55 இலட்ச ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட நடராஜா மண்டபம் மீள்திறப்புவிழா

55 இலட்ச ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட நடராஜா மண்டபம் மீள்திறப்புவிழாவின் போது எடுக்கப்பட்ட படங்கள்

உருவாக்கம் பெற்றுவரும் காரைநகர் மாணவர் நூலகம்

உருவாக்கம் பெற்றுவரும் காரைநகர் மாணவர் நூலகம் காரைநகரில் காரை அபிவிருத்திச்சபையினரால் நிர்மாணிக்கப்பட்டுவரும் மாணவர் நூலகத்தின் 07.01.2013 எடுக்கப்பட்ட படங்கள்.

காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் திருவாதிரை உற்சவ தேர்த்திருவிழா – 2012 மார்கழி – வீடியோப் பதிவு

காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் திருவாதிரை உற்சவ தேர்த்திருவிழா – 2012 மார்கழி – வீடியோப் பதிவு கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரை ஒளி தொலைக்காட்சிக்கு பிரத்தியேகமாக பதிவுசெய்யப்பட்ட வீடியோ ஒளிப்பதிக்காட்சி.

யாழ்நகர்க்கலாசலை, காரைநகர் அபிவிருத்திச்சபை என்பவற்றுக்கு அச்சுபிரதி எடுக்கும் இயந்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன!

யாழ்நகர்க்கலாசலை, காரைநகர் அபிவிருத்திச்சபை என்பவற்றுக்கு அச்சுபிரதி எடுக்கும் இயந்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன! சுவிஸ் காரை அபிவிருத்திசபையினால் 14-02-2013 வியாழக்கிழமை அன்று எமது சபையின் ஊக்கிவிப்பு திட்டத்தின்கீழ் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை மேன்மைப்படுத்தும் முகமாகவும், அலுவலகம் திறமையாக செயற்படுவதற்கும் இரண்டு அச்சுப்பிரதி எடுக்கும் இயந்திரங்கள் (Photocopy Machine) கையளிக்கப்பட்டுள்ளன. யாழ்நகர்க்கலாசாலையின் அதிபர் திரு வே.முருக மூர்த்தி அவர்களிடம் (Photocopy Machine Toshiba )  காரைஅபிவிருத்திச்சபை தலைவர் சிவா மகேசன் மூலமாக வழங்கப்பட்டுள்ளது. புலம்பெயர் நாடுகளிலுள்ள மன்றங்களின் தாய் மன்றமாக விளங்குகின்ற …

Continue reading

சுவிஸ் காரை அபிவிருத்தி சபையினால் விவசாயத்திற்கு உதவிக்கரம்

சுவிஸ் காரை அபிவிருத்தி சபையினால் விவசாயத்திற்கு உதவிக்கரம் விவசாயத்துறையில் முன்னணியில் இருக்கும் எமது ஆழகிய கிராமாகிய காரைநகர் பெரும்போக நெற்செய்கையில் வருடத்திற்கு 8லட்சம் புசல்நெல் விளைச்சலை தரக்கூடிய விளைநிலத்தைக்கொண்டது. வானம்பார்த்த மழையை நம்பி விவசாயம் செய்யும் எமது விவசாயிகளுக்கு இம்முறை பருவம் கடந்து பெய்த சீரற்ற காலநிலை காரணமாக கடும்மழையால் நெல் அறுவடை பாதிப்பு அடைந்துள்ளது. இப் பாதிப்பின் நிவாத்;தியாக விளைநிலத்தின் ஈரலிப்புத்தன்மை மூன்று மாதங்களுக்கு நன்மைதரக்கூடியது இதன் பயனாக எமது சிறுபோக செய்கையை விரிவுபடுத்தலாம். காரைநகர் …

Continue reading

காரைமத்தி மேம்பாட்டுக்கழகம் செயற்பணி கணக்காய்வு அறிக்கை

காரைமத்தி மேம்பாட்டுக்கழகம் காரைநகா் செயற்பணி அறிக்கை – 2011. 01.    ஆறாவது ஆண்டுப் பொதுக்கூட்டம் இடம் :      கழக அலுவலகம் காலம் :      2011.12.24 பி.ப 2.00மணி சமுகமளித்தோர்   :      பொதுச்சபை உறுப்பினர்கள் – 30 நலன் விரும்பிகள் –      06 விருந்தினர்கள்     – 07 1.     திரு.இ.த.ஜெயசீலன் அவர்கள் (உதவி அரசாங்க அதிபர் காரைநகா்) 2.     திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் (அதிபர் யா/யாழ்ற்ரன் கல்லூரி.) 3.     திரு.சி.குமாரவேலு அவர்கள் (தபால் அதிபர் காரைநகா்) 4.     திரு.இ.திருப்புகழூர்சிங்கம் அவர்கள் …

Continue reading

காரைஅமெரிக்கர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்

காரைஅமெரிக்கர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் Karainagar (also) Needs You அன்புடையீர் தங்கள் தாய் மண்ணில் வசிப்பவர்கள் கடந்த கால    சூழ்நிலையிலிருந்து தலைநிமிர்நது வாழத்தொடஙிகியுள்ளனர். ஆனாலும் அவர்களுக்குக் கல்வி, சுகாதாரம் தண்ணீர் வசதி போன்றவற்றில் இன்னும் பல அடிப்படைத் தேவைகளில் பற்றாக் குறைகள் உள்ளன. அவற்றினை நிவர்த்தி செய்வதற்கு தங்களைப் போன்ற புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்களின் ஆதரவும் உதவியும் அத்தியாவசமாக உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு தாங்கள் காரை நலன் கருதி ஒரு சங்கம் தொடங்கியிருந்தீர்கள். …

Continue reading

அல்லாதனவற்றை ஆராய்ந்து சொல்லாத குற்றம்!

பிருத்தானிய காரை நலன் புரிச் சங்கம், பிருத்தானியா. 12.02.2013. அல்லாதனவற்றை ஆராய்ந்து சொல்லாத குற்றம்! காரை நியூஸ் அல்லது எனது ஊர் காரைநகர்  இணையத் தளத்தின் அன்பிற்குரிய தீசனுக்கும், தளத்தை வாசித்து வரும் எம் ஊரவர்களுக்கும் வணக்கம். கனடா காரைநகர் இணையத் தளத்திற்கு எம்மால் அனுப்பப்பட்ட செய்தியை, ‘காரைக் கதம்பம் 2013 ஒரு பார்வை’ என்ற மகுடத்தின் கீழ், மீள் பிரசுரித்தமைக்கு முதலில் நன்றிகள்.  காரைக் கதம்பத்தில் பங்கேற்காத காரை அன்பர்களுக்கு உங்கள் தளத்தின் ஊடாகவும் செய்திகளை …

Continue reading

காரைநகருக்கு மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் வருகை

காரைநகருக்கு மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் வருகை தந்தபோது எடுக்கப்பட்ட படங்கள்

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி-2013

காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகத்திற்குக் காணி அன்பளிப்பு

காரை அபிவிருத்திச்சபை மாணவர் நூலகத்திற்கு மேலதிகமாக இரண்டு பரப்புக் காணி அன்பளிப்பு காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகம் அமைக்கப்படும் காணிக்குக் கிழக்குப் பக்கமாக மேலதிகமாகத் தேவைப்படும் இரண்டு பரப்புக் காணி அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வன்பளிப்பினைத் திரு.பொன்னையா ஆறுமுகம் அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது துணைவியார் திருமதி. மனோன்மணி ஆறுமுகம் அவர்கள் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் திரு. சிவா தி.மகேசன் அவர்களிடம் வழங்கினார். சட்டத்தரணி திருமதி. சாந்தி சிவபாதம் இதற்குரிய கட்டணத்தினைத் தானே பொறுப்பேற்றுக் கொண்டார். அன்பளிப்பு …

Continue reading

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி-2013

புதிதாகவீடீயோஇணைக்கப்பட்டுள்ளது   காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி-2013 யாழ்ற்ரன் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி 10.2.2013 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 1 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலமையில் ஆரம்பமானது. பிரதம விருந்தினர்,சிறப்பு விருந்தினர்,கௌரவவிருந்தினர்,ஆசிரியர்கள், பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் ஆகியோர் கல்லூரியின் மாணவ தலைவர்களின் அணிவகுப்பு வான்ட் இசை குழுவினரின் அணிவகுப்பு ஆகியவற்றுடன் கல்லூரியின் நுழைவாயிலில் இருந்து அழைத்துவரபட்ட காட்சி கல்லூரி சமூகத்தினரை பிரம்மிக்க வைத்தது. மங்கல விளக்கேற்றல்,கடவுள் வணக்கம் ஆகியவற்றுடன் …

Continue reading

காரைநகர் ஊரிக்கிராமத்துக்கான பாடசாலை பஸ்சேவை சீரின்மை

காரைநகர் ஊரிக்கிராமத்துக்கான பாடசாலை பஸ்சேவை சீரின்மை காரணமாக மாணவர்கள் சிறிய கன்ரர் ரக வாகனத்தை அடைந்து செல்லும் காட்சி. [nggallery id=10]

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் பொதுக் கூட்டம்

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் பொதுக் கூட்டமும் புதிய தேர்தல் முறையும் பற்றி திட்டமிடல் போசகர் சபையினால் விடுக்கப்படும் அறிவித்தல் •    பொதுக் கூட்ட திகதி பெப்ரவரி 24,2013 இற்கு பிற்போடப்பட் காரணத்தினால், புதிய நிர்வாக சபையின் பதவிகளுக்கான விண்ணப்ப முடிவு திகதி பெப்பிரவரி 20, 2013 நள்ளிரவு 12:00 மணி வரை பிற்போடப்பட்டுள்ளது. • பொதுக் கூட்டத்தில் பங்குபற்றும் விண்ணப்பதாரிகளும், வாக்காளர்களும் பொதுக் கூட்டத்திற்கு மூன்று தினங்களுக்கு முன்னர் அங்கத்துவ பணம் செலுத்தி தமது அங்கத்துவத்தைப் பெற்றிருக்க …

Continue reading

ஒன்பதாவது திசை

ஒன்பதாவது திசை-ராஜேஷ்குமார்

அன்னதான சபைக்கு கடந்தமாதம் புதிய மண்டபத்திற்கான அத்திவாரக்கல்

ஈழத்துச் சிதம்பர மாணிக்கவாசகர் அன்னதான சபைக்கு கடந்தமாதம் புதிய மண்டபத்திற்கான அத்திவாரக்கல் இடப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்கள்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைக் கண்டித்து விழிப்புணர்வு நடை பயணம்

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைக் கண்டித்து விழிப்புணர்வு நடை பயணம் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களைக் கண்டித்து மீனவர் ஒருவர் மன்னாரில் இருந்து கடற்கரை வழியாக முல்லைத்தீவு வரை கால்நடையாக நடந்து விழிப்புணர்வொன்றை ஏற்படுத்தியுள்ளார். அந்த வகையில் ஊர்காவற்றுறை ஊடாக காரைநகருக்கு வருகை தந்தபோது காரைநகர் கடற்றொழிலாளர் சங்கங்கள், காரைநகர் பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவர் கண்ணன் மற்றும் காரைநகர் பிரதேச செயலாளர் ஆகியோர் வரவேற்றனர். இந்நிகழ்வுகளை படங்களில் காணலாம்.

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தில் 125வது ஆண்டு விளையாட்டு விழா தொடக்க நிகழ்வுகள் ஆரம்பம்

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தில் 125வது ஆண்டு விளையாட்டு விழா தொடக்க நிகழ்வுகள் ஆரம்பம் 09.02.2013 அன்று ஆரம்பமான இந்நிகழ்வுகளில் காரைநகரைச் சுற்றிய ஆண்களுக்கான மரதன் ஓட்டம் மற்றும் பெண்களுக்கான சைக்கிள் ஓட்டம் ஆகியன இடம்பெற்றன. இந்நிகழ்வுகளை படங்களில் காணலாம். சைக்கிள் ஓட்டத்தில் வெற்றிபெற்ற முதல் மூன்று வீரர்கள் 1ம் இடம்    –    நா.விஜயகுமாரி        –    பாரதி இல்லம் 2ம் இடம்    –    செ.தேனுசா        –    பாரதி இல்லம் 3ம் இடம்    –    கி.லாவண்யா       …

Continue reading

வருடாந்த தடகளப் போட்டி – 2013

யா/யாழ்ற்ரன் கல்லூரி, காரைநகர்  வருடாந்த தடகளப் போட்டி – 2013  

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மாணவ்களின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர்ப்போட்டி 6-02-2013

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மாணவ்களின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர்ப்போட்டி 6-02-2013 மு.ப. 9.00 மணிக்கு கல்லூரி அதிபர்.திரு.வே.முருகமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.பிரதம விருந்தினராக ஓய்வு பெற்ற கல்லூரியின் ஆரம்பப்பிரிவுத் தலைவர் திருமதி.இரஞ்சிதா.செல்வராசா அவர்களும் சிறப்பு விருந்தினராக காரைநகர் இலங்கை வங்கிக் கிளையின் நிறைவேற்று உத்தியோகத்தர் திரு.எஸ்.நவகிஸ்ணராசா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.கொடியேற்றல் நிகழ்வுகள் மாணவர் அணிநடையுடன் விளையாட்டு விழா கோலாகலமாக ஆரம்பமாகியது. பெரும் எண்ணிக்கையான பெற்றோர்கள் விளையாட்டு விழாவினைப் பார்வையிட வருகை தந்திருந்தனர்.

இனிதே நடைபெற்ற காரைக் கதம்பம் 2013 மேலும் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது

இனிதே நடைபெற்ற  காரைக் கதம்பம் 2013 பிருத்தானியா நலன் புரிச் சங்கத்தின் 16வது பொங்கல் விழாவான ”காரைக் கதம்பம் 2013” கடந்த சனிக்கிழமை (02/02/2013) மாலை 550க்கும் மேற்பட்ட மக்களுடன் இனிதே நிறைவு பெற்றது.                         கதம்பம் 2013 ஏற்கனவே குறிப்பிட்டிருந்ததுபோல் மாலை 05:00க்கு திருமதி ஞானமலர் சுந்தரேஸ்வரன் , திருமதி மஞ்சுளா நடராஜா ஆகியோரின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து 1நிமிட மௌன அஞ்சலியும், காரை பிரதேச கீதமும் ஒலிக்கப்பட்டது. பிரதேச கீதம் ஒலித்துக்கொண்டிருந்த வேளை நிகழ்வுகளில் …

Continue reading

சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைப்பு.

சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைப்பு. ஆட்டோ சாரதி மு.நடராசாவின் முன்மாதிரிக்கு பலரும் பாராட்டு. காரைநகரில் கடந்தவாரம் ஆட்டோவில் கண்டெடுத்த சுமார் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியான நகைகளை கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காரைநகர் வலந்தலையில் ஆட்டோ ஓடும் காரைநகர் மொந்திபுலத்தைச் சேர்ந்த மு.நடராசாவே இவ்வாறு பெருமனதுடன் இவ் நகைப்பொதியை உரியவரிடம் ஒப்படைத்துள்ளார். ஆட்டோவில் பயணம் செய்த பயணி ஒருவரால் தவறவிட்ட நகைப்பொதியை கண்டெடுத்த இவர் நகைப்பொதியின் …

Continue reading

காரைநகர் மாணவர் நூலகத்திற்கு மூன்றாம் கட்டமாக மேலதிக நிதி அனுப்பிவைப்பு

காரைநகர் மாணவர் நூலகத்திற்கு மூன்றாம் கட்டமாக மேலதிக நிதி அனுப்பிவைப்பு காரைநகரில் உருவாக்கம் பெற்றுவரும் மாணவர் நூலகத்திற்கு கனடா காரை கலாச்சார மன்றம் மூன்றாம் கட்டமாக சுமார் 331,000ரூபாய்களை நேற்று 04.02.2013இல் காரை அபிவிருத்திச் சபையினருக்கு அனுப்பிவைத்துள்ளது. இந்நிதியுதவிகளை வழங்கி ஆதரவு தந்த அனைத்து கனடா காரை அன்பு உள்ளங்களுக்கு கனடா காரை கலாச்சார மன்றம் தனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.  

காரைக் கதம்பம் 2013 – காரை அபிவிருத்திச்சபையின் வாழ்த்துக்கள்

இலண்டன் காரை நலன்புரிச் சங்கம் நடாத்தும் காரைக் கதம்பம் – 2013ற்குக் காரை அபிவிருத்திச் சபையின்   சார்பாக அதன் நிர்வாக சபையின் வாழ்த்துக்களும் வேண்டுகோள்களும் இலண்டன் காரை நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த கதம்ப நிகழ்ச்சி பெப்ரவரி மாதம் 2ம் திகதி நடைபெறுவதையிட்டு காரை அபிவிருத்திச் சபையின் நிர்வாக சபை தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றது. இவ்விழாவிற்குத் திருமதி வீரமங்கையினைப் பிரதம விருந்தினராக அழைத்ததையிட்டும் மகிழ்ச்சி அடைகின்றது. அத்துடன் இதுபோன்ற நிகழ்வுகள் வருடாவருடம் தொடரந்து நடைபெறுவதையிட்டும் பூரிப்படைகின்றது. 06.01.2013 …

Continue reading

குணரட்ணம் வள்ளியம்மை

குணரட்ணம் வள்ளியம்மை சுப்பிரமணியம் வீதி. இடைப்பிட்டி, காரைநகர் காரைநகர் களபூமியை பிறப்பிடமாகவும் இடைப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட குணரட்ணம் வள்ளியம்மை அவர்கள் 03.02.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற அம்பலவாணர் தங்கம்மா தம்பதிகளின் மகளும் அமரர் ஆறுமுகம் அமரர் வேலுப்பிள்ளை மற்றும் கந்தையா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் உமாதேவி கிருஸ்ணலீலர் விமலாதேவி அகியோரின் பாசமிகு மைத்துனியும் அமரர் மோகனதாஸ் அமரர் மோகனஸ்ரீ அமரர் மோகனராணி மற்றும் அம்பிகைபாகன்(இலங்கை) தயாநிதி(இலங்கை) அம்பிகா(இலண்டன்) புவிராஜ்(இலங்கை) தனராஜ்(இலங்கை) மோகனா(இலங்கை) மனோகரதாஸ்(கனடா) …

Continue reading

காரைக் கதம்பம் போற்றிடும் தைத் திருநாள்-2013

காரைக் கதம்பம் போற்றிடும் தைத் திருநாள்-2013 02-02-2013 அன்புடையீர் வணக்கம்! தலைவர்,செயலாளர்,நிர்வாகசபை,பிருத்தானியா ‘தழிழர் போற்றும் நன்னாள் உழவர் போற்றும் பொன்னாள்’ என்று சிறப்பிக்கப்படும் தைத்திருநாள், சமயங்கள் கடந்து கொண்டாடப்படும் தமிழர்திருநாளாகும். பிருத்தானிய காரை நலன்புரிச்சங்கம் பெருமையுடன் முன்னெடுக்கும் ‘காரைக்கதம்பம்-2013 16வது  பொங்கல் விழா திக்கெட்டும் பரவி எமது ஊரின் பெருமைசேர்க்க வாழ்த்துகின்றோம். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற பழமொழிக்கேற்ப அன்று தமிழர் வாழும் தேசங்களில் கொண்டாடப்படும் பொங்கல்விழா. இன்று உலகின் எம் இனத்தின் புலம்பெயர் நாடுகளிலுள்ள …

Continue reading

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் அன்பு பொங்க, ஆசை பொங்க, அறிவு பொங்க, இன்பம் பொங்க, ஈகை பொங்க, இனிமை பொங்க தித்தித்கும் செங்கரும்பாய் மகிழ்ச்சி பொங்க பிரித்தானியாவில் காரைநகர்ச் சுற்றத்தார், சொந்தங்கள், நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடும் இனிய தைத் திருநாள் விழா காரைக் கதம்பம் 2013, இயல் இசை நாடகத் திருவிழா காரைக் கதம்பம் 2013 மிகவும் சிறப்பாக நடைபெற கனடா வாழ் காரைநகர் மக்கள் சார்பில்  கனடா-காரை கலாச்சார மன்றமும் வாழ்த்துகின்றது.

உறவுக்கு கரம் கொடுப்போம் செல்வி வளர்மதி கந்தசாமி வயது 29.

உறவுக்கு கரம் கொடுப்போம் செல்வி வளர்மதி கந்தசாமி வயது 29. சிறுநீரகமாற்றுச் சத்திர சிகிச்சையின் பின்னரான வைத்தியச் செலவுகள் காரைநகர் பொன்னம்பலம் வீதியைச் சேர்ந்த செல்வி வளர்மதி கந்தசாமி வயது 29, இவர் அண்மையில் தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் அந்த இரு சிறுநீரகங்களையும் மாற்றுச் சிகிச்சை மேற்கொண்டார். அந்த சிறுநீரக மாற்றுச் சிகிச்சையின் பின்னர் தேவையான மருத்துவச்செலவினை ஈடுசெய்வதற்கு அவரது குடும்பத்தினரால் முடியாதுள்ளநிலை ஏற்பட்டுள்ளது. இவரது மருத்துவச் செலவுகள் நாளொன்றுக்கு சுமார் 1500 ரூபாய்கள் …

Continue reading

யாழ்ற்ரன்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி

காரைநகர் யாழ்ற்ரன்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிக்கான முதலாவது  நிகழ்வானகாரைநகர்சுற்று வீதியைச்சுற்றிய மரதன்ஓட்டப் போட்டிகள் கல்லூரி  அதிபர் திரு.வே. முருகமூர்த்திஅவர்களால் 25.01.2013  காலை 6.45 மணிக்கு ஆரம்பித்துவைக்கப்பட்டது. கல்லூரிஆசியர்கள், மாணவர்கள்,பெற்றோர்,  பழையமாணவர்கள் ஆகியோரின் பலத்த கரகோசங்களின் மத்தியில் வீரர்கள்தங்கள்ஓட்டங்களைஆரம்பித்தனர்.

வாழ்த்து செய்தி

அன்பிற்கும், மரியாதைக்குமுரிய கல்லூரி அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்கட்கு முதலில் எம் அன்பு வணக்கங்களையும் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்கிறோம். இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் காரை மக்கள் சார்பிலும், குறிப்பாக இன்றைய ஆ.தியாகராஜா மத்திய மகாவித்தியாலயமான அன்றைய எம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள் சார்பிலும் எங்கள் மனப் பூர்வமான  வாழ்த்தையும்  அன்பையும் இம்மடல் மூலம் தெரிவித்து மகிழ்ச்சி கொள்கிறோம். எமது  காரை மண்ணின்   நலனிலும் வளர்ச்சியிலும் ஐக்கிய இராச்சிய காரை நலன்புரிச் சங்கம் மிகுந்த ஈடுபாட்டோடு செயற்பட்டு வருகிறது என்பதை நீங்கள்  அறிந்திருப்பீர்கள். புலம்பெயர் காரை அமைப்புக்களின்  மூத்த …

Continue reading