Category: காரைக் கொண்டாட்டம்

05.08.2023 சனிக்கிழமை அன்று நடைபெற்ற கனடா காரை கலாச்சார மன்றத்தின் கோடைகால ஒன்றுகூடல் காணொளி!

காரை.உறவுகள் சங்கமித்து மகிழ்ந்த கனடா-காரை கலாசார மன்றத்தின் கோடை கால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும்.

காரை.உறவுகள் சங்கமித்து மகிழ்ந்த கனடா-காரை கலாசார மன்றத்தின் கோடை கால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும்.

கனடா-காரை கலாசார மன்றத்தின் நேர்த்தியான ஒழுங்கமைப்பில் வருடாந்த ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் பெருந்திரளான காரை உறவுகளின் பங்குபற்றுதலுடன் சென்ற 5ஆம் திகதி Morningside பூங்காவில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 7.00 மணி வரை நடைபெற்ற இவ் ஒன்றுகூடல் நிகழ்வில் 500க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர். சென்ற ஆண்டுகளைக் காட்டிலும் அதிகமான இளையோரின் ஈடுபாடு இம்முறை இருந்ததை அவதானிக்கமுடிந்தது. இது பாராட்டக்கூடிய மகிழச்சியான மாற்றமாகும். சுவிற்சலாந்து, லண்டன், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தும் தாயகத்திலிருந்தும் வருகை தந்தவர்கள் இந்நிகழ்வில் காரை. மண்ணின் உணர்வோடும் ஆர்வத்தோடும் கலந்துகொண்டு ஊரின் நினைவுகளை மீட்டி மகிழ்ந்தனர்.

காலையிலிருந்து மாலை வரை பலதரப்பட்ட உணவு வகைகளும் தொண்டர்களினால் சிறந்த முறையில் தயாரிக்கப்பட்டு தொண்டர்களினால் பரிமாறப்பட்டுக்கொண்டிருந்தன.சிறப்பாக மச்ச கூழ், மரக்கறி கூழ், கொத்து றொட்டி ஆகியவற்றுடன் கனேடிய உணவு வகைகள தாராளமாகப் பரிமாறப்பட்டிருந்தன.

சிறுவர்களிற்கான விளையாட்டுக்களும் முதியோருக்கான மெதுநடைப் போட்டியும் இடம்பெற்றிருந்ததுடன் குழுநிலைப் போட்டிகளாக ஆண் பெண் அணிகளுக்கிடையேயான தாய்ச்சிப் போட்டியும் தாம்பிழுவைப் பொரும் பார்வையாளர்களை பெரிதும் ஈர்த்திருந்தன. 18 வயதிற்கு மேற்பட்ட 18 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் அணிக்கு எதிராக பெண்கள் அணிகள் தாம்பிழுவைப் போரில் பங்குகொண்டிருந்தன. இரு பிரிவுகளிலும் பெண்கள் அணி ஆண்கள் அணியை வெற்றி கொண்டு சாதனை படைத்திருந்தன. இவ்வணிகளுக்கு முறையே வாரிவளவு நல்லியக்கச் சபையின் முன்னாள் செயலாளர் அமரர் பத்மநாதன் (பட்டு மாமா) ஞாபகார்த்த வெற்றிக் கேடயமும் காரை விளையாட்டுக்கழகத்தின் முன்னாள் வீரர் அமரர் குலேந்திரன் ஞாபகார்த்த வெற்றிக் கேடயமும் வழங்கப்பட்டன.

கனடா-காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.சிவசம்பு சிவநாதன் அவர்களின் தலைமையில் வெற்றிபெற்றவர்களிற்கான பரிசில்கள் வழங்க்ப்பட்டது. போட்டிகளில் பங்குபற்றிய அனைத்துச் சிறார்களிற்கும் Tim Hortons Gift Card வழங்கப்பட்டு ஊக்குவிக்கிப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். திரு.சிவநாதன் ஒன்றுகூடல் நிகழ்வு சிறப்பாக அமைவதற்கு ஆதரவளித்து ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் அனுசரணை வழங்கி உதவியோருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://photos.app.goo.gl/Mp7HhL4jWmEEJJoPA

கனடா-காரை கலாசார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளும் சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கனடா-காரை கலாசார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளும் சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கனடா-காரை கலாசார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டியும் எதிர்வரும் சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் Morningside பூங்காவில் (Area 3 and Area 4) வெகு சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காரை.மண்ணின் உணர்வோடு ஒன்றுகூடி மண்ணின் நினைவுகளை மீட்டிப்பார்த்து உண்டு உரையாடி விளையாடி மகிழ்கின்ற நிகழ்வாக அமைக்கப்பட்டுள்ள இந்நிகழ்வில் கலந்துகொள்ள வருமாறு கனடா வாழ் காரைநகர் மக்களை அன்போடும் உரிமையோடும் கனடா-காரை கலாசார மன்றம் அழைக்கின்றது. அன்றைய தினம் மழையோ அதிக வெப்பமோ இன்றி சௌகரியமான சிறந்த காலநிலை நிலவுகின்றமை அவைருக்கும் மகிழச்சியளிப்பதாகும்.

எம்மண்ணின் பாரம்பரிய உணவுவகைகளுடன் கனேடிய உணவுகளும் பரிமாறப்படவுள்ளதுடன் சிறுவர்கள் இளையோர் முதியோர் ஆகியோருக்கான விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் குழுநிலைப் போட்டிகளான தாம்பிழுவைப்போர் தாய்ச்சி என்பவற்றுடன் அனைவரையும் கவர்ந்து ஈர்க்கும் வகையிலான சிறியோர் வளர்ந்தோர் பங்கேற்கும் விநோதஉடைப் போட்டியும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

போட்டிகளில் வெற்றிபெறும் முதல் மூன்று வெற்றியாளர்களிற்கும் பரிசில்கள் வழங்கப்படும் அதேவேளையில் போட்டிகளில் பங்குபற்றிய அனைத்துப் பிள்ளைகளுக்கும் Tim Hortons Gift Card வழங்கப்படவுள்ளது.

பூங்காவில் அனுமதிக்கப்பட்ட வாகனத் தரிப்பிடங்கள் நிரம்பப்பெற்றிருந்தால் பூங்காவிற்கு வெளியே அயலிலுள்ள பாடசாலையின் வாகனத் தரிப்பிடத்தில் வாகனங்களை தரித்து விட்டு நடந்துவந்து நிகழ்விடத்தை அடையலாம் என்பதை கவனத்திற் கொள்ளுமாறு வேண்டுவதுடன் பூங்காவின் அனுமதிக்கப்படாத இடங்களில் உங்கள் வாகனங்களை தரிப்பதன் மூலம் காவல்துறையினதும் நகரசபை அலுவலர்களதும் தண்டப்பணத்திற்கான சிட்டையினை பெற்றுக்கொள்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் வேண்டுகின்றோம்.

கனடா-காரை கலாசார மன்றம்.

காரை ஒன்றுகூடல் – 2023, அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றது கனடா காரை கலாச்சார மன்றம்!

[su_audio url=”http://www.karainagar.com/pages/wp-content/uploads/2023/08/AUDIO-2023-08-01-22-47-59.mp3″ autoplay=”no”]

கனடா காரை கலாச்சார மன்றம் விளையாட்டு போட்டியில் இடம்பெறவுள்ள விளையாட்டுக்கள் பற்றிய விபரம்.

 கனடா காரை கலாச்சார மன்றம்

விளையாட்டு போட்டியில் இடம்பெறவுள்ள விளையாட்டுக்கள் பற்றிய விபரம்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த ஒன்றுகூடல் 05.08.2023 சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் Morningside Park, Area 3,4 இல் நடைபெறவுள்ளது. இவ் ஒன்றுகூடல் நிகழ்வின் போது நடைபெறவுள்ள சிறுவர் மற்றும் முதியோர்களிற்கான விளையாட்டு நிகழ்வுகள் வருமாறு:

Under 5 – 2018ம் ஆண்டு மற்றும் அதற்கு பின்னர் பிறந்தவர்களிற்கான விளையாட்டுக்கள்:
1. 50M – ஆண்கள்
2. 50M – பெண்கள்

Under 7 – 2016, 2017ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
3. 100M – ஆண்கள்
4. 100M – பெண்கள்

Under 9 – 2014, 2015ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
5. 100M – ஆண்கள்
6. 100M – பெண்கள்

Under 11 – 2012, 2013ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
7. 100M – ஆண்கள்
8. 100M – பெண்கள்

Under 13 – 2010, 2011ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
 9. 200M – ஆண்கள்

10. 200M – பெண்கள்
11. தேசிக்காய் ஓட்டம் – பெண்கள்

18 & Under – 2005 முதல் 2009ம் ஆண்டு வரை பிறந்தவர்கள் மட்டும்

  1. 200M – ஆண்கள்
  2. 200M – பெண்கள்
  3. தேசிக்காய் ஓட்டம் – பெண்கள்

Over 19  – 2004 மற்றும் அதற்கு முன்னர் பிறந்தவர்கள் மட்டும்

  1. 200M – ஆண்கள்
  2. 200M – பெண்கள்
  3. சாக்கு ஓட்டம் – ஆண்கள்
  4. சாக்கு ஓட்டம் – பெண்கள்

Over 60
19. முதியோர் மெதுநடை – ஆண்கள்
20. முதியோர் மெதுநடை – பெண்கள்

வினோத உடை போட்டி

  1. சிறுவர் (Under 18)
  2. பெரியோர் (Over 18)

குறிப்பு:

வினோத உடைப்  போட்டியில்  சிறுவர் முதல் பெரியோர் வரை இருபாலாரும் கலந்து கொள்ளும் வகையில் இரண்டு பிரிவுகளாக  இடம்பெறவுள்ளதுபோட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து  சிறுவர்களும் , பெரியோர்களும் போட்டிக்கு தேவையான ஆடைஅணிகலன்களை தயார் செய்து கொண்டு வருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

 குழு விளையாட்டுக்களான தாம்பிழுவைப் போர்தாய்ச்சி  போட்டிகளும் இல்லங்களுக்கிடையே நடைபெறும்.

 தாய்ச்சி போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு அமரர் சரவணமுத்து பத்மநாதன் ( பட்டு மாமா ) (முன்னைநாள்  செயலாளர் வாரிவளவு நல்லியக்கச் சபை) அவர்களின் ஞாபகார்த்தமாக  கேடயம் வழங்கப்படும்.

 இல்லங்களுக்கிடையேயான போட்டியில்  வெற்றி பெற்ற  இல்லத்திற்கு அமரர் நடராசா குலேந்திரன் (காரை விளையாட்டுக்கழக உதைபந்தாட்ட வீரர்) அவர்களின் ஞாபகார்த்தமாக  கேடயம் வழங்கப்படும்.

 மேற்படி விளையாட்டு போட்டிகளில் பங்கு பற்றும் சிறார்கள் மற்றும் இளையோர் காலை 9 மணிக்கு தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அத்துடன் மூன்று இல்லங்களாக கலந்து கொள்பவர்கள் பதியப்பட்டு இல்லங்களுக்கிடையேயான போட்டியாக நடைபெறும். மூன்று இல்லங்களும் அவற்றை பதிவு செய்யும் முறையும் வருமாறு:

RED – Mississauga, Brampton, Cambridge  – WEST  
                                
BLUE- Scarborough,  Etobicoke  – SOUTH

YELLOW– Markham, Ajax, Ottawa, Richmond Hill – NORTH 

போட்டிகள் அனைத்திலும் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

கனடா காரை கலாச்சார மன்றம் ஒன்றுகூடலில் பங்குபற்றும் சிரமதான தொண்டர்களிற்கான அறிவித்தல்!

கனடா காரை கலாச்சார மன்றம்

ஒன்றுகூடலில் பங்குபற்றும் சிரமதான தொண்டர்களிற்கான அறிவித்தல்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் 05.08.2023 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இவ் ஒன்றுகூடலில் பணியாற்ற விரும்பும் தொண்டர்கள் தங்கள் பெயர்களை 03.08.2023 வியாழக்கிழமைக்கு  முன்னர் பதிவு செய்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

03.08.2023 க்கு முன்னர் பதிவு செய்யும் தொண்டர்களிற்கு மட்டுமே தொண்டர் பணிக்குரிய சான்றிதழ் வழங்கப்படும்.

இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு karainagar@gmail.com தொடர்பு கொள்ளவும்.

நன்றி

                     நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

“WORKING TOGETHER IS SUCCESS”

CKCA GET TOGETHER 2023 VOLUNTEER REGISTRATION

Verification

காரை ஒன்றுகூடல் – 2023, அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றது கனடா காரை கலாச்சார மன்றம்!

காரை ஒன்றுகூடல் – 2023

அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றது

கனடா காரை கலாச்சார மன்றம்.

கனடா வாழ் காரை மக்களின் வருடாந்த கோடை கால ஒன்றுகூடல் ஆவணி (Aug) மாதம் 05, 2023 சனிக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் Morningside Park, Area 3,4 இல் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது.

கனடா வாழ் காரைநகர் மக்கள் மற்றும் மன்றத்தின் அனுசரணையாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கின்றோம்.

வருடாவருடம் காரை உறவுகள் அனைவரும் கலந்து சிறப்பித்து, ஊர் நினைவுகளை கொண்டாடி மகிழ்கின்ற விழாவாக ஒன்றுகூடல் அமைந்து வருகின்றது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் கலந்து இன்புற்று காரை மண்ணின் பெருமை பேசி, உறவுகளோடு கொண்டாடி, சேர்ந்து மகிழ்ந்து, பகிர்ந்து வாழ்வோம் வாருங்கள்.

நன்றி

தொடர்புகளுக்கு: மின்னஞ்சல்: karainagar@gmail.com

                 நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

Karai Get-Together 2023

20.08.2022 சனிக்கிழமை அன்று நடைபெற்ற கனடா காரை கலாச்சார மன்றத்தின் கோடைகால ஒன்றுகூடல் காணொளி!

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் 20.08.2022 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின்

வருடாந்த கோடைகால ஒன்றுகூடல்

20.08.2022 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.

வருடாவருடம் காரை உறவுகள் அனைவரும் கலந்து சிறப்பித்து, ஊர் நினைவுகளை கொண்டாடி மகிழ்கின்ற விழாவாக ஒன்றுகூடல் அமைந்து வருகின்றது. வழமைபோல இந்தவருடமும் 20.08.2022 சனிக்கிழமை அன்று காலை 8.00மணிக்கு ஆரம்பித்து மாலை 7.00 மணி வரை கனடா வாழ் காரை மக்களின் வருடாந்த கோடை கால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும் Morningside பூங்காவில் சிறப்பாக நடைபெற்றது.

பல நூற்றுக்கணக்கான கனடா வாழ் காரை மக்கள் ஒன்று கூடலில் கலந்து சிறப்பித்து ஊரின் நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தும் காரை மண்ணை பெருமைப்படுத்தினர். அத்துடன் எமது ஊர் குறித்த சிந்தனையையும் ஈடுபாட்டினையும் எமது இளம் சந்ததிக்கு வழியேற்படுத்திக்கொடுத்துள்ளது.

உணவுகளின் பரிமாற்றமும் விளையாட்டுப் போட்டிகளும் சிறப்பான முறையில் கனடா காரை கலாச்சார மன்றத்தின் சீரிய திட்டமிடலுடன் கூடிய நெறிப்படுத்தலில் உறுப்பினர்களும், தொண்டர்களும், இளையோரும் ஊர் உணர்வோடு மிகுந்த முனைப்புடன் செயலாற்றினர்.

பாணும் பருப்பும் அதனை தொடர்ந்து BBQ, ஊர் சுவையுடன் கூடிய சைவ மற்றும் அசைவ கூழ், மாலையில் சுவை மிக்க இனிய கனடிய சோளம், கொத்து றொட்டி இவற்றுடன் சிறுவர்களிற்கு Frezee மற்றும் குளிர் பானங்களுடன் நாள் முழுவதும் வழங்கப்பட்டன.

சிறியோர், இளையோர் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்ற கவர்ச்சி மிகு விளையாட்டுக்களுடன் குழு விளையாட்டுக்களான தாம்பிழுவைப் போர், தாய்ச்சி போட்டிகளும் நடைபெற்றது.

விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டது. அத்துடன் தாய்ச்சி போட்டி, தாம்பிழுவைப் போர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமரர் சரவணமுத்து பத்மநாதன் ( பட்டு மாமா ) (முன்னைநாள் செயலாளர் வாரிவளவு நல்லியக்கச் சபை), அமரர் நடராசா குலேந்திரன் (காரை விளையாட்டுக்கழக உதைபந்தாட்ட வீரர்) அவர்களின் ஞாபகார்த்தமாக கேடயம் வழங்கப்பட்டது.

இளைய தலை முறையினரின் சிறப்பான பங்களிப்பும், நெறியாள்கையும் மிகவும் பிரமிக்கவைத்தது. அமைதியாகவும், மகிழ்ச்சிகரமாகவும் நடைபெற்ற இந்த வருட ஒன்றுகூடல் கலந்து கொண்டவர்களை பெருமையடையச்செய்துள்ளதுடன் மண்ணின் புகழை நிலை நிறுத்தியுள்ளது.

இவ்வருட ஒன்றுகூடலை சிறப்புற நடாத்துவதற்கு ஒத்துழைத்த இளைய தலைமுறையினர், நிர்வாகசபை உறுப்பினர்கள், தொண்டர்கள், அனுசரணையாளர்கள், பல விதமான உதவிகள் புரிந்த நல்லுள்ளம்கள், பங்கு பற்றியவர்கள் அனைவருக்கும் கனடா காரை கலாச்சார மன்றம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

நன்றி

                 நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

காரைஒன்றுகூடல் காணொளி கூடிய விரைவில் எடுத்து வரப்படும்.

காரை ஒன்றுகூடல் முழுமையான புகைப்படங்களை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://photos.app.goo.gl/J9FvvVgVdjGu97R67

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் எதிர்வரும் சனிக்கிழமை (20.08.2022) காலை 8.00 மணி முதல்!

கனடா காரை கலாச்சார மன்றம் விளையாட்டு போட்டியில் இடம்பெறவுள்ள விளையாட்டுக்கள் பற்றிய விபரம்!

  கனடா காரை கலாச்சார மன்றம்

விளையாட்டு போட்டியில் இடம்பெறவுள்ள விளையாட்டுக்கள் பற்றிய விபரம்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த ஒன்றுகூடல் 20.08.2022 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இவ் ஒன்றுகூடல் நிகழ்வின் போது நடைபெறவுள்ள சிறுவர் மற்றும் முதியோர்களிற்கான விளையாட்டு நிகழ்வுகள் வருமாறு:

Under 5 – 2017ம் ஆண்டு மற்றும் அதற்கு பின்னர் பிறந்தவர்களிற்கான விளையாட்டுக்கள்:
1. 50M – ஆண்கள்
2. 50M – பெண்கள்

Under 7 – 2015, 2016ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
3. 100M – ஆண்கள்
4. 100M – பெண்கள்

Under 9 – 2013, 2014ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
5. 100M – ஆண்கள்
6. 100M – பெண்கள்

Under 11 – 2011, 2012ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
7. 100M – ஆண்கள்
8. 100M – பெண்கள்

Under 13 – 2009, 2010ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
 9. 200M – ஆண்கள்
10. 200M – பெண்கள்
11. தேசிக்காய் ஓட்டம் – பெண்கள்

18 & Under – 2004 முதல் 2008ம் ஆண்டு வரை பிறந்தவர்கள் மட்டும்
12. 200M – ஆண்கள்
13. 200M – பெண்கள்

Over 19  – 2003 மற்றும் அதற்கு முன்னர் பிறந்தவர்கள் மட்டும்
14. சாக்கு ஓட்டம் – ஆண்கள்
15. சாக்கு ஓட்டம் – பெண்கள்

Over 60
16. முதியோர் மெதுநடை – ஆண்கள்
17. முதியோர் மெதுநடை – பெண்கள்

 குழு விளையாட்டுக்களான தாம்பிழுவைப் போர்தாய்ச்சி  போட்டிகளும் இல்லங்களுக்கிடையே நடைபெறும்.

 தாய்ச்சி போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு அமரர் சரவணமுத்து பத்மநாதன் ( பட்டு மாமா ) (முன்னைநாள்  செயலாளர் வாரிவளவு நல்லியக்கச் சபை) அவர்களின் ஞாபகார்த்தமாக  கேடயம் வழங்கப்படும்.

 இல்லங்களுக்கிடையேயான போட்டியில்  வெற்றி பெற்ற  இல்லத்திற்கு அமரர் நடராசா குலேந்திரன் (காரை விளையாட்டுக்கழக உதைபந்தாட்ட வீரர்) அவர்களின் ஞாபகார்த்தமாக  கேடயம் வழங்கப்படும்.

 மேற்படி விளையாட்டு போட்டிகளில் பங்கு பற்றும் சிறார்கள் மற்றும் இளையோர் காலை 9 மணிக்கு தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அத்துடன் மூன்று இல்லங்களாக கலந்து கொள்பவர்கள் பதியப்பட்டு இல்லங்களுக்கிடையேயான போட்டியாக நடைபெறும். மூன்று இல்லங்களும் அவற்றை பதிவு செய்யும் முறையும் வருமாறு:

RED – Mississauga, Brampton, Cambridge – WEST

BLUE- Scarborough, Etobicoke – SOUTH

YELLOW– Markham, Ajax, Ottawa, Richmond Hill – NORTH

போட்டிகள் அனைத்திலும் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

கனடா காரை கலாச்சார மன்றம் ஒன்றுகூடலில் பங்குபற்றும் சிரமதான தொண்டர்களிற்கான அறிவித்தல்!

கனடா காரை கலாச்சார மன்றம்

ஒன்றுகூடலில் பங்குபற்றும் சிரமதான தொண்டர்களிற்கான அறிவித்தல்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் 20.08.2022 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இவ் ஒன்றுகூடலில் பணியாற்ற விரும்பும் தொண்டர்கள் தங்கள் பெயர்களை 18.08.2022 வியாழக்கிழமைக்கு முன்னர் பதிவு செய்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

18.08.2022 க்கு முன்னர் பதிவு செய்யும் தொண்டர்களிற்கு மட்டுமே தொண்டர் பணிக்குரிய சான்றிதழ் வழங்கப்படும்.

இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு karainagar@gmail.com தொடர்பு கொள்ளவும்.

நன்றி

                     நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

“WORKING TOGETHER IS SUCCESS”

CKCA GET TOGETHER 2022 VOLUNTEER REGISTRATION

Verification

காரை ஒன்றுகூடல் – 2022 அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றது கனடா காரை கலாச்சார மன்றம்!

காரை ஒன்றுகூடல் – 2022

அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றது

கனடா காரை கலாச்சார மன்றம்

பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் ஆவலோடு நோக்கப்பட்டு வந்த கனடா வாழ் காரை மக்களின் வருடாந்த கோடை கால ஒன்றுகூடல் ஆவணி மாதம் 20, 2022 சனிக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் Morningside Park, Area 8,9 இல் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது.

கனடா வாழ் காரைநகர் மக்கள் மற்றும் மன்றத்தின் அனுசரணையாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கின்றோம்.

வருடாவருடம் காரை உறவுகள் அனைவரும் கலந்து சிறப்பித்து, ஊர் நினைவுகளை கொண்டாடி மகிழ்கின்ற விழாவாக ஒன்றுகூடல் அமைந்து வருகின்றது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் கலந்து இன்புற்று காரை மண்ணின் பெருமை பேசி, உறவுகளோடு கொண்டாடி, சேர்ந்து மகிழ்ந்து, பகிர்ந்து வாழ்வோம் வாருங்கள்.

நன்றி

தொடர்புகளுக்கு: மின்னஞ்சல்: karainagar@gmail.com

                 நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்ற வருடாந்த ஒன்றுகூடல் 2020 தொடர்பான அறிவித்தல்

கனடா காரை கலாச்சார மன்ற வருடாந்த ஒன்றுகூடல் 2020 தொடர்பான அறிவித்தல்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த ஒன்றுகூடல் வழமைபோன்று இம்மாதம் 18ம் திகதி மோனிங்சைட் பூங்காவில் நடத்துவதற்கு பதிவு செய்து திட்டமிடப்பட்டிருந்தது.

கனடா உட்பட உலகநாடுகள் அனைத்திலும் பரவியுள்ள கொடிய கொரனா தொற்று காரணமாகவும் பாரிய உயிரிளப்பேற்பட்டதாலும், அரசாங்கத்தினதும் சுகாதாரதுறையினரின் பரிந்துரைக்கு அமைய நடத்தமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் தெளிவாக ஆராய்ந்த நிர்வாக சபை இவ்வருட ஒன்றுகூடலை இரத்துச்செய்வதென முடிவெடுத்துள்ளது.

           நிர்வாகசபை

கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 2020ஆம் ஆண்டுக்குரிய நிகழ்வுகள்

கனடா காரை கலாச்சார மன்றத்தின்

2020ஆம் ஆண்டுக்குரிய

நிகழ்வுகள்

1. கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும்

     இடம்:  Morningside Park, Area 3,4

     காலம்: July 18, 2020  சனிக்கிழமை

     நேரம்: காலை 8.00 மணிக்கு

 2. தமிழ்மொழித் திறன்,பண்ணிசைப் போட்டிகள்

    இடம்: Scarborough Civic Centre

    காலம்: September 12, 2020 சனிக்கிழமை

     நேரம்: காலை 8.00 மணிக்கு

3. காரை வசந்தம்

    இடம்: தமிழ் இசை கலாமன்ற அரங்கம்

                     (Unit 3- 1120 Tapscott Road,Scarborough.)

    காலம்: October 11, 2020 ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: மாலை 5.00 மணிக்கு

4. ஆருத்திரா தரிசனம்

     இடம்: கனடா றிச்மன்ட் பிள்ளையார் ஆலயம் 

                              (Richmond Hill Hindu Temple)

     காலம்: December 30, 2020 புதன்கிழமை

     நேரம்: அதிகாலை 4:45 மணி

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 2020ஆம் ஆண்டுக்குரிய நிகழ்வுகள்

கனடா காரை கலாச்சார மன்றத்தின்

2020ஆம் ஆண்டுக்குரிய

நிகழ்வுகள்

1. தமிழ்மொழித் திறன்,பண்ணிசைப் போட்டிகள்

    இடம்: Scarborough Civic Centre

    காலம்: June 20, 2020 சனிக்கிழமை

    நேரம்: காலை 8.00 மணிக்கு

2. கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும்

     இடம்: Morningside Park, Area 3,4

     காலம்: July 18, 2020 சனிக்கிழமை

     நேரம்: காலை 8.00 மணிக்கு

3. காரை வசந்தம்

    இடம்: தமிழ் இசை கலாமன்ற அரங்கம் (Unit 3- 1120 Tapscott Road,Scarborough)

    காலம்: October 11, 2020 ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: மாலை 5.00 மணிக்கு

4. ஆருத்திரா தரிசனம்

     இடம்: கனடா றிச்மன்ட் பிள்ளையார் ஆலயம் (Richmond Hill Hindu Temple)

     காலம்: December 30, 2020 புதன்கிழமை

     நேரம்: அதிகாலை 4:30 மணிக்கு

கனடா – காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் காணொளி! (04.08.2019)

கனடா – காரை கலாச்சார மன்றத்தின்

வருடாந்த கோடைகால ஒன்றுகூடல்

04.08.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.

காரை ஒன்றுகூடல் காணொளியை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

          https://www.youtube.com/watch?v=K0cz-DKUBnI

கனடா – காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.

கனடா – காரை கலாச்சார மன்றத்தின்

வருடாந்த கோடைகால ஒன்றுகூடல்

04.08.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.

வருடாவருடம் காரை உறவுகள் அனைவரும் கலந்து சிறப்பித்து, ஊர் நினைவுகளை கொண்டாடி மகிழ்கின்ற விழாவாக ஒன்றுகூடல் அமைந்து வருகின்றது. வழமைபோல இந்தவருடமும் 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00மணிக்கு ஆரம்பித்து மாலை 7.00 மணி வரை கனடா வாழ் காரை மக்களின் வருடாந்த கோடை கால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும் Morningside பூங்காவில் சிறப்பாக நடைபெற்றது.

பல நூற்றுக்கணக்கான கனடா வாழ் காரை மக்கள் ஒன்று கூடலில் கலந்து சிறப்பித்து ஊரின் நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தும் காரை மண்ணை பெருமைப்படுத்தினர். அத்துடன் எமது ஊர் குறித்த சிந்தனையையும் ஈடுபாட்டினையும் எமது இளம் சந்ததிக்கு வழியேற்படுத்திக்கொடுத்துள்ளது.

உணவுகளின் பரிமாற்றமும் விளையாட்டுப் போட்டிகளும் சிறப்பான முறையில் கனடா காரை கலாச்சார மன்றத்தின் சீரிய திட்டமிடலுடன் கூடிய நெறிப்படுத்தலில் உறுப்பினர்களும், தொண்டர்களும், இளையோரும் ஊர் உணர்வோடு மிகுந்த முனைப்புடன் செயலாற்றினர்.

சுடச்சுட அப்பம்,பாணும் பருப்பும்,பழஞ்சோற்றுத் தண்ணீர் அதனை தொடர்ந்து BBQ,மதிய போசனம், ஊர் சுவையுடன் கூடிய சைவ மற்றும் அசைவ கூழ், மாலையில் கொத்து றொட்டியுடன் சுவை மிக்க இனிய கனடிய சோளம் இவற்றுடன் சிறுவர்களிற்கு தும்பு மிட்டாஸ், ஐஸ்கிறீம், Frezee மற்றும் குளிர் பானங்களுடன் நாள் முழுவதும் வழங்கப்பட்டன.

சிறியோர், இளையோர், பெரியோர், முதியோர் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்ற கவர்ச்சி மிகு விளையாட்டுக்களுடன் சிறுவர்களுக்கான வினோத உடைப் போட்டியும், குழு விளையாட்டுக்களான தாம்பிழுவைப் போர், தாய்ச்சி போட்டிகளும் இல்லங்களுக்கிடையே நடைபெற்றது.

விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டது. அத்துடன் தாய்ச்சி போட்டியில் வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு அமரர் சரவணமுத்து பத்மநாதன் ( பட்டு மாமா ) (முன்னைநாள் செயலாளர் வாரிவளவு நல்லியக்கச் சபை) அவர்களின் ஞாபகார்த்தமாக கேடயம் வழங்கப்பட்டதுடன் இல்லங்களுக்கிடையேயான போட்டியில் வெற்றி பெற்ற இல்லத்திற்கு அமரர் நடராசா குலேந்திரன் (காரை விளையாட்டுக்கழக உதைபந்தாட்ட வீரர்) அவர்களின் ஞாபகார்த்தமாக கேடயம் வழங்கப்பட்டது.

இளைய தலை முறையினரின் சிறப்பான பங்களிப்பும், நெறியாள்கையும் மிகவும் பிரமிக்கவைத்தது. அமைதியாகவும், மகிழ்ச்சிகரமாகவும் நடைபெற்ற இந்த வருட ஒன்றுகூடல் கலந்து கொண்டவர்களை பெருமையடையச்செய்துள்ளதுடன் மண்ணின் புகழை நிலை நிறுத்தியுள்ளது.

இவ்வருட ஒன்றுகூடலை சிறப்புற நடாத்துவதற்கு ஒத்துழைத்த இளைய தலைமுறையினர், நிர்வாகசபை உறுப்பினர்கள், தொண்டர்கள், அனுசரணையாளர்கள், பல விதமான உதவிகள் புரிந்த நல்லுள்ளம்கள், பங்கு பற்றியவர்கள் அனைவருக்கும் கனடா காரை கலாச்சார மன்றம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

நன்றி

நிர்வாகம்
கனடா- காரை கலாச்சார மன்றம்

[su_slider source=”media: 89949,89950,89951,89952,89953,89954,89955,89956,89957,89958,89959,89960,89961,89962,89963,89964,89965,89966,89967,89968,89969,89970,89971,89972,89973,89974,89975,89976,89977,89978,89979,89980,89981,89982,89983,89984,89985″ limit=”100″ width=”920″ height=”640″]

காரைஒன்றுகூடல் காணொளி கூடிய விரைவில் எடுத்து வரப்படும்.

காரை ஒன்றுகூடல் முழுமையான புகைப்படங்களை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://photos.app.goo.gl/qCDzWuP7aVB4yp8E9

கனடா வாழ் காரை மக்கள் சங்கமித்து கொண்டாடி மகிழும் பெரு விழா! 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பம்! (Morningside Park, Area 3,4)

கனடா வாழ் காரை மக்கள் சங்கமித்து கொண்டாடி மகிழும்

பெரு விழா! 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பம்!

(Morningside Park, Area 3,4)

காரை மக்களை திரண்டு வருமாறு அன்புரிமையோடு அழைக்கின்றது கனடா-காரை கலாச்சார மன்றம்.

பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் ஆவலோடு நோக்கப்பட்டு வந்த கனடா வாழ் காரை மக்களின் வருடாந்த கோடை கால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும் 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00மணிக்கு ஆரம்பித்து மாலை 6 மணி வரை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

மனதிற்கு இதமளிக்கும் அமைதியான சூழலில் இயற்கையாக அமைந்துள்ள அழகிய Morningside பூங்காவில் காரையின் உறவுகள் உறவு கொண்டாடி மகிழவுள்ளனர்.

எமது ஊர் குறித்த சிந்தனையையும் ஈடுபாட்டினையும் எமது இளம் சந்ததிக்கு ஏற்படுத்த வழியேற்படுத்தும் நிகழ்வு

நாம் காரை மண்ணின் மைந்தர்கள் என்கின்ற உறவுத் தொடர்பினைப் பேணவும் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பளித்து எம் மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நிகழ்வு

ஊர் சார்ந்த மனப் பதிவுகளைத் தாங்கிய வண்ணம் உரிமையோடு கலந்துகொள்ளும் காரை மக்களின் உன்னதமான நிகழ்வு

தாயக பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் BBQ

பாலப்பம், பழஞ்சோற்றுத் தண்ணீர், ஒடியல் கூழ், கொத்து றொட்டி, உள்ளிட்ட பெரியோர், சிறியோர் விரும்பும் பலதரப்பட்ட சுவையான உணவுகளை அனுபவம் மிக்க எமது தொண்டர்களின் உடனடித் தயாரிப்பில் சுடச் சுட பெற்று சுவைத்து மகிழலாம்

தாயக பாரம்பரிய விளையாட்டுக்கள்

தாய்ச்சி, தாம்பிழுவைப் போர் போன்ற விறு விறுப்பான குழு நிலை விளையாட்டுக்கள்

சிறியோர், இளையோர், பெரியோர், முதியோர் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் கவர்ச்சி மிகு விளையாட்டுக்கள்

அனைவரையும் வியப்படைய வைக்கும் வினோத உடைப் போட்டி

போட்டியாளர்களின் வதிவிடங்களின் அடிப்படையில் சிவப்பு, நீலம், மஞ்சள் ஆகிய மூன்று இல்லங்கள் அமைக்கப்பட்டு அவற்றிற்கிடையிலான போட்டி

வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு

ஊரின் நினைவுகளை பகிர்ந்து மகிழவும், உணவு வகைகளை உண்டு சுவைக்கவும், போட்டிகளில் பங்கேற்கவும் அவற்றைக் கண்டு களிக்கவும் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் Morningside பூங்காவில் ஒன்று கூடத் தவறாதீர்கள்.

உணவுகளின் பரிமாற்றமும் விளையாட்டுப் போட்டிகளும் சிறப்பான முறையில் நடைபெறவும் நிகழ்வை வெற்றிகரமானதாக அமைத்து வரலாற்றில் இடம் பிடித்துக்கொள்ளவும் கனடா-காரை கலாச்சார மன்றத்தின் சீரிய திட்டமிடலுடன்கூடிய நெறிப்படுத்தலில் உறுப்பினர்களும், தொண்டர்களும், இளம் சந்ததியினரும் ஊர் உணர்வோடு மிகுந்த முனைப்புடன் உழைத்து வருகின்றனர்.

காரை மாதாவின் புதல்வர்கள் தத்தமது குடும்பங்களுடன் திரளாகக் கலந்துகொண்டு மகிழ்வது மட்டுமல்லாது காரை மண்ணை பெருமைப்படுத்துமாறும் அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றது உங்களுக்கான சேவையிலுள்ள உங்கள் கனடா-காரை கலாச்சார மன்றம்.

நன்றி

நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

இளைய தலைமுறையினரின் நெறிப்படுத்தலில் கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும் – 2019 – ஆவணி 04, 2019 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் Morningside Park Area 3 & 4

இளைய தலைமுறையினரின் நெறிப்படுத்தலில்

கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும் – 2019

ஆவணி 04, 2019 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் Morningside Park Area 3 & 4

வருடாவருடம் காரை உறவுகள் அனைவரும் கலந்து சிறப்பித்து, ஊர் நினைவுகளை கொண்டாடி மகிழ்கின்ற விழாவாக ஒன்றுகூடல் அமைந்து வருகின்றது. வழமைபோல இவ்வருடமும் ஆவணி மாதம் 04, 2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

எமது ஊர் குறித்த சிந்தனையையும் ஈடுபாட்டினையும் எமது இளம் சந்ததிக்கு ஏற்படுத்த வழியேற்படுத்தும் நிகழ்வு. இம்முறை உறவுகளின் இளம்சந்ததியினரை முழுமையாக காரை கலாச்சார நீரோட்டத்தில் உள்வாங்கி, அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற வழிவகை செய்யப்படுகின்றது.

ஆகையால் இளைய தலைமுறையினராகிய பன்னிரெண்டு வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள், கல்லூரிகளில் கற்கை நெறிகளை மேற்கொள்பவர்கள், பல்கலைக்கழகம்களில் பட்டப்படிப்பை பயில்பவர்கள், உயர் கல்வியின் பின்னரான உள்ளக/வெளிக்கள பயிற்சிகளை மேற்கொள்பவர்கள் மற்றும் தொழில்புரிபவர்கள் என்கின்ற வகைகளில் அடங்குகின்ற அனைவரையும் தங்கள் விபரம்களை பதிந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

பிள்ளைகளுடைய முழுப்பெயர் , மின்னஞ்சல் முகவரி மற்றும் கல்வி பயிலும் தரம் ஆகிய விபரம்களை karainagar@gmail.com மன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி

நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றம் விளையாட்டு போட்டியில் இடம்பெறவுள்ள விளையாட்டுக்கள் பற்றிய விபரம்

                                            கனடா காரை கலாச்சார மன்றம்

விளையாட்டு போட்டியில் இடம்பெறவுள்ள விளையாட்டுக்கள் பற்றிய விபரம்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த ஒன்றுகூடல் 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இவ் ஒன்றுகூடல் நிகழ்வின் போது நடைபெறவுள்ள சிறுவர் மற்றும் முதியோர்களிற்கான விளையாட்டு நிகழ்வுகள் வருமாறு:

Under 5 – 2014ம் ஆண்டு மற்றும் அதற்கு பின்னர் பிறந்தவர்களிற்கான விளையாட்டுக்கள்:
1. 50M – ஆண்கள்
2. 50M – பெண்கள்
3. சாப்பாட்டு ஓட்டம் – ஆண்கள்
4. சாப்பாட்டு ஓட்டம் – பெண்கள்

Under 7 – 2012, 2013ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
5. 100M – ஆண்கள்
6. 100M – பெண்கள்
7. சாப்பாட்டு ஓட்டம் – ஆண்கள்
8. சாப்பாட்டு ஓட்டம் – பெண்கள்

Under 9 – 2010, 2011ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
9. 100M – ஆண்கள்
10. 100M – பெண்கள்
11. பலூன் ஓட்டம் – ஆண்கள்
12. பலூன் ஓட்டம் – பெண்கள்

Under 11 – 2008, 2009ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
13. 100M – ஆண்கள்
14. 100M – பெண்கள்
15. பலூன் ஓட்டம் – ஆண்கள்
16 பலூன் ஓட்டம் – பெண்கள்
17. தேசிக்காய் ஓட்டம் – பெண்கள்
18. அஞ்சல் ஓட்டம் – ஆண்கள்
19. அஞ்சல் ஓட்டம் – பெண்கள்

Under 13 – 2006, 2007ம் ஆண்டுகளில் மட்டும் பிறந்தவர்கள்
20. 100M – ஆண்கள்
21. 100M – பெண்கள்
22. 200M – ஆண்கள்
23. 200M – பெண்கள்
24. தேசிக்காய் ஓட்டம் – பெண்கள்
25. அஞ்சல் ஓட்டம்  – ஆண்கள்
26 அஞ்சல் ஓட்டம் – பெண்கள்

18 & Under – 2001 முதல் 2005ம் ஆண்டு வரை பிறந்தவர்கள் மட்டும்
27. 100M – ஆண்கள்
28. 100M – பெண்கள்
29. 200M – ஆண்கள்
30. 200M – பெண்கள்
31. சாக்கு ஓட்டம் – ஆண்கள்
32. சாக்கு ஓட்டம் – பெண்கள்

33.அஞ்சல் ஓட்டம் – ஆண்கள்

34.அஞ்சல் ஓட்டம் – பெண்கள்

Over 19  – 2000 மற்றும் அதற்கு முன்னர் பிறந்தவர்கள் மட்டும்
35. 200M – ஆண்கள்
36. 200M – பெண்கள்
37. சாக்கு ஓட்டம் – ஆண்கள்
38. சாக்கு ஓட்டம் – பெண்கள்
39. அஞ்சல் ஓட்டம் – ஆண்கள்
40. அஞ்சல் ஓட்டம் – பெண்கள்

Over 60
41. முதியோர் மெதுநடை – ஆண்கள்
42. முதியோர் மெதுநடை – பெண்கள்

 வினோத உடை போட்டி:  

43. சிறுவர் (Under 18)

44. பெரியோர் (Over 18)  

குறிப்பு:

வினோத உடைப்  போட்டியில்  சிறுவர் முதல் பெரியோர் வரை இருபாலாரும் கலந்து கொள்ளும் வகையில் இரண்டு பிரிவுகளாக  இடம்பெறவுள்ளது.  போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து  சிறுவர்களும் , பெரியோர்களும் போட்டிக்கு தேவையான ஆடை,  அணிகலன்களை தயார் செய்து கொண்டு வருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

குழு விளையாட்டுக்களான தாம்பிழுவைப் போர்தாய்ச்சி  போட்டிகளும் இல்லங்களுக்கிடையே நடைபெறும்.

தாய்ச்சி போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு அமரர் சரவணமுத்து பத்மநாதன் ( பட்டு மாமா ) (முன்னைநாள்  செயலாளர் வாரிவளவு நல்லியக்கச் சபை) அவர்களின் ஞாபகார்த்தமாக  கேடயம் வழங்கப்படும்.

இல்லங்களுக்கிடையேயான போட்டியில்  வெற்றி பெற்ற  இல்லத்திற்கு அமரர் நடராசா குலேந்திரன் (காரை விளையாட்டுக்கழக உதைபந்தாட்ட வீரர்) அவர்களின் ஞாபகார்த்தமாக  கேடயம் வழங்கப்படும்.

மேற்படி விளையாட்டு போட்டிகளில் பங்கு பற்றும் சிறார்கள் மற்றும் இளையோர் காலை 9 மணிக்கு தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அத்துடன் மூன்று இல்லங்களாக கலந்து கொள்பவர்கள் பதியப்பட்டு இல்லங்களுக்கிடையேயான போட்டியாக நடைபெறும். மூன்று இல்லங்களும் அவற்றை பதிவு செய்யும் முறையும் வருமாறு:

RED – Mississauga, Brampton, Cambridge  – WEST  
                                
BLUE- Scarborough,  Etobicoke  – SOUTH

YELLOW– Markham, Ajax, Ottawa, Richmond Hill – NORTH 

போட்டிகள் அனைத்திலும் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

கனடா- காரை கலாச்சார மன்றம் ஒன்றுகூடலில் பங்குபற்றும் சிரமதான தொண்டர்களிற்கான அறிவித்தல்!

கனடா- காரை கலாச்சார மன்றம்

ஒன்றுகூடலில் பங்குபற்றும் சிரமதான தொண்டர்களிற்கான அறிவித்தல்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ள வருடாந்த ஒன்றுகூடலில் பணியாற்ற விரும்பும் தொண்டர்கள் தங்கள் பெயர்களை 01.08.2019 வியாழக்கிழமைக்கு முன்னர் பதிவு செய்து கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

01.08.2019 க்கு முன்னர் பதிவு செய்யும் தொண்டர்களிற்கு மட்டுமே தொண்டர் பணிக்குரிய சான்றிதழ் வழங்கப்படும்.

இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு  karainagar@gmail.com தொடர்பு கொள்ளவும்.

நன்றி

நிர்வாகம்
கனடா-காரை கலாச்சார மன்றம்

“WORKING TOGETHER IS SUCCESS”

CKCA GET TOGETHER 2019 VOLUNTEER REGISTRATION

Verification

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஒன்றுகூடல் 2019

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஒன்றுகூடல் 2019

இடம்: MORNINGSIDE PARK AREA 3&4

                                390 Morningside Ave, Toronto, ON M1C 1B9

காலம்: August 04,2019 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 8.00 மணி முதல்

தொடர்புகளுக்கு:
கனடா காரை கலாச்சார மன்றம்
மின்னஞ்சல்: karainagar@gmail.com

29.07.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்ற கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் காணொளி!

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் 29.07.2018 அன்று சிறப்பாக நடைபெற்றது அத்துடன் அனைவருக்கும் கனடா காரை கலாச்சார மன்றம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் 29.07.2018 அன்று சிறப்பாக நடைபெற்றது அத்துடன் அனைவருக்கும் கனடா காரை கலாச்சார மன்றம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

கனடா வாழ் காரைநகர் மக்கள் மகிழ்ச்சியுடனும், ஊர் நினைவுடனும் கலந்து கொண்டு ஒன்றுகூடலினை சிறப்படைய வைத்துள்ளனர். அத்துடன் பிரித்தானியா, ஜேர்மனி , சுவிற்சர்லாந்து , அவுஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து விடுமுறையில் கனடா வந்திருந்த காரைநகர் மக்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட சிறார்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். முதியோர்களிற்கான மெதுநடை, வினோத உடைப் போட்டி, தாச்சி போட்டிகள் என்பன பார்வையாளர்களை கவர்ந்திருந்தது.

காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை சுடச்சுட அப்பம், சுடச்சுட யாழ்பாண சுவையுடன் கூடிய கோப்பி, மதிய போசனம், BBQ, ஊர் சுவையுடன் கூடிய சைவ மற்றும் அசைவ கூழ், கொத்து றொட்டியுடன் சுவை மிக்க இனிய கனடிய சோளம் இவற்றுடன் சிறுவர்களிற்கு தும்பு மிட்டாஸ், Frezee மற்றும் குளிர் பானங்கள் என்பன வழங்கப்பட்டு அனைவரையும் எல்லாம் மறந்து ஊர் நினைவுகளை மீட்டுச் சென்றது.

இளைய தலை முறையினரின் சிறப்பான பங்களிப்பும், நெறியாள்கையும் மிகவும் பிரமிக்கவைத்தது. அமைதியாகவும், மகிழ்ச்சிகரமாகவும் நடைபெற்ற இந்த வருட ஒன்றுகூடல் கலந்து கொண்டவர்களை பெருமையடையச்செய்துள்ளதுடன் மண்ணின் புகழை நிலை நிறுத்தியுள்ளது.

இவ்வருட ஒன்றுகூடலை சிறப்புற நடாத்துவதற்கு ஒத்துழைத்த இளைய தலைமுறையினர், நிர்வாகசபை உறுப்பினர்கள், தொண்டர்கள், அனுசரணையாளர்கள், பல விதமான உதவிகள் புரிந்த நல்லுள்ளம்கள், பங்கு பற்றியவர்கள் அனைவருக்கும் கனடா காரை கலாச்சார மன்றம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

“WORKING TOGETHER IS SUCCESS”

       நிர்வாகம்
கனடா-காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் 29.07.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது!

[su_slider source=”media: 73965,73966,73967,73968,73969,73970,73971,73972,73973,73974,73975,73976,73977,73978,73979,73980,73981,73982,73983,73984,73985,73986,73987,73988,73989,73990,73991,73992,73993,73994,73995,73996,73997,73998,73999,74000,74001,74002,74003,74004,74005,74006,74007,74008,74009,74010,74011,74012,74013,74014,74015,74016,74017,74018,74019,74020,74021,74022,74023,74024,74025,74026,74027,74028,74029,74030,74031,74032,74033,74034,74035,74036,74037,74038,74039,74040,74041,74042,74043,74044,74045,74046,74047,74048,74049,74050,74051,74052,74053,74054,74055,74056,74057,74058,74059,74060,74061,74062,74063,74064″ limit=”100″ width=”880″ height=”480″]

[su_slider source=”media: 74067,74068,74069,74070,74071,74072,74073,74074,74075,74076,74077,74078,74079,74080,74081,74082,74083,74084,74085,74086,74087,74088,74089,74090,74091,74092,74093,74094,74095,74096,74097,74098,74099,74100,74101,74102,74103,74104,74105,74106,74107,74108,74109,74110,74111,74112,74113,74114,74115,74116,74117,74118,74119,74120,74121,74122,74123,74124,74125,74126,74127,74128,74129,74130,74131,74132,74133,74134,74135,74136,74137,74138,74139,74140,74141,74142,74143,74144,74145,74146,74147,74148,74149,74150,74151,74152,74153,74154,74155,74156,74157,74158,74159,74160,74161,74162,74163,74164,74165,74166″ limit=”100″ width=”880″ height=”480″]

[su_slider source=”media: 74183,74184,74185,74186,74187,74188,74189,74190,74191,74192,74193,74194,74195,74196,74197,74198,74199,74200,74201,74202,74203,74204,74205,74206,74207,74208,74209,74210,74211,74212,74213,74214,74215,74216,74217,74218,74219,74220,74221,74222,74223,74224,74225,74226,74227,74228,74229,74230,74231,74232,74233,74234,74235,74236,74237,74238,74239,74240,74241,74242,74243,74244,74245,74246,74247,74248,74249,74250,74251,74252,74253,74254,74255,74256,74257,74258,74259,74260,74261,74262,74263,74264,74265,74266,74267,74268,74269,74270,74271,74272,74273,74274,74275,74276,74277,74279,74280,74281,74282,74283″ limit=”100″ width=”880″ height=”480″]

கனடா காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடல் 29.07.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது.

கனடா வாழ் காரைநகர் மக்களும் மற்றும் வெளி நாடுகளில் இருந்து விடுமுறையில் கனடா வந்திருந்த காரைநகர் மக்களும் மகிழ்ச்சியுடனும் ஊர் நினைவுடனும் கலந்து கொண்டு ஒன்றுகூடலினை சிறப்படைய வைத்துள்ளனர்.

சிறப்பாக நடைபெற்ற காரை ஒன்றுகூடல் 2018 நிகழ்வுகளின் முழுமையான புகைப்படங்கள் இங்கே எடுத்து வரப்பட்டுள்ளன.

 முழுமையான புகைப்படங்களை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

https://photos.app.goo.gl/SjqRFzu9PFKSA5zX8

காரை ஒன்றுகூடல் – 2018 அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றது கனடா காரை கலாச்சார மன்றம்

காரை ஒன்றுகூடல் – 2018

அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கின்றது கனடா காரை கலாச்சார மன்றம்

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 29.07.2018 அன்று Morningside Park, Area 1,2 and 5 இல் நடைபெறவுள்ள வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்விற்கு கனடாவில் வதியும் அனைத்து காரை மக்களையும் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடனும் அன்புடனும் அழைக்கின்றோம்.

சிறுவர்கள், பெரியோர்களிற்கான விளையாட்டு நிகழ்வுகளுடன் ஊர் நினைவுகளுடன் விருந்துண்டு மகிழவும் அழைக்கின்றோம்.

காலை 9.30 மணிக்கு முன்னர் ஒன்றுகூடலில் கலந்து கொள்ள வருகை தந்து பதிவினை மேற்கொள்ளும் முதல் 100 பேர்களிற்கு பெறுமதி மிக்க பரிசில்கள் வழங்கப்படும்.

காலை 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரை சுடச்சுட அப்பமும் அதனை தொடர்ந்து  மதிய போசனம், BBQ, ஊர் சுவையுடன் கூடிய சைவ  மற்றும் அசைவ  கூழ், மாலையில் கொத்து றொட்டியுடன் சுவை மிக்க இனிய கனடிய சோளம் இவற்றுடன் சிறுவர்களிற்கு தும்பு மிட்டாஸ், ஐஸ்கிறீம், Frezee மற்றும் குளிர் பானங்களுடன் நாள் முழுவதும் சுடச்சுட யாழ்பாண சுவையுடன் கூடிய கோப்பி என்பனவும் வழங்கப்படும்.

அனைத்து கனடா வாழ் காரை உறவுகளையும்  இந்நிகழ்வில்  ஊர் நினைவுகளோடு கலந்து சிறப்பித்து , கனடிய மண்ணில் காரைநகரின்  மகத்தான பெருமையையும், ஒற்றுமையினை நிலைநிறுத்துவோமாக.

நன்றி

        நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்

[su_audio url=”http://www.karainagar.com/pages/wp-content/uploads/2018/07/CKCA-GET-TOGETHER-2018.mp3″ autoplay=”yes”]