Category: வியாவில் சைவ வித்தியாலயம்

வியாவில் சைவ வித்தியாலயத்தின் சமையலறைத் திருத்த வேலைகள் கனடா-காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

வியாவில் சைவ வித்தியாலயத்தின் சமையலறைத் திருத்த வேலைகள் கனடா-காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

வியாவில் சைவ வித்தியாலயத்தில் அமைந்துள்ள சமையலறை மிகுந்த சேதமடைந்திருந்ததனால் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் பல்வேறு அசளகரியங்களை எதிர்கொண்டு வந்துள்ளனர். சமையலறையின் குசினிப்பகுதியில் சமைக்கமுடியாத நிலை இருந்ததனால் பாடசாலைக்கு வெளியிலிருந்தே உணவு சமைக்கப்பட்டு எடுத்து வரப்பட்டிருந்தது. மழைகாலங்களில் கூரையூடாக ஒழுக்கிருந்ததனால் மாணவர்கள் அங்கிருந்து உணவருந்துவதில் அசளகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.

சமையலறையினை திருத்தம் செய்யப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறித்தி முன்னாள் அதிபரான திருமதி கௌ.அருள்மொழி அவர்களினால் கனடா-காரை கலாசார மன்றத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இதனைத் திருத்திக்கொடுப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அருள்மொழியைத் தொடர்ந்து வந்த அதிபர் திரு.நல்லதம்பி கிஸ்ணபவன் அவர்களுடன் கனடா-காரை கலாசார மன்றம் தொடர்புகொண்டு திருத்த வேலைகளை முன்னெடுக்கவிருந்த தருணத்தில் அவர் இடமாற்றலாகிச் செல்ல புதிய அதிபராக திரு.கே.துஸ்யந்தன் பதவியேற்றிருந்தார். துஸ்யந்தன் அவர்கள் எடுத்துக்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக காரை அபிவிருத்திச் சபையின் மேற்பார்வையில் சமையலறையின் திருத்த வேலைகள் யாவும் ஐந்து இலட்சத்து ஐம்பத்தொராயிரமம் ரூபா செலவில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இப்பணிக்கு சில அன்பர்களும் முன்வந்து நன்கொடையினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இப்பணியின் அவசியத்தைக் கருத்திற்கொண்டு உதவிசெய்த கனடா-காரை கலாசார மன்றத்துக்கு பாடசாலைச் சமூகத்தின் சார்பில் நன்றி தெரிவித்து அதிபர் திரு.துஸ்யந்தன் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

இக்கடிதத்தினை கீழே பார்வையிடலாம்.

காரைநகர் பாடசாலை மாணவர்களின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளும் காரைநகர் கல்வி நிலைமையும்

 

காரைநகர் கல்வி நிலைமை

அண்மையில் வெளிவந்த கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை பாடசாலை பெறுபேறுகளின் படி தீவக வலயத்தில் 53.17% மாணவர்களே பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்கள். மன்னார் மாவட்டத்தில்74.17% மாணவர்கள்  சித்தியடைந்துள்ளார்கள்.

காரைநகரில் உள்ள 4 பாடசாலைகளிலும் மொத்தம் 128 பேர் பரீட்சைக்குத் தோற்றி 64 மாணவர்கள் 50% மட்டுமே சித்தியடைந்துள்ளனர் அதிலும் 59 பேர் மட்டுமே உயர் கல்வியைத் தொடரமுடியும். இது கல்வியில் காரைநகர் எவ்வளவு தூரம் பின்னடைவாக உள்ளதென்பதைக் காணக் கூடியதாக உள்ளது.

நாம் ஒருசில மாணவர் பெற்ற அதிகூடிய பெறுபேறுகளை பார்த்து மட்டும் கல்வியின் தரத்தை நிச்சயிக்கமுடியாது. பாடசாலைகளில் கல்வியைத் தவிர்ந்து மற்றைய விடயங்களுக்காக  நேரத்தையும் பணத்தையும்  வீணடிக்காது கல்லூரி அதிபர்கள்,ஆசிரியர்கள் முழு அக்கறை எடுப்பார்களாயின் இந்த நிலைமையை மாற்றமுடியும். பாடசாலைகளில் உள்ள பணத்தை கொண்டு ஆசிரியர்களுக்கு ஊக்குவிப்புச் சலுகைகள் அல்லது மேலதிக வகுப்புக்கள் என்பவற்றை நடத்துவதால் இந்த நிலைமையை மாற்றமுடியும் என நம்புகிறோம். எதிர்வரும் காலங்களில் விசேட வகுப்புக்களை நடத்த கனடா காரை கலாச்சார மன்றம் முன்வரும்.

 

 

 

[su_document url=”http://www.karainagar.com/pages/wp-content/uploads/2020/05/KDS-OL-Results-9.pdf”]

காரைநகர் வியாவில் சைவ வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 07.02.2019 வியாழக்கிழமை நடைபெற்றது!

01.06.2018 வெள்ளிக்கிழமை நடைபெற்ற காரைநகர் வியாவில் சைவ வித்தியாலய முதல்வர் திரு.கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் அவர்களின் சேவை நயப்பும், அகவை அறுபது பூர்த்தி விழாவும்!

காரைநகர் வியாவில் சைவ வித்தியாலய முதல்வர் திரு.கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் அவர்களின் சேவை நயப்பும், அகவை அறுபது பூர்த்தி விழாவும் இன்று 01.06.2018 வெள்ளிக்கிழமை நடைபெற்றது!

கனடா காரை கலாசார மன்றம் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா தேசிய சேமிப்பு வங்கியில் நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிப்பு. அத்துடன் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான நவம்பர் மாத வட்டித் தொகையான 40,218.75 ரூபாவிற்கான காசோலையும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

CKCA logo

கனடா காரை கலாசார மன்றம் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா தேசிய சேமிப்பு வங்கியில் நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிப்பு. அத்துடன் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான நவம்பர் மாத வட்டித் தொகையான 40,218.75 ரூபாவிற்கான காசோலையும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.


கடந்த ஆண்டு கனடா காரை கலாசார மன்றம் தொடக்கிவைத்த ஆரம்பப் பாடசாலைகளுக்கான ஒரு மில்லியன் திட்டமானது நிறைவு பெற்றமை மகிழ்ச்சியளிப்பதாக வடமாகாண ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளரும் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவருமான உயர்திரு ப.விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்தார்.

வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா தேசிய சேமிப்பு வங்கியில் நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிக்கும் நிகழ்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காரைநகரில் உள்ள 12 ஆரம்பப் பாடசாலைகளில் 11 பாடசாலைகளுக்கு கடந்த வருடம் ஒவ்வொரு மில்லியன் ரூபா காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஊடாக நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதன் வட்டித்தொகை அந்தந்தப் பாடசாலைகளின் அபிவிருத்திச் சபைக் கணக்குகளில் வருடத்தில் இரு தடவைகள் வைப்பிலிடப்படுகின்றன.

அந்த வகையில் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா நவம்பர் 05ம் திகதி வைப்பிலிடப்பட்டது. அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது 12 பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்ட நிதி மூலம் பாடசாலை நாட்களில் தினசரி 500 ரூபாவினை ஒவ்வொரு பாடசாலைகளும் பெற்றுக்கொள்ள முடியும் இந்த நிதி ஊடாக பாடசாலையின் மேலதிக கற்றல் செயற்பாடுகளை ஏற்கனவே தங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய செலவு செய்ய முடியும் இதன் ஊடாக மாணவர்களின் கற்றல் செயற்பாடு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே கனடா காரை கலாசார மன்றத்தின் எதிர்பார்ப்பாகும் அந்த நோக்கத்தை நிறைவேற்ற அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.

அத்துடன் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான நவம்பர் மாத வட்டித் தொகையான 40,218.75 ரூபாவிற்கான காசோலையும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது. தற்போதைய வட்டி வீதத்தின் படி 12 பாடசாலைகளுக்கும் தலா 52,500.00 ரூபா எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி தேசிய சேமிப்பு வங்கியினால் அவர்களின் பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கணக்கில் வைப்பிலிடப்படும் தொடர்ந்து தொடர்ச்சியாக நவம்பர்,மே மாதங்களில் நாள் தவறாது வங்கியினால் வட்டிப்பணம் வைப்பிலிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

img_9590-copy img_9591-copy img_9592-copy img_9593-copy img_9594-copy img_9595-copy img_9596-copy img_9597-copy img_9598-copy img_9599-copy img_9600-copy img_9601-copy img_9602-copy img_9603-copy img9604 img9605 img9606

நூல் வெளியீட்டு விழா சிறப்புற வியாவில் சைவ வித்தியாலய அதிபர் திரு.க.சுந்தரலிங்கம் அவர்களின் வாழ்த்துச் செய்தி

Viyavil

திரு.ச.அருணாசலம் அவர்கள் குமிழங்குளி காரைநகரைப் பிறப்பிடமாகவும் தங்கோடை காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்டவர். இவர் ஒரு கல்விச் சேவையாளர் மட்டுமன்றி சமூகச் செயற்பாடுகளுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த முதன்மையானவர். "மக்களோடு மக்களாக மக்களுக்கு மகத்தான பணியாற்றியமையினால்" மக்களின் சொத்தாகப் போற்றப்படுகின்றார். 


யா-வியாவில் சைவ வித்தியாலயமே காரைநகரில் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட சைவ பாடசாலையாகும். அதுமட்டுமன்றி சைவ சமயத்ததை வளர்க்கும் நிறுவனமாகவும் இப்பாடசாலை விளங்குகின்றது. திரு.ச.அருணாசலம் அவர்கள் ஆசிரியர்களது வாண்மை விருத்திக்கும் வித்திட்டவராகத் திகழ்ந்தது மட்டுமன்றி இவரது செயற்பாட்டினைத் தொடர்ந்தே ஆசிரியர் பயிற்சிக கலாசாலையும் ஆரம்பிக்கப்பட்டது. இவரது மகத்தான பணி என்றென்றும் போற்றப்பட வேண்டி ஒன்றாகும். 


கல்வியைப் புகட்டுவதில் முனைப்பாகத் திகழ்ந்து சிறந்த கல்விமான்களை இக்கிராமத்தில் உருவாக்கிய பெருமைக்குரியவராவார். இவ்வாறான இவரது பணி என்றென்றும் போற்றப்பட வேண்டிய ஒன்றாகும். மாணவர்களில் ஆரம்பித்து கிராமம், சமூகம், நகரம், நாடு என்ற அளவிற்கு இவரது பணியும் சேவையும் வளர்ச்சியடைந்தமையை முன்னிட்டு எமது பாடசாலை சமூகம் பெருமையடைவதுடன் நூல் வெளியீட்டு விழா சிறப்புற வாழ்த்துகின்றோம். 


திரு.க.சுந்தரலிங்கம்
அதிபர்
யா-வியாவில் சைவ வித்தியாலயம்
காரைநகர்