கனடா காரை கலாசார மன்றத்தினால் காரைநகர் பாடசாலைகளுக்கு வழங்குவதற்காக அனுப்பிவைக்கப்பட்ட 06 மடிக்கணனிகள் 21.01.2017 சனிக்கிழமை அன்று காரைநகர் ஆரம்பப் பாடசாலைகள் நான்கிற்கும் காரைநகர் கோட்ட அலுவலகத்திற்கும், காரைநகர் அபிவிருத்திச் சபையின் அலுவலகப் பாவனைக்காகவும் ஒரு கணனி வழங்கப்பட்டது.

கனடா காரை கலாசார மன்றத்தினால் காரைநகர் பாடசாலைகளுக்கு வழங்குவதற்காக அனுப்பிவைக்கப்பட்ட 06 மடிக்கணனிகள் 21.01.2017 சனிக்கிழமை அன்று  காரைநகர் ஆரம்பப் பாடசாலைகள் நான்கிற்கும் காரைநகர் கோட்ட அலுவலகத்திற்கும், காரைநகர் அபிவிருத்திச் சபையின் அலுவலகப் பாவனைக்காகவும் ஒரு கணனி  வழங்கப்பட்டது.

 காரைநகர் அபிவிருத்திச் சபை நூலகத்தில் வைத்து காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவர் ப.விக்னேஸ்வரன் அவர்களால் பாடசாலை அதிபர்கள்,கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரிடம் இந்த மடிக் கணனிகள் கையளிக்கப்பட்டது.

காரைநகர் பாலாவோடை.இ.த.க.பாடசாலை,ஆயிலி சிவஞானேதய வித்தியாசாலை,தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலயம்,வலந்தலை வடக்கு அ.மி.த.க. பாடசாலை,என்பவற்றிற்கும் காரைநகர் கோட்ட அலுவலகத்திற்கும் தலா ஒவ்வொரு மடிக் கணனிகள் வழங்கப்பட்டதுடன் காரைநகர் அபிவிருத்திச் சபையின் அலுவலகப் பாவனைக்காகவும் ஒரு கணனி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த காரைநகர் கோட்டப் பணிப்பாளர் திரு ஆ.குமரேசமூர்த்தி அவர்கள் காரைநகர் அபிவிருத்திச் சபை காரைநகர் மாணவர்களின் கல்வி வளர்சிசியில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருவது பாராட்டப்பட வேண்டிய விடயம் இதற்கு கனடா காரை கலாசார மன்றம் அதிக பங்களிப்பினை வழங்கி வருவதுடன் மன்ற உறுப்பினர்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கி வரும் பங்களிப்பு மகத்தானது.அவர்களுடைய கல்விச் சேவை மேலும் தொடரவேண்டும் இதன் ஊடாக இப்பிரதேச மாணவர்களின் கல்வித் தரத்தினை மேலும் அதிகரிக்கின்ற வாய்ப்பு ஏற்படும்.காரைநகர் அபிவிருத்திச் சபைக்கு கல்விப்புலத்திலே அதிகம் கைதேர்ந்த ஒருவர் தலைவராகக் கிடைத்தமை காரை மக்கள் செய்த பாக்கியம் என்றுதான் சொல்லவேண்டும் அவருடைய காலத்திலே கல்வியிலே புரட்சியினை மேற்கொண்டு காரை மண்ணை மீண்டும் கல்வியிலே உயர்த்தப் பாடுபடுவோம் என்றார்.

பாலாவோடை இந்துத் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் திரு ஆ.யோகலிங்கம் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் எமது பாடசாலையில் இன்று வரை கணனி இல்லாத காரணத்தினால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டோம் பாடசாலைத் தரவுகள்,கல்விச் செயற்பாட்டுக்குத் தேவையான வேலைத் திட்டங்களை கணனியின் ஊடாகச் செய்வதற்காக வேறு இடங்களுக்குச் சென்றே அதனை மேற்கொள்ள வேண்டிய நிலை இதுவரை காணப்பட்டது.இதனால் மேலதிக வேலைச்சுமை,நிதிச் செலவு என்பன ஏற்பட்டு வந்தன இன்று எமது பாடசாலைக்கு வழங்கப்பட்ட கணனி ஊடாக இந்தச் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.அத்துடன் எமது பாடசாலைக்குப் போட்டோப் பிரதி இயந்திரம் இல்லாமை பெருங் குறையாக உள்ளது.இதனைப் பெற்றுத் தர காரைநகர் அபிவிருத்திச் சபை முன்வரவேண்டும் இதன் ஊடாக மாணவர்களுக்கு மேலதிக பயிற்சி தாள்களைப் பிரதி செய்து அவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கமுடியும் இவ்வாண்டும் தரம் 1 வகுப்பிற்கு 04 மாணவர்கள் இணைந்துள்ளனர்.தொடர்ந்து மாணவர்களின் தொகையும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது.பாடசாலையின் வளங்கள் அதிகரிக்கும் போது மாணவர்களின் தொகையும் அதிகரிக்கும் அதன் ஊடாக சிறந்த கல்வியினை இப்பகுதி மாணவர்களுக்கு வழங்கத் தயாராக உள்ளோம் என்றார்.

ஆயிலி சிவஞானோதயா வித்தியாலய அதிபர் கருத்துத் தெரிவிக்கையில் எமது பாடசாலைக்கும் இதுவரை கணனிகள் வழங்கப்படவில்லை கல்வி அமைச்சின் சுற்று நிருபம் மூலம் கடந்தவாரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாடசாலை இணையத்தளப் பாவனைக்கு மாதாந்தம் 200 ரூபா பெற்றுக்கொள்ள முடியம் என்று ஆனால் கணனி இல்லாமையாள் இணையத்தளத்தினைப் பாவிக்க முடியாத நிலை காணப்பட்டது.இன்று வழங்கப்பட்ட கணனி ஊடாக மேற்படி இணையப் பாவனையை மேற்கொள்ள முடியும் என நம்புகின்றோம். இதன் ஊடாக கல்வி அமைசசினால் வெளியிடப்படுகின்ற சுற்று நிருபங்களை உடனுக்குடன் அறிந்து செயற்படக் கூடிய வாய்ப்பும் பாடசாலைக்கும் கல்வித் திணைக்களத்திற்குமிடையிலான தகவல் தொடர்பினை ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பும் ஏற்படுத்தித் தந்த கனடா காரை கலாசார மன்றத்தினருக்கும் காரைநகர் அபிவிருத்திச் சபையினருக்கும் காரைநகர் பாடசாலை அதிபர்கள் சார்பாக நன்றி தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.

அத்துடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு இவ்வாண்டு தோற்ற உள்ள மாணவர்களின் மேலதிக கல்விச் செயற்பாடுகள் தொடர்பாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆரம்பப் பாடசாலை அதிபர்களுடன் கலந்துரையாடிய தலைவர் பயிற்சிப் பரீட்சைகள்,கருத்தரங்குகள் என்பன காரைநகர் அபிவிருத்திச் சபையினால் ஒழுங்கு செய்து தரப்படும் எனவும் இந்த மாணவர்களில் அதிக கவனம் எடுத்தச் செயற்படும் படியும் கனடா காரை கலாசார மன்றத்தினால் வழங்கப்படும் வட்டிப் பணத்தில் தங்களுக்கு ஏற்கனவே வழங்கிய அறிவுறுத்தலின் படி பயிற்சி வினாத்தாள்களைப் பெற்று மேலதிகமாக மாணவர்களைப் பயிற்றுவிக்குமாறும் தெரிவித்தார்.

IMG_0377 (Copy)IMG_0378 (Copy) IMG_0379 (Copy) IMG_0380 (Copy) IMG_0381 (Copy) IMG_0383 (Copy) IMG_0385 (Copy) IMG_0387 (Copy) IMG_0388 (Copy) IMG_0389 (Copy) IMG_0390 (Copy) IMG_0391 (Copy) IMG_0392 (Copy) IMG_0393 (Copy) IMG_0394 (Copy) IMG_0395 (Copy) IMG_0396 (Copy) IMG_0397 (Copy) IMG_0398 (Copy) IMG_0399 (Copy) IMG_0400 (Copy) IMG_0401 (Copy) IMG_0402 (Copy) IMG_0403 (Copy) IMG_0404 (Copy) IMG_0405 (Copy) IMG_0406 (Copy) IMG_0407 (Copy) IMG_0408 (Copy) IMG_0409 (Copy) IMG_0410 (Copy) IMG_0411 (Copy) IMG_0412 (Copy)