Category: Akca செய்திகள்

காரைநகர் அபிவிருத்தி சபையின் மாதாந்த கூட்டத்தில் அவுஸ்திரேலியா காரை அபிவிருத்தி சபையின் உபதலைவர் திரு.அமிர்தசிங்கம் ரவிதாசும் கலந்து கொண்டார்.

காரைநகர் அபிவிருத்தி சபையின் மாதாந்த கூட்டம் இன்று 2.10.2016 காலை 10 மணிக்கு வழமை போல நடைபெற்றது இக்கூட்டத்தில் இலங்கைக்கு வருகை தந்திருந்த அவுஸ்திரேலியா காரை அபிவிருத்தி சபையின் உபதலைவர் திரு.அமிர்தசிங்கம் ரவிதாசும் கலந்து கொண்டார்.

அவரிடம் காரை அபிவிருத்தி சபையினர் மாதாந்த நூலக செலவினங்களை ஏற்றுக்கொள்ளுமாறு கோரிக்கையினை முன்வைத்தனர். அதனை தமது சபையில் சாதகமாக பரிசீலிப்பதாக உறுதி அளித்தார்.

மேலும் தற்போதைய நிலவரம் தொடர்பாக காரை அபிவிருத்தி சபையினர் அவருக்கு விரிவாக எடுத்துக்கூறினர். சந்திப்பு பயனுள்ளதாக அமைந்தது.

img_1679 img_1682

அவுஸ்திரேலிய காரை கலாச்சார சங்கத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 17.07.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ளது!

 

AKCA LOGO

AKCA Management Committee is pleased to invite you and your family to our 10 th annual dinner.

Venue: Redgum Centre, 2 Lane Street, Wentworthville (close to Wentworthville Railway Station and plenty of free car parking available).

Date: 17.07.2016

Time:  5:30 pm – 09:00 pm

Program includes: 

– ஒடியல் கூழுடன் வரவேற்பு (Welcoming with Kool) from 5:30 pm 

– 10ம் ஆண்டு மலர் வெளியீடு (10th Anniversary Souvenir)

– காரை செல்வங்களின் கதம்ப மாலை (Karai Children’s Kathampa Maalai)

– நாடகம்: இரண்டும் நாலும் – ஒரு வாழ்வுச் சித்திரம் (Drama: Two & Four – an illustration of life)

–        Traditional Karai Dinner 

Tickets are available at the counter or please send an email to ktmahadeva@gmail.com  for further information.


AUSTRALIA KARAI CULTURAL ASSOCIATION

அவுஸ்ரேலியா காரை கலாசார மன்றம் காரைநகரில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள நூலகங்களுக்கான புத்தகங்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதியினைக் காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஊடாக வழங்கி உள்ளது.

அவுஸ்ரேலியா காரை கலாசார மன்றம் காரைநகரில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள நூலகங்களுக்கான புத்தகங்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதியினைக் காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஊடாக வழங்கி உள்ளது.


இந்த நிதி கையளிக்கும் நிகழ்வு 18.03.2016 மாலை 2.30 மணியளவில் காரைநகர் அபிவிருத்திச் சபை நூலகத்தில் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் ப. விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் காரைநகர் பாடசாலை அதிபர்கள்,காரைநகர் அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள்,காரைநகர் பிரதேச சபைச் செயலாளர் பகீரதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


யாழ்ரன் கல்லூரி,இந்துக் கல்லூரி ஆகியவற்றிற்கு தலா முப்பத்தையாயிரம் ரூபா வீதமும்,சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை,வியாவில் சைவ வித்தியாலயம் என்பவற்றிற்கு தலா இருபதாயிரம் ரூபா வீதமும் ஏனைய ஆரம்பப் பாடசாலைகளுக்குத் தலா பத்தாயிரம் ரூபா வீதமும் பாடசாலை அதிபர்களிடம் காசோலை  கையளிக்கப்பட்டது.


மாணவர்களின் மேலதிக கற்றல் செயற்பாட்டிற்கான நூல்கள் பாடசாலை அதிபர்களினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்காக புத்தக நிறுவனங்களுக்கு இந்தக் காசோலைகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.


காலத்தின் தேவையறிந்து பாடசாலைகளின் நூலகங்களுக்கு நூல்கள் கொள்வனவிற்கு உதவிய அவுஸ்ரேலியக் காரை கலாசார மன்றத்திற்கு காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் ப.விக்னேஸ்வரனும் பாடசாலை அதிபர்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.

IMG_5288IMG_5289 IMG_5290 IMG_5293 IMG_5304 IMG_5308 IMG_5314 IMG_5316 IMG_5317 IMG_5319 IMG_5325 IMG_5327 IMG_5346 IMG_5352 IMG_5357 IMG_5359

அவுஸ்ரேலியா சிட்னி நகரில் காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களின் நூல் அறிமுக விழா

Arunasala-CoverSTAKCA

அவுஸ்ரேலியா சிட்னி நகரில் காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களின் நூல் அறிமுக விழா


அன்புடையீர்,
உங்கள் அனைவரையும் காரை சிவத்திரு ச. அருணாசலம் அவர்கள் பற்றிய நூல் அறிமுக விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.


இடம்: Reg Byrne Community Center, Cnr Fyall Avenue & Darcy Road, Wentworthville, NSW.
காலம்: Sunday 6th March, from 6pm to 7:30pm


மேலதிக விபரங்களிற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பத்திரத்தைப் பார்க்கவும்.


அன்புடன்
செயற்குழு
அவுஸ்திரேலியா காரை கலாச்சார சங்கம்

கல்வி என்னும் கருவி மூலம் சைவப்பயிர் வளர்த்த ஈழத்துக் கல்வியாளர் காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் (1864-1920) அவர்களின் சரிதம் அடங்கிய "சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம்" என்ற நூல் அறிமுகவிழா 06.03.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரத்தில் நடைபெற உள்ளது. 


இவ்விழாவினை அவுஸ்ரேலியா காரை கலாச்சாரச் சங்கம், கனடா சைவசித்;தாந்த மன்றத் தலைவர் சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.


இவ்விழாவில் வரவேற்புரையை திரு.வனதேவா அவர்களும் அறிமுகவுரையை சிவநெறிச் செல்வர் திரு. தி.விசுவலிங்கம் அவர்களும் ஆய்வுரைகளை திரு.கணேசன் செல்வராஜா, சித்தாந்தரத்தினம் திரு.தம்பிப்பிள்ளை நந்திவர்மன், திரு.பஞ்;சாட்சரம் ஆகியோரும் இலங்கையில் சைவத்தமிழர்களின் வரலாறு பற்றிய சிறப்புரையை கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களும் நிகழ்த்த உள்ளனர். 


விழாபற்றி அவுஸ்ரேலியா காரை கலாச்சார சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஈழத்திருநாட்டிலே கல்வி வளர்ச்சிக்கு  வித்திட்டும் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் சைவ உணர்வாளர்களை இணைத்துச் சைவச் சூழல்சார் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களின் நினைவாகவும், 


நமது கலாச்சாரம் வேற்றுமதத்தவரால் சிதையுண்டபோது அதை சிதையவிடாது போராடிய ஓர் உத்தமரின் நினைவாகவும், 


நாடு கடந்து நிற்கும் நாம், நமது கலை, கலாச்சாரம் எவ்வாறு நாம் வாழும் நாட்டில் காப்பாற்றப்படவேண்டும் என்பதை சிந்திக்கும் முகமாகவும், 


வேற்று நாட்டவர் நம்மை ஆண்ட காலத்தில் நமது மதம், மொழி, கலை, கலாச்சாரத்திற்கு ஏற்பட்ட தாக்கத்தை ஓரு மீள்பார்வை செய்வதற்காகவும்;, இந்நூல் அறிமுக விழா அவுஸ்ரேலியாவில் நடைபெற உள்ளது. 


கலை, கலாச்சார சமய ஆர்வலர்கள், வேற்று நாட்டவரின் ஆட்சியில் நமது மொழி, சமயம், கலாச்சாரத்தின் தாக்கத்தை உணர்ந்தவர்கள், தமிழ் அபிமானிகள் அனைவரையும் இந்நூல் அறிமுக விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.


பணிவன்புடன், 
நிர்வாகக் குழு
அவுஸ்ரேலியா காரை கலாச்சாரச் சங்கம்


விழாபற்றிய முழுமையான அறிவித்தலைக் கீழே காணலாம்.

Book release in Sydney_Flyer (1)-page-001

சிட்னியில் காரை சிவத்திரு ச. அருணாசலம் அவர்கள் பற்றிய நூல் அறிமுகம்

Arunasala CoverST

சிட்னியில் காரை சிவத்திரு ச. அருணாசலம் அவர்கள் பற்றிய நூல் அறிமுகம்

 

அன்புடையீர்,

உங்கள் அனைவரையும் காரை சிவத்திரு ச. அருணாசலம் அவர்கள் பற்றிய நூல் அறிமுக விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

இடம்: Reg Byrne Community Center, Cnr Fyall Avenue & Darcy Road, Wentworthville, NSW.
காலம்: Sunday 6th March, from 6pm to 7:30pm

மேலதிக விபரங்களிற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பத்திரத்தைப் பார்க்கவும்.

அன்புடன்
செயற்குழு
அவுஸ்திரேலியா காரை கலாச்சார சங்கம்

Book-release-in-Sydney

 

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/02/Book-release-in-Sydney.pdf

 

 

அவுஸ்திரேலியா காரை கலாச்சார சங்கம் நிர்வாகசபை 2015/2016

committee_2015-2016-AKCA

அவுஸ்திரேலியா கரைநகர் கலாச்சார சங்கம் செய்தி மடல்-18, 2013

Click to access AKCA-NEWSLETTER-No-18.pdf

கண்ணீர் அஞ்சலி KWS-UK,CKCA,SKDB,KWS-FR,AKCA

கண்ணீர் அஞ்சலி

Dr.SabaDr.சபாபதி
சபாரத்தினம்(குஞ்சு)
காரைநகர் புதுவீதியைப் பிறப்பிடமாகவும் இலண்டனை
வசிப்பிடமாகவும் கொண்ட னுச.சபாபதி சபாரத்தினம்
21.03.2013 வியாழக்கிழமை சிவபதமடைந்துவிட்டார்.
அன்னார் கடந்த இரண்டு சகாப்தங்களாக சிறப்பாக
இயங்கிவரும் காரை பிரித்தானியா நலன்புரிச் சங்கத்தின்
ஸ்தாபகரில் ஒருவரும், பிரான்சு காரை நலன்புரிச் சங்க
ஸ்தாபகர்களில் ஒருவருமாவார்.

அன்னார் காரைநகரின் கல்வி, பொரளாதாரம், அபிவிருத்தி
தொடர்பாக இறுதி மூச்சுவரை அயராது செயற்பட்டுவந்தார்.
அன்னாரது இழப்பு எமக்கும் காரைநகர் மக்களுக்கும்
ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும்.

அன்னாரது பிரிவால் துயறுற்றிருக்கும் அவரது குடும்பத்தவர்.
நண்பர்கள், உறவினர்களிற்கு எமது ஆழ்ந்த
அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரது ஆத்மா சாந்திபெற எல்லாம் வல்ல ஈழத்து
சிதம்பர சௌந்தராம்பிகா சமேத சுந்தரேஸ்வரப்
பெருமானைப் பிரார்த்தித்து நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

காரைநகர் அபிவிருத்தி சபை
பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கம்
பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம்
கனடா காரை கலாச்சார மன்றம்
சுவிஸ் காரை அபிவிருத்தி சபை
அவுஸ்திரேலியா காரை கலாச்சார மன்றம்

‘முதுசங்களைத்தேடி” தேடல் பயணம் மீண்டும் ஆரம்பம்

‘முதுசங்களைத்தேடி” தேடல் பயணம் மீண்டும் ஆரம்பம்
அனைத்து காரை மன்றங்களும் முதன்முறையாக ‘முதுசங்களைத்தேடி’எனும் முத்தாரக் குடையின்கீழ் இணைந்து தேடும் முதல் மழை. Continue reading