காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழா மூலமாகப் பெறப்பட்ட எழுபதாயிரம் ரூபா காரை அபிவிருத்திச் சபைத் தலைவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழா மூலமாகப் பெறப்பட்ட எழுபதாயிரம் ரூபா காரை அபிவிருத்திச் சபைத் தலைவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சென்ற 12-01-2017அன்று காரை. இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற காரைநகர் நாகமுத்துப் புலவர் கவிதைகள் நூல் அறிமுக விழாவின்போது நூல்களைப் பெற்றுக் கொண்டவர்கள் வழங்கியவகையில் சேர்ந்த பணம் எழுபதாயிரம் ரூபாவும் காரை அபிவிருத்திச் சபைத் தலைவர் திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நூல் அறிமுக விழா மூலமாகப் பெற்றுக்கொள்ளப்படும் அனைத்துப் பணமும் வசதி குறைந்த மாணவர்களின் கற்றல் செயற்பாடு ஒன்றிற்கு உதவப்படும் என விழாவின் ஏற்பாட்டாளர்களினால் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் காரை அபிவிருத்திச் சபையினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற வசதி குறைந்த மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்பாட்டுக்கு உதவும் நோக்குடன் இவ் எழுபதாயிரம் ரூபாவும் கையளிக்கப்பட்டுள்ளது.

 காரைநகர் பாடசாலைகளிலிருந்து  வசதிகுறைந்த  முந்நூறு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு இவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்பாட்டின் இரண்டாம் கட்டமாக ஒரு தொகுதி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்குவதற்கு இவ்வுதவுதொகை பயன்படுத்தப்படவுள்ளதாக திரு.ப.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

நூலின் பதிப்பாளரும் விழாவின் ஏற்பாட்டாளருமான திரு.கனக சிவகுமாரன் பணத்தினைக் கையளித்தபோது திரு. விக்கினேஸ்வரன் காரைஅபிவிருத்திச் சபையின் உப-தலைவர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களுடன் இணைந்து அதனைப் பெற்றுக்கொண்டபோது எடுக்கப்பட்ட படத்தினை கீழே காணலாம்.

Handing Over Photo