Category: பாடசாலைகள்

சுப்பிரமணிய வித்தியாசாலையின் பிரதான மண்டபத்தின் திருத்த வேலைகள் கனடா-காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் 2024/மார்ச் மாதம் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.

சுப்பிரமணிய வித்தியாசாலையின் பிரதான மண்டபத்தின் திருத்த வேலைகள் கனடா-காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் 2024/மார்ச் மாதம் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.

காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை பிரதான மண்டபத்தின் முற்பகுதி அலுமினியம் வலை பொருத்தப்பட்டு இரண்டு நுழை வாயில்கள் அமைக்கப்பட்டு அவற்றிற்கு கதவுகளும் பொருத்தப்பட்டுள்ளன. பாடசாலை அதிபரின் கோரிக்கையின் அடிப்படையில் குறிப்பிட்ட இந்த வேலைகளை நிறைவு செய்வதற்கு கனடா-காரை கலாசார மன்றம் நான்கு இலட்சத்து இருபத்தேழாயிரத்து தொழாயிரத்து ஐம்பது ரூபாவினை (427950.00 ரூபா) காரை அபிவிருத்திச் சபையின் ஊடாக உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வேலைகள் நிறைவுசெய்யப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட பிரதான மண்டபத்தின் புகைப் படங்களை கீழே பார்வையிடலாம்:

 

க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களிற்கு பிரபல்யம் மிக்க வளவாளர்கள் பங்குகொண்ட கல்விக் கருத்தரங்கு கனடா-காரை கலாசார மன்றத்தின் பூரணமான அனுசரணையில் சிறப்பாக நடைபெற்றது.

 

க.பொ.த.சாதாரண பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களிற்கு பிரபல்யம் மிக்க வளவாளர்கள் பங்குகொண்ட கல்விக் கருத்தரங்கு கனடா-காரை கலாசார மன்றத்தின் பூரணமான அனுசரணையில் சிறப்பாக நடைபெற்றது.

காரைநகர்ப் பாடசாலைகளிலிருந்து; க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்ற மாணவர்களை தயார்படுத்தி நம்பிக்கையோடு பரீட்சையை எதிர்கொண்டு அவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் உன்ற நோக்குடன் கனடா-காரை கலாசார மன்றத்தின் அனுசரணையுடன் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் கடந்த சில ஆண்டகளாக நடைபெற்று வருகின்ற கல்விக் கருத்தரங்கானது மாணவர்களதும் ஆசிரியர்களதும் வரவேற்பனைப் பெற்ற செயற்பாடாக அமைந்து விளங்குவதாகும். ஆந்த வகையில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள குறிப்பிட பரீட்சைக்குத் தோற்றவுள்ள 120 வரையான மாணவர்களிற்கு விஞ்ஞானம் தமிழ் சமயம் வரலாறு ஆகிய பாடங்களிற்கான செயரமர்வு காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில்  வெள்ளி சனி ஞாயிறு (05.05.2023, 06.05.2023, 07.05.2023) ஆகிய தினங்களிலும் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது. பாடசாலைகளின் ஆசிரியர்களுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல்யம் மிக்க ஆசிரியர்களும் இணைந்து மாணவர்கள் திருப்தியடையும் வண்ணம். மிகுந்த பயனுள்ள இககல்விக் கருத்தரங்கினை நடாத்தியிருந்தனர்.

இக்கருத்தரங்கானது தமக்கிருந்த பல சந்தேகங்களையும் தீர்த்து வைத்து தெளிவூட்டலை ஏற்படுத்தியிருந்ததாகவும் எதிர்காலத்தில் இதனை தொடர்ந்து நடாத்துவது மட்டுமல்லாது ஏனைய தொகுதிப் பாடங்களையும் இதில் இணைத்துக் கொள்வது அவசியமானது எனவும் அக்கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவர்கள் தமது கருத்தக்களை பதிவிட்டுள்ளனர். அத்துடன் இக்கருத்தரங்கிற்கான பூரண அனுசரணையினை வழங்கி உதவிய கனடா-காரை கலாசார மன்றத்திற்கும் தமத நன்றியையும் பாராட்டினையும் தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

கனடா-காரை கலாசார மன்றத்தின் அனுசரணையில் கணித பாடத்திலான முன்னோடிப் பரீட்சையும் பயிற்சிக் கருத்தரங்கும் ஏற்கனவே தனியாக நடைபெற்றிருந்தமை வாசகர்கள் அறிந்ததாகும்.

கருத்தரங்கில் பங்குகொண்ட அனைவருக்கும் தேநீர் சிற்றுண்டு வகைகள் என்பன மூன்று நாட்களிலும் பரிமாறப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

புகைப்படங்களை கீழே பார்வையிடலாம்:

 

கனடா-காரை கலாசார மன்றத்தின் அனுசரணையில் க.பொ.த. பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணித பாடத்திலான முன்னோடிப் பரீட்சை பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுள்ளது.

 

கனடா-காரை கலாசார மன்றத்தின் அனுசரணையில் க.பொ.த. பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணித பாடத்திலான முன்னோடிப் பரீட்சை பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள க.பொத. சாதாரண தரப் பரீட்சைக்கு காரைநகர்ப் பாடசாலைகளிலிருந்து தோற்றவுள்ள மாணவர்களிற்கு கணித பாடத்திலான் முன்னோடிப் பரீட்சை சென்ற 16-04-2023 அன்று இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி ஆகியனவற்றில் நடைபெற்றிருந்தது. காரை வாழ் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கனடா-காரை கலாசார மன்றத்தின் பூரண அனுசரணையில் நடைபெற்ற இவற்றில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர். காரைநகர் இந்துக் கல்லூரி யாழ்ற்ரன் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த கணிதபாட ஆசிரியர்களின் முழுமையான உதவியுடனும் பங்களிப்புடனும்; நடாத்தப்பட்டிருந்த இம்முன்னோடிப் பரீட்சையில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களுடன் கலந்துரையாடப்பட்டு அவர்களின் சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்பட்டிருந்தன.

 

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு.

 

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு.

காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் கல்விபயின்று இவ்வாண்டு இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்றுச் சித்தியடைந்த 27 மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு 25.02.2023 சனிக்கிழமை காரைநகர் சுப்பிரமணிய வித்தியாலய மண்டபத்தில் கல்லூரி முதல்வர் திரு.து.குலதீபன் தலைமையில் இடம்பெற்றது.

ஓய்வுநிலை வடமாகாணக் கல்வி அமைச்சின் பிரதிச் செயலரும் ஓய்வு நிலை வடமாகாணக் கல்விப் பணிப்பாளருமான திரு ப.விக்னேஸ்வரன் அவர்களும் உரையாற்றியிருந்தார்.  பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு நிலை அதிபர்கள், ஆசிரியர்களும் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாணக் கல்விப்பணிப்பாளர்திரு. ஜோன் குயின்ரஸ் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பரிசில் வழங்கிக் கௌரவித்தார்.

காரைநகரின் வரலாற்றில் முதற் தடவையாக இவ்வாண்டு காரைநகர் வலந்தலை தெற்கு அ.மித.க. பாடசாலையில் ஒரே தடவையில் 13 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து சாதனை புரிந்துள்ளனர். இதுவரை காரைநகரின் வரலாற்றில் யாழ்ற்ரன் கல்லூரியில் ஒரே தடவையில் 12 மாணவர்கள் சித்தியடைந்தமையே வரலாற்றுப் பதிவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காரைநகர் வலந்தலை தெற்க அ.மி.த.க.பாடசாலை பழைய மாணவனும் புலம்பெயர் நாட்டில் வதியும் அன்பர் ஒருவரின் நிதி அனுசரணையுடன் இந்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

காரைநகர் பாடசாலைகள் ரீதியாக வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்றுச் சித்தியடைந்த மாணவர்களின் விபரம் வருமாறு.

 

 

காரைநகர் தோப்புக்காடு மறைஞான சம்பந்த வித்தியாசாலை அதிபர் திருமதி மங்களேஸ்வரி தேவராசா அவர்களின் சேவைநலன் பாராட்டு விழா அழைப்பிதழ்! (21.12.2022)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Sevai nalan paarattu

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான 2ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 26.11.2022 சனிக்கிழமை இடம்பெற்றது.

 

கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரணையுடன்

காரைநகர் அபிவிருத்திச் சபையினால்

காரைநகர் கோட்டப் பாடசாலைகளில்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான

2ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 26.11.2022 சனிக்கிழமை இடம்பெற்றது.

காரைநகர் சுப்பிரமணிய வித்தியாலயத்தில் காரைநகர் வலந்தலை தெற்கு அமி.த.க. பாடசாலை அதிபர் க.நேத்திரானந்தன் தலைமையில் ஆரம்பமான இந்தச் செயலமர்வில் யாழ் பிரபல பாடசாலை ஆசிரியர்களினால் கற்பித்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் வழிகாட்டல் குறிப்புக்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இவ்வாண்டு டிசெம்பர் மாதம் 18ம் திகதி இடம்பெற உள்ள இந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்ற உள்ள காரைநகர் கோட்ட பாடசாலை மாணவர்கள் 145 பேரில் 135 மாணவர்கள் இந்த வழிகாட்டல் செயலமர்வில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இந்தச் செயலமர்வில் கலந்துகொண்ட அனைத்துப் பிள்ளைகளுக்கும் இரு தடவைகள் சிற்றுண்டி வழங்கப்பட்டதுடன் காலை 8.30 மணிதொடக்கம் பிற்பகல் 2.30 மணிவரை இந்தச் செயலமர்வு இடம்பெற்றது. முதலாம் கட்ட செயலமர்வு 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

காரை கலாசார கனடா மன்றத்தின் அனுசரணையுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையினால் காரைநகர் கோட்டப் பாடசாலைகளில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான 1ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

 

 

காரை கலாசார கனடா மன்றத்தின் அனுசரணையுடன்

காரைநகர் அபிவிருத்திச் சபையினால்

காரைநகர் கோட்டப் பாடசாலைகளில்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான

1ம் கட்ட வழிகாட்டல் செயலமர்வு 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

காரைநகர் சுப்பிரமணிய வித்தியாலயத்தில் காரைநகர் வலந்தலை தெற்கு அமி.த.க. பாடசாலை அதிபர் க.நேத்திரானந்தன் தலைமையில் ஆரம்பமான இந்தச் செயலமர்வில் யாழ் பிரபல பாடசாலை ஆசிரியர்களினால் கற்பித்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன் வழிகாட்டல் குறிப்புக்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இவ்வாண்டு டிசெம்பர் மாதம் 18ம் திகதி இடம்பெற உள்ள இந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்ற உள்ள காரைநகர் கோட்ட பாடசாலை மாணவர்கள் 145 பேரில் 117 மாணவர்கள் இந்த வழிகாட்டல் செயலமர்வில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இந்த செயலமர்வில் ஆயிலி சிவஞாணோதயா வித்தியாலய அதிபர் இ.வசீகரன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் காரைநகர் அபிவிருத்திச் சபை செயலாளர். பொருளாளர் உள்ளிட்ட சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

2ம் கட்டச் செயலமர்வு எதிர்வரும் சனிக்கிழமை (26.11.2022) காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் இடம்பெற உள்ளது. இந்தச் செயலமர்வில் கலந்துகொண்ட அனைத்துப் பிள்ளைகளுக்கும் இரு தடவைகள் சிற்றுண்டி வழங்கப்பட்டதுடன் காலை 8.30 மணிதொடக்கம் பிற்பகல் 2.30 மணிவரை இந்தச் செயலமர்வு இடம்பெற்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 8ம்,9ம்,10ம்,11ம்,12ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 8ம்,9ம்,10ம்,11ம்,12ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக 12 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் வீதம் நிரந்தர வைப்பில் இடப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி பணத்தினை பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு அதனை உறுதி செய்து கொண்டு இந்நிரந்தர வைப்பு நிதியினை பெற்றுக்கொண்டார்கள்.

அதன் அடிப்படையில் கிடைக்கப்பெறும் வட்டிப் பணத்தின் 50 விகிதமான நிதியானது நேரடியாக கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளான மேலதிக வகுப்புக்களிற்கான ஆசிரியர் வேதனம், மெல்ல கற்கும் மாணவர்களிற்கான விசேட வகுப்புக்கான ஆசிரியர் வேதனம் மற்றும் அதற்குரிய செலவீனங்ளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் வங்கி வட்டியில் இருந்து கிடைக்கப்பெறும் 20 விகிதமான நிதியானது இணைப்பாட விதான செயற்பாடுகளான விளையாட்டு, தமிழ் திறன் போட்டி, பரிசளிப்பு நிகழ்வுகளிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தின் 20 விகிதம் மேலதிகமாக மாதந்தம் துண்டுவிழும் மின்சார கட்டணம்,சிறு திருத்த வேலைகள் பயன்படுத்த முடியும்.

மிகுதி 10 விகிதமான நிதி சுகாதாரம்(மலசலகூட சுத்திகரிப்பு),உணவு ,குடிநீர் தேவைகளிற்கான கொடுப்பனவுகளிற்காகவும் பயன்படுத்த முடியும் எனவும் திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் பாடசாலைகள் ஒவ்வொன்றும் வருடத்திற்கு இரண்டு தடவைகள் ( மே05 /நவம்பர் 05 ) கிடைக்கப்பெறும் வட்டி பணத்தில் ஊடாக செலவு செய்யப்படும் விபரங்களை காநைரகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

அதன் அடிப்படையில் 8வது தடவையாக 05.05.2019 அன்று 8ம் கட்ட வட்டிப்பணமாக 12 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 48,687.50 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

9வது தடவையாக 05.11.2019 அன்று 9ம் கட்ட வட்டிப்பணமாக 12 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 48,687.50 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

10வது தடவையாக 05.05.2020 அன்று 10ம் கட்ட வட்டிப்பணமாக 12 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 44,150.00 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

11வது தடவையாக 05.11.2020 அன்று 11ம் கட்ட வட்டிப்பணமாக 11 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 37,500.00 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

12வது தடவையாக 05.05.2021 அன்று 12ம் கட்ட வட்டிப்பணமாக 11 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 26,250.00 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 8ம்,9ம்,10ம்,11ம்,12ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகள் அவற்றினை செலவு செய்த விபரங்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன . கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்ட நிரந்தர வைப்பு நிதியத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகளின் செலவு விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

Karaingar School Interest Report

 

 

https://karainagar.com/pages/wp-content/uploads/2021/08/Karaingar-School-Interest-Report.pdf

 

காரைநகரில் தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள்

 

காரைநகரில் தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள்

 

இலகடி இந்து தமிழ் கலவன் பாடசாலை

எஸ்.கே.சதாசிவம்

இலகடி இந்து தமிழ் கலவன் பாடசாலை அமைந்துள்ள “இலகடி வளவு” என்று அழைக்கப்படும் காணி சிதம்பரம் சிவபுரி மடத்தின் ஆதனம். 1936 ஆம் ஆண்டு சிதம்பரம் சிவபுரி மட ஆதீனத்தின் இலங்கைப் பிரதிநிதி தம்பிரான் அடிகளால் 99 வருடக் குத்தகை அடிப்படையில் பாடசாலை நடாத்துவதற்காக வழங்கப்பட்டது. சைவ பரிபாலன சபையின் தலைவர் நியாயதுரந்தர் திரு. தி. முத்துச்சாமிப்பிள்ளை அவர்களால் வருடந்தோறும் காணி வாடகையாக ரூபா.10/= செலுத்தப்பட்டது. இப்பாடசாலையானது 1936 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையினரால் காரைநகர் கிழக்கு (இலகடி) இந்து தமிழ்க்கலவன் பாடசாலை எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.

“இக்காலப்பகுதியில் திரு. ஏ. கனகசபை காரை இந்து ஆங்கில வித்தியாலயத்தின் அதிபராகக் கடமையாற்றினார். அப்போது பாடசாலையின் வளாகத்தில் இயங்கிக் கொண்டிருந்த Feeding School சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுடன் இலகடியில் கோவிலுக்குச் சொந்தமான காணியில் Feeding School இயங்க ஆவன செய்தார். மேலும் உள்ளுர் வாசிகளின் உதவியுடன் தேவையான கட்டிடங்களை அமைப்பதற்கு ஆவன செய்தார்” என Your Country and Your College எனும் நூலில் திரு ஆசைப்பிள்ளை அரசரட்ணம் குறிப்பிட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சயம்பு மலரில் “அந்த நாள் ஞாபகம்” எனும் தலைப்பிலான கட்டுரையில் பழைய மாணவன் திரு. ந. செல்லையா பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “தமிழ் 3 ஆம் வகுப்புச் சித்தியடைந்த பிள்ளைகளைத்தான் ஆங்கிலப் பாடசாலையில் சேர்க்க முடியும். ஆகவே தமிழ்ச் சைவப் பாடசாலைகள் இல்லாததை உணர்ந்த பெரியார் எங்கள் ஆங்கிலப் பாடசாலை Feeding School மாணவர்களுக்கு ஒரு சைவ தமிழ் தேர்ச்சிப் பாடசாலை ஆரம்பிக்க திட்டமிட்டார். தமிழ் பாடசாலை கீற்றுக் கொட்டிலில் அம்பலச் சட்டம்பியார் தலைமையில் ஆரம்பமானது. சயம்பர் ஆரம்பித்த தமிழ் ஆங்கிலப் பாடசாலை தான் பின் இலகடிக்கு மாற்றப்பட்டு நல்லதம்பி மாஸ்டர் தலைமையில் சிறப்புப் பெற்றது.” இலகடி இந்து தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயருடன் இயங்கியது.

26.03.1936 ஆம் ஆண்டு இந்து சாதனப் பத்திரிகையில் இலகடி இந்து தமிழ் கலவன் பாடசாலை பெற்றோர் தினக் கொண்டாட்டம் தொடர்பாக பின்வரும் செய்தி பிரசுரிக்கப்பட்டு இருந்தது. காரைநகர் இந்துக் கல்லூரி ஆதாரப் பாடசாலை பெற்றோர் தினக் கொண்டாட்டம் 21.03.1936 சனிக்கிழமை பி. ப. 6.00 மணிக்கு இந்து ஆங்கில வித்தியாசாலை மண்டபத்தில் நடைபெற்றது. அத்தருணம் திரு. சி. செல்லையா அவர்கள் தலைமை வகித்தனர். முதலில் இரு மாணவிகள் வந்தனப் பாட்டுப் பாடினர். இரண்டாவதாக தலைமை ஆசிரியர் அவர்களால் பாடசாலை அறிக்கை வாசிக்கப்பட்டது. மூன்றாவதாக மாணவர்கள் பாட்டு, சம்பாஷனை, நடித்தல், மதப் பிரசங்கம், கோலாட்டம் முதலிய அப்பியாசங்களைச் செய்து காட்டி சபையோரை மகிழ்வித்தனர். நான்காவதாக தலைவர் அவர்களால் மாணவர்களுக்குப் பரிசில் வழங்கப்பட்டது. பின் இந்து ஆங்கிலப் பாடசாலை தலைமை ஆசிரியர் திரு.ஏ.கனகசபை B.A அவர்கள் பெற்றோரும் பாடசாலையும் எனும் விடயமாகவும் பிரம்மஸ்ரீ வை. இராமசாமி சர்மா அவர்கள் சமயக் கல்வி எனும் விடயமாகவும் பிரம்மஸ்ரீ ச. நவநிதி கிருஸ்ணபாரதி அவர்கள் மகாத்மா காந்தி அடிகள் எனும் விடயமாகவும் சிறந்த உபநியாசங்கள் செய்த பின் தலைவர் குறிப்புரை கூறினார். தiமை ஆசிரியர் கூறிய வந்தனோ உபசாரத்தோடு கூட்டம் இரவு 9.00 மணியளவில் இனிது நிறைவேறியது.

சைவ பரிபாலன சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிய இப்பாடசாலையில் 1 முதல் 5 வரையிலான வகுப்புக்கள் நடைபெற்றன. 6 ஆம் வகுப்பிற்கான கல்வி கற்பதற்கு மாணவர்கள் காரைநகர் இந்துக் கல்லூரிக்குச் சென்றனர். இக்காலப்பகுதியில் இந்தப் பாடசாலை காரைநகர் இந்துக் கல்லூரியின் ஆரம்பப் பாடசாலையாகக் கருதப்பட்டது. காரைநகர் இந்துக் கல்லூரி நிர்வாகம் இப்பாடசாலைக்குத் தேவையான தளபாடங்களும் உதவிகளும் வழங்கி வந்தது. 1960 களின் முற்பகுதியில் பாடசாலை அதிபர் வசிப்பதற்காக இல்லம் அமைப்பதற்கு சைவ பரிபாலன சபை அனுமதி வழங்கியது.

திரு. க. நல்லதம்பி அவர்களின் சேவைக் காலத்தில் அவரது முயற்சியால் காரைநகர் வர்த்தகர்களின் நிதி உதவி மூலம் ஒரு கட்டிடம் அமைக்கப்பட்டது. 1960 இல் தனியார் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்ட போது இப்பாடசாலை அரசுடைமை- யாக்கப்பட்டது. திரு. க. நல்லதம்பி 1936 முதல் 1963 வரை 27 ஆண்டு காலம் தொடர்ச்சியாகச் சேவையாற்றி மீண்டும் 1966 முதல் 1970 வரை அதிபராகக் கடமையாற்றினார். இப்பாடசாலையில் சராசரி 150 மாணவர்கள் கல்வி கற்றனர். 4 முதல் 5 வரையிலான ஆசிரியர்கள் சேவையில் இருந்தனர். திரு. க. நல்லதம்பியைத் தொடர்ந்து திருவாளர்கள் சுப்பிரமணியம், ஜெகசோதி,. க.தில்லையம்பலம், நடராசா, திருமதி.த.துரைராசா ஆகியோர் கடமையாற்றினர்.

1991 ஆம் ஆண்டு இடப்பெயர்வின் போது இப்பாடசாலை இடம்பெயர்ந்து கொத்தணி அமைப்புப் பாடசாலைகளுடன் இணைந்து 1991 ஆம் ஆண்டு மே 10ந் திகதியில் இருந்து பண்ணாகம் மெய்கண்டான் வித்தியாலயத்திலும் அதனைத் தொடர்ந்து வட்டு திருஞான சம்பந்தர் வித்தியாசாலையிலும் இயங்கியது. 1993 ஆம் ஆண்டு கல்வித் திணைக்களம் பாடசாலைகள் தனித்தனிக் காலை நேரப் பாடசாலைகளாக இயங்க வேண்டும் என எதிர்பார்த்தது. போதியளவு மாணவர் இன்மை, பொருத்தமான இடம் கிடைக்காமை, மீண்டும் ஒரு இடப்பெயர்வுக்கான சூழல் நிலவிய காரணங்களாலும் 1994 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் அதிபர் திருமதி. த. துரைராசா ஓய்வு பெற்றமையாலும் பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டது.

இலகடி இந்து தமிழ் கலவன் பாடசாலை

பாடசாலையில் கடமை புரிந்த அதிபர்கள்

இல.         பெயர்                                                          காலம்
01        திரு. க. நல்லதம்பி
02        திரு. சுப்பிரமணியம்
03        திரு. க. நல்லதம்பி
04        திரு. ஜெகசோதி
05        திரு. க. தில்லையம்பலம்
06        திரு. நடராசா
07        திரு. க. தில்லையம்பலம்
08        திருமதி. த. துரைராசா                                03..10.1994

03..10.1994 முதல் பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

 

 

காரை கிழக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை

எஸ்.கே.சதாசிவம்

1855 ஆம் ஆண்டு அமெரிக்கன் இலங்கை மிஷன் திருச்சபை காரைநகரில் ஆரம்பிக்கப்பட்டது. 1919 ஆம் ஆண்டு காரை கிழக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. தெல்லிப்பளையில் அமெரிக்கன் மிஷனரிமாரால் நடாத்தப்பட்ட ஆசிரியர் பயிற்சிப் பாடசாலையில் பயிற்றப்பட்ட தராதரமுள்ள ஆசிரியர் திரு. நாத்தான்வேல் இப்பாடசாலையின் முதல் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து திருமதி.முத்தம்மா ஜேக்கப் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இக்காலத்தில் ஊரி, பிட்டியோலை, வேரப்பிட்டி போன்ற தூர இடங்களிலிருந்தும் சடையாளிப் பாடசாலைக்கு அண்மைய சூழலில் வாழ்ந்த மாணவர்களும் இப்பாடசாலையில் கல்வி கற்பதற்காக இணைந்து கொண்டார்கள்.

1938 ஆம் ஆண்டு திரு. போல் ஜோனா தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். பாலர் வகுப்பு முதல் சிரேஸ்ட பாடசாலை தராதர வகுப்புக்கள் வரை நடைபெற்றது. 250 க்கும் – 300 க்கும் இடைப்பட்ட மாணவர்கள் கல்வி கற்றனர். மாணவர்கள் கலை, இலக்கியம், நடனம், நாட்டியம் போன்ற தமிழர் பண்பாட்டுக் கலைகளைக் கற்பதற்கு ஊக்குவிக்கப்பட்டனர். இது தொடர்பான விழாக்கள் பாடசாலையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் திரு. போல் ஜோனா பெற்றோர்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்த அதேவேளை பெற்றோர்கள் சில தீர்மானங்களை மேற்கொள்வதில் அவர்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தினார்.

1946 ஆம் ஆண்டு அளவெட்டியைச் சேர்ந்த திரு. சிதம்பரப்பிள்ளை தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 6 ஆம் வகுப்பு வரை கற்கும் பாடசாலையாக பாடசாலை மாற்றமடைந்தது. மீண்டும் சிறிது காலத்தின் பின் திரு. போல் ஜோனா அதிபராக நியமிக்கப்பட்டார். பாடசாலையின் தரத்தை உயர்த்துவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சியின் பலனாக 9 ஆம் வகுப்பு வரை பாடசாலையில் வகுப்புக்கள் நடைபெறலாயின. நெசவுப் பாடம் பாடசாலையில் ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். உயர் கல்வி கற்க முடியாத மாணவர்கள் தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பமாக இது அமைந்தது.

1960 களில் ஆங்கிலப் பாடசாலைகளில் கற்க வேண்டும் என்ற மனோபாவம் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் காணப்பட்டது. இதனால் 6 ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றுச் சென்றனர். 1 முதல் 5 வகுப்பு வரையிலான ஆரம்ப பாடசாலையாக இப்பாடசாலை மாற்றம் பெற்றது. 1962 ஆம் ஆண்டு மிஷனரி பாடசாலைகள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்ட பொழுது அரசாங்கப் பாடசாலையானது. 1971 இல் திரு. போல் ஜோனா ஓய்வு பெற்றமையைத் தொடர்ந்து திரு வைத்திலிங்கம் பதில் தலைமை ஆசிரியராகக் கடமையாற்றினார்.
1973 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமதி. பாக்கியம் ஐயம்பிள்ளை பதில் அதிபராக நியமிக்கப்பட்டு 1975 இல் நிரந்தர நியமனம் பெற்றார். நீண்ட காலத்திற்குப் பின்னர் மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றனர். பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகளில் மாணவர்கள் பங்கு பற்றி வெற்றியீட்டினர். பரிசளிப்பு விழா, விளையாட்டுப் போட்டி என்பன கிரமமாக நடைபெற்றது. ஆசிரியர் பற்றாக்குறையின் மத்தியிலும் மாணவர்களுடைய கல்வி செயற்பாடுகள் சிறப்பாக அமைந்தது.

1991 இன் ஆரம்பத்தில் 53 மாணவர்கள் கல்வி கற்றனர். போர்ச்சுழல் நிலவியமையினால் 1991 மார்ச் இறுதிப்பகுதியில் பாடசாலை வளாகத்தைக் கைவிட்டனர். 1991 ஏப்ரல் முதல் வாரத்தில் விமானக்குண்டு வீச்சினால் பாடசாலை முற்றாக அழிந்து போயிற்று.

1991 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆந் திகதியில் இருந்து காரைநகர் பாடசாலைகள், கொத்தணி அமைப்புப் பாடசாலைகள் என இணைந்து இயங்கிய போது சிறிது காலம் வட்டு இந்துக் கல்லூரியிலும் தொடர்ந்து யாழ்ப்பாணம் பிரப்பன்குளம் வீதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கலாநிதி. ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலய கனிஸ்ட பிரிவுடன் சேர்ந்து இயங்கியது.; 1993 ஆம் ஆண்டு கல்வித் திணைக்களம் பாடசாலைகள் தனித்தனிக் காலை நேரப் பாடசாலைகளாக இயங்க வேண்டும் என எதிர்பார்த்தது. போதியளவு மாணவர் இன்மை, பொருத்தமான இடம் கிடைக்காமை, மீண்டும் ஒரு இடப்பெயர்வுக்கான சூழல் நிலவிய காரணங்களாலும் 1994 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அதிபர் திருமதி. பா. ஐயம்பிள்ளை ஓய்வு பெற்றமையாலும் 1994 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டது. காரைநகரில் பாடசாலை இயங்கிய போது பேணப்பட்ட ஆவணங்கள் மற்றும் யாழ்ப்பாணத்தில் இயங்கியபோது பேணப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் யாழ்ப்பாணம் கோவில் வீதியில் இயங்கிய ஊர்காவற்றுறை கோட்டக் கல்வி அலுவலகத்தில் அதிபர் திருமதி. பா. ஐயம்பிள்ளை கையளித்தார்.

கடந்த காலங்களில் காரை கிழக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை, அயற் பாடசாலைகளில் அன்றும் இன்றும் உள்ள மாணவர் எண்ணிக்கை என்பன அறிக்கையிடப்பட்டதுடன், பாடசாலையின் அண்மிய சூழலில் மீள் குடியேற்றம் நடைபெறாமை போன்ற காரணங்களை நியாயப்படுத்தி காரைநகர் கல்விக் கோட்டத்தை காரை கிழக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை வளாகத்தில் கட்டுவதற்கான முன்மொழிவுகள் கல்வித் திணைக்களத்திற்கு 2015 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு இப்பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்களின் எழுத்து மூலமான ஒப்புதலும் சமர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும் இதனை நடைமுறைப்படுத்துவதில் இடையூறுகள் விளைவிக்கப்பட்டமையினால் திட்டத்தை முன்னெடுத்தவர்கள் தொடரவில்லை. காரைநகர் கிராமத்தின் மக்கள் நடமாட்டம் மிக்க பகுதியில் நூற்றாண்டு வரலாற்று பெருமை மிக்க பாடசாலை கைவிடப்பட்ட நிலையில் அழிவுற்று வருவதைத் தற்போது காணக்கூடியதாக உள்ளது.

காரை கிழக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை

பாடசாலையில் கடமை புரிந்த அதிபர்கள்

இல.                            பெயர்                                                                                    காலம்
01                    திரு. நாத்தான்வேல்                                                                   1919 – 1938
02                    திரு. போல் யோனா                                                                   1938 – 1946
03                    திரு. சிதம்பரப்பிள்ளை                                                    1946 – சிறிது காலம்
04                    திரு. போல் யோனா                                                                    1946 – 1971
05                    திரு, வைத்திலிங்கம்                                                                   1971 – 1972
06                    திருமதி. பா. ஐயம்பிள்ளை                                                 1973 – 14.03.1994

14.03.1994 இல் இருந்து பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி ஆரம்பப்பிரிவு பகுதித் தலைவர் செல்வி சுமத்திராதேவி இராசசிங்கம் அவர்களின் சேவை நலன் பாராட்டு விழா 25.01.2022 செவ்வாய்க்கிழமை யாழ்ற்ரன் கல்லூரியில் நடைபெற்றது!

படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

https://photos.app.goo.gl/FpNqjBnkA95YFBY39

அமரர் திருமதி.விஜயலட்சுமி மகேந்திரன் (இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் மறைவு குறித்து காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி!

காரைநகர் இந்துக் கல்லூரி,யாழ்ற்ரன் கல்லூரி சென்ற ஆண்டு நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்!

 

காரைநகர் இந்துக் கல்லூரி,யாழ்ற்ரன் கல்லூரி

சென்ற ஆண்டு நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்

சென்ற ஆண்டு நடைபெற்றிருந்த க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் இணையம் ஊடாக அண்மையில் வெளியிடப்பட்டிருந்தன.

பெறுபேறுகளின் அடிப்படையில் காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து கணித பாடப் பிரிவில் செல்வி கம்சிகா தேவராசா 3A சித்திகளைப் பெற்று தீவக வலயத்தில் முதன்மைப் பெறுபேற்றினைப் பெற்றுக்கொண்டதுடன் மாவட்ட ரீதியிலான தரவரிசைப் பட்டியலில் 37 வது இடத்தைப் பெற்றுள்ளார். அத்துடன் செல்வி கிருத்திகா இராசலிங்கம் வர்த்தகப்பிரிவில் 2A C சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளார்.

 

காரைநகர் இந்துக் கல்லூரி சென்ற ஆண்டு நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்.

பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:

 

 

 

 

செல்வி கம்சிகா தேவராசா கணிதப்பிரிவு 3A 

 

 

 

 

 

 

 

 

 

 

செல்வி கிருத்திகா இராசலிங்கம் வர்த்தகப்பிரிவு 2A C

 

 

 

 

 

 

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி சென்ற ஆண்டு நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்.

பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:

 

 

2020ம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் காரைநகர் கோட்டப் பாடசாலை மாணவர்கள் 25 பேர் சித்தியடைந்துள்ளனர்.

Gr 5 Results

காரைநகர் இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ற்ரன் கல்லூரி பாடசாலைகளில் இருந்து 17 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளனர்.

 

 

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரை அபிவிருத்திச் சபை ஊடாக காரைநகரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள்!

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரை அபிவிருத்திச் சபை ஊடாக காரைநகரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள்.

1.வீட்டுத் திட்டம்

காரைநகர் அல்வின் வீதியில் வசிக்கும் சிவானந்தராசா றூபரசி கண்பார்வையற்ற இவர் 4 வயது குழந்தையுடன் வசித்து வருகின்றார். இவர் வீடு சிதைவடைந்த நிலையில் வீட்டில் வாழமுடியாது என காரை அபிவிருத்திச் சபை, கிராமசேவையாளரின் பரிந்துரைக்கேற்ப கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ரூபா 350,000.00 செலவில் திருத்தியமைத்துக் கொடுக்கப்பட்டது. இத் திட்டத்திற்கு உதவி செய்த அனைவருக்கும் மன்றம் நன்றி தெரிவிப்பதோடு மேலும் இது போன்ற திட்டங்கள் தொடர்ந்து செய்ய எமக்கு பொருளுதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

 

பழைய படத்தொகுப்பு:

 

புதிய படத்தொகுப்பு:

 

 

 

2.காரைநகர் பாடசாலைகளில் இருந்து கபொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான உதவி திட்டம்

நாட்டில் ஏற்பட்ட கொரோனா காரணமாக இவ்வருடம் கபொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பலவித கஷ்டங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் உள்ளாகியிருந்தார்கள். தற்போது October 11ம் திகதி பரீட்சை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்கள். காரை இந்துக் கல்லூரியில் 28 பேரும், யாழ்ற்ரன் கல்லூரியில் 22 பேரும் காரைநகர் பாடசாலைகளில் இருந்து பரீட்சைக்கு தோற்றுகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஊக்குவிப்பு தொகையாக ரூபா 2500.00 பாடசாலை அதிபர்களினாலும் காரை அபிவிருத்திச் சபை உறுப்பினர்களினாலும் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பாடசாலைகளில் வைத்து கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்டது.

காரைநகர் இந்துக் கல்லூரி

 

 

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி

 

காரைநகர் பாடசாலை மாணவர்களின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளும் காரைநகர் கல்வி நிலைமையும்

 

காரைநகர் கல்வி நிலைமை

அண்மையில் வெளிவந்த கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை பாடசாலை பெறுபேறுகளின் படி தீவக வலயத்தில் 53.17% மாணவர்களே பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்கள். மன்னார் மாவட்டத்தில்74.17% மாணவர்கள்  சித்தியடைந்துள்ளார்கள்.

காரைநகரில் உள்ள 4 பாடசாலைகளிலும் மொத்தம் 128 பேர் பரீட்சைக்குத் தோற்றி 64 மாணவர்கள் 50% மட்டுமே சித்தியடைந்துள்ளனர் அதிலும் 59 பேர் மட்டுமே உயர் கல்வியைத் தொடரமுடியும். இது கல்வியில் காரைநகர் எவ்வளவு தூரம் பின்னடைவாக உள்ளதென்பதைக் காணக் கூடியதாக உள்ளது.

நாம் ஒருசில மாணவர் பெற்ற அதிகூடிய பெறுபேறுகளை பார்த்து மட்டும் கல்வியின் தரத்தை நிச்சயிக்கமுடியாது. பாடசாலைகளில் கல்வியைத் தவிர்ந்து மற்றைய விடயங்களுக்காக  நேரத்தையும் பணத்தையும்  வீணடிக்காது கல்லூரி அதிபர்கள்,ஆசிரியர்கள் முழு அக்கறை எடுப்பார்களாயின் இந்த நிலைமையை மாற்றமுடியும். பாடசாலைகளில் உள்ள பணத்தை கொண்டு ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்புச் சலுகைகள் அல்லது மேலதிக வகுப்புக்கள் என்பவற்றை நடத்துவதால் இந்த நிலைமையை மாற்றமுடியும் என நம்புகிறோம். எதிர்வரும் காலங்களில் விசேட வகுப்புக்களை நடத்த கனடா காரை கலாச்சார மன்றம் முன்வரும்.

 

 

 

[su_document url=”http://www.karainagar.com/pages/wp-content/uploads/2020/05/KDS-OL-Results-9.pdf”]

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி வருடாந்த தடகளப் போட்டி 25.02.2020 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி வருடாந்த தடகளப் போட்டி 25.02.2020 செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது!

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு விழா 25.01.2020 சனிக்கிழமை கல்லூரி அதிபர் மதிவனன் தலைமையில் நடைபெற்றது!

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்ற க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்!

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி

சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்ற

க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்!

 

 

பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:

Yalton College – Karainagar
A/L Results (New Syllabus)

Student Name Results

1) S.Sivapiriya 2CS

2) L.Kuruparan ACS

3) S.Jeevathas 3C

4) T.Sankavi 3C

5) V.Kajathiri C2S

6) N.Jeyanthini 3S

7) P.Yalini 2AB

8) S.Keerthana 2AS

9) M.Kalaichelvan 2BC

10) N.Sutharsini 2BC

11) R.Thayanithi 2BC

12) S.Pirasanthan A2C

13) K.Suganthini 2BC

14) S.Janaki 2CS

15) S.Pavithira 2CS

16) G.Keerthika B2S

17) T.Keerthika B2S

18) T.Vajuri C2S

19) S.Dinuja C2S

 

 

Yalton College – Karainagar
A/L Results (Old Syllabus)

Student Name Results

1) S.Navaneethan B2C

2) S.Senthuran BCS

3) P.Thuvaraga A2C

4) S.Nirojini BCS

5) N.Pirasanthan 2CS

6) S.Senthuran A2C

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையுடன் காரை அபிவிருத்திச் சபையினரால் காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் தற்காலிகமாக க.பொ.த. உயர்தர பெளதீக பாடத்திற்குரிய ஆசிரியர் 16.01.2020 வியாழக்கிழமை அன்று நியமனம்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிதி அனுசரணையுடன்

காரை அபிவிருத்திச் சபையினரால்

காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில்

தற்காலிகமாக க.பொ.த. உயர்தர பெளதீக பாடத்திற்குரிய ஆசிரியர்

16.01.2020 வியாழக்கிழமை அன்று நியமனம்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் தலைவர் திரு.சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம் அவர்கள் கடந்த செப்டம்பர் மாதத்தில் காரைநகர் விஜயத்தின் போது யாழ்ற்ரன் கல்லூரிக்கு சென்றிருந்தார்.

யாழ்ற்ரன் கல்லூரியில் பெளதீக பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரின் திடீர் இடமாற்றத்தை தொடர்ந்து யாழ்ற்ரன் கல்லூரியில் ஏற்பட்டுள்ள பெளதீக பாட ஆசிரியர் பற்றாக்குறையினை நீக்க தற்காலிகமாக பெளதீக பாடத்திற்குரிய ஆசிரியரை நியமிப்பதற்கு பாடசாலையினால் வேண்டுகோள் விடப்பட்டது.

அதனடிப்படையில் 22.09.2019 அன்று நடைபெற்ற நிர்வாக சபை கூட்டத்தின் போது தலைவர் அவர்களினால் பார்த்தும் கேட்டும் அறிந்து கொள்ளப்பட்ட விடயங்கள் நிர்வாக உறுப்பினர்களிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டதுடன் கனடா காரை கலாச்சார மன்றம் தொடர்ந்து செயற்படுத்தவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதனடிப்படையில் யாழ்ற்ரன் கல்லூரியில் ஏற்பட்டுள்ள பெளதீக பாட ஆசிரியர் பற்றாக்குறையினை நீக்க தற்காலிகமாக அடுத்து வரும் 6 மாதங்களிற்கு பெளதீக பாட ஆசிரியருக்குரிய தேவையான வேதனத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியில் தற்காலிகமாக க.பொ.த. உயர்தர பெளதீக பாடத்திற்குரிய ஆசிரியர் 16.01.2020 வியாழக்கிழமை அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

 

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு விழாவும் மாணவர் முதல்வர்களுக்கான சின்னஞ்சூட்டல் நிகழ்வும் 07.01.2019 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா 2019.12.16 திங்கட்கிழமை நடைபெற்றது.

 

கனடா காரை கலாசார மன்றத்தினால் காரைநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் உதவித் திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகளை கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம் அவர்கள் காரைநகருக்குச் சென்ற போது நேரடியாகப் பார்வையிட்டு அதன் முன்னேற்றம் தொடர்பாக உரிய தரப்பினரிடம் கேட்டறிந்து கொண்டார்.

கனடா காரை கலாசார மன்றத்தினால் காரைநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் உதவித் திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகளை கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம் அவர்கள் காரைநகருக்குச் சென்ற போது நேரடியாகப் பார்வையிட்டு அதன் முன்னேற்றம் தொடர்பாக உரிய தரப்பினரிடம் கேட்டறிந்து கொண்டார்.

அண்மையில் காரைநகருக்குச் சென்ற அவர் காரைநகர் அபிவிருத்திச் சபை ஊடாகச் செயற்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களைப் பார்வையிட்டார்

மன்றத்தினால் நீண்ட காலமாக உதவு தொகை வழங்கப்பட்டு வரும் தாய் தந்தையரை இழந்த சிறுவனான நகுல்ராஜ் நக்கீரனின் இல்லத்திற்குச் சென்ற அவர் அவருடைய கல்வி முன்னேற்றம் தொடர்பாகக் கேட்டறிந்ததுடன் அவருக்கான உதவு தொகையை அதிகரித்து வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இவருடன் காரைநகர் அபிவிருத்திச் சபையின் முன்னாள் செயலாளரும் தற்போதைய உப செயலாளருமான க.நாகராசா அவர்களும் சென்றிருந்தார்.

மன்றத்தினால் கடந்த வருடங்களில் வீடு கட்டி வழங்கப்பட்ட சசிகுமார் தவமணி,இராஜகோபால் லதாராணி பயனாளிகளையும் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களின் வாழ்க்கைத் தர மேம்பாடு தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.

பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரும் காரைநகரைச் சேர்ந்த வறுமைக் கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு மன்றத்தினால் மாதாந்தம் உதவு தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அவர்களில் ஆனந்தராசா காயத்திரி(ஊவாப் பல்கலைக்கழகம்) செந்தில்நாதன் கமலேஸ்வரி (ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம்) ஆகியோரை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியதுடன் அவர்களின் கல்வி முன்னேற்றம் தொடர்பாகவும் கேட்டறிந்த கொண்டார்.

மேலும் க.பொ.த சா/ த வகுப்புகள் நடைபெறும் காரைநகர் பாடசாலைகளுக்கு நேரில் சென்ற அவர் பாடசாலை அதிபர்களுடன் கலந்துரையாடியதுடன் மாணவர்களின் கல்வி முன்னேற்றம் பாடசாலைகளின் பௌதீக வழங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார். மன்றத்தினால் வழங்கப்படும் நிலையான வைப்பு ஊடான வட்டிப் பணத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் கல்வி முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டதுடன் பாடசாலை நிர்வாகங்களினால் பல்வேறு உதவிக் கோரிக்கைகளும் அவரிடம் முன்வைக்கப்பட்டன. அவை தொடர்பாக நிர்வாக சபையுடன் ஆராய்ந்து சாதகமாகப் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் காரைநகர் அபிவிருத்திச் சபை நூலகத்தில் இடம்பெற்ற பாடசாலை அதிபர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டதுடன் காரைநகர் பாடசாலைகளின் தேவைகள் குறைபாடுகள், கல்வி முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டதுடன் மன்றத்தினால் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் நடாத்தப்படும் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்குகளை நடாத்துவதற்குரிய ஒழுங்ககளையும் மேற்கொண்டு தருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

காரைநகர் அபிவிருத்திச் சபை அலுவலகத்திற்கும் சென்று நிர்வாக சபையினருடன் சபை ஊடாக மன்றத்தினால் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

முன்பள்ளி ஆசிரியர்கள் மாதாந்தம் பெற்றுக் கொள்ளும் கொடுப்பனவுகள் அனைவருக்கும் ஒரே அளவில் கிடைப்பதற்கு வழிசெய்ய வேண்டும் எனவும் குறைந்த கொடுப்பனவைப் பெறும் ஆசிரியர்களுக்கும் உரிய கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பதற்கு ஆவண செய்யவேண்டும் எனவும் தலைவரினால் இச்சந்தர்ப்பத்தில் தெரிவிக்கப்பட்ட போது இது தொடர்பாக பிரான்ஸ் நலன்புரிச் சங்கத்துடன் இது தொடர்பாகக் கலந்துரையாடுவதாக தெரிவிக்கப்பட்டது.

 

 

 

 

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியிலிருந்து 6 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளனர்.

 

யா/யாழ்ற்ரன் கல்லூரியிலிருந்து தெரிவாகி

பல்கலைக்கழகம் செல்வோர்

2018

யாழ்ற்ரன் கல்லூரியிலிருந்து 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றிய மிகச் சிறந்த பெறு பேறுகளைப் பெற்ற மாணவர்களில் பின்வரும் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுக் கொள்கின்றனர். இம் மாணவர்கள் கல்வியில் மென்மேலும் சிறந்து விளங்க கல்லூரியின் அதிபர் ஆசிரியர்கள் மனமகிழ்ந்து வாழ்துகின்றனர்.

பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்கள்

1. சுரேஸ்குமார் கஜந்தன் : A2B மென்பொருள் பொறியியல்
களனி பல்கலைக்கழகம்

2. ரொபேன்சியா தேவலிங்கம் : 2BC முகாமைத்துவம்
யாழ்பாணம் பல்கலைக்கழகம்

3. கிர்ஷpகா மோகனநாதன்: 2BC கலை
கிழக்கு பல்கலைக்கழகம்

4. பிரதீபா சத்தியமூர்த்தி : B2C ICT
வவுனியா வளாகம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்

5. கமலசிறிஸ்கரன் கஜந்தன் : B2C Art
விபுலானந்த அழகியல் கற்கை மட்டக்களப்பு

6. தியாகராசா சயந்தன் : 2AC Q.S
மொரட்டுவ கணிய அளவையியல்

காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் 2018 டிசம்பரில் நடைபெற்ற க.பொ.த.சாதாரண பரீட்சையில் 7 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள்.

காரைநகர் வியாவில் சைவ வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 07.02.2019 வியாழக்கிழமை நடைபெற்றது!

காரைநகர் இந்துக் கல்லூரியில் க.பொ.த உயர்தரப் பரீடசையில் சிறப்புச் சித்திபெற்ற மாணவர்கள் மற்றும் சித்திரப் போட்டியில் வலய,மாகணமட்டத்தில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு 05.02.2019 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது!

02/02/2019 சனிக்கிழமை அன்று நடைபெற்ற காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி-2019

 

02/02/2019 சனிக்கிழமை அன்று நடைபெற்ற காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி-2019

02/02/2019 சனிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு பாடசாலை மைதானத்தில் கல்லூரி அதிபர் திரு.வி.சாந்தகுமார் தலைமையில் இடம்பெற்றன. இந் நிகழ்வில் திரு.ப.நந்தகுமார் (சுகாதார வைத்திய அதிகாரி காரைநகர்,ஊர்காவற்துறை) பிரதம விருந்தினராகவும் திரு.க.விஜயகுமார் (முகாமையாளர் மக்கள் வங்கி சாவகச்சேரி)சிறப்பு விருந்தினராகவும், திரு.S.V.M.குணரட்ணம் (S.V.M நிறுவன உரிமையாளர்) திரு. க. நிமலதாசன்(அஞ்சல் அதிபர் யாழ்ப்பாணம்) மற்றும் திரு.திரவியநாதன் தீசன்(பத்திரிகை ஆசிரியர் கனடா) ஆகியோர் கௌரவ விருந்தினராகவும், கலந்துகொண்டனர்.

பாடசாலையின் உயர்தர மாணவிக்கு அமரர் பொன்னம்பலம் பாலசிங்கம் (இடைப்பிட்டி காரைநகர்) அவர்களின் ஞாபகார்த்தமாக துவிச்சக்கரவண்டி அன்பளிப்பிணை செய்திருந்தார் ஆசிரியர் லிங்கேஸ்வரன் கமலாம்பிகை அவர்கள்.அத்துடன் ஆரம்ப பாடசாலையில் தரம் 1இல் கல்விகற்கும் மாணவிக்கு முன்னைநாள் தலைவர் (களபூமி சனசமூக நிலையம்) கணேசப்பெருமாள் மயில்வாகனம் (பிரான்ஸ்)அவர்களினால் இலங்கை வங்கி புத்தகத்தில் 10000.00 ரூபா வரவு வைக்கப்பட்டு  களபூமி சனசமூகநிலையத்தின் பொ ருளாளர் திரு .சி.சிவகாரன் அவர்களினால் மாணவியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.அத்துடன் திரு.க.விஜயகுமார் முகாமையாளர் (மக்கள் வங்கி சாவகச்சேரி)அவர்களினால் புதிய ஓர் திட்டம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பாடசாலையின் பழையமானவர்களிடம் இருந்து மாதாந்தம் 100.00ரூபா அறவிடுவார்களாயின் அந்த நிதியில் எதிர்காலத்தில் சிறந்த திட்டங்களை மேற்கொள்ளமுடியுமென தனது சிறப்பு உரையில் கூறியிருந்தார் கலாநிதி .ப.நந்தகுமார் தனது தந்தையர் பாடசாலையின் பழைய மாணவன் என்ற ரீதியில் 1000.00ரூபா பாடசாலை அதிபரிடம் கொடுத்து ஆரம்பித்து வைத்தார்.அத்துடன் திரு க.விஜயகுமார் (பழைய மாணவன்)மாதாந்தம் தனது ஊதியத்தில் இருந்து 500.00 ரூபா தொடர்ந்து 5 வருடங்களுக்கு கொடுப்பதாக உறுதியளித்துள்ளார். மற்றும் திரு.தி. தீசன்( கனடா ) ஆகியோர் ஒரு வருடத்திற்க்கான பணத்தினை வழங்கியிருந்தனர்.

காரைநகர் இந்துக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியின் ஆரம்ப நிகழ்வான ஆண்கள், பெண்களுக்கான வீதியோட்டப் போட்டிகள் 22.01.2019 செவ்வாய்க்கிழமைஅன்று இடம்பெற்றது.

 

 

 

காரைநகர் இந்துக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியின் ஆரம்ப நிகழ்வான ஆண்கள், பெண்களுக்கான வீதியோட்டப் போட்டிகள் 22.01.2019 செவ்வாய்க்கிழமைஅன்று இடம்பெற்றது.