Tag: காரைச் செய்திகள்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் இவ்வாண்டு காரைநகர் கோட்டப் பாடசாலை மாணவர்கள் 15 பேர் சித்தியடைந்துள்ளனர்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் இவ்வாண்டு காரைநகர் கோட்டப் பாடசாலை மாணவர்கள் 15 பேர் சித்தியடைந்துள்ளனர்

நேற்று வெளியாகிய தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் காரைநகர் கோட்டப் பாடசாலை மாணவர்கள் 15 பேர் சித்தியடைந்துள்ளனர். அவர்களுன் தீவக வலயத்தில் வேரப்பிட்டி ஸ்ரீ கணேசா வித்தியாலய மாணவி கரன் அனுஜா 188 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

தீவக வலயப் பாடசாலைகளில் அதிக மாணவர்கள் சித்தியடைந்த பாடசாலையாக காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை விளங்குகின்றது. இப் பாடசாலையில் ஆறு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

கணேசமூர்த்தி சயந்தா (187 புள்ளிகள்), கருணாகரன் நிரோஜன் (181 புள்ளிகள்) ,ரவிநாதன் நிலமிதன் (178 புள்ளிகள்) ,லட்சுமணன் விமலக்ஷன் (175 புள்ளிகள்) ,குமாரசேகரம் தவப்பிரியா (173 புள்ளிகள்), ரஜனிகாந் சங்கவி (172 புள்ளிகள்) ஆகிய ஆறு மாணவர்களுமே சித்தியடைந்துள்ளனர்.

ஊரி அ.மி.த.க. பாடசாலையிலிருந்த தோற்றிய இருவர் சித்தியடைந்துள்ளனர். யசோதரன் தமிழ்நிலா (175 புள்ளிகள்), கிருஸ்ணகுமார் கிருதரன் (165 புள்ளிகள்)

வலந்தலை வடக்கு அ.மி.த.க.பாடசாலை – சிவகுமார் சீராளன் (168 புள்ளிகள்)

யாழ்ற்ரன் கல்லூரி –

மயூரகுமார் தாரணி (178 புள்ளிகள்)

சிவநாதன் பவித்திரா (173 புள்ளிகள்)

ஆயிலி சிவஞானோதயா வித்தியாலய மாணவன் சிற்சபேசன் கேசவராம் (185 புள்ளிகள்)

தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலயம், சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளிலிருந்து தலா ஒருவரும் சித்தியடைந்துள்ளனர்.

காரைநகர் பாடசாலைகளிலிருந்து பரீட்சைகுத் தோற்றிய 162 மாணவர்களில் 15 மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகர் களபூமி சத்திரந்தை ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தில் 28/09/2018 வெள்ளிக்கிழமை அன்று பரணி உற்சவ நிகழ்வு மாலை7.00 மணிக்கு அபிஷேக தீப ஆராதனையுடன் ஆரம்பமாகி பைரவப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெற்றன.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கத்தினால் வருடம் தோறும் முன்னெடுக்கப்பட்டுவரும் வட மாகாண பண்பாட்டுப்பெருவிழா 30.09.2018 ஞாயிற்றுக்கிழமை கற்சிலைமடு பண்டாரவன்னியன் வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

இரண்டு நாட்கள் இடம் பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டுப்பெருவிழாவில் மாகாணத்தில் சிறந்த கலைஞர்கள் மதிப்பளிக்கப்பட்டதுடன் அவர்களில் தெரிவு செய்யப்பட்டோருக்கு வடக்கு மாகாணத்தின் அதி உயர் விருதான முதலமைச்சர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

30/09/2018 அன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு மாலபே பாடசாலையில் இடம்பெற்ற பிரதீபா தேசிய மட்ட சங்கீத போட்டியில் கலந்து கொண்ட காரைநகர் கலாசார மத்திய நிலைய மாணவர்கள், ஆசிரியர் மற்றும் உத்தியோகத்தர்கள்.

ஜனாதிபதி நடமாடும் மக்கள் சேவையில் 500 பயனாளிகளுக்கு கனடா காரை கலாச்சார மன்றம் மரக்கன்றுகள் அன்பளிப்பு

 

ஜனாதிபதி நடமாடும் மக்கள் சேவையில் 500 பயனாளிகளுக்கு

கனடா காரை கலாச்சார மன்றம் மரக்கன்றுகள் அன்பளிப்பு

காரைநகரில் ‘உத்தியோகபூர்வ பணி’ ஜனாதிபதி மக்கள் சேவை நடமாடும் சேவை 01.10.2018 திங்கட்கிழமை காரைநகர் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது.

காலை 8.00 மணிக்கு ஆரம்பமான இப்பணி மாலை 4.30 மணிவரை இடம்பெற்றது. இதில் 1650 பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இதில் நாட்டில் உள்ள பெரும்பாலான அரச திணைக்களங்கள்,மற்றும் அமைச்சுக்களின் சேவைகள் காரைநகர் மக்களுக்கு வழங்கப்பட்டது.

அன்றைய தினம் சாரதி அனுமதிப் பத்திரம் பெறல், சாரதி அனுமதிப் பத்திரம் புதுப்பித்தல், பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் பெறல், பிறப்ப அத்தாட்சிப் பத்திரப் பெயர் மாற்றம் சம்பந்தமான விடயங்கள், காணி உறுதி சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்த்தல் மற்றும் காணி உறுதி பெற்றுக்கொள்ளல், மரண சாண்றிதழ் பெறல், காலந் தாழ்த்திய பிறப்பு, விவாக, இறப்புப் பதிவுகள்

மற்றும் வீட்டுக் கடன் வசதிகள், முதியோர் அடையாள அட்டை வழங்கல், சமுர்த்திக் கொடுப்பனவு, மதத் தலங்களைப் புத்துயிரூட்டல், காணி உரிமை சம்பந்தமான பிரச்சினைகள்,

கல்விக் கருத்தரங்குகள், மற்றும் கல்விப் புலமைப்பரிசில்கள் வழங்கல், தென்னங் கன்றுகள் மற்றும் வேறு மரக் கன்றுகள் வழங்கல், இலவச மருத்துவ சேவை, மூக்குக் கண்ணாடி வழங்கல் கிராமப்புறப் பாதைகள் அபிவிருத்தி தொடர்பான திட்டங்களுக்குத் தீர்வு காணல் உள்ளிட்ட ஏராளமான மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டது.

இதற்கான விழிப்புணர்வுச் செயற்பாடுகள் கடந்த ஒருவாரமாக அனைத்துக் கிராமசேவையாளர் பிரிவுகளிலும் முழுவீச்சில் இடம்பெற்றது.

இந்த சேவைகளை காரைநகர் பிரதேச செயலகத்துடன் இணைந்து அனுசரணை வழங்கிச் செயற்படுத்த காரைநகர் அபிவிருத்திச் சபை, காரைகர் யாழ் வர்த்தகர்கள், புலம்பெயர் உறவுகள் மற்றும் மன்றங்கள் அனுசரனை வழங்கினர்.

குறிப்பாக கனடா காரை கலாசார மன்ற நிதி உதவியுடன் 500 பயனாளிகளுக்குப் பயன்தரு பழமரக் கன்றுகள் மற்றும் தென்னம்பிள்ளை என்பன வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

காரை வசந்தம் 2018 மலருக்காக எடுத்து வரப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் மூலம் காரைநகர் பிரதேச செயலகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள், மேற்கொள்ளப்பட வேண்டிய உத்தேச திட்டங்கள் தொடர்பான விபரமான அறிக்கை விபரம் எடுத்து வரப்படுகின்றது.

 

காரை வசந்தம் 2018 மலருக்காக எடுத்து வரப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு  கூட்டத்தின் மூலம் காரைநகர் பிரதேச செயலகத்துக்கு ஒதுக்கப்பட்ட  நிதி  ஒதுக்கீடுகள், மேற்கொள்ளப்பட  வேண்டிய   உத்தேச  திட்டங்கள்  தொடர்பான விபரமான அறிக்கை விபரம் எடுத்து வரப்படுகின்றது. 

 

காரைநகரில் அரசினால் இவ்வாண்ட மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் – 2018

காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 2018 ஜனவரி தொடக்கம் இன்று வரை காரைநகர் பிரதேச செயலகம் ஊடாக அரசாங்கத்தினால் சுமார் 45 மல்லியன் ரூபா செலவில் 37 அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த அபிவிருத்திப் பணிகள் ஊடாக சுமார் 7,400 பொதுமக்கள் பயன் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாண்டு இதுவரை மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களின் விபரம் வருமாறு.

 

2018 JAN TO SEPT

 

 

2017ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டத்தின் தொகுப்பு

 

2017-1

 

 

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் – 2017
அனுமதி பெற்று நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் விபரம்

 

2017-2

 

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழவின் அனுமதிக்காகச் சமர்ப்பிக்கப்படும் திட்டங்கள்,

யாழ் மாவட்டம்

காரைநகர் பிரதேச செயலகம்

 

2017-3

 

 

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் – 20.10.2017 நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் விபரம்
 காரைநகர் பிரதேச செயலகம்

 

2017-4

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 5ம்,6ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் 05.05.2015 அன்று காரைநகர் ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய்கள் நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 5ம்,6ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக ஆரம்ப பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பாக பாடசாலைகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அறிக்கைகள் ஊடாக அறியப்படுகின்றது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக 12 ஆரம்ப பாடசாலைகளிற்கு தலா 10 இலட்சம் வீதம் நிரந்தர வைப்பில் இடப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெறும் வட்டி பணத்தினை பாடசாலைகளின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு அதனை உறுதி செய்து கொண்டு இந்நிரந்தர வைப்பு நிதியினை பெற்றுக்கொண்டார்கள்.

அதன் அடிப்படையில் கிடைக்கப்பெறும் வட்டிப் பணத்தின் 50 விகிதமான நிதியானது நேரடியாக கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளான மேலதிக வகுப்புக்களிற்கான ஆசிரியர் வேதனம், மெல்ல கற்கும் மாணவர்களிற்கான விசேட வகுப்புக்கான ஆசிரியர் வேதனம் மற்றும் அதற்குரிய செலவீனங்ளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் வங்கி வட்டியில் இருந்து கிடைக்கப்பெறும் 20 விகிதமான நிதியானது இணைப்பாட விதான செயற்பாடுகளான விளையாட்டு, தமிழ் திறன் போட்டி, பரிசளிப்பு நிகழ்வுகளிற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தின் 20 விகிதம் மேலதிகமாக மாதந்தம் துண்டுவிழும் மின்சார கட்டணம் செலுத்தவும், மிகுதி 10 விகிதமான நிதி மலசலகூட சுத்திகரிப்பு, குடிநீர் தேவைகளிற்கான கொடுப்பனவுகளிற்காகவும் பயன்படுத்த முடியும் எனவும் திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் பாடசாலைகள் ஒவ்வொன்றும் வருடத்திற்கு இரண்டு தடவைகள் ( மே05 /நவம்பர் 05 ) கிடைக்கப்பெறும் வட்டி பணத்தில் ஊடாக செலவு செய்யப்படும் விபரங்களை காநைரகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் திட்டத்தில் குறிப்பிடப்பட்டது. அதன் அடிப்படையில் 5வது தடவையாக 05.11.2017 அன்று 5ம் கட்ட வட்டிப்பணமாக 12 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 52,406.25 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன. அத்துடன் 6வது தடவையாக 05.05.2018 அன்று 6ம் கட்ட வட்டிப்பணமாக 12 பாடசாலைகளிற்கு அப்பாடசாலைகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக 51,062.50 ரூபாய்கள் வைப்பில் இடப்பட்டன.

நிரந்தர வைப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற 5ம்,6ம் கட்ட வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகள் அவற்றினை செலவு செய்த விபரங்கள் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஊடாக கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன . கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழங்கப்பட்ட நிரந்தர வைப்பு நிதியத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற வட்டி பணத்தின் ஊடாக காரைநகர் பாடசாலைகளின் செலவு விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

SCHOOL REPORT-2018-5,6

 

https://karainagar.com/pages/wp-content/uploads/2018/09/SCHOOL-REPORT-2018-56.pdf

 

காரைநகர் வலந்தலை சந்திக்கு அருகாமையில் காரை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான காணியில் புதிதாக அமைக்கப்பட்ட மக்கள் வங்கியின்(ATM) பண பரிமாற்ற இயந்திர கட்டிடம்22/09/2018 சனிக்கிழமை காலை10:30 மணிக்கு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது

காரைநகர் வலந்தலை சந்திக்கு அருகாமையில் காரை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான காணியில் புதிதாக அமைக்கப்பட்ட மக்கள் வங்கியின்(ATM) பண பரிமாற்ற இயந்திர கட்டிடம்22/09/2018 சனிக்கிழமை காலை10:30 மணிக்கு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.  இந்த நிகழ்வில் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் வி.கேதீஸ்வரதாசன் ,உபதவிசாளர் பலா மற்றும் பிரதச செயலக ஊழியர்கள்,காரை அபிவிருத்திச் சபை தலைவர் திரு.ப.விக்கினேஸ்வரன், மக்கள் வங்கி யாழ் மாவட்ட முகாமையாளர் மற்றும் சக ஊழியர்கள், காரைநகர் போக்குவரத்து சபை முகாமையாளர் மற்றும் ஊழியர்கள் வங்கி வாடிக்கையாளர்கள் நலன்விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

காரைநகர் வலந்தலை சந்திக்கு அருகாமையில் காரை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான காணியில் புதிதாக அமைக்கப்பட்ட மக்கள் வங்கியின்(ATM) பண பரிமாற்ற இயந்திர கட்டிடம் 22/09/2018 நாளை சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு மக்கள் பாவனைக்காக திறக்கப்பட உள்ளது.

காரைநகர் வலந்தலை சந்திக்கு அருகாமையில் காரை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான காணியில் புதிதாக அமைக்கப்பட்ட மக்கள் வங்கியின்(ATM) பண பரிமாற்ற இயந்திர கட்டிடம் 22/09/2018 நாளை சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு மக்கள் பாவனைக்காக திறக்கப்பட உள்ளது.அனைத்து இயந்திர மூலம் பணத்தினை பெறும் வாடிக்கையாளர்களையும் ,மற்றும் நலன்விரும்பிகளையும் அன்புடன் அழைக்கின்றனர் சங்கானை மக்கள் வங்கி முகாமையாளர் மற்றும் ஊழியர்கள்.

அமரர் மனோரஞ்சனா கனகசபாபதி அவர்களின் நினைவு நிதியிலிருந்து அவரது குடும்பத்தினரால் காரைநகர் பிரதேசத்தில் உள்ள ஐந்து குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

 

அமரர் மனோரஞ்சனா கனகசபாபதி அவர்களின் நினைவு நிதியிலிருந்து அவரது குடும்பத்தினரால் காரைநகர் பிரதேசத்தில் உள்ள ஐந்து குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

19.09.2018 புதன்கிழமை காரைநகர் சமுர்த்தி வங்கியில் வைத்து வறுமைக் கோட்டிற்குட்பட்ட தையல் தொழிலினை மேற்கொண்டு தமது சீவனோபாயத்தை மேற்கொள்ளும் நான்கு பேருக்குத் தையல் இயந்திரமும் பாடசாலைக் கல்வியினை தொடரும் மாணவி ஒருவருக்கு துவிச்சக்கரவண்டியும் வழங்கப்பட்டது.

இந்த வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் காரைநகர் பிரதேச செயலர் திருமதி உஷா சுபலிங்கம்,காரைநகர் பிரதேச செயலகக் கணக்காளர் ஏ.நிர்மல், சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் கனடா நாட்டிலிருந்து வருகைதந்த மாணிக்கம் கனகசபாபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

காரை அபிவிருத்திச்சபையின் “சமூக சேவைக்காக இளைஞர்களை ஊக்குவிப்போம்” எனும் தொனிப்பொருளின் கீழ் இன்று கோவளம் விளையாட்டுக் கழகம் மற்றும் காரை.சலச்சர்ஸ் விளையாட்டுக்கழக இளைஞர்கள் இணைந்து சிரமதான பணியினை முன்னெடுத்தனர்.

காரை அபிவிருத்திச்சபையின் “சமூக சேவைக்காக இளைஞர்களை ஊக்குவிப்போம்” எனும் தொனிப்பொருளின் கீழ் இன்று கோவளம் விளையாட்டுக் கழகம் மற்றும் காரை.சலச்சர்ஸ் விளையாட்டுக்கழக இளைஞர்கள் இணைந்து சிரமதான பணியினை முன்னெடுத்தனர். இந்நிகழ்வில் பிராந்திய வைத்திய அதிகாரி திரு. பரா நந்தகுமார் , ஆதார வைத்தியசாலை வைத்தியர், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி, காரை.அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

காரைநகர் களபூமி கரப்பிட்டியந்தனை ஸ்ரீ விக்னேஸ்வர ( தெருவடிப்பிள்ளையார்) ஆலய வருடாந்த உற்சவத்தின் 14ம் நாள் 14/09/2018 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற பூங்காவனத் திருவிழா.

காரைநகர் களபூமி கரப்பிட்டியந்தனை ஸ்ரீ விக்னேஸ்வர ( தெருவடிப்பிள்ளையார்)ஆலய வருடாந்த உற்சவத்தின் 14ம் நாள் கரப்பிட்டியந்தனை இளைஞர்களின் பூங்காவனத் திருவிழா 14/09/2018 வெள்ளிக்கிழமை அன்று காலை10.00 மணிக்கு விசேட அபிஷேக தீபாராதனையும் அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்வும்.மாலை 6.30 மணிக்கு அறநெறி மாணவர்களின் பஜனை நிகழ்வும் அதனை தொடர்ந்து களபூமி கலையக மாணவர்களின் கலை நிகழ்வும் சங்கீத ஆசிரியரின் பண்ணிசை நிகழ்வும் கலைஞான சுடர் தர்மலிங்கம் ஐயாவின் பக்தி பாடல்களும் மற்றும் மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன. சிவகுமார் குழுவினர்கள் விசேட தவில் இசைக்கசேரியும் அதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜையும் விநாயகப்பெருமான் அழகிய மின்சார தீபங்களினால் அலங்கரிக்கப்பட்ட பூந்தண்டிகையில் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெற்றன.

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் 15.09.2018 சனிக்கிழமை இடம்பெற்ற தசாப்த (நூற்றாண்டு) விழா, பஞ்சகுண்டபட்சஸகஸ்ர கலசாபிஷேக விஞ்ஞாபனம் – 2018

 

 

 

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் 15.09.2018 சனிக்கிழமை இடம்பெற்ற தசாப்த (நூற்றாண்டு) விழா, பஞ்சகுண்டபட்சஸகஸ்ர கலசாபிஷேக விஞ்ஞாபனம் – 2018

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 13/09/2018 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற ஆவணி விநாயகர் சதுர்த்தி உற்சவம்.

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 13/09/2018 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற ஆவணி விநாயகர் சதுர்த்தி உற்சவத்தில் காலை7.00 மணிக்கு பொங்கல் நிகழ்வினை தொடர்ந்து அபிஷேக ஆராதனைகளும் விநாயகப்பெருமானுக்கு பிடித்த மோதகம் ,வடை மற்றும் பல இனிப்பு பண்டங்களினால் படையல் படைக்கப்பட்டு மாலை6.30 மணிக்கு அறநெறி மாணவர்களின் பஜனையினை தொடர்ந்து வசந்தமண்டப பூஜையும் தன்னை சித்தி விநாயகப்பெருமானின் அறநெறி மாணவர்களும் சக்தி மேம்பாட்டு கழக மாணவர்களும் இணைந்து வழங்கிய கலைநிகழ்வுகளும் மற்றும் மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டு எம்பெருமான் வீதியை வரும் காட்சியும் இடம்பெற்றன.

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் காரைநகர் பிரதேச செயலகமும்,கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்தும் கலாசாரப் பெருவிழா 2018 காரைநகர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 10/09/2018 திங்கட்கிழமை அன்று மாலை 2:00 மணிக்கு மடத்துக்கரை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இருந்து விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றல் நிகழ்வினை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது.

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் காரைநகர் பிரதேச செயலகமும்,கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்தும் கலாசாரப் பெருவிழா 2018 காரைநகர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 10/09/2018 திங்கட்கிழமை அன்று மாலை 2:00 மணிக்கு மடத்துக்கரை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இருந்து விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றல் நிகழ்வினை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது.இந்த நிகழ்வில் தலைவர் திருமதி. உஷா சுபலிங்கம் (பிரதேச செயலாளர், தலைவர் -கலாசார பேரவை பிரதேச செயலகம் காரைநகர்) பிரதம விருந்தினராக திருமதி .சுகுணரதி தெய்வேந்திரன் ( மேலதிக அரசாங்க அதிபர் மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம்) சிறப்பு விருந்தினர்கள் திரு.பரா. நந்தகுமார் (சுகாதார வைத்திய அதிகாரி ஊர்கவர்த்துறை மற்றும் காரைநகர்) திரு.மா.அருட்சந்திரன்( மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மாவடட செயலகம் யாழ்ப்பாணம்) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் காரைநகர் பிரதேச மன்றங்களின் கலை நிகழ்வுகளும்,கலங்கரை-2018 மலர் வெளியீட்டு விழாவும், கலை ஞான சுடர் விருது வழங்கல் நிகழ்வும் ,பிரதேச கலை இலக்கியப்போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டு நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன.

புரவுப்பெருமக்கள் விருது விழா 2018

சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின் தியாகத்திறன் வேள்வியின் எழுத்துமூல பரீட்சைகள் 12.09.2018 புதன்கிழமை காரைநகர் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது.

கல்வி அமைச்சு மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை இணைந்து நடாத்திய “சில்ப நவோதா”–2018 அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கைப்பணிப்போட்டி மற்றும் கண்காட்சி நிகழ்வில் பங்குபற்றி வெற்றி பெற்ற யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்கள்.

கல்வி அமைச்சு மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை இணைந்து நடாத்திய “சில்ப நவோதா”–2018 அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கைப்பணிப்போட்டி மற்றும் கண்காட்சி நிகழ்வில் எமது பாடசாலை மாணவிகள் மூவர் வெற்றியீட்டியுள்ளனர். இவர்களுக்கு கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கும் நிகழ்வு 11.09.2018 காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது.

வெற்றியீட்டிய மாணவர் விபரம்

மாணவர் பெயர்                                                 பெற்ற இடம்                                       பரிசுத்தொகை
1. செல்வி இ.நிறோஜினி                                     2ம் இடம்                                                  ரூ15000.00
2. செல்வி.ப.யாழினி                                           3ம் இடம்                                                   ரூ10000.00
3. செல்வி.S.பிரியங்கா                                       3ம் இடம்                                                   ரூ  5000.00

கல்லூரி அதிபர் வெற்றி பெற்ற மாணவர்களையும் அவர்களை நெறிப்படுத்திய ஆசிரியர் திருமதி. தமிழினி ஜோசப்மேரி அவர்களுக்கும் தனது நன்றி கலந்த பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றார்.

காரைநகர் புதுறோட் கிழவன்காடு கந்தசுவாமி கோயிலில் 09.09.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அலங்கார உற்சவம் 1ம் நாள் காணொளி!

காரைநகர் புதுறோட் கிழவன்காடு கந்தசுவாமி கோயிலில் 09.09.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அலங்கார உற்சவம் 1ம் நாள் காட்சிகள்!

காரைநகர் களபூமி கரப்பிட்டியந்தனை ஸ்ரீ விக்னேஸ்வரசுவாமி அலங்கார உற்சவம் 7ம் நாள் 08/09/2018 சனிக்கிழமை இடம்பெற்ற இரவு காட்சிகள்.

காரைநகர் களபூமி கரப்பிட்டியந்தனை ஸ்ரீ விக்னேஸ்வரசுவாமி அலங்கார உற்சவம் 6ம் நாள் 07/09/2018 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இரவு காட்சிகள்.

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் காரைநகர் பிரதேச செயலகமும்,கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்தும் கலாசாரப் பெருவிழா 2018 காரைநகர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 10/09/2018 திங்கட்கிழமை மாலை2:00 மணிக்கு நடைபெற விருக்கும் நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்.

காரைநகர் களபூமி கரப்பிட்டியந்தனை (தெருவடிப்பிள்ளையார்) ஸ்ரீ விக்னேஸ்வரசுவாமி அலங்கார உற்சவம் 5ம் நாள் 06/09/2018 வியாழக்கிழமை இரவு காட்சிகள்.

காரைநகர் களபூமி கரப்பிட்டியந்தனை ஸ்ரீ விக்னேஸ்வரசுவாமி அலங்கார உற்சவம் 4ம் நாள் 05/09/2018 புதன்கிழமை இரவு காட்சிகள்!

காரைநகர் களபூமி கரப்பிட்டியந்தனை ஸ்ரீ விக்னேஸ்வரசுவாமி அலங்கார உற்சவம் 2ம் நாள் 03/09/2018 திங்கட்கிழமை இரவு காட்சிகள்.

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு காரைநகர் வேம்படியில் 02.09.2018 அன்று சுபநேரத்தில் இடம்பெற்றது!

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு காரைநகர் வேம்படியில் 02.09.2018 அன்று சுபநேரத்தில் இடம்பெற்றது. சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு 6.5 பரப்பு காணியை அன்பளிப்பு செய்த பரோபகாரி சுப்ரமணியம் கதிர்காமநாதன் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார். அவர்களுடன் யாழ் உயர் அதிகாரிகள் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி திரு. நந்தகுமார் மற்றும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

காரைநகர் களபூமி பொன்னாவளை ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தில் 30/08/2018 வியாழக்கிழமை நடைபெற்ற வருடாந்த பொங்கல் நிகழ்வுகள்!

காரைநகர் களபூமி கரப்பிட்டியந்தனை அருள் மிகு ஸ்ரீ கற்பகவிக்னேஸ்வரசுவாமி கோவில் (கிழக்கு றோட் தெருவடிப் பிள்ளையார் ) விளம்பி வருஷம் 2018

விக்னேஸ்வர அடியார்களே!
காரைநகர் என்னும் சிவபூமியில் கரப்பிட்டியந்தனை பகுதியில் கோவில் கொண்டு எழுந்த அருள் புரியும் ஸ்ரீ கற்பகவிக்னேஸ்வர பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவம் நிகழும் மங்களகரமான விளம்பி வருஷம் ஆவணி திங்கள் 17ம் நாள் 02/09/2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ந்து 13 தினங்கள் உற்சவம் நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.இரவு 8.30 மணிக்கு வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து விசேட மங்கள வாத்தியங்களுடன் எம்பெருமான் மின்சார தீபங்களினால் அலங்கரிக்கப்பட்ட அழகிய சாத்துப்படி அலங்காரத்துடன் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும் எம்பெருமான் அடியார்கள் அனைவரும் ஆசாரசீலர்களாக வருகை தந்து எம் பெருமானின் இஷ்ரசித்திகளை பெற்றுஉய்யும் வண்ணம் அழைக்கின்றனர்.