வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் காரைநகர் பிரதேச செயலகமும்,கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்தும் கலாசாரப் பெருவிழா 2018 காரைநகர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 10/09/2018 திங்கட்கிழமை அன்று மாலை 2:00 மணிக்கு மடத்துக்கரை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இருந்து விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றல் நிகழ்வினை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது.

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் காரைநகர் பிரதேச செயலகமும்,கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்தும் கலாசாரப் பெருவிழா 2018 காரைநகர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 10/09/2018 திங்கட்கிழமை அன்று மாலை 2:00 மணிக்கு மடத்துக்கரை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இருந்து விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றல் நிகழ்வினை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது.இந்த நிகழ்வில் தலைவர் திருமதி. உஷா சுபலிங்கம் (பிரதேச செயலாளர், தலைவர் -கலாசார பேரவை பிரதேச செயலகம் காரைநகர்) பிரதம விருந்தினராக திருமதி .சுகுணரதி தெய்வேந்திரன் ( மேலதிக அரசாங்க அதிபர் மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம்) சிறப்பு விருந்தினர்கள் திரு.பரா. நந்தகுமார் (சுகாதார வைத்திய அதிகாரி ஊர்கவர்த்துறை மற்றும் காரைநகர்) திரு.மா.அருட்சந்திரன்( மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மாவடட செயலகம் யாழ்ப்பாணம்) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் காரைநகர் பிரதேச மன்றங்களின் கலை நிகழ்வுகளும்,கலங்கரை-2018 மலர் வெளியீட்டு விழாவும், கலை ஞான சுடர் விருது வழங்கல் நிகழ்வும் ,பிரதேச கலை இலக்கியப்போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டு நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவு பெற்றன.