காரைநகர் அபிவிருத்தி சபையின் திரு.ப.விக்கினேஸ்வரன் தலைமையிலான நிர்வாக சபையினருக்கு கனடா காரை கலாச்சார மன்றத்தின் நன்றிகளும் பாராட்டுக்களும்!

CKCA LOGO (Copy)

காரைநகர் அபிவிருத்தி சபையின் திரு.ப.விக்கினேஸ்வரன் தலைமையிலான நிர்வாக சபையினருக்கு கனடா காரை கலாச்சார மன்றத்தின் நன்றிகளும் பாராட்டுக்களும்!

காரைநகர் அபிவிருத்தி சபை திரு.ப.விக்கினேஸ்வரன் தலைமையில் 07.06.2015 அன்று பதவியேற்றுக்கொண்டது. அன்று முதல் இன்றுவரை காரை மண்ணிற்கான மகத்தான சேவையில் தம்மை இணைத்துக் கொண்டு பலவித இன்னல்களிற்கும் சிரமங்களிற்கும் மத்தியில் பெரும் பணியாற்றி வந்துள்ளது. காரைநகர் பாடசாலைகளின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் பெரும் பணி ஆற்றி வந்துள்ளதுடன் பொதுப்பணிகள் பலவற்றையும் வெளிநாடுகளில் வதியும் காரை மக்கள் மற்றும் மன்றங்களின் உதவிகளை பெற்றும், உள்ழூர் வளங்களை பயன்படுத்தியும் செயற்படுத்தி பெரும்பணியாற்றியுள்ளனர் என்பதனை காரை மக்கள் பலரும் அறிவார்கள்.

அந்த வகையில் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றம் 2006ம் ஆண்டு அமரர் ஜெ.தில்லையம்பலம் அவர்கள் கடமையாற்றிய காலம் முதல் இற்றைவரை காரை மண்ணிற்காக செயற்படுத்த வேண்டிய உதவிகளை காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கிடைக்கப்பெறும் வேண்டுகோள்கள் ஊடாகப்பெற்று செயற்படுத்தியும், திட்டங்களை வகுத்தும் மண்ணிற்கான செயற்பாடுகளை நிறைவேற்றிவருகின்றது.

திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களது தலைமையின் கீழ் கனடா காரை கலாச்சார மன்றத்தின் வேண்டுகோள்களை ஏற்று காரைநகர் அபிவிருத்தி சபை உரிய வகையில் உடனுக்குடன் செயற்பட்டு காரைமண்ணில் மக்களிற்கான, மாணவர்களிற்கான செயற்பாடுகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறைவேற்றுவதில் பெரும் பணி வகித்துள்ளது.

முதற்கட்டமாக காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் வருடாந்த அத்தியாவசிய அவசிய தேவைகளை நிறைவேற்ற 11 ஆரம்ப பாடசாலைகளிற்கும் தலா 10 இலட்சம் வீதம் 2015.05.05 இல் வழங்கப்பட்ட நிரந்தர வைப்பு நிதியில் இருந்து கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தில் இருந்து காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் செயற்திட்டங்களையும் செலவு விபரங்களையும் முறையே இதுவரை இரண்டு கட்டங்களாக பெற்று கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு அனுப்பி வைத்ததையும் அதனை 2016 காரை வசந்தம் விழா மலர் மூலமும், மன்றத்தின் இணையத்தளம் ஊடாக கனடா வாழ் காரை மக்களிற்கு தெரிவிக்கும் வகையில் உரிய நேரத்தில் அனுப்பி வைத்தமைக்கு பெரும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்துடன் கனடா காரை கலாச்சார மன்றம் வழங்கிய இப்பெரும் நிதி உதவி மூலம் காரைநகர் ஆரம்ப பாடசாலைகள் பெற்றுக்கொள்ளும் அபிவிருத்தியை, முன்னேற்றத்தினை நேரடியாக பாடசாலைகளின் அதிபர்கள் ஊடாக பெற்று வழங்கியமைக்கும், தொடர்ந்து 12வது பாடசாலையான வியாவில் ஆரம்ப பாடசாலைக்கும் ஏற்கெனவே வைப்பில் இட்ட 11 நிரந்தர வைப்புக்கள் போன்று குறிப்பிட்ட அதே தினத்தில் காரைநகர் அனைத்து ஆரம்ப பாடசாலைகளும் வங்கி வட்டி பணத்தினை பெற்றுக்கொள்ளும் வகையில் இறுதி நிரந்தர வைப்பாக கனடா காரை கலாச்சார மன்றம் வழங்கிய 10 இலட்சத்தினையும் 05.11.2016 அன்று வைப்பில் இட்டு வியாவில் சைவ வித்தியாலயத்தின் நிரந்தர வளர்ச்சிக்கு உதவியமைக்கும், கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஆரம்ப பாடசாலைகளிற்கான ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்கள் திட்டம் உரிய முறையில் முழுமைபெற செயற்பட்டமைக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது.

அத்துடன் தங்களது நிர்வாகம் பதவிக்கு வந்ததும் முதற்கட்டமாக அநாதை சிறுவனுக்காக கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக வழங்கப்பட்டு வந்த மாதாந்த உதவி கிரமமாக மாதந்தோறும் செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்தமைக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.

அதுமட்டுமன்றி 2016ம் ஆண்டு மிகவும் குறுகிய காலத்தில் தரம் 5 புலமை பரிசில்  பரீட்சையில் தோற்றும் மாணவர்களிற்கான கருத்தரங்கினை சிறப்பான முறையில் ஒழுங்கு செய்து 160 காரை மாணவர்கள் பங்கேற்கும் வகையில் யாழ்ற்ரன் கல்லூரி மண்டபத்தில் பயனுற நடாத்தியமைக்கும் நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது. தொடர்ந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களிற்கான பராட்டுவிழாவினையும் சிறப்புற நடாத்திமைக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றது கனடா காரை கலாச்சார மன்றம்.

அத்துடன் 2016ம் ஆண்டு சர்வதேச விதவைகள் தின நிகழ்வினை காரைநகரில் வாழும் நூற்றுக்கும் மேற்பட்ட விதவை பெண்கள் கலந்து பயன்பெறும் வகையில் யாழ் மாவட்டச் சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாசச் செயலாளர், காரைநகர் பிராந்திய கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் மூலமாக கருத்துரைகள் வழங்கி வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்துவற்கான விளக்கமளித்ததுடன் கலந்து கொண்ட நூறு பயனாளிகளிற்கு தென்னம்நாற்றுக்கன்றுகளும் வழங்கி கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணை நிகழ்வினை சிறப்பித்தமைக்கும் நன்றியினையும் பாராட்டுக்களையும் தங்களது நிர்வாகத்திற்கு தெரிவித்துக்கொள்கின்றது கனடா காரை கலாச்சார மன்றம்.

அது மட்டுமன்றி கனடா காரை கலாச்சார மன்றத்தினால் இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட 8 மடிக்கணணிகளை அதன் பயன்பாடு அறிந்து உரிய பயன்பெறும் வகையில் மேலும் காலதாமதப்படுத்தாமல் பாடசாலைகளிற்கு வழங்கி உடனடியாக செயற்பட்டு கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக சபையினரின் பாராட்டுக்களை மட்டுமன்றி அக்கணணிகளை வழங்கிய கனடிய அன்பர் மற்றும் கனடா வாழ் காரை மக்களின் பாராட்டுக்களையும் நன்றியினையும்  காரைநகர் அபிவிருத்தி சபையின் திரு.ப.விக்கினேஸ்வரன் தலைமையிலான நிர்வாக சபையினருக்கு தெரிவித்துக் கொள்வதில் பெருமையும் உவகையும் கொள்கின்றது கனடா காரை கலாச்சார மன்றம்.

மேலும் தங்களது நிர்வாகத்தின் ஊடாக பலவழிகளிலும் காரை மண்ணும் மக்களும் வளம்பெறவும், அபிவிருத்தி பெறவும் வழங்கப்பட்ட பணிகள், சேவைகள், செயற்பாடுகளிற்கு தங்களிற்கும் தங்கள் நிர்வாக சபையில் பதவி வகித்த ஒவ்வோர் அங்கத்தவர்களிற்கும் வெளிநாடுகளில் குறிப்பாக கனடாவில் வதியும் காரை மக்கள் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

                  இங்ஙனம்

                 நிர்வாகம்

 கனடா காரை கலாச்சார மன்றம்.

 

KDS 2015-2017