Category: கண்ணீர் அஞ்சலி

கனடா காரை கலாச்சார மன்றம் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் – (நிகழ்ச்சி நிரல்) 28.04.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு.

கனடா காரை கலாச்சார மன்றம்

பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் – 2024

இடம்: ஸ்காபுரோ சிவிக் சென்டர் (Scarborough Civic Centre)
(Committee Rooms 1 & 2)
150 Borough Dr, Scarborough, ON M1P 4N7

காலம்: 28.04.2024 (Apr 28, 2024) ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 9.30 மணிக்கு

நிகழ்ச்சி நிரல்

1. அங்கத்தவர்கள் பதிவும் அங்கத்தவர்கள் தமது கருத்துக்களை தெரிவிக்க நேரம் பதிவு செய்தலும்.

2. கடவுள் வணக்கம்.

3. அகவணக்கம்.

4. தலைவர் உரை.

5. செயலாளர் அறிக்கைகள். (சென்ற பொதுக்கூட்ட அறிக்கை, செயற்பாட்டு அறிக்கை)

6. பொருளாளர் அறிக்கை.

7.  1. நிர்வாக சபையின் பதவிக்காலத்தில் மன்றத்தின் பொதுச்சபை அங்கத்தவர்கள் மன்ற யாப்பு விதிகளை மீறி நிர்வாகத்தில் தலையீடு செய்து நிர்வாகத்தினை குழப்ப முயற்சி செய்தலை முற்றாக தவிர்க்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றுதல்.

       2. கனடா காரை கலாச்சார மன்றத்துக்கும் அதன் செயற்பாட்டாளர்களுக்கும் காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளைக்கும் எதிராக திரு.முத்து பொன்னம்பலம் என்பவரால் நஸ்டஈடு கோரி ஒன்ராறியோ உயர் நீதிமன்றில் ( Ontario Superior Court Justice) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக மன்ற நிர்வாகத்தால் மன்ற அங்கத்தவர்களுக்கு விளங்கப்படுத்தலும் தீர்மானம் நிறைவேற்றுதலும் மற்றும் உபகுழு நியமித்தல்.

8. மன்றத்தின் யாப்பு திருத்தம் மற்றும் உபகுழு நியமித்தல்.

9. இலங்கை ஹட்டன் நேஷனல் (HNB) வங்கியில் உள்ள மன்றத்தின் நிலையான வைப்பு பணம் ஐந்து (5) மில்லியன் ரூபா ஒவ்வொரு மில்லியனாகவும், பத்து லட்சத்து நாற்பத்தைந்தாயிரம் (1,045,000) ரூபா, ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் (150,000) ரூபா மற்றும் ஒரு லட்சம் (100,000) ரூபா அத்துடன் சிவன் கோவில் நித்திய பூசைக்குரிய நிலையான வைப்பு ஐந்து லட்சம் (500,000) ரூபா என ஒன்பது (9) நிலையான வைப்புச் சான்றிதழ்கள் உள்ளன. அறுபத்து இரண்டு லட்சத்து தொன்னூற்று ஐந்தாயிரம் (6.295 மில்லியன் ரூபா – எட்டு நிலையான வைப்புச் சான்றிதழ்கள்) ரூபாக்களை ஒரு சான்றிதழாக மாற்றுவதுடன் கூடிய வட்டி கிடைக்கும் வண்ணம் ஒழுங்கு செய்து அதற்குரிய வட்டிப் பணத்தை மாணவர்களின் கல்விக்கு உதவுவது மற்றும் மற்றைய தேவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் காரைநகர் அபிவிருத்திச் சபை வங்கிக் கணக்கிற்கு நேரடியாக கிடைக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றுதல்.

10. அங்கத்தவர்கள் கருத்துக்களை தெரிவித்தல் மற்றும் வேறு பிரேரணைகளும் தீர்மானம் நிறைவேற்றுதலும்.

11. மன்றத்தின் இருப்புக்கள் (Tent)தொடர்பாக தீர்மானித்தல்.

12. புதிய நிர்வாக சபை தெரிவு.
தலைவர், உபதலைவர், செயலாளர், உப செயலாளர், பொருளாளர், உப பொருளாளர், 13 நிர்வாக சபை உறுப்பினர்கள், 6 தயார்நிலை உறுப்பினர்கள், 3 திட்டமிடல் போஷகர் சபை உறுப்பினர்கள் மற்றும் கணக்காய்வாளர் நியமனம்.
இளையோர் ஒருங்கிணைப்பாளர் தெரிவு. (சென்ற பொதுக் கூட்டத்தில் (24.09.2022) எடுத்த தீர்மானத்திற்கு இணங்க)

13. புதிய நிர்வாக சபைத் தலைவர் உரை.

14. அங்கத்தவர் வருட சந்தா மற்றும் ஆயுள் சந்தா பணம் தீர்மானித்தல்.

15. புதிய நிர்வாக சபையின் எதிர்கால திட்டங்கள்.

16. புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் புகைப்படம் எடுத்தல்.

17. நன்றியுரை.

                                  நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்.

 

 

திருமதி கந்தையா சிவமணி அவர்களின் மறைவு குறித்து கனடா காரை கலாசார மன்றம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி!

திரு.முருகேசு காசிப்பிள்ளை அவர்களின் மறைவு குறித்து கனடா காரை கலாசார மன்றம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி!

kasippillai 2

அமரர்.ஞானேஸ்வரன் அனோஜன் அவர்களின் மறைவு குறித்து காரைநகர் அபிவிருத்திச் சபை வெளியிட்டுள்ள கண்ணீர் காணிக்கை.

திரு.சபாரத்தினம் பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவு குறித்து கனடா காரை கலாசார மன்றம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி!

திரு.வெற்றிவேலு நடராஜா அவர்களின் மறைவு குறித்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

சிவநெறிச் செல்வர் திரு.தில்லையம்பலம் விசுவலிங்கம் அவர்களின் மறைவு குறித்து கனடா காரை கலாசார மன்றம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி!

திரு.மயில்வாகனம் ஆனந்தரெட்ணசாமி அவர்களின் மறைவு குறித்து சிந்துஜா போட்டொ அன் வீடியோ நிறுவனத்தினர் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி!

திரு.இராமலிங்கம் மனோகரன் அவர்களின் மறைவு குறித்து கனடா காரை கலாசார மன்றம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி!

திருமதி சிவலிங்கம் சொர்ணம் அவர்களின் மறைவு குறித்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

கண்ணீர் அஞ்சலி, அமரர் கந்தையா சிவக்கொழுந்து (மெய்கண்டார் ஆதீனம்) (பாலாவோடை,களபூமி,காரைநகர்) (தேக்கவத்தை ,வவுனியா)

திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்களின் மறைவிற்கு கனடா-காரை கலாசார மன்றம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தி.

திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்களின் மறைவிற்கு

கனடா-காரை கலாசார மன்றம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தி.

கனடா-காரை கலாசார மன்றத்தின் பணிகளில் மிகுந்த அக்கறையுடன் ஈடுபட்டு வந்தது மட்டுமல்லாது அச்சங்கத்தில் நிர்வாக சபை உறுப்பினராகவும், திட்டமிடல் போசகர் சபை உறுப்பினராகவும், கணக்காய்வாளராகவும் பொறுப்பு மிக்க பதவிகளை வகித்து மன்றத்தின் வளர்ச்சியை முன்னெடுத்து வந்த திரு.முருகேசம்பிள்னை வேலாயுதபிள்ளை அவர்களின் மறைவுச் செய்தி கனடா-காரை கலாசார மன்றத்தினை கலங்கவைத்துள்ளது.

திரு.வேலாயுதபிள்ளை அவர்கள் தமது அனுபவங்களையும் அறிவையும் பகிர்ந்துகொண்டு எமது சங்கத்தின் நேரிய செயற்பாட்டிற்கு வழிகோலியவர். சங்கத்தின் எத்தகைய நிகழ்வானாலும் அவையனைத்திலும் தவறாது கலந்துகொண்டு தமது ஊர் அபிமானத்தை வெளிப்படுத்தி வந்தவர். கடந்த பல ஆண்டுகளாக மன்றத்தின் ஒன்றுகூடல் நிகழ்விற்கு பழம்சோற்றுத் தண்ணீர் தயாரித்து வந்து பரிமாறி வந்தமையையும் அதனை பலரும் விரும்பி பருகி வந்ததையும் சிறப்பாக குறிப்பிடலாம். அனைருடனும் மலர்ந்த முகத்துடன் அன்பாகப் பழகி நட்பு கொண்டாடி மகிழ்வதில் இவருக்கு இருந்து வந்த ஆர்வம் பாராட்டப்படக்கூடிதாகும். மன்றத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளிற்கு ஆலோசகைள் பெறுவதற்கு இவரை அணுகி வந்தமை இவரது சிறந்த ஆளுமைக்கு சான்று பகர்வதாகவுள்ளது. திரு.வேலாயுதபிள்ளை அவர்கள் மன்றத்திற்கு வழங்கிய அர்ப்பணிப்பு மிக்க பெரும் சேவையை கருத்திற்கொண்ட மன்ற நிர்வாகம் அதன் வருடாந்த கலை விழாவிற்கு பிரதம விருந்தினராக அழைத்து பெருமைப்படுத்தியதை இத்தருணத்தில் நினைவுகூரலாம்.

திரு.வேலாயுதபிள்ளை அவர்களது மறைவினால் துயரக்கடலில் மூழ்கித் தவிக்கும் அன்னாரது குடும்பத்திற்கு கனடா-காரை கலாசார மன்றம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றது.

கனடா-காரை கலாசார மன்றம்

 

திரு.ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி (ஐ தி சம்பந்தன்) அவர்களின் மறைவு குறித்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

திரு.அருணாசலம் தம்பிப்பிள்ளை கருணாகரன் அவர்களின் மறைவு குறித்து காரை விளையாட்டு கழகம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

1641118574896328

திருமதி பாலசிங்கம் சிவபாக்கியம் (இடைப்பிட்டி,காரைநகர்) அவர்களின் மறைவு குறித்து பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

அமரர் திருமதி.விஜயலட்சுமி மகேந்திரன் (இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் மறைவு குறித்து காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி!

திருமதி சுப்பிரமணியம் அன்னலட்சுமி அவர்களின் மறைவு குறித்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

திரு.கந்தையா அன்னலிங்கம் அவர்களின் மறைவு குறித்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

திரு.கந்தையா அன்னலிங்கம் அவர்களின் மறைவு குறித்து காரை ஒன்றியம் ஜெர்மனி வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

 

கண்ணீர் அஞ்சலிகள்

காரை ஒன்றியம் ஜெர்மனியின் உபதலைவரும் ஒன்றியத்தின் ஆரம்பகாலங்களில் ஒரு வழிகாட்டியாகவும் செயற்பட்டவருமான திரு.கந்தையா அன்னலிங்கம் அவர்களின் இழப்பு காரைநகர் மக்களிற்கு ஒரு பேரிழப்பாகும்.

சங்கங்கள், சபைகளுக்கு அப்பால் அன்னார் ஜெர்மனிக்கு இடம்பெயர்ந்த காலங்களில் இருந்தே காரைநகர் மக்களின் நலன்களில் மிகுந்த அக்கறை காட்டியவர். ஜெர்மனியில் வாழ்ந்த காரைநகர் மக்களுக்கு 80 களிலேயே உதவிக்கரம் நீட்டி அரவணைத்துக் கொண்டவர்.

வேலை வாய்ப்புக்கள், சமூக நலன்கள், வதிவிடப் பிரச்சனைகள் என வாழ்ந்த காரைநகர் மக்களுக்கு ஜெர்மனியில் தன்னால் முடிந்த அளவிற்கு மேலாக அனைத்து விதங்களிலும் முன்னின்று உழைத்தவர் .

காரைநகரின் வளர்ச்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டு காரைநகர் பாடசாலைகள், விளையாட்டுக் கழகங்கள் என்பவற்றிற்கு என்றும் தனது உதவிகளை செய்து வந்தவர்.

ஐரோப்பாவில் இயங்கும் அனைத்துக் காரைநகர் மக்களின் அமைப்புக்களுடனும் தொடர்புகளை பேணி அவற்றினூடாக காரைநகர் மக்களிற்கான உதவிகளை ஊக்குவித்தவர்.

காரைநகர் மக்களுக்கு ஜெர்மனியில் ஒரு அமைப்பு உருவாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் முன்னோடியாகவும் வாழ்ந்தவர்

நல்ல ஒரு நண்பர், சிறந்த குடும்பத்தலைவன் இன்று எங்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்டார்

அன்னாரின் இழப்பிற்கு ஜெர்மனியில் வாழும் காரைநகர் மக்களின் சார்பாக கண்ணீர் அஞ்சலிகள்

காரை ஒன்றியம் ஜெர்மனி

 

சோதி அங்கிள் சொல் அல்ல செயல்.

சோதி அங்கிள் சொல் அல்ல செயல்.

நான் என்னை உன்னிடம் கொடுத்தேன். உன்னை அடைந்து கொண்டேன். சங்கரா! நம்மில் யார் கெட்டிக்காரர் என்று கேட்கிறார் மாணிக்கவாசகர். அசைகின்ற எல்லாமும் சக்தி. அசையாதது சிவன். இறந்து போதல் என்றால் என்ன? நெருப்பு மூட்டி எரித்தால் வலிக்காதா? ஏன் வலிக்காமல் போயிற்று? எது இருந்தால் வலி? எதை இழந்தால் மரணம்? எது இருந்து என்னை இயக்கியது? அது இப்பொழுது எங்கே? அது போனதால் தானே இறப்பு. இந்த உடம்பு மெல்ல மெல்ல நெருப்புப் பட்டு சாம்பலாகி விடும். ஓன்றுமே இருக்காது. உடம்பு காணாமல் போய் விடும். என்னை நீ எடுத்துக் கொள். இது உனக்குச் சொந்தம். நான் என்பது இங்கு இல்லை. என்று சகலமும் விட்டு விட்டு வெறும் குச்சியாக தண்டமாக மாறிவிடும். கடவுளிடம் தன்னை ஒப்படைத்தவருக்கு எந்தக் கவலையும் இல்லை. கடவுள் அவரை நிச்சயம் காப்பாற்றுவார். எப்படி காப்பாற்றுவார்? அது கடவுளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.!

மனிதர்கள் மறைந்து விட்டாலும் அவர்களைப் பற்றிய நினைவுகள் என்றும் நினைவில் நிலைத்திருக்கும். அவர்களுடைய சாதனைகள் எப்போதும் நம் மனத்திரையில் நிழலாடிக் கொண்டிருக்கும். அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்த என் தாய் மாமனைப் பற்றி பல வருடங்கள் பின்நோக்கிப் பார்க்கின்றேன். அவருடைய கடமை உணர்வும் கண்ணியமும் கட்டுப்பாடும் என் வரலாற்று ஏட்டில் மறக்க முடியாத பக்கங்கள். ஒரு தனி மனிதனுக்கு இருக்க வேண்டிய குணங்கள் தகுதிகள் உணர்வுகள் யாவும் ஒருங்கே காணப்பட்டவர். புகழ் பதவி ஆசை ஆடம்பரத்தை வெறுத்து எளிமை நேர்மை உழைப்பு தகுதி ஆற்றல் தியாகத்தையே தன் உருவமாக வடிவமைத்துக் கொண்டவர். எங்கள் குடும்பத்தின் பிதாமகன் என்றால் கூட மிகையாகாது. ஏனெனில் இவர் தான் மூத்தவர். தலை இல்லாமல் வால் ஆடுவது இந்தக்காலம். அப்பொழுதெல்லாம் தலை இருக்க வால் ஆடியது இல்லை. சோதி அங்கிளை விட்டு விட்டு எங்கள் குடும்பத்தின் வரலாற்றை ஆராய முடியாது. நா.முத்துக்குமார் எழுதிய வேடிக்கை பார்ப்பவன் நாவல் போல தான் நான் இருந்திருக்கின்றேன். சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று தேவை! விடியும் பொழுது யாருக்காகவும் எதற்காகவும் நிற்பதில்லை என்பதை உணர்ந்து தன் ஒவ்வொரு பொழுதையும் தனக்கான விழுதாகப் பயன்படுத்தி வாழ்வில் வளம் சேர்த்தவர். வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் இன்னல்கள் வேதனைகள் இருக்கலாம். அவற்றையெல்லாம் முறியடித்து விடியும் பொழுதை தனக்குரியதாக்கியவர். வாழ்க்கை முன்னேற்றுத்துக்குத் தேவையான வசதிகள் இல்லாத காலத்திலேயே மனக்குழப்பங்கள் பிரச்சினைகள் எல்லாவற்றையும் தாண்டி தன்னை முன்நிறுத்தியவர். வசதியாக வாழ்வதல்ல மகிழ்ச்சியாக இருப்பதே முக்கியம் என்பவர்.

ஒவ்வொரு மனிதனுக்குப் பின்னாலும் ஏதோ ஒரு மந்திரச்சொல் இருக்கிறது. அடிபட்டவர்களுக்கு ஆறுதல் உரம் ஊட்டுவது தான் இந்த மந்திரச்சொல். ஸ்டீபன் ஷாகின்ஸ் சொன்னது போல எதை இழந்தீர்கள் என்பதல்ல எது மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கை வழியும் எப்போதோ முடிந்த காரியம்! இதை மனதில் இருத்திக்கொண்டால் எந்தவித கர்வமும் எழாது. செய்யும் காரியத்தில் விருப்பு வெறுப்பு இருக்காது. பலன் எதிர்பார்க்காது. அப்போது அந்தக் காரியம் மிகச் சிறப்பாக செயல்படும். கர்வமற்ற சீரான செயல்கள் உடைய வாழ்க்கை உன்னதமாக இருக்கும். அதுவே வாழ்க்கை. மற்றதெல்லாம் குழப்பங்கள்.

ஆன்மா உடலைப் பிரிந்த பொழுது இன்னும் ஜொலிப்பாகி சுடராகி மேலெழுந்து வெளி முழுவதும் கலந்து இது இன்னொரு விஸ்வரூபம். நான் சாதாரணன் இல்லையென்று சொன்ன சாட்சி.

நீங்கள் வாழ்வதற்கு புறப்படுங்கள் நான் விடைபெறுகின்றேன் என்ற சாக்ரடீஸ் வரிகள் தான் ஞாபகம் வருகிறது. பிறவியின் உயர்ந்த இலட்சியம் முக்தி. அதை அந்த ஆண்டவன் ஆடவல்லான் அவருக்கு நல்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.

அன்புடன் மருமகன்
கணபதிப்பிள்ளை ரஞ்சன்.

 

ஓய்வு நிலை அதிபர் திரு K.K.நடராஜா அவர்களின் மறைவு குறித்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி!

திரு கே.கே.நடராஜா அவர்களின் மறைவு குறித்து பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம் வெளியிட்டுள்ள விழிநீர் விசும்பல்!

ஓய்வுநிலை ஆங்கில ஆசிரியர் தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் அவர்களது மறைவிற்கு மரபுக் கவிஞர் நந்திவர்மன் (சிட்னி, அவுஸ்திரேலியா) அனுப்பி வைத்துள்ள கவிதாஞ்சலி!

 

 

 

 

அன்பார்ந்த மாமா

திரு.பொன்னையா திரவியநாதன் அவர்களின் மறைவு குறித்து பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

திரு சபாபதி சபாநாயகம் அவர்களின் மறைவு குறித்து பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கத்தின் கண்ணீர் அஞ்சலி

அமரர் மகாலட்சுமி தில்லையம்பலவாணர் அவர்களின் மறைவு குறித்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

அமரர் சுப்பிரமணியம் நித்தியானந்தம் (நித்தி) அவர்களின் மறைவு குறித்து பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கம் வெளியிட்டுள்ள மலரஞ்சலி

அமரர் தில்லையம்பலவாணர் மகாலட்சுமி அவர்களின் மறைவு குறித்து காரை அபிவிருத்திச் சபை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

தர்சனன் தேவராசா அவர்கள் கல்வி பயின்ற கொழும்பு இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு.த.முத்துக்குமாரசாமி அவர்கள் அன்னாரதும் குடும்பத்தினரதும் மறைவு குறித்து வழங்கிய அனுதாபச் செய்தி.

 

தர்சனன் தேவராசா அவர்கள் கல்வி பயின்ற

கொழும்பு இந்துக் கல்லூரியின்

முன்னாள் அதிபர் திரு.த.முத்துக்குமாரசாமி அவர்கள்

அன்னாரதும் குடும்பத்தினரதும் மறைவு குறித்து வழங்கிய

அனுதாபச் செய்தி.

23-02-2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.14மணியளவில் ஏற்பட்ட கோர விபத்தில் இராமலிங்கம் சோமசுந்தரம், ஆறுமுகம் தேவராசா, தேவராசா சுகந்தினி, தேவராசா தர்சனன், வாகன ஓட்டுனர் ஆகியோர் உயிர் இழந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். எங்கிருந்தோ வந்த பஸ் வண்டி உங்களுக்குச் சதியாகும் என்று யார் நினைத்திருப்பார்கள். இது விதியின் விளையாட்டா? அல்லது பஸ் வண்டிச் சாரதியின் விளையாட்டா? எதுவும் புரியவில்லை.

குன்றாத செல்வமும் குறைவற்ற புகழுடனும் வாழ்ந்து வந்தவர்கள் இவர்கள். நான் கொழும்பு இந்துக் கல்லூரியின் அதிபராக வந்ததிலிருந்து இவர்களைப்பற்றி நன்கு அறிவேன். இவர்களில் தேவராசா தர்சனன் எமது மாணவன். அவனது அப்பா, அம்மா, பேரன் அடங்கலாக நால்வரும் எமது கல்லூரியுடன் நெருக்கமாக வாழ்ந்தவர்கள். செல்வம், புகழ் எல்லாம் மனித வாழ்வில் நிலையற்றவை என இவர்களின் இறப்பு எடுத்துக் காட்டுகின்றது. நகமும் சதையும் என மிகவும் அன்போடும் பாசத்துடனும் வாழ்ந்த குடும்பத்திற்கு இந்நிலை ஏற்பட்டதையிட்டு வேதனை அடைகின்றேன்.

வாழ்க்கை என்பது ஆயிரம் காலத்துப் பயிர். அந்தப் பயிரின் வாழ்வை கபடம் நிறைந்த காலன் பறித்து விட்டான். “எப்பவோ முடிந்த காரியம்” எனக் கூறிய சிவயோக சுவாமிகளின் வாக்கு முற்றிலும் உண்மையானது. பிறப்பும் இறப்பும் இறைவன் நியதி. கொடுத்தவனே எடுத்துக்கொண்டான் என எம் மனங்களை யாராலும் தேற்றமுடியாது. எமது கல்லூரி அழைப்பு விடுத்தால் உடன் வரும் தர்சனனும் இன்றில்லை. அவன் தாய் தந்தையரும் இன்றில்லை. நல்ல பெற்றார்களாக பாடசாலைக்கு வந்து அதிபர் ஆசிரியர்களுடன் தேவையான விடயங்கள் தொடர்பில் அளவளாவி வேண்டிய உதவிகள் செய்த அத் தாய் தந்தையரின் உயிர்களையும்கூடக் காலன் பறித்து விட்டான்.

தர்சனன் எனது காலத்திலேயே பாடசாலையில் சேர்ந்து உயர் கல்வி வரை கல்வி கற்றுச் சென்ற மாணவன். சின்னக் காலெடுத்து சிங்காரக் கதை பேசி வண்ண மொழியாம் தமிழை வண்ணமாகக்கொண்டு அரிச்சுவடியினை இந்துக் கல்லூரியில் ஆரம்பித்ததை எண்ணிப் பார்க்கின்றேன். கல்வியை கருத்தூன்றிக் கற்ற சிறந்த மாணவன். குடும்பத்தை ஒரு கண்ணாகவும் பாடசாலையை மறு கண்ணாகவும் கொண்டு வாழ்ந்தவன்.

தர்சனன் படிப்பில் மட்டுமா? சொற்போர், பேச்சுப்போட்டி, நாடகம், உதை பந்தாட்டம், தடகள விளையாட்டுப் போட்டி அனைத்திலும் பங்குபற்றி பல பரிசுகளையும் கேடயங்களையும் அதிபர், ஆசிரியர்கள் போற்றி நிற்கும் வகையில் பெற்றுக்கொண்ட நிலைகள் நினைவுக்கு வருகின்றன. பாடசாலையின் மன்றச் செயற்பாடுகளில் தலைவர், செயலாளர் பதவிகள் பிரதி சிரேஷ்ட மாணவ தலைவன், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் படைப்பிரிவு போன்ற நிலைகளில் நின்று செயற்பட்ட விதங்கள் மற்றவர்களை பிரமிக்கச் செய்தன. ஒலி வாங்கியின் முன் நீ ஆற்றிய உரைகள், அறிவித்தல்கள், பேச்சு, சொற்போர் நிகழ்வுகள் உனது கணீரென்ற குரலுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. பிரதி சிரேஷ்ட மாணவ தலைவனாக இருந்து மற்றைய மாணவ தலைவர்களுடன் சேர்ந்து பாடசாலையின் ஒழுக்க விழுமியங்களைப் பேணி பாடசாலையின் நற்பெயரை மேம்படுத்தச் செய்த செயற்பாடுகள் அளவற்றன. பாடசாலையில் நீ கால் பதிக்காத இடங்கள் இல்லை என்றே கூறலாம். கல்லூரி நிகழ்வுகளில் நீ ஓடிவந்து செய்யும் செயல்கள், அர்ப்பணிப்புக்கள் நினைவில் ஊஞ்சலாடுகின்றன.

மகிழ்வோடு எப்போதும் சிரித்த முகம், துடுக்கான கதை, பாசம் நிறைந்தவனாய், பண்பு மிக்கவனாய் அனைவருடனும் பழகி, கதைத்து நிற்கும் உன்கோலம், உன் பணிவால், செயலால் ஆசிரியர்களின் மனதில் நீங்காத இடம்பெற்ற ஒரு நல் மாணவனாக விளங்கினாய். மனித நேயம் கொண்ட ஒருசில மக்களில் குணத்தால், செயலால் முதலிடம் பெறும் தர்சனன் சாதாரண மனிதர்களிடம் காணமுடியாத அளப்பெரும் அன்பையும், அறிவையும் ஆற்றலையும் பெற்றிருந்தான். இனியசொல், தெளிந்தகொள்கை, செயலில் உறுதி இவற்றிற்கு உரியவர்களே சாதிக்கக்கூடியவர்கள் எனச் சாதித்துக்காட்டியவன் நீ. இவ் உலகைவிட்டு நீங்கினாலும் நீ கல்லூரிக்கு விட்டுச்சென்ற நினைவுகள் பல. உன்னைச் சுற்றி உன் இந்துவின் அன்பு நண்பர்கள், மாணவ தலைவர்கள், ஆசிரியர்கள் ஏங்கி நிற்கின்றனர். உன் துணிச்சல் யாரிடமும் இல்லை. உன் மனத்தைரியம், எதையும் தாங்கும் இதயம், எம் கல்லூரி மீது நீ வைத்திருக்கும் பற்று, அன்பு எமது கல்லூரி என்றால் நீ துடிக்கும் துடிப்பு எல்லாம் சுக்குநூறாகிவிட்டதே. இல்லறமாகிய நல்ல தர்மத்தில் இணைந்து அருளோடும் அறிவோடும் வாழ்ந்த தர்சனன் இன்று இல்லை. நீ வாழ்க்கையில் நிறையச் சாதிப்பாய், மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்வாய், மாணவச் சந்ததியினருக்கு உன்னை உதாரணம் காட்டி மகிழலாம் என்றிருந்தபோது நீ எல்லோரையும் தவிக்கவிட்டுச் சென்றுவிட்டாயே. மண்ணுலகில் பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் எனப் பல்லாயிரக்கணக்கானவர்கள் வாழ்ந்து மடியும் இவ் உலகில் கல்லூரி வரலாற்றில் சாகா வரம்பெற்று என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் சாதனையாளர் பட்டியலில் நீங்கா இடம்பெற்ற உத்தம மாணவனாக நீ திகழ்வாய்.

இவர்களது பிரிவுத் துயரை இவரது உறவுகளால் மட்டுமல்லாது இவர்களை நன்கு அறிந்தவர்களாலும் ஜீரணிக்க முடியாது. விதியும் இறை அழைப்பும் வர இவர்கள் இறையடியை நாடியுள்ளனர் என ஆறுதலடைவோமாக.

இவர்களின் பிரிவால் ஆறாத் துயர்கொண்டுள்ள தர்சனின் ஆருயிர்த் தம்பி ஹர்சனனிற்கும் ஏனைய உறவினர்கட்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இவர்கள் மறு உலகில் ஆன்ம ஈடேற்றம்பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக.

த.முத்தக்குமாரசாமி
ஓய்வுநிலை அதிபர்,
இந்துக் கல்லூரி, கொழும்பு.

 

திருமதி தவநாயகி பாலசிங்கம் அவர்களின் மறைவு குறித்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை வெளியிட்டுள்ள இதய அஞ்சலி