தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் இவ்வாண்டு காரைநகர் கோட்டப் பாடசாலை மாணவர்கள் 15 பேர் சித்தியடைந்துள்ளனர்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் இவ்வாண்டு காரைநகர் கோட்டப் பாடசாலை மாணவர்கள் 15 பேர் சித்தியடைந்துள்ளனர்

நேற்று வெளியாகிய தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் காரைநகர் கோட்டப் பாடசாலை மாணவர்கள் 15 பேர் சித்தியடைந்துள்ளனர். அவர்களுன் தீவக வலயத்தில் வேரப்பிட்டி ஸ்ரீ கணேசா வித்தியாலய மாணவி கரன் அனுஜா 188 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

தீவக வலயப் பாடசாலைகளில் அதிக மாணவர்கள் சித்தியடைந்த பாடசாலையாக காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை விளங்குகின்றது. இப் பாடசாலையில் ஆறு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

கணேசமூர்த்தி சயந்தா (187 புள்ளிகள்), கருணாகரன் நிரோஜன் (181 புள்ளிகள்) ,ரவிநாதன் நிலமிதன் (178 புள்ளிகள்) ,லட்சுமணன் விமலக்ஷன் (175 புள்ளிகள்) ,குமாரசேகரம் தவப்பிரியா (173 புள்ளிகள்), ரஜனிகாந் சங்கவி (172 புள்ளிகள்) ஆகிய ஆறு மாணவர்களுமே சித்தியடைந்துள்ளனர்.

ஊரி அ.மி.த.க. பாடசாலையிலிருந்த தோற்றிய இருவர் சித்தியடைந்துள்ளனர். யசோதரன் தமிழ்நிலா (175 புள்ளிகள்), கிருஸ்ணகுமார் கிருதரன் (165 புள்ளிகள்)

வலந்தலை வடக்கு அ.மி.த.க.பாடசாலை – சிவகுமார் சீராளன் (168 புள்ளிகள்)

யாழ்ற்ரன் கல்லூரி –

மயூரகுமார் தாரணி (178 புள்ளிகள்)

சிவநாதன் பவித்திரா (173 புள்ளிகள்)

ஆயிலி சிவஞானோதயா வித்தியாலய மாணவன் சிற்சபேசன் கேசவராம் (185 புள்ளிகள்)

தோப்புக்காடு மறைஞானசம்பந்தர் வித்தியாலயம், சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளிலிருந்து தலா ஒருவரும் சித்தியடைந்துள்ளனர்.

காரைநகர் பாடசாலைகளிலிருந்து பரீட்சைகுத் தோற்றிய 162 மாணவர்களில் 15 மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.