Tag: கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம்

இந்துக் கல்லூரி பதில் அதிபராக திருமதி.கலாநிதி சிவநேசன் பொறுப்பேற்றுள்ளார்

Mrs.Kalanithi Sivanesan

இந்துக் கல்லூரி பதில் அதிபராக திருமதி.கலாநிதி சிவநேசன் பொறுப்பேற்றுள்ளார்

திருமதி.வாசுகி தவபாலன் அதிபர் சேவை தொடர்பான பட்டப்பின் படிப்பு கற்கை நெறியினை மேற்கொள்ளும் பொருட்டு ஒரு வருட கால கற்றல் விடுமுறையில் செல்வதன் காரணமாக அவர் தமது பொறுப்புக்களை பாடசாலையின் முதுநிலை ஆசிரியை திருமதி.கலாநிதி சிவநேசன் அவர்களிடம் கையளித்துள்ளார் என திருமதி.தவபாலன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் செயலாளருக்குத் தெரிவித்துள்ளார். 

இந்துக் கல்லூரி க.பொ.த (உ-த) பரீட்சைப் பெறுபேறுகள் ஆகஸ்ட் 2015

KARAI HINDU LOGO

 

கடந்த ஆகஸ்ட் 2015 இல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பரீட்சை முடிவகள் அண்மையில் வெளிவந்திருந்தன. 


காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:

வர்த்தகபிரிவு


1. தே.றோஜனா – 2AC 
2. கோ.கஸ்தூரி – 2BC
3. இ.கிரிசாந்தி – B2C
4. சு.துளசிகா – 2CS 
5. லோ.கஜவதனி – C2S

கலைபிரிவு 


1. மு.ஹிந்துசா ABC 
2. மு.தர்சிகா A2C
3. ந.லோகதாஸ் 3B
4. பா.சஜிதா 2BC 
5. அ.துஸ்யந்தினி 2BC 
6. ந.கஜந்தினி B2C
7. தெ.மேகலை B2S
8. புp.தர்சினி B2S 
9. க.தவநதி 3C 
10. ப.சிந்துஜா 3C
11. சோ.தரண்ஜா 3C
12. ந .டினோஜா 2CS
13. சு.டனோஜன ;- C2S 
14. ப.நிதர்சன் – C2S 
15. என்.கஜந்தினி – C2S

உயிரியல்பிரிவு 


1. க.சாந்தினி – 3S

 

வர்த்தகப் பிரிவு மாணவி செல்வி. தே.றோஜனா 2A C என்ற பெறுபேற்றினைப் பெற்று காரைநகர் கோட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளதாகவும் சென்ற ஆண்டில் 72 வீதமாக இருந்த பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ள மாணவர்களின் சதவீதம் இவ்வாண்டு 75 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் 6 மாணவர்கள் பல்கலைகழக்திற்குத் தெரிவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் செயலாளருக்குத் தெரிவித்துள்ளார். 

காரைநகர் இந்துக்கல்லூரி பெயர்ப்பலகை திரைநீக்க நிகழ்வு

காரைநகர் இந்துக்கல்லூரி பெயர்ப்பலகை திரைநீக்க நிகழ்வு

‘யாழ்-கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம’ என்று அலுவலக முறையில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாகப் பயன்படுத்தி வந்த பாடசாலையின் பெயரை ‘காரைநகர் இந்துக் கல்லூரி’ என்று பயன்படுத்துவதற்கு கல்வித்திணைக்களம் அனுமதி வழங்கியமையை அடுத்து இப்புதிய பெயரின் பெயர்ப் பலகையை சம்பிரதாய பூர்வமாகத் திரை நீக்கி வைக்கும் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை(04-01.2015) அன்று காலை11:00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளதாக பாடசாலை வட்டாரம் எமது இணையத்தளத்திற்கு அறியத்தந்துள்ளது.

இந்நிகழ்விற்கு கல்விப்பகுதியைச் சேர்ந்த நிர்வாக அலுவலர்கள் விருந்தினர்களாக அழைக்கப்பட்டடுள்ளனர்.

நிகழ்வு பற்றிய முழுமையான அறிவித்தலைக் கீழே காணலாம்.

யாழ்/கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகாவித்தியாலயம் காரைநகர்
காரைநகர் இந்துக்கல்லூரி பெயர்ப்பலகை திரைநீக்க நிகழ்வு கல்லூரி வளாகத்தில் 4.01.2016 திங்கட்கிழமை முற்பகல் 11மணிக்கு தலைவர் திருமதி வாசுகி தவபாலன்(அதிபர்) தலைமையின்கீழ் நடைபெறவுள்ளது.

பிரதம விருந்தினர்

கௌரவ செயலாளர் இ.ரவீந்திரன்(கல்விப் பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு வடமாகாணம்),

சிறப்பு விருந்தினர்கள்

திரு.எஸ். உதயகுமார்(மாகாண கல்விப்பணியாளர் – வடமாகாணம்),

திரு.சு.சுந்தரசிவம்(வலய கல்விப்பணிப்பாளர் – தீவகம்),

கௌரவ விருந்தினர்கள்

திரு.ப.விக்னேஸ்வரன்(தலைவர் காரை அபிவிருத்திச்சபை),

திரு.பு.ஸ்ரீவிக்னேஸ்வரன்(கோட்டக்கல்விப் பணிப்பாளர்)

Name Board 1Name Board 2

 

‘காரைநகர் இந்துக் கல்லூரி’ என பெயர் மாற்றம் பெறும் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம்!

'காரைநகர் இந்துக் கல்லூரி' என பெயர் மாற்றம் பெறும்  கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம்!   

IT-Sampanthan

காரைநகர் இந்துக் கல்லூரி பெயர் மாற்றம் 

கடந்த 32 ஆண்டுகள்  கலாநிதி ஆ.தியாகராசா  மத்திய மகாவித்தியாலயம் என்ற பெயருடன்  இயங்கி வந்த  கல்லூரி 2016 ஜனவரியிலிருந்து மீண்டும்  காரைநகர் இந்துக்கல்லூரி என பெயர் மாற்றம் பெறுவதை கல்லூரி அபிவிருத்திச் சங்க நிருவாகிகள், பழைய மாணவர் சங்கங்கள், பழைய  மாணவர்கள். காரை மக்கள் அனைவரும் பாராட்டி வரவேற்றுள்ளனர்.  மக்கள் விருப்பத்திற்கிணங்க இந்த மாற்றத்தை மேற்கொண்ட கல்வித் திணைக்களத்திற்கு நன்றியைத் தெரிவித்துக்  கொள்கின்றனர். 
காரைநகர் இந்துக் கல்லூரியை உயர் நிலைக்கு வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர் நீண்டகாமாக அதிபராகப் பணியாற்றிய கலாநிதி ஆ.தியாகராசா அவர்கள். நான் 1950 ஆண்டிலிருந்து  எட்டு ஆண்டுகள் அக்கல்லூரியில் படித்தவன் என்ற முறையில் அதிபர் தியாகராசா அவர்களின் அற்;பணிப்பை நன்கு அறிவேன்.
தான் வளர்த்த கல்லூரி என்பதற்காக தனது பெயரை இக்கல்லூரிக்கு வைக்கவேண்டும் என்று அவர் விரும்பியது கிடையாது.
எனவே இந்த பெயர் மாற்றத்தால் அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.  அதேபோல் இப் பாடசாலையை 125 ஆண்டுகளுக்கு முன்னர்  நாவலர் வழிவந்த திரு.ச. அருணாசலம் உபாத்தியாரின் வழிகாட்டலில் சயம்பு வாத்தியார் ஆரம்பித்த பாடசாலை இந்து கல்லூரியாக  விளங்குவதன் மூலம் அவர்களது ஆத்மாக்களும் சாந்தியடையும்.
இக்கல்லூரியை வளர்த்தெடுத்த கலாநிதி ஆ.தியாகராசா அவர்கட்கு ஞாபகார்த்த மண்டபம் ஒன்றை அமைப்பதற்கு பழைய மாணவா ;சங்கங்களும் பழைய மாணவர்களும் முன்வருவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.
பெயர் மாற்றம் பெற்ற' காரைநகர் இந்துக்கல்லூரி' என்ற பெயர்தாங்கிய வளைவை சிறப்பான முறையில் அமைப்பதற்கு கொழும்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்(கொழும்பு) முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. 

ஐ.தி.சம்பந்தன்
காரை இந்துக கல்லூரி பழைய மாணவார்கள் சார்பாக

 

பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் போசகர், பொருளாளர் ஆகியோர் தாய்ச் சங்கத்தின் கூட்டத்தில் கலந்துகொண்டனர்

பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் போசகர், பொருளாளர் ஆகியோர் தாய்ச் சங்கத்தின் கூட்டத்தில் கலந்துகொண்டனர்

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய(காரைநகர் இந்துக்கல்லூரி) பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் போசகர் சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம், பொருளாளர் திரு.மா.கனகசபாபதி ஆகியோர் பாடசாலையின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கடந்த செவ்வாய்கிழமை(29.12.2015) அன்று நடைபெற்ற பழைய மாணவர்களின் தாய்ச்சங்கத்தின் கூட்டத்திற்கு அதன் நிர்வாகிகளின் அழைப்பின் பேரில் சமூகமளித்திருந்தனர்.

கனடாக் கிளையின் நிர்வாக சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமையவும் அத்தீர்மானத்தினை தாய்ச்சங்க நிர்வாகத்திடம் தெரிவிக்குமாறு கனடாக் கிளை நிர்வாகம் வேண்டிக்கொண்டமைக்கு அமையவும் போசகர் திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் மேற்படி கூட்டத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

Visuvalingam-Mas-W

அதாவது தாய்ச்சங்க நிர்வாகம் எந்தவொரு விண்ணப்பத்தினையும் எழுத்து மூலமாகவே கனடாக் கிளை நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமெனவும் அத்தோடு கனடாக் கிளை தாய்ச்சங்கத்திற்கு அனுப்பி வைக்கும் நிதிக்கான கணக்கு விபரங்களை உடனுக்குடன் அனுப்பி வைத்து உதவ வேண்டுமெனவும் அப்போதுதான் கனடாக் கிளையின் நிர்வாக சபை அவற்றினை ஆராய்ந்து முடிவெடுக்க முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.

கனடாக் கிளையின் பொருளாளர் திரு.மா.கனகசபாபதி அவர்களும் போசகர் குறிப்பிட்ட மேற்படி கருத்தினை வழிமொழிந்திருந்தார்.

Kanagasabapathy-W

மேலும் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் பாடசாலையின் தற்போதுள்ள “கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்” என்ற பெயரை “காரைநகர் இந்துக்கல்லூரி” என்று மாற்றுவதற்கான அனுமதிக் கடிதம் கல்வித்திணைக்களத்திடமிருந்து தமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்து கனடாக் கிளையின் போசகர் சிவநெறிச்செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்களைக் கருத்துத் தெரிவிக்குமாறு கூறினார்.

திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் தனது கருத்துரையில் பாடசாலையின் பெயரை மாற்றவேண்டிய அவசியம் இல்லை எனவும் அப்படி மாற்றுவதாயின் புதிய பெயர் எதுவும் தேட வேண்டிய அவசியமில்லை எனவும், இப்பாடசாலையைத் தோற்றுவித்தவர்களுடைய எண்ணக்கருவைச் சிதைக்காதவாறு மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்களும், சயம்பு உபாத்தியாயரும் இணைந்து இட்ட நாமமாகிய ‘திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வித்தியாசாலை’ என்ற பெயரையல்லவா மீண்டும் மாற்ற வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் தமது கருத்தில் பாடசாலையின் பெயரை மாற்றுவதில் கவனம் செலுத்துபவர்கள், பாடசாலையின் தரத்தை உயர்த்துவதிலேயே கவனம் செலுத்த வேண்டுமெனவும் சிறிய பௌதீக வளம் கொண்ட பாடசாலைகளை எடுத்துக்காட்டாகக் கூறி அவை பின்னர் அதிசிறந்த முதல்தர பாடசாலைகளாக எவ்வாறு தரமுயர்ந்தன என்றும் விளக்கிக் கூறியிருந்தார்.

பாடசாலையின் பெயர் மாற்ற விவகாரத்தில் தாம் தலையிட  விரும்பவில்லை என்பது தனது தனிப்பட்ட கருத்தாகும் என இக்கூட்டத்தில் பொருளாளர் திரு.மா. கனகசபாபதி அவர்கள் தெரிவித்தார்.

காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளார் ஓய்வு பெறுகின்றார்

காரைநகர் கோட்டக் கல்விப்பணிப்பாளராக நீண்ட காலம் சேவையாற்றி வந்த திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்கள்; எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி முதல் ஒய்வு பெற உள்ளார். 


காரைநகர் கோட்டக் கல்வி அலுவலகம் கலாநிதி ஆ.தியாகராசா ம.மகா வித்தியாலய(காரைநகர் இந்துக்கல்லூரி) வளாகத்திலேயே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மார்கழி விடுமுறைக்காக மூடப்பட்டிருக்கும் பாடசாலை மீண்டும் திறக்கப்படும்போது அவர் ஓய்வு பெற்றுச் சென்றுவிடுவார் என்ற காரணத்தினால் அண்மையில் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களுக்கு கல்லூரி சார்பில் தமது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் உரையாற்றினார். 


பாடசாலை சார்பில் ஆசிரியர் திரு.இராஜமோகன் அவர்கள் கல்விப் பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். 


நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA


OLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERA[/caption]

 

கலாநிதி.ஆ.தியாகராசா ம.மகா வித்தியாலயத்தில்(காரைநகர் இந்து) தொங்கு நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது

கலாநிதி.ஆ.தியாகராசா ம.மகா வித்தியாலயத்தில் (காரைநகர் இந்துக் கல்லூரி) தொங்கு நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 


காரைநகர் கோட்டக் கல்விப்பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களும் காரைநகர் இலங்கை வங்கி முகாமையாளர் திரு.செல்வகுமார் அவர்களும் கலந்து கொண்ட நிகழ்வில் இந்த தொங்கு நூலகம் திறந்து வைக்கப்பட்டது. 


மாணவர்கள் இயற்கையான வெளிக்கள சூழலில் கல்வி கற்பதற்கான வாய்பாகவே இந்த நூலகம் அமைக்கப்பட்டது. அன்றை நிகழ்வில் மாணவர்களும் கலந்து கொண்டு நூல்களைப் பெற்ற வாசித்தனர். 


நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

‘காரைநகர் இந்துக் கல்லூரி’ என மீண்டும் பெயர் பெறுகின்றது கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்

கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்த பெயர் மாற்றம் தொடர்பான

விவாதங்கள் மற்றும் தீர்மானங்களின் அடிப்படையிலும், 08.12.2015 அன்று

மாகாண கல்வி ஆலோசனைக் குழுவினரால் நடாத்தப்பட்ட கூட்டத்திற்கு

அமையவும், 19.11.2015 அன்று நடைபெற்ற பாடசாலை அபிவிருத்தி

சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஏனமனதான முடிவிற்கமையவும், மாகாண

கல்விப் பணிப்பாளரின் சிபார்சுக்கு அமையவும் தீவக வலயத்திற்குட்பட்ட

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பெயரினை

மீண்டும் 'காரைநகர் இந்துக் கல்லூரி' என்று 01.01.2016 முதல் பெயர்

மாற்றம் பெறுவதற்கான அனுமதியை வடமாகாண கல்வி பண்பாட்டு

மற்றும் விளையாட்டுதுறை அமைச்சின் செயலாளரினால்  வழங்கப்பட்டு

எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரை இந்து) Yarl Geek Challenge Season-4 போட்டியில் வடமாகாணத்தின் சிறந்த வன்பொருள் அணிக்கான வெற்றிக் கேடயத்தை பெற்று சாதனை!

கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரை இந்து) Yarl Geek Challenge Season-4 போட்டியில் வடமாகாணத்தின் சிறந்த வன்பொருள் அணிக்கான வெற்றிக் கேடயத்தை பெற்று சாதனை!  

தகவல் தொழில் நுட்ப உலகில் வடபுலத்தை ஒர் அடையாளமாக மாற்றும் பாதையில் Yarl IT Hub இனால் நடத்தப்பட்டு வரும் Yarl Geek Challenge Competition நான்காவது ஆண்டாக அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. 

இப்போட்டியில் வடமாகாண முன்னணிப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் (காரைநகர் இந்துக் கல்லூரி) வன்பொருள் அணியினர் வடமாகாணத்தின் சிறந்த வன்பொருள் அணி எனும் சாதனையை நிலைநாட்டியுள்ளனர். 

இம்முறை வடமாகாண கல்வித்திணைக்களத்துடன் இணைந்து பாடசாலை மாணவர்களை மையப்படுத்திய இளநிலைப் பிரிவினருக்கான போட்டி நடைபெற்றது.
பங்கு பற்றிய அணியினர் தமது தயாரிப்புகளை Mobile Apps, Web Application, Hardware Application எனும் வகைகளில் வடிவமைத்திருந்தனர். 

இந்த வகையில் கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் உயர்தர வகுப்பின் தொழில்நுட்ப, கலைத்துறையைச் சேர்ந்த ஒன்பது மாணவர்களைக் கொண்ட மூன்று அணிகள் இப்போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைத் தட்டிக் கொண்டனர். 


பேருந்து ஒன்றின் மிதிபலகையில் பயணிஒருவர் நிற்கும் போது சாரதிக்கு சிவப்பு சமிக்ஞையும், அப்பயணி இரண்டாவது மிதிபடியைத் தாண்டும்போது மஞ்சள் சமிக்ஞையும், மூன்றாவது மிதிபடியைத் தாண்டியபின் பச்சைசமிக்ஞையும் காட்டும் வகையிலும், ஒவ்வொரு பயணியும் பேருந்துக்குள் உட்செல்லும்போது கணக்கெடுக்கக் கூடியவகையிலும் வன்பொருள் தீர்வை வடிவமைத்த மேற்படி கல்லூரி அணி வடமாகாணத்தின் மிகச்சிறந்த வன்பொருள் தீர்வு (Best Hardware Application) வடிவமைப்பாளர்களுக்கான வெற்றிக் கேடயத்தை தமதாக்கி இவ்வாண்டும் சாதனை படைத்துள்ளனர்.


மேலும் சிறந்த Web Application  வடிவமைப்பிற்காக மேற்படி கல்லூரியின் உயர்தர வகுப்பின் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த கே.டிலானி, ரி.றோமிலா, எஸ்.பிரசாலினி ஆகியோரின் அணியும், கலைத்துறையைச் சேர்ந்த பி.சஜிதா, என்.டினோஜா, ஏ.துஷியந்தினி ஆகியோரின் அணியும் சிறப்புச் சான்றிதழ்களை (Merit Certificate) பெற்றுக் கொண்டன. 

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் தொழில்நுட்ப பாடத்துறை கடந்த ஆண்டு முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.  

கடந்த வருடம் நடைபெற்ற Yarl Geek Challenge Season-3 போட்டியிலும் வடமாகாண முன்னணிப் பாடசாலைகளுடன் போட்டியிட்டு Best Hardware Application Team  எனும் சாதனையை கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் தட்டிக் கொண்டமையும் இவ்வருடமும் அதே சாதனையை மேற்படி கல்லூரியே முறியடித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Yarl Geek Challenge போட்டிகளில் ஆர்வத்துடன் பங்குபற்றி வடமாகாண முன்னணிப் பாடசாலைகளுக்கு இணையான வெற்றிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவச் செல்வங்களும் பயிற்றுவித்த தகவல் தொழில்நுட்பத்துறை ஆசிரியை திருமதி.;சிவாஜினி லக்ஸ்மன் மற்றும் பௌதிக விஞ்ஞானத்துறை ஆசிரியர் திரு.முத்துத்தம்பி ஜெயானந்தன் ஆகியோரும் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்குமுரியவர்கள். 

இவ்வணியினருக்கான பரிசினை Yarl IT Hub  நிறுவனத்தினர் வழங்குவதனையும் சாதனை மாணவர்கள் செல்வி.எஸ்.லித்தியா, செல்வன்.எஸ்.சுதர்சன், செல்வன்.எஸ்.விஜயதர்சன் ஆகியோரையும் ஆசிரியை திருமதி.;சிவாஜினி லக்ஸ்மன அவர்களுடன் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களையும் படத்தில் காணலாம். 

Yk01 Yk02 Yk03 Yk04 yk05 yk06 yk07 yk08 yk09 yk10 yk11 yk12

மேற்படி வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் பரிசில்கள் வழங்கப்படுவதனையும் படத்தில் காணலாம்.

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

தேசியஉற்பத்தித் திறன் தரவலயப் போட்டியில் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்திற்குத் தேசியமட்டத் தகமைச் சான்றிதழ்!

தேசியஉற்பத்தித் திறன் தரவலயப் போட்டியில் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்திற்குத் தேசியமட்டத் தகமைச் சான்றிதழ்!


தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தினால் நடத்தப்பட்ட உற்பத்தித் திறன் தரவலயப் போட்டியில் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம்(காரைநகர் இந்துக் கல்லூரி) அரச மற்றும் தனியார் பாடசாலைகள் பிரிவில் பங்கு பற்றித் தகமைச் சான்றிதழைப் பெற்றுள்ளது.


2013/2014ஆம் கல்வியாண்டிற்கான மேற்படி போட்டியில் எமது பாடசாலையின் 'பசுமைப்புரட்சி' (மாணவர்களின் தரவலையம்), 'ஜொலிக்கும் நட்சத்திரங்கள்', 'வெளிச்சவீடு;'(ஆசிரியர்களின் தரவலையம்) ஆகிய தரவலயங்கள் பங்குபற்றியிருந்தன. மூன்று தரவலயங்களும் முதலாம் சுற்றுப் போட்டியில் வெற்றியீட்டி இரண்டாம் சுற்றுப் போட்டிக்கு தெரிவாகியிருந்தன.


மூன்றாம் சுற்றுப்போட்டியில் வெளிச்சவீடு (Light House) என்று பெயரிடப்பட்ட கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய ஆசிரியர்களின் தரவலயம், "Kaizen இன் புதிய பாதை"  என்ற கருத்திட்டத்தின் கீழ் வெற்றியீட்டி தேசிய மட்டத் தகமைச் சான்றிதழைப் பெற்றுள்ளது.


கல்விநிறுவனத்தை 5S முறைமைக்குட்படுத்தி பௌதிக, மனிதவளத்தை வினைத்திறன்மிக்க வகையில் பயன்படுத்தி வினைத்திறன்மிக்க கல்விசார் வெளியீடுகளை உருவாக்குதல், குழுசார்; உணர்வுகளை மேம்படுத்துதல் என்பனவற்றின் மூலம் பாடசாலையை தொடர்ந்து வளர்ச்சியடையச் செய்தல் என்பனவற்றை நோக்கமாகக் கொண்டு பாடசாலை ஆசிரியர்களால் இக் கருத்திட்டத் தலைப்பு தெரிவு செய்யப்பட்டிருந்தது. 


Kaizen என்பது நிறுவனங்களின் தொடர்ச்சியான வளர்ச்சிக்காக பின்பற்றும் ஒரு நடைமுறையாகும். இது"தொடர் முன்னேற்றம்" என்ற பொருளுடைய ஜப்பான் மொழிச் சொல்லாகும்.


இச்சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்கு பாடசாலை ஆசிரியர்களின் சேவை, மாணவர்களின் திறன் மற்றும் பழையமாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி சபை உள்ளிட்ட பாடசாலை சமூகத்தின் பங்களிப்பே காரணம் என அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தெரிவித்தார்.


தரவலையத்திற்குரிய ஆசிரியர் குழாம் சிறப்பான பாராட்டிற்குரியவர்கள்


1.    திருமதி தயாளினி ஜெயக்குமார்
2.    திருமதி சிவந்தினி வாகீசன்
3.    திருமதி சகுந்தலா கேசவன்
4.    திரு தெட்சணாமூர்த்தி லிங்கேஸ்வரன்
5.    திரு தெய்வேந்திரம் பிரபாகரன்
6.    திருமதி சிவாஜினி லக்ஸ்மன்
7.    திரு.இராசரத்தினம் ஜீவராஜ்
8.    திரு இராசரத்தினம் இராஜகோபால் 
9.    செல்வி சிவரூபி நமசிவாயம்
10.    திருமதி கலாசக்தி றொபேசன்
11.    திருமதி கலாநிதி சிவநேசன்
12.    திரு க. குலசேகரம்


இவர்களுடன் கல்வி சாரா ஊழியர்களான 


1.    செல்வி கு. சோபனா
2.    செல்வி த.கஜந்தினி
3.    திரு.மு.சிவனேஸ்வரன்  ஆகியோரும் பாராட்டிற்குரியவர்கள். 


இதேவேளையில் இப்போட்டியில் தகுந்த முறையில் விண்ணப்பித்து பாடசாலையின் தரவலய செயற்பாடுகளை சிறப்பான முறையில் முன்வைப்பதற்கு அறிவுறுத்தல்களை வழங்கி வழிநடத்திய அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களும் பாராட்டிற்குரியவராவர். 


இப்போட்டியில் பங்குபற்றி சிறப்புத் தகமைச் சான்றிதழைப் பெற்ற தரவலையத்திற்குரிய ஆசிரியர் குழாம் கல்லூhயில் நடைபெற்ற நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். காரைநகர் கோட்டக் கல்வி அதிகாரி திரு.பு.ஸ்ரீ.விக்கினேஸ்வரன் அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார். 


நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 


OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA


OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

 

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் கலாசாரப் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவாகி சாதனை

TE.20W

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் கலாசாரப் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவாகி சாதனை


தேசிய விவகார அமைச்சினால் நடத்தபட்ட கலாசாரப் போட்டியில் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம. வித்தியாலயத்திலிருந்து(காரைநகர் இந்துக் கல்லூரி) கலந்து கொண்ட மாணவர்கள் ஐந்து போட்டிகளில் வெற்றிபெற்று தேசிய மட்டப்போட்டியில் பங்குபற்றுகின்ற தகமையைப்பெற்றுள்ளனர். 


இளம் பாடகருக்கான போட்டியில் செல்வி ஆ.அமிர்தாவும் சாஸ்திரிய நடனத்தில் செல்வி.ச.கவிதாவும் சித்திரத்தில் செல்வன் க.சசிதரனும் அறிவிப்பாளருக்கான போட்டியில் செல்வன் க.வினோதனும் கிராமிய நடனத்தில் பங்குகொண்ட குழுவும் என கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்திலிருந்து கலந்து கொண்ட மாணவர்களே எதிர்வரும் 13ஆம் திகதி மகரகமவில் நடைபெறவுள்ள தேசியமட்ட போட்டியில் பங்குபற்றுவதற்குத் தெரிவுசெய்யப்பட்டவர்களாவர்.


இளம் பாடகர் தெரிவில் வெற்றிபெற்ற செல்வி அமிர்தாவை தயார்ப்படுத்திவிட்ட இசை ஆசிரியைகளான திருமதி கலாசக்தி றொபேசன் திருமதி பங்கையற்செல்வி முகுந்தன் சாஸ்திரிய நடன வெற்றியாளர் செல்வி கவிதாவையும் கிராமிய நடனத்தில் வெற்றிபெற்ற குழுவையும் தயார்ப்;படுத்திவிட்ட நடன ஆசிரியைகளான திருமதி தே.சந்திரதாசன் திருமதி அகிலவாணி இராஜ்குமார் சித்திரத்தில் வெற்றிபெற்ற செல்வன் சசிதரனை தயார்ப்;படுத்திவிட்ட சித்திர ஆசிரியர் திரு.இ.ஜீவராஜ் அறிவிப்பில் வெற்றிபெற்ற செல்வன் வினோதனை தயார்ப்படுத்திவிட்ட தமிழ் ஆசிரியர் திரு.இ.ராஜகோபால் ஆகியோர் வழங்கிய தீவிர பயிற்சிகளும் அதிபர் திருமதி வாசுகி தவபாலனின் நேரிய வழிநடத்துதலும் மாணவர்களின் சாதனைக்கு வழிகோலியிருந்தன என்ற வகையில் அவர்களையும் வெற்றிபெற்ற மாணவர்களையும் பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை பாராட்டுவதுடன் நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டிகளிலும் வெற்றிபெற்று பாடசாலைக்கு பெருமைசேர்க்வேண்டும் என வாழ்த்துகின்றது.


இதேவேளை போட்டியாளர்களும் பக்கவாத்தியக் கலைஞர்களும் ஆசிரியர்களும்  தேசியப் போட்டியில் கலந்துகொள்ள மகரகமவிற்கு சென்று வருவதற்கான செலவினை பொறுப்பேற்று உதவுமாறு தாய்ச் சங்கம் வேண்டிக்கொண்டதற்கிணங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை 75000.00 ரூபாவினை (எழுபத்தையாயிரம) அனுப்பிவைத்து ஊக்கிவித்துள்ளது.

 

நட்பு உதைபந்தாட்டப் போட்டிகள் மூன்றில் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வி அணிகள் வெற்றிபெற்றன

சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அராலி இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளுடனான நட்பான உதை பந்தாட்டப் போட்டிகள் நான்கில்  காரை இந்து அணிகள் மூன்றில் வெற்றி.
கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலத்தினதும் (காரை இந்துக்கல்லூரி) சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியினதும் 17வயதுக்கு உட்பட்ட பிரிவு அணிகள் மோதிக்கொண்ட நட்பான உதை பந்தாட்டப் போட்டியில் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய அணி சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அணியை வெற்றிகொண்டது. 13 வயதுக்கு கீழ்ப்பட்ட அணிகள் மோதிக்கொண்ட மற்றொரு போட்டியிலும் காரை இந்து அணியே  வெற்றிக் கனியைத் தனதாக்கியது.


அதே வேளை மேற்குறித்த இரு பிரிவு அணிகளும் அராலி இந்துக் கல்லூரி அணிகளுடனும் மோதிக்கொண்டதில் காரை இந்துவின் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவு அணி அராலி இந்துக் கல்லூரி அணியை தோற்கடித்தது. 


13வயதுக்கு உட்பட்ட அணி அபாரமாக விளையாடியிருந்தபொழுதிலும் வெற்றி வாய்ப்பினை இழந்தது. இப்போட்டிகள் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றிருந்ததுடன் இரு பாடசாலைகளின் அதிபர்கள் விளையாட்டுத்தறை ஆசிரியர்கள் ஏனைய பல ஆசிரியர்கள் உட்பட திரளான ரசிகர்கள் இப்போட்டிகளைக்  கண்டு களித்தனர்.


பிரித்தனியாவில் வதியும் பாடசாலையின் பழைய மாணவரும் படசாலையின் விளையாட்டுத் துறை வளர்ச்சியில் அக்கறை கொண்டு விளங்குபவருமான திரு.சுப்பிரமணியம் சர்வானந்தன் அவர்களின் உதவியுடன் உதை பந்தாட்ட அணிகளிற்கு யாழ் மாவட்டத்தின் சிறந்த பயிற்சியாளர்களுள் ஒருவரான திரு.கருணாகரன் அவர்களால் தீவிர பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 


இதுவரை இவ்வணிகள் பெற்றுக்கொண்ட பயிற்சியினை பரீட்சித்துப்பார்க்கின்ற ஒரு நடவடிக்கையாக நடைபெற்றிருந்த இப்போட்டிகள் பார்க்கப்படுவதுடன் பாடசாலை அணிகள் பெற்றுக்கொண்ட வெற்றிகள் பயிற்சியின் மூலமாக அணி வீரர்கள் தமது திறனை வளர்த்துக்கொண்டமையை நிரூபிப்பதாக அமைந்துள்ளது என கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தெரிவித்தார்.


அராலி இந்துக் கல்லூரியுடனான போட்டியின்போது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMERA

 

யா/கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் 10.11.2015அன்று நடைபெற்ற தீபாவளி நிகழ்வு காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய(காரை இந்துக் கல்லூரி) ஆசிரியர் தின கொண்டாட்டம் பழைய மாணவர் சங்க கனடா கிளையின் அனுசரணையில் சிறப்புற நடைபெற்றது.

1994ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி விஞ்ஞான கலாச்சார நிறுவனத்தினால் (UNESCO) ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி  சர்வதேச ஆசிரியர் தினமாக பிரகடனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இத்தினத்தில் ஆசிரியர்கள் பல்வேறு வழிகளில் மதிப்பளிக்கப்பட்டு அவர்களது சமூகத்திற்கான அர்ப்பணிப்பும் மகத்துவம் மிக்கதுமான சேவை நன்றியுணர்வுடன் நினைவு கூரப்பட்டுவருகின்றது..


கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தினம் சென்ற ஒக்டொபர் மாதம் 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் உயர்தர மாணவர்களின் ஏற்பாட்டிலும் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் அவர்களின் நெறிப்படுத்தலிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு கல்லூரி அதிபரும் ஆசிரியர்களும் மதிப்பளிக்கப்பட்டிருந்தனர்.


இக்கொண்டாட்டத்திற்கான அனுசரணையினை  பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வழங்கி உதவியிருந்தது. ஆசிரியர்களின் சேவை முன்னிலைப்படுத்தப்பட்டு அவர்களை கௌரவித்து ஊக்குவிக்கும் செயற்பாடுகளிற்கு ஆதரவளிக்க  வேண்டும் என பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் வருடாந்த பொதுக்கூட்டத்தின்போது தெரிவித்திருந்த ஆலோசனையை உள்வாங்கிக்கொண்டே ஆசிரியர் தின கொண்டாட்டத்தின் முக்கியத்துவம் கருதி அனுசரணை வழங்குவதென சங்க நிர்வாகம் தீர்மானித்து கடந்த இரு வருடங்களாக நிதி உதவியளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


உயர்தர மாணவர் மன்றத்தின் தலைவர் செல்வன் க.தர்சிகன் தலைமையில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்வில் கல்லூரியின் ஓய்வு நிலை ஆசிரியரும் ஓய்வநிலை வடமாகாண கல்விப் பணிப்பாளரும் ஓய்வுநிலை வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் பிரதிச் செயலாளருமாகிய திரு.ப.விக்கினேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததுடன் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் திரு.கா.குமாரவேலு ஓய்வுநிலை ஆசிரியர் திரு.க.சோமாஸ்கந்தன் காரைநகர் கோட்டக் கல்விப் பணிமனை நிர்வாக உத்தியோகத்தர் திரு.சி.பிரபாகரன் பாடசாலையை உன்னதமான நிலைக்கு கொண்டுவர கால் நூற்றாண்டுகளாக அயராது உழைத்த வெள்ளி விழா அதிபர் திரு.ஆ.தியாகராசாவின் புதல்வியும் கல்லூரியின் பழைய மாணவியும் கல்லூரியின் ஓய்வுநிலை ஆசிரியையுமாகிய திருமதி புனிதவதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் பங்குகொண்டு நிகழ்வினை மேலும் பொலிவுற்று விளங்க வைத்திருந்தனர். 


அறிவு என்னும் ஞானஒளி ஊட்டும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசில்களாக மங்கலகரமான காமாட்சி விளக்கு வழங்கப்பட்டிருந்ததுடன் மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய போசன விருந்திலும் விருந்தினர்களுடன் கலந்துகொண்டு மகிழ்ந்திருந்தனர்.


நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.   ;

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும் நிறுவுநர் ஸ்ரீமான் முத்து சயம்பு நினைவுப் பேருரை

p.g.94ST

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் (காரைநகர் இந்துக் கல்லூரி) கடந்த ஜுலை 4, 2015 அன்று நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் நினைவுப் பேருரையை கல்லூரியின் பழைய மாணவியும், கல்லூரியின் முன்னாள் ஆங்கில ஆசிரியையும், ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளரும் ஆகிய திருமதி.சிவபாக்கியம் நடராஜா அவர்கள் நிகழ்த்தியிருந்தார்.

திருமதி.சிவபாக்கியம் நடராஜா அவர்கள் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் விருப்பத்திற்குரிய மாணவனும் நாற்பது ஆண்டுகள் எம் கல்லூரியில் நல்லாசிரியராகப் பணியாற்றி இன்றும் அபிமானத்துடன் நினைவுகூரும் மாணவர்களைக் கொண்டவருமான அமரர்.ஆர்.கந்தையா மாஸ்டர் அவர்களின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நினைவுப் பேருiரையை பரிசளிப்பு விழாவில் சமூகமளித்திருந்த பிரதம விருந்தினர் பேராசிரியர் திரு.S.V.பரமேஸ்வரன் உட்பட்ட அனைவரும் வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பரிசளிப்பு விழாவில் திருமதி.சிவபாக்கியம் நடராஜா அவர்கள் நிகழ்த்திய முழுமையான ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் நினைவுப் பேருரையை இங்கே தருகின்றோம்.

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும்
நிறுவுநர் ஸ்ரீமான் முத்து சயம்பு நினைவுப் பேருரை

இன்றைய விழாவிற்குத் தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களே, 
பிரதம விருந்தினர் பேராசிரியர் வை. பரமேஸ்வரன் அவர்களே, 
கௌரவ விருந்தினர் ஓய்வுநிலை மாகாணக் கல்விப்பணிப்பாளர் திரு.ஆ.ராசேந்திரன் அவர்களே, 
சிறப்பு விருந்தினர் திரு.தி.ஜோன்குயின்ரஸ் தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் அவர்களே,

இக்கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர்களே! அயல் பாடசாலை அதிபர்களே! பழைய மாணவர் சங்கச் செயலாளர் அவர்களே, பாடசாலை அபிவிருத்தி சங்கச் செயலாளர் அவர்களே, கல்லூரிக்கு வளஞ்சேர்க்கும் ஆசிரிய மணிகளே, கல்லூரிக்குப் பலமாக விளங்கும் பழைய மாணவர்களே, நலன்விரும்பிகளே, கல்லூரியை மறவாது வெளியூரிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வருகை தந்திருக்கும் பழைய மாணவர்களே, பிறந்த மண்ணில் வாழ்ந்து எமது ஊருக்கும் பாடசாலைக்கும் உரமாக இருக்கும் பெற்றோர்களே! கல்லூரிக்குப் பெருமை சேர்க்கும் மாணவச் செல்வங்களே, அனைவருக்கும் எனது இனிமையான காலை வணக்கம்.

நிறுவுநர் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் அன்பிற்குரிய மாணவனாக இப்பாடசாலையில் கல்வி கற்று சயம்பு உபாத்தியாயர் அவர்களினாலேயே இப்பாடசாலையில் 1915 ஆம் ஆண்டில் ஆசிரியராக நியமிக்கப்பட்டு நாற்பது ஆண்டு காலமாக மூன்று தலைமுறையினருக்கு நல்லாசியராகப் பணியாற்றி இன்றும் அவர் நாமம் மறவாத மாணவர்களைக் கொண்ட எனது தந்தையார் அமரர்.ஆர்.கந்தையா மாஸ்ரர் அவர்களின் இளைய மகளாக நானும் இக்கல்லூரியிலேயே கல்வி கற்று இக்கல்லூரியிலேயே ஆசிரியப்பணி செய்த காரணத்தினாலோ என்னவோ எனது அன்புக்கும் ஆசிக்குமுரிய எனது மாணவியாகிய இக்கல்லூரியின் அதிபர் திருமதி. வாசுகி தவபாலன் அவர்கள் இந்த நிறுவுனர் நினைவுப் பேருரையை நிகழ்த்துமாறு என்னை வேண்டிக் கொண்டார் என்று கருதுகிறேன். அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு ஸ்ரீமான் முத்து சயம்பு நினைவுப் பேருரையைத் தொடங்குகின்றேன்.

ஈழமணித்திருநாட்டின் கல்விச் சிந்தனை உலகில் இரண்டு நூற்றாண்டுகளாகச் சைவசமயம் அந்நிய சக்திகளின் அசுரப்பிடியில் அகப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் ஒரு தலைவன் இன்றி இருளில் தவித்துக் கொண்டிருந்தது. இவ்வேளையில் விடிவெள்ளியாக உதித்தவரே நல்லூரின் நாவலர் பெருமான ஆவார். நாவலரின் காலம் 1822–1879 வரை ஆகும். ‘யாழ்ப்பாணச் சமய நிலை’ என்ற நூலில் நாவலரின் கருத்துக்கள் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது. “கல்வி அறிவொழுக்கங்களினாற் சிறப்புற்ற மேலோர்களையே உங்களுக்குக் குருமாராக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.” “ஊர்தோறும் பள்ளிக்கூடங்கள் தாபித்து உங்களுள்ளே கல்வி அறிவொழுங்கங்களிற் சிறந்த மேலோர்களைக் கொண்டு அவைகளை நடத்துவியுங்கள். உங்கள் பிள்ளைகளை அப்பள்ளிக் கூடங்களிலேயே அனுப்பி லௌகிக நூல்களையும் நீதி நூல்களையும் சைவசமய நூல்களையும் படிப்பியுங்கள்.”

இவ்வாறான நாவலரின் கருத்துக்களால் பெரிதும் கவரப்பெற்றவர் காரைநகர் மடந்தை செய்த தவம் வாய்த்ததென வந்த கர்ம வீரன் ஸ்ரீமான் சங்கரப்பிள்ளை அருணாசலம் அவர்கள். இவர் மல்லிகை என்னும் குறிச்சியைப் பிறப்பிடமாகவும் குட்டிப்புலம்(குமிழங்குளி) என்னும் குறிச்சியில் வாழ்ந்தவரும் ஆவார். இச்செயல்வீரன் ச.அருணாசலம் அவர்களின் காலம் 1864-1920 வரையாகும். சைவம் நீறுபூத்த நெருப்பாக மூடியிருந்த காலத்தில் எங்கள் காரைநகர் மகான் அருணாசலம் அவர்கள் சைவத்தை மூடியிருந்த அழுக்குச் சாம்பலை அகற்றி விட்டார்கள். இச்செயலை உலகம் அறியவில்லை. “இச்சரித்திர நாயகராகிய ஸ்ரீமான் ச.அருணாசலம் அவர்கள், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களின் சிந்தனைகளுக்கும் இந்த நூற்றாண்டின் சைவ எழுச்சிக்கும் இடையில் அமைந்ததொரு சேதுபந்தனம” என்று அவரை நேரில் அறிந்த பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் குறிப்பிடுகின்றார். நாவலரையன்றி மற்றெவரையும் மதித்துப் பேசி அறியாத நாவலரின் தமையனார் மகன் ஸ்ரீமத். த.கைலாசபிள்ளை அவர்களோ “நாவலருக்குப்பின் ஒரேயொரு மனிதர் அருணாசலந்தான்” என்று வர்ணிக்கின்றார்.

ஸ்ரீமான் ச.அருணாசலம் அவர்கள் சைவப்பெற்றோரின் பிள்ளைகள் தம் மதம் மாறி ஆங்கிலக் கல்வி கற்று அரச உத்தியோகம் என்ற மாய வலைக்குள் சிக்குவது கண்டு நெஞ்சம் பொறுக்காது புறப்பட்டார். தாம் தமக்கென வாழாது தம் சைவத்திற்கும் தமிழுக்குமாய் வாழத் துணிந்தார். தமது எண்ணத்தை ஸ்ரீமத் த.கைலாசபிள்ளை, சு.இராசரத்தினம் போன்ற பெரியாருடன் பகிர்ந்து அவர்களின் யோசனைகளையும் ஏற்று செயலாற்றினார். இப்பெரியார்களைக் காண்பதற்காக அதிகாலையில் காரைநகரில் இருந்து கால்நடையாக யாழ்ப்பாணம் செல்வார். செல்லும் வழியில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியைப் பார்த்து காரைநகர் மாணக்கர்கள் கிறிஸ்தவர்களாக மாறி இக்கல்லூரியில் ஆங்கிலக் கல்வி கற்று மலாய் நாட்டுக்கு சென்று செல்வம் ஈட்டுவது பற்றிச் சிந்தித்து கவலையுற்றார்.

சைவமாணவர்கள் கற்பதற்காக ஒரு சைவ ஆங்கிலப் பாடசாலையை எமது ஊரில் அமைக்க வேண்டும என்ற எண்ணம் அருணாசல மகானின் மனதில் கருக்கொண்டது. தமது எண்ணத்தை மாப்பாணவூரி கந்தப்பர் இலட்சுமண பிள்ளைக்கும் சிதம்பரப்பிள்ளை கந்தப்புவுக்கும் அயலவர் கோவிந்தபிள்ளைக்கும் கருத்தேற்றம் செய்யத் தொடங்கினார். இவரின் கருத்தினால் உற்சாகமடைந்த திரு.கோவிந்தபிள்ளை அவர்கள் தனது சொந்த நிலத்தின் ஒரு பகுதியை பாடசாலை அமைக்க வழங்கி உதவினார். யாழ்ப்பாணம் நல்லூர் முத்திரைச் சந்தியைச் சேர்ந்த சயம்பு என்னும் சைவப்பற்றும் ஆங்கிலப் புலமையும் நிறைந்த ஆசானை அழைத்து வந்தார். திரு.கந்தர் லட்சுமணர் அவர்களின் மனைவியின் மூத்த சகோதரியின் மகனே நல்லாசிரியர் சயம்பர் ஆவார்.

இக்கல்லூரியின் முன்னாள் உப அதிபரும், யாழ் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபருமான ஆங்கிலப் புலமை மிக்க பத்திரிகை ஆசிரியரும், ஆசிரியர் சங்க சர்வதேச மாநாடுகளில் பங்குபற்றியவருமான திரு.N.சபாரத்தினம் அவர்கள் குறிப்பிடும் போது “சைவப்பாடசாலைகளை அமைப்பதற்காகத் தனது செல்வம் அனைத்தையும் இழந்தவர் காரைநகர் பெருமகன் ச.அருணாசலம் அவர்கள். நாவலருக்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் இப்பெருமகனும் அவருக்கு உதவியாக இருந்த இரு சைவப்பெரியவர்களும் ஸ்ரீமான் சயம்பு அவர்களை சைவத்தின் பாதுகாவலராகக் கண்டனர். ஸ்ரீமான் சயம்பு அவர்கள் இன்று இந்த உன்னத கல்வி நிறுவனத்தின் தந்தை என்று போற்றப்படுகின்றார்” என்று குறிப்பிடுகின்றார். (Chief among those who heard the clarion call of Navalar was the late S.Arunasalam of Karainagar who is still immortalized as No.2 to Navalar in founding Hindu School for Hindu Children all over the peninsula spending all his wealth and becoming a pauper in the process. It was he with the assistance of the Late.K.Ledchumananpillai and S.Kandappar two benefactors of the area that founded the School in 1888. The beginnings of the school are yet misty, but the founders, the great Trinity met their man in Saymboo, a Saiva Savant who is now regarded as the Father of this great enterprise.)

சைவப் பாரம்பரியமிக்க எமது ஊர் மக்கள் பரவசப்பட, மாணவர்கள் மனதில் மகிழ்ச்சி பொங்க இவ்வித்தியாசாலையில் பெரியார் சயம்பு அவர்கள் ஆசிரியராக இருந்து பணிபுரியத் தொடங்கினார். ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்கள் தாம் வேறு வித்தியாசாலை வேறு என்று நினைத்ததில்லை. சைவ சமய பண்பாட்டிற்கு அமையாத பழக்க வழக்கங்களையும் நடைமுறைகளையும் தடைசெய்து சைவசமயக் கலாசாரத்தை மேலோங்கச் செய்யும் திறன்மிகு மாணவர்களை உருவாக்கினார். காரைநகர் இந்து ஆங்கில வித்தியாசாலை எனத்தொடங்கிய இப்பாடசாலை காலப்போக்கில் திருஞானசம்பநதமூர்த்தி நாயனார் ஆங்கில வித்தியாலயம் என்ற பெயரைப் பெற்று விளங்கியது.

இயம்பிடு ஆங்கிலக் கல்வியை
வியன்மிகு காரைநகரதனில்
நயம்பெற உரைத்த நல்லாசான்
சயம்பர் என்று போற்றுகிறார் வித்துவான் F.X.C நடராசா

சயம்புச் சட்டம்பியார் காரைநகருக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. தன்னலங்கருதாது பொதுநல நோக்கோடு ஆங்கிலக் கல்வியைப் போதித்து வந்தார். சயம்புச் சட்டம்பியார் கல்வியை மாத்திரம் மாணக்கருக்கு ஊட்டினவரல்லர். ஒழுக்கத்தையும் கவனித்து வந்தார். சைவாசார முறைப்படி நெற்றியில் திருநீறு பொட்டுடன் மாணாக்கரை வரும்படி கட்டளையிடுவர். வெள்ளிக்கிழமை தோறும் மாணக்கரைக் காலையில் சிவன்கோயிலுக்கு வரவழைத்து கூட்டுவழிபாடு செய்வார்.

ஆங்கிலக் கல்வியைச் சயம்புச் சட்டம்பியார் கவனித்துவர அவருக்கு உறுதுணையாக அம்பலச்சட்டம்பியார் தமிழ்க்கல்வியைப் போதித்து வந்தார். தமிழ் இலக்கியத்தில் திறமைசாலியான அம்பலச் சட்டம்பியார் கணிதத்திலும் வல்லுநர். இந்த ஆங்கில பாடசாலையிற் கற்றுத் தேறிய யாவரும் தமிழிலும் சிறந்த அறிவுடையவர்களாக இருந்தனர். வித்தியாலயம் படிப்படியாக வளர்ந்து வருவதைப் பார்த்து ஊர்மக்கள் உற்சாகமடைந்து ஒரு மண்டபத்தையும் இரண்டு அறைகளையும் நிர்மாணித்துக் வழங்கினர். அவை யாழ் அரச அதிபராகக் கடமையாற்றிய Sir.W.Twynham அவர்களால் திறந்து வைக்கப்பட்டன.

‘சயம்புச்சட்டம்பியார் என்பவர் காரைநகருக்கு வந்திலரேல் இப்போது காரைநகரிற் பெருங்குடிமக்களாகத் திகழும் மலாய்நாட்டு பெஞ்சனியர்மார் தோன்றியிருக்கவே மாட்டார்கள்.’ என்று காரைநகர் மான்மியம் என்ற நூலில் வித்துவான் F.X.C நடராசா அவர்கள் குறிப்பிடுகின்றார். சயம்பு உபாத்தியாயரிடம் ஆங்கிலக் கல்வி கற்ற மாணவர்கள் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று அரச உயர்பதவிகளை வகித்து பாடசாலையின் பெருமையை மேலோங்கச் செய்தனர். காலப்போக்கில் வெளியூர் மாணவர்களும் வந்து கற்கத் தொடங்கினர். மாணவர் தொகை கூடியது. வித்தியாலயத்தின் மனேஜராக திரு.வி.காசிப்பிள்ளை அவர்களும் உள்ளுர் மனேஜராக பெரியார் முத்து சயம்பு அவர்களும் பணியாற்றினர்.

125 ஆண்டுகளைக் கடந்து தளர்வின்றித் தன்னிகரற்ற கல்விப்பணியாற்றி ஒளிவீசிக்கொண்டிருக்கின்றது காரை இந்து என்று அனைவராலும் அழைக்கப்படும் கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம். இப்பெருமைமிகு கல்லூரியின் வளர்ச்சிப் பாதையில் இதுவரை காலமும் 25 நல்லதிபர்கள் தமது தடங்களைப் பதித்துள்ளனர்.

இக்கல்லூரியின் வளர்ச்சிப்படிகளை நோக்கும்போது

1. இப்பாடசாலையின் தலைமை ஆசிரியராக சிவத்திரு.ஈ.கே.சிவசுப்பிரமணிய ஐயர்B.A அவர்களின் காலத்தில் பாடசாலையின் கல்வித்தரம் உயர்வடைவதைக் கண்ட அரசினர் 1912 இல் உதவி நன்கொடை பெறும் பாடசாலையாக ஆக்கினர்.

2. பாடசாலையின் வெள்ளி விழா 07.09.1912 அன்று மனேஜர் திரு.வி.காசிப்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

3. பெரியார் முத்து சயம்பு அவர்கள் 1918 ஆம் ஆண்டில் பாடசாலையின் முகாமைத்துவப் பொறுப்பினை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிகார சபையிடம் ஒப்படைத்தார். எனினும் அவரே உள்ளுர் மனேஜராகத் தொடர்ந்து இருந்தார்.

4. நாற்பத்து மூன்று ஆண்டுகளாக இக்கல்லூரியின் ஆசிரியராக, தலைமையாசிரியராக, மனேஜராக பெரும்பணியாற்றி தம்மை இக்கல்லூரிக்கு அர்ப்பணித்த ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்கள் 1931 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

5. முதன் முதலாக எமது காரைநகர் தங்கோடையைச் சேர்ந்த திருவாளர் பொ.வேலுப்பிள்ளை (பொன்னுடையார் வேலுப்பிள்ளை) அவர்கள் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். (இவர் யாழ்ப்பாணம், சிங்கப்பூர் ஆகிய பல்கலைக்கழகங்களில் பணியாற்றிய மருத்துவத்துறைப் பீடாதிபதி பேராசிரியர் இ.கனகசுந்தரம், கனடா பல்கலைக்கழக இரசாயனவியல்துறைப் பேராசிரியர் தி.சிவகுமாரன் ஆகியோரின் பேரன் ஆவார்)

6. சிவத்திரு அ.சீதாராமஐயர் அவர்கள் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் 1934 ஆம் ஆண்டு J.S.C பரீட்சைக்குத் தோற்றிய 15 மாணவர்களுள் 13மாணவர்கள் இரண்டாம் பிரிவிலும் ஒருவர் வடமாகாணத்திலேயே முதற்பிரிவிலும் சித்தியெய்தினர். இதே காலத்தில் இப்பாடசாலையிலிருந்து திரு.அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை, திரு.கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் ஆகிய இருவரும் அகில இலங்கை விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்றிப் பரிசு பெற்றனர். இதனால் பாடசாலையின் புகழ் மேலோங்கியது.

7. திரு A .கனகசபை B.A அவர்கள் அதிபராகப் பத்து ஆண்டுகள் (1936-1946)பதவி வகித்த காலத்தில் இப்பாடசாலை சிரேஸ்ட வித்தியாசாலையாகி காரைநகர் இந்துக் கல்லூரி எனப்பெயர் மாற்றம் பெற்றது. இக்காலத்தில் S.S.C வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு மாணவர் தொகையும் ஐந்நூறைத் தாண்டிவிட்டது.

8. அதியுயர் அதிபர்தர பதவியைப் பெற்ற காரைநகரின் முதன்மைப் பேராசானாக அதிபர் கலாநிதி ஆ.தியாகராசா வலம் வந்தார். இப்பெருமகன் சேவையாற்றிய காலத்தையே கல்லூரியின் ‘பொற்காலம’; எனப்போற்றலாம் என்று மூதறிஞர் தத்துவக்கலாநிதி க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் குறிப்பிடுகின்றார். ஐந்து ஆண்டுகள்(1941-1945) ஆசிரியராகவும் இருபத்தைந்து ஆண்டுகள்(1946-1970) அதிபராகவம் சேவையாற்றிய இவர் ‘வெள்ளிவிழா அதிபர்’ எனவும் போற்றப்படுகின்றார். இவரின் காலத்திலேயே இக்கல்லூரியின் வைரவிழா 1950.09.19, 20, 21 ம் திகதிகளிலும் பவளவிழா 1963 ஆம் ஆண்டும் முத்துவிழா 1968 ஆம் ஆண்டும் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டன. மலேசியா சிங்கப்பூர் வாழ் பழைய மாணவர்களின் நிதியுதவியுடன் புதிய வகுப்பறைகள், விஞ்ஞான ஆய்வுகூடம், தங்கம்மா நடராஜா அவர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட நூல்நிலையம், நடாராஜா ஞாபாகார்த்த மண்டபம் அதனை அண்டிய நிலம் என்பன அதிபர் ஆ.தியாகராசா காலத்தில் பெறப்பட்டன. பட்டதாரி ஆசிரியர்கள் கிடைப்பது அரிதான அக்காலத்தில் விஞ்ஞான ஆங்கிலப்புலமைமிக்க பட்டதாரி ஆசிரியர்களை இந்தியாவிலிருந்து வரவழைத்தார். இவ்வாசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையினால் கல்வித்தரம் உயர்ந்து கல்லூரியின் புகழ் எங்கும் பரவியது. H.S.C எனும் உயர்தர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு 1AB பாடசாலையாகத் தரம் உயர்த்தப்பட்டது. அதிபர் ஆ.தியாகராசா பாடசாலையை கல்லூரி என்ற உயர்நிலைக்கு உயர்த்திய சிற்பி என திரு.N.சபாரட்ணம் குறிப்பிடுகின்றார். (Principal Thiyagarajah M.A. M.Lit (Later. Ph.d) was the architect of its collegiate status)

9. அதிபர் திரு P.S குமாரசாமி அவர்கள் குறுகிய காலத்தில் (1970-1971) சீரிய முறையிலும் அதிபர் திரு A.நடராஐh அவர்கள் காலத்தில்(1971-1973) சமயவிழாக்களை நடத்தியும் கல்வி, விளiயாட்டுத்துறையில் சிறப்பிடம் பெற்றும் கல்லூரி விளங்கியது.1971 இல் இவ் வித்தியாலத்தின் கனிஸ்ட பிரிவாக சுப்பிரமணிய வித்தியாசாலை இணைத்துக் கொள்ளப்பட்டது. திரு.K.சுப்பிரமணியம் அவர்கள் காலத்தில் (1973-1974)கணிதம், பௌதீகவியல் பாடங்களைக் கற்பித்துக்கொண்டே அதிபர் கடமையையும் செய்து கணித விஞ்ஞானத்துறையை மிளிரச்செய்தார்.

10. அதிபர் திரு.K.K.நடராஜா அவர்கள் சிறந்த கணித ஆசிரியராகவம் சிறந்த நிர்வாகியாகவும் சேவையாற்றிய காலத்தில் (1974-1978) 120 வரையான மாணவர்கள் உயர்தரவகுப்பில் கல்வி கற்றனர். இவ்வகுப்புகளுக்கு சிறப்புப் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்து அதிகளவான மாணவர்களை பல்கலைகழகங்களின் மருத்துவ, பொறியியல் பீடங்களுக்குத் தெரிவாகச் செய்து கல்லூரியின் புகழை உயர்த்தினார். இவர்காலத்தில் வடக்குப்பகுதி இரண்டு மாடி நிர்வாக மையக் கட்டிடம், நவீன விஞ்ஞான ஆய்வுகூடம், வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கட்டிடம், மைதான சுற்று மதில், நீர் சேகரிப்புத்தாங்கி என்பனவும், மைதான புனரமைப்பு என்பனவற்றையும் செய்து கல்லூரியின் பௌதிக வளம் அதிகளவில் விருத்தி கண்டது. 1976 இல் காரைநகர் முத்தமிழ் மன்றம் பெரியார் முத்து சயம்பு அவர்களுக்கு மணிமண்டபமும் சிலையும் அமைத்து திறப்பு விழா செய்து கௌரவம் வழங்கியது.

11. அதிபர் திரு.வே.தர்மசீலன் அவர்கள் தலைசிறந்த விஞ்ஞான ஆசிரியாராகவும் மாணவர் ஒழுக்கத்தில் மிகவும் கண்டிப்புடனும் பாடசாலையை சிறப்பாக நிர்வகித்தார். இவர் காலத்தில்(1978-1980) சிறப்பாகப் பரிசளிப்பு விழா நடத்தப்பட்டு சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.

12. அதிபர் கவிஞர் காரை செ.சுந்தரம்பிள்ளை அவர்கள் குறுகிய காலத்தில் (1981) அதிபர் பதவியை அணிசெய்தாலும் தனது முத்திரையைப் பதித்தவர். பன்மொழிப்புலமை மிக்க சிறந்த ஆசிரியர். எழுத்தாளர், நாடறிந்த கவிஞருமாவார்.

13. அதிபர் திரு.S.பத்மநாதன் இரு தடவைகள்(1981-1983,1985-1988) இக்கல்லூரியின் அணிசெய் தலைவராகச் சேவையாற்றினார். இவர்காலத்தில் தமிழக அறிஞர்களை அழைத்து பாரதி நூற்றாண்டு விழா நடைபெற்றது. நடாராசா மண்டபத்தில் சரஸ்வதி கருவறை கோயில் முகப்புத் தோற்றம் உருவாக்கப்பட்டது.

14. கல்லூரியில் 25 ஆண்டுகள் அதிபராகவும் பின்னர் வட்டுக்கோட்டைத் தொகுதி நாடளுமன்ற உறுப்பினராகவும் இருந்த கலாநிதி. ஆ.தியாகராஜா அவர்கள் மரணத்திரைக்குள் மறைய அவரின் சேவையைக் கௌரவித்து அப்போதயை அரசாங்கம் 1983 இல் இக்கல்லூரிக்கு கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் எனப் பெயர் மாற்றம் செய்தது.

15. அதிபர் சிவஸ்ரீ A.K சர்மா அவர்கள் 1983-1985 வரை அதிபராகப் பணியாற்றினார். புன்னகையும் வசீகர வாக்கும் கொண்ட இவர் அன்பினால் மாணவரைக் கவர்ந்தார்.

16. அதிபர் திரு.மு.திருநீலகண்டசிவம் அவர்களின் காலத்தில் (1988-1991) இக்கல்லூரி கொத்தணித் தலைமைப் பாடசாலையாக்கப்பட்டது. காரைநகரின் 14பாடசாலைகளின் கொத்தணி அதிபாராக திரு.மு.திருநீலகண்டசிவம் விளங்கினார். பழைய மாணவர் சங்கத்தைப் புனரமைப்புச் செய்து கல்லூரியின் நூற்றாண்டு விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

17. அதிபர் திரு.S.R.S.தேவதாசன் அவர்கள் கல்லூரியின் அதிபராகவும் காரைநகர் பாடசாலைகளின் கொத்தணி அதிபராகவும் சேவையாற்றினார். இவரது காலத்தில்(1991-1993) போர்ச்சூழலில் காரைநகருக்கு வெளியே பாடசாலை இடம்பெயர்ந்து இயங்கவேண்டி நேரிட்டமையால் தளர்வு ஏற்பட்டமை துர்ப்பாக்கியமானதாகும்.

18. கல்லூரியின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை காரைநகர் களபூமியைச் சேர்ந்த திருமதி. தேவநாயகி பாலசிங்கம் பெறுகின்றார். இவர் காலத்தில்(1993-1998) இடம்பெயர்ந்த சூழலில் ஏனைய பாடசாலைகள் போன்று கல்லூரியைத் தளரவிடாது கட்டிக் காத்து 1996 இல் மீண்டும் சொந்த மண்ணில் கல்லூரியை இயங்க வைத்த பெருமை இவரையே சாரும்.

19. அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களின் காலத்தில் (1998-2005)கல்லூரியின் வடக்கு வளாக பௌதிக வளர்ச்சியை தேவைக்கேற்றவாறு திட்டமிட்டு வளப்படுத்தினார். கல்விச்செயற்பாடுகள் வளர்ச்சிப்பாதையில் பயணித்தது. ஆங்கிலக்கல்விக்கும், கணனிக்கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கும,; கல்வியியல் கல்லூரிக்கும் அனுமதி பெற்றனர். கல்லூரி தீவக வலயத்தில் முன்னணிப் பாடசாலையாக விளங்கியது.

20. அதிபர் திரு.கா.குமாரவேலு காலத்தில் (2005-2008) கனிஷ்ட பாடசாலையில் கட்டிடங்களைப் புனரமைத்ததோடு கிணறு அமைக்கப்பட்டு குழாய்நீர் விநியோகம் செய்யப்பட்டது. இவர்காலத்திலும் பரீட்சைப் பெறுபேறுகள் உயர்நிலையில் இருந்தன.

21. அதிபர் திரு.A.குமரேசமூர்த்தி இக்கல்லுரியின் அதிபராக (2008-2010) சேவையாற்றி கல்லூரியை வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்ல முற்பட்டார்.

22. அதிபர் திரு.பொன் சிவானந்தராசா அதிபராகக் கடமையாற்றிய காலத்தில்(2010-2012) கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்துக்கு கனடாவில் கிளை அமைக்கப்பட்டது. இதனால் கல்லூரியின் அபிவிருத்திப் பாதையில் ஒரு ஆதரவுத்தளம் உருவாக்கப்பட்டது.

23.  2012 இல் ஆயிரம் பாடசாலை செயற்றிட்டத்தில் இக்கல்லூரி சேர்வதற்காக இதன் கனிஷ்ட பிரிவாகிய சுப்பிரமணிய வித்தியாசாலை மீண்டும் தனியாக இயங்கும் ஆரம்ப பாடசாலையாகியது.

24. இரண்டாவது பெண் அதிபராகிய திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் கல்லூரியின்125 ஆவது ஆண்டு விழா, நாட்டின் மேதகு ஜனாதிபதி வருகை ஆகிய வரலாற்று நிகழ்வுகளை குறுகிய காலத்தில் எதிர்கொண்டு சிறப்பாக நிறைவேற்றினார். பௌதீக வளவிருத்திகளாக மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடம், பல்லூடக மண்டப விருத்தி, நிறுவுநர் சயம்பு சிலை புனரமைப்பு, துவிச்சக்கரவண்டி தரிப்பிடம், சிற்றுண்டிச சாலை என்பன அமைக்கப்பட்டுள்ளன. கல்லூரி மிகவும் பாதுகாப்பும் அழகும் அமைதியும் ஒழுக்கமும் நிறைந்த சூழலாக மாறியுள்ளது. மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றதுடன் பரீட்சைகளில் சித்திபெறும் சதவீதமும் அதிகரித்துள்ளது. தேசிய பாடசாலைகளுக்கு இணையான ஆளுமை விருத்திச் செயற்பாடுகளிலும் மாணவர்கள் வல்லவர்களாக திகழ்கின்றனர். புலம்பெயர் பழையமாணவர்களின் பார்வை எம் கல்லூரியின் பக்கம் திரும்பியுள்ளது. பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தினால் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்காக 1 மில்லியன் ரூபா நிரந்தர வைப்பிலிடப்பட்டுள்ளமை, கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவுக்காக 1.5 மில்லியன் ரூபா கனடாவில் வதியும் டாக்டர் வி.விஜயரத்தினம் அவர்களால் நிரந்தர வைப்பிலிடப்பட்டுள்ளமை இவற்றுள் குறிப்பிடத்தக்கனவாகும். தீவகவலயத்தில் தொடர்ந்து முன்னணி வகித்துவரும எம்கல்லூரி விரைவில் ஒரு தேசியபாடசாலையாக மிளிரும் என்பதில் ஐயமில்லை.

அறுகுபோல் வேரூன்றி ஆல் போல் தளைத்து காரைநகரின் கலங்கரை விளக்கமாக அறிவொளி வீசும் பழமையும் பாரம்பரியமும் மிக்க இக்கல்லூரியில் பணியாற்றிய நல்லதிபர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்லரென இக்கல்லூரியைத் தேசிய மட்டங்களில் கூட போட்டிபோடக் கூடிய நிலைக்கு மாபெரும் வளர்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளனர்.

மாணவர்களே! உங்கள் வாழ்நாளில் பாடசாலைக் காலம் பொன்னானது. அன்பு, அடக்கம், நேர்மை ஆகிய அணிகலன்களை அணிந்து மாதா, பிதா, குரு, தெய்வத்தை வணங்கி உயர்ந்த எண்ணங்களை எண்ணி விடாமுயற்சியுடன் உழைத்து உங்கள் கல்லூரிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று கனிவாக வேண்டுகின்றேன்.

ஆசிரியர்களே! உங்கள் அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் கற்பித்தலில் உங்களுக்கு உள்ள ஈடுபாடும் இக்கல்லூரியில் பல சாதனைகளை நிலைநாட்டியிருக்கின்றது. மேலும் இவ்வாறு சாதனை படைத்து கல்லூரிக்கு வளஞ்சேர்க்க உங்களை வாழ்த்துகின்றேன். பெற்றோர்களே! பழைய மாணவர்களே! நலன் விரும்பிகளே! நீங்கள் ஒவ்வொருவரும் இக்கல்லூரியை மறவாது உங்கள் ஆதரவை வழங்கி வருவது இக்கல்லூரிக்கு மேலும் வலுச் சேர்க்கின்றது. உங்கள் விலைமதிப்பற்ற ஆதரவினை நான் போற்றுகின்றேன்.

அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களே! குறுகிய காலத்தில் எதிர்பாராத பல சவால்களை எதிர்கொண்டு சாதனைகளை நிலைநாட்டி வருகின்ற உங்கள் ஆற்றலையும் ஆளுமையையும் பாராட்டுகின்றேன். தொடர்ந்து கல்லூரியை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்ல எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பர நடராசப்பெருமானை வேண்டி வாழ்த்துகின்றேன்.

To Thine own self be True.
உனக்கு நீயே உண்மையாய் இரு.

சந்தர்ப்பத்திற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். 
நன்றி 
வணக்கம்.

திருமதி.சிவபாக்கியம் நடராஜா 
ஓய்வுநிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் 
ஆங்கிலத்துறை 
காரைநகர்

அமரர். மார்க்கண்டு பாலசிங்கம் அவர்களின் மறைவு குறித்து கல்லூரி சமூகத்தின் கண்ணீர் அஞ்சலி

எமது கல்லூரியில் 20 வருடங்களிற்கு மேலாக நல்லாசிரியையாக, செயற்றிறன்மிக்க நல்லதிபராக கடமையாற்றிய திருமதி தேவநாயகி பாலசிங்கம் அவர்களின் பாசமிகு கணவர் திரு மார்க்கண்டு பாலசிங்கம் அவர்கள் இறைபதம் அடைந்த செய்தி கேட்டு எம்கல்லூரிச் சமூகம் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

அமரர் மார்க்கண்டு பாலசிங்கம் அவர்கள் மக்கள் வங்கியின் உதவி முகாமையாளராக கடமையாற்றிய காலத்தில் தனது வேலைப் பழுவின் மத்தியிலும் திருமதி தேவநாயகி பாலசிங்கம் அவர்கள் எமது கல்லூரியை திறம்பட நிர்வகிப்பதில் உறுதுணை புரிந்தவர். திருமதி பாலசிங்கம் அவர்கள் எமது கல்லூரியின் முதலாவது பெண் அதிபர் மாத்திரமன்றி, செயற்றிறன்மிக்க துணிச்சலான அதிபர் என்றே கூறலாம். அனைவருடனும் அன்பாகவும், பண்பாகவும், சரளமாகவும் பேசும் பண்புமிக்கவர். அர்ப்பணிப்புமிக்க சேவையாளர். எமது கல்லூரி இடம்பெயர்ந்திருந்த மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் கல்லூரியை மீளவும் சொந்த இடத்திற்குக் கொண்டுவந்து செயற்படுத்துவதில் அயராது உழைத்து வெற்றி கண்டவர். அவ்வகையில் அவருடைய சேவையை கல்லூரிச் சமூகத்தால் என்றென்றும் மறக்க முடியாது. பிற்காலத்தில் அவரது செயற்றிறமையால் பதவி உயர்வு பெற்று உதவிக் கல்விப் பணிப்பாளராக பரீட்சைத் திணைக்களத்தில் கடமையாற்றினார். ஓய்வின் பின்னரும் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் கல்வியியற் துறையில் நிபுணத்துவ ஆலோசகராக பணியாற்றுவது எமது கல்லூரிக்கு பெருமை சேர்க்கின்றது. இத்தகைய பெருமைமிகு எமது கல்லூரியின் முன்னாள் அதிபர் தனது அன்புக் கணவரை இழந்து துன்புற்றிருப்பது கண்டு நாமும் துயரடைகின்றோம்.

அமரர் மார்க்கண்டு பாலசிங்கம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு கல்லூரி சமூகம் சார்பாக கண்ணீர்ப் பூக்களைக் காணிக்கையாக்குவதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

திருமதி வாசுகி தவபாலன்
அதிபர் 
(கல்லூரிச் சமூகம் சார்பாக)

முழுமையான கண்ணீர் அஞ்சலியைக் கீழே காணலாம்.

Tribute from School Mr.Balasingam-page-001

 

காரை இந்து மாணவர்கள் சென்ற கல்விச் சுற்றுலா

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற (காரைநகர் இந்துக் கல்லூரி) மனித மேம்பாட்டுக் கல்வித் தொடரில் இணைந்து கொண்ட 30 மாணவர்களும் அண்மையில் யாழ் நகரின் பிரதான இடங்களிற்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்தனர்.

கல்லூரியில் எட்டு மாதங்களாக நடைபெற்று கடந்த ஏப்பிரலில் நிறைவு பெற்ற மனித மேம்பாட்டுக் கல்வித் தொடரின் பிரதான வளவாளரான திரு.த.மேகநாதன் அவர்கள் இக்கல்விச் சுற்றுலாவிற்கான பிரதான அநுசரணையை வழங்கியிருந்தார். அதிபர் திருமதி.வாசுகி தவபாலன், பகுதித் தலைவர் திரு.தெ.லிங்கேஸ்வரன் ஆகியோரும் இச்சுற்றுலாவில் உடன் சென்றிருந்தனர்.

சுற்றுலாவின் முதல் நிகழ்வாக மாணவர்கள் யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் அமைந்துள்ள சத்திய சேவா நிலையத்திற்குச் சென்று அங்கே நடைபெற்ற கூட்டு வழிபாடுகளில் மாணவர்கள் கலந்து கொண்டதுடன் காரை இந்து மாணவர்களின் “ சேவை ஒரு யோகம்” எனும் நாடகமும் மேடையேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகம், யாழ் பொது நூலகம், யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்கா, யாழ்ப்பாணம் தொடரூந்து நிலையம், யாழ் கோட்டை, யரழ் கச்சேரி, பழைய பூங்கா வீதியிலுள்ள பூங்கா ஆகிய இடங்களையும் சென்று பார்வையிட்டனர்.

அத்துடன் பாடசாலை சமூக நல்லிணக்க செயற்பாடுகளை வலுப்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, அன்றைய தினம் நடைபெற்ற சிங்கள பௌத்தமத பிரதான சமய நிகழ்வான பொசன் பண்டிகையிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளையில், கடந்த ஆண்டில்(2014) விசேட தேவையுடைய மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் திருகோணமலை நகருக்கும், பல்வேறு போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்குமுகமாக மன்னார் திருக்கேதீஸ்வரம், மடு தேவாலயம், சென் சேவியர் மகா வித்தியாலயம், கேரதீவு, சங்குப்பிட்டி ஆகிய இடங்களிற்கும் மாணவர்கள் கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மனித மேம்பாட்டு கல்வி மாணவர்களின் யாழ்நகர சுற்றுலாவின்போது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.

Trip01 Trip02 Trip03 Trip04 Trip05Trip06 Trip07 Trip08 Trip10 Trip11 Trip12 Trip13 Trip14 Trip15 Trip16 Trip17 Trip18 Trip19 Trip20 Trip21

 

மனித மேம்பாட்டுக் கல்வி திறனாய்வு நிகழ்வும் விருதுகள் தினமும்

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் (காரைநகர் இந்துக் கல்லூரி) அண்மையில் மனித மேம்பாட்டுக் கல்வி திறனாய்வு நிகழ்வும் விருதுகள் தினமும் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் தலைமையில் நடாராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.ஜோன் குயின்ரஸ் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடபிராந்திய சத்தியசாயி இணைப்புக் குழுவின் ஆலோசகர் மருத்துவகலாநிதி இ.கணேசமூர்த்தி அவர்களும், மனித மேம்பாட்டுக் கல்வி இணைப்பாளர் திரு.வி.சிவனேசன் அவர்களும், பலவிகாஷ் கல்வி இணைப்பாளர் திருமதி.க.மேகநாதன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

கல்லூரியின் முன்னாள் கணித ஆசிரியை திருமதி.பாலாம்பிகை இராசநாயகம், பிருத்தானியாவிலிருந்து கல்லூரியின் பழைய மாணவர்களான திரு.சுப்பிரமணியம் சர்வானந்தன், திருமதி.சித்திரா சர்வானந்தன் ஆகியோரும் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் கலை நிகழ்வுகளில் மனித மேம்பாட்டுப் பாடல்கள் குழுக்களாகவும், “சேவை ஒரு யோகம்” என்னும் நாடகமும், பேச்சு, கதைகூறல், மற்றும் மாணவர்களின் அநுபவப்பகிர்வும் இடம்பெற்றிருந்தன.

அதிபர் உரை, விருந்தினர்களின் உரையைத் தொடர்ந்து பிரதேசக் கலைஞர்களை கௌரவிக்கும் பொருட்டு மேற்கொண்ட ஆய்வினூடாக இனங்காணப்பட்ட பிரதேச மிருதங்கக் கலைஞர் என்ற வகையில் ஓய்வுநிலை கிராம சேவையாளர் கலாபூசணம் திரு.தி. சண்முகசுந்தரம் அவர்களை ஓய்வுநிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு.த.மேகநாதன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற விருதுகள் வழங்கும் நிகழ்வில் சுற்றாடல் முன்னோடிக்குழு 1, குழு 11 ஆகியனவற்றிற்கு முறையே பச்சை, மஞ்சள் வர்ணப் பதக்கங்களும், சாரணர்களுக்கான பதக்கங்களும் அணிவிக்கபட்டன. சாரணர்கள், St. Johns Ambulance படையணியினர், மற்றும் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மற்றும் போக்குவரத்து ஒழுங்கமைப்புக் குழு, சுகாதாரக்குழு, உற்பத்தித் திறன் விருத்திக் குழு ஆகியனவற்றிற்கான சீருடைகளும் வழங்கப்பட்டன.
மேற்படி விருதுகள் தின நிகழ்வுகளை ஆசிரியர் திரு.இ.இராஜகோபால் சிறப்பாக ஒருங்கமைத்திருந்தார்.

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.

தேசிய மட்டப் போட்டியில் காரை இந்து இரண்டாம் இடம் பெற்று சாதனை

இலங்கை “வாழ்வின் எழுச்சி” திணைக்களத்தினால் சமுர்த்தி பயனாளிகள் குடும்பத்தைச் சேர்ந்த கெக்குல சிறுவர் கழகங்களுக்கிடையில் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட தனிப்பாடல் போட்டியில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலத்தை (காரைநகர் இந்துக் கல்லூரி) சேர்ந்த செல்வி.அமிர்தா ஆனந்தராசா இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

தேசியமட்டத்தில் 2012 ஆம் ஆண்டில் நடைபெற்ற விஞ்ஞான புத்தாக்கப் போட்டியில் கல்லூரி அணியும், 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற கணித ஒலிம்பியாட்போட்டியில் செல்வி.சி.விதுஷா அவர்களும் 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற சிறிலங்கா இளைஞர் தேசிய விருதுப் போட்டியில் செல்வி.அமிர்தா ஆனந்தராசாவும் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளையில் மேற்படி கெக்குல சிறுவர் கழகங்களுக்கிடையில் தேசிய மட்டத்தில் நடைபெற்ற அறிவிப்பாளர் போட்டியில் செல்வன் K.விநோதன்  இவ்வாண்டு பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நீண்ட காலத்திற்கு பின்னர் காரை இந்துவிற்கு கிடைத்த தேசிய மட்ட சாதனையாக மாணவி செல்வி அமிர்தா ஆனந்தராசாவின் சாதனை பதிவாகியிருக்கின்றது.

1990 களின் தொடக்கம் வரை காரைநகரில் வாழ்ந்த மக்கள் தொகையின் ஏறத்தாழ 25 சதவீதமான மக்களே இன்று காரைநகரில் வாழ்ந்து வரும் நிலையில் அன்றைய கல்லூரி மாணவர் தொகையின் 50 சதவீத எண்ணிக்கையிலான மாணவர்களே இன்று எமது பாடசாலையில் கல்வி கற்று வரும் நிலையில் இவ்வாறான தேசிய மட்ட சாதனைகளை வென்று பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்க்கும் மாணவர்கள், சேவையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள்.

சாதனையாளர் செல்வி.அமிர்தாவும் அவருக்கு பயிற்சி அளித்த கல்லூரியின் இசைத்துறை ஆசிரியைகளான திருமதி கலாசக்தி றொபேசன், திருமதி பங்கையற்செல்வி முகுந்தன் ஆகியோரும் கல்லூரியை வழிநடத்திவரும் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களும் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் உரியவர்கள்

காரை இந்துவில் நடைபெற்ற உலக சுற்றாடல் தினமும் மரம் நடுகையும்

pasu

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலத்தில்(காரைநகர் இந்துக் கல்லூரி) அண்மையில் உலக சுற்றாடல் தினம் கல்லூரியின் சுற்றாடல் முன்னோடிக்குழுவின் தலைவர் செல்வன் அ.பிரணவரூபன் தலைமையில் நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக வடமாகாண கல்வித் திணைக்கள சுற்றாடல் ஒருங்கிணைப்பாளர் திரு.K.A.சிவனருள்ராஜா அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட சுற்றாடல் முன்னோடி ஆலோசகர் திரு.பொ.சண்முகதேவன் அவர்களும் கௌரவ விருந்தினராக கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களும் ஓய்வுநிலை மருத்துவ அதிகாரி க.நடராஜா அவர்களும் பிரதேச சுற்றாடல் அலுவலர் திருமதி.வி.கல்யாணி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

இத்தினத்தையொட்டி கல்லூரியின்; ‘சுற்றாடல் முன்னோடிக் குழு’ சுற்றாடலைப் பாதுகாப்போம் சுகமாக வாழ்வோம் என்னும் சத்தியப்பிரமாணத்தை எடுத்துக் கொண்டபின் ‘இயற்கை எனும் அன்னையைத் தேடி” என்னும் நாடகம் உட்பட மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றன. சுற்றாடால் முன்னோடிக்குழுவினால் “பசுமை” என்னும் சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது.

அத்துடன் உலக சுற்றாடல் தினத்தையொட்டி பாடசாலையில் மரம் நடுகை நிகழ்வும் நடைபெற்றது.

கல்லூரியின் ‘சுற்றாடல் முன்னோடிக்குழு’ இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. இக்குழுவிற்கு பொறுப்பாசிரியர்களாக திருமதி.சிவந்தினி வாகீசன், திருமதி.அற்புதமலர் இராஜசிவம் திருமதி.பா.சிவாஜினி ஆகியோர் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் வழிநடத்தலில் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.

மகான் சிவத்திரு ச.அருணாசலம் அவர்களின் புகழ் எண்திசையும் ஒலிக்க காரை இந்துவின் வாழ்த்துக்கள்

Vasuki.T

புண்ணிய பூமியாம் காரையம்பதியின் மைந்தனாகவும், சைவத்தின் விடி வெள்ளியாகவும் இற்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகள் முன் அவதரித்த அருணாசல உபாத்தியாயர் (1864) அவர்கள் சைவத்திற்கும், தமிழிற்கும் ஆற்றிய பணி மகத்தானது என்பதற்கு இன்றும் அவரது சேவை மக்களால் மதிக்கப்படுகின்றது, போற்றப்படுகின்றது என்பது மட்டுமன்றி அவரது பணி காலத்தால் மறையாத அளப்பெரும் சேவையாகக் கொண்டு அவரது வாழ்க்கை வரலாற்றையும், மாண்புமிகு சேவைகளின் பெருமைகளையும் தாங்கிய அல்வாய் திரு. சி. கணபதிப்பிள்ளை ஐயர் அவர்கள் எழுதிய “சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு. ச அருணாசலம் அவர்கள்” எனும் நூலின் இரண்டாம் பதிப்பை புலம்பெயர் தேசங்களில் வாழும் காரை மக்கள் ஒன்று கூடி கனடா சைவ சித்தாந்த மன்றத்தால் வெளியிடுவதனூடாக அறியக் கூடியதாக உள்ளது.

இன்று எமது சைவமும் தமிழும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தென்றால் எம் மக்கள் மத்தியில் வாழ்ந்து மறைந்த நாவலர் பெருமானின் மகத்தான சேவையாகக் கருதலாம். அதனால் சமயகுரவர்கள் நால்வர்களுக்கு மேலாக ஜந்தாவது குரவராக நாவலர் பெருமான் போற்றப்படுகின்றார். அவ்வகையில் நாவலர் பெருமானின் வாழ்வியல் நெறிப்படுத்தலினாலும், அவரின் மேற்கொண்டுள்ள அளவிலாப் பக்தியினாலும் கவரப்பெற்ற காரையூர் அருணாசல உபாத்தியாயர் நாவலரின் பணியை தன்வாழ்நாளில் தொடர்ந்தார். தனது இளம் வயதிலேயே (இருபதுகளில்) தன்னலம் கருதாது சைவத்திற்கும், தமிழிற்கும் ஏற்படும் பாதிப்பு கண்டு விழித்தெழுந்தார். அந்நியராட்சிக் காலத்தில் மக்கள் ஆங்கிலக் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக் காரணமாக மதம் மாற்றப்படுவதை எதிர்த்தார். தாய் மொழியாம் செம்மொழியாகிய தமிழிற்கு ஏற்படும் அநீதி கண்டு மனம் கொதித்தார்.

அருணாசல உபாத்தியாயர் என்ற மாமனிதரின் அன்றைய விழிப்பு, பல பிரதேசங்களிலும் சைவப் பாடசாலைகள் தோற்றம் பெறுவதற்கு காரணமாக அமைந்ததுடன், சைவம் தழைத்தோங்கவும் வழிசமைத்தது எனலாம். இதற்காக அவர் தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்தார். கால் நடையாக ஊர் ஊராகச் சென்று கிராமங்கள் தோறும் சைவப் பள்ளிகளைத் தோற்றுவிப்பதிலும், சைவ ஆசிரியர்களை உருவாக்குவதற்காக ஆசிரிய கலாசாலையை நிறுவுவதிலும் தனது முழுக் கவனத்தையும் செலுத்தினார். அவர் பெரும் பொருள் படைத்த செல்வந்தர் அல்ல. அவருடைய மனஉறுதி, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு என்பன, தான் கொண்ட குறிக்கோளை அடைவதற்கு காரணமாகியது.

அவரது மகத்தான சேவைகளைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் பல சைவப் பாடசாலைகளில் எம் கிராமத்தின் மத்தியில் நூற்றாண்டுகள் கடந்து தலைநிமிர்ந்து நிற்கும் பாடசாலைகளைக் குறிப்பிடலாம். வியாவில் சைவ வித்தியாசாலை, சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகியன சைவத்தையும், தமிழையும் போதிக்கும் பாடசாலைகளாகவும், திருஞானசம்பந்தர் வித்தியாலயம் என அழைக்கப்பட்ட இன்றைய கலாநிதி ஆ. தியாகராசா ம.ம.வி.(காரைநகர் இந்துக் கல்லூரி) சைவத்தையும், ஆங்கிலக் கல்வியையும் போதிக்கும் பாடசாலையாகவும் உருப்பெற்றது.

இத்தகைய மகத்தான சேவையாளன் காரை மண்ணின் மைந்தனாக அவதரித்தமை எமது மண்ணிற்கு பெருமை சேர்க்கின்றது. 1864-1920 காலப்பகுதியில் வாழ்ந்த இவரது சேவைகளைப் போற்றி எமது மக்கள் இரண்டாம் பதிப்பாக இந்நூலை வெளியிடுவது கண்டு மனமகிழ்வடைகின்றேன். ஒருவர் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்பது முக்கியமல்ல அவர் எப்படி வாழ்ந்தார், அவர் சமூகத்திற்கு விட்டுச் சென்றவை எவை என சிந்திக்கும் போது மகான் அருணாசலம் அவர்களின் சேவை ஞாலத்தில் மாணப் பெரிது என்பதைப் பறைசாற்றுவதாக இந்நூல் வெளியீடு அமைந்துள்ளது. இந்ந}ல் வெளியீடானது அவருடைய சேவையைப் போற்றுவது மட்டுமன்றி, இன்றைய சமூகத்தினருக்கு வாழும் வழியைக் காட்டும் மகத்தான நூலாகக் கருதுகின்றேன். 

அவ்வகையில் இரண்டாம் பதிப்பாக வெளிவரும் இந்நூல் சிறப்புற வாழ்த்துகின்றேன். இந்நூலை வெளியிட சிந்தித்த கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் சிந்தனை, செயல்வடிவம் போற்றுதற்குரியது. இந்நூல் வெளியீட்டினூடாக பெருமகன் அருணாசலம் அவர்கள் இன்றும் எம்மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பதை உணர வைத்துள்ளது. அவ்வகையில் சைவ சித்தாந்த மன்றத்தினருக்கு மாமனிதர் சிவத்திரு.அருணாசலம் அவர்களின் எண்ணக்கருவுலத்தினூடாகத் தோற்றம் பெற்ற பாடசாலையான காரை இந்துக் கல்லூரியின் அதிபர் என்ற வகையில் மன நிறைவான வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றேன். இந்நூல் வெளியீடு சிறப்புற அமைய ஈழத்துச் சிதம்பர தில்லைக் கூத்தனின் அருளாசியை வேண்டி வாழ்த்துகின்றேன்.


                                                                            நன்றி

திருமதி வா.தவபாலன்

அதிபர்

யா/கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து தேசிய மட்டத்திலான முப்பாய்ச்சல் போட்டிக்குத் தெரிவான சி.கோகுலனுக்குப் பாராட்டு

 

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து தேசிய மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகிய செல்வன். சிவசக்திவேல் கோகுலன், செல்வி.A.அமிர்தா, செல்வன்.K.விநோதன் ஆகியோருக்கான பாராட்டு விழா 14.07.2015 அன்று கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.ஜோன் குயின்ரஸ் அவர்களும், சிறப்பு விருந்தினராக காரைநகர் கோட்டக் கல்விப்பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களும் கௌரவ விருந்தினராக கல்லூரியின் முன்னாள் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திரு.அ.ஜெகதீஸ்வரன் அவர்களும் பழைய மாணவர் சங்கச் செயலாளர் திரு.கணபதிப்பிள்ளை நிமலதாசன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வில் சமூக ஆர்வலர் திரு.செல்லையா கங்காதரன் அவர்களும் கோட்டக்கல்விப்பணி மனை அலுவலரும் விளையாட்டுத்துறை ஆர்வலருமாகிய திரு.சிவகுரு பிரபாகரன் அவர்களும் பெற்றோர்களும் மாணவர்களும் சமூகமளித்திருந்தனர்.

வட மாகாண பாடசாலைகளுக்கிடையே நடைபெற்ற மெய்வல்லுநர் திறனாய்வு – 2015 நிகழ்வில் 19 வயது ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வன்.சிவசக்திவேல் கோகுலன் 12.91M நீளம் பாய்ந்து இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்திருந்தார். இவர் தேசிய மட்டத்தில் நடைபெறும் மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வில் பங்குபற்றுவதற்குத் தெரிவாகியிருந்தார். 

அத்துடன் செல்வன் K.விநோதன் யாழ் மாவட்டபாடசாலைகளுக்கிடையே சமுர்த்தியினால் நடத்தப்பட்ட அறிவிப்பாளர்களுக்கான போட்டியில் முதாலம் இடம் பெற்றும் செல்வி. A.அமிர்தா யாழ் மாவட்டப் பாடசாலைகளுக்கிடையே சமுர்த்தியினால நடத்தப்பட்ட தனிப்பாட்டு போட்டியில் முதலாம் இடம் பெற்றும் தேசிய மட்டத்திலான போட்டிக்குத் தெரிவாகியிருந்தனர். 
தேசிய மட்டத்தில் நடைபெறும் போட்டிகளில் பங்குபற்றுவதற்குத் தெரிவாகிய கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தைச் சோந்த மேற்படி மூன்று மாணவர்களுக்குமான பாராட்டு நிகழ்வே அண்மையில் கல்லாரியில் நடைபெற்றிருந்தது.

பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் சார்பிலும் பாராட்டுப் பரிசு வழங்கப்பட்டது. 

சாதனை படைத்து எமது ஊருக்கும் தமது பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவர்களும் விiளாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திரு. திரு. இன்னாசிமுத்து. அன்ரன்விமலதாஸ் அவர்களும் மற்றும் தனிப்பாட்டு அறிவிப்பாளர் பயிற்சி வழங்கிய ஆசிரியர்களும் ஆதாரமாக இருந்து வழிநடத்தி வரும் அதிபரும் பராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் உரியவர்கள். 

நிகழ்வில எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.  

தேசிய மட்டப்போட்டிகளுக்குத் தெரிவாகி கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய மூன்று மாணவர்கள் சாதனை

gold_medals

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் மாவட்ட மட்ட, மாகாண மட்டப் போட்டிகளில் வெற்றி பெற்றுத் தேசிய மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளனர். 


மாகாணப் பாடசாலைகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டியில் செல்வன். S.கோகுலன் 19 வயதிற்குக் கீழ்ப்பட்ட முப்பாய்ச்சல் போட்டியில் 2ஆவது இடம் பெற்று தேசிய மட்டத்திலான போட்டிக்குத் தெரிவாகியுள்ளார். 


செல்வன் K.விநோதன் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கிடையே சமுர்த்தியினால் நடத்தப்பட்ட அறிவிப்பாளர்களுக்கான போட்டியில் முதாலம் இடம் பெற்று தேசிய மட்டத்திலான போட்டிக்குத் தெரிவாகியுள்ளார். 


செல்வி. A.அமிர்தா யாழ் மாவட்டப் பாடசாலைகளுக்கிடையே சமுர்த்தியினால நடத்தப்பட்ட தனிப்பாட்டு போட்டியில் முதலாம் இடம் பெற்று தேசிய மட்டத்திலான போட்டிக்குத் தெரிவாகியுள்ளார். 


இதேவேளையில், செல்வி. S.புருசோத்தமி வடமாகாண மட்டத்தில் நடத்தப்பட்ட பண்ணிசைப் போட்டியில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார். 


வெற்றி பெற்ற மாணவர்களும் பயிற்றுவித்த ஆசிரியர்களும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் உரியவர்கள்

 

யா/கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் 2014ம் கல்வியாண்டிற்கான அதிபரின் பரிசில்தின அறிக்கை

p.g.101ST

2014ம் கல்வியாண்டிற்கான அதிபரின் பரிசில்தின  அறிக்கை

 

நூற்றாண்டு கடந்து கல்விப்பணியாற்றி வரும் யா/கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் தனது 127 ஆவது ஆண்டு அகவையை பூர்த்தி செய்து பூரித்து நிற்கும் இந்நன்னாளிலே 2014ம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழாவைக் கொண்டாடுவதில் மட்டற்ற மகிழ்வடைகின்றேன்.

இந்நன்னாளிலே மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி கௌரவிக்க, பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கும் பெருமதிப்புக்குரிய யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட வாழ்நாள் பேராசிரியர் வைத்திய கலாநிதி திரு சி. வை. பரமேஸ்வரன் அவர்களே! சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ள தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் திரு. தி. ஜோன் குயின்ரஸ் அவர்களே! கௌரவ விருந்தினராக கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கும் வடமாகாண ஓய்வு நிலை மாகாணக் கல்விப்பணிப்பாளர் திரு ஆ. ராசேந்திரன் அவர்களே, நிறுவுநர் நினைவுப் பேருரையை ஆற்ற வருகை தந்திருக்கும் ஓய்வுநிலை உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி சி. நடராசா அவர்களே,

காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்னேஸ்வரன் அவர்களே,

தீவக வலயக்கல்விப்பணிமனையைச் சார்ந்த கல்வி அதிகாரிகளே,

ஓய்வு நிலை அதிபர்களே,

அயற்பாடசாலைகளின் அதிபர்களே, ஆசிரியர்களே,

எமது பிரதேசத்திலுள்ள நிறுவனங்களின் தலைவர்களே,

பாடசாலை அபிருத்திச்சங்க உறுப்பினர்களே,

பாடசாலை அபிருத்திக்குழு உறுப்பினர்களே,

பழையமாணவர் சங்க உறுப்பினர்களே,

பெற்றோர்களே, நலன்விரும்பிகளே,

எனது அன்பான ஆசிரியர்களே,

கல்விசாரா ஊழியர்களே,

அன்புநிறை மாணவச்செல்வங்களே,

உங்கள் அனைவருக்கும் அன்பான இனிய வணக்கங்களைக் கூறிவரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

இன்றைய பரிசளிப்பு நன்னாளில் எமது மாணவச்செல்வங்களுக்கு பரிசில்களை வழங்கிப் பாராட்ட வருகை தந்திருக்கும் காரை மண்ணின் மைந்தனும் முன்னாள் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடப் பீடாதிபதியுமான வாழ்நாள் பேராசிரியர் வைத்திய கலாநிதி திரு சி. வை . பரமேஸ்வரன், பணிப்பாளர் Human Resources & Training, Northern Centerl Hospitals Pvt. Ltd. அவர்கள் முதன்மை விருந்தினராக வருகை தந்தமையால் எம் கல்லூரி அன்னை பெருமை அடைகின்றாள. நீங்கள் உடற்கூற்றியல் துறையில் முதுவிஞ்ஞானமாணிப் பட்டத்தiயும், கலாநிதி பட்டத்தையும் பெற்று உடற்கூற்றியல் சிரேஸ்ட விரிவுரையாளராகவும், மருத்துவ பீட பீடாதிபதியாகவும், ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம், கிழக்கு இலங்கை பல்கலைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளராகவும், யாழ் பல்கலைக்கழகத்தில் பதில் துணைவேந்தராகவும் அதியுன்னத பதவி வகித்துள்ளீர்கள். கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவ பட்டப்பின் படிப்புகள் துறையின் முகாமைத்துவ குழுவின் அங்கத்ததுவராகவும் செயற்பட்டதுடன,  மருத்துவ கல்வி அலகின் பாடத்திட்ட குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளீர்கள.; மேலும் யாழ் பல்கலைக்கழக ஆளணிவள மேம்பாட்டுத் தலைவராகவும் பணியாற்றியதுடன் தங்களுடைய சேவைக் காலத்தில் பொதுநலவாய நாடுகளின் புலமைப்பரிசில் IBRO  Fellowship, WHO Fellowship போன்ற புலமைப்பரிசில்களையும் பெற்றுள்ளீர்கள். ஓய்வின் பின்னரும் மருத்துவ விஞ்ஞானம்PATHE Academy  கொழும்பு பீடாதிபதியாகவும், Para Medical studies, வெற்றிவேல் ஞாபகார்த்த பணிப்பாளராகவும் கடமையாற்றும் நீங்கள் மருத்துவ உலகின் சிகரமாக திகழ்வது கண்டு எமது காரை மண் பெருமை கொள்கிறது. நீங்கள் மட்டுமின்றி உங்கள் பிள்ளைகளான Dr.P.ஆனந்தன் Dr.A.சியாமளா ஆகியோரும் மருத்துவத் துறையில் கால் பதித்து சேவையாற்றுவது மனமகிழ்வைத் தருகின்றது. உங்கள் கரங்களால் எமது கல்லூரி மாணவர்கள் இன்றைய பரிசில் தின நன்நாளில் பரிசில்களை பெறும் பேறு பெற்றுள்ளார்கள். இன்றைய நாளில் எமது மாணவர்களுக்கு பரிசில் வழங்கி கௌரவிக்க வருகை தந்தமையையிட்டு நன்றிகளை தெரிவிப்பதோடு, தாங்கள் பல்லாண்டு காலம் சிறப்புடன் வாழ எமது கல்லூரிச் சமூகம் சார்பாக வாழ்த்துகின்றேன்.

தீவகக் கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளரும், தீவக மண்ணின் மைந்தனுமான பெரு மதிப்பிற்குரிய திரு. தி .ஜோன் குயின்ரஸ் அவர்களே! இவ்விழாவிற்கு நீங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பிப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். கலைப்பட்டதாரியான தாங்கள் கல்வியியல், பண்பாட்டியல், தமிழ் போன்ற துறைகளில் முதுகலைமாணிப் பட்டங்களைப் பெற்று சிறந்த கல்விமானாக உங்களை உயர்த்திக் கொண்டீர்கள். உங்களின் திறமையினால் ஆசிரியராக, விரிவுரையாளராக கடமையாற்றினீர்கள். கல்வி நிர்வாக சேவைக்கு பதவி உயர்த்தப்பட்ட நீங்கள் பின் தீவகக் கல்வி வலயத்தில் மாணவர் அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் பிரிவிற்கான பிரதிக்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றினீர்கள். உங்களின் சேவைத்திறமையால் தீவகக் கல்வி வலயத்தின் வலயகல்விப்பணிப்பாளராக பதவி உயர்த்தப்பட்டு தீவகச் சிறார்களின் கல்வி வளர்ச்சிக்கு அளப்பரிய சேவையை வழங்கி வரும் நீங்கள் இன்றைய பரிசில் தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிப்பதில் எம்கல்லூரிச் சமூகம் பெருமகிழ்வடைகின்றது. உங்களின் இக் கல்விப்பணி எமது தீவக வலயத்தின் உயர்ச்சிக்கு உறுதுணையாக அமைவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

அன்புக்கும் பெரு மதிப்பிற்கும் உரிய ஓய்வுநிலை வடமாகாணக் கல்விப்பணிப்பாளர் திரு. ஆறுமுகம் ராஜேந்திரன் அவர்களே எம்கல்லூரியின் வரலாற்றுப் பெருமைமிக்க பரிசில்தினவிழாவில் தாங்கள் 37 ஆண்டுகள் கல்விச்சமூகத்திற்காக ஆற்றிய அளப்பெரும் பணியை மதித்து தங்களின் 60ஆவது அகவையில் தங்களை கௌரவிப்பதில் எமது கல்லூரிச் சமூகம் பெருமகிழ்வடைகின்றோம். நீங்கள் தீவக மண்ணிற்கும், வடமாகாணக் கல்விச் சமூகத்திற்கும் ஆற்றிய பணி மகத்தானது, போற்றுதற்குரியது. கலைமாணிப்பட்டத்தையும், கல்விமுதுமாணிப் பட்டத்தையும் பெற்ற நீங்கள் 1977ம் ஆண்டு இலங்கை ஆசிரிய சேவையில் இணைந்து கொண்டீர்கள். நீங்கள் ஆசிரியராக நு/கோல்புறூக் தமிழ் வித்தியாலயத்தில் முதல் நியமனத்தைப் பெற்று தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி, பின் யா/கட்டைவேலி மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் அதிபராகவும் கடமையாற்றினீர்கள். இக்காலத்தில் கல்விநிர்வாகசேவைக்கு தெரிவு செய்யப்பட்டு 1990ம் ஆண்டில் வடமராட்சிக் கல்வி வலயத்தில் கல்வி நிர்வாகப் பிரிவு உதவிக்கல்விப்பணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றுச் சென்றிPர்கள். தொடர்ந்து கோப்பாய்க் கோட்டக் கல்விப் பணிப்பாளராகவும், வடமராட்சி, யாழ்ப்பாணக் கல்விவலயங்களில் பிரதிக் கல்விப்பணிப்பாளராகவும் பின் தீவகம், வலிகாமம் கல்விவலயங்களில் வலயக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றினீர்கள். அதன் பின்னர் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளராகவும் சிறப்பாகப் பணியாற்றிய காரணத்தால் வடமாகாணக்கல்விக் கூடங்களின் சிகரமான மாகாணக் கல்வித் திணைக்களத்தின் மாகாணக்; கல்விப்பணிப்பாளராகவும் செவ்வனே கடமையாற்றி 2015 மார்ச் 15ஆம் நாள்60ஆவது அகவையில் சேவையிலிருந்து ஓய்வு பெற்றீர்கள். தீவகக் கல்வி வலயத்தில் வலயக் கல்விப் பணிப்பாளராகவும், வடமாகாணக கல்வித் திணைக்களத்தில் மாகாணக்; கல்விப் பணிப்பாளராகவும்; நீங்கள் பணியாற்றிய காலம் எமது பொற்காலமாகக் கருதுகின்றோம். உங்களின் சுறுசுறுப்பும், கடமையுணர்வும் எம்எல்லோரதும் பணிக்கு நல்வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. உங்களின் ஓய்வுக்காலத்தில் அன்பு மனைவி சறோஜினி ராஜேந்திரன் (நெல்லியடி மத்திய கல்லூரி ஆசிரியர்) அவர்களுடனும், பாசமிகு பிள்ளைகள் திருமதி கீர்த்தனா திவாகர் (பேராதனைப்பல்கலைக் கழக விஞ்ஞானப் பட்டதாரி), மற்றும் செல்வி சகானா ராஜேந்திரன் (வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி மாணவி) ஆகியோருடனும் மகிழ்வுடன் பல்லாண்டு காலம் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றோம்.

பாடசாலை விபரம்

1AB தரத்தைச் சேர்ந்த 1000 பாடசாலை வகுதிக்குட்பட்ட தரம் 6-13 வரையான வகுப்புகளைக் கொண்ட காரைநகர்ப் பிரதேசத்தின் வளம்மிக்க ஓர் பாடசாலையாகவும் தீவகக் கல்வி வலயத்தின் முதன்மைப் பாடசாலையாகவும் திகழ்கின்றது. கனிஷ்ட இடைநிலை வகுப்புகளில் 3 சமாந்தர வகுப்புகளையும், உயர்தரத்தில் கலை, வர்த்தகம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் தொழினுட்பப் பாடத்துறைகளையும் கொண்டு சிறப்பாக இயங்குகின்றது.

ஆளணி விபரம்

1. மாணவர் விபரம்

தரம் 6-13 வகுப்பு வரை கனிஸ்ட இடைநிலைப்பிரிவில் 297 மாணவர்களும், சிரேஸ்ட இடைநிலைப் பிரிவில் 268 மாணவர்களுமாக மொத்தம் 565 மாணவர்கள் கற்றனர்.

2. ஆசிரியர் விபரம்

2014ஆம் ஆண்டில் 38 ஆசிரியர்கள் இக்கல்லூரியில் மிகச் சிறப்பாகக் கடமையாற்றினார்கள். இவர்களில், 02 முதுதத்துவமானி, 01 முதுவிஞ்ஞானமானி, 01 முதுகல்விமானி;, 02 முதுகலைமானி பட்டஆசிரியர்களும், 03 கலைமாணி, 04 விஞ்ஞானமானி, 05 வணிகமானி, 06 நுண்கலைமானி பட்டம் பெற்ற ஆசிரியர்களும், 5 தேசிய கல்வியியல் டிப்ளோமா ஆசிரியர்களும, 9 விசேட பயிற்சி ஆசிரியர்களும் உள்ளனர்.

இவர்களில் 2014 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிக்குள் 4 ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர் அவர்களின் விபரம்,

இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்கள்

திரு.ந.விஐயகுமார் – உபஅதிபர்

திருமதி ச. உலககுருநாதன் – தமிழ்

திருமதி சாமினி சிவராஜ் – சுகாதாரம்

திரு வே சிவனேசன்; – நூலகர்

இவர்கள் இப் பாடசாலையில் பணியாற்றிய காலத்தில் அர்ப்பணிப்புடன் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார்கள். திரு.ந.விஜயகுமார் உப அதிபராகப் பணியாற்றிய காலத்தில் மிகவும் அர்ப்பணிப்புடன் தனது முகாமைத்துவப் பணிகளை ஆற்றினார். அலுவலகம் மற்றும் பாடசாலை வளாகம் 5ளு முறைக்குட்படுத்துவதில் அவருடைய செயற்றிறன் அளப்பரியதாகக் காணப்பட்டது. அவரிடம் வழங்கப்படும் எப்பணியாக இருப்பினும் அவற்றை மிகவும் சிறப்பாகவும் குறித்த நேரத்திலும், செம்மையாகவும், நிறைவேற்றும் பண்புமிக்கவர். தாமாக முன்வந்து கடமைகளை நிறைவேற்றுவார். முகாமைத்துவக் கடமைகளுடன் நின்றுவிடாது கற்பித்தற் பணியையும் மாணவர்கள் எளிதில் விளங்கக் கூடியவகையில் விளக்கும் ஆற்றல் அவரிடம் காணப்பட்டது. நீங்கள் ஆற்றிய சேவைக்கு கல்லூரி சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். சென்ற இடங்களில் சிறப்பாகப் பணியாற்றி பல்புகழ்களையும் பெற வாழ்த்துகின்றேன்.

திருமதி ச உலககுருநாதன் பாலாவோடை இ.த.க.பா. யின் அதிபராகப் பதவியேற்று சிறப்பாகப் பணியாற்றி வருகின்றார். அவர் இப்பாடசாலையில் கற்பித்த காலத்தில் மெல்லக் கற்கும் மாணவர்கள் தொடர்பில் அதிக அக்கறை கொண்டவராகக் காணப்பட்டார். தமிழ்ப் பாடத்துடன் வழிகாட்டல் ஆலோசனை சேவைப் பொறுப்பாசிரியராகவும் பொறுப்பேற்று கடமையை சிறப்புற மேற் கொண்டார். திருமதி சா. சிவராஜ் அவர்கள் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றியதுடன் வருடாந்த விளையாட்டுவிழாவை சிறப்பாக ஒழுங்குபடுத்தி செயற்படுத்தி வந்ததுடன் மட்டுமல்லாது, மாணவர்களை மெய்வல்லுநர், உள்ளக விளையாட்டு, பெருவிளையாட்டுகளிலும் பயிற்சிகளை வழங்கி வலய மட்டம், மாகாணமட்டங்களில் பங்குபற்றச் செய்து பல சாதனைகளை பாடசாலைக்குப் பெற்றுத் தந்துள்ளார். அவ்ஆசிரியரையும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகி;ன்றேன். திரு வே. சிவனேசன் அவர்கள் நூலகப் பொறுப்பாசிரியராகவும், உயர்தர மாணவர் ஒன்றியப் பொறுப்பாசிரியராகவும் செயற்பட்டுவந்தார். அவ்ஆசிரியரும் சென்ற இடங்களில் சிறப்பாகப் பணியாற்ற ஆண்டவன் அருள்புரிவாராக.

திரு.த.பரமசாமி ஆய்வுகூட உதவியாளராக 10 வருடங்களுக்கு மேலாக மிகச் சிறப்பாக அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். அலுவலக உதவியாளர் இல்லாத நிலையிலும் அக்கடமையையும் இணைத்து மேற்கொண்டார். அவர் தனது ஓய்வுக்காலத்தில் நோய்நொடியின்றி சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றேன்.

புதிதாக இணைந்து கொண்ட ஆசிரியர்கள்

2014 ஆம் ஆண்டில் எமது பாடசாலைக்கு 08 ஆசிரியர்கள் புதிதாக இணைந்து கொண்டனர். இவர்களில்

1. திருமதி.தயாழினி, ஜெயக்குமார் – வர்த்தகப் பட்டதாரி

2. திருமதி புஸ்பரஞ்சினி கம்சன் – வர்த்தகம் விசேட பயிற்சி

3. செல்வி சிவரூபி நமசிவாயம ; – சைவசமயம் விசேட பயிற்சி

4. திருமதி கவிதா சந்திரமோகன் – வரலாறு விசேட பயிற்சி

5. திருமதி சந்திரகலா தவசீலன் ;- சங்கீதம்-(தே.க.டிப்)

6. திரு இராசரத்தினம். வசிகரன் – சித்திரம் விசேட பயிற்சி (ப.நே)

7. திரு. இன்னாசிமுத்து. அன்ரன்விமலதாஸ் – உடற்கல்வி விசேட பயிற்சி

8. திருமதி. உஷா. யோகேந்திரன் – ஆங்கிலம்(தற்காலிக இணைப்பு)

புதிதாக எமது கல்லூரிக் குடும்பத்தில் இணைந்து கொண்ட இவ்வாசிரியர்களை வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்வடைகின்றேன்.

2014 ஆம் ஆண்டில் எமது கல்லூரி ஆசிரியர் திருமதி பி.தனம் கல்வி முதுமாணிப்பட்டத்தைப் பெற்று தனது வாண்மைத் தகைமையை வளர்த்துக்கொண்டார். அவரையும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன்.

கல்விசாரா ஊழியர்கள்

திரு. ஆ. தியாகலிங்கம் பாடசாலை இரவு நேரக் காவலாளியாகவும், திரு.ஐ.அமுதினகுமார் பகல் நேரக் காவலாளியாகவும் திரு. மு. சிவனேஸ்வரன் சுகாதாரத் தொழிலாளியாகவும் கடமை புரிந்தனர். எமது பாடசாலைக்கு அலுவலகப் பணியாளர் இல்லாத நிலைமையிலும் திரு.த.பரமசாமி, திரு. மு. சிவனேஸ்வரன் ஆகியோர் தமது கடமைகளுடன் அலுவலகப் பணியாளர் கடமைகளையும் இணைத்து நிறைவு செய்தனர். அவ்வகையில் இவர்களின் கடமையுணர்வையும் அர்ப்பணம் மிக்க சேவையையும் இச்சமயத்தில் பாராட்டுகின்றேன்.

இவர்களுடன் கல்விசாரா ஊழியர்களாக தற்காலிகமாக இணைந்து கொண்ட,

திரு.ஐ.அமுதினகுமார்

திரு.ம.மயூரன்

திருமதி பி.குருதர்சினி ஆகியோரையும் வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்வடைகின்றேன்

இவர்களுடன் எமது பாடசாலையின் பழைய மாணவியான செல்வி சி. அமுதா அலுவலக முகாமைத்துவ உதவியாளருக்கான கடைமைகளைச் சிறப்பாக ஆற்றி வருந்தார். செல்வி சோபனா, மற்றும் செல்வி யோ.கஜந்தினி தேசிய தொழிற்பயிற்சி நி;லையத்தில் பயிற்சியை முடித்தபின் 6 மாதங்கள் எமது பாடசாலையில் பயிலுநராகக் கடமையாற்றினாரகள்;. செல்வி யோ. கஜந்தினி பல்லூடக அறை உதவியாளராகவும், செல்வி விம்சியா நூலக உதவியாளராகவும் கடமையாற்றினார்கள். இவர்களுடைய தன்னலமற்ற சேவையையும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன்.

பௌதிகவளம்

தேவையான பௌதிக வளங்களை தன்னகத்தே கொண்ட வளம்மிக்க பாடசாலையாகும்.

1. பிரார்த்தனை மண்டபம்

2. அழகியல்பாட அறைகள்( நடனம், நாடகம், சித்திரம், சங்கீதம்)

3. விஞ்ஞான ஆய்வு கூடங்கள்( பௌதிகவியல், இரசாயனவியல், உயிரியல், பொது விஞ்ஞானம்)

4. பல்லூடக அறை – பல்லூடக எறியி, மேந்தலை எறியி, வழுக்கி எறியி, தொலைக்காட்சிப் பெட்டி, கணனி, ரேடியோ ஆகிய இலத்திரனியல் உபகரணங்களைக் கொண்டுள்ளது.

5. செயற்பாட்டறை

6. டியிற்றல் நூலகம் 

7. நூலகம் – 6235 வரையிலான புத்தகங்களைக் கொண்டுள்ளது.

8. புவியியல் அறை

9. மஹிந்தோதய தொழினுட்ப ஆய்வுகூடம் ( கணிதம், மொழி, த.தொ.நு, நனச அறைகளைக் கொண்டுள்ளது)

10. வியைளாட்டு மைதானம் 

போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளது. இவ்வளங்கள் யாவும் முழுமையாக மாணவர்களின் கற்றல் – கற்பித்தற் செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.

பாடவிதான செயற்பாடுகள்

2014இல் கல்வித் திணைக்களத்திடமிருந்து பெறப்பட்ட நிதியின் மூலம் மாணவர்களுக்கான விசேட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 2014ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதரத்தில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 43.4% மாணவர்கள் க.பொ.த உயர்தரம் கற்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில் நாடகமும் அரங்கியலும, நடனம், புவியியல் ஆகிய பாடங்களில் 100% சித்தியையும், தமிழ், சைவசமயம், வணிகக்கல்வி, தகவல்தொழினுட்பம, சகாதாரமும் உடற்கல்வியும் ஆகிய பாடங்களில் 80% தத்திற்கு மேற்பட்ட சித்தியும் பெற்றுள்ளார்கள். கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், குடியுரிமைக் கல்வி, சங்கீதம் ஆகிய பாடங்களில் கட்ந்த வருடத்திலும் சித்தி வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. 2014ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 72.3% மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெறத் தகுதி பெற்றுள்ளார்கள். கலை, வர்த்தகத் துறைகளில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய 13பாடங்களில்; இந்துநாகரிகம், சங்கீதம், சித்திரம், நடனம், நாடகமும் அரங்கியலும்இ வரலாறு, மனைப்பொருளியல், வணிகம், கணக்கியல் ஆகிய 9 பாடங்களில்100% சித்திகளை பெற்றுள்ளனர். இவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர்களை இச் சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன்.

பொதுப்பரீட்சைகளின் பெறுபேறு

8A, B எனும் சிறப்பு பெறுபேற்றை க.பொ.த சாதாரண தரத்தில் செல்வன் தியாகராசா பார்த்தீபன் எனும் மாணவன் பெற்றுக் கொண்டார். க.பொ.த. உயர்தரத்தில்; கலைப்பிரிவில் செல்வி கிருஸ்ணமூர்த்தி சிவநிறஞ்சனா 2A ,C எனும் பெறுபேற்றையும், செல்வி ரேணுகா.கதிரமலை A, 2B எனும் பெறுபேற்றையும் வர்த்தகப்பிரிவில் செல்வி கனகரட்ணம் பானுஜா 2A  B பெறுபேற்றைப்பெற்று மாவட்டமட்டத்தில் 17ஆம் இடத்தையும் பெற்றுள்ளார். இவர்களையும் கற்பித்த ஆசிரியர்களையும் இச்சந்தர்ப்பத்திலே பாராட்டுகின்றேன. அத்துடன் இவ் வருடம் ஆறு மாணவர்கள் கலைத்துறை மற்றும் நுண்கலைத் துறைக்கு தெரிவாகி பல்கலைக்கழகம் சென்றுள்ளார்கள்.

இணைப்பாடவிதானச் செயற்பாடுகள்

1. விளையாட்டுத்துறை

எமது கல்லூரியின் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் விளையாட்டுத் துறைகாத்திரமான சாதனைகளைப் புரிந்து வருகின்றது. உதைபந்தாட்டம், பூப்பந்து;, கரப்பந்து, வலைப்பந்து, கபடி, சதுரங்கம், எல்லே போன்ற பெருவிளையாட்டுக்களிலும், மெய்வல்லுநர் நிகழ்வுகளிலும் கோட்ட, வலய, மாவட்ட, மாகாண நிலைகளை தனதாக்கிக் கொள்ளுமளவிற்கு உன்னத வளர்ச்சி பெற்றுள்ளது. வருடாந்த விளையாட்டுவிழா திருமதி சா.சிவராஐ; ஆசிரியரின் நெறியாள்கையில் விழாக்குழுவினர் இணைந்து 100மூ மாணவர்களும் பங்குபற்றும் வகையில் சிறப்பாக செயற்படுத்தியிருந்தனர். இவ்விழாவிற்கு கல்லூரியின் பழைய மாணவர்களான திரு.ஸ்ரீ.பாஸ்கரன் (பிரான்ஸ்), திரு.ச.சிவஞானம் (தொழிலதிபர்) ஆகிய இருவரும் முழுமையான அனுசரணை வழங்கியிருந்தனர்.

2. அழகியல்துறை

இசை, நடனம், நாடகம், சித்திரம் ஆகிய அழகியற்துறைகள் சிறப்பாக தமது கலைத்துறை ஆற்றல்களை வெளிப்படுத்துமுகமாக பாடசாலையின் பல்வேறு நிகழ்வுகளிலும் தங்களது ஆற்றுகைகளை மேடையேற்றி வருகின்றார்கள். பாடசாலை விழாக்களை மெருகூட்டுவதுடன், பிரதேச செயலகம், ஆலயங்கள், வங்கிகள் ஆகியவற்றுக்கும் தமது கலைப்படைப்புகளை வழங்கி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். அத்துடன் பிரதேச கலாசார விழாக்களில் தமது ஆற்றுகைகளை வெளிப்படுத்தி தேசிய மட்டம் வரை தமது சாதனைகளைப் படைத்துள்ளனர். இவற்றினுர்டாக பிரதேச கலை, கலாசார, பண்பாடுகளையும் பேணிக்காத்து வருகின்றனர். இவற்றை நெறிப்படுத்தும் அழகியற்துறை ஆசிரியர்களைப் பாராட்டுகின்றேன்.

3. மன்றங்கள்

மாணவர்களின் பல்வேறு திறன்களையும், ஆளுமையையும் விருத்தி செய்வதற்கு மன்றங்கள் உறுதுணையாய் உள்ளன. மன்றச் செயற்பாடுகள் மூலம் பெருந்தொகையான மாணவர்கள்; நிகழ்வுகளில் பங்குபற்றக் கூடியவாறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களின் திறன்கள், ஆற்றல்கள் வெளிக் கொணரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பின்வரும் மன்றங்கள் கல்லூரியில் செயற்பட்டு வருகின்றன.

1. இந்துமாமன்றம்

திருமதி சங்கீதா பிரதீபன் பொறுப்பாசிரியரின் நெறிப்படுத்தலில்; வெள்ளிக்கிழமை பிரார்த்தனை மற்றும் தைப் பொங்கல் விழா, ஆடிப்பிறப்பு, குருபூசை தினங்கள், வாணிவிழா ஆகியவற்;;றை சிறப்பாகக் கொண்டாடியதுடன் நாளாந்தம் காலை நற்சிந்தனை, குறழமுதம், செய்தித்தாள் கண்ணோட்டம் போன்றவற்றையும் செயற்படுத்தி வருகின்றனர். அத்துடன் சைவபரிபாலன சபைப் பரீட்சை, மணிவாசகர் சபைப் பரீட்சைகளுக்கும் மாணவர்களை நெறிப்படுத்துகின்றனர். இவ்வருடம் செல்வி க.அபிராமி, செல்வி பா.குலமதி ஆகிய மாணவர்கள் மணிவாசகர் சபைப் பரீட்சையில்; தங்கப்பதக்கங்களை வென்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

2. உயர்தர மாணவர் மன்றம்

பொறுப்பாசிரியர்களான திரு.இ.இராஜகோபால், திருமதி.பி.தனம்; ஆகியோரின் வழிகாட்டலில் சிறப்பாகச் செயற்பட்டதுடன் உயர்தர மாணவர் ஒன்று கூடல் மற்றும் மதியபோசன நிகழ்வையும் ஆசிரியர்தின நிகழ்வையும்; சிறப்பாக ஒழுங்குபடுத்தி; நிகழ்த்தினர். ஒன்றியத்தினர் இணைந்து ஆசிரியர் ஓய்வறைக்கு வர்ணம் திட்டற் பணியையும் சிறப்பாக மேற்கொண்டனர்.

3. சுகாதார மன்றம்

சிரமதானம், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள், புகைத்தல் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம், மற்றும் கருத்தமர்வுகளை நடத்தியதுடன் மாணவர் சுய சுகாதாரம் பேணுதலிலும் ஆர்வத்துடன் செயற்பட்டு வருகின்றனர்.

இவற்றைவிட கவின்கலை மன்றம், கணித விஞ்ஞான மன்றம், சமூக விஞ்ஞான மன்றம், ஆங்கில மன்றம் ஆகியன கனிஷ்ட பிரிவு சிரேஷட பிரிவு என தனித்தனியாக செயற்படுவதுடன் மாதம் ஒரு தடவை என்ற வகையில் சிரேஷ்ட பிரிவு வியாழக்கிழமைகளிலும், கனிஷ்ட பிரிவு வெள்ளிக்கிழமைகளிலும் ஒன்றுகூடி அவ்வப் பொறுப்பாசிரியர்களின் நெறிப்படுத்தல்களுக்கமைய மாணவர் ஆளுமை விருத்திச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.

அத்துடன் பாடரீதியாக தமிழ்த்தினப் போட்டி, கணித விநாடிவினாப்போட்டி, விஞ்ஞான விநாடிவினாப்போட்டி, சமூக விஞ்ஞானப் போட்டி, ஆங்கில தினப் போட்டிகளில் மாணவர்களை கோட்ட, வலய மற்றும மாகாண மட்டங்களில் பங்குபற்றச் செய்து சாதனைகளைப் புரிந்துள்ளனர்.

விஞ்ஞான மன்றம் விஞ்ஞான தின நிகழ்வையும், ஆங்கில மனறம் ஆங்கிலதின நிகழ்வையும், ஆங்கில பயிற்சிப் பட்டறையையும் பாடசாலை மட்டத்தில் சிறப்பாக நிகழ்த்தினர். இவற்றை செயற்படுத்திய மாணவர்களையும் நெறிப்படுத்திய ஆசிரியர்களையும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன்.

வணிக மன்றம் வணிகப் போட்டிகளில் மாணவர்களைப் பங்குபற்றச் செய்வதுடன், பாடசாலைக் கூட்டுறவுச் சங்கம், மாணவர்களுக்கான வங்கிச் சேவை போன்றவற்றையும் செயற்படுத்தி வருகின்றது.

4. விசேட குழுக்கள்

1. சுற்றாடல் முன்னோடிக்குழு -; 25 மாணவர்களுடன் உருவாக்கப்பட்ட முதலாவது குழு மஞ்சள் மற்றும் பச்சைவர்ணப் பதக்கங்களையும், 2ஆவது குழு மஞ்சள் வர்ணப்பதக்கத்தையும் பெற்றுள்ளனர். கடமையுணர்வுடன் செயற்படும் பொறு;பாசிரியர்களான திருமதி.சி. வாகீசன், திருமதி.அ.இராசசிவம் ஆகியோரின் சிறப்பான வழிப்படுத்தலினால் குறுகிய காலத்துள் 50 மாணவர்கள் சுற்றாடல் முன்னோடி பதக்கங்களைப் பெற்றுக் கொண்டனர். இவர்கள்; உலக சுற்றாடல் தினத்தையும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். அத்துடன் திண்மக் கழிவு முகாமைத்துவம், பாடசாலைப் பசுமைபேணல் நிகழ்ச்சித் திட்டங்களையும் செவ்வனே ஆற்றி வருகின்றனர்.

2. பெண்கள் சாரணியம் – 2013 ஆம் ஆண்டு; உருவாக்கப்பட்ட இக்குழு பொறுப்பாசிரியர்களான செல்வி.சி. சின்னையா, திருமதி.அ.முகுந்தன்; ஆகியோரின் சிறப்பான வழிப்படுத்தலினால் செயற்பட்டு வருகின்றனர். இவர்கள் சிறப்பாக சிந்தனை நாள் நிகழ்வையும் நிகழ்த்தியிருந்தனர்.

3. சாரணர் – திரு.நா.கேதாரநாதன் ஆசிரியரின் முயற்சியினால் 7.3.2014 அன்று மீண்டும் எமது பாடசாலையில் ஆண்சாரணர் அணி உருவாக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு சின்னம் சூட்டும் நிகழ்வும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவர்கள் பாடசாலைச் செயற்பாடுகளிலும் பிரதேசத்திலுள்ள ஆலயங்கள் மற்றும் பொது இடங்களிலும் சிரமதானம், தாகசாந்தி; மற்றும் சேவைகளை ஆற்றி வருகின்றனர்

4. பாண்ட் அணி-; மேலைத்தேய பாண்ட் அணியும,; எமது கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் இன்னியம் (கீழைத்தேய பாண்ட); அணியும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வணிகளை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஆசிரியர்களை இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன். இவ் அணிகள் பாடசாலைச் செயற்பாடுகளில் மட்டுமன்றி அயல் நிறுவனங்களின் விழாக்களின் வரவேற்பு நிகழ்வுகளிற்கும் அணிவகுப்பை வழங்கி பாடசாலை சமூக உறவை வலுப்படுத்தி வருகின்றனர்.

5. சென் ஜோன் அம்புலன்ஸ் படையணி

இவ்வணி கடந்த வருடம் இறுதியில் திருமதி.தயாழினி nஐயக்குமார், திரு. பா. செந்தில்குமார் ஆசிரியர்களின்; முயற்சியினால் முதற்கட்டமாக 48 மாணவர்கள் பயிற்சி பெற்று சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர். அவர்களில் செல்வன் சுதர்சன் தலைமையில் 25 மாணவர்களைக் கொண்ட அணி சென் ஜோன் அம்புலன்ஸ் படையணிக்குரிய முழுமையான பண்புகளையும் கொண்டு சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றனர்.

6. சுகாதாரக்குழு 

திரு.அன்ரன் விமலதாஸ் பொறுப்பாசிரியரின் வழிநடத்தலில் உருவாக்கப்பட்ட இக்குழுவில் 16 மாணவர்கள் நிர்வாகக் குழு அங்கத்தவர்களாக இருந்து செயற்பட்டு வருகின்றார்கள். மதிய உணவு கண்காணிப்பு, உடற் திணிவுச் சுட்டி கணித்தல், பாடசாலைக் குடிநீர்சுகாதாரம் பேணல் போன்ற விடயங்களைக் கண்காணித்து வருகின்றனர்.

7. போக்குவரத்து ஒழுங்கமைப்புக் குழு

திரு.நா.கேதாரநாதன், திரு. தெ. லிங்கேஸ்வரன் ஆசிரியர்களின் வழிநடத்தலின் கீழ் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றனர். இதில் இணைந்து கொண்ட 10 மாணவர்களுக்கும் யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்தாலும், ஊர்காவற்றுறை பொலிஸ்பிரிவினராலும் போக்குவரத்து ஒழுங்கு விதிமுறை தொடர்பான செய்முறைப்பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் பாடசாலை ஆரம்பிக்கும் வேளையிலும்;, பாடசாலை நிறைவுறும் வேளையிலும் வீதியின் இருமருங்கிலும் போக்குவரத்து ஒழுங்கமைப்புக் கடமைகளை மேற்கொள்கின்றனர்.

8. உற்பத்தித்திறன் விருத்திக்குழு 

திரு.இ.ஜீவராஜ் ஆசிரியரின் வழிநடத்தலின் கீழ் சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றனர். 12 பேர் கொண்ட இவ்வணியினர்; பாடசாலைக் கவின்நிலை பேணல் 5ளு அமுலாக்கத்தை கண்காணித்தலும் தொடர்ந்து பேணலும் என்ற வகையில்; பாடசாலையின் உற்பத்தித்திறனை விளைதிறன்மிக்கதாக்கும் வகையில் தமது செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.

புலமைப்பரிசில்

எமது கல்லூரியின் மாணவர்கள் பின்வரும் வகையிலான புலமைப்பரிசில் நிதியுதவியைத் தங்கள் கற்றல் நடவடிக்கைகளுக்காககப் பெற்று வருகின்றனர்.

 தரம் 5 ற்கான புலமைப்பரிசில் நிதி – 20 மாணவர்கள்.

 ஜனாதிபதி புலமைப்பிரிசில் நிதி – 6 மாணவர்கள் 

 ஆளுநர் புலமைப்பரிசில் நிதி -12 மாணவர்கள் 

 தியாகராஜா புலமைப்பரிசில் நிதி -40 மாணவர்கள் 

 சிப்தொற புலமைப்பரிசில் நிதி -20 மாணவர்கள்

பாடசாலை முகாமைத்துவக்குழு

எமது பாடசாலையின் முகாமைத்துவக்குழுவில் துறைசார்ந்த 10 ஆசிரியர்கள் இணைந்து பாடசாலை அபிவிருத்திப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். பாடசாலையின் ஐந்தாண்டுத்திட்டம், வருடாந்த அமுலாக்கற் திட்டம் என்பவற்றிற்கமைய பௌதிக வள அபிவிருத்தி, பாடவிதான அபிவிருத்தி, இணைப்பாடவிதான அபிவிருத்தி, முகாமைத்துவ அபிவிருத்தி, ஆசிரியர் வாண்மைவிருத்தி ஆகிய செயற்பாடுகளை சிறந்த முறையில் செயற்படுத்தி வருகின்றனர்.

பாடசாலை அபிவிருத்திக்குழு

அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், வலயக் கல்வி அலுவலக உறுப்பினர்களை அங்கத்தவராகக் கொண்டு செயற்பட்டு வரும் இக்குழு பாடசாலையின் பலம், பலவீனங்களை இனங்கண்டு பாடசாலை மட்டத்திட்டமிடலை மேற்கொண்டு பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளை சிறந்த முறையில் செயற்படுத்த அங்கீகாரங்களை வழங்குவதுடன் ஒத்துழைப்பையும் வழங்கி வருகின்றனர். செயலாளர் திரு. கு. சரவணபவானந்த சர்மா அவர்கள் மாதாந்தக் கூட்டங்களை ஓழுங்குபடுத்தி பாடசாலையின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றார்.

பழைய மாணவர் சங்கம்

எமது பாடசாலைப் பழைய மாணவர் சங்கம் கல்லூரியின் கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கும் ஏனைய செயற்பாடுகளுக்கும் தமது பங்களிப்பை சிறப்பாக ஆற்றி வருகின்றனர். 2014ஆம் கல்வியாண்டில் செயற்பட்ட நிர்வாகக் குழுவினர் கடந்த வருடம் பாடசாலை அபிவிருத்திப் பணிகளிலும், பாடசாலையில் நிகழ்த்தப்பட்ட பல்வேறு நிழ்வுகளிலும் காத்திரமான பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்கியிருந்தனர். அத்துடன் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை குறிப்பாக மஹிந்தோதய ஆய்வு கூடத் திறப்புவிழாவில் காத்திரமான பங்களிப்பை வழங்கியிருந்தனர். பாடசாலைப் பௌதிகவள விருத்தி, பாடவிதான அபிவிருத்தி மற்றும் இணைப்பாடவிதான அபிவிருத்திக்கு வேண்டிய உதவிகளை அவ்வப்போது வழங்கி வருகின்றனர். மேலும் மாணவர்கள் பொதுப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேற்றைப் பெறும் நோக்கில் ஊக்குவிப்புப் பரிசில்களையும் வழங்கினர். அத்துடன் நின்றுவிடாது பாடசாலையின் சாதனைகளை karaihinducanada.com எனும் இணையத்தளத்தினுர்டாக வெளிப்படுத்தி வருகின்றனர். பழைய மாணவர் சங்கக் கொழும்புக்கிளையும் அவ்வப்போது வேண்டிய உதவிகளை வழங்கி வருகின்றனர்.

பாடசாலையின் சாதனைகள்

இணைப்பாடவிதான சாதனைகளின் தொகுப்பு

மாவட்ட மட்ட, மாகாண மட்ட, தேசியமட்ட சாதனைகள்

போட்டி வகை மாணவர் பெயர் விடயம் மட்டம்  நிலை

1 ஸ்ரீலங்கா யுத் தேசிய விருது கலாசாரப் போட்டி ஆ.அமிர்தா இசை மாவட்டம் 3

பு.சயிந்தன் ஓவியம் 3

ந.டினோஜா பேச்சு 3

2. சமுர்த்தி

ஆ.அமிர்தா இசை மாவட்டம் 1

க. வினோதன் அறிவிப்பாளர் மாவட்டம் 1

3. லுயசட புநநம ஊhயடடயபெந ச.லித்தியா

ச. சுதர்சன்

ச.விஜயதர்சன் வன்பொருள் அணி மாகாணம் வெள்ளிப் பதக்கம்

க.டிலானி

தே. றோமிலா

சுp.பிரசாந்தி மென்பொருள் அணி குழு-1 மாகாணம் ஆநசவை

அ.துஸ்யந்தினி

ப.சஜிதா

ந.டினோஜா மென்பொருள் அணி குழு-11 மாகாணம் ஆநசவை

4 ஆளுநர் சதுரங்கப் போட்டி ந. யஸ்மினா சதுரங்கப் போட்டி மாகாணம் ஊhயஅpழைn

5 இலங்கை வங்கி ப. நிதர்சன்

சு.டனோஜன்

ந. சசிகரன் சித்திரப் போட்டி மாகாணம் பணப்பரிசில்

6 சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான அமைப்பு 10 பேர் கொண்ட அணி சதுரங்கப் போட்டி மாகாணம் ஊhயஅpழைn

தேசிய மட்டச் சாதனைகள்

நிகழ்வு மாணவர் பெயர் பாடத்துறை ஆண்டு நிலை

புத்தாக்கப்போட்டி 4 பேர் கொண்ட அணி விஞ்ஞானம் 2012 பங்குபற்றியமை

ஓலிம்பியாட்போட்டி சி.விதுஷா கணிதம் 2013 பங்குபற்றியமை

ஸ்ரீலங்கா யுத் தேசிய விருது கலாசாரப் போட்டி ஆ.அமிர்தா இசை 2014 பங்குபற்றியமை

சுவிஸ் காரை கலாசார மன்றத்தால் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டி- 2014

வெற்றி பெற்ற மாணவர்களிற்கு அம் மன்றத்தினரால் பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

• க.சாந்தினி – காரை இளஞ்சுடர் 

• ந. டினோஜா – காரைத் தென்றல்

• அ.துஸ்யந்தினி – காரை இளவறிஞர்

பொதுப் பரீட்சைப் பெறுபேறுகள் – 2014

1. க.பொ.த சாதாரண தரம் – செல்வன் தி பார்த்தீபன் – 8யுஇ ளு

2. க.பொ.த உயர் தரம் 

வர்த்தகத்துறை செல்வி க.பானுஜா- 2யுஇ டீ (மாவட்டநிலை 17)

கலைத்துறை செல்வி க.ரேணுகா – 2யுஇ ஊ 

செல்வி க.சிவநிறஞ்சனா- யுஇ 2டீ

2014 ஆம் கல்வியாண்டில் பாடசாலையில் நிகழ்த்தப்பட்ட விசேடநிகழ்வுகள்

1. தரம் 6 மாணவர்களுக்கான கால்கோள்விழா

2. வகுப்பு முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு 

3. தைப்பொங்கல் விழா

4. வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வு

5. ஆண்கள் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு 

6. சிந்தனை நாள் நிகழ்வு

7. புகைத்தல் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

8. உலக சுற்றாடல் தின நிகழ்வு சுற்றாடல் முன்னோடிகளால் ந-றயளவந முகாமைத்துவ வாரம் அனுஸ்டிப்பு

9. நிறுவுநர் தினமும், பரிசளிப்புவிழாவும் மாணவ முதல்வர், வகுப்பு முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

10. சிறப்புப் பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு

11. மணிவாசகர் குருபூசை

12. ஆடிப்பிறப்பு விழா 

13. மாணவர்களுக்கான சுகாதார முகாம் 

14. உயர்தர மாணவர் ஒன்றுகூடலும் மதிய போசன நிகழ்வும்

15. பாடசாலை மட்ட விஞ்ஞான தின நிகழ்வு 

16. பாடசாலை மட்ட ஆங்கில தின நிகழ்வு

17. உலக உளநல நாளும்;, சிறுவர் தின நிகழ்வும் 

18. வாணிவிழா 

19. உலக ஆசிரியர் தினம்

20. மகிந்தோதய ஆய்வு கூடத் திறப்புவிழா

21. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் திருவுருவச் சிலை திறப்பு விழா

2014 ஆம் கல்வியாண்டில் பாடசாலையில் நிகழ்த்தப்பட்ட மாணவர் தேர்ச்சி மேம்பாட்டுச் செயற்றிட்டங்கள்

1. மெல்லக்கற்கும் மாணவர்களுக்கான (தரம் 6-9) துரித கற்றற் செயற்றிட்டம் (யுடுP)

2. மாணவ முதல்வர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி 

3. 100மூ மாணவர்களும் பங்குபற்றும் வகையிலான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு நிகழ்வு 

4. பாடசாலை, கோட்ட, வலய, மாகாண மட்டங்களில் தமிழ்த்தினப் போட்டி, ஆங்கிலதினப் போட்டிகளில் பங்குபற்றி சாதனை பெறுவதற்கான விசேட பயிற்சிகள் 

5. நாட்டிய நாடகப் பயிற்சிப்பட்டறை 

6. குண்டு போடுதல், தடடு, ஈட்டி எறிதல் போன்ற மைதான நிகழ்ச்சிகளில் தேர்ச்சி பெறும் வகையில் விசேட பயிற்சிகள் 

7. கணித, விஞ்ஞான, சமூகவிஞ்ஞான, அனர்த்த முகாமைத்துவ, வணிகப் போட்டிகளில் பங்குபற்றி சாதனை பெறுவதற்கான விசேட பயிற்சிகள் 

8. புவியியல் பாடத்திற்கான படவேலைப் பயிற்சிகள் 

9. க.பொ.த (சாதாரண தர) மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞானம், தமிழ், ஆங்கிலம், வரலாறு ஆகிய பிரதான பாடங்களில் வார நாட்களில் காலை, மாலை நேர விசேட பயிற்சி வகுப்புகள், மாதிரி வினாத்தாள்கள், கடந்த கால வினாத்தாள்கள் மூலமான பயற்சிகள் 

10. க.பொ.த (சாதாரண தர) மாணவர்களுக்கு ஆங்கில பாடத்தில் தேர்ச்சி பெற புலமை வாய்நத விரிவுரையாளர் மூலம் வாரஇறுதி நாட்களில் பயிற்சி வழங்கப்பட்டது.

11. க.பொ.த (சாதாரண தர) பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு சகல பாடங்களிலும் ஆவணி விடுமுறை காலத்தில் விசேட பயிற்சி வகுப்புகள், மாதிரி வினாத்தாள்கள், கடந்த கால வினாத்தாள்கள் மூலமான பயற்சிகள் நேர அட்டவணைக்கு அமைய வழங்கப்பட்டது. 

12. க.பொ.த (சாதாரணதர) மாணவர்களுக்கு மே மாதத்தில் இருந்து வாராந்தம் சகல பாடங்களுக்கும் அலகுப்பரீட்சைகள் நடத்தப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது. 

13. க.பொ.த (உயர்தர) மாணவர்களுக்கு தமிழ், வரலாறு, புவியியல், இந்துநாகரிகம் ஆகிய பிரதான பாடங்களில் வார நாட்களில் காலை, மாலை நேர விசேட பயிற்சி வகுப்புகள், மாதிரி வினாத்தாள்கள், கடந்த கால வினாத்தாள்கள் மூலமான பயிற்சிகள் வழங்கப்பட்டது. 

14. க.பொ.த (உயர்தர) மாணவர்களுக்கு தமிழ், புவியியல், பாடங்களில் வருகை தரு விரிவுரையாளரகள்; மூலமான விசேட பயிற்சிகள் நடத்தப்பட்டது. 

15. க.பொ.த (உயர்தர) மாணவர்களுக்கு அலகுரீதியான பரீட்சைகள் நடத்தப்பட்டு விளக்கமளிக்கப்பட்டதுடன், மாதிரிப் பரீட்சைகளும் நடத்தப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.

16. க.பொ.த (உயர்தர) பொதுத் தகவல் தொழினுட்பப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு வலய மட்ட விரிவுரையாளரகள்; மூலமான விசேட பயிற்சிகள் நடத்தப்பட்டது. 

17. தரம் 10 மாணவர்களுக்கு வரலாறு, சுகாதாரம் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெறும் வகையில் மேலதிக வகுப்புகள் நடத்தப்பட்டது. 

18. தரம் 6-9 வகுப்புகளில் உள்ள மெல்லக் கற்கும் மாணவர்கக்கு ஆவணிமாத விடுமுறை காலத்தில் விசேட வலுவூட்டல் வகுப்புகள் நடத்தப்பட்டது.

19. தரம் 9 மற்றும் க.பொ.த (உயர்தர) மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்குகள் நடத்தப்பட்டது.

20. க.பொ.த (உயர்தர) 2016 கல்வியாண்டு மாணவர்களுக்கு பாடத் தெரிவு வழிகாட்டல் கருத்தரங்கு நடத்தப்பட்டது.

21. க.பொ.த (உயர்தர) செய்முறைப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு நடனம், நாடகமும் அரங்கியலும் ஆகிய பாடங்களிற்கு விசேட பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டது.

22. தரம் 6-9 மற்றும் க.பொ.த (உயர்தர) 2016 கல்வியாண்டு மாணவர்கள் காரைநகர் தொழிற் பயிற்சி நிலையச் செயற்பாடுகளைப் பார்வையிட்டு அனுபவம் பெற இடமளிக்கப்பட்டனர்

23. பல்வேறு போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்குமுகமாக மன்னார் திருக்கேதீஸ்வரம், மடு தேவாலயம், சென் சேவியர் ம.வி. கேரதீவு, சங்குப்பிட்டி ஆகிய இடங்களிற்கு களப்பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர். 

24. தரம் 6, 7 மாணவர்களின் ஒழுக்கவிழுமியங்களை மேம்படுத்தும் வகையில் சத்தியசாயி சேவா மனித மேம்பாட்டுக் கல்வி நிறுவனத்தினரை வளவாளர்களாகக் கொண்டு மனித மேம்பாட்டுக் கல்வி நிகழ்ச்சித் தொடர் சனிக்கிழமைகளில் யூலை மாத இறுதியில் இருந்து டிசம்பர் மாதம் வரை நடத்தப்பட்டது. .

25. மாணவர்களின் ஆளுமை விருத்தியை மேம்படுத்தும் வகையில் இந்து மாமன்றத்தினரால் காலை நற்சிந்தனை, தினம் ஒரு குறழமுதம், செய்தித்தாள் கண்ணோட்டம் ஆகியன நடத்தப்படுகிறது.

26. ஆளுமை விருத்தியை மேம்படுத்தும் வகையில் வாராந்தம் வியாழக்கிழமைகளில் கனிஷ்ட இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கான மாணவர் மன்ற நிகழ்வுகளும், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் சிரேஷ்ட இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கான மாணவர் மன்ற நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

27. பொதுத் தகைமைத் திறனை விருத்தி செயு;யும் வகையில் தினமும் இடைவேளையில் சகல மாணவர்களும் பொது அறிவு வினாக்களுக்கு விடையளிக்கும் வகையிலான நிகழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

28. வாழ்க்கைத் தேர்ச்சிக்கான ஆங்கில விருத்திக்காக English as a Lifeskill வாராந்தம் வியாக்கிழமைகளில் ஆங்கில மொழிமூல செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

29. பெண்கள் வழிகாட்டிகளின் ஆளுமையை விருத்தி செய்யும் வகையிலான பயிற்சி வகுப்புகள் பொறுப்பாசிரியர்களால் நடத்தப்படுகிறது.

30. சுற்றாடல் முன்னோடிக்குழுவினரின் தகைமையை விருத்தி செய்யும் வகையிலான பயிற்சிகள் பொறுப்பாசிரியர்களால் வழங்கப்பட்டது.

31. மாணவமுதல்வர்கள் 10 பேர் தலைமைத்துவப் பயிற்சி பெற மாத்தறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர.

32. விசேட தேவையுடைய மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் திருகோணமலை கல்விச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர.

33. உதைபந்தாட்ட அணியினருக்கான பயிற்சிகள் செப்ரெம்பர் மாதத்திலிருந்து தினமும் காலை, மாலை நேரங்களில் வார நாட்களில் உடற்கல்வி ஆசிரியரால் வழங்கப்படுகிறது.

34. உதைபந்தாட்ட அணியினர் விக்ரோறியாக் கல்லூரி மாணவர்களுடன் நட்பு ரீதியான போட்டியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

35. தெரிவு செய்யப்பட்ட 14 மாணவர்களுக்கு வயலின் பக்கவாத்திய இசைப் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்படுகிறது

36. மாணவ முதல்வர்கள் மற்றும் விசேட மாணவ குழுக்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி நடத்தப்பட்டது.

37. சாரணரிற்கான ஆற்றுகை விருத்திப் பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டது.

38. சுற்றாடல் முன்னோடிக்குழுக்களில் குழு -1 மஞ்சள் வர்ணப்பதக்கம் பெறுவற்கும், குழு-11 பச்சை வரணப் பதக்கம் பெறுவதற்குமான ஆளுமை விருத்திப் பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டது.

39. சென்Nஐhன்ஸ் அம்புலன்ஸ் படையணி உருவாக்கப்பட்டது.

2014 இல் மேற்கொள்ளப்பட்ட பாடசாலை பௌதிக வள அபிவிருத்திப் பணிகள்

1. வயலின், டொல்கி, ஹார்மோனியம், சுருதிப் பெட்டி திருத்தம் செய்யப்பட்டது.

2. இலத்திரனியல் நூலகம் மற்றும் அதிபர் அலுவலகத்திற்கு இணையத்தள இணைப்பு வழங்கப்பட்டது.

3. இலத்திரனியல் நுர்லகத்திற்கு 4 கணனிகள் வழங்கப்பட்டது. 

4. பாடசாலைத் தரவுத் தளங்கள் இற்றைப்படுத்தப்பட்டு பனர்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டது.

5. பாடசாலையின் வடக்கு வளாகத்தில் பூந்தோட்டத்திற்கான அலங்கார வளைவு கட்டப்பட்டது. .

6. அழகியல் அறைகள் வர்ணம் தீட்டி அழகுபடுத்தப்பட்டது.

7. நடனக் குழு மாணவர்களுக்கான 3 costeem தைக்கப்பட்டது. .

8. 145 தளபாடங்கள் திருத்தம் செய்யப்பட்டது.

9. சயம்பு மண்டபம் திருத்தம் செய்யப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டது. 

10. விஞ்ஞான ஆய்வுகூட கூரையின் பீலி 60’நீளம் திருத்தம் செய்யப்பட்டது. .

11. உள்ளக விளையாட்டு உபகரணங்கள,மைதான விளையாட்டு உபகரணங்கள், உதைபந்தாட்ட வீரர்களுக்கான காலணி என்பன கொள்வனவு செய்யப்பட்டது.

12. பாடசாலையின் வடக்கு வளாக வடக்கு,கிழக்குபுற 270’ எல்லை வேலி வயர் மெஸ் ஆல் அடைக்கப்பட்டது. 

13. நூலகக் கூரை 140’ Balance Board  அடிக்கப்பட்டு பீலி பொருத்தப்பட்டது.

14. பாடசாலையின் வடக்கு வளாக கட்டிடத் தொகுதிகளில் உள்ள 26 யன்னல்களிற்கு கண்ணாடி இடப்பட்டது.

15. தரம் 10 வகுப்பறையில்உடைந்த நிலையில் காணப்பட்ட 4 மர யன்னல்கள் நீக்கப்பட்டு புதிய யன்னல் கதவுகள் இடப்பட்டது. 

16. பாடசாலையின் வடக்கு வளாக கட்டிடத் தொகுதிகளில் உள்ள சகல யன்னல்களிற்கும் திறாங்குகள் கொழுக்கிகள் சீர்செய்யப்ட்டது.

17. பாடசாலையின் வடக்கு வளாக கட்டிடத் தொகுதிகளின் வெளிப் பார்வைக்குட்பட்ட பகுதிகள் வர்ணம் தீட்டி அழகுபடுத்தப்பட்டது.

18. ஆசிரியர் ஓய்வறை, முகாமைத்துவ மண்டபம் வர்ணம் தீட்டி அழகுபடுத்தப்பட்டது.

19. பாடசாலைப் பூந்தோட்ட்ம் பூங்கன்றுகள் நாட்டி மெருகூட்டப்பட்டது.

20. சரஸ்வதி சிலையின் முற்றம் மாபிள் கற்கள் பதித்து அழகுபடுத்தப்பட்டது.

21. முகாமைத்துவ மண்டபத்தில் கழுவு தொட்டி பொருத்தப்பட்டது.

22. வகுப்பறைகளுக்கு சிக்கன குடிநீர் திட்டத்திற்காக பைப் பொருத்தப்பட்ட வாளிகள் வழங்கப்பட்டது.

23. பாடசாலையின் வடக்கு வளாக வகுப்பறைகள், விசேட அறைகளுக்கான பெயர்ப்பலகைகள் இடப்பட்டது.

24. பாடசாலையின் வடக்கு வளாக பிற்புற நுழைவாயில் Gate ற்கு காறை இடப்பட்டு சுவர்கள் சீமெந்து பூச்சிட்டு வர்ணம் தீட்டப்பட்டது. 

25. பாடசாலையின் வடக்கு, தெற்கு வளாக ஆண்கள் மலசல கூடக்குழி கழிவகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டதுடன், உடைந்த நிலையில் காணப்பட்ட கொங்கிறீற் தட்டு நீக்கப்பட்டு புதிய தட்டு இடப்பட்டது.

26. பாடசாலையின் வடக்கு வளாக முற்புற உட்பகுதி மதில்களுக்கு சீமெந்து பூச்சிட்டு வர்ணம் தீட்டப்பட்டது.

27. நடராசா மண்டபத்தின் உடைந்த நிலையில் காணப்பட்ட படிகள் திருத்தம் செய்யப்பட்டது.

28. நடராசா மண்டபத்தின் மேற்குப்புற விறாந்தைக் கூரையின் உக்கலடைந்த மரங்கள், சிலாகைகள் மாற்றப்பட்டு புதிய மரங்கள் இடப்பட்டது.

29. பாடசாலையின் வடக்கு வளாக நுழைவாயில் படிகள் திருத்தம் செய்யப்பட்டது.

30. பாடசாலையின் வடக்கு வளாகத்தின் பிற்புறம் குவிக்கப்பட்டிருந்த கற்கள் உடைந்த தளபாடங்கள் அப்புறப்படுத்தப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

31. பாடசாலையின் வடக்கு வளாக மழைகால நீர்வடிகால் அமைப்பு சீர் செய்யப்பட்டது.

32. வெற்றிகேடயங்கள் காட்சிப்படுத்துவதற்கான கண்ணாடி அலுமாரி செய்யப்பட்டது.

33. மீன் தொட்டிக்கான கூரை அமைக்கப்பட்டு கவின்நிலைப்படுத்தப்பட்டது.

34. பாடசாலைப் பெயர்ப்பலகை மும்மொழிகளிலும் எழுதபப்பட்டது.

35. பாடசாலை மைதான விஸ்தரிப்பிற்காக 6 பரப்புக்காணி மேற்குப்புற எல்லையில் அன்பளிப்பாகப் பெறப்பட்டு பாடசாலைக்கான உறுதி ஆவணப்படுத்தல்கள் பூரணப்படுத்தப்படும் வேலைகள் இடம்பெறுகின்றது.

36. புதிதாகப் பெறப்பட்ட 6 பரப்புக் காணி 150 load மண்நிரவி மட்டப்படுத்தப்பட்டது.

37. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 50’ழூ30’ இருமாடி கொண்ட மஹிந்தோதய ஆய்வுகூடத் தொகுதி வளப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்ட்டு பாவனைக்கு விடப்பட்டுள்ளது.

38. மஹிந்தோதய ஆய்வுகூடயன்னல்களுக்கு திரைச் சேலையிடப்பட்டது.

39. பல்லூடக அறைக்கான பேச்சு மேடை,U வடிவிலான மேசை புதிதாக செய்விக்கப்பட்டது. பழைய மேசைகள் திருத்தம் செய்யப்பட்டது.

40. பல்லூடக அறை மேம்படுத்தல் பணியில் தரை ஓடு பதித்தல், யன்னல் கிறில்களுக்கு கண்ணாடியிடல், திரைச் சேலையிடல், வர்ணம் திட்டல், மேடையமைத்தல், மின்னிணைப்பு சீர் செய்தல் போன்ற செயற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டது. 

41. பல்லூடக அறைக்கான ஒலிவாங்கி கொள்வனவு செய்யப்பட்டது.

42. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சிலை அமைக்கப்பட்டது.

பௌதிக வளங்களின் விளைதிறன்மிக்க பயன்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டங்கள்

1. பல்லூடக உதவியாளர், நூலக உதவியாளர், அலுவலக உதவியாளர் பழைய மாணவர்சங்க அனுசரணையுடன் நியமிக்கப்பட்டனர்

2. மின் கட்டண மேலதிக கொடுப்பனவு நிதி, இணையத்தளப் பாவனைக்கான தொலைபேசிக் கொடுப்பனவு நிதி அனுசரணை பழைய மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டது.

3. குடிநீர்ப் பாவனை மேலதிக கொடுப்பனவு நிதி அனுசரணை – காரை அபிவிருத்திச் சபை

4. வருடாந்த பரிசில் தின நிகழ்வை தடையின்றி நிகழ்த்துவதற்காக டாக்டர் திரு. வி.விஐயரட்ணம் நம்பிக்கை நிதியம் உருவாக்கப்பட்டது. 

5. வருடாந்த இணைப்பாடவிதான அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கான அனுசரணை லண்டன் காரை நலன்புரிச் சங்கத்தால் ஏற்படுத்தப்பட்டது.; 

பாடசாலையின் அபிவிருத்திப்பணிகளில் தோளோடு தோள் கொடுத்து ஒத்துழைப்புகளை வழங்கிய எமது கல்லூரியின் பகுதித் தலைவர் திரு தெ.லிங்கேஸ்வரன் அவர்களுக்கும், எமது கல்லூரி ஆசிரியர் குழாத்தினருக்கும், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கும், பழைய மாணவர் சங்கத்தினருக்கும், ஏனைய அனுசரணைகளை வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பாடசாலை அபிவிருத்தி சார்பாக எதிர்நோக்கும் சவால்கள்

மாணவர்சார்பாக

• ஏறத்தாழ 85மூ மாணவர்கள் வறுமைக் கோட்டிற்குட்பட்டவர்கள்.

• ஏறத்தாழ 40மூ மாணவர்கள் ஒற்றைப் பெற்றோர்ஃ பெற்றோர் இன்மைஃ சிதைந்த குடும்பப் பின்னணியைக் கொண்டிருத்தல்.

• ஏறத்தாழ 30மூ மாணவர்கள் மெல்லக் கற்போர்.

• கற்றலில் நாட்டம்ஃஆர்வம் இன்மை

• சுய சுகாதாரத்தில் அக்கறையின்மை

• போட்டிகளில் பங்குபற்றுவதில் பின்னிற்றல்

பெற்றோர்/பாதுகாவலர் சார்பாக

• ஏறத்தாழ 90மூ பெற்றோர் நாட்கூலித் தொழிலாளர்கள்

• ஏறத்தாழ 30மூ பெற்றோர் குடும்பத் தலைவன்ஃதலைவியை இழந்திருத்தல்ஃ ஊனமுற்றிருத்தல்;

• பெரிய குடும்பம், வருமானக்குறைவு

• ஏறத்தாழ 60மூ பெற்றோர் கல்வியறிவு குன்றியோர்

• ஏறத்தாழ 20மூ பெற்றோர் எழுத்தறிவற்றோராகக் காணப்படுதல்

• பிள்ளைகளின் நலனில் அக்கறைக்குறைவு

• பாடசாலை நிகழ்வுகளில்ஃவிழாக்களில் கலந்து கொள்வதில் ஆர்வம் இன்மை

ஆசிரியர் சார்பாக

• பாடத்துறைக்குப் பொருத்தமான ஆசிரியர்கள் இன்மைஃபற்றாக்குறை

• 70மூ ஆசிரியர்கள் பாடசாலையிலிருந்து சராசரி 25மஅ ற்கு அப்பால் வதிவோர்.

அதிபர்ஃநிர்வாகம் சார்பாக

• பாடசாலைக் கட்டமைப்புக்குப் பொருத்தமான ஆளணியினர்; நியமிக்கப்படாமை

• அலுவலக உதவியாளர், முகாமைத்துவ உதவியாளர் நியமிக்கப்படாமை.

• நூலகர், ஆய்வுகூட உதவியாளர், நியமிக்கப்படாமை.

• ஆசிரியர்ஆளணி தேவைப்பட்டியலுக்கு அமைவாக ஆளணி வளம் வழங்கப்படாமை.

• பாடசாலை வளாகம் வீதியின் இருமருங்கிலும் அமைந்திருத்தல்

நிறைவேற்றப்பட வேண்டிய பௌதிகவள அபிவிருத்தித் திட்டங்கள்

1. பாடசாலையின் தெற்கு வளாகத்தில் பெண் பிள்ளைகளுக்கான மலசலகூடம் அமைத்தல்.

2. வகுப்பறைகளினுள் புறா நுழையாத வகையிலான ஏற்பாடுகள் மேற்கொள்ளல்.

3. பாடசாலை மைதானத்தை எல்லைப்படுத்தி பாதுகாப்பு மதில்/வேலிகளை அமைத்தல்.

4. விளையாட்டு மைதானப் புனரமைப்பும், பார்வையாளர் அரங்கம் (பமிலியன); அமைத்தலும்

5. உள்ளக விளையாட்டரங்கம் அமைத்தல்

6. பாடசாலைக்கான பெயர் வளைவு அமைத்தல்

7. பாடசாலையின் தெற்கு வளாகக் கவின்நிலையை மெருகூட்டும் வகையில் பூந்தோட்ட வளைவு அமைத்தல்

8. மாணவர்களின் குழு நிலைக் கற்றலுக்காக மர நிழல்களின் கீழ் இருக்கைகள் அமைத்தல்.

9. தொங்கு நூலகம் அமைத்தல்

10. கீழைத் தேச, மேலைத்தேச பாண்ட் இசைக் கருவிகள் கொள்வனவு செய்தல்

11. நூலகத்தின் கூரைகள் திருத்தம் செய்தல்.

12. நூலகத்தின் வாசகர் பகுதி மற்றும் கணனிக் கற்கை நிலையத்தின் மாணவர் பயன்பாட்டுப்பகுதி விஸ்தரிக்கப்படல்

13. சயம்பு மண்டபம், தரம் 6,7 வகுப்பறைகளுக்கு மின்னிணைப்பு மேற்கொள்ளல்.

14. தரம் 6 வகுப்பறை, விளையாட்டு அறை திருத்தம் செய்தல்

15. இரசாயனவியல் ஆய்வுகூடத்தின் மின்னிணைப்பை சீர்செய்தல்.

16. வகுப்பறைகளுக்கான காட்சிப்படுத்தல் பலகைகள் அமைத்தல்.

17. வகுப்பறைக் கவின்நிலை இன்றைய கற்றல் கற்பித்தற் செயற்பாடுகளுக்கு ஏற்ற வகையில் நவீனமயப்படுத்தல்.

18. பாடசாலையின் வீதியின் இருபுறமும் உள்ள வடக்கு, தெற்கு வளாகங்களை இணைக்கும் வேலைத்திட்டத்தை மேற்கொள்ளல். 

19. வகுப்பறைகளின் இரும்பு சுருக்கு புயவநள திருத்தம் செய்தல்.

20. தளபாடத்திருத்தம்

21. தளபாடங்களுக்கு வர்ணம் தீட்டல்

22. துடுப்பாட்டம், கூடைப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டத் திடல்கள் அமைத்தல்

செயற்படுத்தப்பட வேண்டிய தேர்ச்சி விருத்திச் செயற்றிட்டங்கள்

1. அயற் பாடசாலைகளுடன் நட்பு ரீதியான போட்டிகள் நடத்துவதன் மூலம் விளையாட்டுக் குழுக்களை வலுப்படுத்தல். 

2. ஆங்கில பாடத்தில் அடிப்படை அறிவை விருத்தி செய்வதற்கான விசேட வகுப்புகள் தரம் 6, 9 மாணவர்களுக்கு நடத்துதல

3. அடிப்படைக் கணிதச் செய்கைத் திறனை விருத்தி செய்தல்

4. பாடரீதியான முகாம்கள், பயிற்சிப்பட்டறைகள் நடத்துதல்.

5. மாணவர்களுக்கான வயலின்,மிருதங்கம், ஓகன், நடனம், சித்திரம் பயிற்சி வகுப்புகள் நடத்துதல்.

6. களப்பயணம் மேற்கொள்ளல்

7. பாடரீதியான கண்காட்சி நடத்துதல்

8. விஞ்ஞான பாடச் செய்முறைப் பயிற்சிப் பட்டறை நடத்துதல்

பாடசாலையால் கௌரவிக்கப்பட்டோர் விபரம்

1. வைத்திய கலாநிதி வி.விஜயரத்தினம் (31.7.2013 ) அவர்கள் கல்லூரியின் 125ஆம் ஆண்டு விழாவின் நிறுவுநர்தின நிகழ்வில் வரவாற்று முக்கியத்துவம் வாய்ந்த சயம்பு மலரை வெளியிட்டு வைத்தமைக்காக கௌரவிக்கப்பட்டார்.

2. யாழ் பல்கலைக்கழக உயர்பட்டப்படிப்புகள் பீடப் பீடாதிபதி பேராசிரியர் ச. சத்தியசீலன் மற்றும் கல்வியியற்துறைத் தலைவர் கலாநிதி அ. சத்தியசீலன் (01.8.2013) ஆகியோர் கல்லூரியின் 125ஆம் ஆண்டு விழாவின் கலைவிழா நிகழ்வில் ஆசிரியர் வாண்மைவிருத்திக்காக ஆற்றும் பணிக்காக கௌரவிக்கப்பட்டார்கள்.

3. சிற்பக்கலைஞர் திரு.மு. திருநாவுக்கரசு 13.9.2013 அன்று வாணிவிழா நிகழ்வின் போது பிரதேசக் கலைஞர்களை இனங்கண்டு கௌரவிக்கும் பொருட்டு மேற்கொண்ட ஆய்வினூடாக இனங்காணப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

4. மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 14.10.2014 அன்று பாடசாலைக்கான மஹிந்தோதய தொழினுட்ப ஆய்வுகூடத்தை அமைத்து வழங்கியமைக்காகவும் நாட்டின் மேதகு ஜனாதிபதி அவர்கள் பாடசாலைக்கு விஜயம் செய்தமைக்காகவும கௌரவிக்கப்பட்டார். 

5. தத்துவ கலாநிதி க.வைத்தீஸ்வரக்குருக்கள் அவர்கள் 25.12.2014 அன்று மணிவாசகர் சபைப் பவளவிழா நிகழ்வு கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற போது கல்லூரியின் மூத்த மாணவன் என்ற வகையிலும், அவர் சைவத்திற்கும், தமிழிற்கும் ஆற்றிய பணிக்காகவும் அவரது 99ஆவது அகவையில் கௌரவிக்கப்பட்டார். 

6. கலாபூசணம் திரு.தி. சண்முகசுந்த்தரம் (ஓய்வுநிலை கிராம சேவையாளர்) அவர்கள் 08.4.2015 அன்று மனிதமேம்பாட்டுக்கல்வி நிறைவுநாளும், விருதுகள் தினமும் நிகழ்வின் போது பிரதேசக் கலைஞர்களை கௌரவிக்கும் பொருட்டு மேற்கொண்ட ஆய்வினூடாக இனங்காணப்பட்ட பிரதேச மிருதங்கக் கலைஞர் என்ற வகையில் கௌரவிக்கப்பட்டார். 

7. வைத்திய அதிகாரி திரு.பே. நடராசா அவர்கள் தனது ஓய்வு காலத்தில் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக காரைநகர் பிரதேசப் பொது இடங்களில் நிழல்தரு விருட்சங்களை நாட்டி பராமரித்து வருகின்றமைக்காக சிறந்த சுற்றாடல் ஆர்வலர் என்ற வகையி;ல் 5.6.2015 அன்று பாடசாலையில் நடைபெற்ற சுற்றாடல் தின நிகழ்வில் கௌரவிக்கப்பட்டார். 

8. திரு.ஆறுமுகம் ராசேந்திரன் ஓய்வுநிலை வட மாகாணக்கல்விப் பணிப்பாளர் அவர்கள் 37 ஆண்டுகள் கல்விச் சமூகத்திற்கு ஆற்றிய பணிக்காக கல்லூரியின் 127 ஆவது பரிசில் தின விழாவில் கௌரவிக்கப்பட உள்ளார்.

2014 ஆம் கல்வியாண்டின் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகள்

1. நாட்டின் மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே பாடசாலைக்கு விஜயம் செய்து மஹிந்தோதய தொழினுட்ப ஆய்வுகூடத்தைத் திறந்து வைத்தமை.

2. நாட்டின் கௌரவ கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்கள் பாடசாலைக்கு விஜயம் செய்து உரையாற்றியமை.

3. வலய மட்ட வெளியக மதிப்பீட்டின் அடிப்படையில் 75மூ பண்புத்தரத்தை அடைந்து தீவக வலய முதன்மைப் பாடசாலையாக இனங்காணப்பட்டமை. 

4. பல்லூடக அறை நவீன முறையில் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டமை.

5. இவ்வருடம் நுண்கலைத்துறையில் 5 மாணவர்களும் (சித்திரம், நடனம், இசை), கலைத்துறையில் 1 மாணவியும் மொத்தம் 6 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு நுழைந்துள்ளமை.

6. 2014ஆம் கல்வியாண்டு வர்த்தகத் துறை மாணவி செல்வி பானுஜா 2யுஇ டீ பெறுபேற்றைப் பெற்று யாழ் மாவட்டத்தில் 17ஆம் இடத்தைப் பெற்றமை.

7. செல்வி ஆ. அமிர்தா இளையோர் கழகத்தால் நடத்தப்பட்ட மாகாண மட்டப் பண்ணிசைப் போட்டியில் வெற்றி பெற்று தேசியமட்டப் போட்டியில் பங்கு பற்றியமை.

8. செல்வி புருசோத்தமி மாகாணமட்டப் பண்ணிசைப் போட்டியில் 3ஆம் இடத்தைப் பெற்றமை

9. செல்வி ந. யஸ்மினா மாகாண மட்ட ஆளுநர் சதுரங்கப் போட்டியில் சம்பியன் வென்றமை.

10. மாகாணமட்ட லுயசட புநநம ஊhயடடநபெந ர்யசன றயசந உழஅpநவவைழைn இல் ர்யசன றயசந அணி; ளுடைஎநச ஆநனயட வென்றமை. இரு ளுழகவ றயசந வுநயஅள ஆநசவை பெற்றமை. 

11. பாடசாலையின் 75மூ ற்கு மேற்பட்ட மாணவர்கள் குறைந்த பட்சம் ஏதாவது ஒரு ஆளுமை விருத்திக்குழுவில் தம்மை இணைத்து செயற்படும் வண்ணம் பல்வேறு ஆளுமை விருத்திக்குழுக்கள் பாடசாலையில் உருவாக்கப்பட்டுள்ளன. (சுற்றாடல் முன்னோடிக்குழு-100, சென்ஜோன் அம்புலன்ஸ்- 48, பெண்கள்வழிகாட்டி–18,சாரணர்-25,போக்குவரத்துக்குழு–10, சுகாதாரக்குழு-12, உற்பத்தித்திறன் விருத்திக்குழு–12, மாணவமுதல்வர்-40, மன்றங்களின் நிர்வாக சபை உறுப்பினர்கள்;-72, இசை, நடன, நாடக குழுக்கள்-40, பெருவிளையாட்டு, உள்ளக விளையாட்டுக் குழுக்கள் – 120)

இதனடிப்படையில் தேசிய கல்விக் கொள்கைக்கேற்ப சமூக உறவினூடாக பௌதிக, மனித வளங்களை மேம்படுத்தி நவீன தொழினுட்பங்களினூடகத் தரமான கல்வியை வழங்குவதன் மூலம் ஆளுமைமிக்க மாணவ சமுதாயத்தை உருவாக்கல் எனும்; கல்லூரியின் பணிக்கூற்றை நிறைவு செய்யும் பொருட்டான அடித்தளம் பாடசாலையில் உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் கல்லூரியின் தூரநோக்கான நவீன உலகில் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய ஆளுமைமிக்க சமுதாயம் என்பதன் இலக்குப் பயணம் வெகு தூரம் இல்லை என்பதை எம் கல்லூரிக்குடும்பம் பறைசாற்றி நிற்கின்றது எனும் நற்செய்தியை கூறி பரிசில்தின அறிக்கையை நிறைவு செய்கின்றேன்.

நன்றியுரை

மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உறுதுணை புரிந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். எமது அழைப்பை ஏற்று இந்நாளில் வருகை தந்து விழாவைச் சிறப்பித்துக் கொண்டிருக்கும் பிரதம விருந்தினர் பேராசிரியர் வை. பரமேஸ்வரன் அவர்களே, சிறப்பு விருந்தினராக வருகை தந்து விழாவைச் சிறப்பித்த தீவக வலயக் கல்விப்பணிப்பாளர்;திரு. தி. ஜோன்குயின்ரஸ் அவர்களே, கௌரவ விருந்தினராக கலந்து சிறப்பித்த ஓய்வு நிலை மாகாணக் கல்விப்பணிப்பாளர் திரு ஆ.ராஜேந்திரன் அவர்களே, கல்லூரியின் நிறுவுநர் தின உரையை வழங்கிய திருமதி சி.நடராசா அவர்களே உங்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த நன்றிகனைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மற்றும் எமது அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்துள்ள கல்வியதிகாரிகள், ஓய்வுநிலை அதிபர்கள் அயற்பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் எமது பாடசாலையின் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும். மற்றும் பரிசளிப்பு விழாவிற்கு நிதியனுசரணை வழங்கிய வைத்திய கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரட்ணம் நம்பிக்கை நிதியத்தின் உரிமையாளரான கனடா வாழ் பழையமாணவர் வைத்திய கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரட்ணம்  அவர்களுக்கும் நினைவுப் பரிசில்களை வழங்கிய திருமதி மனோன்மணி தம்பிராஜா (ஓய்வு பெற்ற ஆசிரியர்), திரு,திருமதி சுந்தரேஸ்வரி சச்சிதானந்தன் அவர்களுக்கும், திரு. கனக சிவகுமாரன், திரு மா.கனகசபாபதி, திருமதி சி;. நடராசா அவர்களுக்கும் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையினருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். தோளோடு தோள் கொடுத்து கல்லூரித்தேரை வெற்றிப் பாதையில் முன்நகர்த்திச் செல்லும் எமது பெருமைமிகு ஆசிரியப் பெருந்தகைகளுக்கும், அன்புநிறை மாணவச் செல்வங்களுக்கும், மதிப்புமிகு பெற்றோர்கள், கல்வி சாரா ஊழியர்களுக்கும் எனது மனநிறைவான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நன்றி

திருமதி வாசுகி தவபாலன், 

அதிபர்

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய உயர்தர மாணவர் ஒன்றிய மதிய போசன விருந்துபசார நிகழ்வு

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டில் உயர்தர வகுப்பு மாணவர்களின் ஒன்று கூடலும் மதிய போசன விருந்தும் சனிக்கிழமை (27.06.2015) அன்று கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் உயர்தர மாணவர் ஒன்றியத் தலைவர் செல்வன்.கதிர்காமநாதன் தர்சிகன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 


பிரதம விருந்தினராக காரைநகர் மருத்துவமனை மருத்துவ அதிகாரி மருத்துவ கலாநிதி. மு.இந்திரமோகன் அவர்களும், சிறப்பு விருந்தினராக தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளர்(தமிழ்) திரு.சி.செல்வராஜா அவர்களும், கௌரவ விருந்தினராக பழைய மாணவர் சங்க முன்னாள் செயலாளரும் கிராம சேவை அலுவலருமாகிய திரு.இ.திருப்புகழுர்சிங்கம் அவர்களும், அயல் பாடசாலை உயர்தர மாணவர் மன்றத்தின் பிரதிநிதிகளும் இவ்விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். 


இந்நிகழ்வில் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் "நதி"  என்னும் சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது. 


நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

AL.2 AL.3 AL.4 AL.5 AL.6 AL.7 AL.8 AL.9 AL.10 AL.11 AL.12 AL.13 AL.14 AL.15 AL.16 AL.17 AL.18 AL.19 AL.20 AL.21 AL.22 AL.23 AL.24 AL.25 AL.26 AL.27 AL.28 AL.29 AL.30 AL.31 AL.32 AL.33 AL.34 AL.35 AL.36 AL.37 AL.38 AL.39 AL.40 AL.41 AL.42 AL.43 AL.44 AL.45 AL.46 AL.48 AL.49 AL.50 AL.51 AL.52 AL.53 AL.54 AL.55 AL.56 AL.57 AL.58 AL.59 AL.60 AL.61 AL.62 AL.63 AL.64 AL.65 AL.66 AL.67 AL.68 AL.69 AL.70 AL.71 AL.72 AL.73 AL.74 AL.75 AL.76 AL.77 AL.78 AL.79 AL.80
 

 

மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தின் அநுசரணையில் நடைபெற்ற கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

p.g.3

பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் அநுசரணையில் சிறப்புப் பரிசில்களும் ஞாபகார்த்த விருதுகளும்
கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி)வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும் கடந்த சனிக்கிழமை (04.07.2015) அன்று காலை 9:00 மணிக்கு நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி.வா.தவபாலன் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. 


விழாவிற்குப் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீட வாழ்நாள் பேராசிரியர் திரு.S.V.பரமேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். 


சிறப்பு விருந்தினராக தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.T.ஜோன் குயின்ரஸ் அவர்களும் கௌரவ விருந்தினராக ஓய்வுநிலை வடமாகாண கல்விப் பணிப்பாளர் திரு.A. இராஜேந்திரன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.


காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன், ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர் திரு.இரதாக்கிருஸ்ணன், கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் திரு.கா.குமாரவேலு, அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கத்தினர், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பெற்றோர் நலன் விரும்பிகளும் சமூகமளித்திருந்தனர்.


நிறுவுநர் சயம்பு நினைவுப் பேருரையை சயம்பு உபாத்தியாயரின் அன்புக்குரிய மாணவரும் கல்லூரியில் நாற்பது ஆண்டுகள் நல்லாசானாகப் பணியாற்றியவருமாகிய அமரர் R.கந்தையா மாஸ்ரர் அவர்களின் புதல்வியும் கல்லூரியின் பழைய மாணவியும் ஆங்கில ஆசிரியையும் ஒய்வுநிலை உதவிக்கல்விப் பணிப்பாளருமாகிய திருமதி.சிவபாக்கியம் நடராஜா அவர்கள் நிகழ்த்தினார்.  


கனடாவில் பிரபல குழந்தை மருத்துவ நிபுணராக பணியாற்றிவரும் மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம் அவர்களினால் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் பெருமுயற்சியினால் நிறுவப்பட்ட 'மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தில்' இருந்து இவ்வாண்டு பரிசளிப்பு விழாவிற்கு முழுமையான நிதி அநுசரணை வழங்கப்பட்டதுடன் பல்வேறு துறைசார் சிறப்புத்திறன் மிக்க 11 மாணவர்களுக்கு 'மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் சிறப்பு விருதுகளும்'  வழங்கப்பட்டிருந்தன.  
மேலம் சிறப்பு விருதுகளாக தரம் 6 முதல் 13 வரையான வகுப்பு ரீதியான பொது தகமைத் தேர்ச்சிக்கான விருதுகளையும் பாடசாலை மட்ட சிறப்பு அணியினருக்கான விருதுகளையும் தேசிய மட்ட சாதனையாளருக்கான விருதுகளும் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் அநுசரணையில் வழங்கப்பட்டன.


ஞாபகார்த்த விருதுகளை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் நால்வர் தமது அன்பிற்குரியவர்களின் நினைவாக வழங்கியிருந்தனர்.


க.பொ.த (சா-த) பரீட்சையில் கணித பாடத்தில் A தர சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசாக கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபர் 'அமரர். சின்னத்தம்பி தம்பிராசா நினைவுப் பரிசிலை' அவரது துணைவியார் திருமதி.மனோன்மணி தம்பிராசா அவர்களும் 


க.பொ.த (சா-த) பரீட்சையில் வாய்ப்பாட்டு இசைப் பாடத்தில் A தர சித்தி பெற்ற மாணவர்களுக்கான 'அமரர். சரஸ்வதி சுப்பிரமணியம் நினைவுப் பரிசிலை' அவரது புதல்வன் குடும்பத்தினரான திரு. திருமதி.சச்சிதானந்தன் குடும்பத்தினரும்


பாடசாலையில் அதிசிறந்த மாணவன் அல்லது மாணவிக்கான  சிறப்பு விருதினை பாடசாலையின் முன்னாள் ஆசிரியர் 'அமரர்.நாகமுத்து கனகசுந்தரம் ஞாபாகார்த்த விருதாக அவரது புதல்வன் திரு.கனக.சிவகுமாரன் அவர்களும்


பாடசாலையில் அதிசிறந்த விளையாட்டு வீரன் மற்றும் அதிசிறந்த விளையாட்டு வீராங்கனை ஆகியோருக்கான விருதினை பாடசாலையின் முன்னாள் அதிசிறந்த விளையாட்டு வீரரும், காரைநகரில் விளையாட்டுத்துறையின் முன்னோடியுமான 'அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை ஞாபாகார்த்த விருதாக அவரது பெறாமகன் திரு.மா.கனகசபாபதி அவர்களும் நிதி அநுசரணை செய்து வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


சிறப்புப் பரிசில்களுக்கும் ஞாபகார்த்த விருதுகளுக்குமாக அறுத்திமூவாயிரம் ரூபா (ரூபா 63,000 ரூபா) நிதி அநுசரiணையாக இவ்வாண்டு பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளையில், மற்றொரு சிறப்பு விருதாக கல்லூரியில் அதிசிறந்த ஆசிரியருக்கான கௌரவ விருதாக பாடசாலையில் நாற்பது ஆண்டுகள் நற்பணியாற்றிய நல்லாசான் 'அமரர். R.கந்தையா ஞாபகார்த்த விருதினை' அவரது புதல்வியும் ஒய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமாகிய திருமதி.சிவபாக்கியம் நடராஜா அவர்கள் நிதி அநுசரணை செய்து வழங்கியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 


விழாவில் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. 


இவ்வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த இரண்டு ஆண்டுகளைப் போல யாழ் நகர முன்னணிப் பாடசாலைகளுக்கு நிகரானதாக மிகநேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு இவ்வாண்டும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


பரிசளிப்பு விழாவில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம். 

 

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி)வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும் 04.07.2015 சனிக்கிழமை காலை இடம்பெற்றது. காணொளிப் பதிவினை இங்கே காணலாம்.

PART-1

PART-2

காரைநகர் தியாகராசா ம.ம.வித்தியாலய வருடாந்தப் பரிசளிப்பு விழா 04.07.2015 சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

DSC_7756 (Copy)

காரைநகர் தியாகராசா ம.ம.வித்தியாலய வருடாந்தப் பரிசளிப்பு விழா 04.07.2015 சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் இடம்பெற்ற விழாவில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீடப் பேராசிரியர் வை.பரமேஸ்வரனும் சிறப்பு விருந்தினராக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் அவர்களும் கௌரவ விருந்தினராக ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆ.ராஜேந்திரன் தம்பதிகளும் கலந்து கொண்டனர்.


நிறுவுநர் உரையினை ஓய்வு நிலை ஆங்கிலத் துறை உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி சிவபாக்கிஜம் நடராசா நிகழ்த்தினார்.


நிகழ்விற்கான அனுசரனையினை வைத்தியக் கலாநிதி விஸ்வலிங்கம் விஜயரட்ணம் நம்பிக்கை நிதியம் வழங்கியது.
 

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி)வருடாந்த பரிசளிப்பு விழா அழைப்பிதழ்

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி)வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுநர் தினமும் நாளை சனிக்கிழமை (04.07.2015) அன்று காலை 9:00 மணிக்கு நடராஜா ஞாபாகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற உள்ளது. 


விழாவிற்குப் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீட வாழ்நாள் பேராசிரியர் திரு.S.V.பரமேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கின்றார். 


சிறப்பு விருந்தினராக தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.T.ஜோன் குயின்ரஸ் அவர்;களும் கௌரவ விருந்தினராக ஓய்வுநிலை வடமாகாண கல்விப் பணிப்பாளர் திரு.A. இராஜேந்திரன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றார்கள்.


நிறுவுநர் சயம்பு நினைவுப் பேருரையை சயம்பு உபாத்தியாயரின் அன்புக்குரிய மாணவரும் கல்லூரியில் நாற்பது ஆண்டுகள் நல்லாசானாகப் பணியாற்றியவருமாகிய R.கந்தையா மாஸ்ரர் அவர்களின் புதல்வியும் கல்லூரியின் பழைய மாணவியும் ஆங்கில ஆசிரியையும் ஒய்வுநிலை உதவிக்கல்விப் பணிப்பாளருமாகிய திருமதி.சிவபாக்கியம் நடராஜா அவர்கள் நிகழ்த்த இருக்கின்றார்.

 
கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவிற்கான நிதி அநுசரணை கனடாவில் பிரபல குழந்தை மருத்துவ நிபுணராக  பணியாற்றிவரும் மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம் அவர்களினால் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் பெருமுயற்சியினால் நிறுவப்பட்ட "மருத்துவ கலாநிதி விசுவலிங்கம் விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தில்" இருந்து பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  


சிறப்பு விருதுகளுக்கும் பணப்பரிசுகளுக்குமான நிதி அநுசரiணையை பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளை வழங்கியிருக்கின்றமையும் இவற்றுள் தமது அன்பிற்குரியவர்கள் நினைவாக நான்கு ஞாபாகார்த்தப் பரிசுகளை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் நால்வர் தமது அன்பிற்குரியவர்களின் நினைவாக நிதி அநுசரணை செய்து வழங்கியிருக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 


க.பொ.த (சா-த) பரீட்சையில் கணித பாடத்தில் A தர சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசாக கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபர்  'அமரர். சின்னத்தம்பி தம்பிராசா நினைவுப் பரிசிலை' அவரது துணைவியார் திருமதி.மனோன்மணி தம்பிராசா அவர்களும் 


க.பொ.த (சா-த) பரீட்சையில் வாய்ப்பாட்டு இசைப் பாடத்தில் A தர சித்தி பெற்ற மாணவர்களுக்கான 'அமரர். சரஸ்வதி சுப்பிரமணியம் நினைவுப் பரிசிலை' அவரது புதல்வன் குடும்பத்தினரான திரு. திருமதி.சச்சிதானந்தன் குடும்பத்தினரும்


பாடசாலையில் அதிசிறந்த மாணவன் அல்லது மாணவிக்கான  சிறப்பு விருதினை பாடசாலையின் முன்னாள் ஆசிரியர் 'அமரர்.நாகமுத்து கனகசுந்தரம் ஞாபாகார்த்த விருதாக அவரது புதல்வன் திரு.கனக.சிவகுமாரன் அவர்களும்


பாடசாலையில் அதிசிறந்த விளையாட்டு வீரன் மற்றும் அதிசிறந்த விளையாட்டு வீராங்கனை ஆகியோருக்கான விருதினை பாடசாலையின் முன்னாள் அதிசிறந்த விளையாட்டு வீரரும், காரைநகரில் விளையாட்டுத்துறையின் முன்னோடியுமான 'அமரர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை ஞாபாகார்த்த விருதாக அவரது பெறாமகன் திரு.மா.கனகசபாபதி அவர்களும் நிதி அநுசரணை செய்து வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 
இதேவேளையில், மற்றொரு சிறப்பு விருதாக கல்லூரியில் அதிசிறந்த ஆசிரியருக்கான கௌரவ விருதாக பாடசாலையில் நாற்பது ஆண்டுகள் நற்பணியாற்றிய நல்லாசான் ‘அமரர். R.கந்தையா ஞாபகார்த்த விருதினை’ அவரது புதல்வியும் ஒய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமாகிய திருமதி.சிவபாக்கியம் நடராஜா அவர்கள் நிதி அநுசரணை செய்து வழங்குகின்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்


கீழே விழாவிற்கான அழைப்பிதழைக் காணலாம். 

Prize Day Invitation 2Prize Day Invitation 1

 

மூதறிஞர் சிவத்திரு.க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் மறைவு குறித்து கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வி(காரை இந்து) சமூகத்தின் கண்ணீர் அஞ்சலி!

Vythees manivasga

ஆயிரம் பிறைகண்ட பேரறிஞர், தத்துவ கலாநிதி சிவஸ்ரீ க. வைத்தீஸ்வரக்குருக்கள் அவர்கள்
எமது கல்லூரியின் பழைய மாணவர்களில் முதுஅறிஞராகவும், மூத்த மாணவனாகவும் விளங்கிய குருக்கள் ஐயா அவர்கள் இறையடி சேர்ந்த செய்தி கேட்டு எமது கல்லூரிச் சமூகம் கலங்கி நிற்கின்றது.

அண்மையில் பவளவிழா மலர் வெளியீட்டில் தள்ளாத வயதிலும் எமது கல்லூரிக்குத் தரிசனம் தந்து மக்களுக்கு ஆசி வழங்கிய பெருமகனாவார். குருக்கள் ஐயா அவர்கள் கற்றறிந்த பேராளன். ஆசாரம், ஒழுக்கம், பேச்சுத்திறன், எடுத்த காரியத்தை திறமையாக முடிக்கும் திறன், விடா முயற்சி, எளிமையான தோற்றம், இனிமையாக வழங்கும் அறிவுரை என்பன ஒருங்கே அமையப்பெற்ற பெருமகனார். அன்னாரின் பிரிவு எமது கல்லூரிச் சமூகத்திற்கும், காரை வாழ் மக்களுக்கும் சைவத்தமிழ் உலகிற்கும் பேரிழப்பாகும். 

அன்னாரின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அவரின் ஆன்மா சாந்தியடய ஈழத்துக் கூத்தனை இறைஞ்சுகின்றோம்.

இவ்வாறு கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய அதிபர். திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் பாடசாலை சமூகத்தின் சார்பில் வெளியிட்ட கண்ணீர் அஞ்சலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முழுமையான கண்ணீர் அஞ்சலிப்பிரசுரத்தைக் கீழே தருகின்றோம். 

vaithees from School