யாழ்ற்ரன் கல்லூரியின் பரிசளிப்பு விழா 2015

யாழ்ற்ரன் கல்லூரியின் 2015ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 20.09.2015 காலை 9.00 மணிக்கு கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் கோலாகளமாக ஆரம்பமாகியது. இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டு அமைச்சின் செயலாளர் திரு.இராசா இரவீந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்;. மேலும் சிறப்பு விருந்தினராக தீவகக் கல்வி வலயத்தின் கல்விப்பணிப்பாளர் திரு.ஜோன்ஸ் குயின்ரஸ் அவர்கள் கலந்து கொண்டார். கௌரவ விருந்தினராக காரைநகர் கல்விக் கோட்ட கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு.பு.விக்னேஸ்வரன் அவர்களும், யாழ்ற்ரன் கல்லூரியின் ஓய்வு நிலை ஆரம்ப பிரிவு முதல்வர் திரு.க.தில்லையம்பலம் அவர்களும் , இ.போ.ச. கோண்டாவில் சாலை பொறியில்பகுதி உதவி முகாமையாளர் திரு.தி.ஏகாம்பரநாதன் அவர்களும் மேலும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    வருடந்தோறும் அமரர் வை.காசிப்பிள்ளை ஞாபகார்த்தமாக நடைபெறும் இவ் விழாவின் அனுசரணையாளராக செயற்படும் வைத்திய கலாநிதி சிறிதாரணி விமலன் குடும்பத்தினருக்கு(கனடா) அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். மேலும் பிராத்தனை மண்டபம் நீடிக்க படவேண்டும் என்ற கோரிக்கையையும் அதிபர் அவர்கள் செயலாளரிடம் முன்வைத்தார்.

    பிரதமவிருந்தினர் கல்வி பண்பாட்டு அமைச்சின் செயலாளர் உயர் திரு.இராசா இரவீந்திரன் அவர்கள் தனது உரையில் கல்லூரி அதிபரால் பிராத்தனை மண்டபத்தை நீடிக்கபட வேண்டும் என்ற கோரிகையை தான் அடுத்த ஆண்டு நிறைவேற்றி தருவதாகவும் உறுதி அளித்தார்.

    2014ஆம் ஆண்டு பொதுப்பரீட்சைகளில் அதி கூடிய சித்திகளைப் பெற்ற மாணவர்களுக்கும், மாகாண மட்டம், தேசிய மட்டம் ஆகியவற்றில் சாதனை படைத்த மாணவர்களுக்கும் இவ் விழாவில் பதக்கங்கள் அணிவித்தும்,நினைவுச்சின்னங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.