit 3 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழ் இசைக் கலா மன்றத்தின் தமிழ்க் கலை அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

காரைதீவு “காரைநகர்” பெயர் மாற்றம் பெற்ற நூற்றாண்டை சிறப்பிக்குமுகமாக “காரை வசந்தம் 2023” கலை விழா பல்சுவைக் கலை நிகழ்வுகளைத் தாங்கி வெகு சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் விழா அமைப்புக் குழுவினால் செய்யப்பட்டுள்ளது.

காரை வசந்தம் விழாவில் காரைதீவு “காரைநகர்” பெயர் மாற்றம் பெற்ற நூற்றாண்டை சிறப்பிக்குமுகமாக இம்முறை காரை மண்ணின் பெருமையினை எடுத்தியம்பும் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

21வது ஆண்டாக வீசவுள்ள காரை வசந்தம் சிறப்படையவும், காரை மக்களின் பெருமையை கனேடிய பல்கலாச்சார மண்ணில் எடுத்தியம்பவும், கனடா வாழ் காரை மக்களுடன் பூமிப்பந்தில் பரந்து வாழும் காரை நல்லுள்ளங்களிற்கு அழைப்பு விடுக்கின்றோம். அனைவரும் வருக. காரை மண்ணின் புகழ் பரவச் செய்வோம்.

                நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் காரை வசந்தம் கலை விழாவிற்கு தொண்டர்களாகப் பணியாற்ற விரும்புவோர் பதிவுசெய்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் காரை வசந்தம் கலை விழாவிற்கு

தொண்டர்களாகப் பணியாற்ற விரும்புவோர்

பதிவுசெய்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.

டிசம்பர் மாதம் 02ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள காரை வசந்தம் கலை விழாவிற்கு தொண்டர்களாகப் பணியாற்ற விரும்பும் காரைநகருடன் தொடர்புடைய இளையோர் karainagar@gmail.com என்ற மன்றத்தின் மின்னஞ்சல் ஊடாக பின்வரும் விபரங்களை பதிவுசெய்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம். நிகழ்வுகளின் நிறைவில் இவர்களிற்கு தொண்டர் சேவைச் சான்றிதழ் வழங்கப்படும்.

First Name (முதற்பெயர்) :

Last Name (கடைசிப் பெயர்):

தொலைபேசி இலக்கம்:

 

                  நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

முதலாவது ஆண்டிலேயே வெற்றி விழாவாக அமைந்த முதலாவது காரை வசந்தத்தின் காணொளிப் பதிவு.

முதலாவது ஆண்டிலேயே வெற்றி விழாவாக அமைந்த

முதலாவது காரை வசந்தத்தின் காணொளிப் பதிவு.

கனடா-காரை கலாசார மன்ற வரலாற்றில் முக்கியமான மைல் கல் முதலாவது காரை வசந்தத்தின் வெற்றி எனலாம். 2000ஆம் ஆண்டு மே மாதம் 05ஆம் திகதி கென்னடி & லோறன்ஸ் சந்திப்பிலுள்ள கல்லூரி மண்டபத்தில் கனடா-காரை கலாசார மன்றத்தின் முதலாவது “காரை வசந்தம்” வீச ஆரம்பித்தது. கனடா-காரை கலாசார மன்றத்தின் ஆரம்பகர்த்தாக்களுள் ஒருவரும் அதன் தலைவராகவும் பணியாற்றியிருந்த அமரர் சபாபதி சபாநடேசன் அவர்களது தலைமையில் அமைந்திருந்த நிர்வாகத்தின் பெருமுயற்சியினாலும் கடும் உழைப்பினாலும் முன்னெடுக்கப்பட்டு நடாத்தப்பட்டிருந்த முதலாவது காரை வசந்தமானது பாராட்டும்படியான சிறந்த கலை நிகழ்வுகளுடன் மண்டபம் நிறைந்த காரை மக்களுடன் பெரு வெற்றி விழாவாக அமைந்திருந்தது. முதலாவது காரை வசந்தத்தத்தின் இந்த வெற்றியானது பெரும் ஊக்குவிப்பாகவும் தொடர்ந்து இவ்விழாவினை முன்னெடுத்து நடாத்துவதற்கான அடித்தளமாகவும் அமைந்துவிட்டது எனலாம். காரை வசந்தம் 22வது ஆண்டாக நடைபெறவிருக்கும் இத்தருணத்தில் முதலாவது காரைவசந்தத்தின் காணொளிப் பதிவினை கீழே பார்வையிடலாம்:

காரை வசந்தம் – 2023

[su_audio url=”http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/11/Karai-Vasantham-2023.mp3″ autoplay=”no”]

காரைதீவு காரைநகராக மாற்றம்பெற்ற நூற்றாண்டுச் சிறப்பிதழாக மலரவிருக்கும் “காரை வசந்தம்-2023” சஞ்சிகைக்கு ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

காரைதீவு காரைநகராக மாற்றம்பெற்ற நூற்றாண்டுச் சிறப்பிதழாக மலரவிருக்கும் “காரை வசந்தம்-2023” சஞ்சிகைக்கு ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

காரைதீவு காரைநகராக மாற்றம் பெற்ற நூற்றாண்டு நிறைவு மண்ணின் மக்களால் கொண்டாடப்பட்டு வரும் இவ்வேளையில் காரை வசந்தம் கலை விழாவை முன்னிட்டு எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி வெளிவரவுள்ள காரை வசந்தம் சஞ்சிகை நூற்றாண்டு சிறப்பிதழாக மலரவுள்ளது.

இச்சஞ்சிகையில் இடம்பெறுவதற்கு தரமான ஆக்கங்கள் கட்டுரை, கவிதை வடிவில் எதிர்பார்க்கப்படுகின்றன. காரைநகரின் தொன்மை, வரலாறு, கல்வி, கலை, கலாசாரம், சமயம், பொருளாதாரம், அபிவிருத்தி ஆகியன தொடர்பில் மண்ணின் மகத்துவத்தை பிரதிபலிக்கக்கூடிய கருத்துக்களையும் தகவல்களையும் உள்ளடக்கியதான ஆக்கங்களை அனுப்பி வைக்க விரும்புவோர் எதிர்வரும் 21-10-2023 சனிக்கிழமைக்கு முன்னதாக karainagar@gmail.com என்ற கனடா-காரை கலாசார மன்றத்தின் மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

காரைநகர் தொடர்புபட்ட அரியவகை புகைப்படங்கள் ஆவணங்கள் வைத்திருப்போர் தந்து உதவினால் அவை திரும்ப ஒப்படைக்கப்படும்.

காரை வசந்தம் – 2023 மலர்க்குழு
கனடா-காரை கலாசார மன்றம்.

 

காரை வசந்தம் – 2023

“காரைநகர்” பெயர் மாற்றம் பெற்று நூற்றாண்டை கெளரவிக்கும் வகையில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள “காரை வசந்தம் 2023”.

“காரைநகர்” பெயர் மாற்றம் பெற்று நூற்றாண்டை

கெளரவிக்கும் வகையில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள

“காரை வசந்தம் 2023”.

“காரைநகர்” பெயர் மாற்றம் பெற்று நூற்றாண்டை கெளரவிக்கும் வகையில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

பரதநாட்டியம், சங்கீதம், நாடகம் உட்பட அனைத்து வகையான முத்தமிழ் நிகழ்வுகளுடன் சுவாரசீயமான நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

கலை நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்கும் சிறுவர்கள், ஆசிரியர்கள், பெரியோர்கள் Oct 20, 2023ற்கு முன்னர் மன்றத்தின் மின்னஞ்சல்:karainagar@gmail.com ஊடாகவோ அன்றி சிவநாதன் 416 418 5697 / நாகேஸ்வரி 647 973 4507 / ஞானாம்பிகை 647 857 2277 என்ற தொலைபேசி ஊடாகவோ தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். மின்னஞ்சல் விரும்பத்தக்கது.

அத்துடன் காரை வசந்தம் விழா நிகழ்வின் போது தமிழ் தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம், மன்ற கீதம் என்பவற்றினை இசைப்பதற்கு ஆர்வமுள்ள சிறுவர், சிறுமியர் Oct 20, 2023ற்கு முன்னர் மன்றத்தின் மின்னஞ்சல்:karainagar@gmail.com ஊடாகவோ அன்றி சிவநாதன் 416 418 5697 / நாகேஸ்வரி 647 973 4507 / ஞானாம்பிகை 647 857 2277 என்ற தொலைபேசி ஊடாகவோ தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி!

                     நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

“காரை வசந்தம் 2023”

“காரை வசந்தம் 2023”

Dec 02,2023 அன்று தமிழிசைக் கலா மன்ற அரங்கில் “காரை வசந்தம் 2023” நடாத்துவதற்கு கனடா காரை கலாசார மன்றம் தீர்மானித்துள்ளது.

காரைநகர் என்ற பெயர் மாற்றம் பெற்று நூறு ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு “காரை வசந்தம் 2023” சிறப்பு நிகழ்வாக நடாத்துவதற்கும் சிறப்பு மலர் வெளியிடுவதற்கும் கனடா வாழ் காரைநகர் மக்கள் அனுசரணை வழங்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றது.

“காரைநகர்” பெயர் மாற்றம் பெற்று நூற்றாண்டை கெளரவிக்கும் வகையில் “காரை வசந்தம் 2023” கலைநிகழ்வுகளை ஒழுங்கமைக்கும் வகையில் கனடா காரை கலாசார மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களை உள்ளடக்கிய விழா குழுவில் இணைந்து கொள்ள கனடா வாழ் காரைநகர் மக்களிற்கு அழைப்பு விடப்படுவதோடு கனடிய காரை இளையோர்களை இந்த விழா குழுவில் இணைத்துக்கொள்ளுமாறு பெற்றோர்களிற்கு அன்பான வேண்டுகோளையும் விடுக்கிறோம்.

விழா குழுவில் இணைந்து கொள்ள தலைவர் (416 418 5697) அல்லது செயலாளருடன் (647 973 4507) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி!

                     நிர்வாகம்
கனடா காரை கலாசார மன்றம்.

காரை வசந்தத்தின் சுகத்தினை அனுபவித்து மகிழ தமிழிசைக் கலா மன்ற அரங்கை நிரப்பிய காரை.மண்ணின் மைந்தர்கள்.

காரை வசந்தத்தின் சுகத்தினை அனுபவித்து மகிழ தமிழிசைக் கலா மன்ற அரங்கை நிரப்பிய காரை.மண்ணின் மைந்தர்கள்.

கனடா-காரை கலாசார மன்றம் வழங்கி வருகின்ற காரை வசந்தம் கலை விழாவானது சென்ற 10ஆம் திகதி (10.12.2022) சனிக்கிழமை மாலை தமிழிசைக் கலா மன்ற அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. கலை உணர்வும் காரை மண்ணின் உணர்வும் பீறிட்டுப் பாய்ந்தது எனக் கூறும் அளவிற்கு அரங்கம் காரைநகர் மக்களால் நிரம்பி வழிந்தது. காரை வசந்தம் கலைவிழாவில் தரமான கலை நிகழ்வுகளைக் கண்டுகழிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் சங்கமித்த காரை மக்களின் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை எனக் கூறக்கூடியவாறு காரை மண்ணின் சிறார்களும் இளையோரும் மூத்த கலைஞர்களும் வழங்கிய கலைநிகழ்ச்சிகள் அமைந்திருந்தன. முன்னதாக அறிவிக்கப்பட்டவாறே சரியாக மாலை 5.00 மணிக்கே நிகழ்வுகள் தொடங்கப்பட்டிருந்தமையும் இரவு 11.00 மணிக்கு நிகழ்வு முடிவுற்றிருந்தமையும் மட்டுமல்லாது எவ்வித தொய்வும் இன்றி ரசிகர்களிற்கு சலிப்பு ஏற்படாவண்ணம் நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமையும் அனைவரதும் ஏகோபித்த பாராட்டினைப் பெற்றிருந்தது.

காரை.மண் தந்த பல்துறைக் கலைஞரும் “ஒருத்தி” திரைப்படத்தை இயக்கி ஈழத்து திரைப்படத்துறை வரலாற்றில் சாதனை படைத்தவருமாகிய “கலாரத்னா” P.S.சுதாகரன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்திருந்ததுடன் காரை.மண்ணையும் பெருமைப்படுத்தியிருந்தார். காரை.அபிவிருத்திச் சபையின் தலைவரான திரு.இ.சிவசுப்பிரமணியம் அவர்கள் சிறப்பு விருந்தினராக இவ்விழாவில் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

காரை.மண்ணின் புகழ்பூத்த நாதஸ்வரக் கலைஞரான காரையம்பதி N.K.கணேசன் அவர்களின் புதல்வன் “நாதகானசொரூபி” N.K.K.பவப்பிரியன் குழுவினரின் மங்கள இசையுடன் ஆரம்பித்த இவ்விழாவின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களைக் கவர்ந்திருந்தன என்பதற்குச் சான்றாக ஒவ்வொரு நிகழ்ச்சிகளின் நிறைவிலும் எழுந்த பலத்த கரகோசம் சான்று பகர்வதாகவுள்ளது. கலைக்கோயில் நுண்கலைக் கல்லூரியின் அதிபர் “நாட்டியகலாகுலநிதி” வனிதா குகேந்திரனின் மாணவர்கள் வழங்கிய அழகிய வரவேற்பு நடனம், சதங்கை நர்த்தனாலயம் அதிபர் பரதக்கலை வித்தகர் வாசு சின்னராசாவின் மாணவர்கள் வழங்கிய அசத்தலான நடனம், லயபிருந்தம் நுண்கலைக்கூட அதிபர் “சங்கீதகலாவித்தகர்” ரதிரூபன் பரஞ்சோதி அவர்கள் தயாரித்து வழங்கிய “வாத்தியபிருந்தம்” இசை நிகழ்வு, கலை அருவி நுண்கலை பயிலக அதிபர் ரேணுகா விக்னேஸ்வரனின் மாணவி மீரா செந்தில்நாதன் வழங்கிய கிராமிய நடனம், சங்கீதகலாவித்தகர் T.N.பாலமுரளி அவர்களின் மாணவன் வழங்கிய புல்லாங்குழல் இசை, நிந்துஜா மோகனேந்திரன், பவிசா மோகனேந்திரன் ஆகியோர் இணைந்து வழங்கிய Fusion நடனம், The Bassment Sound குழுவினர் வழங்கிய கலக்கல் கானங்கள் இசை நிகழ்வு என அனைத்துமே சபையோரைக் கவர்ந்து கட்டிப்போட்ட நிகழ்வுகளாகவே இருந்தன. இவற்றுள் காரையின் இளையோர் பங்குகொண்டு வழங்கிய “வாத்தியபிருந்தம்” இசை நிகழ்வு சபையோரை அதிகம் கவர்ந்து இவ்விழாவிற்கு சிறப்புச் சேர்த்த நிகழ்வாக அமைந்திருந்தது எனக் கூறினால் அது மிகையாகாது.

கனடா-காரை கலாசார மன்றத்தினால் தமிழ்மொழித் திறன் போட்டியின் ஓர் அங்கமாக நடாத்தப்பட்டிருந்த பேச்சுப்போட்டியில் பங்குபற்றி முதலாவது இடத்தினைப் பெற்ற சிறியோர் மற்றும் இளையோரின் பேச்சுக்கள் நிகழ்ச்சிகளின் இடையே இடம்பெற்றிருந்தனஇ அதேவேளையில் தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகளில் ஆறுபிரிவுகளிலும் முதலாம் இடத்தினைப்பெற்ற 22 வெற்றியாளர்களிற்கு தங்கப் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டதுடன் இரண்டாம் மூன்றாம் இடத்தினைப் பெற்ற வெற்றியாளர்களிற்கும் பங்குபற்றிய போட்டியாளர்களிற்கும் இவ்வரங்கில் பரிசில்கள் வழங்கப்பட்டிருந்தன.

பல்வேறு தடைகளையும் சவால்களையும் தாண்டி திரு.சிவசம்பு சிவநாதன் அவர்களின் தலைமையில் அண்மையில் அமையப்பெற்றுள்ள கனடா-காரை கலாசார மன்றத்தின் புதிய நிர்வாகத்தினால் சிறந்த முறையில் திட்டமிட்டு ஓழுங்கமைக்கப்பட்டிருந்த இவ்விழாவின் வெற்றியானது இந்நிர்வாகம் தனது எதிர்காலப் பணிகளை முன்னெடுப்பதற்கு பெரும் ஊக்கத்தினையும் உந்துதலையும் கொடுத்துள்ளதாகவே கூறலாம்.

விழாவில் கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் சிற்றுண்டி, தேனீர் என்பன மன்றத்தின் தொண்டர்களினால் பரிமாறப்பட்டிருந்ததுடன் விழாவின் நிறைவில் இரவு உணவு எடுத்துச் செல்வதற்கும் வழங்கப்பட்டிருந்தது.

சிறந்த நிகழ்ச்சிகளைக் கண்டு கழித்த நிறைவான மனதுடன் அரங்கிலிருந்து மக்கள் வெளியேறியதை அவதானிக்கமுடிந்தது.

 

படங்களை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://photos.app.goo.gl/MSkTTFBCKT9JecYU6

 

கனடா காரை கலாசார மன்றத்தின் காரை வசந்தம் நிகழ்வில் கலந்து கொண்ட காரைநகர் அபிவிருத்திச் சபை தலைவர் திரு. இ.சிவசுப்பிரமணியம் அவர்களுடனான சந்திப்பு!

 

கனடா காரை கலாசார மன்றத்தின்

காரை வசந்தம் நிகழ்வில் கலந்து கொண்ட காரைநகர் அபிவிருத்திச் சபை

தலைவர் திரு. இ.சிவசுப்பிரமணியம் அவர்களுடனான சந்திப்பு.

கனடா காரை கலாசார மன்றத்தின் காரை வசந்தம் நிகழ்வில் கலந்து கொண்ட காரைநகர் அபிவிருத்திச் சபை தலைவர் திரு. இ.சிவசுப்பிரமணியம் அவர்களை மன்றத்தின் சார்பில் இன்று 14.12.2022 புதன்கிழமை இரவு சந்தித்து கனடா காரை கலாசார மன்றத்தின் ஊரிற்கான செயற்பாடுகள் காரைநகர் அபிவிருத்திச் சபை ஊடாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் நிர்வாக செயற்பாடுகள் குறித்தும் அளவளாவப்பட்டதுடன் இரவு போசன விருந்தும் வழங்கப்பட்டது.
கனடா காரை கலாசார மன்ற தலைவர், உபசெயலாளர், நிர்வாக சபை உறுப்பினர் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொண்டனர்.

கனடா காரை கலாசார மன்றம் வழங்கும் காரை வசந்தம் கலை விழா தொடர்பாக மன்றத்தின் தலைவர் திரு.சிவசம்பு சிவநாதன் அவர்கள் goodeveningcanada.com என்ற டிஜிட்டல் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் பதிவு!

இன்று (10.12.2022) காரை வசந்தம் கலை விழாவில் கலந்து கொள்ளும் மூன்று அதிஷ்டசாலிகளுக்கு பெறுமதிமிக்க பரிசில்கள்!

 

இன்று (10.12.2022) காரை வசந்தம் கலை விழாவில் கலந்து கொள்ளும்

மூன்று அதிஷ்டசாலிகளுக்கு பெறுமதிமிக்க பரிசில்கள்.

நடைபெறவுள்ள கலை விழாவில் கலந்துகொள்வோர் மண்டப நுழைவாயிலில் அமைந்துள்ள கருமபீடத்தில் வழங்கப்படும் சீட்டொன்றில் பெயர், தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி என்பவற்றை மட்டும் எழுதி இதற்கென ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள பெட்டி ஒன்றினுள் சேர்த்து விட்டால் விழாவின் இறுதியில் அவை அதிஸ்டம் பார்க்கப்பட்டு வெற்றியாளர் மூவருக்கு பரிசில்கள் வழங்கிவைக்கப்படும்.

1ம் பரிசில் Lenova Tab M10 Plus

2ம் பரிசில் $150 பெறுமதியான Gift Card

3ம் பரிசில் $100 பெறுமதியான Gift Card

இப் பரிசில்களுக்கான அனுசரணையை வீடுவிற்பனை முகவர் விக்கி வேலாயுதன் அவர்கள் வழங்கியுள்ளார்.

கனடா-காரை கலாசார மன்றம்

காரை.மண்ணின் மக்கள் ஊரின் உணர்வோடு சங்கமித்து மகிழும் காரை வசந்தம்-2022 கலை விழா வெகு சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி என அறிவிப்பு.

காரை.மண்ணின் மக்கள் ஊரின் உணர்வோடு சங்கமித்து மகிழும்

காரை வசந்தம்-2022 கலை விழா வெகு சிறப்பாக நடைபெறுவதற்கான

ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி என அறிவிப்பு.

எதிர்வரும் 10-12-2022 சனிக்கிழமை மாலை 5.00மணிக்கு ஸ்காபுரோ தமிழிசைக் கலா மன்ற அரங்கில் கனடா-காரை கலாசார மன்றம் 21வது ஆண்டாக வழங்கும் காரை வசந்தம் 2022 கலை விழா பல்சுவைக் கலை நிகழ்வுகளைத் தாங்கி வெகு சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் விழா அமைப்புக் குழுவினால் செய்யப்பட்டுள்ளது. மண்மீது பற்றுதி கொண்ட காரைநகர் மக்கள் உணர்வோடு சங்கமித்து மகிழுகின்ற பெரு விழாவான காரை வசந்தம் விழாவில் என்றும் போல சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டுவைக்கப்படவுள்ளது. திரளான காரை.மண்ணின் மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை அவர்களின் வசதி கருதி சிற்றுண்டிகள் பரிமாறப்படுவதுடன் எடுத்துச் செல்வதற்கான இரவு உணவும் வழங்கப்படவுள்ளது.

வீடுவிற்பனை முகவர் விக்கி வேலாயுதன் அவர்களின் அனுசரணையில் அதிஸ்டசாலி ஒருவருக்கு Lenova Tab M10 Plus பரிசாகக் கிடைக்கவுள்ளது.

சனிக்கிழமை நடைபெறவுள்ள கலை விழாவில் கலந்துகொள்வோர் மண்டப நுழைவாயிலில் அமைந்துள்ள கருமபீடத்தில் வழங்கப்படும் சீட்டொன்றில் பெயர், தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி என்பவற்றை மட்டும் எழுதி இதற்கென ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள பெட்டி ஒன்றினுள் சேர்த்து விட்டால் விழாவின் இறுதியில் அவை அதிஸ்டம் பார்க்கப்பட்டு வெற்றியாளர் ஒருவருக்கு Lenova Tab M10 Plus பரிசாக வழங்கிவைக்கப்படும்.

கனடா-காரை கலாசார மன்றம்

 

கனடா காரை கலாச்சார மன்றம் பெருமையுடன் வழங்கும் “காரை வசந்தம் 2022″

கனடா-காரை கலாசார மன்றத்தின் நிகழ்வுகளிற்கு தொண்டர்களாகப் பணியாற்ற விரும்புவோர் பதிவுசெய்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.

கனடா-காரை கலாசார மன்றத்தின் நிகழ்வுகளிற்கு

தொண்டர்களாகப் பணியாற்ற விரும்புவோர்

பதிவுசெய்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.

எதிர்வரும் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகளிலும் டிசம்பர் 10ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள காரை வசந்தம் கலை விழாவிலும் தொண்டர்களாகப் பணியாற்ற விரும்பும் காரைநகருடன் தொடர்புடைய இளையோர் karainagar@gmail.com என்ற மன்றத்தின் மின்னஞ்சல் ஊடாகவோ அன்றி 416 418 5697, 647 973 4507 ஆகிய இலக்கங்களுள் ஒன்றினை அழைத்தோ பின்வரும் விபரங்களை பதிவுசெய்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம். நிகழ்வுகளின் நிறைவில் இவர்களிற்கு தொண்டர் சேவைச் சான்றிதழ் வழங்கப்படும்.

First Name (முதற்பெயர்) :

Last Name (கடைசிப் பெயர்):

தொலைபேசி இலக்கம்:

 

              நிர்வாகம்
கனடா-காரை கலாசார மன்றம்

 

கனடா காரை கலாச்சார மன்றம் பெருமையுடன் வழங்கும் “காரை வசந்தம் 2022″

தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகளின் 1வது வெற்றியாளர்கள் அனைவருக்கும் தங்கப் பதக்கம் வழங்கி ஊக்குவிக்க முடிவு.

தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகளின்

1வது வெற்றியாளர்கள் அனைவருக்கும்

தங்கப் பதக்கம் வழங்கி ஊக்குவிக்க முடிவு.

எதிர்வரும் நொவம்பர் 13ஆம் திகதி நடைபெறவுள்ள தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகளின் வெற்றியாளர்களிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தங்கப் பதக்கம் வழங்கும் திட்டத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இம்மாற்றத்தின் பிரகாரம் பேச்சு, வாசிப்பு, சொல்வதெழுதுதல் ஆகிய போட்டிகளிலும் பண்ணிசைப் போட்டியிலும் பங்குபற்றி ஒவ்வொரு பிரிவிலும் (ஆறு பிரிவுகள்) 1வது இடத்தைப் பெற்றுக்கொள்ளும் வெற்றியாளர்களர்கள் அனைவருக்கும் தங்கப் பதக்கத்தினை வழங்கி ஊக்குவிப்பது என மன்ற நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.

முன்னர் அறிவிக்கப்பட்டவாறு ஒவ்வொரு பிரிவிலிருந்தும் 2வது 3வது இடத்தைப் பெற்றுக்கொள்ளும் போட்டியாளர்களிற்கும் பரிசில்கள் வழங்கப்படவிருப்பதுடன் பங்குபற்றி வெற்றிபெறத் தவறிய அனைத்தப் போட்டியாளர்களிற்கும் பரிசில்கள் வழங்கப்படும்.

கனடா-காரை கலாசார மன்றத்தின் நோக்கங்களுள் கனடாவாழ் காரைநகர் இளம் சமுதாயத்தின் மொழி, கலாசார மேம்பாட்டிற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பது முக்கியமானதாகும். இந்நோக்கம் மன்ற யாப்பில் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் தற்போதய நிர்வாகம் இத்தகைய செயற்பாடுகளிற்கு முக்கியத்துவம் வழங்குவதெனத் தீர்மானித்ததன் அடிப்படையிலும் இளம் சமுதாயத்தின் மொழி கலாசார மேம்பாட்டில் அக்கறையுள்ள உறுப்பினர்களது கருத்துக்களின் அடிப்படையிலும் 1வது வெற்றியாளர்கள் அனைவருக்கும் தங்கப் பதக்கங்களை வழங்கி ஊக்குவிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வழங்கப்படவுள்ள தங்கப் பதக்கங்களிற்கு அனுசரணை வழங்கி உதவ இளம் சமுதாயத்தின் மொழி கலாசார மேம்பாட்டில் ஆர்வமும் அக்கறையும் கொண்ட சில உறுப்பினர்கள் முன்வந்துள்ளனர். இதன்பொருட்டு அக்கறையுள்ள மேலும் அனுசரணையாளர்களின் உதவியை எதிர்பார்க்கின்றோம்.

இப்போட்டிகளை சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கு போட்டியாளர்களதும் பெற்றோரதும் ஒத்துழைப்பினை மீண்டும் வேண்டிநிற்கின்றோம். அதாவது போட்டி தினம் வரை காத்திராது போட்டியிட விரும்பும் அனைவரும் karainagar@gmail.com என்கின்ற மன்ற மின்னஞ்சல் ஊடாக பின்வரும் விபரங்களை உடன் பதிவுசெய்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம். பெயர்களை ஆங்கிலத்தில் பதிவுசெய்வது விரும்பத்தக்கது.

First Name:

Last Name:

தொலைபேசி இலக்கம் :

சென்ற யூன் மாதம் கற்ற வகுப்பு:

பங்குபற்றும் பிரிவு:

பங்குபற்ற விரும்பும் போட்டிகள்:

 

             நிர்வாகம்
கனடா-காரை கலாசார மன்றம்.

 

தமிழ்த்திறன் போட்டி, பண்ணிசைப் போட்டி ஆகியவற்றின் வெற்றியாளர்கள் “காரை வசந்தம்” அரங்கில் தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டு பாராட்டி ஊக்குவிக்கப்படவுள்ளனர்.

தமிழ்த்திறன் போட்டி, பண்ணிசைப் போட்டி ஆகியவற்றின்

வெற்றியாளர்கள் “காரை வசந்தம்” அரங்கில்

தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டு பாராட்டி ஊக்குவிக்கப்படவுள்ளனர்.

கனடா-காரை கலாசார மன்றத்தினால் 2000ஆம் ஆண்டு முதலாக நடாத்தப்பட்டு வருகின்ற தமிழ்மொழித் திறன், பண்ணிசை ஆகிய போட்டிகளில் ஆண்டுதோறும் காரைநகரைச் சேர்ந்த சாராசரியாக ஐம்பது வரையான பிள்ளைகளே பங்குகொண்டு வருகின்றனர். தரமான முறையில் நடாத்தப்பட்டு வரும் இப்போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு காரை வசந்தம் அரங்கில் வைத்து பரிசல்கள் வழங்கி ஊக்குவித்து வருகின்றமை சிறப்பானது என்பதுடன் தமிழ்மொழி ஆர்வலர்களது பாராட்டினையும் பெற்று விளங்குகின்றது. பேச்சுப் போட்டியின் முதலாவது வெற்றியாளர் காரை வசந்தம் அரங்கில் தமது பேச்சினை நிகழ்த்த வாய்ப்பளித்து வருவது அப்போட்டியாளர்களிற்கு பெரும் ஆர்வத்தினை ஏற்படுத்தி வருகிறது.

இவ்வாண்டு இப்போட்டியாளர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் தங்கப் பதக்கம் வழங்குவதென கனடா-காரை கலாசார மன்றம் தீர்மானித்துள்ளது.

ஆறு பிரிவுகளையும் சேர்ந்த பின்வரும் தகைமையை உடையோர் தங்கப் பதக்கத்தினை பெற்றுக் கொள்கின்ற வாய்ப்பினைப் பெற்றுக்கொள்வர்.

பேச்சு, வாசிப்பு, சொல்வதெழுதுதல் ஆகிய போட்டிகள் மூன்றிலும் பங்குபற்றியவர்களாக இருத்தல் வேண்டும்.

மூன்று போட்டிகளிலும் பெற்ற மொத்த மதிப்பெண்களுள் அதிகூடிய மதிப்பெண்களைப் பெற்ற போட்டியாளர் தங்கப் பதக்கத்தினைப் பெற்றுக் கொள்ளும் தகுதியைப் பெற்றுக்கொள்வார்.

பண்ணிசைப் போட்டியாளர்களிற்கான தங்கப் பதக்கம்.

பண்ணிசைப் போட்டியாளர்களுள் ஒவ்வொரு பிரிவிலும் அதிகூடிய மதிப்பெண்களைப் பெற்று முதலாவதாக வரும் போட்டியாளர் தங்கப் பதக்கத்தினை பெற்றுக்கொள்கின்ற வாய்ப்பினைப் பெற்றுக்கொள்வதுடன் 2வது 3வது வெற்றியாளர்களிற்கும் பரிசில்கள் வழங்கப்படும்.

அதேபோன்று பேச்சு, வாசிப்பு, சொல்வதெழுதுதல் போட்டிகளில் தெரிவு செய்யப்படும் 1வது 2வது 3வது வெற்றியாளர்களிற்கு பரிசல்கள் வழங்கப்படும்.

போட்டிகளில் பங்குபற்றி வெற்றியாளர்களாக வரத் தவறியிருப்பனும் அவர்கள் அனைவருக்கும் பங்குபற்றுதல் பரிசல்கள் வழங்கப்படும்.

இன்றே karainagar@gmail.com என்ற மன்றத்தின் மின்னஞ்சல் வழியாக கேட்கப்பட்ட  விபரங்களைப் பதிவுசெய்து போட்டிகளில் பங்குபற்றி தங்கப் பதக்கத்தினையும் பரிசில்களையும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளத் தவறாதீர்கள்.

                   நிர்வாகம்
கனடா-காரை கலாசார மன்றம்

காரை வசந்தம் 2022 மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

காரை வசந்தம் 2022

மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு

சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள்

எதிர்பார்க்கப்படுகின்றன.

பரதநாட்டியம், சங்கீதம், நாடகம் உட்பட அனைத்து வகையான முத்தமிழ் நிகழ்வுகளுடன் சுவாரசீயமான நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

கலை நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்கும் சிறுவர்கள், ஆசிரியர்கள், பெரியோர்கள் Oct 31, 2022ற்கு முன்னர் மன்றத்தின் மின்னஞ்சல்:karainagar@gmail.com ஊடாகவோ அன்றி 416 418 5697 / 647 973 4507 / 416 833 3900 என்ற தொலைபேசி ஊடாகவோ தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். மின்னஞ்சல் விரும்பத்தக்கது.

அத்துடன் காரை வசந்தம் விழா நிகழ்வின் போது தமிழ் தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம், மன்ற கீதம் என்பவற்றினை இசைப்பதற்கு ஆர்வமுள்ள சிறுவர், சிறுமியர் Oct 31, 2022ற்கு முன்னர் மன்றத்தின் மின்னஞ்சல்:karainagar@gmail.com ஊடாகவோ அன்றி 416 418 5697 / 647 973 4507 / 416 833 3900 என்ற தொலைபேசி ஊடாகவோ தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

                  நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றம் பெருமையுடன் வழங்கும் “காரை வசந்தம் 2022″

கனடா காரை கலாச்சார மன்றம் பெருமையுடன் வழங்கும்

“காரை வசந்தம் 2022″

கனடா காரை கலாச்சார மன்றத்தின் “காரை வசந்தம் 2022” DEC 10, 2022 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு 1120,Tapscott Road, Unit 3 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழ் இசைக் கலா மன்றத்தின் தமிழ்க் கலை அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

20வது ஆண்டாக வீசவுள்ள காரை வசந்தம் சிறப்படையவும், காரை மக்களின் பெருமையை கனேடிய பல்கலாச்சார மண்ணில் எடுத்தியம்பவும், கனடா வாழ் காரை மக்களுடன் பூமிப்பந்தில் பரந்து வாழும் காரை நல்லுள்ளங்களிற்கு அழைப்பு விடுக்கின்றோம். அனைவரும் வருக. காரை மண்ணின் புகழ் பரவச் செய்வோம்.

                     நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றம் ஆண்டுதோறும் மன்றத்தினால் முன்னைய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட காரை வசந்தம் மலர்களை பெற விரும்புவர்கள் மன்றத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

கனடா காரை கலாச்சார மன்றம் ஆண்டுதோறும் மன்றத்தினால் முன்னைய ஆண்டுகளில் வெளியிடப்பட்ட காரை வசந்தம் மலர்கள் கையிருப்பிலுள்ளன. இவற்றை பெற விரும்பும் அன்புள்ளங்கள் மன்றத்துடன் தொடர்பு கொள்ளவும்.

மன்ற மின்னஞ்சல் : karainagar@gmail.com

             நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

காரை வசந்தம் தொடர்பான அறிவித்தல்!

காரை வசந்தம் தொடர்பான அறிவித்தல்

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் இவ்வாண்டிற்கான காரை வசந்தம் நிகழ்ச்சி ஐப்பசி மாதம் 11ம் திகதிநடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கிசைவாக தமிழ் இசை கலாமன்ற மண்டபம் பதிவு செய்யப்பட்டு முற்பணமும் செலுத்தப்பட்டிருந்தது.

உலகளாவில் கொரோனா தொற்று 2ம் முறையாகவும் பரவி வருவதனால் காரை வசந்தம் நடத்தமுடியாத சூழல் உருவாகியுள்ளது. ஒன்ராரியோ அரசின் விதிமுறைகளிற்கமைய இவ்வருட நிகழ்ச்சிகளை இரத்துச்செய்வதென கனடா காரை கலாச்சார மன்ற நிர்வாக சபையால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இம்முடிவை மனவருத்தத்துடன்அறியத்தருகிறோம்.

        நிர்வாகசபை
கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 2020ஆம் ஆண்டுக்குரிய நிகழ்வுகள்

கனடா காரை கலாச்சார மன்றத்தின்

2020ஆம் ஆண்டுக்குரிய

நிகழ்வுகள்

 

1. கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும்

     இடம்:  Morningside Park, Area 3,4

     காலம்: July 18, 2020  சனிக்கிழமை

     நேரம்: காலை 8.00 மணிக்கு

 

 2. தமிழ்மொழித் திறன்,பண்ணிசைப் போட்டிகள்

    இடம்: Scarborough Civic Centre

    காலம்: September 12, 2020 சனிக்கிழமை

     நேரம்: காலை 8.00 மணிக்கு

 

3. காரை வசந்தம்

    இடம்: தமிழ் இசை கலாமன்ற அரங்கம்

                     (Unit 3- 1120 Tapscott Road,Scarborough.)

    காலம்: October 11, 2020 ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: மாலை 5.00 மணிக்கு

 

4. ஆருத்திரா தரிசனம்

     இடம்: கனடா றிச்மன்ட் பிள்ளையார் ஆலயம் 

                              (Richmond Hill Hindu Temple)

     காலம்: December 30, 2020 புதன்கிழமை

     நேரம்: அதிகாலை 4:45 மணி