கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 3ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள்!

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 3ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக  12 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் வீதம்  நிரந்தர வைப்பில் இடப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி பணத்தினை பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு அதனை உறுதி செய்து கொண்டு இந்நிரந்தர வைப்பு நிதியினை பெற்றுக்கொண்டார்கள்.

அதன் அடிப்படையில் கிடைக்கப்பெறும் வட்டிப் பணத்தின் 50 விகிதமான நிதியானது நேரடியாக கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளான மேலதிக வகுப்புக்களிற்கான ஆசிரியர் வேதனம், மெல்ல கற்கும் மாணவர்களிற்கான விசேட வகுப்புக்கான ஆசிரியர் வேதனம் மற்றும் அதற்குரிய செலவீனங்ளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் வங்கி வட்டியில் இருந்து கிடைக்கப்பெறும் 20 விகிதமான நிதியானது இணைப்பாட விதான செயற்பாடுகளான விளையாட்டு, தமிழ் திறன் போட்டி, பரிசளிப்பு நிகழ்வுகளிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தின் 20 விகிதம் மேலதிகமாக மாதந்தம் துண்டுவிழும் மின்சார கட்டணம் செலுத்தவும், மிகுதி 10 விகிதமான நிதி மலசலகூட சுத்திகரிப்பு, குடிநீர் தேவைகளிற்கான கொடுப்பனவுகளிற்காகவும் பயன்படுத்த முடியும் எனவும் திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் பாடசாலைகள் ஒவ்வொன்றும் வருடத்திற்கு இரண்டு தடவைகள் ( மே05 /நவம்பர் 05 ) கிடைக்கப்பெறும் வட்டி பணத்தில் ஊடாக செலவு செய்யப்படும் விபரங்களை காநைரகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டது. அதன் அடிப்படையில் மூன்றாவது தடவையாக 05.11.2016 அன்று 3ம் கட்ட வட்டிப்பணமாக 10 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 40,218.75 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

அத்துடன் பாலாவோடை இந்து தமிழ் கலவன் பாடசாலைக்கு நிரந்தர வைப்பு நிதியில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி மற்றைய  பாடசாலைகள் போன்று மே 05 /நவம்பர் 05  கிடைக்கப்பெற நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் பாலாவோடை இந்து தமிழ் கலவன் பாடசாலை வங்கிக் கணக்கிற்கு  9,750.00 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

11.11.2016 அன்று கனடா காரை கலாச்சார மன்றம் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான ஒரு மில்லியன் ரூபா தேசிய சேமிப்பு வங்கியில் நிரந்தர வைப்பிலிடப்பட்டு அதற்கான சான்றிதழ் பிரதி பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.  அத்துடன் வியாவில் சைவ வித்தியாலயத்திற்கான 2016 நவம்பர் மாத வட்டித் தொகையான 40,218.75 ரூபாவிற்கான காசோலையும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 3ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகள் அவற்றினை செலவு செய்த விபரங்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளன . கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்ட நிரந்தர வைப்பு நிதியத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகளின் செலவு விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
 

பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2017/03/CKCA-SCHOOLS-PROJECT-REPORT-3.pdf