Tag: kalapoomy

களபூமி விளானை மாதர் சங்கத்தில் அண்மையில் நடைபெற்ற கலைநிகழ்ச்சி

களபூமி விளானை மாதர் சங்கத்தில் அண்மையில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை படங்களில் காணலாம்.

004 copy

காரைநகர், களபூமியில் ஆயுதமுனையில் கொள்ளை சந்தேகநபர்கள் 4பேர் இராணுவத்தினரால் மடக்கிப் பிடிப்பு

காரைநகர், களபூமியில் ஆயுதமுனையில் கொள்ளை
சந்தேகநபர்கள் 4பேர் இராணுவத்தினரால் மடக்கிப் பிடிப்பு

காரைநகர், களபூமி இ.போ.ச டிப்போவிற்கு முன்பாகவுள்ள சிவலிங்கம் சிவகுமார் என்பவரது வீட்டில் 15.03.2013 வெள்ளிக்கிழமை இரவு 9.30மணியளவில் சுமார் 6க்கும் மேற்பட்ட நபர்கள் ஆயுதமுனையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். இரவு 9.30மணியளவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்த வீட்டின் உரிமையாளர் சிவகுமார் என்பவர் கொள்ளையர்களால் வாள்கள், கத்தி, பொல்லுகள் கொண்டு தாக்கப்பட்டதுடன் அவரின் மனைவி, தாய் அவர்களின் கழுத்தைத் திருகி நகைகள், பணம் என்பனவற்றைத் தருமாறு கோரியுள்ளனர். இந்நிலையில் மனைவி மற்றும் தாயாரை காப்பாற்ற முனைந்தபோது கொள்ளையர்கள் தாக்கியதில் சிவகுமார் வயது 38 என்பவருக்கு கையில் 8இழை ஏற்படக்கூடியளவு பெரிய காயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அந்த வீட்டிலிருந்து சுமார் 10பவுணுக்கு மேற்பட்ட நகைகளையும ரூபா ஐம்பதினாயிரம் ரொக்கப்பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக உடனடியாக பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் அறிவித்த பொழுது வலந்தலைச் சந்தியில் வைத்து ஆட்டோவில் வந்த 4பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களும் அதாவது வாள், கத்தி போன்ற ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்ந நபர்கள் இராணுவத்தினரின் பெயரைச் சொல்லி கடந்த காலங்களிலும் கொள்ளையடித்த நபர்கள் இவர்கள் என இராணுவத்தரப்புக் கூறுகின்றது. இது தொடர்பாக வட்டுக்கோட்டைப் பொலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களை கைது செய்ததுடன் அவர்களையும் வீட்டு உரிமையாளர்களையும் சம்பவ தினத்தன்றே வட்டுக்கோட்டைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். இப்பயங்கரக் கொள்ளை சம்பந்தமாக காரைநகர் மக்கள் மிகுந்த அச்சத்தில் மூள்கியுள்ளனர்.

சிறப்புற நடைபெற்ற விளானை, திக்கரை முன்பள்ளிகளின் விளையாட்டு விழா

சிறப்புற நடைபெற்ற விளானை, திக்கரை முன்பள்ளிகளின் விளையாட்டு விழா

காரைநகர் திக்கரை முன்பள்ளியும் விளானை முன்பள்ளியும் இணைந்து சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டி கடந்த 26.02.2013 அன்று களபூமி சுந்தரமூர்த்தி வித்தியாசாலையில் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய அதிபர் திருமதி. வாசுகி சிவபாலன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். இவ்விளையாட்டு நிகழ்வுகளையும் பரிசளிப்பு விழாவினையும் படங்களில் காணலாம்.

சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைப்பு.

DSC06055சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைப்பு. ஆட்டோ சாரதி மு.நடராசாவின் முன்மாதிரிக்கு பலரும் பாராட்டு.

காரைநகரில் கடந்தவாரம் ஆட்டோவில் கண்டெடுத்த சுமார் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியான நகைகளை கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காரைநகர் வலந்தலையில் ஆட்டோ ஓடும் காரைநகர் மொந்திபுலத்தைச் சேர்ந்த மு.நடராசாவே இவ்வாறு பெருமனதுடன் இவ் நகைப்பொதியை உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.

ஆட்டோவில் பயணம் செய்த பயணி ஒருவரால் தவறவிட்ட நகைப்பொதியை கண்டெடுத்த இவர் நகைப்பொதியின் உடைமையாளரான திக்கரை காரைநகரைச் சேர்ந்த நபரிடம் ஒப்படைத்துள்ளார். இவரின் முன்மாதிரியான செயலை காரைநகர் மக்கள் பாராட்டியுள்ளனர்.

காரைநகர் பிரதேசத்தில் நடைபெற்ற தரம் – 01 மாணவர்களுக்கான கால்கோள்விழா

காரைநகர் பிரதேசத்தில் நடைபெற்ற தரம் – 01 மாணவர்களுக்கான கால்கோள்விழா
சுந்தரமூர்த்தி வித்தியாசாலை, சுப்பிரமணிய பாடசாலை, பாலாவோடை இ.த.க பாடசாலை,
ஆகிய பாடசாலைகளில் மிகச்சிறப்பாக நடைபெற்றன.

பாலாவோடை இ.த.க பாடசாலை,


சுப்பிரமணிய பாடசாலை


சுந்தரமூர்த்தி வித்தியாசாலை

காரைநகர் களபூமிப் பகுதியில் ஒரே இரவில் இரு வீட்டில் கொள்ளை பல இலட்சம் ரூபா பணம், நகைகள் களவு போயின.

காரைநகர் களபூமிப் பகுதியில் ஒரே இரவில் இரு வீட்டில் கொள்ளை
பல இலட்சம் ரூபா பணம், நகைகள் களவு போயின.
காரைநகர் பகுதி அச்சத்தில்

காரைநகர் களபூமியில் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்திற்கு அண்மையில் உள்ள திக்கரை வீதியில் நடராஜா இந்திராணி என்பவரது வீட்டிலும் களபூமி தெருவடிப்பிள்ளையார் ஆலய குரு பவானந்தசர்மா என்பவரது வீட்டிலும் ஒரே இரவில் பல இலட்சம் ரூபா பெறுமதியான பணமும் நகைகளும் களவு போயுள்ளன. இக்களவுகள் சம்பந்தமாக ஒன்றுக்கு மேற்பட்ட திருடர்கள் குழுவாகச் சேர்ந்தே இக்களவுகளை மேற்கொள்ளக்கூடிய சாத்தியக்கூறுள்ளதாக பொதுமக்கள் கருத்துத் தெரிவித்தனர். நேற்றை தினம் இரவு அதாவது 08.01.2013 அன்று இரவு 1மணிக்கும் 4மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலே இக்களவுகள் சென்றுள்ளதாகவும் திருடர்கள் பலமணிநேரம் அவ்வீடுகளில் உடுப்புக்கள் முதல் அலுமாரிகள் எல்லாவற்றையும் சல்லடை போட்டு தேடியே இக்களவுகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால் அதுவரைக்கும் வீட்டு உரிமையாளர்கள் நித்திரையிலிருந்து முழிக்காதவாறு ஏதோ ஒரு பதார்த்தம் தூவியிருக்கலாம் எனவும் அயல் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இத்துணிகர களவுகள் சம்பந்தமாக ஊர்காவற்றுறைப் பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதனையடுத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதே நேரம் களபூமி தெருவடிப் பிள்ளையார் ஆலயத்தின் பிரதம குரு பவானந்தசர்மா வீட்டிலும் இவ்வாறே துணிகரத் திருட்டு இடம்பெற்றுள்ளது. இங்கு பலஇலட்சம் ரூபா பெறுமதியான பணமும் பிள்ளையார் ஆலய நகைகளும் களவு போயுள்ளதாக பவானந்தசர்மா தெரிவித்துள்ளார். இங்கும் வீடு உடைக்கப்பட்டு பலமணிநேரம் சல்லடை போட்டே தேடியுள்ளனர். கடந்த வாரம் காரைநகரில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் இவ்வாறான பல களவு முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாக பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இச்சம்பங்கள் காரணமாக காரைநகர் பகுதியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரைநகர் களபூமி விளானை முத்தமிழ் பேரவை மாணவிகள் வழங்கும் நாட்டிய நிகழ்வு 17.10.2012

காரைநகர் களபூமி விளானை முத்தமிழ் பேரவை மாணவிகள் வழங்கும் நாட்டிய நிகழ்வு 17.10.2012

காரைநகர் களபூமி விளானை முத்தமிழ் பேரவை மாணவிகள் வழங்கும் நாட்டிய நிகழ்வு 17.10.2012
காரைநகர் மாதர் சங்கத்தின் ஆதரவில்; கடந்த 17.10.2012இல் பாலாவோடை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் மண்டபத்தில்; நாட்டிய நிகழ்வும் பண்ணிசையும் நடைபெற்றது. இவ்விழாவில் விளானை முத்தமிழ் பேரவை மாணவிகள் பங்குபற்றி மிகவும்; சிறப்பாக வழங்கியிருந்தனர். இவ்விழாவில் பாடல்களை செல்வி வித்யதாரணி விஸ்வநாதன் அவர்களும் நட்டுவாங்கத்தை முத்தமிழ் செல்வி வானதி விஸ்வநாதன் அவர்களும் மிருதங்க இசையை திரு. மு.தேவநேசன் அவர்களும் வழங்கியிருந்தனர். இந்நிகழ்ச்சியினை நெறியாள்கை மேற்பார்வை செய்தவர் திருமதி பிரியதர்ஷினி வாகீசன்.
காரைநகர் விளானை முத்தமிழ் பேரவையினர் அப்பகுதியில் வாழும் மக்களின் நலன்கருதி பரதநாட்டியம், மிருதங்கம், வாய்ப்பாட்டு ஆகிய கலைப் பயிற்சிகளை இலவசசேவையாக வழங்கி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்பகுதியில் வாழும் மக்கள் தமது பிள்ளைகளை இப்பயிற்சி வகுப்புக்களில் கலந்துகொள்ள ஊக்குவிக்குமாறு காரைநகர் மாதர் சங்கத்தினர் கேட்டுக்கொள்கின்றனர். யுத்த காலத்தின் பின்னர் மீண்டும் தமது சேவையினை ஆரம்பித்துள்ள விளானை முத்தமிழ் பேரவையினரின் சேவை மேன்மேலும் வளர கனடா காரை கலாச்சார மன்றம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.