Category: செயற்திட்டங்கள்

கனடா – காரை கலாச்சார மன்றத்தின் கடந்த நிர்வாக சபையினால் கடந்த மே மாதம் 10ம் திகதி நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட 24.02.2013-10.05.2015 காலப்பகுதிக்கான செயற்பாட்டு அறிக்கை, நிதி அறிக்கை (கணக்காய்வாளர் சிபார்சு செய்யவில்லை)

CKCA logo

 

 

 

கனடா – காரை கலாச்சார மன்றத்தின் கடந்த நிர்வாக சபையினால் கடந்த  மே மாதம்  10ம் திகதி  நடை பெற்ற  பொதுக்கூட்டத்தில் வெளியிடப்பட்ட  24.02.2013-10.05.2015 காலப்பகுதிக்கான  செயற்பாட்டு அறிக்கை, நிதி  அறிக்கை (கணக்காய்வாளர் சிபார்சு செய்யவில்லை)

இங்கே அழுத்துக

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2015/09/CKCA-2013-10TH-MAY-2015-REPORT.pdf

 

CKCA 2013-2015 FINAL REPORT FRONT COVERCKCA_2013-2015_Report0001 CKCA_2013-2015_Report0002 CKCA_2013-2015_Report0003 CKCA_2013-2015_Report0004 CKCA_2013-2015_Report0005 CKCA_2013-2015_Report0006 CKCA_2013-2015_Report0007 CKCA_2013-2015_Report0008 CKCA_2013-2015_Report0009 CKCA_2013-2015_Report0010 CKCA_2013-2015_Report0011 CKCA_2013-2015_Report0012 CKCA_2013-2015_Report0013 CKCA_2013-2015_Report0014 CKCA_2013-2015_Report0015 CKCA_2013-2015_Report0016 CKCA_2013-2015_Report0017 CKCA_2013-2015_Report0018 CKCA_2013-2015_Report0019 CKCA_2013-2015_Report0020 CKCA_2013-2015_Report00212015_Financial_Final0001 2015_Financial_Final0002 2015_Financial_Final0003 2015_Financial_Final0004 2015_Financial_Final0005 2015_Financial_Final0006 2015_Financial_Final0007 2015_Financial_Final0008 2015_Financial_Final0009 2015_Financial_Final0010 2015_Financial_Final0011 2015_Financial_Final0012 2015_Financial_Final0013 2015_Financial_Final0014 2015_Financial_Final0015 2015_Financial_Final0016 2015_Financial_Final0017 2015_Financial_Final0018 2015_Financial_Final0019 2015_Financial_Final0020 2015_Financial_Final0021 2015_Financial_Final0022CKCA 2013-2015 FINAL REPORT BACK COVER

 

 

 

 

CKCA-2013-10TH-MAY-2015-REPORT

 

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் நிதி உதவியுடன் காரைநகரில் கற்றல் செயற்பாடுகள்!

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் நிதி உதவியுடன் காரைநகரில் கற்றல் செயற்பாடுகள்:

 

மெல்ல கற்போருக்கான விசேட வகுப்பு: ஊரி அ.மி.த.க பாடசாலை

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி உதவியுடன் காரைநகர் ஆரம்ப பாடசாலைகளில் மேலதிக ஆங்கில கல்வி, கணணி கல்வி மற்றும் மெல்ல கற்போருக்கான விசேட வகுப்புகள் ஆரம்பித்துள்ளன. கடந்த சில மாதங்களிற்கு முன்னர் கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடக காரைநகரில் உள்ள 8 பாடசாலைகளிற்கு கற்றல் தேவைகளிற்காக நிதி உதவி அளிக்கப்பட்டிருந்தது. அந்நிதியில் இருந்து ஊரி அ.மி.த.க பாடசாலையில் மெல்ல கற்போருக்கான மேலதிக வகுப்புக்கள் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டது. மேலதிக வகுப்பு நேரத்தில் சிற்றுண்டி வழங்கவுதற்கும் ஏற்ற வகையில் நிதியுதவி அளிக்கப்பட்டிருந்தது.

இவ்வுதவியை பெற்றுக்கொண்ட ஊரி அ.மி.த.க பாடசாலை நிர்வாகம் அதிபர் இ.சிறிதரன் வழிநடத்தலோடு மேலதிக வகுப்புக்களை திட்டமிட்ட வகையில் நடாத்துவதையும், மாதாந்தம் அதற்குரிய விபரங்கள், செயற்பாடுகளை கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு உரிய முறையில் தெரிவித்து வருவதோடு மாணவர்கள் ஆர்வமுடன் வகுப்புகளில் பங்கேற்றுக்கொள்வதையும் காணும் முகமாக புகைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளனர். காரைநகரில் ஊரி அ.மி.த.க பாடசாலை கடந்த சில வருடங்களில் வேகமாக முன்னேறி வருவதை காரைநகர் மக்களும், காரைநகர் கல்விச் சமூகமும் பாராட்டி வருவதோடு கல்வி வளர்ச்சியிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலம், கணணி வகுப்புக்கள்: வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதியுதவியுடன் மாலை நேர ஆங்கில வகுப்புக்கள் கடந்த மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக ஆரம்ப கணணி அறிவை விருத்தி செய்யும் நோக்குடன் கணணி கல்வி வகுப்புக்கள் எதிர்வரும் 09.08.2014 முதல் ஆரம்பமாகவுள்ளதாக பாடசாலை அதிபர் செல்வி விமலா விஸ்வநாதன் அவர்கள் கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளார்.

கற்றல் உபகரணம் சீரமைக்கப்பட்டது: 

வியாவில் சைவ வித்தியாலயம் விடுத்த வேண்டுகோளுக்கமைய போட்டே பிரதியெடுக்கும் இயந்திரம் திருத்தி வழங்கப்பட்டது. நீண்டகாலமாக பழுதடைந்திருந்த பிரதியெடுக்கும் இயந்திரத்தை 56,000 ரூபா செலவில் காரைநகர் அபிவிருத்தி சபையின் உதவியோடு சீரமைத்துக் கொடுத்தமைக்கான ரசீது மற்றும் நன்றியறிதல் கடிதத்தினை பாடசாலை அதிபர் கே.சுந்தரலிங்கம் அவர்கள் கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

கற்றல் உபகரணம் வழங்கப்பட்டது:

தொடக்க பாடசாலைகளான சுப்பிரமணியம் வித்தியாசாலை, வேரப்பிட்டி ஸ்ரீ கனேசா வித்தியாலயம், தோப்புக்காடு மறைஞானசம்பந்த வித்தியாலயம், மெய்கண்டான் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிற்கு கற்பித்தல் தேவைகளை இலகுபடுத்தும் நோக்குடன் 60,000 ரூபா செலவில் 15 Pin Boards  வழங்கப்பட்டுள்ளன. இவற்றினை காரைநகர் அபிவிருத்தி சபையினர் நேரடியாக சென்று பாடசாலைகளிற்கு வழங்கினர்.

கணணிகள் வழங்கப்பட்டன:

யாழ்ற்ரன் கல்லூரிக்கு ரூபா 5 இலட்சம் பெறுமதியில் 10 கணணிகள் வழங்கப்பட்டுள்ளன. கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக அவற்றினை பெற்றுக்கொண்டதற்காக நன்றியறிதலையும், தெரிவித்து கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு புகைப்படங்களோடு அறியத்தந்துள்ளார்.

குடிநீர் தாங்கி வழங்கப்பட்டது:

வேதரடைப்பு பாலர் பாடசாலையின் குடிநீர் பிரச்சனையை அறிந்து கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினரினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து குடிநீர் தாங்கியொன்று 10,000 ரூபா பெறுமதியில் கனடா காரை கலாச்சார மன்றத்தினரால் 03.08.2014 அன்று காரைநகர் அபிவிருத்தி சபையின் உதவியோடு வழங்கப்பட்டுள்ளது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக கடந்த சில மாதங்களில் அண்ணளவாக 27 இலட்சம் ரூபாய்கள் செலவில் கற்றல் செயற்பாடுகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளிற்கான நிதியுதவிகளை வழங்குவதற்கு நிர்வாக சபை தீர்மானித்திருந்தது. அவற்றில் இதுவரை 17 இலட்சம் ரூபாய்கள் வரையான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளன. வழங்கப்பட்ட நிதியுதவிகளின் மூலம் பாடசாலைகளில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள் மேற்கொண்டு இந்த இணையத்தளத்தில் எடுத்து வரப்படும்.

கனடாவில் காரைநகர் மக்களிடம் இருந்து பெறப்படும் நிதியின் ஊடாக காரைநகரில் செயற்படுத்தப்படும் திட்டங்கள் நிர்வாக சபை உறுப்பினர்களினால் அவதானிக்கப்பட்டு வருகின்றன. கனடாவில் காரைநகர் மக்களை ஊர் நினைவோடு சேர்ந்து வாழவும், காரைநகர் மக்களின் ஒற்றுமையினை எடுத்தியம்பவும் கனடா காரை கலாச்சார மன்றம் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு முயற்சிகளிற்கும் அனுசரணையும் ஆதரவும் வழங்கும் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது கனடா-காரை கலாச்சார மன்றம்.

DSC05895 (Copy) DSC05896 (Copy) DSC05897 (Copy) DSC05899 (Copy) DSC05900 (Copy) DSC05901 (Copy) DSC05902 (Copy) DSC05903 (Copy) DSC05905 (Copy) DSC05906 (Copy) DSC05907 (Copy) DSC05909 (Copy) DSC05910 (Copy) DSC05912 (Copy) DSC05914 (Copy) DSC05915 (Copy) DSC05917 (Copy) DSC05918 (Copy) DSC05919 (Copy) DSC05920 (Copy) DSC05922 (Copy) DSC05923 (Copy) DSC05924 (Copy) DSC05925 (Copy) DSC05926 (Copy)

DSC00514 (Copy) DSC00515 (Copy) DSC00516 (Copy) DSC00517 (Copy) DSC00518 (Copy) DSC00519 (Copy) DSC00520 (Copy) DSC00521 (Copy) DSC00522 (Copy) DSC00523 (Copy) DSC00524 (Copy) DSC00525 (Copy)

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA

கனடா-காரை கலாச்சார மன்றம் நடாத்திய ‘காரை ஒன்றுகூடல் – 2014’ நிகழ்வுகளின் விபரம்! அனுசரணையாளர்கள், பரிசுபெற்றோர், நிதி நிலமை!

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் வருடாந்த நிகழ்வுகளில் கனடா காரை மக்களின் பெரும் ஆதரவுடன் இடம்பெற்று வரும் காரை ஒன்றுகூடல் நிகழ்வு இவ்வருடம் 06.07.2014 அன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வுகளிற்கு அனுசரணை வழங்கியவர்கள், பங்கு பற்றியவர்கள், இந்நிகழ்வினை நடாத்துவதற்கு பல வழிகளிலும் உதவி வழங்கியவர்கள் அனைவருக்கும் கனடா காரை கலாச்சார மன்றம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.
'காரை ஒன்றுகூடல் – 2014' நிகழ்;வு காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அபிவிருத்திக்கு உதவும் நோக்குடன் இவ்வருடம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அனுசரணையாளர்கள் வழங்கிய நிதி உதவிகள் மூலமும் கலந்து கொண்ட காரை மக்கள் வழங்கிய நிதி உதவிகள் மூலமும் இவ்வருட ஒன்றுகூடல் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளதுடன் காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அபிவிருத்திக்கென 2,300 டொலர்கள் வரையில் அனுப்புவதற்கும் கிடைக்கப்பெற்றுள்ளது. ஊர் நினைவுகளோடு கலந்து சிறப்பித்த கனடா வாழ் காரை மக்கள் அனைவருக்கும் நன்றி!
கனடா காரை கலாச்சார மன்றத்தினால் முன்னெடுக்கப்டுகின்ற ஆரம்ப பாடசாலைகளின் அபிவிருத்திக்கு உதவுவதற்கு மேற்கொண்டு நீங்கள் நிதி உதவி வழங்கமாறு கேட்டுக் கொள்கின்றோம். மேற்கொண்டு நீங்கள் வழங்கும் நிதி முழுமையாக இந்நிதியுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டு ஆரம்ப பாடசாலைகளின் வளர்ச்சிக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது.

கனடா காரை கலாச்சார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஒன்று கூடல் 2014 வரவு செலவு அறிக்கை,

அனுசரணை வழங்கியவர்களின் பெயர் விபரங்கள்:

இங்கே அழுத்துக

 

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்திய 'காரை ஒன்றுகூடல் – 2014' விளையாட்டு போட்டிகளில் பரிசு பெற்ற போட்டியாளர்கள் விபரம்:

50 மீற்றர் ஓட்டம் – 5 வயது ஆண்கள்
1வது இடம்: கஜானன் வரதராஜா
2வது இடம்: அஜீஷ் ஜெகன்
3வது இடம்: அனக்ஷன் நந்தகுமார்

50 மீற்றர் ஓட்டம் – 5 வயது பெண்கள்
1வது இடம்: விதுஸா ஜெயரத்தினம்
2வது இடம்: பைரவி சிவராசா
3வது இடம்: தயானி நடனசபேசன்

பழம் பொறுக்குதல் – 5 வயது ஆண்கள்
1வது இடம்: அனெக்ஷன் நந்தகுமார்
2வது இடம்: அஜீஷ் ஜெகன்
3வது இடம்: கஜானன் வரதராசன்

பழம் பொறுக்குதல் – 5 வயது பெண்கள்
1வது இடம்: விதுஜா ஜெயரட்ணம்
2வது இடம்: பைரவி சிவராசா
3வது இடம்: தயானி நடனசபேசன்

100 மீற்றர் ஓட்டம் – 7 வயது ஆண்கள்
1வது இடம்: அருஷன் சுதாகரன்
2வது இடம்: அர்வின் சண்முகராசா
3வது இடம்: ஜெயந்தன் கேதீஸ்வரன்

100 மீற்றர் ஓட்டம் – 7 வயது பெண்கள்
1வது இடம்: திவ்யா ஜெயபாலன்
2வது இடம்: ஆதினி விநாயகமூர்த்தி
3வது இடம்: ஆரணி துஷ்யந்தன்

சாப்பிட்டுவிட்டு ஓடுதல் – 7 வயது ஆண்கள்
1வது இடம்: அஜந்தன் கேதீஸ்வரன்
2வது இடம்: சுபேதன் ரவிச்சந்திரன்
3வது இடம்: ஜெயந்தன் கேதீஸ்வரன்

சாப்பிட்டுவிட்டு ஓடுதல் – 7 வயது பெண்கள்
1வது இடம்: நிந்துஷா மோகனேந்திரன்
2வது இடம்: நேத்திரா நாதன்
3வது இடம்: கஜானி பிரகலாதீஸ்வரன்


100 மீற்றர் ஓட்டம் – 9 வயது ஆண்கள்
1வது இடம்: சந்தோஷ் ஜெகன்
2வது இடம்: ஆனந் சற்குணராசா
3வது இடம்: அகிலன் சுரேந்திரன்

100 மீற்றர் ஓட்டம் – 9 வயது பெண்கள்
1வது இடம்: வாசுகி தயானந்தராசா
2வது இடம்: அபிஷா பிரபாகரன்
3வது இடம்: தீபிகா பிரமேந்திரதீசன்

பலூன் ஓட்டம் – 9 வயது ஆண்கள்
1வது இடம்: அகிலன் சுரேந்திரன்
2வது இடம்: சந்தோஷ் ஜெகன்
3வது இடம்: ஆனந் சற்குணராசா

பலூன் ஓட்டம் – 9 வயது பெண்கள்
1வது இடம்: தீபிகா பிரமேந்திரதீசன்
2வது இடம்: ஹரினி கதாதரன்
3வது இடம்: வாசுகி தயானந்தராசா

100 மீற்றர் ஓட்டம் – 11 வயது ஆண்கள்
1வது இடம்: தனுஷன் மகாராசா
2வது இடம்: சிவானன் சிவகுமாரன்
3வது இடம்: சுதா சிவா

100 மீற்றர் ஓட்டம் – 11 வயது பெண்கள்
1வது இடம்: கஜானா வரதராசா
2ம் இடம்: நிலக்ஷனா வரதராசன்
3ம் இடம்: சஜினி குணரத்தினம்

பலூன் ஓட்டம் – 11 வயது ஆண்கள்
1வது இடம்: ராகுலன் ஜீவான்தராசா
2வது இடம்: அனோஜன் சுதாகரன்
3வது இடம்: சுதா சிவா

பலூன் ஓட்டம் – 11 வயது பெண்கள்
1வது இடம்: கஜானா வரதராசன்
2வது இடம்: சஜேனி குணரத்தினம்
3வது இடம்: பிரியங்கா கேதீஸ்வரன்

தேசிக்காய் ஓட்டம் – 11 வயது பெண்கள்
1வது இடம்: கஜானா வரதராசா
2வது இடம்: சஜானி குணரத்தினம்
3வது இடம்: பிரியங்கா கேதீஸ்வரன்

100 மீற்றர் ஓட்டம் – 13 வயது ஆண்கள்
1வது இடம்: ஜதுஷன் கோடீஸ்வரன்
2வது இடம்: பிரவின் பிரமேந்திரதீசன்
3வது இடம்: நிலுக்ஷன் தயானந்தராசா

100 மீற்றர் ஓட்டம் – 13 வயது பெண்கள்
1வது இடம்: நிலானி பரமானந்தராசா
2வது இடம்: அபினயா பிரபாகரன்
3வது இடம்: அக்கிகா அரியரட்ணம்

200 மீற்றர் ஓட்டம் – 13 வயது ஆண்கள்
1வது இடம்: யாதவன் பஞ்சலிங்கம்
2வது இடம்: யதுஷன் கோடீஸ்வரன்
3வது இடம்: பிரவின் பிரமேந்திரதீசன்

200 மீற்றர் ஓட்டம் – 13 வயது பெண்கள்
1வது இடம்: நிலானி பரமானந்தராசா
2வது இடம்: அக்கிகா அரியரட்ணம்
3வது இடம்: அபினஜா பிரபாகரன்

தேசிக்காய் ஓட்டம் – 13 வயது பெண்கள்
1வது இடம்: நிலானி பரமானந்தராசா
2வது இடம்: அபினஜா பிரபாகரன்
3வது இடம்: ஜனனி ராஜகோபாலன்

100 மீற்றர் ஓட்டம் – 18 வயது ஆண்கள்
1வது இடம்: இந்துஷன் பஞ்சலிங்கம்
2வது இடம்: கஜன் யோகநாதன்
3வது இடம்: ஜனகன் ராஜகோபாலன்

100 மீற்றர் ஓட்டம் – 18 வயது பெண்கள்
1வது இடம்: மதுரா சோதிநாதன்
2வது இடம்: நிதுஜா பரமாந்தராசா
3வது இடம்: சிவராசா ரஞ்சன்

200 மீற்றர் ஓட்டம் – 18 வயது ஆண்கள்
1வது இடம்: இந்துஜன் பஞ்சலிங்கம்
2வது இடம்: ஜனகன் ராஜகோபாலன்

200 மீற்றர் ஓட்டம் – 18 வயது பெண்கள்
1வது இடம்: நிதுஜா பரமானந்தராசா
2வது இடம்: சிறிவர்ஜா ரஞ்சன்

200 மீற்றர் ஓட்டம் – 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள்
1வது இடம்: அனேஜன் திருக்குமார்
2வது இடம்: ரதீசன் துரைராசா
3வது இடம்: பாலகுமார் குமாரரத்தினம்

200 மீற்றர் ஓட்டம் – 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்
1வது இடம்: பவானி யோகதேவன்
2வது இடம்: பாலசுந்தரி ஜெயபாலன்
3வது இடம்: இந்திராதேவி பிரபாகரன்

சாக்கு ஓட்டம் – 18 வயது ஆண்கள்
1வது இடம்: இந்துஜன் பஞ்சலிங்கம்
2வது இடம்: ஜனகன் ராஜகோபாலன்

சாக்கு ஓட்டம் – 18 வயது பெண்கள்
1வது இடம்: சகானா குணரத்தினம்
2வது இடம்: நிதுஜா பரமானந்தராசா
3வது இடம்: மதுரா சோதிநாதன்

சாக்கு ஓட்டம் – 18 வயதுக்கு மேற்பட்டோர் ஆண்கள்
1வது இடம்: தவராசா சங்கரபிள்ளை
2வது இடம்: ரதீஸ்குமார் சிவலிங்கம்
3வது இடம்: பாலகுமார் குணரத்தினம்

சாக்கு ஓட்டம் – 18 வயதுக்கு மேற்பட்டோர் பெண்கள்
1வது இடம்: நந்தினி சுதாகரன்
2வது இடம்: நந்தினி சண்முகராசா
3வது இடம்: தவமலர் குமாரரத்தினம்


வினோத உடைப் போட்டி
1வது இடம்: பிரியங்கா கேதீஸ்வரன் – தொப்பி வியாபாரி
2வது இடம்: சஜினி குணரத்தினம் – பிச்சைக்காரி
3வது இடம்: திவ்யா ஜெயபாலன் – பார்வையற்றோர்
       மீரா செந்தில்நாதன் – பார்வையற்றோர்

வினோத உடைப் போட்டி
கௌரவ முதலிடம்: சண் – சங்கிலியன்
கௌரவ இரண்டாம் இடம்: தியாகராஜா – அரிச்சந்திரன்

 

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்திய 'காரை ஒன்றுகூடல் – 2014' விளையாட்டு போட்டிகளில் பங்கு பற்றி பரிசில் பெற்றவர்களில் இதுவரை தங்களது பரிசு கேடயங்களை பெற்றுக் கொள்ளாதவர்கள் தயவு செய்து 416 821 8390 என்ற தொலைபேசி இலக்கத்தில் செயலாளரை அழைத்து பெற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

 

 

 

 

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி உதவி காரைநகர் பாடசாலைகளிற்கு சென்றடைந்தது!

கனடா காரை கலாச்சார மன்றம் காரைநகர் பாடசாலைகளிற்கு உடனடி கற்றல் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் முதற்கட்டமாக நிதியுதவி அளிக்க முன்வந்ததையிட்டு காரைநகர் பாடசாலைகளிற்கான நிதி வழங்கப்பட்டுள்ளது.
 யாழ்ற்ரன் கல்லூரி  தகவல்  தொழில்  நுட்ப  ஆய்வு கூடத்திற்கு  கணனிகள் கொள்வனவுக்காக ஒதுக்கப்பட்ட 5  இலட்சம் ரூபா நிதி காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிதியின் மூலம் மேலதிகமாக  10  கணணிகள் பெறப்பட்டுள்ளதாகவும்,  இதன் மூலம் மாணவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் இலகுவாக கணணி கற்கை நெறிகளை கற்பிக்க முடியும் என்றும் அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் அறியத்தந்துள்ளார்.
. ஊரி அ.மி.த.க பாடசாலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய, கற்றலில் இடர்படும் மாணவர்களிற்கு பரிகார கற்றல் செயற்பாட்டிற்காகவும், கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்காகவும் ஒரு வருட செலவாக  2 இலட்சத்து பதின்னான்காயிரம் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருந்தது, முதற்கட்டமாக அந்நிதியில் இருந்து ஒரு இலட்சம் ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளது. காரைநகர் அபிவிருத்தி சபையினர் பாடசாலைக்கு நேரடியாக சென்று அதிபர் திரு.இ.சிறிகரன் அவர்களிடம் காசோலையை கையளித்தனர்.
 சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலையில் உதவி ஆசிரியர்கள் மற்றும் மேலதிக ஆங்கில கல்வி ஆசிரியருக்காகவும் வருடம் ஒன்றுக்கு தேவையான 156,000 ரூபாய்கள் வழங்குவதாக ஒதுக்கப்பட்டிருந்தது. அந்நிதியில் இருந்து 75,000 ரூபாய்கள் அதிபர் திரு.அ.சாந்தகுமார் அவர்களிடம் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
 வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை(சடையாளி) மாணவர்களின் மேலதிக கணணி கல்வி, மற்றும் ஆங்கில கல்விக்காக 98,000 ரூபாய்கள் வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. முதற்கட்டமாக அந்நிதியில் இருந்து 50,000 ரூபாய்கள் பாடசாலை அதிபர் செல்வி விமலாதேவி விஸ்வநாதன் அவர்களிடம் காரைநகர் அபிவிருத்தி சபையினர் வழங்கியுள்ளனர்.
 வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலை(அப்புத்துரை) மாணவர்களின் மேலதிக கணணி கல்வி, மற்றும் ஆங்கில கல்வி தொண்டாசிரியர் சம்பள கொடுப்பனவுகளிற்காகவும், கற்றல் உபகரண கொள்வனவிற்காகவும் 76,000 ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிதியில் இருந்து 50,000 ரூபாய்கள் அதிபர் திரு.க.நேத்திரானந்தனிடம் காரைநகர் அபிவிருத்தி சபையினர் வழங்கியுள்ளனர்.
மேற்கொண்டு மற்றைய பாடசாலைகளிற்கும் ஒதுக்கப்பட்ட நிதியுதவிகள் காலக்கிரமத்தில் கொடுத்து கற்றல் தேவைகளை ஆரம்பித்து வைப்பதற்கு காரைநகர் அபிவிருத்தி சபையினர் மேற்கொண்டு முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.
 கனடா காரை கலாச்சார மன்றத்தின் பாடசாலைகளிற்கான நிதியுதவிகளை பாடசாலை அதிபர்களிடம் காரைநகர் அபிவிருத்தி சபையினரால் காசோலைகள் மூலம் கையளிக்கப்படுவதனை கீழ் வரும் படங்களில் காணலாம்.
 1 2 3 4 5

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் ஜனவரி 2011 – பெப்ரவரி 2013 காலப்பகுதிக்கான செயற்பாட்டு அறிக்கை

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் ஜனவரி 2011 – பெப்ரவரி 2013 காலப்பகுதிக்கான செயற்பாட்டு அறிக்கை

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் ஜனவரி 2011–பெப்ரவரி 2012 காலப்பகுதிக்கான செயற்பாட்டு அறிக்கையினையும் வரவு செலவு அறிக்கையினையும் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.
நிர்வாகசபையில் அங்கம்வகித்த இளம் உறுப்பினர்களின் ஊர்ப்பற்று, அர்ப்பணிப்பு, செயற்திறன் ஆகியனவும், கடந்த கால நிர்வாகசபை உறுப்பினர்களின் வழிகாட்டுதலும், அனுபவமும், ஆதரவும் இணைந்து செயலாற்றியதன் காரணமாக இக்காலப்பகுதியில் பயனுள்ள பல முக்கியமான வேலைத்திட்டங்களை நிறைவேற்றக்கூடியதாக இருந்ததையிட்டு மனநிறைவடைகின்றோம். மன்றத்தின் நிதிநிலையை உயர்த்தி இவ்வேலைத்திட்டங்களை நிறைவேற்ற உதவிய கனடா வாழ் காரைநகர் மக்கள், நலன் விரும்பிகள், வர்த்தகப்பெருமக்கள், அனைவருக்கும் மன்றம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

மன்றத்தின் செயற்குழு இக்காலப்பகுதியில் 15 தடவைகள் கூடி, மன்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்து தீர்மானங்கள் எடுத்துச் செயலாற்றியுள்ளது. இக்கூட்டங்களை நடாத்துவதற்கு தமது காரியாலயத்தை தந்துதவிய தலைவர் திரு. ரவி ரவீந்திரன் அவர்களுக்கு எமது மன்றம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது.

 karainagar.com இணையத்தளம் இக்கால கட்டப்பகுதியில் மேன்மேலும் விரிவுபடுத்தப்பட்டு மிகப்பெரிய அளவில் உலகம் வாழ் காரை மக்களை கவர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது இவ்விணையத்தளத்தின் தினசரி பார்வையாளர்கள் சராசரி 3000க்கு மேல் அதிகரித்துள்ளது. இவவிணையத்தளத்தின் பலபகுதிகள் முக்கியம் வாய்ந்தவையாக இருக்கின்றன. மரணஅறிவித்தல் பகுதியையும் அதிகமாக மக்கள் பாவித்துவருகின்றனர். அதிகரித்துவரும் நிதிஅன்பளிப்புக்கள் மக்கள் கருத்துக்கள் இதில் முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியன. குறிப்பாக சுதர்சன் என்பவருடைய புற்றுநோய் சிகிச்சைக்கான அன்பளிப்பு நிதி  PayPal மூலம் உலகம் வாழ் காரை மக்களால் வழங்கப்பட்ட தொகையே மிகக்கூடுதலான தொகையாக இருந்தமை இதன் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு. அத்துடன் தமது அங்கத்துவப்பணத்தையும் இதனூடாக செலுத்தும் வாடிக்கையாளர்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்துலக காரை மன்றங்களின் வேண்டுகோளுக்கிணங்க எமது இணையத்தளத்திலே அவர்களுக்கெனத் தனித்தனியான பகுதிகள் அமைக்கப்பட்டு புதிய வடிவத்தில் 2013 தைப்பொங்கல் தினத்தன்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்தும் இவ்விணையத்தளத்தின் பலபகுதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டுவருகின்றன.  இவ்விணையத்தளத்தில் தமது நேரங்களை செலவுசெய்துகொண்டிருக்கும் தொழில்நுட்ப உதவியாளர் திரு.விமலராசா குலசேகரம், கே.கே.எலெக்ரோனிக்ஸ் நிறுவனத்தினருக்கும் எமது மன்றம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கடந்த 2011 நொவெம்பர் மாதத்திலிருந்து ஆகஸ்ட் 2012 காலப்பகுதியில் காரைநகரிலுள்ள பாடசாலைகளுக்கு மன்றத்துடன் இணைந்த பழைய மாணவர் சங்கங்களை அமைப்பதற்கு முயற்சிகள் நடைபெற்றபோது முதன் முதலாக கூட்டம் GTA Square Hall இல் நடைபெற்றது. காரைநகரின் பிரதான பாடசாலைகளுக்கான பழைய மாணவர் சங்கம் அமைப்பதற்கு 3 இணைப்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். களபூமி சுந்தரமுர்த்திநாயனார் வித்தியாலயமும் அதன் சார்ந்த பாடசாலைகளுக்கும் திரு. குகனேசபவான் சிவசுப்பிரமணியம், இந்துக்கல்லூரிக்கு – திரு. சிவகுமார் கனகசுந்தரம், யாழ்ரன் கல்லூரிக்கு திரு. மார்க்கண்டு செந்தில் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இதன் பின்னர் களபூமிப் பாடசாலைக்கு பழைய மாணவர் சங்கம் திரு.வேலுப்பிள்ளை ராஜேந்திரம் தலைமையில் அமைக்கப்பட்டது. யாழ்ரன் கல்லூரிக்கு எமது மன்றம் முனைந்த போது அக்கல்லூரி பழையமாணவாகள் முன்வராததால் அக்காரியம் தடைப்பட்டது.
காரைநகர் இந்துக்கல்லூரிக்கு மன்றத்துடன் இணைந்த பழைய மாணவர் சங்கம் ஒன்றை அமைப்பதில் எமது மன்றம் தீவிரமாக ஈடுபட்டு திரு.தர்மலிங்கம் திருச்செல்வம் அவர்களை தலைமையாகக் கொண்டு பழைய மாணவர் சங்கம் அமைக்கப்பட்டது. அதன் பிற்பாடும் காரை இந்துக்கல்லூரிக்கு பழையமாணவர் சங்த்தின் சார்பில் கனடா காரை கலாச்சார மன்றத்தின் பணத்தில் ரூ65,000.00 இந்துக்கல்லூரியின் விளையாட்டுப்போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன்பிற்பாடு ஒருசிலரின் தலையீட்டால் இம்மன்றம் கலைந்துபோனது. அதனையடுத்து காரை இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் அமைப்பதில் இணைப்பாளர் திரு.சிவகுமாரனுடன் மன்றத்திற்கும் திருப்திகரமான உடன்பாடு ஏற்படாத காரணத்தால் இம்முயற்சி கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேறு சில பழையமாணவர்கள் சேர்ந்து தனியாக காரை இந்துக்கல்லூரிக்கு மன்றம் அமைத்தனர். கனடா காரை கலாச்சார மன்றத்துடன் இணைந்த காரை இந்துக்கல்லூரிக்கு பழைய மாணவர் சங்கம் அமைக்கும் முயற்சியில் மன்றத்துடன் இணைந்து செயலாற்றிய அனைத்துப் பழைய மாணவர்களுக்கும் அவர்கள் செலவிட்ட மதிப்பிடப்பிட முடியாத நேரங்களுக்கும் எமது வருத்தத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

காரை வசந்தம் 2011: 09-10-2011 இல் பதிரோவது ஆண்டாக ஸ்காபரோ நகரிலுள்ள சீனக் கலாச்சார கலை அரங்கத்தில் கலை மணமும், காரை மண்ணின் மணமும் பரப்பி கலை ரசிகர்களை வசீகரித்துச் சென்றது. பல தமிழ் விழாக்களுள் தமிழ் ஊடகங்களினாலும், கலை ஆர்வலர்களாலும் பாராட்டுக்களைப் பெற்ற தரமும், சுவையும் மிகுந்த முன்னணிக் கலை விழாக்களுள் ஒன்றாக கனடா-காரை கலாச்சார மன்றம் வழங்கி வரும் காரை வசந்தம் கலை விழா அமையப் பெற்று விளங்குவது காரைநகர் மக்களுக்கு பெருமை தருவதாகும். கணக்காய்வாளர் திரு.கந்தையா கனகராசா அவர்கள் பிரதம விருந்தினராக வருகை தந்து சிறப்பித்திருந்தார். இவ்விழாவில் வழமைபோல வாழ்த்துச் செய்திகள், விளம்பரங்கள் அடங்கிய விழாமலரும் வெளியிடப்பட்டது.

காரைவசந்தம் 2012: 07.10.2012 பன்னிரண்டாவது ஆண்டாக அதே சீனக் கலாச்சார கலைஅரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த டாக்டர் கனகமலர் சிறீகாந்தா அவர்கள் பிரதம விருந்தினராகவும் சிறப்பு விருந்தினர்களாக இலண்டனிலிருந்து வருகை தந்து கலந்து கொண்டு சிறப்பித்திருந்த ஊடகவியலாளர் திரு.இளையதம்பி தயானந்தா மற்றும் காரை நலன்புரிச்சங்கத் தலைவர் திரு.பரமநாதர் தவராஜா அவர்களும் பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத் தலைவர்  திரு. அருளானந்தம் செல்வச்சந்திரன் அவர்களும் சிறப்பித்திருந்தமை வரலாறு காணாத பெருமை என்றே சொல்லவேண்டும். அத்துடன் ஊடகவியலாளர் திரு.இளையதம்பி தயானந்தாவின் வருகையும் அவருடன் சார்ந்த இலங்கையின் புகழ்பூத்த வானொலிக்கலைஞர்கள், தொலைக்காட்சிக் கலைஞர்களும் இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்தமை காரைவசந்தம் என்னும் விழா பல்வேறு கனேடிய தமிழ் மக்கள் மத்தியிலும் பிரபலம் அடைய வாய்ப்பாக இருந்தமை மேலும் சிறப்பு. அத்துடன் ஒவ்வொரு காரை வசந்தங்களிலும் நிகழ்ச்சிகளை வழங்கும் காரைநகர் கலைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துச்செல்வதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. வழமைபோல இவ்விழாவிலும் விழாமலர் வெளியிடப்பட்டது. இவ்விழாக்களுக்கு விளம்பர அனுசரணை வழங்கிய அனைத்து வர்த்தகப் பெருமக்களுக்கும் எமது மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆருத்திரா தரிசனம் – கனடா-காரை கலாச்சார மன்றத்தினால் கனடா றிச்மண்ட் ஹில் இந்து ஆலயத்தில் வருடாந்தம் நடாத்தப்பட்டு வருகின்ற ஆருத்திரா அபிஷேகமும், ஆருத்திரா தரிசனமும் கடந்த 2012ம் ஆண்டிலேயே இரு விழாக்களும் மிகசிறப்பாக நடாத்தப்பட்டிருந்தது. அதிகாலை 5மணி முதலே நூற்றுக்கணக்கான காரைநகரைச் சேர்ந்த அடியார்கள் உள்ளிட்டோர் எம்பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகத்தையும், தரிசனத்தையும் கண்டு இன்புற்று அருள்பெற ஆலய மண்டபத்தில் கூடியிருந்தனர். அடியவர்களினால் கொண்டுவரப்பட்டிருந்த பெருமளவிலான அபிஷேகத் திரவியங்களினால் நடைபெற்ற சிறப்பான அபிஷேகத்தைத் தொடர்ந்து தரிசனக்காட்சி இடம்பெற்றது.

இவ்வாண்டுகளில் ஏற்கனவே எமது மன்றத்தால் மக்களின் அனுசரனையுடன் அமைத்துக்கொடுக்கப்பட்ட விசேட திருவாசியில் விசேட மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நடேசப் பெருமான் விசேட தவில் நாதஸ்வர இசை முழங்க ஆனந்தத் தாண்டவமாடிய வண்ணம் உள்வீதியுலா வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தது கண்கொள்ளாக் காட்சியாகவிருந்தது. இவ்ஆருத்திரா தரிசனங்களுக்கு வருகைதந்த அடியார்கள் மற்றும் பல்வேறு உதவிகள் செய்த அனைத்து மன்ற தொண்டர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 சென்ற ஜனவரி 8இல் நடைபெற்ற திருவாதிரை உற்சவத்தில் காரைநகரின் கலைஞன் நிஷாந் நந்தகுமார் குழுவினர் இசை நிகழ்ச்சி வழங்கினர். திரு.லக்கிராஜா அவர்கள் பிரதான அனுசரணையாளராக திருவிழாவிற்கான பூசைக்கும் மற்றும் அடியார்களுக்கு வழங்கிய பிரசாதத்திற்கும் நிதியுதவியாக $2000டொலர்களை வழங்கியிருந்தார். அவர்களுக்கு எமது மன்றம் சார்பில் இரண்டாவது தடவையாகவும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

டிசெம்பர் 28இல் நடைபெற்ற விழாவில் திரு.ரஞ்சன் கணபதிப்பிள்ளை அவர்களின் ஆன்மீக சொற்பொழிவும் இடம் பெற்றன. அத்துடன் மன்றத்தினால் வெளியிடப்பட்டிருந்த 2013ஆம் ஆண்டிற்கான நாட்காட்டிக் கலண்டரும் இவ்விழாவில் வெளியிடப்பட்டது. இவ்விழாவிற்கு பிரதான அனுசரணையாக அர்ச்சனாஸ் ஸ்தாபன உரிமையாளர் திரு. P.S.சுதாகரன் அவர்கள் சுவாமி அலங்காரத்திற்குத் தேவையான பூக்களை இலவசமாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காரைக் கொண்டாட்டம்(கோடை கால ஒன்றுகூடல்) – 2011, 2012: இவ்விரு ஆண்டுகளும் வழமைபோல சென்ற யூலை 17ம் திகதி Morningside பூங்காவில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பலநூற்றுக்கணக்கான காரைநகர் மக்கள் கூடி மகிழ்ந்த சிறப்பு நிகழ்வாக இது அமைந்திருந்தது. வழமைபோல இவ்வாண்டும் வந்திருந்த மக்கள் அனைவரும் அவர்களின் நகர வதிவிடங்களின் அடிப்படையில் சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய இல்லங்களாக பிரிக்கப்பட்டு இவ்வில்லங்களுக்கிடையேயான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்றன. கிளித்தட்டு, உதைபந்தாட்டம், கயிறிழுத்தல், விநோதஉடை உள்ளிட்ட பல போட்டி நிகழ்ச்சிகளிலும் சிறுவர்கள், இளையோர், வளர்ந்தோர், முதியோர் என அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் பங்குபற்றியிருந்தனர். காலை முதல் மாலை வரை போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த அதேவேளை மன்றத் தொண்டர்கள் பல்வேறுபட்ட உணவுவகைகளைத் தயாரித்து பரிமாறிக்கொண்டிருந்தனர். பலர் குழுக்களாக மரநிழல்களில் கூடி ஊரின் நினைவுகளையும், செய்திகளையும் பகிர்ந்து அளவளாவி மகிழ்ந்ததை காணக்கூடியதாகவிருந்தது. இறுதியில் அதிகபுள்ளிகளைப்பெற்ற இல்லங்களிற்கும், வெற்றி பெற்றவர்களிற்கும் கேடயங்களும், பரிசில்களும் வழங்கப்பட்டன. இவ்நிகழ்விற்கு அனுசரனை வழங்கிய அனைத்து வர்த்தகப் பெருமக்களுக்கும் உதவிகள் பல செய்த தொண்டர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

குளிர்கால ஒன்றுகூடல் 2011 – மக்களின் வேண்டகோளிற்கிணங்க குளிர்கால ஒன்றுகூடல் 2011 டிசெம்பர் 25ம்திகதி Baba Banquet Hall இல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வானது தனிப்பட்ட முறையில் பணம் சேகரிக்கப்பட்டு நடாத்தப்பட்டது. குறிப்பாக இவ்விழா மூலம் குழந்தைகள் மிகவும் சந்தோசமான அனுபவத்தைப் பெற்றிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

குளிர்கால ஒன்றுகூடல் 2012: இவ்வருடம் மார்கழி மாதத்தில் திருவெம்பாவை உற்சவம் காரணமாக விழா நடாத்த முடியவில்லை.

தன்னியக்கத் தொலைபேசி – மன்றத்தின் அறிவித்தல்கள் அனைத்தையும் மக்களுக்கு அறியத்தரும் வகையில் தன்னியக்க தொலைபேசி சேவை அறிமுகப்;படுத்தப்பட்டு மக்களிடம் மிகுந்த பாராட்டையும் பெற்றுள்ளது. இச்சேவையானது விரிவுபடுத்தப்பட்டு லண்டன், சுவிஸ் காரை மன்றங்களுக்கும் கட்டண அடிப்படையில் சேவை வழங்கி  வருகின்றோம்.

மன்றத்திற்கான நிரந்தர தொலைபேசி: 21.05.2011 மன்றத்திற்கான நிரந்தரமான தொலைபேசி இலக்கம் சேவையில் மிகக் குறைந்த கட்டணத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 416 642 4912 என்ற இலக்கத்தை அழுத்துவதன் மூலம் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோருடன் தனித்தனியாக தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் திறன் போட்டிகள்: சிறுவர்கள் மத்தியில் தமிழ்மொழித்திறனை வளர்க்கவும் சமய ஈடுபாட்டினை ஊக்குவிக்கவும் என மன்றம் நடாத்திவரும் தமிழ்மொழித்திறன், பண்ணிசைப் போட்டிகள் கடந்த இரண்டு ஆண்டுகளும் Scarborough Civic Centre இல் நடைபெற்றன. 2011ம் ஆண்டில் 5-17வயதுக்குட்பட்ட 51மாணவர்களும், 2012ம் ஆண்டில் 47மாணவர்களும்  பங்குபற்றியிருந்தனர். போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான விருதுகளும், பங்குபற்றிய மாணவர்களுக்கான பாராட்டுவிருதுகளும் காரைவசந்தம் கலைவிழாவில் வழங்கப்பட்டிருந்தன. அத்தோடு முதலிடம் பெற்ற மாணவர்கள் கலைவிழாவில் தமது பேச்சுக்களை நிகழ்த்தியிருந்தனர். இப்போட்டிகளில் பங்குபற்றும் சிறுவர்கள் அனைவரும் தமது ஆர்வத்துடன் பண்பான ஒத்துழைப்பை போட்டி நடாத்துபவர்களுக்கு வழங்கி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற, மற்றும் பங்கு பற்றிய சிறுவர்களுக்கும், அவர்களை ஊக்குவித்த பெற்றோர்களுக்கும் எமது பாராட்டுக்கள்.!

மன்றத்தினால் காரைநகருக்கு வழங்கப்பட்டுள்ள உதவிகள்: காரைநகருக்கு தேவையான உதவிகளை இனம்கண்டு கனடா-காரை கலாச்சார மன்றத்தின் இணையத்தளம் வாயிலாக தெரியப்படுத்தியிருந்தபோது ஊர்ப்பற்றும் நல்லிதயமும் படைத்த பல கனடா வாழ் காரை மாதாவின் பிள்ளைகள் தாமாகவே முன்வந்து உதவிகளை வழங்குவது அனைவரையும் உளம் பூரிக்கச் செய்துவிட்டது. கனடா-காரை கலாச்சார மன்றமானது எமது உறவுகளின் நலனில் அக்கறையோடு பணியாற்றி வருகின்ற எமக்கான மன்றம் என்ற உணர்வுடன் மன்றத்தின் செயற்பாட்டில் நம்பிக்கையும், நல்லெண்ணமும் வைத்து தமது உதவிகளை மன்றத்திற்கூடாக வழங்கி மன்ற வளர்ச்சிக்கு ஆதரவளித்த நல்லுள்ளங்களின் பணி பாராட்டிற்கும் நன்றிக்குமுரியதாகும். காரை வசந்தம் மற்றும் அன்பளிப்புக்கள் மூலம் ஈட்டப்பட்ட பணத்திலிருந்து காரைநகரில்  அரச உதவிகள் கிடைக்க முடியாத, அவசியம் தேவைப்பட்ட பணிகளிற்கும் மன்றத்தினால் உதவப்பட்டுள்ளது. மன்றத்தின் தீர்மானத்திற்கமைய இந்த உதவிகள் அனைத்தும் காரை அபிவிருத்திச் சபையூடாகவே வழங்கப்பட்டு பணிகள் செயற்படுத்தப்பட்டிருந்தன.

• பெப்ரவரி 2011: திருமதி. ஞானசுந்தரம் விசுவலிங்கம் ஞாபகார்த்த புலமைப் பரிசில் திட்டத்தின்கீழ் 2011ஆம் ஆண்டு உயர்தரப் பாடசாலைகள் நான்கில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட நாற்பது மாணவர்களிற்கு கற்கைச் செலவுக்காக மாதாந்தம் ஐநூறு ரூபா வீதம் ஒரு ஆண்டிற்கு காரை அபிவிருத்திச்சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அப்பணம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக போதிய ஆதாரம் இல்லாததால் 2012 ஆம் ஆண்டிற்கான திருமதி. ஞானசுந்தரம் விசுவலிங்கம் ஞாபகார்த்த புலமைப் பரிசில் பணம் அனுப்பி வைக்கப்படவில்லை. இவ்வுதவியை வழங்கிய குழந்தை வைத்திய நிபுணர் டாக்டர் வி.விஜயரத்தினம் அவர்கள் 2007ம் ஆண்டு தொடக்கம் இப்புலமைப் பரிசில் திட்டத்திற்கான உதவியை தமது தாயார் பெயரில் வழங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு கனடா காரை கலாச்சார மன்றம் தனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.

 • வன்னி யுத்தத்தின்போது தனது பெற்றோர்களைப் பறிகொடுத்த அனாதரவான ஒன்றரை வயதுடைய நகுல்ராஜ் நக்கீரன் என்ற குழந்தையினைப் பராமரிக்கும் செலவாக மாதாந்தம் இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாயினை திரு.லக்கிராஜா அவர்கள் பெருமனதோடு வழங்கி வருகின்றார். அப்பணங்களும் தகுந்த முறையில் அந்தச் சிறுவனுக்கு 2012 டிசெம்பர் மாதம் வரை வழங்கப்பட்டுள்ளன.

 • பெப்ரவரி 2011: கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஆதரவில் காரைநகரில் 5ம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக விசேட பயிற்சிப் பட்டறைகளை காரைநகர் கல்விக்கோட்டம் நடாத்தியது. இதற்கு எமது மன்றம் சுமார் 107,950.00 அனுப்பி வைத்தது.

 • 30.05.2011இல் காரைநகர் ஈழத்துச்சிதம்பர கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட நிதிசேகரிப்பில் பல காரை அன்பர்கள் தம்மாலான நிதியுதவிகளை வழங்கியிருந்தனர். சுமார் 5இலட்சம் ரூபாய்கள($4283.00) அங்கு அனுப்பிவைக்கப்பட்டது.

 • காரைஒளி சஞ்சிகை: 23.01.2011 இல் கனடா காரை கலாச்சார மன்றத்தின் வளர்ச்சிப்பாதையில் மற்றுமோர் முக்கிய பதிவாக முதன் முதலாக காரைஒளி சஞ்சிகை ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச்சஞ்சிகையானது காரைநகர் செய்திகளையும் மற்றும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் செய்திகளையும் தாங்கியதாக முழுவர்ணப் பதிப்பாக வெளியிடப்பட்டது. இச்சஞ்சிகையை வெளியிட்டு வைப்பதற்காக வெளியீட்டு விழா கனடா செல்வச் சந்நிதி ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடாத்தப்பட்டது. இக்கூட்டத்திற்கு மன்றத்தின் ஆதரவாளர்கள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

 • அத்துடன் அதன் இரண்டாவது சஞ்சிகை 30.06.2011இலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

காரைநகர் மாணவர் நூலகத் திட்டம்- நாகரீகமும், நவீன தொழில்நுட்பங்களும் நாளுக்குநாள் வளர்ச்சி பெற்றுவரும் இன்றைய காலகட்டத்தில் காரைநகரில் ஓர் மாணவர் நூலகம் ஒன்றை அமைக்கும் திட்டம் ஒன்று கல்வி ஆர்வலர்களால் முன்மொழியப்பட்டது. சிறார்கள் முதல் பெரியோர்கள் வரை கல்வி சார்ந்த அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல்துறை சார்ந்த நூல்களும், நவீன கற்றல் உபகரணங்களும் உள்ளடக்கப்பட்டு காரை அபிவிருத்திச் சபையினரால் அமைக்கப்படவுள்ள இந்நூல் நிலையத் திட்டத்திற்கு கனடா-காரை கலாச்சார மன்றம் தனது முழு ஆதரவினையும், ஒத்துழைப்பையும் வழங்கி வருவதுடன் இத்திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களையும் நடாத்தியிருந்தது. இத்திட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல சாத்தியமான வழிகளில் உதவிகள் புரிந்திடவும், நிதி சேகரிக்கவும் என உபகுழு ஒன்று திரு. அமிர்தலிங்கம் நடராஜா அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு இயங்கிவருவது நீங்கள் அறிந்ததே. இத்திட்டத்திற்கு கனடா வாழ் காரைநகர் மக்கள் பெருவரவேற்பை வழங்கி சுமார் $14,332.00 டொலர்கள் நிதியுதவியினை வழங்கி ஆதரவளித்தார்கள் என்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு விடயம். இத்திட்டத்திற்கு தமது முழுமையான ஈடுபாட்டினை வழங்கி கனடாவில் மட்டுமல்லாது ஏனைய நாடுகளிலும் உள்ள காரை மன்றங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி நிதியுதவிகளை பெற்றுக்கொள்ள வசதி செய்துகொடுத்த எமது இணைப்பாளர் திரு.நடராஜா அமிர்தலிங்கம் அவர்களுக்கு எமது மன்றம் தனது பிரத்தியேகமான மனப்பூர்வமான நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.

 29.07.2011 இல் இத்திட்டத்தின் ஆரம்பகட்ட கட்டுமாணிப்பணியை ஆரம்பிக்கும் முகமாக
• முதற்கட்ட நிதியாக $1726.00 டொலர்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
• இரண்டாவது கட்டமாக $10,000.00 டொலர்களும் அனுப்பி வைக்கப்பட்டது.
• மூன்றாவது கட்டமாக 03.02.2013 இல் $2586.00 டொலர்களும் அனுப்பிவைக்கப்பட்டது.
இதுவரையில் மொத்தம் 54பேரிடமிருந்து $14,332.00டொலர்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.

• 05.11.2011 இல் தோப்புக்காடு பாடசாலைக்கு அலுமாரி வாங்குவதற்காக 30,000.00ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது.

 • 05.11.2011 இல் ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கு காரை அபிவிருத்திச் சபையால் பாராட்டுவிழா நடாத்தப்பட்டது. இவ்விழாவிற்கு அனுசரணையாக 50,000.00ரூபா அனுப்பி வைக்கப்பட்டது.

 • 24.12.2011 கனடா காரை கலாச்சார மன்றத்தினால் களபூமி சுந்தரமூர்த்திநாயனார் பழைய மாணவர் சங்க அங்குரார்ப்பணக் கூட்டம் GTA Square மண்டபத்தில் நடாத்தப்பட்டது. இக்கூட்டத்தில் திரு. வேலுப்பிள்ளை ராஜேந்திரம் அவர்களை தலைவராக் கொண்டு சுந்தரமூர்த்தி நாயனார் பாடசாலை மற்றும் களபூமியிலுள்ள சிறிய பாடசாலைகள் ஆகியனவற்றை விசேடமாக கவனிப்பதற்கு பழைய மாணவர் சங்கம் ஒன்று எமது மன்றத்துடன் இணைந்து செயலாற்றக்கூடியதாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. துரதிஷ்டவசமாக பின்னர் அவை இயங்கமுடியாத நிலைமைகள் ஏற்பட்டது.

 • 07.01.2012காரைநகர் மணிவாசகர் சபைக்கு 25ஆயிரும் ரூபாய்களும் மாணிக்கவாசகர் மடாலயத்திற்கு 50ஆயிரம் ரூபாய்களும் அனுப்பி வைக்கப்பட்டது.

 • 21.01.2012இல் எமது மன்றத்தால் கடந்த இரண்டு வருடங்களாக காரைநகரில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடாத்தப்படும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்செய்யும் பொருட்டு விசேட பயிற்சிப் பட்டறைகளை காரைநகர் கல்விக் கோட்டத்தினர் நடாத்தி வருகின்றனர். இவ்விசேட பயிற்சிப் பட்டறைகளுக்கு ஆரம்ப ஆயத்தங்களை(வினாத்தாள்) வழங்குவதற்கு 50,000ரூபாய்கள் வழங்கப்பட்டது.

• 16.02.2012 இல் காரைநகர் வைத்தியசாலைக்கு கனடா வைத்தியசாலைகளில் பாவிக்கப்பட்ட கட்டில் ஒன்று அமரர் வேலுப்பிள்ளை திருநாவுக்கரசு ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பத்தினர் காரைநகரிலுள்ள வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு அணுகியிருந்தார்கள். எமது மன்றம் இதற்கான அனுப்பும் செலவை ஏற்று $425.00 டொலர்கள் செலவழித்து அனுப்பி வைத்தது.

 • 18.02.2012 எமது மன்றத்தால் $604.78டொலர்கள் பெறுமதியான Laptop Computer ஒன்று காரைநகர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 • 08.02.2012இல் காரைநகர் இந்துக்கல்லூரியின் நடைபெற்ற வருடாந்த விளையாட்டுப்போட்டிக்கு எமது மன்றத்தால் 65,000ரூபாய்கள் அப்போது தற்காலிகமாக மன்றத்துடன் இயங்கிய காரை இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கி அப்பணம் காரைநகர் இந்துக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

• ''முதுசங்களைத் தேடி' என்னும் தலைப்பில் கனடா காரை கலாச்சார மன்றமும் காரை நலன்புரிச் சங்கமும் இணைந்து நீண்ட கால செயற்திட்டம ஒன்றினை முதன்முறையாக முன்னெடுத்துள்ளனர். அதாவது எங்கள் முன்னோரின் அரிய ஆக்கங்களையும் அவர்கள் பற்றிய தகவல்களையும் மீள உலகெங்கும வாழும் எங்கள் ஊர் மக்கள் முன்கொண்டு வருதலேயாகும்.  இத்தேடல் பயணத்தில் அனைத்துக் காரை மன்றங்களும் இணைந்துள்ளன. இந்நூல் வெளியீட்டின் மூலம் கிடைக்கும் நிதி முதுசங்களைத் தேடி என்னும் திட்டத்தின் ஊடாக மீண்டும் இன்னும் ஒரு நல்ல படைப்பை வெளிக்கொண்டு வருவதற்குப் பயன்படுத்தப்படும். இதில் முதலாவதாக 'காரைநகர் மான்மியம்' என்னும் நூலின் இரண்டாம் பதிப்பு வெளியீட்டுவிழா  7.02.2012இல் காரைநகரில் ஈழத்துச்சிதம்பர இரதோற்சவநாளில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து காரை வசந்தம் 2012 விழாவிலும் இந்நூல் வெளியிடப்பட்டது. கனடாவில் வெளியிடப்பட்டது. இதில் விற்பனை மூலம் கிடைக்கப்பெற்ற பணம் முழுவதும் லண்டன் காரை நலன்புரிச்சங்கத்தினரால் முதுசங்களைத் தேடி நிதியில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

 • மே. 2012: சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவுக்கு 50,000ரூபா அனுப்பி வைக்கப்பட்டது.

 • யாழ்ரன் கல்லூரியில் கணினி ஆசிரியர்களின் சம்பளம் வழங்கவென முதல் 6மாதத்திற்கான வேதனங்களை காரை நலன்புரிச்சங்கமும் அடுத்த 6மாதத்திற்கான வேதனங்களை கனடா காரை கலாச்சார மன்றமும் வழங்க இணங்கியதற்கிணங்க 80,000 ரூபாய்கள்(ஜுலை 2012 மாதம் தொடக்கம் டிசெம்பர் 2012 வரை) அனுப்பிவைக்கப்பட்டது.

 • அத்துடன் யாழ்ரன் கல்லூரிக்கு கொம்பியூட்டர் அறைக்கு மேலதிக வசதிகளை ஏற்படுத்துவதற்காக மேலும் 1இலட்சத்து 50ஆயிரம் ரூபாய்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

 • 26.12.2012 கனடா காரை கலாச்சார மன்றம், லண்டன் காரை நலன்புரிச் சங்கங்கம் ஆகியனவற்றின் ஆதரவில் 5ம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் திறமையான சித்திகளைப் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கு பாராட்டுவிழா ஒன்று நடாத்தப்பட்டது. இவ்விழாவிற்கு எமது மன்றம் சார்பில் 30ஆயிரம் ரூபாய்கள் வழங்கப்பட்டது.

• திருமதி. இரத்தினபூபதி சோமசுந்தரம் அவர்கள் கடந்த வருடம் மறைந்த தமது கணவர் அமரர் சோமசுந்தரம் அவர்களின் ஞாபகார்த்தமாக நன்கொடையாக சுமார் $3000.00 டொலர்களை எமது மன்றத்திற்கு வழங்கியிருந்தார். இவ்வுதவிப்பணம் முழுவதும் கட்டாயமாக வறியோர்களையே சென்றடைய வேண்டுமென்ற அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கீழ்வரும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

* காரைநகர் மாணவர் நூலகத்திற்கு அன்பளிப்பாக $2000.00 டொலர்களும்

 * காரைநகர் அரசாங்க அதிபர் பணிமனையினால் சர்வதேச வறிய சிறுவர்கள், முதியோர் தினத்தையொட்டி சுமார் 1இலட்சம் ரூபா பெறுமதிக்கு வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் முதியோர்களுக்கு உடுபிடவைகளும் வழங்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை காரை அரசாங்க அதிபர் நேரடியாக வறியோர்களை இனம்கண்டு இவ்வுதவிகளை வழங்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

* களபூமி விளானையில் இயங்கிவரும் திருமதி. ராசமலர் நடராசா அவர்கள் நடாத்திவரும் விளானை முத்தமிழ் பேரவைக்கு ரூபா20,000.00 வழங்கப்பட்டது. இப்பேரவையில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு இலவச சங்கீத, மிருதங்க. பரதநாட்டிய வகுப்புக்கள் நடாத்தப்பட்டு வருகின்றன.

* மற்றும் வாழ்வாதார வசதி குறைந்த அருட்செல்வி என்கின்ற வறிய குடும்பத்தினரிற்கு ரூபா 10,000.00 வழங்கப்பட்டது.

• டிசெம்பர் திருவாதிரை உற்சவ காலத்தில் காரைநகரில் வழமைபோல் மன்றத்தால் ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டுவரும் உதவியாக மாணிக்கவாசகர் அன்னதானசபைக்கு 50,000 ரூபாய்கள் வழங்கப்பட்டது.

 • அத்துடன் மணிவாசகர் சபைக்கு 25,000 ரூபாய்கள் வழங்கப்பட்டது.

 • சுப்பிரமணியம் வித்தியாசாலைக்கு பாடசாலையின் அபிவிருத்திக்கு 50,000 ரூபாய்கள் வழங்கப்பட்டது.

 • கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்படும் உறவுக்குக் கரம் கொடுப்போம்…. திட்டத்தின் கீழ் மீண்டும் மூவருக்கு உதவித்தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

* காநைகரைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சியை வதிவிடமாகவம் கொண்ட கனகலிங்கம் சுதர்சன்  எனபவரது இரத்தப்புற்றுநோய் சிகிச்சைக்கு மிகக்குறுகிய காலத்திற்குள் கனடா, மற்றும் உலகம் வாழ் காரை மக்களும் வழங்கிய அன்பளிப்புக்கள் மூலம் பெறபட்ட நிதியான $12,443 டொலர்கள் அவருக்கு உரிய முறையில் அனுப்பி வைக்கப்பட்டது.

* இத்திட்டத்தின் கீழ் காரைநகர் மாப்பாணவூரியைச் சேர்ந்த திரு.கணேசன் காந்தரூபன் என்பவரது மகன் கலைப்பிரியன்(இவருக்கு இருதயத்தில் துவார சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது) என்பவருக்கு சுமார் 92,800 ரூபாய்கள் நேற்று எமது மன்றத்தினால் காரை அபிவிருத்திச் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 *மற்றவர் செல்வி வளர்மதி கந்தசாமி வயது 29. இவருக்கான சிறுநீரகமாற்றுச் சத்திர சிகிச்சையின் பின்னரான வைத்தியச் செலவுகளுக்கு கனடா வாழ் அன்புள்ளங்கள் வழங்கிய $725.00 டொலர்கள்(92,800 ரூபாய்கள்) முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிதியுதவிகளை தாமாக முன்வந்து சேகரித்துத் தந்த அன்புள்ளங்களுக்கும் மற்றும் தனியாக வழங்கிய அன்புள்ளங்களுக்கும் எமது அன்புகனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

• அஞ்சலி – மன்ற கொள்கைக்கு அமைய இங்கு அமரத்துவமடைந்த காரைநகரைச் சேர்ந்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்வுகளில் மன்ற உறுப்பினர்கள் நேரில் சமூகமளித்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவது வழமைபோல் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகின்றது.

 • இதில் முக்கிய விடயமாக ஜனவரி 2011இல் எமது மன்றத்தின் ஆஸ்தான வித்துவானும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் கீதத்தைப் பாடியவருமான எமது காரை மண்ணைச் சேர்ந்த கலைஞன் சங்கீத பூஷணம் காரை ஆ.புண்ணியமூர்த்தி அவர்களின் திடீர் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.

 • அத்துடன் ஜனவரி 2012இல் எமது மன்றத்தின் முன்னாள் தலைவர் திரு.கருணாகரன் அவர்களின் மறைவு செய்தியும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. எமது மன்றம் அன்னாரின் மறைவுக்கு அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது நன்றிகள்: எமது நிர்வாகசபை கடந்த 4வருடங்களாக இம்மன்றத்தில் பல இன்னோரன்ன சேவைகளை வழங்கியிருந்ததை யாவரும் அறிவீர்கள். இக்கால கட்டப்பகுதியில் எமது மன்றத்தின் மாபெரும் வளர்ச்சியானது காரைநகர் மக்கள் அனைவரையும் சற்றே திரும்பிப்பார்க்க வைத்துள்ளது என்பதே நிஜமாகும். இக்கால கட்டப்பகுதியில் இணையத்தளம்  மூலம் எமது மன்றம் பாரிய வளர்ச்சியடைந்தமை பெரு வெற்றியாகும்.

 • தயவுசெய்து இனிவரும் காலங்களில் வரும் நிர்வாக சபைகளும் கடமை தவறாது இம்மன்றத்தின் செயற்பாட்டில் தன்னலம் கருதாது செயற்பட்டு வருங்காலத்தில் நாமும் எமது எதிர்கால சந்ததியினரும் ஓர் ஒற்றுமைபெற்ற சமுதாயமாக மாற்ற உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

• இக்கால கட்டத்தில் என்னுடன் சகல விதத்திலும் ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து சக நிர்வாகசபை உறுப்பினர்கள், போசகர் சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

• மற்றும் பல வழிகளிலும் உதவி செய்த, விளம்பரதாரர்களுக்கும், வர்த்தகபெருமக்களுக்கும், தொண்டர்கள், பழைய நிர்வாக சபையினர்களுக்கும், அனைத்துக் கனடா வாழ் காரை மக்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

"Working together is success"

மலர். குழந்தைவேலு
செயலாளர்-கனடா காரை கலாச்சார மன்றம்
24.02.2013.

Oct 27 2010 Projects

Oct 24, 2010 – இல் கனடா காரை கலாசார மன்றம் காரைநகர் இந்துக்கல்லூரி அதிபர் திரு. சிவானந்தராஜா அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க ஒரு Multi Media Projector ரூபா 144,000.00விற்கு காரை அபிவிருத்திச்சபை மூலம் கொள்வனவு செய்து வழங்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் மாணவர்களுக்கு நவீன கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை முன்னேற்றகரமாக நடாத்தக்கூடிய வகையில் இந்த உபகரணம் உதவுகின்றது.

Sept 28, 2010 – காரைநகரில் தரம் 5இல் புலமைப்பரிசில் பெற்ற 5மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு உதவியாக தலா 5000ரூபாய்களும், அத்துடன் சமுர்த்தி சிறுவர் கழகங்களின் மாவட்ட கலாசார போட்டிகளின் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ள ஆறு காரைநகர் மாணவிகளுக்கும் தலா 3000ரூபாய்களும் கனடா காரை கலாச்சார மன்றத்தினால் எதிர்வரும் வாரத்தில் காரை அபிவிருத்திசபையினூக வழங்கப்படவுள்ளது.

Aug 14, 2010 – காரைநகரில் கல்வியை ஊக்குவிக்குமுகமாகவும் பொதுமக்களின் பாவனைக்காகவும் ஒரு பொதநூலகம் அமைப்பது பற்றி பொதுக்கூட்டம் ஒன்று கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி கனடா காரை கலாசார மன்றத்தினால் கூட்டப்பட்டது. இக் கூட்டத்தில் ஏற்கனவே பொதுநூலகத்துக்கென கொள்வனவு செய்யப்பட்ட காணியில் பொதுநூலகம் அமைப்பதற்கு கூட்டத்திற்கு வந்திருந்த அநேகரின் ஆதரவுடன் உதவிகளை மேற்கொள்ள, மற்றும் நிதிசேகரித்தல் சம்பந்தமாக இதற்கென மன்றத்தினால் 10 பேர் கொண்ட ஒரு உபகுழு அமைக்கப்பட்டது. இந்த உபகுழுவின் ஒருங்கிணைப்பாளராக திரு. ராஜேந்திரம் வேலுப்பிள்ளை அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் மாதங்களில் இதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Aug 6, 2010 – யா/ஆ.தியாகராஜா மத்திய மகாவித்தியாலத்தின் ஸ்தாபகர் தினமும் பரிசளிப்பு விழாவும் கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம்திகதி நடைபெற்றது. இந்தவிழாவிற்கான உதவித்தொகையான ரூ50,000ஐ கனடா காரை கலாச்சார மன்றம் வழங்கியிருந்தது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிறைவேற்றப்பட்ட பணிகள் – 2009 August 9 – June 26, 2010.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிறைவேற்றப்பட்ட பணிகள் –  2009 August 9 – June 26, 2010.

இந்தப் பணிகள் அனைத்தும் காரை அபிவிருத்திச்சபை மூலமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
• 2009ம் ஆண்டுக்கான வைத்தியக்கலாநிதி டாக்டர். விஜயரட்ணம் விசுவலிங்கம் அவர்களின் தாயார் அமரர் திருமதி. ஞானசுந்தரம் விசுவலிங்கம் ஞாபகார்த்தமாக தரம் 6முதல் க.பொ.த வரை கல்வி பயிலும் வசதி குறைந்த திறமையான மாணவர்களுக்கான புலமைப்பரிசில் காரைநகரில் உள்ள 4பாடசாலைகளில் உள்ள  40 மாணவர்களுக்கு மாதா மாதம் ரூ.500.00 வீதம்; 12மாதங்களுக்கு வழங்கப்பட்டது.

• கடந்த வருட வன்செயல்களினால் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து காரைநகரிற்கு வந்திருந்த பாடசாலை சிறார்கள் சுமார் 500பேர் வரையில் காரைநகரில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் சேர்க்கப்பட்டிருந்தார்கள். இதில் 264 மாணவர்களும், 236 மாணவிகளும் அடங்குவர். காரைநகர் இந்துக் கல்லூரி 175, யாழ்ற்ரன் கல்லூரி 89, சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாசாலை 51, பாலாவோடை அ.மி.த.க பாடசாலை 59, ஊரி 61, காரை மெய்கண்டான 13, வலந்தலை அ.மி.த.க பாடசாலை 40, வியாவில் அ.மி.த.க பாடசாலை 12. இந்த இடம்பெயர்ந்து காரைநகருக்கு வந்த பாடசாலை சிறார்களுக்கு 150,000.00ரூபாய்கள் பெறுமதியான சீருடைகள் 2009 October 30ம் திகதி காரை அபிவிருத்திசபையூடாக வழங்கப்பட்டது.
• காரைநகரில் வசிக்கும் வசதிகுறைந்த பல்கலைக்கழக மாணவர்கள், அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்யமுடியாமை காரணமாக காரை அபிவிருத்திசபையை நாடியுள்ளார்கள். இந்த மாணவர்களுக்கு உதவும் முகமாக எமது மன்ற இணையத்தளம்www. karainagar.com மூலமா கனடா வாழ் காரை அன்பர்களை கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களால் வழங்கப்பட்ட நிதிகள். அத்தோடு காரைநகரில் வசதிகுறைந்த சிறார்களும் இதில் அடங்குவர். இந்த உதவிப்பணம் வருடா வருடம், வருடத்தில் இருதடவைகள் மற்றும் மாதாந்தம் என்ற ரீதியில் உதவி வழங்குபவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படும்.

• காரைநகரைச்சேர்ந்த கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் வைத்திலிங்கம் ஜெகதீஸ்வரனின் மேற்படிப்பு உதவிக்காக மாதாந்தம் 5000.00ரூபாய்கள் 4வருடங்களுக்கு(240,000.00ரூபாய்கள்) 2010 January இல் திரு. சிவகுமார் கனகசுந்தரம் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

• குழந்தை நகுல்ராஜ் நக்கீரன், வயது 18மாதங்கள் இவர் கடந்த போரில் தனது பெற்றோரை இழந்துவிட்டார். தற்சமயம் இவர் தனது சித்தியின் பராமரிப்பில் உள்ளார். ஆனால் அந்த சித்தியின் கணவரும் கடந்த போரில் இறந்துவிட்டார். இப்படியான சூழ்நிலையில் சித்தியும் இந்த குழந்தையும் எந்தவித வருமானமும் இல்லாமல் உள்ளார்கள். எனவே இக்குழந்தையின் பராமரிப்புச் செலவிற்கு எமது கனடா-காரை கலாச்சார மன்றத்தை அணுகியுள்ளார்கள். கடந்த வன்செயலில்  தனது பெற்றோரை இழந்த 18மாதக் குழந்தை நக்கீரனுக்கு 18வயது வரைக்குமான  ஒர்  நீண்ட கால பராமரிப்பு  உதவியை கனடா வாழ் காரை அன்பர்  ஒருவர் மனமுவந்து வழங்க முன்வந்துள்ளார். இவருக்கு மாதம் ரூ.2000.00 வீதம் நீண்டகால உதவித்திட்டமாக அவருடைய 18வயது வரைக்கும் இந்தப்பணம் வழங்கப்படும். (18வயது வரைக்குமான மொத்த பராமரிப்புச் செலவு 4இலட்சத்து 32ஆயிரம் ரூபாய்கள்).
  அத்தோடு இதே குழந்தை நகுல்ராஜ் நக்கீரனுக்கு திரு. செல்வராஜா தம்பையா 10,000.00ரூபாய்களும், திரு. ஜெயச்சந்திரன் தம்பிராஜா 5,000.00ரூபாய்களும் வழங்கியுள்ளனர்.
• சிறுவன் நகுல்ராஜ் நக்கீரனுக்கு வழங்கிய அதே அன்பர்  அடுத்த வருடம் பல்கலைக்கழகம் செல்லவிருக்கும் மருத்துவ பீட மாணவன் பிறேம்குமார் பிரசாத்திற்காக மாதம் 5000.00ரூபா 4வருடங்களுக்கு(240,000.00ரூபாய்கள்) வழங்கும்  உதவித் திட்டத்திற்கும் தனது உதவியை வழங்க முன்வந்துள்ளார். இந்த மாபெரும் உதவியை அளித்த அந்த அன்பருக்கு கனடா-காரை கலாச்சார மன்றம் தனது மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
• காரைநகரைச் சேர்ந்த கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகாவித்தியாலத்தில் சென்ற வருடம் 5ம்வகுப்பில் புலமைப்பரிசில் பெற்ற மாணவன் ஜனகாந்தன் ஏகாம்பரம். இவர் தனது மேற்படிப்பை யாழ் இந்துக்கல்லூரியில் கற்று வருகின்றார். இவரது மேற்படிப்பு(A/L) முடியும் வரைக்கான உதவியாக மாதாந்தம் 3000.00ரூபாய்கள்(6வருடங்கள் ரூ.216,000.00) கனடா காரை அன்பர் ஒருவரினால் வழங்கப்பட்டுள்ளது.

• காரைநகரைச் சேர்ந்த செல்வி சிவதர்சினி இரத்தினம் என்பவர் யாழ்ப்பாண பல்கலைக்ழகத்தின் துணைப்பிரிவான இராமநாதன் நுண்கலைக்கழகத்தில் இசைத்துறையில் கல்வி பயின்று வருகின்றார். இவரது குடும்பநிலைமை காரணமாக இவருக்கு மாதாந்தம் 5000.00ரூபாய்கள் 4வருடங்களுக்கு(240,000.00ரூபாய்கள்)  ஜெயந்தி துரைசாமி என்பவரால் ஜுன் மாதம் தொடக்கம் வழங்கிவருகின்றது.

• 19-2-2010இல் ஊரி பாடசாலைக்கு மின்இணைப்பு வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஒரு இலட்சம் ரூபாய்கள் காரை அபிவிருத்திச்சபை மூலமாக வழங்கப்பட்டது.

• இதே பாடசாலையில் கல்வி பயிலும் தாய், தந்தையரை இழந்த மற்றும் வசதி குறைந்த மாணவர்களுக்கான உதவித்தொகை பாடசாலை அதிபரின் பெயர்ப் பட்டியல் எமது மன்றத்திற்கு கிடைத்த பிற்பாடு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.

• 2010ம் ஆண்டுக்கான வைத்தியக்கலாநிதி டாக்டர். விஜயரட்ணம் விசுவலிங்கம் அவர்களின் தாயார் அமரர் திருமதி. ஞானசுந்தரம் விசுவலிங்கம் ஞாபகார்த்த புலமைப்பரிசில் காரைநகரில் உள்ள 4பாடசாலைகளில் உள்ள  திறமையான வசதிகுறைந்த 40 மாணவர்களுக்கு மாதா மாதம் ரூ.500.00வீதம்; 12மாதங்களுக்கு வழங்கப்பட்டது.

 

நிறைவேற்றப்பட்ட 2007 – 2008 செயல் திட்டங்கள்

நிறைவேற்றப்பட்ட 2007 – 2008 செயல் திட்டங்கள்

1. கனடியத் தமிழர் வர்த்தக சம்மேளனத்தினால் ஆண்டு தோறும் நடத்தப்படும் ரொரன்ரோ வைத்தியசாலைகளுக்கு உதவும் நிதியுதவி நடை பவனியில் முதற்தடவையாக எமது மன்றம் பங்குபற்றியதுடன் மன்றத் தொண்டர்களால் ஏறத்தாழ ஐநூறு டொலர்கள் ($500) நிதிசேகரிக்கப்பட்டு அன்பளிப்புச் செய்யப்பட்டது.

2. கிழக்கு மாகாண அகதிகளுக்கு உதவும் நிதிசேகாப்பு நிகழ்வுகளில் (Car Wash) கனடா- தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு இரண்டாயிரத்து எண்ணூற்று முப்பது டொலர்கள் ($2830) அன்பளிப்புச் செய்யப்பட்டது.

3. கனடியத் தமிழர் விளையாட்டுத் துறையினரால் நடத்தப்பட்ட கிளித்தட்டுப் போட்டிகளிலும், கனடியத் தமிழ் வானொலியினால் (CTR) நடத்தப்பட்ட "நட்சத்திரவிழா" கிளித்தட்டு போட்டிகளிலும், எமது மன்றத்தின்; ஆண்கள் அணி; பங்குபற்றி வெற்றி பெற்றது.

4. ஒன்பதாவது ஆண்டாக கோடைகால ஒன்று கூடல் நிகழ்வு பூங்காவில் வழமைபோல நடத்தப்பட்டது.

5 மன்ற இணையத்தளம்; (www.karainagar.com) புதுப் பொலிவுடன் மறுசீரமைக்கப் பட்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இத்தளம் அமைக்கப்பட்டது.

6. காரைநகருடன் தொடர்புடைய ஒருவர் உலகின் எப்பாகத்தில் மரணமடைந்திருந்தாலும் மன்ற அங்கத்தவர் ஒருவரினால் உறுதிப்படுத்தப்பட்டு மன்ற நிர்வாகத்திற்கு அறியத்தரப்பட்ட மரண அறிவித்தல்கள்; மன்ற இணையத் தளத்தில் பிரசுரிக்கும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டது.

6. எட்டாவது ஆண்டாக "காரை வசந்தம்" கலைவிழா சிறப்பாக நடத்தப்பட்டதுடன்     "காரை வசந்தம்" சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது.

• தமிழ்ச்சிறார்களிடையே பேச்சுப்போட்டி, பண்ணிசைப் போட்டி என்பன நடத்தப்பட்டு  இவ்விழாவில் பரிசில்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.

7.இடைநிறுத்தப்பட்டிருந்த,காரைநகரில். பாடசாலையைவிட்டு விலகிய மாணவர்களுக்கான கணனிக் கற்கைநெறி தொடர்ந்து நடைபெற மாதாந்தம் இலங்கை ரூபா ஏழாயிரம் (ரூபா 7 000) உதவுவதற்கு ஆவன செய்யப்பட்டது.

8. கலாநிதி ஆ. தியாகராஜா ம.ம.வி வருடாந்த பரிசளிப்பு விழா நடைபெற ஐம்பதினாயிரம் இலங்கை ரூபா (ரூபா50,000) உதவப்பட்டது.

9. காரைநகரில் கல்வி, வளர்ச்சிக்காக மூவாயிரம் கனடிய பொலர்கள் ($3000) மூன்று லட்சத்து இருபத்தோராயிரம் இலங்கை (ரூபா 3 21,000) காரை அபிவிருத்திச் சபையினூடாக அன்பளிப்புச் செய்யப்பட்டது. இந்நிதி பின்வரும் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

1.  எமது மன்ற அனுசரணையுடன் காரை அபிவிருத்தி சபையினால் 'கல்வி அழகே அழகு' என்னும் தொனிப் பொருளில் நடத்தப்படும் 'கல்வி தினத்திற்கு' ஒரு லட்சம் இலங்கை ரூபா (ரூபா 1 00 000) ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தினத்தில் பின்வரும் பரிசுகள் வழங்கப்படும்.

• காரைநகரில் கல்வி பயிலும் தரம் ஐந்து முதல் க.பொ.த உ-த வரை அரச பொதுப்பரீட்சைகளில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கும், பல்கலைக் கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கும் பணப்பரிசு வழங்கி ஊக்குவித்தல்

• காரைநகரில் கல்வி பயின்று ஆங்கிலத்தில் திறமைச்சித்தி பெற்ற மாணவர்களுக்கு பாரட்டுப் பரிசு வழங்குதல்

• கலாநிதி ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலயத்தில் கல்விபயின்று பொறியியல் பீடத்திற்குத்தெரிவுசெய்யப்பட்ட செல்வன் பேரம்பலம் புஸ்பராசாவின் கல்விச்செலவுக்கு  ஐம்பதினாயிரம் இலங்கை ரூபா (ரூபா 50, 000) ஊக்குவிப்புப் பணப்பரிசு வழங்குதல்.

காரைநகரைச் சேர்ந்த, யாழ் மாவட்டப் பாடசாலையில் கல்வி கற்று பல்கலைக் கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு பரிசு வழங்குதல்.

• காரைநகரைச் சேர்ந்த மூத்த அதிபர்கள், கல்வியாளர்களைப் பாராட்டிக் கௌரவித்தல்

2. காரைநகரில் சிறப்பாக இயங்கிவரும் ஒரே ஒரு நுண்கலைக் கல்வி நிலையமான கிழவன்காடு கலா மன்ற ஆசிரியர்களுக்கு வேதனம் வழங்குவதற்கு ஐம்பதினாயிரம் இலங்கை ரூபா (ரூபா 50, 000) ஒதுக்கப்பட்டுள்ளது.

3. காரைநகரில் கல்வி பயிலும் க.பொ.த சா.த, மற்றும் க.பொ.த உ.த வகுப்பு மாணவர்களுக்கான மேலதிக ஆங்கிலக் வகுப்புகளை நடத்துவதற்கு ஒரு லட்சத்து இருபதினாயிரம் இலங்கை ரூபா (ரூபா 1 20, 000) ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பு : அரச பொதுப்பரீட்சைக்கான வினா விடை நூல்களைப் பாடசாலைகளுக்கு வழங்குதல், ஆரம்பப் பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் ஆகிய கோரிக்கைகள் பின்வரும் காரணங்களுக்காக காரை அபிவிருத்தி சபையினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அ) கல்வித் திணைக்களத்தினால் பாடசாலைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 'தர உள்ளீடு' (Quality Input) என்னும் நிதியிலுருந்து தேவையான நூல்கள் கொள்வனவு செய்யபடுவதாக காரை அபிவிருத்தி சபை நிர்வாகத்தினால் தெரிவிக்கப்பட்டது.

ஆ) அண்மையில் கல்வித்திணைக்களத்தினால் புதிய ஆசிரிய நியமனங்கள் போதியளவு வழங்கப் பட்டுள்ளதாகவும், அத்துடன் தொண்டர் ஆசிரிய நியமனங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் காரை அபிவிருத்தி சபையினால் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக மேலதிக நிதி மேற்கூறப்பட்ட இறுதி இரு புதிய திட்டங்களுக்குப் பயன் படுத்தப்படுகிறது.

10. 18 வது ஆண்டாக றிச்மன்ட் ஹில் இந்து ஆலயத்தில் "திருவாதிரைத் திருவிழா"      சிறப்பாக நடத்தப்பட்டது.

2008
1. கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இந்து கலாசார அமைச்சருமான அமரர். தியாகராஜா மகேஸ்வரன் அவர்களுக்கான இரங்கற் கூட்டத்தினை எமது மன்றமும், ஆதி அருள் நெறி மன்றமும் இணைந்து நடத்தியிருந்தது.

2. காரைநகரில் கல்விசார் செயற்பாடுகளுக்கான தொடர்ச்சியான உதவிகளை வழங்குவதற்காக "காரை-கல்வி நம்பிக்கை நிதியம"; என்ற நிதியம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முதற்பகுதியாக, காரைநகரில் தரம் 6 முதல் க.பொ.த சா-த வரை கல்வி பயிலும் வசதி குறைந்த, திறமையான  40 மாணவர்களுக்கு உதவுவதற்க குழந்தைகள் வைத்திய நிபுணர் டாக்டர்.வி.விஜயரத்தினம் அவர்களின் தாயார் நினைவாக "அமரர்.திருமதி.ஞானசுந்தரம் விசுவலிங்கம் ஞாபகார்த்த புலமைப்பரிசில்" என்ற புலமைப்பரிசில் வழங்குவதற்கு இரண்டு லட்சத்து நாற்பத்தையாயிரம் இலங்கை ரூபா (ரூபா 2 45 000) காரை அபிவிருத்தி சபையினூடாக அன்பளிப்புச் செய்யப்பட்டது.

3. அமரர்.தி.மகேஸ்வரனின் 45 ம் நாள் நினைவு தினத்தையொட்டி மாபெரும் நினைவு வணக்க நிகழ்வினை எமது மன்றமும் கனடியத்தமிழர் பேரவையும் இணைந்து நடத்தியிருந்தது.

4. காரைநகர் அபிவிருத்திச் சபை செயலாளர். சேவையின் சிகரம். அமரர் ஜெயசிங்கம் தில்லையம்பலவாணர் அவர்களுக்கான இரங்கற் கூட்டம் எமது மன்றத்தினால் நடத்தப்பட்டது. இந்நிகழ்வின் போது அன்னாரின் இறுதிக்கிரிகைகளுக்கான செலவுகளுக்காகச் ஆயிரம் டொலர்கள் ($1000)  இலங்கை ரூபா 1 09 500 சேகரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

5. கனடியத் தமிழர் வர்த்தக சம்மேளனத்தினால் ஆண்டு தோறும் நடத்தப்படும் ரொரன்ரோ வைத்தியசாலைகளுக்கு உதவும் நிதியுதவி நடை பவனியில் வழமை போல எமது மன்றம் பங்குபற்றியதுடன் மன்றத் தொண்டர்களால் சேகரிக்கப்பட்ட ஐநூற்றி இருபத்திஐந்து டொலர்கள் ($525) அன்பளிப்புச் செய்யப்பட்டது.

ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்