Category: KDB செய்திகள்

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 4ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 4ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக 12 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் வீதம் நிரந்தர வைப்பில் இடப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி பணத்தினை பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு அதனை உறுதி செய்து கொண்டு இந்நிரந்தர வைப்பு நிதியினை பெற்றுக்கொண்டார்கள்.

அதன் அடிப்படையில் கிடைக்கப்பெறும் வட்டிப் பணத்தின் 50 விகிதமான நிதியானது நேரடியாக கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளான மேலதிக வகுப்புக்களிற்கான ஆசிரியர் வேதனம், மெல்ல கற்கும் மாணவர்களிற்கான விசேட வகுப்புக்கான ஆசிரியர் வேதனம் மற்றும் அதற்குரிய செலவீனங்ளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் வங்கி வட்டியில் இருந்து கிடைக்கப்பெறும் 20 விகிதமான நிதியானது இணைப்பாட விதான செயற்பாடுகளான விளையாட்டு, தமிழ் திறன் போட்டி, பரிசளிப்பு நிகழ்வுகளிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தின் 20 விகிதம் மேலதிகமாக மாதந்தம் துண்டுவிழும் மின்சார கட்டணம் செலுத்தவும், மிகுதி 10 விகிதமான நிதி மலசலகூட சுத்திகரிப்பு, குடிநீர் தேவைகளிற்கான கொடுப்பனவுகளிற்காகவும் பயன்படுத்த முடியும் எனவும் திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் பாடசாலைகள் ஒவ்வொன்றும் வருடத்திற்கு இரண்டு தடவைகள் ( மே05 /நவம்பர் 05 ) கிடைக்கப்பெறும் வட்டி பணத்தில் ஊடாக செலவு செய்யப்படும் விபரங்களை காநைரகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டது. அதன் அடிப்படையில் 4வது தடவையாக 05.05.2017 அன்று 4ம் கட்ட வட்டிப்பணமாக 12 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 52,406.25 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 4ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகள் அவற்றினை செலவு செய்த விபரங்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன . கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்ட நிரந்தர வைப்பு நிதியத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகளின் செலவு விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

 

CKCA-SCHOOLS PROJECT REPORT-4

 

https://karainagar.com/pages/wp-content/uploads/2017/12/CKCA-SCHOOLS-PROJECT-REPORT-4.pdf

காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஒன்றுகூடலும் எனது ஊர் காரைநகர் அனுசரணையுடன் காரைநகருக்கும் காரைநகர் மக்களின் நலன்கருதி சேவைகள் புரிந்தவர்களுக்குமான கௌரவிப்பு விழாவும் 31.12.2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளது!

Scan_20171226 Invitation for Get together & Felicitation

காரைநகர் அபிவிருத்திச் சபை அலுவலகம் இடம் மாறியுள்ளது

Scanned Notice re relocation20171208

காரைநகர் அபிவிருத்திச் சபையின் அறிவித்தல்!

Scanned Letter(Notice) to Karai Societies20171205

காரைநகர் அபிவிருத்திச் சபையின் விசேட / வருடாந்த பொதுக்கூட்ட அறிவித்தல்

Scan_circular re mtgs – 24-11-17

காரைநகரில் பனைவளவிருத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது

காரைநகரில் பனைவளவிருத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளது

சென்ற கிழமை பிரதேச செயலகர் திரு தயாரூபன் அவர்களால் அரம்பிக்கப்பட்ட பனை விதைகள் நடும பணியினைத் தெடர்ந்து காரைநகர் அபிவிருத்திச்சபையும் தன் பங்கினை வழங்கியுள்ளது. எமது உபசெயலாளர்/பிரதி செயலாளர் திரு நாகராஜா அவர்களின் விடாமுயற்சியினால் (19.11.2017, ஞாயிற்றுக்கிழமை) அவரால் அழைத்துவரப்பட்டவர்கள் சுமார் பிரதேச செயலகர் நட்டு முடித்த இடத்திலிருந்து தீர்த்தக் கரையோரம் ஆயிரத்திற்கு மேற்பட்ட விதைகளை நட்டனர். திரு நாகராசா அவர்களுடன் ஒத்துழைத்தவர்களில் சிவகௌரி ஜனசமூக நிலையத் தலைவர் திரு சிவபாலன் அவர்களை முக்கியமாகக் குறிப்பிடவேண்டும் அவரும் அவருடன் சேர்நத மூன்று அன்பர்களும் காலை 7.00 மணியிலிருந்து பிற்பகல் 3.00 மணி வரை எடுத்த காரியத்தினை நிறைவுற்றி முடித்தனர். திரு சிவபாலன் அவர்களுக்கும் அவருடன் சேர்ந்து பணியாற்றிய மற்றையோருக்கும் நன்றி தெரிவிப்பதுடன் இக்குழுவினரை ஒன்றிணைத்து வழிநடத்தியதுடன் உடனிருந்து பணியினை நிறைவேற்றிய திரு நாகராஜா அவரகளது கடமையுணர்வினை மெச்சிப் பாராட்டாமல் இருக்க முடியாது. காரைநகர் அபிவிருத்திச்சபையின் பொருளாளர் பண்டிதர் மு. சு. வேலாயுதபிள்ளை அவர்கள் முதல் விதையினை நட்டுப் பணியினை ஆரம்பித்து வைத்தார். அத்துடன் காரைநகர் அபிவிருத்திச்சபையின் நிரவாக உறுப்பினர் திரு செந்தூரன் அவர்களும் முன்னாள் நிர்வாக உறுப்பினர் திரு வேலுப்பிள்ளை சபாலிங்கம் அவர்களும் அவரது பாரியாரும் இப்பணியில் பங்கு பற்றினர். அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பனைவளம் மீண்டும் தளைத்தோங்க காரைநகரிலுள்ள பிற அமைப்புக்களையும் முன்வருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன். வீட்டுத் திட்டங்களின் கீழ் அமைக்கும் கட்டிடங்கள் மற்றும் அத்தியாவசமான தேவைகளுக்காகப்பனைகளைத் தறிப்பது தவிர்க்க முடியாததாகும். அதேவேளையில் வருடாவருடம் விதைகளை நட்டு எமது பலவித தேவைகளைப் பூர்த்தி செய்யும் கற்பகதருக்கள் முற்றிலும் அழியாமல் பாதுகாப்பது எமது பொறுப்பாகும்.

அன்புடன்
சிவா தி மகேசன்.

 

காரைநகர் பிரதேசத்தில் தற்போதைய வரட்சியினால் வற்றி வரண்டு போயுள்ள கேணிகள் மற்றும் குளங்கள் காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் தூர்வாரி இறைத்துத் துப்புரவு செய்யும் பணி முழு வீச்சில் இடம்பெற்று வருகின்றது.

காரைநகர் பிரதேசத்தில் தற்போதைய வரட்சியினால் வற்றி வரண்டு போயுள்ள கேணிகள் மற்றும் குளங்கள் காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் தூர்வாரி இறைத்துத் துப்புரவு செய்யும் பணி முழு வீச்சில் இடம்பெற்று வருகின்றது.

 காரைநகரில் உள்ள நீலிப்பந்தனைக் கேணி,சடையாளிக் கேணி,சடையாளி தண்டாயுதபாணி கேணி,ஆலடிக் கேணி,திண்ணபுரம் தாமரைக் குளம் என்பன தூர்வாரி இறைத்துத் துப்புரவு செய்யப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து ஆலங்கன்று கேணி தூர்வாரி இறைத்து துப்புரவு செய்யவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்தும் ஏனைய பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் இறைத்து துப்புரவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட் உள்ளதாகவும் அவ்வாறு துப்புரவு செய்யும் பட்சத்தில் மாரிகாலத்தில் மழைநீர்நிறைந்து ஏனைய பிரதேசங்கள் நன்நீராக மாறும் சந்தர்ப்பம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகர் ஆலடிக் கேணி இறைத்துத் தூர்வாரித் துப்புரவு செய்யும்போது.

IMG_0358 (Copy) IMG_0364 (Copy) IMG_0368 (Copy) IMG_0373 (Copy)

கனடா- காரை கலாச்சார மன்றத்தின் புதிய நிர்வாக சபையினருக்கு காரைநகர் அபிவிருத்திச் சபை விடுத்துள்ள வாழ்த்துச்செய்தி!

Greetings to CKCA Committee – Scanned copy

தற்போது பிரான்ஸில் வசிக்கும் காரைநகர் புதுவீதியைச் சேர்ந்த திரு.தில்லையம்பலம் ஜெகன்நாதன் அவர்கள் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு 9 நோயாளர் கட்டில்களையும் காரைநகர் வைத்தியசாலைக்கு 1 கட்டிலையும் அன்பளிப்பாக காரை அபிவிருத்திச் சபையினூடாக வழங்கினார்.

தற்போது பிரான்ஸில் வசிக்கும் காரைநகர் புதுவீதியைச் சேர்ந்த திரு.தில்லையம்பலம் ஜெகன்நாதன் அவர்கள்  மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு 9 நோயாளர் கட்டில்களையும் காரைநகர் வைத்தியசாலைக்கு  1 கட்டிலையும் அன்பளிப்பாக காரை அபிவிருத்திச் சபையினூடாக வழங்கினார்.  இவ்விழாவில் காரை அபிவிருத்திச் சபை உறுப்பினர்களும் திரு.தில்லையம்பலம் ஜெகன்நாதனின் சகோதரர்களும், வைத்தியசாலைகளின் நிர்வாகத்தினரும் கலந்து சிறப்பித்தனர்.

20170611_103632 20170611_110056 20170611_112234_002 20170611_121441

காரை அபிவிருத்திச் சபையினரால் முதற்கட்டமாக காரை அபிவிருத்திச் சபையில் பதிவு செய்த கட்ராக்கினால் அவதிப்பட்ட 21 கண்நோயாளர்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கண் அறுவைச் சிகிச்சை உட்படுத்தப்பட்டுள்ளனர்.

20170515_072517_001 20170515_072559 20170515_072603 20170515_072946 20170523_181733_001-1

காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் 500 L குடிநீர் தாங்கி கோவளம் விளையாட்டுக் கழகத்தினரின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

காரைநகர் அபிவிருத்திச் சபையினரால்  500 L குடிநீர் தாங்கி கோவளம் விளையாட்டுக் கழகத்தினரின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அன்பளிப்பாக வழங்கப்பட்டது. கோவளம் விளையாட்டுக் கழகத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக நீர்த்தாங்கி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் காரைநகர் அபிவிருத்திச் சபையின் கோரிக்கையினையேற்று மல்லிகை   நன்னீர்க் பொதுக் கிணற்றினை சிரமதானம்  மூலம் துப்பரவாக்கித் தந்தமையும் குறிப்பிடத்தக்கது.

20170523_155539 20170523_155543

காரை அபிவிருத்திச் சபையின் நன்னீர் பொதுக் கிணறுகளை துப்பரவாக்கும் செயற்பாட்டின் ஓர் அங்கமாக மல்லிகை குடிநீர்க் கிணறு கோவளம் விளையாட்டுக் கழகத்தினரால் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டு பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

FB_IMG_1495443846838 FB_IMG_1495443881402 FB_IMG_1495443912507 FB_IMG_1495443928562 FB_IMG_1495443936320

காரைநகர் வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கும் காரைநகர் அபிவிருத்திச் சபை பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று 08.05.2017 காரைநகர் வைத்தியசாலையில் இடம்பெற்றது.

காரைநகர் வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கும் காரைநகர் அபிவிருத்திச் சபை பிரதிநிதிகளுக்கும்  இடையிலான சந்திப்பு  இன்று  08.05.2017 காரைநகர் வைத்தியசாலையில் இடம்பெற்றது. வைத்தியசாலையின் தேவைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

20170508_155919 20170508_155933 20170508_155942

கனடா காரை கலாசார மன்றத்திற்கு காரைநகர் அபிவிருத்திச் சபை நன்றியும், பாராட்டும் தெரிவிப்பு!

     canada 10001                                                                                                                       

                                                                                                                          20.04.2017.

தலைவர்,
கனடா காரை கலாசார மன்றம்,
கனடா.

                              நன்றியும், பாராட்டும் தெரிவித்தல்

27.03.2017 அன்று காரைநகர் அபிவிருத்திச் சபைக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட எமது நிர்வாக சபைக்கு தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்த கனடா காரை கலாசார மன்றத்தின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினருக்கு முதலில் எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

             தொடர்ச்சியாக ஊரிற்கு தாங்கள் அளித்து வரும் பேராதரவிற்கு எமது சபையின் சார்பான நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் ஊரிற்கான தங்கள் சேவை மென்மேலும் தொடரவும் சபையின் சார்பான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

                      அடுத்து புதிதாக அமையவிருக்கின்ற தங்கள் சபையின் புதிய நிர்வாகசபையினருக்கு எம்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

ஆ.யோகலிங்கம்                                                                                  சிவா.தி.மகேசன்    
செயலாளர்                                                                                               தலைவர்
       

 

canada 1

காரைநகர் அபிவிருத்திச் சபையின் 01.04.2015 தொடக்கம் 27.03.2017 வரையான செயற்பணி அறிக்கை மற்றும் 01.04.2015 தொடக்கம் 31.12.2016 வரையிலான கணக்காய்வறிக்கை!

Kds 2017 Report Final

காரைநகர் அபிவிருத்திச் சபை புதிய தலைவரின் செய்தி!

Opening circular

காரைநகர் அபிவிருத்தி சபையின் புதிய நிர்வாக சபையினருக்கான வாழ்த்துக்களும் கடந்த நிர்வாக சபையினருக்கான நன்றியறிவிப்பும்!

CKCA logo

காரைநகர் அபிவிருத்தி சபையின் புதிய நிர்வாக சபையினருக்கான வாழ்த்துக்களும்  கடந்த நிர்வாக சபையினருக்கான நன்றியறிவிப்பும்

காரைநகர் அபிவிருத்தி சபையின் நிர்வாகத்திற்கு 27.03.2017 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது தெரிவு ஆகியுள்ள திரு.சிவா தி.மகேசன் தலைமையிலான நிர்வாக அமைப்பிற்கு கனடா காரை கலாசார மன்றம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.

கனடா வாழ் காரைநகர் மக்களின் சார்பாகவும், கனடா காரை கலாசார மன்ற நிர்வாகத்தின் சார்பாகவும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதுடன் காரைநகர் அபிவிருத்தி சபையின் கடந்த திரு.ப.விக்கினேஸ்வரன் தலைமையிலான நிர்வாகசபையினருக்க மன்றத்தினதும் கனடா வாழ் காரை மக்களினதும் நன்றியறிதலையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

காரை மண்ணிற்காக சிறப்புற சேவையாற்றி கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாகவும் நேரடி தொடர்புகளை பேணி முறையே காரை மக்களிற்கு சேவையாற்றியதுடன், சிறப்புற செயற்பாட்டு அறிக்கை மற்றும் கணக்கறிக்கையினை சமர்ப்பித்து காரை மக்களினதும் பேராதரவினை பெற்றுள்ளதை அறிந்து பெருமிதம் கொள்கின்றோம்.

காரைநகர் அபிவிருத்தி சபையின் வளர்ச்சியிலும் மண்ணின் சேவையிலும் மேலும் சிறப்புற பணியாற்றவும் நிர்வாக சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்பு, ஒற்றுமை நிலைத்து மண் வளம்பெறவும் எல்லாம் வல்ல ஈழத்து சிதம்பரத்தான் தாழ் பணிந்து வாழ்த்துகின்றது கனடா காரை கலாசார மன்றம்.


                   நிர்வாகம் 
கனடா காரை கலாசார மன்றம்

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 3ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள்!

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 3ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக  12 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் வீதம்  நிரந்தர வைப்பில் இடப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி பணத்தினை பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு அதனை உறுதி செய்து கொண்டு இந்நிரந்தர வைப்பு நிதியினை பெற்றுக்கொண்டார்கள்.

அதன் அடிப்படையில் கிடைக்கப்பெறும் வட்டிப் பணத்தின் 50 விகிதமான நிதியானது நேரடியாக கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளான மேலதிக வகுப்புக்களிற்கான ஆசிரியர் வேதனம், மெல்ல கற்கும் மாணவர்களிற்கான விசேட வகுப்புக்கான ஆசிரியர் வேதனம் மற்றும் அதற்குரிய செலவீனங்ளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் வங்கி வட்டியில் இருந்து கிடைக்கப்பெறும் 20 விகிதமான நிதியானது இணைப்பாட விதான செயற்பாடுகளான விளையாட்டு, தமிழ் திறன் போட்டி, பரிசளிப்பு நிகழ்வுகளிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தின் 20 விகிதம் மேலதிகமாக மாதந்தம் துண்டுவிழும் மின்சார கட்டணம் செலுத்தவும், மிகுதி 10 விகிதமான நிதி மலசலகூட சுத்திகரிப்பு, குடிநீர் தேவைகளிற்கான கொடுப்பனவுகளிற்காகவும் பயன்படுத்த முடியும் எனவும் திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் பாடசாலைகள் ஒவ்வொன்றும் வருடத்திற்கு இரண்டு தடவைகள் ( மே05 /நவம்பர் 05 ) கிடைக்கப்பெறும் வட்டி பணத்தில் ஊடாக செலவு செய்யப்படும் விபரங்களை காநைரகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டது. அதன் அடிப்படையில் மூன்றாவது தடவையாக 05.11.2016 அன்று 3ம் கட்ட வட்டிப்பணமாக 10 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 40,218.75 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

அத்துடன் பாலாவோடை இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு நிரந்தர வைப்பு நிதியில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி மற்றைய  பாடசாலைகள் போன்று மே 05 /நவம்பர் 05  கிடைக்கப்பெற நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் பாலாவோடை இந்து தமிழ் கலவன் பாடசாலை வங்கிக் கணக்கிற்கு  9,750.00 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

11.11.2016 அன்று கனடா காரை கலாச்சார மன்றம் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா தேசிய சேமிப்பு வங்கியில் நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.  அத்துடன் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான 2016 நவம்பர் மாத வட்டித் தொகையான 40,218.75 ரூபாவிற்கான காசோலையும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 3ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகள் அவற்றினை செலவு செய்த விபரங்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளன . கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்ட நிரந்தர வைப்பு நிதியத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகளின் செலவு விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
 

பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2017/03/CKCA-SCHOOLS-PROJECT-REPORT-3.pdf

காரைநகர் அபிவிருத்திச் சபையின் 01.04.2015 தொடக்கம் 27.03.2017 வரையான செயற்பணி அறிக்கை

 

KDS LOGO

காரைநகர் அபிவிருத்திச் சபையின் 01.04.2015 தொடக்கம் 27.03.2017 வரையான செயற்பணி அறிக்கை

 

01. கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையுடன்

 எமது பாடசாலை மாணவர்களின் கல்வியினை கருத்திற் கொண்டும் நீண்டகால நோக்குடன் காரைநகரில் உள்ள 12 பாடசாலைகளுக்கு நிரந்தரவைப்பு பணமாக தலா பத்து இலட்சம் ரூபா வீதம் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டு குறித்த வைப்புத் தொகைக்கு வழங்கப்படும் வட்டியினை ஒரு வருடத்தில் இரண்டு தடவைகள் பெற்று மாணவர்களின் கல்விக்கு செலவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அதிபர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் விபரம்

1.            ஆயிலி சிவஞானோதய வித்தியாலயம்

2.            வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலை

3.            ஊரி அ.மி.த.க பாடசாலை

4.            வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை

5.            யாழ்ற்றன் கல்லூரி

6.            யா.சுப்பிரமணிய வித்தியாசாலை

7.            தோப்புக்காடு மறைஞான சம்பந்த வித்தியாலயம்

8.            வேரப்பிட்டி ஸ்ரீ கணேச வித்தியாலயம்

9.            சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்

10.          வியாவில் சைவ வித்தியாலயம்

11.          மெய்கண்டான் வித்தியாலயம்

12.          பாலவோடை இ.த.க.பாடசாலை

             புலமைப்பரிசில் பரீட்சைமூலம் மாணவர்கள் காரைநகரில் கணிசமான அளவு சித்தியடைய வேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கான முன்னோடி பாடங்களையும் , பரீட்சைகளையும் காரைநகரில் வசிக்கும் தரம் 5 மாணவர்களை ஒருங்கிணைத்து யாழ்ற்றன் கல்லூரியில் 06.07.2015, 19.07.2015, 31.07.2015 ஆகிய தினங்களில் 169 பிள்ளைகளுக்கான மேற்படி பயிற்சிப் பட்டறை முன்னெடுக்கப்பட்டது.  இம் முன்னோடி நிகழ்வை யாழ் மாவட்டத்தில் உள்ள முன்னோடி ஆசிரியர் குளாம் 16 பேரைக் கொண்ட வளவாளர்கள் முன்னெடுத்திருந்தனர்.

அடுத்து காரை முத்தமிழ் பேரவையில் முன்னேற்றத்திற்காக அப் பேரவையின் முதல்வர் ந.இராசமலரிற்கு 262,075/= ரூபா வழங்கப்பட்டது.

அடுத்து நூலகத்தில் வாணி விழாவின் போது காரைநகரில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 2015,2016ம் ஆண்டுக்குரிய மாணவர்களை

  கௌரவித்து பணப்பரிசில்கள் வழங்கப்பட்டது. அத்தோடு குறித்த ஆண்டுகளில் ஆண்டு 01 தொடக்கம் 05 வரையான மாணவர்களின் நடனம், பேச்சு, பாட்டு, கலைநிகழ்வுகளும் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்வி சார்ந்த வளவாளர்களால் சொற்பொழிவும் இடம்பெற்றது.

2016ம் ஆண்டு சர்வதேச விதவைகள் தினத்தையிட்டு யாழ் மாவட்ட சிக்கன கடன் வழங்கு கூட்டுறவுச் சங்க சமாசத்தின் வேண்டுதலின் பிரகாரம் 2016 யூலை மாதம் காரைநகரில் உள்ள விதவைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் நோக்கில், குறித்த பெண்கள் அமைப்புக்கள் அழைக்கப்பட்டு, அவர்களுக்கான கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டு, ஒரு விதவைக்கு 2 தென்னம்பிள்ளைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வு எமது நூலகத்தில் நடாத்தப்பட்டது.

அடுத்து கனடா காரை கலாசார மன்றத்தின் காரை வசந்தம் விழாவிற்காக, காரைநகரில் உள்ள 13பாடசாலை அதிபருடனான நேர்காணல் ஒளிப்பதிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்டது. 2017ம் ஆண்டு கனடா காரை கலாசார மன்றத்தின் அனுசரணையுடன் தோப்புக்காடு மறைஞான சம்மந்த வித்தியாலயம், ஆயிலி சிவஞானோதயா வித்தியாலயம், வலந்தலை வடக்கு அ.மி.த.க வித்தியாலயம், வேரப்பிட்டி ஸ்ரீ கணேச வித்தியாலயம், பாலாவோடை இ.த.க. பாடசாலை ஆகிய பாடசாலைகள் மற்றும் கோட்டக்கல்வி அலுவலகம் மற்றும் எம் சபைக்கும் மடி கணினி வழங்கப்பட்டது. மேலும் த.பரமானந்தராசா(தந்தையின் ஞாபகார்த்தமாக),கனக சிவகுமாரன்(நாகமுத்து புலவர் கவிதை வெளியீட்டின் மூலம்)சு.கதிர்காமநாதன் ஆகியோரின் நிதியைக் கொண்டு ஒவ்வொரு பாடசாலை அதிபர்களின் சிபாரிசுடன்  வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 170  பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் பாடசாலை கற்றல் உபகரணங்கள் கொண்ட பொதிகள்:-

1.            1ம் கட்டம் யாழ்ற்றன் கல்லூரியில் இடம் பெற்ற சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் அணுசரனையுடன் நடத்தப்பட்ட பரிசளிப்பு விழாவில் வழங்கப்பட்டது.

2.            2ம் கட்டம் காரைநகர் அபிவிருத்தி சபையின் மாணவர் நூலகத்தில் வழங்கப்பட்டது.

3.            3ம் கட்டம் மணற்காட்டு அம்மன் ஆலயத்தில் நடை பெற்ற கும்பாபிசேக தினத்தில் அன்று நடை பெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

 

02. சுவிஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் அனுசரனையுடன்

காரைநகரில் உள்ள 13பாடசாலை மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்குடன் தியாகத்திறன் கேள்வி போட்டி பரீட்சையில் திருக்குறள், மனனப்போட்டி, இன்னிசை, பொது அறிவு, பேச்சு, கவிதை போன்ற விடயங்கள் காரைநகர் இந்துக்கல்லூரியில் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வு 

                                                               

எதியோப்பிய பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் கலாநிதி விஐயரத்தினம் யோன்மனோகரன் கெனடி. அவர்கள் தலைமையில் வளவாளர்களை கொண்டு நடாத்தப்பட்டது.

அத்தோடு நூலகத்திற்கு 9,144/= ரூபாவிற்கான புத்தகங்களும் தரப்பட்டது. மேலும் காரைநகரில் உள்ள கண்பார்வை குறைபாடு உடையவர்களுக்கு கண்சத்திரசிகிச்சை இரு தடவைகள் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் ரூபா 567,210/= மேற் கொள்ளப்பட்டது. இச் சிகிச்சையின் போது 31  பேர் பங்கு பற்றி பயனடைந்தனர்.

அத்தோடு எமது அலுவலக செயற்பாட்டிற்காகவும் ரூபா 52,000/= நன்கொடை வழங்கியுள்ளனர். மேலும் 2016 ம் ஆண்டுக்கான கலண்டர் விற்பனை செய்த வகையிலும் எமது சபைக்கு  ரூபா 41,820/= கிடைத்துள்ளது.

திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள் எமது சபையின் மூலமாக பிட்டியெல்லை கிராமத்தில் அமைந்துள்ள பேரம்பலம் முன்பள்ளிக்கும், இலங்கை போக்குவரத்துச் சபை காரைநகர் சாலையின் 50 வது ஆண்டு பொன்விழாவிற்கும் ,சாலையின் கட்டிடதிருத்த வேலைக்கும், தங்கோடை முன்பள்ளி கட்டிட வேலைக்கும் ரூபா 850,000/= நிதி உதவி தரப்பட்டு அவ் வேலைகள் முழுமை பெற்றுள்ளது.

 

03. லண்டன் காரை நலன்புரிச்சங்கதின் அனுசரனையுடன் பின்வரும் உதவிகள் வழங்கப்பட்டது.

01.          தோப்புக்காடு மறைஞான சம்பந்த வித்தியாலயத்தின் தேவையினை கருத்திற் கொண்டு நிழல்பிரதி இயந்திரம் கொள்வனவு செய்வதற்காக நிதி வழங்கப்பட்டது.

02.          வியாவில் சைவ வித்தியசாலை தொண்டர் ஆசிரியருக்கு 7 மாத உதவி தொகை வழங்கப்பட்டது.

03.          ஒளிச்சுடர் விளையாட்டு கழகத்தின் கோரிக்கையின் பிரகாரம் அக் கழகத்திற்கு 325,000/= ரூபா வழங்கப்பட்டது.

04.          காரைநகரில் வறுமை நிலையில் உள்ள கண்பார்வை குன்றியவர்களுக்கு கண்சத்திர சிகிச்சை மூளாய் கூட்டுறவு வைத்திய சாலையில் 28 பேருக்கான வைத்திய செலவு வழங்கப்பட்டது.

 ஏற்கனவே லண்டன் காரை நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன் வைத்தியசாலையின் செலவுக்காக பத்து இலட்சம் ரூபா இலங்கை தேசிய சேமிப்பு வங்கியில் நிலையான வைப்பில் உள்ளது.

 

04. பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன்

01.          முன்பள்ளி ஆசிரியார்களின் மாதச்சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது.                                                              

02.          காரைநகரில் உள்ள 13 பாடசாலைகளுக்கும் பிரதேச செயலகத்தால் பால் விநியோகம் நடைபெறுகின்றது. அவ் விநியோகத்தினை மேற் கொள்வதற்கான ஓட்டோ வாகனச் செலவினம் வழக்கப்பட்டது. (2016 மார்கழி)

03.          பாலை எடுத்துச் செல்வதற்கான கொள்கலன் ஒன்றும் குறித்த பால் விநியோகத்திற்கு வாங்கி கொடுக்கப்பட்டது.

 ஏற்கனவே பிரான்ஸ் காரை அபிவிருத்திச் சபையின் அனுசரணையுடன் முன்பள்ளிகளின் செயற்பாட்டிற்கு பத்து இலட்சம் ரூபா இலங்கை வங்கியில் நிலையான வைப்பில் உள்ளது.

 

05. அவுஸ்திரேலியா காரை நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன்

  அவுஸ்திரேலியா காரை நலன்புரிச் சங்கத்தின் மூலம் காரைநகரில் உள்ள பாடசாலை மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அனைத்து பாடசாலை நூலகத்திற்கும் இரண்டு லட்சப் பெறுமதியான புத்தகங்கள் அதிபர்களின் ஆலோசனையின் பிரகாரம் வழங்கப்பட்டது.

 

06. நூல்நிலையம்

யாழ் மாவட்டத்தில் செயற்படும் நூலகங்களில் குறிப்பிடத்தக்க விசாலமான நூலகங்களில் எமது நூலகமும் ஒன்றாகும். இரண்டு நூலக உதவியாளர்களின் செயற்பாட்டுடன் நூலக குழுவின் மேற்பார்வையில் எமது நூலகம் செயற்படுகின்றது. இந் நூலகத்தில் சமயம், சரித்திரம், இலக்கியம், சிறுகதை, சஞ்சிகை, உசாத்துணைநூல்கள், சோதிடம், கவிதை, பாடசாலை பயிற்சி புத்தகங்கள் பொதுஅறிவு, கட்டுரை, வினாவிடை போன்ற இன்னும் பல விடயங்களை கொண்ட 9445 புத்தகங்கள் இருக்கின்றன. அத்தோடு உதயன், வீரகேசரி ஆகிய புதின பத்திரிகைகளும் நாளாந்தம் வாசகர்களின் பாவனைக்கு போடப்பட்டுள்ளது. 2016 மார்கழி வரை இந் நூலக பயன்பாட்டில் 163 மாணவர்கள் அங்கத்தவர்களாக பயன்பாட்டில் உள்ளனர். தினமும் காலை 9.00-1.00 பிற்பகல் 2.30-5.30 மணிவரை நூலக சேவை நடைபெறுகின்றது. மேலும் மாணவர்களின் கணிணி பயன்பாட்டை கவனத்தில் எடுத்து 20.03.2016 தொடக்கம் 16.10.2016 வரை கணிணியின் அடிப்படை பயிற்சி நடைபெற்றது. இப் பயிற்ச்சி வகுப்பில் காரைநகரை சேர்ந்த 17 மாணவர்கள்  பயன் பெற்றனர். இப் பயன்பாட்டிற்கு 10 கணிணிகள் நூலகத்தில் இருக்கின்றது. இக் கற்கை நெறியினை தமது சொந்த பணத்தை  வைத்திய அதிகாரி சுப்பிரமணியம் நடராசா அவர்கள் குறித்தி ஆசிரியைக்கு வழங்கியுள்ளார். எமது வெளிநாட்டு உறவுகள் காலத்திற்கு காலம் காரைநகருக்கு வரும் போது எல்லாம் எமது நூலகத்தை பார்வையிட்டு தமது ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்கிவருகின்றார்கள். இருப்பினும்                                                                                                      நூலகத்தை தொடர்சியாக பாரமரித்து வருவதற்கு குறிப்பிட்ட திரண்ட நிதி இல்லாது இருப்பது ஒரு குறைபாடக உள்ளது.

 

07. அலுவலகம், குடிநீர் விநியோகம்

  காரைநகரில் உள்ள பொது மக்களின் குடிநீர் பாவனையின் பொருட்டு ஏற்கனவே அறவிட்ட ஒரு லீற்றருக்கான பணம் குறைக்கப்பட்டு பெரிய பவுசர் ஒரு லிற்றர் நாற்பது சதப்படி சிறிய பவுசர் ஒரு லிற்றர் அறுபது சதப்படி சேவை நடைபெறுகின்றது .அதேவேளை விளான் பகுதியில் அமைந்துள்ள நடைமுறையில் இருக்கும் குடிநீர் கிணற்று உரிமையாளர் கடந்த காலத்தில் இலவசமாக குடி நீரை தந்து உதவினார். நாம் மின்சார கட்டணத்தை மாத்திரம் செலுத்தி வந்தோம். தற்போது குடிநீர் கிணற்று உரிமையாளர் மாற்றப்பட்டுள்ளமையால் புதிய உரிமையாளரின் வேண்டுகோளின் பிரகாரம்  யூலை 2016 இல் இருந்து பெரிய பவுசருக்கு ஒரு தடவைக்கு 200/= ரூபாவும் சிறிய பவுசருக்கு ஒரு தடவைக்கு 75/= ரூபாவும் வழங்கப்பட்டு வருகின்றது. மின்சாரக் கட்டணத்தை கிணற்று உரிமையாளரே செலுத்துகின்றார். இதன் காரணமாகவும் எமது வருமானம் குறைவடைந்துள்ளது. அத்துடன் வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலைக்கு தற்காலிக கட்டிட புனரமைப்பு வேலைக்கு ரூபா 30,000/= வழங்கப்பட்டது. மருத்துவ செலவுக்கான போக்குவரத்து செலவுக்காக ரவிச்சந்திரன் மல்லிகாதேவி என்பவருக்கு ரூபா 10,000/= வழங்கப்பட்டது. பனை தென்னை அபிவிருத்திச் சபையின் அனுசரணையுடன் 500 தென்னங்கன்றுகள் காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஊடாக காரை வாழ் மக்களுக்கு எமது அலுவலகத்தில் வழங்கப்பட்டது. ஏம்மால் மருத்துவ போக்குவரத்து செலவுக்காக ஊரியை சேர்ந்த சிவலிங்கம் சிவரஞ்சன் என்பவருக்கு பத்தாயிரம் ரூபா வழங்கப்பட்டது. 

தண்ணீர் கணக்கில் 36 இலட்சம் ரூபா நிலையான வைப்பில் இலங்கை தேசிய சேமிப்பு வங்கியில் உள்ளது.( 22 இலட்சம் தற்போதை நிர்வாக சபையில்)

 

08. வலந்தலை பஸ் தரிப்பு நிலையம்

வலந்தலை சந்தியில் அமைந்துள்ள பஸ்தரிப்பு நிலையம் பேருந்துகள் இலகுவாக வந்து செல்ல எம்மால் ஒரு பகுதி நிலம் பெற்று விஸ்தரிக்கப் பட்டது. அத்துடன் பஸ்தரிப்பு நிலைய பிரதேசம் கனராக வாகன உதவியுடன் சீர்செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பஸ் தரிப்பிடத்திற்கான மின் கட்டணம் எம்மால் செலுத்தப்படுவதோடு பஸ்நிலைய பகுதி மாதாந்தம் துப்பரவு செய்யப்படுகின்றது.                     

09. வங்கி கணக்குகள் ஒன்றிணைத்தல்

ஆரம்ப காலத்தில் புலம் பெயர்நாடுகளில் இருக்கும் காரை நலன்புரிச் சங்கத்தின் பெயரில் வங்கியில் தனித்தனியான கணக்குகள் பேணப்பட்டு வந்தது. சபையின் கணக்குகள் கணக்காய்வு செய்யப்படும் போது ஒவ்வொரு கணக்கிற்கும் தனித்தனியாக கணக்காய்வு செலவுகள் வழங்கப்பட்டு வந்தது. அத்தோடு ஒவ்வொரு நாட்டு கணக்கிலும் நடைமுறைக் கணக்கில் 15000/= ரூபாவுக்கு குறைவாக இருந்தால் வங்கி தனது பாரமரிப்பு செலவு என வருடா வருடம் பணம் கழித்து வருகின்றது. அத்தோடு காசோலை புத்தகத்திற்கு 750/= ரூபா என பல வகையான செலவினங்கள் ஏற்படுவதை கவனத்தில் எடுத்து எமது சபையின் கணக்குகளில் ஒவ்வொரு நாட்டு நலன் புரிச்சங்கத்தின் கணக்குகளை தனித்தனியாக வைத்து பேணுவது எனவும் வங்கியில் எமது சபையின் சார்பாக மாத்திரம் கணக்குகளை வைத்திருப்பது சபையோரால் ஒரு மனதாக திர்மானிக்கப்பட்டு செய்ற்படுத்தப்பட்டு வருகின்றது.

 

10. கூட்டங்கள்

எமது நிர்வாக சபையின் காலப்பகுதியில் 19 நிர்வாக சபைக் கூட்டங்கள் நடாத்தி எமது செயற்பாட்;டினை மேற்கொண்டோம். காலத்துக்கு காலம் புலம் பெயர் நாடுகளில் இருக்கும் காரை நலன் புரிச்சங்கங்களின் பிரமுகர்கள் காரைநகருக்கு வருகை தரும் சந்தர்பங்களில் எமது சபை அலுவலகத்தில் அவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் ஆலோசனைகளையும் உதவிகளையும் பெற்றுள்ளோம்.

 

11. நிறைவுரை

 எமது அபிவிருத்திச் சபையின் வருடாந்த பொதுக்கூட்டம் 07.06.2015 அன்று நடை பெற்று செயலாளராக திரு.சிவா.தி.மகேசன் தெரிவு செய்யப்பாட்டார். பின்னர் அவரின் தனிப்பட்ட விடயம் காரணமாக பதவி விலகல் கடிதம் சபைக்கு சமர்பித்து அக் கடிதம் 16.07.2015 ஆம் திகதி நிர்வாக சபைக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு உப செயலாளராக பதவி வகித்த திரு.இ.திருப்புகலூர்சிங்கம் அவர்கள் செயலாளராக பதவி ஏற்றார். எமது நிர்வாக சபையின் காலப்பகுதியில் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் எமக்கு கிடைத்த நிதியினை வைத்து எமது செயற்பாட்டினை மேற்கொண்டோம். அத்தோடு எமக்கு முன்னர் இருந்த நிர்வாக சபையினாரால் புலம் பெயர் நாடுகளில் இருக்கும் எமது கிளைச் சங்க நலன்புரிச்சங்கங்களின் பெயரில் எமது சபையின் பெயரில் நிரந்தர வைப்பாக வங்கியில் வைக்கப்பட்ட பணத்தில் எமது நிர்வாக சபை காலப்பகுதியில் எத் தேவைக்கும் அப் பணத்தில் இருந்து நாம் எதுவும் மிளப்பெறவில்லை என்பதையும் அப் பணத்தோடு எமது காலப்பகுதியில் குடிநீர் பகுதியில் 22 இலட்சம் நிரந்தர வைப்புச் செய்யப்பட்டது. அப் பணத்தோடு சேர்த்து மொத்தம் 17,500,000/=

 (ஒரு கோடி ஏழபத்தைந்து இலட்சம்) ரூபாவும் அதற்குரிய வட்டியும் நிரந்தர வைப்பில் இருக்கின்றது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதோடு எமது காலப்பகுதியில் சபையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைத்த காரைநகர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், எமது சபையின் நூலகம் உட்பட அனைத்து உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கும் மற்றும் கல்வி சார் அறிஞர்களுக்கும் மற்றும் புலம் பெயர் நாடுகளில் இருக்கும் அனைத்து காரை நலன்புரிச்சங்கங்கள் அனைவருக்கும் மற்றும் எமது அபிவிருத்திச் சபை அங்கத்தவர்கள் அனைவருக்கும் எமது மானமார்ந்த நன்றிகளை தெரிவித்து இச் செயற்பணி அறிக்கையை நிறைவு செய்கின்றோம்.

 

 சபையின் சார்பாக                                  

        செயலாளர்

 

 

 

காரைநகர் அபிவிருத்திச் சபையின் பொதுக்கூட்டம் இன்று 27ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகத்தில் நடைபெற்றது.


காரைநகர் அபிவிருத்திச் சபையின் பொதுக்கூட்டம் இன்று 27ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு காரைநகர் அபிவிருத்திச் சபை மாணவர் நூலகத்தில் நடைபெற்றது.

காரைநகர் அபிவிருத்திச் சபையின் தலைவரும் ஓய்வுநிலை வடமாகாணக் கல்வி அமைச்சின் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காரைநகர் அபிவிருத்தி தொடர்பபன கருத்துப் பகிர்வுகளும் நடப்பாண்டுக்கான புதிய நிர்வாக சபைத் தெரிவும் இடம்பெற்றது.

சபையின் புதிய தலைவராக சிவா தி.மகேசன்,உப தலைவராக ஓய்வுநிலை வடமாகாணக் கல்வி அமைச்சின் பிரதிச் செயலர் ப.விக்னேஸ்வரன் செயலாளராக பாலாவோடை இந்துத் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் ஆ.யோகலிங்கம்,உப செயலாளராக ஓய்வு பெற்ற நீதிமன்ற உத்தியோகத்தர் க.நாகராசா,பொருளாளராக ஓய்வுநிலை காரைநகர் இந்துக்கல்லூரி அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை ஆகியோரும்

நிர்வாக சபை உறுப்பினர்களாக ஓய்வு நிலை கால்நடை அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் ஆ.சிவசோதி,மருத்துவர் சு.நடராசா,காரைநகர் பிரதேச சபை முன்னாள் தலைவர் வே.ஆணைமுகன்,மற்றும்,ந.பாரதி,சி.குமாரசேகரம்,க.கிருஸ்ணகுமார்,
க.பாலச்சந்திரன்,தி.செந்தூரன்,மு.பரம்தில்லைராசா, ந.பாலகிருஸ்ணன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சபையின் காப்பாளர்களாக சுப்பிரமணியம் கதிர்காமநாதன்,தியாகராசா பரமேஸ்வரன்,விசுவலிங்கம் பரமானந்தம் ஆகியோர் சபையினரால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் உள்ளகக் கணக்காய்வாளர்களாக கனகசுந்தரம் உமைநேசன்,சுந்தரலிங்கம் அகிலன் ஆகியோரும் தெரிவாகினர்.

IMG_3019 (Copy) IMG_3021 (Copy) IMG_3022 (Copy) IMG_3025 (Copy) IMG_3027 (Copy) IMG_3031 (Copy) IMG_3035 (Copy) IMG_3040 (Copy) IMG_3041 (Copy) IMG_3043 (Copy) IMG_3044 (Copy) IMG_3046 (Copy) IMG_3047 (Copy) IMG_3048 (Copy) IMG_3049 (Copy) IMG_3052 (Copy) IMG_3053 (Copy) IMG_3054 (Copy) IMG_3055 (Copy) IMG_3056 (Copy) IMG_3057 (Copy) IMG_3058 (Copy) IMG_3059 (Copy) IMG_3060 (Copy) IMG_3061 (Copy) IMG_3062 (Copy) IMG_3063 (Copy) IMG_3064 (Copy) IMG_3065 (Copy) IMG_3066 (Copy) IMG_3067 (Copy) IMG_3068 (Copy) IMG_3069 (Copy) IMG_3070 (Copy) IMG_3071 (Copy) IMG_3072 (Copy) IMG_3073 (Copy) IMG_3074 (Copy) IMG_3075 (Copy) IMG_3076 (Copy) IMG_3077 (Copy) IMG_3078 (Copy) IMG_3080 (Copy) IMG_3081 (Copy) IMG_3082 (Copy) IMG_3083 (Copy) IMG_3084 (Copy) IMG_3087 (Copy) IMG_3088 (Copy) IMG_3089 (Copy) IMG_3090 (Copy) IMG_3091 (Copy) IMG_3092 (Copy) IMG_3093 (Copy) IMG_3095 (Copy) IMG_3096 (Copy) IMG_3098 (Copy) IMG_3100 (Copy) IMG_3101 (Copy) IMG_3103 (Copy) IMG_3104 (Copy) IMG_3105 (Copy) IMG_3106 (Copy) IMG_3107 (Copy)

 

 

 

 

 

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப் பாடசாலையான கோவிந்தன் பாடசாலைக்கு இரு மடிக் கணணிகள் 24.03.2017 வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப் பாடசாலையான கோவிந்தன் பாடசாலைக்கு இரு மடிக் கணணிகள்  24.03.2017 வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் காரைநகர் பாடசாலைகளுக்கு வழங்குவதற்காக அனுப்பிவைக்கப்பட்ட 06 மடிக் கணணிகள் அண்மையில் காரைநகர் ஆரம்பப் பாடசாலைகள் நான்கிற்கும் காரைநகர் கோட்ட அலுவலகத்திற்கும் மற்றும் காரைநகர் அபிவிருத்திச் சபையின் அலுவலகப் பாவனைக்காகவும் வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து மேலதிக இரு கணணிகள் வழங்கப்பட்டுள்ளது.

 காரைநகர் அபிவிருத்திச் சபை அலுவலகத்தில் வைத்து காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளருமான ப.விக்னேஸ்வரன் அவர்களால் பாடசாலை அதிபர் வே.முருகமூர்த்தி,பிரதி அதிபர் திருமதி கலைவாணி அருள்மாறன் ஆகியோரிடம் இந்த மடிக் கணணிகள் கையளிக்கப்பட்டது.

அண்மையில் காரைநகர் பாலாவோடை.இ.த.க.பாடசாலை,ஆயிலி சிவஞானேதய வித்தியாசாலை,தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலயம்,வலந்தலை வடக்கு அ.மி.த.க. பாடசாலை  என்பவற்றிற்கும் காரைநகர் கோட்ட அலுவலகத்திற்கும் தலா ஒவ்வொரு மடிக் கணணிகள் வழங்கப்பட்டதுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையின் அலுவலகப் பாவனைக்காகவும் ஒரு கணணி வழங்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள மேற்படி இரண்டு கணணிகளும் 2013ம் ஆண்டு காலப்பகுதியில் திரு.கண்ணன் சுந்தரேசு அவர்களினால் வழங்கப்பட்ட 43 கணணிகளில் இருந்து கடந்த நிர்வாக சபையினரால் தற்போதைய நிர்வாக சபையினரிடம் யூன் 11, 2016 அன்று மீள கையளிக்கப்பட்ட 13 கணணிகளில் இருந்து வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 10 கணணிகள் காரைநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

1 2 3 4 5 6 7 8
 

காரைநகர் அபிவிருத்தி சபையின் திரு.ப.விக்கினேஸ்வரன் தலைமையிலான நிர்வாக சபையினருக்கு கனடா காரை கலாச்சார மன்றத்தின் நன்றிகளும் பாராட்டுக்களும்!

CKCA LOGO (Copy)

காரைநகர் அபிவிருத்தி சபையின் திரு.ப.விக்கினேஸ்வரன் தலைமையிலான நிர்வாக சபையினருக்கு கனடா காரை கலாச்சார மன்றத்தின் நன்றிகளும் பாராட்டுக்களும்!

காரைநகர் அபிவிருத்தி சபை திரு.ப.விக்கினேஸ்வரன் தலைமையில் 07.06.2015 அன்று பதவியேற்றுக்கொண்டது. அன்று முதல் இன்றுவரை காரை மண்ணிற்கான மகத்தான சேவையில் தம்மை இணைத்துக் கொண்டு பலவித இன்னல்களிற்கும் சிரமங்களிற்கும் மத்தியில் பெரும் பணியாற்றி வந்துள்ளது. காரைநகர் பாடசாலைகளின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் பெரும் பணி ஆற்றி வந்துள்ளதுடன் பொதுப்பணிகள் பலவற்றையும் வெளிநாடுகளில் வதியும் காரை மக்கள் மற்றும் மன்றங்களின் உதவிகளை பெற்றும், உள்ழூர் வளங்களை பயன்படுத்தியும் செயற்படுத்தி பெரும்பணியாற்றியுள்ளனர் என்பதனை காரை மக்கள் பலரும் அறிவார்கள்.

அந்த வகையில் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றம் 2006ம் ஆண்டு அமரர் ஜெ.தில்லையம்பலம் அவர்கள் கடமையாற்றிய காலம் முதல் இற்றைவரை காரை மண்ணிற்காக செயற்படுத்த வேண்டிய உதவிகளை காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கிடைக்கப்பெறும் வேண்டுகோள்கள் ஊடாகப்பெற்று செயற்படுத்தியும், திட்டங்களை வகுத்தும் மண்ணிற்கான செயற்பாடுகளை நிறைவேற்றிவருகின்றது.

திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களது தலைமையின் கீழ் கனடா காரை கலாச்சார மன்றத்தின் வேண்டுகோள்களை ஏற்று காரைநகர் அபிவிருத்தி சபை உரிய வகையில் உடனுக்குடன் செயற்பட்டு காரைமண்ணில் மக்களிற்கான, மாணவர்களிற்கான செயற்பாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறைவேற்றுவதில் பெரும் பணி வகித்துள்ளது.

முதற்கட்டமாக காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் வருடாந்த அத்தியாவசிய அவசிய தேவைகளை நிறைவேற்ற 11 ஆரம்ப பாடசாலைகளிற்கும் தலா 10 இலட்சம் வீதம் 2015.05.05 இல் வழங்கப்பட்ட நிரந்தர வைப்பு நிதியில் இருந்து கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தில் இருந்து காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் செயற்திட்டங்களையும் செலவு விபரங்களையும் முறையே இதுவரை இரண்டு கட்டங்களாக பெற்று கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு அனுப்பி வைத்ததையும் அதனை 2016 காரை வசந்தம் விழா மலர் மூலமும், மன்றத்தின் இணையத்தளம் ஊடாக கனடா வாழ் காரை மக்களிற்கு தெரிவிக்கும் வகையில் உரிய நேரத்தில் அனுப்பி வைத்தமைக்கு பெரும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்துடன் கனடா காரை கலாச்சார மன்றம் வழங்கிய இப்பெரும் நிதி உதவி மூலம் காரைநகர் ஆரம்ப பாடசாலைகள் பெற்றுக்கொள்ளும் அபிவிருத்தியை, முன்னேற்றத்தினை நேரடியாக பாடசாலைகளின் அதிபர்கள் ஊடாக பெற்று வழங்கியமைக்கும், தொடர்ந்து 12வது பாடசாலையான வியாவில் ஆரம்ப பாடசாலைக்கும் ஏற்கெனவே வைப்பில் இட்ட 11 நிரந்தர வைப்புக்கள் போன்று குறிப்பிட்ட அதே தினத்தில் காரைநகர் அனைத்து ஆரம்ப பாடசாலைகளும் வங்கி வட்டி பணத்தினை பெற்றுக்கொள்ளும் வகையில் இறுதி நிரந்தர வைப்பாக கனடா காரை கலாச்சார மன்றம் வழங்கிய 10 இலட்சத்தினையும் 05.11.2016 அன்று வைப்பில் இட்டு வியாவில் சைவ வித்தியாலயத்தின் நிரந்தர வளர்ச்சிக்கு உதவியமைக்கும், கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஆரம்ப பாடசாலைகளிற்கான ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்கள் திட்டம் உரிய முறையில் முழுமைபெற செயற்பட்டமைக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது.

அத்துடன் தங்களது நிர்வாகம் பதவிக்கு வந்ததும் முதற்கட்டமாக அநாதை சிறுவனுக்காக கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக வழங்கப்பட்டு வந்த மாதாந்த உதவி கிரமமாக மாதந்தோறும் செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்தமைக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.

அதுமட்டுமன்றி 2016ம் ஆண்டு மிகவும் குறுகிய காலத்தில் தரம் 5 புலமை பரிசில்  பரீட்சையில் தோற்றும் மாணவர்களிற்கான கருத்தரங்கினை சிறப்பான முறையில் ஒழுங்கு செய்து 160 காரை மாணவர்கள் பங்கேற்கும் வகையில் யாழ்ற்ரன் கல்லூரி மண்டபத்தில் பயனுற நடாத்தியமைக்கும் நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது. தொடர்ந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களிற்கான பராட்டுவிழாவினையும் சிறப்புற நடாத்திமைக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றது கனடா காரை கலாச்சார மன்றம்.

அத்துடன் 2016ம் ஆண்டு சர்வதேச விதவைகள் தின நிகழ்வினை காரைநகரில் வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட விதவை பெண்கள் கலந்து பயன்பெறும் வகையில் யாழ் மாவட்டச் சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாசச் செயலாளர், காரைநகர் பிராந்திய கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் மூலமாக கருத்துரைகள் வழங்கி வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்துவற்கான விளக்கமளித்ததுடன் கலந்து கொண்ட நூறு பயனாளிகளிற்கு தென்னம்நாற்றுக்கன்றுகளும் வழங்கி கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணை நிகழ்வினை சிறப்பித்தமைக்கும் நன்றியினையும் பாராட்டுக்களையும் தங்களது நிர்வாகத்திற்கு தெரிவித்துக்கொள்கின்றது கனடா காரை கலாச்சார மன்றம்.

அது மட்டுமன்றி கனடா காரை கலாச்சார மன்றத்தினால் இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட 8 மடிக்கணணிகளை அதன் பயன்பாடு அறிந்து உரிய பயன்பெறும் வகையில் மேலும் காலதாமதப்படுத்தாமல் பாடசாலைகளிற்கு வழங்கி உடனடியாக செயற்பட்டு கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக சபையினரின் பாராட்டுக்களை மட்டுமன்றி அக்கணணிகளை வழங்கிய கனடிய அன்பர் மற்றும் கனடா வாழ் காரை மக்களின் பாராட்டுக்களையும் நன்றியினையும்  காரைநகர் அபிவிருத்தி சபையின் திரு.ப.விக்கினேஸ்வரன் தலைமையிலான நிர்வாக சபையினருக்கு தெரிவித்துக் கொள்வதில் பெருமையும் உவகையும் கொள்கின்றது கனடா காரை கலாச்சார மன்றம்.

மேலும் தங்களது நிர்வாகத்தின் ஊடாக பலவழிகளிலும் காரை மண்ணும் மக்களும் வளம்பெறவும், அபிவிருத்தி பெறவும் வழங்கப்பட்ட பணிகள், சேவைகள், செயற்பாடுகளிற்கு தங்களிற்கும் தங்கள் நிர்வாக சபையில் பதவி வகித்த ஒவ்வோர் அங்கத்தவர்களிற்கும் வெளிநாடுகளில் குறிப்பாக கனடாவில் வதியும் காரை மக்கள் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

                  இங்ஙனம்

                 நிர்வாகம்

 கனடா காரை கலாச்சார மன்றம்.

 

KDS 2015-2017

காரைநகர் அபிவிருத்தி சபை வருடாந்த பொதுக்கூட்ட அறிவித்தல்!

                                  காரைநகர் அபிவிருத்தி சபை

                           வருடாந்த பொதுக்கூட்ட அறிவித்தல்


மேற்படி எமது சபையின்  வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 27.03.2017  திங்கட்கிழமை அன்று  காரைநகர் அபிவிருத்திச்  சபையின் நூலகத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறும்.அன்றைய தினமே புதிய நிர்வாகசபை தெரிவும் நடைபெறும். 

சபையின் யாப்பின்படி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் சபையின் வருடாந்த அங்கத்துவ பணத்தையோ அல்லது ஆயுட்கால அங்கத்துவ பணத்தையோ 25.03.2017 க்கு முன்னர் சபையின் காரியாலத்தில் செலுத்தி பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளவும்.
 
குறிப்பு:- பொதுக்கூட்டத்திற்கு அங்கத்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
 
                தலைவர்

 காரை அபிவிருத்தி சபை 

 

 

KDS GM NOTICE

காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழாவின் நூல் விற்பனை மூலம் கிடைக்கப்பெற்ற 70 ஆயிரம் ரூபா நிதியிலிருந்து இரண்டாம் கட்டமாக மேலும் 50 மாணவர்களுக்கு காரைநகர் அபிவிருத்திச் சபையினால் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

காரைநகர் நாகமுத்துப்  புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழாவின் நூல் விற்பனை மூலம் கிடைக்கப்பெற்ற 70 ஆயிரம் ரூபா நிதியிலிருந்து இரண்டாம் கட்டமாக மேலும் 50 மாணவர்களுக்கு காரைநகர் அபிவிருத்திச் சபையினால் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

காரைநகர் பாடசாலைகளில் கற்றலில் ஈடுபட்டுள்ள மாணவர்களில் கல்வியில் ஆர்வமுடைய மிக வறிய மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள் இரண்டாம் கட்டமாக காரைநகர் அபிவிருத்திச் சபையினரால் வழங்கப்பட்டது.

காரைநகர் பாடசாலைகளில் கற்றலில் ஈடுபட்டுள்ள மாணவர்களில் கல்வியில் ஆர்வமுடைய மிக வறிய மாணவர்களின் விபரம் காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளரின் ஊடாக பாடசாலை அதிபர்களிடமிருந்து 300 மாணவர்களின் விபரம் பெற்றுக்கொள்ளப்பட்டது. அதில் முதற் கட்டமாக 70 மாணவர்களுக்கு திரு த.பரமானந்தராஜா அவர்களின் நிதி உதவியுடன் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மேலும் நிதி உதவிகள் கிடைக்கப்பெறுமிடத்து அடுத்த கட்ட மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் ப.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.அதனையடுத்து காரைநகர் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க கனடா கிளை செயலாளர் கனக சிவகுமாரன் அவர்கள் காரைநகர் நாகமுத்துப்  புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழாவில் நூல் விற்பனை மூலம் கிடைக்கப்பெற்ற நிதியினை கரைநகர் அபிவிருத்திச் சபையிடம் கையளித்து அதன் ஊடாக மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்குமாறு கேட்டிருந்தார்.

அவருடைய கோரிக்கைக்கமைய கற்றல் உபகரணங்கள் பாடசாலை மாணவர்களில் இரண்டாவது தொகுதியினருக்கு வழங்கப்பட்டது. அடுத்த தொகுதி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 9ம் திகதி மணற்காடு முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற உள்ள கும்பாபிஷேக தின சங்காபிஷேக உற்சவத்தின் போது வழங்கப்பட உள்ளது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழா மூலமாகப் பெறப்பட்ட எழுபதாயிரம் ரூபா காரை அபிவிருத்திச் சபைத் தலைவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழா மூலமாகப் பெறப்பட்ட எழுபதாயிரம் ரூபா காரை அபிவிருத்திச் சபைத் தலைவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சென்ற 12-01-2017அன்று காரை. இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழாவின்போது நூல்களைப் பெற்றுக் கொண்டவர்கள் வழங்கியவகையில் சேர்ந்த பணம் எழுபதாயிரம் ரூபாவும் காரை அபிவிருத்திச் சபைத் தலைவர் திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நூல் அறிமுக விழா மூலமாகப் பெற்றுக்கொள்ளப்படும் அனைத்துப் பணமும் வசதி குறைந்த மாணவர்களின் கற்றல் செயற்பாடு ஒன்றிற்கு உதவப்படும் என விழாவின் ஏற்பாட்டாளர்களினால் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் காரை அபிவிருத்திச் சபையினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற வசதி குறைந்த மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்பாட்டுக்கு உதவும் நோக்குடன் இவ் எழுபதாயிரம் ரூபாவும் கையளிக்கப்பட்டுள்ளது.

 காரைநகர் பாடசாலைகளிலிருந்து  வசதிகுறைந்த  முந்நூறு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு இவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்பாட்டின் இரண்டாம் கட்டமாக ஒரு தொகுதி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்குவதற்கு இவ்வுதவுதொகை பயன்படுத்தப்படவுள்ளதாக திரு.ப.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

நூலின் பதிப்பாளரும் விழாவின் ஏற்பாட்டாளருமான திரு.கனக சிவகுமாரன் பணத்தினைக் கையளித்தபோது திரு. விக்கினேஸ்வரன் காரைஅபிவிருத்திச் சபையின் உப-தலைவர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களுடன் இணைந்து அதனைப் பெற்றுக்கொண்டபோது எடுக்கப்பட்ட படத்தினை கீழே காணலாம்.

Handing Over Photo

கனடா காரை கலாசார மன்றத்தினால் காரைநகர் பாடசாலைகளுக்கு வழங்குவதற்காக அனுப்பிவைக்கப்பட்ட 06 மடிக்கணனிகள் 21.01.2017 சனிக்கிழமை அன்று காரைநகர் ஆரம்பப் பாடசாலைகள் நான்கிற்கும் காரைநகர் கோட்ட அலுவலகத்திற்கும், காரைநகர் அபிவிருத்திச் சபையின் அலுவலகப் பாவனைக்காகவும் ஒரு கணனி வழங்கப்பட்டது.

கனடா காரை கலாசார மன்றத்தினால் காரைநகர் பாடசாலைகளுக்கு வழங்குவதற்காக அனுப்பிவைக்கப்பட்ட 06 மடிக்கணனிகள் 21.01.2017 சனிக்கிழமை அன்று  காரைநகர் ஆரம்பப் பாடசாலைகள் நான்கிற்கும் காரைநகர் கோட்ட அலுவலகத்திற்கும், காரைநகர் அபிவிருத்திச் சபையின் அலுவலகப் பாவனைக்காகவும் ஒரு கணனி  வழங்கப்பட்டது.

 காரைநகர் அபிவிருத்திச் சபை நூலகத்தில் வைத்து காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் ப.விக்னேஸ்வரன் அவர்களால் பாடசாலை அதிபர்கள்,கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரிடம் இந்த மடிக் கணனிகள் கையளிக்கப்பட்டது.

காரைநகர் பாலாவோடை.இ.த.க.பாடசாலை,ஆயிலி சிவஞானேதய வித்தியாசாலை,தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலயம்,வலந்தலை வடக்கு அ.மி.த.க. பாடசாலை,என்பவற்றிற்கும் காரைநகர் கோட்ட அலுவலகத்திற்கும் தலா ஒவ்வொரு மடிக் கணனிகள் வழங்கப்பட்டதுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையின் அலுவலகப் பாவனைக்காகவும் ஒரு கணனி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த காரைநகர் கோட்டப் பணிப்பாளர் திரு ஆ.குமரேசமூர்த்தி அவர்கள் காரைநகர் அபிவிருத்திச் சபை காரைநகர் மாணவர்களின் கல்வி வளர்சிசியில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருவது பாராட்டப்பட வேண்டிய விடயம் இதற்கு கனடா காரை கலாசார மன்றம் அதிக பங்களிப்பினை வழங்கி வருவதுடன் மன்ற உறுப்பினர்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கி வரும் பங்களிப்பு மகத்தானது.அவர்களுடைய கல்விச் சேவை மேலும் தொடரவேண்டும் இதன் ஊடாக இப்பிரதேச மாணவர்களின் கல்வித் தரத்தினை மேலும் அதிகரிக்கின்ற வாய்ப்பு ஏற்படும்.காரைநகர் அபிவிருத்திச் சபைக்கு கல்விப்புலத்திலே அதிகம் கைதேர்ந்த ஒருவர் தலைவராகக் கிடைத்தமை காரை மக்கள் செய்த பாக்கியம் என்றுதான் சொல்லவேண்டும் அவருடைய காலத்திலே கல்வியிலே புரட்சியினை மேற்கொண்டு காரை மண்ணை மீண்டும் கல்வியிலே உயர்த்தப் பாடுபடுவோம் என்றார்.

பாலாவோடை இந்துத் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் திரு ஆ.யோகலிங்கம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் எமது பாடசாலையில் இன்று வரை கணனி இல்லாத காரணத்தினால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டோம் பாடசாலைத் தரவுகள்,கல்விச் செயற்பாட்டுக்குத் தேவையான வேலைத் திட்டங்களை கணனியின் ஊடாகச் செய்வதற்காக வேறு இடங்களுக்குச் சென்றே அதனை மேற்கொள்ள வேண்டிய நிலை இதுவரை காணப்பட்டது.இதனால் மேலதிக வேலைச்சுமை,நிதிச் செலவு என்பன ஏற்பட்டு வந்தன இன்று எமது பாடசாலைக்கு வழங்கப்பட்ட கணனி ஊடாக இந்தச் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.அத்துடன் எமது பாடசாலைக்குப் போட்டோப் பிரதி இயந்திரம் இல்லாமை பெருங் குறையாக உள்ளது.இதனைப் பெற்றுத் தர காரைநகர் அபிவிருத்திச் சபை முன்வரவேண்டும் இதன் ஊடாக மாணவர்களுக்கு மேலதிக பயிற்சி தாள்களைப் பிரதி செய்து அவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கமுடியும் இவ்வாண்டும் தரம் 1 வகுப்பிற்கு 04 மாணவர்கள் இணைந்துள்ளனர்.தொடர்ந்து மாணவர்களின் தொகையும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.பாடசாலையின் வளங்கள் அதிகரிக்கும் போது மாணவர்களின் தொகையும் அதிகரிக்கும் அதன் ஊடாக சிறந்த கல்வியினை இப்பகுதி மாணவர்களுக்கு வழங்கத் தயாராக உள்ளோம் என்றார்.

ஆயிலி சிவஞானோதயா வித்தியாலய அதிபர் கருத்துத் தெரிவிக்கையில் எமது பாடசாலைக்கும் இதுவரை கணனிகள் வழங்கப்படவில்லை கல்வி அமைச்சின் சுற்று நிருபம் மூலம் கடந்தவாரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாடசாலை இணையத்தளப் பாவனைக்கு மாதாந்தம் 200 ரூபா பெற்றுக்கொள்ள முடியம் என்று ஆனால் கணனி இல்லாமையாள் இணையத்தளத்தினைப் பாவிக்க முடியாத நிலை காணப்பட்டது.இன்று வழங்கப்பட்ட கணனி ஊடாக மேற்படி இணையப் பாவனையை மேற்கொள்ள முடியும் என நம்புகின்றோம். இதன் ஊடாக கல்வி அமைசசினால் வெளியிடப்படுகின்ற சுற்று நிருபங்களை உடனுக்குடன் அறிந்து செயற்படக் கூடிய வாய்ப்பும் பாடசாலைக்கும் கல்வித் திணைக்களத்திற்குமிடையிலான தகவல் தொடர்பினை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பும் ஏற்படுத்தித் தந்த கனடா காரை கலாசார மன்றத்தினருக்கும் காரைநகர் அபிவிருத்திச் சபையினருக்கும் காரைநகர் பாடசாலை அதிபர்கள் சார்பாக நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.

அத்துடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு இவ்வாண்டு தோற்ற உள்ள மாணவர்களின் மேலதிக கல்விச் செயற்பாடுகள் தொடர்பாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆரம்பப் பாடசாலை அதிபர்களுடன் கலந்துரையாடிய தலைவர் பயிற்சிப் பரீட்சைகள்,கருத்தரங்குகள் என்பன காரைநகர் அபிவிருத்திச் சபையினால் ஒழுங்கு செய்து தரப்படும் எனவும் இந்த மாணவர்களில் அதிக கவனம் எடுத்தச் செயற்படும் படியும் கனடா காரை கலாசார மன்றத்தினால் வழங்கப்படும் வட்டிப் பணத்தில் தங்களுக்கு ஏற்கனவே வழங்கிய அறிவுறுத்தலின் படி பயிற்சி வினாத்தாள்களைப் பெற்று மேலதிகமாக மாணவர்களைப் பயிற்றுவிக்குமாறும் தெரிவித்தார்.

IMG_0377 (Copy)IMG_0378 (Copy) IMG_0379 (Copy) IMG_0380 (Copy) IMG_0381 (Copy) IMG_0383 (Copy) IMG_0385 (Copy) IMG_0387 (Copy) IMG_0388 (Copy) IMG_0389 (Copy) IMG_0390 (Copy) IMG_0391 (Copy) IMG_0392 (Copy) IMG_0393 (Copy) IMG_0394 (Copy) IMG_0395 (Copy) IMG_0396 (Copy) IMG_0397 (Copy) IMG_0398 (Copy) IMG_0399 (Copy) IMG_0400 (Copy) IMG_0401 (Copy) IMG_0402 (Copy) IMG_0403 (Copy) IMG_0404 (Copy) IMG_0405 (Copy) IMG_0406 (Copy) IMG_0407 (Copy) IMG_0408 (Copy) IMG_0409 (Copy) IMG_0410 (Copy) IMG_0411 (Copy) IMG_0412 (Copy)

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் காரைநகர் அபிவிருத்திச் சபையும் இணைந்து நடத்திய முப்பெரும் விழா கடந்த திங்கட்கிழமை யாழ்ற்ரன் கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்றது. அத்துடன் கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக அதன் தலைவர் திரு. பரமானந்தராஜா தம்பிஐயா அவர்கள் தனது பெற்றோரின் நினைவாக வழங்கிய நிதியில் ஒரு தொகுதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டன.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் காரைநகர் அபிவிருத்திச் சபையும் இணைந்து நடத்திய முப்பெரும் விழா கடந்த திங்கட்கிழமை யாழ்ற்ரன் கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்றது. அத்துடன் கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக அதன் தலைவர் திரு. பரமானந்தராஜா தம்பிஐயா  அவர்கள் தனது பெற்றோரின் நினைவாக வழங்கிய நிதியில் ஒரு தொகுதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டன.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் காரைநகர் அபிவிருத்திச் சபையும் இணைந்து நடத்திய முப்பெரும் விழா கடந்த திங்கட்கிழமை யாழ்ற்ரன் கல்லூரி பிரதான மண்டபத்தில் அதிபர் வே.முருகமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதில் தியாகச்சுடர் நினைவுத் தொகுப்பு நூல் அறிமுகம்,தியாகத் திறன் வேள்வி மாணவர் போட்டிகளுக்கான பரிசளிப்பு,சான்றோர் மதிப்பளிப்பு என்பன இடம்பெற்றது.

அதிகளவான பார்வையாளர்கள் கலந்தகொண்ட இவ் விழாவில் பிரதம விருந்தினராக மலாயா காரை ஒன்றியத் தலைவர் டத்தே சண்முகம் சிவானந்தனும் கௌரவ விருந்தினர்களாக தெய்வீகத் திருப்பணி அரசு சுப்பிரமணியம் கதிர்காமநாதன்,யாழ் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை விரிவுரையாளர் திருமதி வீரமங்கை யோகரத்தினம்.யாழ் பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர் செல்வி பரமேஸ்வரி கணேசன்,கிழவன்காடு கலாமன்ற ஸ்தாபகத் தலைவர் நடராசா சோதிநாதன் ஆகியோரும்.

கௌரவ விருந்தினராக காரைநகர் இந்தக் கல்லூரி முன்னாள் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் மற்றும் பன்னாட்டு காரை அபிவிருத்திச் சங்கங்களின் கௌரவ உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

கலாபூசணம் நா.தர்மராஜா.கலாபூசணம் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை,கலாபூசணம் வே.நடராசா,ஓய்வு பெற்ற அதிபர் க.தில்லையம்பலம்,பேராசிரியர் ஆறுமுகம் நல்லைநாதன் ஆகியோர் இந்நிகழ்வில் மாண்பு பெற்றனர்.

அத்துடன் கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக அதன் தலைவர் திரு. பரமானந்தராஜா தம்பிஐயா  அவர்கள் தனது பெற்றோரின் நினைவாக வழங்கிய நிதியில் ஒரு தொகுதி பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டன.

காரைநகர் பாடசாலைகளில் கற்றலில் ஈடுபட்டுள்ள மாணவர்களில் கல்வியில் ஆர்வமுடைய மிக வறிய மாணவர்களின் விபரம் காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளரின் ஊடாக பாடசாலை அதிபர்களிடமிருந்து 300 மாணவர்களின் விபரம் பெற்றுக்கொள்ளப்பட்டது. அதில் முதற் கட்டமாக 70 மாணவர்களுக்கு திரு பரமானந்தராஜா அவர்களின் நிதி உதவியுடன் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து மேலும் நிதி உதவிகள் கிடைக்கப்பெறின் அடுத்த கட்ட மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் ப.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

DSC_4771 (Copy) (Copy) DSC_4773 (Copy) (Copy) DSC_4774 (Copy) (Copy) DSC_4775 (Copy) (Copy) DSC_4776 (Copy) (Copy) DSC_4777 (Copy) (Copy) DSC_4778 (Copy) (Copy) DSC_4779 (Copy) (Copy) DSC_4780 (Copy) (Copy) DSC_4781 (Copy) (Copy) DSC_4783 (Copy) (Copy) DSC_4784 (Copy) (Copy) DSC_4785 (Copy) (Copy) DSC_4787 (Copy) (Copy) DSC_4788 (Copy) (Copy) DSC_4789 (Copy) (Copy) DSC_4790 (Copy) (Copy) DSC_4791 (Copy) (Copy) DSC_4792 (Copy) (Copy) DSC_4793 (Copy) (Copy) DSC_4794 (Copy) (Copy) DSC_4795 (Copy) (Copy) DSC_4796 (Copy) (Copy) DSC_4798 (Copy) (Copy) DSC_4799 (Copy) (Copy) DSC_4800 (Copy) (Copy) DSC_4801 (Copy) (Copy) DSC_4802 (Copy) (Copy) DSC_4803 (Copy) (Copy) DSC_4804 (Copy) (Copy) DSC_4805 (Copy) (Copy) DSC_4807 (Copy) (Copy) DSC_4808 (Copy) (Copy) DSC_4809 (Copy) (Copy) DSC_4810 (Copy) (Copy) DSC_4811 (Copy) (Copy) DSC_4812 (Copy) (Copy) DSC_4813 (Copy) (Copy) DSC_4814 (Copy) (Copy) DSC_4815 (Copy) (Copy) DSC_4816 (Copy) (Copy) DSC_4817 (Copy) (Copy) DSC_4818 (Copy) (Copy) DSC_4819 (Copy) (Copy) DSC_4820 (Copy) (Copy) DSC_4821 (Copy) (Copy) DSC_4822 (Copy) (Copy) DSC_4823 (Copy) (Copy) DSC_4824 (Copy) (Copy) DSC_4825 (Copy) (Copy) DSC_4827 (Copy) (Copy) DSC_4828 (Copy) (Copy) DSC_4829 (Copy) (Copy) DSC_4830 (Copy) (Copy) DSC_4831 (Copy) (Copy) DSC_4834 (Copy) (Copy) DSC_4835 (Copy) (Copy) DSC_4836 (Copy) (Copy) DSC_4837 (Copy) (Copy) DSC_4838 (Copy) (Copy) DSC_4839 (Copy) (Copy) DSC_4840 (Copy) (Copy) DSC_4841 (Copy) (Copy) DSC_4842 (Copy) (Copy) DSC_4843 (Copy) (Copy) DSC_4844 (Copy) (Copy) DSC_4845 (Copy) (Copy) DSC_4846 (Copy) (Copy) DSC_4847 (Copy) (Copy) DSC_4848 (Copy) (Copy) DSC_4849 (Copy) (Copy) DSC_4851 (Copy) (Copy) DSC_4852 (Copy) (Copy) DSC_4855 (Copy) (Copy) DSC_4856 (Copy) (Copy) DSC_4857 (Copy) (Copy) DSC_4858 (Copy) (Copy) DSC_4859 (Copy) (Copy) DSC_4860 (Copy) (Copy) DSC_4861 (Copy) (Copy) DSC_4862 (Copy) (Copy) DSC_4864 (Copy) (Copy) DSC_4865 (Copy) (Copy) DSC_4866 (Copy) (Copy) DSC_4868 (Copy) (Copy) DSC_4869 (Copy) (Copy) DSC_4870 (Copy) (Copy) DSC_4871 (Copy) (Copy) DSC_4873 (Copy) (Copy) DSC_4874 (Copy) (Copy) DSC_4876 (Copy) (Copy) DSC_4878 (Copy) (Copy) DSC_4879 (Copy) (Copy) DSC_4880 (Copy) (Copy) DSC_4881 (Copy) (Copy) DSC_4882 (Copy) (Copy) DSC_4883 (Copy) (Copy) DSC_4884 (Copy) (Copy) DSC_4885 (Copy) (Copy) DSC_4886 (Copy) (Copy) DSC_4887 (Copy) (Copy) DSC_4888 (Copy) (Copy) DSC_4889 (Copy) (Copy) DSC_4890 (Copy) (Copy) DSC_4891 (Copy) (Copy) DSC_4892 (Copy) (Copy) DSC_4893 (Copy) (Copy) DSC_4894 (Copy) (Copy) DSC_4895 (Copy) (Copy) DSC_4896 (Copy) (Copy) DSC_4897 (Copy) (Copy) DSC_4898 (Copy) (Copy) DSC_4899 (Copy) (Copy) DSC_4900 (Copy) (Copy) DSC_4901 (Copy) (Copy) DSC_4902 (Copy) (Copy) DSC_4903 (Copy) (Copy) DSC_4904 (Copy) (Copy) DSC_4905 (Copy) (Copy) DSC_4906 (Copy) (Copy) DSC_4907 (Copy) (Copy) DSC_4908 (Copy) (Copy) DSC_4909 (Copy) (Copy) DSC_4910 (Copy) (Copy) DSC_4911 (Copy) (Copy) DSC_4912 (Copy) (Copy) DSC_4913 (Copy) (Copy) DSC_4914 (Copy) (Copy) DSC_4915 (Copy) (Copy) DSC_4917 (Copy) (Copy) DSC_4918 (Copy) (Copy) DSC_4919 (Copy) (Copy) DSC_4921 (Copy) (Copy) DSC_4922 (Copy) (Copy) DSC_4923 (Copy) (Copy) DSC_4924 (Copy) (Copy)

 

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வேரப்பிட்டி ஸ்ரீ கணேச வித்தியாலயத்திற்கு இரண்டு மடிக்கணணிகள் வழங்கப்பட்டுள்ளன!

கனடா காரை கலாச்சார  மன்றத்தினால் வேரப்பிட்டி ஸ்ரீ கணேச வித்தியாலயத்திற்கு இரண்டு மடிக்கணணிகள் வழங்கப்பட்டுள்ளன!


28.11.2016 கடந்த திங்கட்கிழமை இரண்டு மடிக்கணணிகளும் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கையளிக்கப்பட்டுள்ளன. காரைநகர் அபிவிருத்திச் சபையின் உப தலைவர் பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை, சபையின் கௌரவ உறுப்பினர்கள் பரம்தில்லைராசா, இரத்தினம் ஜெயராமன் ஆகியோர் சகிதம் சென்று மடிக் கணனிகளைப் பாடசாலை பொறுப்பாசிரியரிடம் வழங்கப்பட்டுள்ளன.


கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள மேற்படி இரண்டு கணணிகளும் 2013ம் ஆண்டு காலப்பகுதியில் திரு.கண்ணன் சுந்தரேசு அவர்களினால் வழங்கப்பட்ட 43 கணணிகளில் இருந்து கடந்த நிர்வாக சபையினரால் தற்போதைய நிர்வாக சபையினரிடம் யூன் 11, 2016 அன்று மீள கையளிக்கப்பட்ட 13 கணணிகளில் இருந்து வழங்கப்பட்டுள்ளன. மேலும் 5 கணணிகள் பாவனைக்கு உட்படுத்த தக்க வகையில் தயார் நிலையில் உள்ளன. அவற்றினை அவற்றினை வழங்கிய திரு.கண்ணன் சுந்தரேசு அவர்களின் விருப்பத்திற்கு இணங்க காரை மண்ணிற்கு அனுப்பி வைக்க மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.


திரு.கண்ணன் சுந்தரேசு அவர்களினால் காரை சிறார்களின் பாவனைக்கு என 2013ம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய நிர்வாக சபையினரிடம் வழங்கப்பட்ட 43 மடிக்கணணிகளில் இதுவரை 13 கணணிகள் மட்டுமே தற்போதைய நிர்வாக சபை எடுத்துக் கொண்ட முயற்சியினால் கடந்த நிர்வாக சபை உறுப்பினர்களிடம் இருந்து மீள பெறப்பட்டுள்ளன. மேலும் 30 மடிக்கணணிகள் தொடர்பாக விபரங்கள் கடந்த நிர்வாக சபை உறுப்பினர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

20161128_091853 20161128_110802 20161128_111849 20161128_111852 20161128_112702

“ஊரில் இருந்து”

காரை அபிவிருத்தி சபைத் தலைவர், காரைநகர் கோட்டக் கல்வி அதிகாரி ஆகியோரின் செய்திகள் "ஊரில் இருந்து" என்னும் பகுதியில் காரைவசந்தம் – 2016 விழா மண்டபத் திரையில் ஒளிபரப்பப்பட்டமை இன்றைய காரைநகரின் கல்வித்துறையினரிடமிருந்து கனடா-காரை கலாச்சார மன்றத்தின் செயற்பாடுகள் குறித்த நேரடியான தகவல்களைத் தந்தது.

கனடா காரை கலாசார மன்றம் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா தேசிய சேமிப்பு வங்கியில் நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிப்பு. அத்துடன் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான நவம்பர் மாத வட்டித் தொகையான 40,218.75 ரூபாவிற்கான காசோலையும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

CKCA logo

கனடா காரை கலாசார மன்றம் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா தேசிய சேமிப்பு வங்கியில் நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிப்பு. அத்துடன் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான நவம்பர் மாத வட்டித் தொகையான 40,218.75 ரூபாவிற்கான காசோலையும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.


கடந்த ஆண்டு கனடா காரை கலாசார மன்றம் தொடக்கிவைத்த ஆரம்பப் பாடசாலைகளுக்கான ஒரு மில்லியன் திட்டமானது நிறைவு பெற்றமை மகிழ்ச்சியளிப்பதாக வடமாகாண ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளரும் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவருமான உயர்திரு ப.விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.

வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா தேசிய சேமிப்பு வங்கியில் நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிக்கும் நிகழ்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காரைநகரில் உள்ள 12 ஆரம்பப் பாடசாலைகளில் 11 பாடசாலைகளுக்கு கடந்த வருடம் ஒவ்வொரு மில்லியன் ரூபா காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஊடாக நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதன் வட்டித்தொகை அந்தந்தப் பாடசாலைகளின் அபிவிருத்திச் சபைக் கணக்குகளில் வருடத்தில் இரு தடவைகள் வைப்பிலிடப்படுகின்றன.

அந்த வகையில் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா நவம்பர் 05ம் திகதி வைப்பிலிடப்பட்டது. அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது 12 பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்ட நிதி மூலம் பாடசாலை நாட்களில் தினசரி 500 ரூபாவினை ஒவ்வொரு பாடசாலைகளும் பெற்றுக்கொள்ள முடியும் இந்த நிதி ஊடாக பாடசாலையின் மேலதிக கற்றல் செயற்பாடுகளை ஏற்கனவே தங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய செலவு செய்ய முடியும் இதன் ஊடாக மாணவர்களின் கற்றல் செயற்பாடு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே கனடா காரை கலாசார மன்றத்தின் எதிர்பார்ப்பாகும் அந்த நோக்கத்தை நிறைவேற்ற அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.

அத்துடன் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான நவம்பர் மாத வட்டித் தொகையான 40,218.75 ரூபாவிற்கான காசோலையும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது. தற்போதைய வட்டி வீதத்தின் படி 12 பாடசாலைகளுக்கும் தலா 52,500.00 ரூபா எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி தேசிய சேமிப்பு வங்கியினால் அவர்களின் பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கணக்கில் வைப்பிலிடப்படும் தொடர்ந்து தொடர்ச்சியாக நவம்பர்,மே மாதங்களில் நாள் தவறாது வங்கியினால் வட்டிப்பணம் வைப்பிலிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

img_9590-copy img_9591-copy img_9592-copy img_9593-copy img_9594-copy img_9595-copy img_9596-copy img_9597-copy img_9598-copy img_9599-copy img_9600-copy img_9601-copy img_9602-copy img_9603-copy img9604 img9605 img9606