யாழ்ற்ரன் கல்லூரியில் 2014 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறப்பு பெறுபேறுகள் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா

Memento

மேற்படி விழா 17.07.2015 வெள்ளிக்கிழமை மு.ப 8.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக தீவகக் கல்வி வலயத்தின் விஞ்ஞான பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. நா. சபாநாயகம் அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. S. கணநாதன் (yarltonian, உரிமையாளர் Quency Distributors) அவர்களும், கௌரவ விருந்தினராக திரு. S. அருளானந்தசிவம்(UK), திரு. S .செல்வரத்தினம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

அதிபர் தமது உரையில் இன்றைய மாணவர் பாராட்டு விழாவின் நிதி அனுசரணையாளராக செயற்பட்ட திரு.S. கணநாதன் அவர்களுக்கு தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

பிரதவிருந்தினர் தனது உரையில் தீவகக்கல்வி வலயத்தில் 70.4% மாணவர்கள் க.பொ.த உயர்தரம் படிக்க தகைமை பெற்று 2014ஆம் ஆண்டு தீவகக் கல்வி வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்றமையை பாராட்டினார். தொடர்ந்து அவர் தனது உரையில் 2014 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரீட்சையில் யாழ்ற்ரன் கல்லூரியிலே அதிகூடிய மாணவர் எண்ணிக்கை (தீவக வலயத்தில்) சித்தி அடைந்தமையும் அவர் குறிப்பிட்டு தேசிய பரீட்சைகளில் தீவக வலயத்தில் யாழ்ற்ரன் கல்லூரி 1ம் இடத்தில் இருப்பதையிட்டு அவர் அதிபர், ஆசிரியர், மாணவர்களுக்கு தனது பாராட்டையும் தெரிவித்தார். சென்ற முதலாம் தவணைப் பரீட்சையில் (2015) 90 உம் அதற்கு மேல் சராசரி எடுத்த மாணவர்களுக்குமான Super  Merit என்ற Medal அணிவித்து கௌரவிக்கப்பட்டது. மேலும் க. பொ.த சா/த மாணவர்களுக்கு 2014 ஆம் ஆண்டு கற்பித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

க. பொ. த சா/த பரீட்சை 2014 இல் 5A உம் அதற்கு மேல் சித்திகளைப் பெற்ற பின்வரும் மாணவர்கள் நினைவுச் சின்னம் வழங்கி(Memento) கௌரவிக்கப்பட்டார்கள்.

1. செந்தில்நாதன் கமலேஸ்வரி 8A 1S

2. குகநேசன் கோபிதா 7A 1S

3. தியாகராஜா சயந்தன் 6A 3B

4. விக்கினேஸ்வரன் வேதாரணி 5A 2B 2C

5. மகாதேவன் நவநிலா 5A 2B 1S

6. மோகநாதன் துர்சிகா 5A 1B 1C 1S