Tag: யாழ்ற்ரன் கல்லூரி

யாழ்ற்ரன் கல்லூரியின் உயர்தர மாணவர்மன்றத்தின் ஒன்றுகூடலும் மதிய போசன விருந்தும்

யாழ்ற்ரன் கல்லூரியின் உயர்தர மாணவர்மன்றத்தின் ஒன்றுகூடலும் மதிய போசன விருந்தும்

யாழ்ற்ரன் கல்லூரியின் மேற்படி நிகழ்வுகள் 05.06.2016 பி.ப 12.30 மணிக்கு மன்றத்தின் தலைவர் செல்வன் யோ.தினேஸ் தலைமையில் ஆரம்பமாகியது.

இந்நிகழ்விற்கு  பிரதம விருந்தினராக Dr.ப.நந்தகுமார் (YARLTONIAN) (சுகாதார வைத்திய அதிகாரி தெல்லிப்பழை) அவர்களும்,

சிறப்பு விருந்தினராக திரு.G.V.இராதாகிருஸ்ணன் (ஓய்வு நிலை வலயக்கல்விப்பணிப்பாளர் தீவக்க்கல்வி வலயம்) அவர்களும்,

கௌரவ விருந்தினர்களாக திரு.ஆ.குமரேசமூர்த்தி (YARLTONIAN) (கோட்டக்கல்விப்பணிப்பாளர் காரைநகர்), திரு.க.பாலச்சந்திரன் (YARLTONIAN) (பொருளாளர் ,காரை அபிவிருத்திச்சபை),திரு.பா.பாலமுரளி (ஆசிரியர் நடேஸ்வராக்கல்லூரி காங்கேசன்துறை) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

DSC_1379 copy DSC_1382 copy DSC_1383 copy DSC_1384 copy DSC_1385 copy DSC_1386 copy DSC_1387 copy DSC_1388 copy DSC_1389 DSC_1390 DSC_1393 DSC_1394 DSC_1395 DSC_1406 DSC_1410 DSC_1411 DSC_1414 DSC_1415 DSC_1417 DSC_1419 DSC_1420 DSC_1421 DSC_1422 DSC_1423 DSC_1424 DSC_1425 DSC_1427

தீவகக் கல்வி வலயத்தில் 2015 ஆம் ஆண்டிற்கான க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையில் யாழ்ற்ரன் கல்லூரி சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளது

தீவகக் கல்வி வலயத்தில் 2015 ஆம் ஆண்டிற்கான க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையில் யாழ்ற்ரன் கல்லூரி சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளது

 

    5A உம், அதற்குக் கூடிய A சித்திகளைப் பெற்ற மாணவர்கள்


1.    சுரேஸ்குமார் கஜந்தன்               7A   2C

2.    ரொபின்சியா தேவலிங்கம்       6A   2B   1C

3.    இரட்ணராசா பத்மலோஜன்      5A   3B   1C

4.    பிரதீபா சத்தியமூர்த்தி                5A   2B   2C

YARLTON

 

 

 

 

 

 

 

 

 

 

ஏனைய சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள்


1.    ரோகினி சண்முகரட்ணம்            4A   4B   1S

2.    கிர்சிகா மோகநாதன்                     3A   3B   1C   1S   1W

3.    சிவகுமார் செந்தூரன்                     3A   2B   3C   1W

4.    சிற்சபேசன் சுகந்தன்                      3A   1B   4C   1W

5.    கேதீஸ்வரன் டிசாந்தன்                   3A   1B   2C   2S   1W

6.    சிவகுமார் நவநீதன்                          2A   3B   3C   1S

7.    ஸ்ரீஸ்குமார் சிவரஞ்சன்                    2A   2B   1C   3S   1W

8.    நிரோஜினி சோதிலிங்கம்               2A   2B   1C   3S   1W

9.    துவாரகா பரமேஸ்வரன்                  2A   1B   3C   2S   1W

YARLTON

விஞ்ஞான ஆய்வு கூடப் போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி இரண்டாம் இடம்

விஞ்ஞான ஆய்வு கூடப் போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி இரண்டாம் இடம்


தீவக கல்வி வலயத்தினரால் நடத்தப்பட்ட(2015ஆம் ஆண்டிற்கான) "சிறந்த முறையில் விஞ்ஞான ஆய்வு கூடங்களைப் பேணுதலும் மாணவர்கள் அதனை உச்சநிலையில் பயன்படுத்தலும்" என்ற போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொண்டுள்ளது. இதற்கான விருதினை 12.03.2016 இல் நடைபெற்ற தீவக வலய விஞ்ஞான தினத்தில் கல்லூரி அதிபரிடம் வழங்கப்பட்டது.

DSC_8039 DSC_8040 DSC_8044 DSC_8045 DSC_8050 DSC_8054 DSC01603

 

கோலாகலமாக நடைபெற்ற யாழ்ற்ரன் கல்லூரியின் 2016 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டி

YARLTON COLLEGE LOGO

யாழ்ற்ரன் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 06.02.2016 சனிக்கிழமை பி.ப 1.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் கோலாகலமாக ஆரம்பமாகி நடைபெற்றது.

பிரதம விருந்தினராக வடக்கு மாகாண, மாகாணக் கல்வித் திணைக்களத்தின் நிர்வாகத்துக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.தி.தர்மலிங்கம் (YARLTONIAN) அவர்களும் சிறப்பு விருந்தினராக காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆ.குமரேசமூர்த்தி (YARLTONIAN) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக சிவகணேசன் புடைவையக உரிமையாளர் திரு.க.அருள்நேசன் (YARLTONIAN) அவர்களும், காரைநகர் இலங்கைவங்கி முகாமையாளர் திரு.ப.செல்வகுமார் அவர்களும் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் யாழ் மாவட்ட இணைப்பாளர் திரு.க.சிவபாலன் (YARLTONIAN) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கல்லூரியின் பான்ட் இசைக் குழு மற்றும் இன்னியம் குழு, மாணவத் தலைவர் குழு ஆகியோர் சகிதம் விருந்தினர்கள் அழைத்து வந்த காட்சியும் மாணவர்களின் அணிநடை மரியாதையும், இடைவேளையின் போது நடைபெற்ற மாணவிகளின் இசையும் அசையும் உடற் பயிற்சிக் கண்காட்சியும் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தமை குறிப்பிடத்தக்கது.

அதிபர் தனது உரையில்

        விளையாட்டுப் போட்டியின் அனுசரணையாளர் திரு.க.அருள்நேசன் (உரிமையாளர் சிவகணேசன் புடைவையகம்)

        கல்லூரியின் முதல் அதிபர் அமரர் கருணானந்தம் ஞாபகார்தமான வெற்றிக் கேடயங்கள் அளித்த திரு.அ.யோகராசா (சின்னாலடி காரைநகர்)

        மேலும் வெற்றிக் கேடயங்களைத் தந்துதவிய கல்லூரின் ஆசிரியர்கள் திருமதி.மனோரஞ்சிதமலர் இராதாகிருஸ்ணன்,திருமதி கவிதா பிரதீஸ்வரன்

        சைக்கிள் ஓட்டப் போட்டியில்(பெண்கள்) முதல் 5 இடங்களுக்கும் பரிசுப் பொருள் வழங்கிய திரு.சண்முகம் குகதாசன் (வர்த்தகர் கருங்காலி)

        சைக்கிள் ஓட்டப் போட்டியில்(ஆண்கள்) முதல் 5 இடங்களுக்கும் பரிசுப் பொருள் வழங்கிய திரு.S.நிமலன் (கருங்காலி)

        அமரர் செல்லப்பா வேலுப்பிள்ளை ஞாபகார்த்தமாக வெற்றிக் கேடயங்களை வழங்கிய திரு.வே.சிற்சபேசன் (சின்னாலடி)

        பரிசுப் பொருட்களை வழங்கிய திரு.சி.தயாளன் (சின்னாலடி)

 

ஆகியோர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

 

யா/யாழ்ற்ரன் கல்லூரி வருடாந்த தடகளப் போட்டி 2016

IMG_0001IMG

யா/யாழ்ற்ரன் கல்லூரியில் மிகச் சிறப்பாக நடைபெற்ற நிறுவுனர் தினமும் தேசிய மட்ட, மாகாண மட்ட சாதனையாளர் கௌரவிப்பும்.

மேற்படி விழா 02.02.2016 காலை 8.30 மணிக்கு கல்லூரி அதிபர் திரு. வே.முருகமூர்த்p தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது. பிரதமவிருந்தினர் ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.ப.விக்கினேஸ்வரன் (தலைவர் காரை அபிவிருத்திச் சபை) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக கல்லூரியின் ஓய்வு நிலை ஆசிரியர் திரு.V. ஏகாம்பரநாதன் அவர்களும், பாடசாலை அபிவிருத்திச் சபை செயலாளர் திரு. V.சிற்சபேசன் அவர்களும், கொழும்பு Quency Distributors  உரிமையாளர் திரு. S.கணநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். “சைவப் பாரம்பரியமூடான ஆங்கிலக் கல்வி” என்ற நினைவுப் பேருரையை கல்வி அமைச்சின் சமய விழுமியப் பிரிவு நிபுணத்துவ ஆலோசகர் திரு.பா.தனபாலன் அவர்களும் ஆற்றினார்.

இந் நிகழ்வில் கல்லூரி அரசு பொறுப்பேற்க முன்னர் கல்லூரியை நிர்வகித்த காரை வித்தியா பரிபாலன சபையினரின் (Kari Board Of Education) கல்லூரி முகாமையாளர்களான திரு.S.A.கணபதிப் பிள்ளை(தலைப்பா), திரு.K.S.வேலுப்பிள்ளை, திரு.K.S.சோமசுந்தரம், திரு.A.T.ஆறுமுகம் ஆகியோரின் படங்கள் திரை நீக்கம் செய்யப்பட்டன.

                கல்லூரி ஆரம்பிப்பதற்கு காணியை நன்கொடையாக வழங்கியவரும் முகாமையாளருமாகிய அமரர் திரு.S.A.கணபதிப் பிள்ளை(தலைப்பா) அவரின் படத்தை திரு. S.கணநாதன் அவர்களும், முகாமையாளர் அமரர் திரு.K.S.வேலுப்பிள்ளை அவரின் படத்தை அவரின் மகன் திரு. V.சிற்சபேசன் அவர்களும், முகாமையாளர் அமரர் திருK.S.சோமசுந்தரம் அவரின் படத்தை திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களும், முகாமையாளர் அமரர் திரு.A.T .ஆறுமுகம் அவரின் படத்தை திரு.V. ஏகாம்பரநாதன் அவர்களும் திரை நீக்கம் செய்து வைத்தனர்.

தேசிய மட்டம், மாகாண மட்டங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

DSC00890 DSC00891 DSC00894 DSC00897 DSC00898 DSC00899 DSC00900 DSC00901 DSC00902 DSC00904 DSC00905 DSC00907 DSC00909 DSC00910 DSC00914 DSC00916 DSC00919 DSC00920 DSC00922 DSC00926 DSC00927 DSC00928 DSC00929 DSC00930 DSC00931 DSC00932 DSC00933 DSC00934 DSC00937 DSC00941 DSC00942 DSC00943 DSC00944 DSC00946 DSC00947 DSC00948 DSC00950 DSC00952 DSC00953 DSC00954 DSC00956 DSC00957 DSC00958 DSC00959 DSC00960 DSC00961 DSC00962 DSC00964 DSC00966 DSC00968 DSC00971 DSC00975 DSC00977 DSC00980 DSC00981 DSC00985 DSC00989 DSC00992 DSC01002 DSC01005 DSC01007 DSC01008 DSC01010 DSC01011 DSC01015 DSC01016 DSC01018 DSC01021 DSC01023 DSC01025 DSC01050 DSC01051 DSC01054 DSC01056

 

யா/யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு இல்ல மெய்வல்லுனர் போட்டி 2016

மேற்படி போட்டிகள் கல்லூரி மைதானத்தில் 01.02.2016 திங்கட்கிழமை அன்று பி.ப. 1.00 மணிக்கு ஆரம்பமாகி கல்லூரி அதிபர் திரு. வே.முருகமூர்த்தி  தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

பிரதம விருந்தினராக தீவக கல்வி வலயத்தின் ஓய்வு நிலை கல்விப் பணிப்பாளர்(ஆரம்பக் கல்விப் பிரிவு) திரு.வி.தனிநாயகம் அவர்களும், சிறப்பு விருந்தினராக ஓய்வு நிலை கிராம சேவகர் திரு.தி.சண்முகசுந்தரம் அவர்களும் கலந்த சிறப்பித்தனர்.

அதிபர் தனது உரையில் இவ் ஆரம்பப் பிரிவு விளையாட்டுப் போட்டிக்கு அனுசரணையாளராக செயற்பட்டு வரும் யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி கணேசன் புடவையக உரிமையாளர் திரு.க.சிவநேசன் அவர்களுக்கு தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

DSC00700 DSC00702 DSC00704 DSC00705 DSC00706 DSC00708 DSC00718 DSC00719 DSC00724 DSC00725 DSC00726 DSC00727 DSC00728 DSC00730 DSC00734 DSC00736 DSC00737 DSC00742 DSC00743 DSC00744 DSC00745 DSC00750 DSC00751 DSC00772 DSC00778 DSC00786 DSC00802 DSC00803 DSC00804 DSC00811 DSC00820 DSC00822 DSC00827 DSC00830 DSC00838 DSC00846 DSC00852 DSC00858 DSC00868 DSC00870 DSC00877

 

யாழ்ற்ரன் கல்லூரி நிறுவுனர் தினமும் தேசியமட்ட மாகாணமட்ட சாதனையாளர் கௌரவிப்பும்

Y-1Y-2

கண்ணீர் அஞ்சலி

Pat

 

அமரர். செல்லத்துரை பத்மநாதன்
(முன்னாள் யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் காரைநகர்)

யாழ்ற்ரன் கல்லூரியில் 09.10.1987 முதல் 15.8.1989 வரை அதிபராக கடமையாற்றிய திரு.செல்லத்துரை பத்மநாதன் அவர்கள் 24.01.2016 சிவபதம் அடைந்துள்ளார். அமரர் பத்மநாதன் அவர்கள் அதிபராக எமது கல்லூரியில் சேவையாற்றும் போது மாணவர் கல்வியில் கூடியளவு அக்கறை செலுத்தி மாணவர்கட்கு கட்டுப்பாட்டு ஒழுக்கத்துடனான கல்வியே அவசியம் என்பதை எடுத்துக் காட்யவர். வாய்மையும்இ நேர்மையும் மிக்க ஒரு பெருந்தகை.
அவரின் மறைவுக்காக எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, அவரின் ஆத்மா சாந்தியடைய சிவகாமி அம்பாள் சமேத ஈழத்துச் சிதம்பர கூத்தப்பிரானைப் பிரார்த்திப்போமாக.

யாழ்ற்ரன் கல்லூரிச் சமூகம்
யாழ்ற்ரன் கல்லூரி
காரைநகர்.

மாகாணமட்டத்தில் யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்கள் மேலும் சாதனைகள்

மாகாணமட்டத்தில் யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்கள் மேலும் சாதனைகள்

 

                                ஆங்கில தினப்போட்டியில் 2ஆம் இடம்


கல்வி அமைச்சினால் நடாத்தப்படும் ஆங்கில தினப் போட்டியில் செல்வி.மனோகரி சுப்பிரமணியம்  NEWS READING போட்டியில் மாகாண மட்டத்தில் 2ஆம் இடத்தினைப் பெற்றுக் கொண்டார். இம் மாணவியையும் இவ் மாணவியை நெறிப்படுத்திய ஆசிரியை ஜெயந்தி சிவகுமார் அவர்களையும் கல்லூரி அதிபர் பாராட்டுகிறார்.

YARLTONY-1


                                       வணிகப் போட்டியில் 3ஆம் இடம்


வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட வணிகப் போட்டியில் குறு வினாவிடைக்கான போட்டியில் செல்வன் இரத்தினராசா பத்மலோஜன் 3ஆம் இடத்தினைப் பெற்றுக் கொண்டார். இம் மாணவனையும் இவ் மாணவனை நெறிப்படுத்திய ஆசிரியை ஜெயந்தி சத்தியானந்தன் அவர்களையும் கல்லூரி அதிபர் பாராட்டுகிறார்.

Y-2Y-3


                                             சித்திரப் போட்டியில் 2ஆம் இடம்


வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட சித்திரப்  போட்டியில்; செல்வன் சு.கஜந்தன் 2ஆம் இடத்தினைப் பெற்றுக் கொண்டார். இம் மாணவனுக்கும் இவ் மாணவனை நெறிப்படுத்திய ஆசிரியர் உ.கஜேந்திரன் அவர்களையும் கல்லூரி அதிபர் பாராட்டுகிறார்.

Y-4


    ஏற்கனவே மாகாண மட்டத்திலான பண்ணிசை, புராண படல போட்டியில் முதலாம் இடம் பெற்றமையை இவ் இணையத் தளத்தினூடாக அறிந்திருப்பீர்கள்.

 

யாழ்ற்ரன் கல்லூரி சைக்கிள் ஓட்டப் போட்டிகள்

யாழ்ற்ரன் கல்லூரியின் 2016 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான சைக்கிள் ஓட்டப்போட்டிகள் 20.01.2016 புதன்கிழமை காலை 6.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி, கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் திரு.வே.சிற்சபேசன், கல்லூரியின் பழைய மாணவரும் விளையாட்டுத்துறை ஆர்வலருமான திரு.ச.குகதாசன் ஆகியோரால் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்லூரி முன்றலில் ஆரம்ப்பித்து சுற்று வீதி வழியாக மீண்டும் கல்லூரி முன்றலில் முடிவடைந்தது. முதலில் ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டிகளும் பின் பெண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டிகளும் நடைபெற்றன.

போட்டிகள் முடிவடைய நடுவர்களுக்காக நடைபெற்ற தேனீர் விருந்தில் நடுவர்களாக வந்து ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நடுவர்களுக்கும், அம்புலன்ஸ் சேவையை வழங்கிய காரைநகர் வைத்தியசாலை வைத்திய அதிகாரிக்கும் அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். 

                                        சைக்கிள் ஓட்டம் ஆண்கள்
1ம் இடம்      செ.நிறோசன்        நாவலர் இல்லம்
2ம் இடம்      ப.தவக்குமார்        நாவலர் இல்லம்
3ம் இடம்      ந.சரவணபவன்        விபுலானந்தர் இல்லம்
4ம் இடம்      கி.அஜந்தன்        நாவலர் இல்லம்
5ம் இடம்      சூ.சஞ்ஜீவன்        நாவலர் இல்லம்


                                        சைக்கிள் ஓட்டம் பெண்கள்
1ம் இடம்       மோ.றோசி        நாவலர் இல்லம்
2ம் இடம்      சௌ.நிரோஜமலர்    நாவலர் இல்லம்
3ம் இடம்      சி.பிரியங்கா        இராமநாதன் இல்லம்
4ம் இடம்      ம.பவித்திரா        இராமநாதன் இல்லம்
5ம் இடம்      க.காயத்திரி        நாவலர் இல்லம்

DSC00570 DSC00571 DSC00573 DSC00574 DSC00575 DSC00585 DSC00586 DSC00589 DSC00590 DSC00591 DSC00592 DSC00593 DSC00596 DSC00599 DSC00600 DSC00601 DSC00602 DSC00603 DSC00611 DSC00612 DSC00614 DSC00615 DSC00616 DSC00632 DSC00633 DSC00634 DSC00635 DSC00636 DSC00637 DSC00638 DSC00644 DSC00645 DSC00646

யாழ்ற்ரன் கல்லூரி மரதன் ஓட்டப் போட்டிகள்

யாழ்ற்ரன் கல்லூரியின் 2016 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான மரதன் ஓட்டப்போட்டிகள் 17.01.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00மணிக்கு ஆரம்பமானது.கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்களால் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்லூரிச் சமூகத்தினரின் கரகோசத்துடன் போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.ஆண்களுக்கான மரதன் ஓட்டம் கல்லூரி முன்றலில் ஆரம்ப்பித்து வேம்படி,வாரிவளவு,வியாவில்,களபூமி ஊடாக மீண்டும் கல்லூரி முன்றலில் முடிவடைந்தது.

பெண்களுக்கான மரதன் ஓட்டம் காரைநகர் துறைமுகத்திலிருந்து ஆரம்பமாகி களபூமி,வலந்தலைச்சந்தி ஊடாக மீண்டும் கல்லூரி முன்றலை வந்தடைந்தது.போட்டிகள் முடிவடைய நடுவர்களுக்காக நடைபெற்ற தேனீர் விருந்தில் நடுவர்களுக்காக வந்து ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நடுவர்களுக்கும்,அம்புலன்ஸ் சேவையை வழங்கிய காரைநகர் வைத்தியசாலை வைத்திய அதிகாரிக்கும் அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். 

                                              வீதியோட்டம் ஆண்கள்
1ம் இடம்      செ.நிறோசன்        நாவலர் இல்லம்
2ம் இடம்      ம.சஞ்ஜீவன்        நாவலர் இல்லம்
3ம் இடம்      த.கீர்த்தனன்        விபுலானந்தர் இல்லம்
4ம் இடம்      இ.தயாரூபன்        நாவலர் இல்லம்
5ம் இடம்      க.தர்சன்        விபுலானந்தர் இல்லம்


                                              வீதியோட்டம் பெண்கள்
1ம் இடம்       சௌ.நிரோஜமலர்    நாவலர் இல்லம்
2ம் இடம்      ம.நவநிலா        நாவலர் இல்லம்
3ம் இடம்      மோ.றோசி        நாவலர் இல்லம்
4ம் இடம்      சி.சுகிர்தா        நாவலர் இல்லம்
5ம் இடம்      ப.யாழினி        விபுலானந்தர் இல்லம்

DSC00434 DSC00435 DSC00436 DSC00439 DSC00441 - Copy DSC00442 - Copy DSC00444 DSC00446 DSC00447 - Copy DSC00454 - Copy DSC00458 DSC00466 DSC00469 DSC00470 DSC00471 - Copy DSC00473 - Copy DSC00479 - Copy DSC00480 DSC00481 DSC00482 DSC00483 DSC00484 DSC00485 DSC00487 DSC00489 DSC00493 DSC00494 DSC00496 DSC00499 DSC00500 DSC00501 DSC00502 DSC00504 DSC00505 DSC00506 DSC00507 DSC00508 DSC00509 DSC00511 DSC00512 DSC00513 DSC00514 DSC00515 DSC00517 DSC00518 DSC00522 DSC00523 DSC00524 DSC00525 DSC00526 DSC00527 DSC00528 DSC00531

கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 03.01.2016 அன்று வெளியானது.இதன் பிரகாரம் யாழ்ற்ரன் கல்லூரி தீவக வலயத்தில் முன்னிலையில் நிற்கின்றது.

YARLTON LOGO
                           யா/யாழ்ற்ரன் கல்லூரி, காரைநகர்
                               க.பொ.த (உ/த) 2015

கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 03.01.2016 அன்று வெளியானது.இதன் பிரகாரம் யாழ்ற்ரன் கல்லூரி தீவக வலயத்தில் முன்னிலையில் நிற்கின்றது.

 

             சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் விபரம்

 

                                         கலைப் பிரிவு


மாணவர் பெயர்                    பெறுபேறு


1.செல்வி.க.யசோதா                             2A  1B               (தகவல் தொடர்பாடல்

                                                                                               தொழில்நுட்பப் பாடத்துடன் ICT)
2.செல்வி.அ.சசிகலா                             1A       2C


3.செல்வன்.தி.செந்தூரன்                    1A  1B 1C


4.செல்வன்.ச.சரவணபவன்                      2B 1C


5.செல்வி.தி.அம்பிகா                                  2B 1C


6.செல்வி.யோ.சௌமியா                          2B 1C


7.செல்வி.ந.ஜெசிந்தா                                 1B  2C


8.செல்வி.யு.லோஜிகா                                       3C


9.செல்வி.த.ராகினி                                            2C 1S


10.செல்வி.சி.சிவதர்சினி                                 2C 1S


11.செல்வி.க.தர்மிலா                                         2C 1S


12.செல்வி.போ.துசியந்தினி                           2C 1S

 

 

 

                                       வர்த்தகப் பிரிவு

 

மாணவர் பெயர்            பெறுபேறு


1.செல்வன்.அ.கஜன்                          2B 1C             (தகவல் தொடர்பாடல்

                                                                                          தொழில்நுட்பப் பாடத்துடன் ICT)
2.செல்வன்.ந.வராகன்                            2C 1S


3.செல்வன்.ம.பிரதாபன்                        2C 1S


                                        கணிதப் பிரிவு

 

மாணவர் பெயர்            பெறுபேறு


1.செல்வி.செ.ஐஸ்வரியா                     1C 2S       (தகவல் தொடர்பாடல்

                                                                                         தொழில்நுட்பப் பாடத்துடன் ICT)
2.செல்வன்.ச.சரவணன்                             3S


    பரீட்சைக்குத் தோற்றியோர் 25 மாணவர்கள்


    பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமை பெற்றோர் 22 மாணவர்கள்


    88% பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமை பெற்றுள்ளனர்.


    இவ் ஆண்டு குறைந்தது 06 மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவாவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டதன் பின்னரே உறுதிசெய்யப்படும்.


     சென்ற 2014 ஆம் ஆண்டு க.பொ.த பரீட்சையில் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவானோர்.


1.செல்வி.அ.பிருந்தா – கலைப்பீடம்


2.செல்வன்.ந.சோபிதன் – நுண்கலைப்பீடம்


3.செல்வி.அ.சோபனா – நுண்கலைப்பீடம்

 

 


    

 

மாகாண மட்டப்போட்டிகளில் யாழ்ற்ரன் கல்லூரி 1ஆம் இடம்.

                              மாகாண மட்டப்போட்டிகளில் 
                              யாழ்ற்ரன் கல்லூரி 1ஆம் இடம்.

வடக்கு மாகாண கல்வித்திணைக்களத்தினரால் 29-11-2015 அன்று நடாத்தப்பட்ட மாகாணமட்ட பண்ணிசைப் போட்டியிலும்  (குழு-II)மற்றும் புராணபடனம்(தனி) போட்டிகளிலும் யாழ்ற்ரன் கல்லூரி 1ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.

இப் போட்டிகளில் கோட்டமட்டம், வலயமட்டங்களில் 1ஆம் இடங்களைப் பெற்று மாகாணமட்டத்தில் பல முன்னனி தேசிய பாடசாலைகளையும் விஞ்சி கல்லூரி 1ஆம் இடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

இப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கும்; இப்போட்டிகளுக்கு நெறிப்படுத்திய சங்கீத ஆசிரியை செல்வி லீலாவதி இராசரத்தினம் அவர்களுக்கும் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் பாராட்டுக்களை தெரிவிக்கின்றார்.

பண்ணிசை போட்டியில் குழு-IIஇல் பங்குபற்றிய மாணவர்களும் கல்லூரி அதிபரும், சங்கீத ஆசிரியர்களும்

PHOTO-1

1.    கீர்த்தனா ஜீவாகரன்.
2.    யாழினி பரமேஸ்வரன்.
3.    பவித்திரா சற்குணநாதன்.
4.    தர்மிகா ரவிக்குமார்.
5.    கீர்த்திகா கங்காதரன்.
6.    டினுயா சிவராசா.
7.    கஸ்தூரி சுரேந்திரன்.
8.    சங்கீதம் நடராஜா.
9.    சரணியா ஜெயரமேஸ.;
10.    கீர்த்திகா தர்மலிங்கம்.
11.    கிருஸ்ணவேணி தர்மலிங்கம்.
12.    டர்சிகா தர்மலிங்கம்.

 

புராண படனம் போட்டியில் பங்குபற்றிய மாணவர்களும் கல்லூரி அதிபரும், சங்கீத ஆசிரியர்களும்

PHOTO-2 1. கிருஷிகா மோகநாதன்.
 2. நிறோயினி சோதிலிங்கம்.

 

                     மாகாணமட்டப்போட்டியில் சித்திரப்போட்டியில் 
                     யாழ்ற்ரன் கல்லூரி மாணவன் 2ஆம் இடம்

வடக்குமாகாணக் கல்வித்திணைக்களகத்தினரால் நடாத்தப்பட்ட சித்திரப்போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி மாணவன் செல்வன் S.கஜந்தன் 2ஆம் இடத்தைப் பெற்றுள்ளார். இம் மாணவனையும் இம் மாணவனை நெறிப்படுத்திய சித்திர பாட ஆசிரியர் திரு.ஊ.கஜேந்திரன் அவர்களுக்கு கல்ல}ரி அதிபர் தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றார்.


சித்திரப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்களும் கல்லூரி அதிபரும் சித்திர ஆசிரியரும்.

PHOTO-3

 

 

இன்று 05.12.2015 யாழ்ற்ரன் கல்லூாியில் இடம்பெற்ற தரம் 5 புலமைப் பாீட்சையில் சித்திபெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழா

இன்று 05.12.2015 யாழ்ற்ரன் கல்லூாியில் இடம்பெற்ற தரம் 5 புலமைப் பாீட்சையில் சித்திபெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழாவிற்கு பிரதமவிருந்தினராக திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதன் அவா்களும் சிறப்பு விருந்தினராக கோட்டக்கல்வி பணிப்பாளா் திரு.பு.ஸ்ரீவிக்னேஸ்வரன் அவா்களும் கௌரவ விருந்தினராக முன்னாள் பிரதேசசபை உறுப்பினா் திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரனும் கலந்து சிறப்பித்தனா்.

பாடசாலை அதிபா் திரு.வே.முருகமூா்த்தி அவா்கள் தலைமை தாங்கினாா்.நிகழ்வில் உரையாற்றிய அனைவரும் திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதன் அவா்களின் சேவையினைப் பொிதும் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

DSC_0376 DSC_0380 DSC_0382 DSC_0386 DSC_0388 DSC_0390 DSC_0396 DSC_0398 DSC_0404 DSC_0417 DSC_0419 DSC_0421 DSC_0423 DSC_0425 DSC_0426 DSC_0428 DSC_0432 DSC_0433 DSC_0436 DSC_0437 DSC_0443 DSC_0446 DSC_0448 DSC_0450 DSC_0451 DSC_0452 DSC_0454 DSC_0458 DSC_0460 DSC_0474 DSC_0485 DSC_0492 DSC_0502 DSC_0510 DSC_0514 DSC_0520 DSC_0524 DSC_0529 DSC_0530 DSC_0534 DSC_0538 DSC_0540 DSC_0551 DSC_0554 DSC_0562

காரைநகர் யாழ்நகர்க்கல்லூரிக்கு விஜயம் செய்த பரோபகாாி,தா்மக்கொடை வள்ளல்,தெய்வீகத் திருப்பணி அரசு திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதன் அவா்கள் கல்லூரி அதிபரையும் தான் மாதாந்தம் நிதியுதவி செய்து பயன்பெறும் மாணவர்களை சந்தித்து அளவளாவினார்

காரைநகர் யாழ்நகர்க்கல்லூரிக்கு விஜயம் செய்த பரோபகாாி,தா்மக்கொடை வள்ளல்,தெய்வீகத் திருப்பணி அரசு திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதன் அவா்கள் கல்லூரி அதிபரையும் தான் மாதாந்தம் நிதியுதவி செய்து பயன்பெறும் மாணவர்களை சந்தித்து அளவளாவினார்.

இதன்போது பாடசாலை அதிபரால் சிபார்சு செய்யப்பட்ட மேலும் ஒரு மாணவிக்கும் இணைப்பாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரனால் சிபார்சு செய்யப்பட்ட ஒரு மாணவிக்கும் மாதாந்த உதவித்தொகை இம்மாதம் முதல் வழங்குவதாக உறுதியளித்தார். 

DSC_0238 DSC_0240 DSC_0244 DSC_0246 DSC_0248 DSC_0255 DSC_0257 DSC_0258 DSC_0260

தீவக கல்வி வலய பௌர்ணமி விழா 27.09.2015 அன்று காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் நடைபெற்றது.

2015 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் காரைநகர் கல்விக் கோட்டத்தில் யாழ்ற்ரன் கல்லூரியின் பெறுபேறுகள் முன்னணியில்

இன்று வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளில் யாழ்ற்றன் கல்லூரியில் ஆறு மாணவர்கள் சித்தியடைந்து காரைநகர் கோட்டத்தில் முன்னணி பெறுபேறுகளைப் பெற்ற பாடசாலையாகத் திகழ்கிறது.இம் மாணவர்களையும் கற்பித்த ஆசிரியர்களான திருமதி.த.அகிலன் செல்வி.இ.சுபத்திரா தேவி ஆகியோர்களையும் கல்லூரி அதிபர் பாராட்டுகிறார்.

 

சித்தியடைந்த மாணவர் பெயர்                பெற்ற புள்ளிகள்


1.ஜெயக்குமார் புவியரசன்                                     172


2.வரதராசா கோபிகா                                               171


3.பாலச்சந்திரன் அனிதா                                         162


4.யோகநாதன் கிருத்திகா                                        158


5.யோகலிங்கம் கிருத்திகா                                      155


6.திருச்செல்வம் கம்சிகா                                         153

 

YARLTON GR 5 PHOTO

யாழ்ற்ரன் கல்லூரியின் பரிசளிப்பு விழா 2015

யாழ்ற்ரன் கல்லூரியின் 2015ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 20.09.2015 காலை 9.00 மணிக்கு கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் கோலாகளமாக ஆரம்பமாகியது. இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டு அமைச்சின் செயலாளர் திரு.இராசா இரவீந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்;. மேலும் சிறப்பு விருந்தினராக தீவகக் கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளர் திரு.ஜோன்ஸ் குயின்ரஸ் அவர்கள் கலந்து கொண்டார். கௌரவ விருந்தினராக காரைநகர் கல்விக் கோட்ட கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு.பு.விக்னேஸ்வரன் அவர்களும், யாழ்ற்ரன் கல்லூரியின் ஓய்வு நிலை ஆரம்ப பிரிவு முதல்வர் திரு.க.தில்லையம்பலம் அவர்களும் , இ.போ.ச. கோண்டாவில் சாலை பொறியில்பகுதி உதவி முகாமையாளர் திரு.தி.ஏகாம்பரநாதன் அவர்களும் மேலும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    வருடந்தோறும் அமரர் வை.காசிப்பிள்ளை ஞாபகார்த்தமாக நடைபெறும் இவ் விழாவின் அனுசரணையாளராக செயற்படும் வைத்திய கலாநிதி சிறிதாரணி விமலன் குடும்பத்தினருக்கு(கனடா) அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். மேலும் பிராத்தனை மண்டபம் நீடிக்க படவேண்டும் என்ற கோரிக்கையையும் அதிபர் அவர்கள் செயலாளரிடம் முன்வைத்தார்.

    பிரதமவிருந்தினர் கல்வி பண்பாட்டு அமைச்சின் செயலாளர் உயர் திரு.இராசா இரவீந்திரன் அவர்கள் தனது உரையில் கல்லூரி அதிபரால் பிராத்தனை மண்டபத்தை நீடிக்கபட வேண்டும் என்ற கோரிகையை தான் அடுத்த ஆண்டு நிறைவேற்றி தருவதாகவும் உறுதி அளித்தார்.

    2014ஆம் ஆண்டு பொதுப்பரீட்சைகளில் அதி கூடிய சித்திகளைப் பெற்ற மாணவர்களுக்கும், மாகாண மட்டம், தேசிய மட்டம் ஆகியவற்றில் சாதனை படைத்த மாணவர்களுக்கும் இவ் விழாவில் பதக்கங்கள் அணிவித்தும்,நினைவுச்சின்னங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

யாழ்ற்ரன் கல்லூரியின் பரிசளிப்பு விழா 2015

யாழ்ற்ரன் கல்லூரியின் 2015ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 20.09.2015 காலை 9.00 மணிக்கு கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் கோலாகளமாக ஆரம்பமாகியது. இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டு அமைச்சின் செயலாளர் திரு.இராசா இரவீந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் சிறப்பு விருந்தினராக தீவகக் கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளர் திரு.ஜோன்ஸ் குயின்ரஸ் அவர்கள் கலந்து கொண்டார். கௌரவ விருந்தினராக காரைநகர் கல்விக் கோட்ட கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு.பு.விக்னேஸ்வரன் அவர்களும், யாழ்ற்ரன் கல்லூரியின் ஓய்வு நிலை ஆரம்ப பிரிவு முதல்வர் திரு.க.தில்லையம்பலம் அவர்களும் , இ.போ.ச. கோண்டாவில் சாலை பொறியில்பகுதி உதவி முகாமையாளர் திரு.தி.ஏகாம்பரநாதன் அவர்களும் மேலும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    வருடந்தோறும் அமரர் வை.காசிப்பிள்ளை ஞாபகார்த்தமாக நடைபெறும் இவ் விழாவின் அனுசரணையாளராக செயற்படும் வைத்திய கலாநிதி சிறிதாரணி விமலன் குடும்பத்தினருக்கு(கனடா) அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். 

    2014ஆம் ஆண்டு பொதுப்பரீட்சைகளில் அதி கூடிய சித்திகளைப் பெற்ற மாணவர்களுக்கும், மாகாண மட்டம், தேசிய மட்டம் ஆகியவற்றில் சாதனை படைத்த மாணவர்களுக்கும் இவ் விழாவில் பதக்கங்கள் அணிவித்தும்,நினைவுச்சின்னங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

IMG

IMG_0002 IMG_0003 IMG_0004 IMG_0005 IMG_0006 IMG_0007 IMG_0008 IMG_0009 IMG_0010 IMG_0011

யாழ்ற்ரன் கல்லூரி மாணவன் செந்தில்நாதன் கஜரூபன் (தரம் 8) அவர்கள் இயற்றிய கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீடு

be the first photo of web

யாழ்ற்ரன் கல்லூரி மாணவன் செந்தில்நாதன் கஜரூபன் (தரம் 8) அவர்கள் இயற்றிய கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீடு

யாழ்ற்ரன் கல்லூரி மாணவன் செந்தில்நாதன் கஜரூபன் என்ற மாணவனால் இயற்றப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா 10-09-2015 அன்று கல்லூரி முத்தமிழ் மன்றத்தினரால் நடாத்தப்பட்டது. அன்றைய தினம் முற்பகல் 9 மணிக்கு கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி அவர்களின் தலைமையில் விழா ஆரம்பமாகியது.

பிரதம விருந்தினராக வடமாகாணக் கல்வி அமைச்சின் முன்னாள் பிரதிச்செயலாளர் திரு. ப. விக்னேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். பல அறிஞர்களின் வாழ்த்துரைகளுடன், பண்டிதர் மு. சு. வேலாயுதபிள்ளை அவர்களினால் நூல் வெளியீடு செய்து வைக்கப்பட்டது. முதற்பிரதியை காரை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர் சிவா. T. மகேசன் அவர்கள் பெற்று கௌரவித்தார். கல்லூரி வரலாற்றில் மாணவர்களின் ஆக்கம் வெளியிடப்பட்டது இதுவே முதற் தடவை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

be the first photo of web

DSC00054

DSC00064DSC00065 DSC00066 DSC00067 DSC00068 DSC00069 DSC00070 DSC00071 DSC00072 DSC00073 DSC00074 DSC00075 DSC00078 DSC00080 DSC00083 DSC00084 DSC00085 DSC00088 DSC00092 DSC00093 DSC00094 DSC00096 DSC00098

யாழ்ற்ரன் கல்லூரி பரிசளிப்பு விழா- 2015

YARLTON

யாழ்ற்றன் கல்லூரி மாணவன் செ.கஜரூபனின் அரும்பும் மலரும் கவிதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

IMGIMG_0001

தேசியமட்டப் போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி முதலிடம்

இலங்கை "வாழ்வின் எழுச்சி" திணைகளத்தின் கெக்குலு சிறுவர் கழகங்களுக்கு இடையிலான 2014இம் ஆண்டுக்கான தேசிய மட்ட போட்டிகள் 26.07.2015 கொழும்பில் நடைபெற்றன.

இதில் கிராமிய நடனத்திற்கான போட்டியில் தேசிய மட்டத்தில் யாழ்ற்ரன் கல்லூரி முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

தேசிய மட்டபோட்டியில் கல்லூரி முதலாம் இடத்தை பெற்றமை கல்லூரி வரலாற்றில் இது முதல் தடைவ என்பது குறிப்பிட தக்கதாகும்.

தேசிய மட்டத்திலான இதே போட்டியில் 2012ஆம் ஆண்டு யாழ்ற்ரன் கல்லூரி 3ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. இப்போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் இம் மாணவர்களுக்கு பயிற்ச்சிகளை வழங்கி திறமையான நெறியாளுகை மேற்கொண்ட கல்லூரியின் நடனத்துறை ஆசிரியை திருமதி.சகிலா சுதாகரன் அவர்களுக்கும் கல்லூரி அதிபரும் கல்லூரி சமூகமும் தங்கள் மனமுவந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றனர்.

போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களும் ஆசிரியரும் படத்தில் காண்கின்றோம்.

image001

 

நூல் வெளியீட்டு விழா சிறப்புற யாழ்ற்றன் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்களின் வாழ்த்துச் செய்தி

murugamoorthy

வாழ்த்துச் செய்தி

 

சைவர்களி னாதரவும் பெருநிதியு


மரசினர்தஞ் சார்புங் கொண்டு


மைவளருங் கண்டத்தான் சமயநெறி


வளர்ந்தோங்க மாசில் பள்ளி


மெய்வகையிற் பன்னூறு நிறுவினனால்


நாடெங்கு மெய்ம்மை யுள்ளச்


சைவனரு ணாசலற்குச் சிலையாகித்


     தமிழ்போலத் தழைத்து வாழி

ஈழத்துச் சிதம்பர புராணம்

இலங்கைத் திருநாட்டில் அந்நியராட்சி இடம்பெற்ற காலகட்டம் சைவமும் தமிழும் நமது சமூகத்திலிருந்து விலகிச் செல்லும் சூழ்நிலை. இச்சந்தர்ப்பத்தில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் அவதாரம் இருளை நீக்கி ஒளியைக் கொணரும் உதய சூரியன் போன்று அமைந்திருந்தது. நாவலர் பெருமானின் சைவப்பணி, தமிழ்ப்பணி, நூல் வெளியீட்டுப்பணி, கல்விப்பணி என்ற பன்முக ஆளுமைகள் சைவத்தையும் தமிழையும் நம்மவர்கள் பின்பற்றுவதற்கு கால்கோளாகியது. நாவலர் பெருமானிடம் கல்வி கற்ற பல மாணவர்கள் அவரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி 1879 இல் நாவலர் பெருமான் மறைந்த பின்னரும் கூட சைவத்தையும், தமிழையும் வளர்க்க அரும்பணியாற்றினார்கள். இவர்களில் குறிப்பிடத்தக்க பெரியாராக காரைநகர் அருணாசல உபாத்தியாயர் முக்கிய இடம் பெறுகிறார் என்பதை நாவலர் பெருமானின் குரு சீட பரம்பரையில் வந்த இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் “அவருக்குப்பின் அருணாசலம்” என்பதால் குறிப்பிட்டுக்காட்டுகிறார்.

பெரியார் அருணாசலத்தின் முக்கிய குறிக்கோளாக சைவப் பாரம்பரியமூடான மாணவர் கல்வியும், ஆசிரியர் கல்வியும் அமைய வேண்டும் என்பதாக இருந்தது. இக்கல்வி முறைமையை நமது பிரதேசத்தில் ஏற்படுத்துவதற்கு இவர் மேற்கொண்ட முயற்சிகள், கஸ்;டங்கள், துன்பங்கள் சொல்லொணாதவை. இவரின் முயற்சிக்கு ஓர் எடுத்துக்காட்டாக நமது ஊரில் தோற்றம் பெற்ற வியாவில் சைவ வித்தியாலயம், காரைநகர் இந்துக் கல்லூரி, சுப்பிரமணிய வித்தியாசாலை என்பன குறிப்பிடத்தக்கவையாகும். இவரின் 30 வருட உழைப்பின் பயனாக 1915 இல் கோப்பாயில் ஓர் ஆசிரியர் கலாசாலையும் அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி சைவ ஆசிரியர் கலாசாலை, இராமநாதன் ஆசிரியர் பயிற்சிக் கழகம், மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை என்பனவும் தோற்றம் பெற்றன. பெரியார் அருணாசலத்தின் முயற்சியும் சேவையும் வித்தாகி மரமாகி நின்றதை விருட்சமாக்கியவர் திரு. சு. இராஜரட்ணம் அவர்களாவார். பெரியார் சைவப்பாரம்பரியமூடான தமிழ்மொழி மூலக்கல்வி மட்டுமன்றி, சைவப்பாரம்பரியமூடான ஆங்கில மொழி மூலக்கல்வி முறையையும் ஏற்படுத்தி கிராமங்கள் தோறும் இந்து ஆங்கில வித்தியாசாலைகளை நிறுவினார். இவைகளே பின்னர் இந்துக் கல்லூரிகளாக உருவாகின.

பெரியார் அருணாசலம் அவர்களுடைய அர்ப்பணமான, ஈடு இணையற்ற இச்சேவைகளை வெளிக்கொணருகின்ற நூலாக வல்வை சிவகுரு வித்தியாசாலை முன்னாள் தலைமை ஆசிரியர் திரு சி. கணபதிப்பிள்ளை ஐயர் அவர்களால் எழுதப்பட்ட “சைவ ஆசிரியர்களை தோற்றுவித்த  திரு. ச. அருணாசலம் அவர்கள்” என்ற நூலினை இரண்டாவது பதிப்பாக கனடா சைவ சித்தாந்த மன்றம் வெளியிடுவது ஒரு பாராட்டப்பட வேண்டிய, போற்றப்படவேண்டிய விடயமாகும். இந்நிகழ்வினை ஒழுங்கமைப்புச் செய்த கனடா சைவசித்தாந்த மன்றத்திற்கும் அதன் தலைவர் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய திரு. தி. விசுவலிங்கம் அவர்களுக்கும், விழா இனிதே சிறப்புற நடைபெறுவதற்கும் யாழ்ற்ரன் கல்லூரி சமூகம் சார்பாக எமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

வே. முருகமூர்த்தி 


அதிபர்


யாழ்ற்ரன் கல்லூரி


காரைநகர்

Greetings Yarlton College-page-001Greetings Yarlton College-page-002

யாழ்ற்ரன் கல்லூரியில் 2014 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறப்பு பெறுபேறுகள் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா

Memento

மேற்படி விழா 17.07.2015 வெள்ளிக்கிழமை மு.ப 8.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக தீவகக் கல்வி வலயத்தின் விஞ்ஞான பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. நா. சபாநாயகம் அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. S. கணநாதன் (yarltonian, உரிமையாளர் Quency Distributors) அவர்களும், கௌரவ விருந்தினராக திரு. S. அருளானந்தசிவம்(UK), திரு. S .செல்வரத்தினம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

அதிபர் தமது உரையில் இன்றைய மாணவர் பாராட்டு விழாவின் நிதி அனுசரணையாளராக செயற்பட்ட திரு.S. கணநாதன் அவர்களுக்கு தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

பிரதவிருந்தினர் தனது உரையில் தீவகக்கல்வி வலயத்தில் 70.4% மாணவர்கள் க.பொ.த உயர்தரம் படிக்க தகைமை பெற்று 2014ஆம் ஆண்டு தீவகக் கல்வி வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்றமையை பாராட்டினார். தொடர்ந்து அவர் தனது உரையில் 2014 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரீட்சையில் யாழ்ற்ரன் கல்லூரியிலே அதிகூடிய மாணவர் எண்ணிக்கை (தீவக வலயத்தில்) சித்தி அடைந்தமையும் அவர் குறிப்பிட்டு தேசிய பரீட்சைகளில் தீவக வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரி 1ம் இடத்தில் இருப்பதையிட்டு அவர் அதிபர், ஆசிரியர், மாணவர்களுக்கு தனது பாராட்டையும் தெரிவித்தார். சென்ற முதலாம் தவணைப் பரீட்சையில் (2015) 90 உம் அதற்கு மேல் சராசரி எடுத்த மாணவர்களுக்குமான Super  Merit என்ற Medal அணிவித்து கௌரவிக்கப்பட்டது. மேலும் க. பொ.த சா/த மாணவர்களுக்கு 2014 ஆம் ஆண்டு கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

க. பொ. த சா/த பரீட்சை 2014 இல் 5A உம் அதற்கு மேல் சித்திகளைப் பெற்ற பின்வரும் மாணவர்கள் நினைவுச் சின்னம் வழங்கி(Memento) கௌரவிக்கப்பட்டார்கள்.

1. செந்தில்நாதன் கமலேஸ்வரி 8A 1S

2. குகநேசன் கோபிதா 7A 1S

3. தியாகராஜா சயந்தன் 6A 3B

4. விக்கினேஸ்வரன் வேதாரணி 5A 2B 2C

5. மகாதேவன் நவநிலா 5A 2B 1S

6. மோகநாதன் துர்சிகா 5A 1B 1C 1S

யாழ்ற்ரன் கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், மதியபோசன விருந்தும் – 2015

யாழ்ற்ரன் கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், மதியபோசன விருந்தும் 28/06/2015 ஞாயிற்றுக்கிழமை பி.ப.12.30 மணிக்கு மன்றத்தின் தலைவர் செல்வன் தி.ரஜீவன் தலைமையில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக கொழும்பு தேசிய வைத்தியசாலை வைத்திய அதிகாரி Dr. க. கணேஸ்வரராஜா(Yarltonian) அவர்களும், சிறப்பு விருந்தினராக தீவகக் கல்வி வலயத்தின் முறைசாரா கல்விப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. ப. ஆரூரன் அவர்களும், கௌரவ விருந்தினராக தொழிலதிபர் திரு. ச. சிவஞானம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்

அகில இலங்கைத் தமிழ்த்தினப் போட்டியில் மாகாண மட்டத்தில் யாழ்ற்ரன் கல்லூரி 2ம் இடம்

இலங்கைக் கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை தமிழ்த்தினப் போட்டியில் பிரிவு 4 இற்கான தனிநடனப் போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி மாணவன் செல்வன் செந்தில்நாதன் பிரசாந்தன் 2ம் இடத்தைப் பெற்றுள்ளார். இம்மாணவனுக்கும், இம்மாணவனைப் பயிற்றுவித்த ஆசிரியை திருமதி. சகிலா சுதாகரன் அவர்களுக்கும் கல்லூரி அதிபர் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறார்.

DSC02362

க. பொ. த சாதாரண தரம் 2014 பரீட்சைப் பெறுபேறுகளில் தீவகக் கல்வி வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரி ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுக்கொண்டது.

flaganimation2

இன்று (30-03-2015) வெளியான க. பொ. த சாதாரண தரப் பரீட்சை 2014க்கான பெறுபேறுகளில் யாழ்ற்ரன் கல்லூரியில் சிறப்பான பெறுபேறுகளை (5A உம் அதற்கு மேற்பட்ட) 6 மாணவர்கள் பெற்றுக் கொண்டனர். அம்மாணவர்களின் விபரம்.


1. செந்தில்நாதன் கமலேஸ்வரி 8A 1S

2. குகநேசன் கோபிதா 7A 1S

3. தியாகராஜா சயந்தன் 6A 3B

4. விக்கினேஸ்வரன் வேதாரணி 5A 2B 2C 

5. மகாதேவன் நவநிலா 5A 2B 1S

6. மோகநாதன் துர்சிகா 5A 1B 1C 1S

 

மேலும் 

 

7. கருணேஸ்வரன் ஜெயமதுசன் 4A 3B 2S

8. தயாபரன் திருமகள் 4A 3B 1C 1S

9. பாலேந்திரன் கவிதா 3A 1B 3C 2S

10. கிருபானந்தன் அஜந்தன் 3A 1B 2C 2S


க. பொ. த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் 5A உம் அதற்குக் கூடிய பெறுபேறுகளையும் 6 மாணவர்கள் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். மேலும் பல மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று 74.07% ஆன மாணவர்கள் க. பொ. த உயர்தரம் கற்பதற்குப் பூரணமான தகைமையைப் பெற்றுள்ளனர். இது சென்ற ஆண்டை விட 12% இனால் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது கல்லூரியின் நீண்ட கால இடைவெளியின் பின்னர் க. பொ. த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் பெற்றுக் கொண்ட ஒரு வெற்றியாகும். இம்மாணவர்களுக்கும், இம்மாணவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களுக்கும் கல்லூரி அதிபர் அவர்கள் தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கிறார்.

 

2014ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையிலும் தீவகக் கல்வி வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரியில் அதிகூடிய மாணவர்கள் சித்தியடைந்தமையை இவ்விணையத்தளம் மூலம் பார்த்திருப்பீர்கள்.

காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 48வது நாள் மண்டல பூா்த்தி விழா பகல் நிகழ்வுகளும், யாழ்ற்ரன் கல்லூரி அலங்கார வளைவு திறப்புவிழா வைபவமும்

DSC_0247

காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 48வது நாள் மண்டல பூா்த்தி விழா 21.02.2015 சனிக்கிழமை  வெகு விமரிசையாக பக்தி பூா்வமாக1008 கலசாபிஷேகம் மூலஸ்தான அம்பாளுக்கும்,1008 சங்காபிஷேகம் எழுந்தருளி அம்பாளுக்கும் வடஇலங்கை பிரபல நாதஸ்வர தவில் வித்துவான்கள்  நாதஸ்வரகான மழை பொழிய பெரும்திரளான பக்தா்களின் அரோகரா கோஷத்துடன் நடந்தேறியது.

மண்டல பூா்த்தி விழாவின் உபயகாரா் தெய்வீகதிருப்பணிஅரசு திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் என்பது குறிப்பிடத்தக்கது .தொடா்ந்து மாலை  3.30 மணிக்கு ஆலயத்தின் கிழக்குப்புறமாக உள்ள திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவா்களின் நிலத்தில் கலை, கலாச்சார வகுப்புக்களை நடாத்துவதற்கான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.இம்மண்டபத்திற்கான அனுசரணையாளா் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

அதனைத் தொடா்ந்து 4.30 மணிக்கு திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவா்களால் யாழ்ற்ரன் கல்லூரிக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட பிரதான நுழைவாயில் அலங்கார வளைவும், துவிச்சக்கரவண்டி பாதுகாப்புக் கொட்டகையும்  ஆலய முன்றலிலிருந்து பாடசாலை மாணவா்களின் பான்ட் வாத்தியத்துடன் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன்  பிரதேசசபை உறுப்பினா் திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் உட்பட பிரமுகா்கள் அழைத்துச்செல்லப்பட்டு திறப்புவிழா கோலாகலமாக நடைபெற்றது. இவ் வைபவத்தில் தனது மகளின் பிறந்ததின நினைவாக வசதி குறைந்த திறமையான 18 மாணவா்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை அன்பளிப்புச் செய்தார்.