கனடா காரை கலாசார மன்றம் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா தேசிய சேமிப்பு வங்கியில் நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிப்பு. அத்துடன் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான நவம்பர் மாத வட்டித் தொகையான 40,218.75 ரூபாவிற்கான காசோலையும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

CKCA logo

கனடா காரை கலாசார மன்றம் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா தேசிய சேமிப்பு வங்கியில் நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிப்பு. அத்துடன் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான நவம்பர் மாத வட்டித் தொகையான 40,218.75 ரூபாவிற்கான காசோலையும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.


கடந்த ஆண்டு கனடா காரை கலாசார மன்றம் தொடக்கிவைத்த ஆரம்பப் பாடசாலைகளுக்கான ஒரு மில்லியன் திட்டமானது நிறைவு பெற்றமை மகிழ்ச்சியளிப்பதாக வடமாகாண ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளரும் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவருமான உயர்திரு ப.விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.

வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா தேசிய சேமிப்பு வங்கியில் நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிக்கும் நிகழ்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காரைநகரில் உள்ள 12 ஆரம்பப் பாடசாலைகளில் 11 பாடசாலைகளுக்கு கடந்த வருடம் ஒவ்வொரு மில்லியன் ரூபா காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஊடாக நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதன் வட்டித்தொகை அந்தந்தப் பாடசாலைகளின் அபிவிருத்திச் சபைக் கணக்குகளில் வருடத்தில் இரு தடவைகள் வைப்பிலிடப்படுகின்றன.

அந்த வகையில் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா நவம்பர் 05ம் திகதி வைப்பிலிடப்பட்டது. அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது 12 பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்ட நிதி மூலம் பாடசாலை நாட்களில் தினசரி 500 ரூபாவினை ஒவ்வொரு பாடசாலைகளும் பெற்றுக்கொள்ள முடியும் இந்த நிதி ஊடாக பாடசாலையின் மேலதிக கற்றல் செயற்பாடுகளை ஏற்கனவே தங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய செலவு செய்ய முடியும் இதன் ஊடாக மாணவர்களின் கற்றல் செயற்பாடு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே கனடா காரை கலாசார மன்றத்தின் எதிர்பார்ப்பாகும் அந்த நோக்கத்தை நிறைவேற்ற அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.

அத்துடன் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான நவம்பர் மாத வட்டித் தொகையான 40,218.75 ரூபாவிற்கான காசோலையும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது. தற்போதைய வட்டி வீதத்தின் படி 12 பாடசாலைகளுக்கும் தலா 52,500.00 ரூபா எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி தேசிய சேமிப்பு வங்கியினால் அவர்களின் பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கணக்கில் வைப்பிலிடப்படும் தொடர்ந்து தொடர்ச்சியாக நவம்பர்,மே மாதங்களில் நாள் தவறாது வங்கியினால் வட்டிப்பணம் வைப்பிலிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

img_9590-copy img_9591-copy img_9592-copy img_9593-copy img_9594-copy img_9595-copy img_9596-copy img_9597-copy img_9598-copy img_9599-copy img_9600-copy img_9601-copy img_9602-copy img_9603-copy img9604 img9605 img9606